புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -33

அத்தியாயம்-33

நிபுணனுக்கு மகனை கையோடு அழைத்து செல்ல விருப்பமில்லை. இதுவரை தங்கள் எதிரே பார்வையோ, பேச்சு இரண்டும் தவிர்த்தவர்கள் இன்று, மைந்தன் ஹனிமூன் பற்றி எல்லாம் கேட்டு இயல்பாய் மனுமகளோடு கதைக்க, தனியாக இருக்கட்டுமே என்று எண்ணம் உதிர்த்தது.

“ஏன் ஐயா, நாங்க கிளம்பறோம். நீங்க வேண்டுமின்னா இங்க இருந்துட்டு வாங்களேன். சிற்பிகாவுக்கு கொஞ்சம் இந்த வீட்ல இருந்த நிம்மதி கிடைக்குமே” என்றதும் ஆர்யன் “சரிங்கய்யா.” என்றான்.

சிற்பிகாவிடம் வந்த ஆதிரா அவளை ஆதுரமாய் அணைத்து விடுவித்து, “கிளம்பறோம் டா. இந்த ப்ரியாணியை நைட் சாப்பிட வச்சிக்கோங்க. பொறுமையா அங்க வந்தா போதும்” என்று கூறவும் சமதாது மருமகளாய் தலையாட்டினாள்.‌

ஆர்யனை இங்கேயே‌ இருக்க கூறவும் சர்வேஷோ பச் அண்ணாவிடம் இப்ப துளிரை பத்தி காதுல போட்டு வைக்க முடியாதா என்ற ரீதியில் நின்றான்.‌

துளிரோ ‘அப்படியே கொஞ்ச நாளைக்கு அண்ணனை சின்ன அண்ணனோட பேச விடாம இங்கேயே இருந்தா நல்லது. பிள்ளையாரப்ப உனக்கு தேங்காய் உடைக்கறேன்.’ என்று வேண்டுதல் வைத்தாள்.

ஆதிரா நிபுணன் கிளம்பவும் ராணி ஆச்சி புறப்பட, சர்வேஷ் அண்ணாவிடுமும் அண்ணியிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

“வர்றேங்க அண்ணா‌. வர்றேங்க அண்ணி” என்றான்.

சிற்பிகா சர்வேஷ் பேசியதில் “சரிங்க தம்பி. மெதுவாவே கார் ஓட்டுங்க” என்றாள்.

‌துளிர் ஆர்யன் மடியிலிருந்து எழுந்தவள் அண்ணனின் தோள் சாய்ந்து போகவே யோசித்தாள்.

வீட்டுக்கு சென்றால் அப்பா அம்மாவிடம் மாட்டி விடுவாரோ இந்த சர்வேஷ் அண்ணா. அதற்கு இங்கேயே இருக்கலாமா? என்று சிந்தித்தாள்.

“இங்கேயே இருக்கலாம்னு நினைப்போ வா” என்று சர்வேஷ் இழுத்து செல்ல, “வர்றேன் அண்ணி. அண்ணா பை” என்றாள் துளிர்‌.

“அண்ணனே இப்ப தான் அண்ணியோட பேசி பழகுது‌. இப்ப உன்னை சொல்லி அது நிம்மதி போகணுமா. வீட்டுக்கு வா.” என்றான்.

“என்னல?” என்று நிபுணன் கேட்க, “ஒன்னுமில்லைப்பா எப்பவும் போல சும்மா பேசிட்டு விளையாடிட்டு இருக்கோம்” என்றான்.‌

காரில் வந்தவர்கள் திரும்பவும், ஆர்யன் தன் மனைவியை கட்டிப் பிடித்து, தட்டாமாலை சுற்றினான்.‌

“அச்சோ பயமாயிருக்கு விடுங்க.” என்று அலறவும், மெத்தையில் அமர்ந்து மடியில் அமர வைத்து முதுகில் முகம் புதைத்தான்‌.

“மீசை குறுகுறுன்னு இருக்கு,” என்று நெளிந்து எழ முற்பட்டாள்.‌

அக்கணம் தங்கலட்சுமி ஆச்சி போன் பண்ணி ஆர்யனிடம் நலம் விசாரித்தார்கள். போனை ஸ்பீக்கரில் போட்டு தன் வளைவுக்குள் மனைவியை வைத்திருந்தான்.

“என்னய்யா நல்லாயிருக்கியா?” என்று எடுத்ததும் பரஸ்பர நலனை கேட்டார்.‌

“நல்லா இருக்கேன் ஆச்சி” என்றான். கையில் திமிறிய மனைவியை விடுவிக்காமல் கட்டிப்போட்டு காதல் செய்தான்.

தங்கலட்சுமியோ ”ஆர்யா இன்னிக்கு அங்க போனியா? உங்கம்மா உன்னை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போனாளா?
ஏதாவது பழசை கிளறிவிட்டாளாயா?” என்று ஆர்யன் இத்தனை வருடம் மனம் சுணங்கும் நாளாக இன்று ஆதிரா சீர்த்திருத்த பள்ளிக்கு பேரனை அழைத்து சென்று மனம் வருந்தி செய்திருப்பாளோ என்று கேட்டார்.

“அதெல்லாம் இல்லை பாட்டி” என்று பேசியபடி சிற்பிகா இடையை விடுவித்திடாது தன் வலிய கரத்தால் அணையிட்டான்.

“எனக்கு தெரியும் ஆர்யா. எப்பவும் மனசு கஷ்டமாயிருப்ப. இப்பவேற அந்த பொண்ணு சிற்பிகா உன் மனைவி. அந்த பிள்ளை மேல கோபமாயிருக்கியா.” என்று சோகமாகவே வினா தொடுத்தார்.

தங்கலட்சுமியை பொருத்தவரை பேரன் இன்னமும் சிற்பிகா மீது அதே கோபமாய் சுற்றுவனாக்கும் என்று நினைத்திருக்க, ஆர்யனோ சிற்பிகாவோடு தீவிரமாய் காதல் விளையாட்டில் இருக்க அறியாது போனான்.‌

“ஆச்சி நான் அப்பறமா பேசறேன். இப்ப வைக்கட்டுமா?” என்று தன் கையை மீறி துள்ளும் சிற்பத்தை அடக்கும் வழிக்கு ஏற்ப போனை துண்டிக்க கேட்டான்.

“எனக்கு தெரியும்‌ நீ மனசு கஷ்டப்படற” என்று ஆரம்பிக்க, “அய்யோ ஆச்சி அப்படியில்லை. நான் அப்பறம் பேசறேன். இப்ப டாக்டர் ஒருத்தர் கால் பண்ணறார்.” என பொய்யுரைத்தான்.

டாக்டர் என்றதும் “சரிய்யா மனசு வாடாத. அப்பறம் கால் பண்ணு” என் துண்டித்து விட்டார்.‌

துண்டிக்கப்பட்ட சத்தம் கேட்டதும் ஸ்பீக்கர் சத்தம் அடங்க, “என்னடி துள்ளிட்டு, இப்ப ஓடு பார்க்கலாம்” என்று இடையை வளைத்து தூக்கி மெத்தையில் தள்ளி மேலே படர்ந்தான்.

“முதல்ல ஆச்சி கூட பேசுங்க. எதுக்கு என்னையே சீண்டறிங்க.” என்று சிரித்தாள்.

“ஆஹ்… உன்னை சீண்டறதுக்கு தான் இந்த தனிமையை கொடுத்திருக்காங்க. அப்படி தான் இருப்பேன்.” என்று முத்தம் வைக்க உதட்டருகே வர, தலையை திருப்பி, “நீங்க சோகமா இருப்பிங்கன்னு ஆச்சி பீல் பண்ணுறாங்க. நீங்க அழிச்சாட்டியம் பண்ணறிங்க” என்று கிலுக்கி சிரித்தாள்.

“கொள்ளு பேரனை பேத்தியை கையில கொடுத்தா பீல் பண்ண மாட்டாங்க” என்று கிசுகிசுப்பாய் பேசினான்.

ஆசை தோசை பிரியாணி ஆறிடும். எழுந்திறிங்க” என்றாள்.

“இப்ப ப்ரியாணி ரொம்ப முக்கியம்” என்றவன் உதடு சிக்காத கோபத்தில் மூக்கை கடித்து வைத்தான்.

“ஸ்ஆ… ப்ரியாணி தான் முக்கியம்.” என்று மூக்கை தேய்க்க, “எனக்கு நீ தான் முக்கியம்” என்று கழுத்தில் முகம் புதைக்க, “ஆரு.. ஆரு.. போன் அடிக்கு. போன்ல ஆதிராம்மா” என்றதும் விளுக்கென அவளை விடுவிக்க, “ஏமாந்திங்களா?” என்றவள் எழுந்து டிபன் கேரியரை திறந்து, முதல்ல சாப்பிடலாம்” என்றதும் அவள் தப்பித்ததால் அவளை பிடிக்க எழுந்தான்.

தட்டை எடுத்து வைத்து சாப்பிட தயார் செய்யவும், அவளையே விழுங்கி சாப்பிட ஆரம்பித்தான்.

“ஆக்சுவலி இந்த டேஸ்ல எனக்கும் சோகமா தோணும். என்னடா நம்மளை அடிச்சி ஐயா பையன் அம்மாவோட இருக்காத சூழ்நிலைய உண்டாக்கிட்டேனு பீல் பண்ணிருக்கேன். ஆனா இந்த வருஷம் வேற பீலிங் என்னை மிதக்க வைக்குது.

கனவுல கூட காதல் கல்யாணம் இதெல்லாம் சான்ஸேயில்லைனு இருந்தேன். ஆனா இப்ப உங்க கைக்குள் சிக்கிட்டு இருந்தப்ப, அப்படியே பறந்தேன். என் லைப்ல இந்தளவு சந்தோஷமா இருந்ததில்லை. அதுவும் உங்க ஆச்சி நீங்க பீல் பண்ணறதா உங்களை சமாதானம் செய்ய, நீங்க என்னிடம் கொஞ்ச முடியாம திணறி அப்பறம் பேசறேன் அப்பறம் பேசறேன்னு கட் பண்ண நினைச்சது, சந்தோஷமாயிருக்கு” என்றாள்.

“சந்தோஷம்? அப்பறம் எதுக்கு திமிறின?” என்று இடை பகுதியை வலிக்காமல் கிள்ள, “அச்சோ குறுகுறுப்புபா இருந்தது. கூசுது.” என்று கூற, “சீக்கிரம் சாப்பிடு வச்சிருக்கேன் உன்னை” என்று மார்க்கமாய் திரிந்தான்.

புதிதாக திருமணமான ஜோடி, மனதை பகிர்ந்து மன்னிப்பு கேட்டு, அவர்கள் காதல் லீலைகள் தொடர்ந்தனர்.


துளிரிடம் சர்வேஷ் வீட்டுக்கு வந்தப்பின், “அண்ணா வரலையென்றதும் அவ்ளோ சந்தோஷம் உனக்கு? இந்த நிமிஷம் அப்பா அம்மாவிடம் சொல்லவா?” என்று சர்வேஷ் அழவைக்கும் பொருட்டு பேசினான்.

“நான் ஒன்னும் விதார்த்தை விரும்பலை. சொன்னா சொல்லிக்கோ” என்று அழுதாள்.

“சொல்ல தான் போறேன். ஆனா எதையும் எங்கண்ணாவிடம் சொல்லி தான் எனக்கு பழக்கம். அவர் வரட்டும் அதுவரை நிம்மதியா இரு” என்று சென்றான்.

துளிருக்கு தான் கவலையானது.
அந்த கோபமெல்லாம் விதார்த் மீது பாய்ந்தது.

போனை எடுத்து திட்ட‌லாமென்றாலும் சர்வேஷ் அண்ணா வந்துவிட்டால்? நாளை கல்லூரியில் பார்த்துக்கொள்வோமென இருந்தாள்.

நிம்மதியான உறக்கம் அது தான் கிடைக்கவில்லை. யார் என்ன விதத்தில் நினைத்து தன்னை அது பாதிக்குமென்ற பயம் அவளுக்குள் இருந்தது.

சின்னதிலிருந்தே எந்த தவறு செய்தாலும் அம்மா அப்பாவை விட ஆர்யன் அண்ணா தான் முன்னே நின்று அதட்டுவார். அது பழகிப்போன ஒன்று. பெரும்பாலும் மார்க் குறைவாக வந்தால் கூட அண்ணா தான். இந்த வீட்டை பொறுதாதவரை ஆர்யனை தந்தைக்கு நிகராக தான் மதிப்பீடு செய்திருந்தனர் இருவரும்.

துளிர் உறக்கம் கண்ணீரில் தான் கரைந்தது.


ஆதிரா நிபுணனோ எந்த வருடமும் இல்லாம இந்த வருடம் ரொம்ப விமர்சையாக இருந்தது. முக்கிய காரணம் ஆர்யன் வராமல் போனாலும் மகன் மருமகள் கணவன் மனைவியாக வாழ்வதை யூகிக்க இயன்றது.

அடுத்த நாள் விடியல் விடியும் நேரம் துளிர் கல்லூரிக்கு கிளம்ப, சர்வேஷ் "என்னோட பைக்கில் வா. நான் காலேஜிக்கு விடறேன்" என்றான்.

துளிரோ மறுக்காமல் சர்வேஷோடு வந்தாள்.

கல்லூரிக்கு வந்துவிடவும், இறங்கினாள்.

பரவாயில்லை யாரும் இவளை பின்னால துரத்தலை. என்று சர்வேஷ் நிம்மதிக் கொண்டான்.

“என்ன மச்சான் நீயே துளிரை டிராப் பண்ணிட்டு போற?” என்று கேட்டான் சரவணவேலன்.

‘வாங்க நல்லவரே’ என்று தான் சர்வேஷ் மனம் எண்ணியது.

 வயது வித்தியாசம் கருதி சரவணவேலனுக்கு மரியாதை தந்து, "மச்சான் கொஞ்சம் துளியை பார்த்துகாகோங்க. எந்த களவாணி பாயலாவது சீண்டிட்டு இருக்க போறான்." என்று கூற சரவணனோ 'அடப்பாவி விதார்த்தை களவாணினு சொல்லிட்டானே. அந்த பயபுள்ளைக்கிட்ட சொன்னா கண்டுக்கவே கண்டுக்காது‌. இந்தா இருக்கே இதுவாது அவனை விரும்பறதை தெளிவா சொல்லுதா?' என மாமன் மகளை ஏறிட்டான். 

துளிரோ மச்சான் முன் இப்படியா அண்ணன் பேசும். அவர் என்ன நினைப்பார்? என் துவண்டாள்.

பொதுவாக மாஸ்டர் டிகிரி படிக்கும் மாணவர்கள் பாட்சுலர் டிகிரி படிக்கும் மாணவர்கள் பக்கம் வரமாட்டார்கள். நீண்ட தூரமாக பில்டிங் இருக்கும்.

விதார்த் இவளை பார்க்க வருவான். ஆனால் சரவணவேலன் கூட வரமாட்டான். தனியார் தன்னந்தனியாக வருவான். சரவணவேலனோ என் எதிர்ல அவ பார்க்கவே மாட்டா. பேசினா அம்புட்டு தான்‌. அதோட அவளுக்கு பிடிக்கலைனா ஆர்யன் மச்சானோட மாட்டி விடுவா டா. ஆளை விடு” என்று தனித்து விடுவான்.

ஆனால் விதார்த்ஸநல்ல நண்பன், நல்ல குடும்பம், என்ற நல்லதில் சரவணன் விதார்த்தை தடைவிதித்து இருந்ததில்லை.

துளிர் மடமடவென தனது வகுப்பு இருக்கும் பிளாக்கிற்கு சென்றாள்.

அங்கே விதார்த் அவளை வரவேற்க, அவள் பார்வை என்னவோ சர்வேஷ் சென்றானா இல்லையா என பயத்தில் விழிகள் விரிந்தது.

“ரொம்ப திட்டிட்டானா? அப்பா அம்மா ஆர்யனிடம் சொல்லிட்டானா? ரொம்ப டார்ச்சர் பண்ணினா சொல்லு‌. நான் எங்க வீட்ல நம்ம லவ்வை பத்தி பேசறேன்.” என்றவனை கையிலிருந்த நோட்டால் அடிக்க ஆரம்பித்தாள்.

“ஏ… கொழுந்து சீனியரை அடிச்ச, காலேஜ் முழுக்க நீ பேமஸ் ஆகிடுவ” என்று புத்தகத்தை பிடுங்கி வைத்தான்.

“இப்படி செய்த எங்கப்பாவிடம் மாட்டிப்பேன்‌. ஏற்கனவே லாயருக்கு படிக்காம இங்க வந்து சுத்தறதே அவருக்கு பிடிக்கலை. நீ வேற” என்றவன் ‘அப்பறம் வெளுத்துடுவாரு’ என்றவனை “நான் உன்னை விரும்பலை. இங்கிருந்து போ” என்று கத்தினாள்.

விதார்த்தோ இருக்கும் கொஞ்ச நஞ்சு மாணவ மாணவிகள் இருக்க, “அதை உங்க வீட்ல உங்க அப்பா அம்மா அண்ணன் முன்ன சொல்லு. அன்னைக்கு மொத்தமா விலகுவேன்.” என்று சென்றான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

30 thoughts on “என் நேச அதிபதியே -33”

  1. Athan 1st un chinna anna ta sollu thaa , na yaraium love pannalainu 🤨 solla mudiuma unnala 🧐 summa intha paiyana mattum epo paru arati uruttarathu 😏😏😏😏😏😏
    Sikkaram nipu thatha aaga pooran 🤩🥰
    Enna innum kalvettu sandiyara thaan manasu pakkuthu 😉

  2. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super ❤️🥰🤩😍🥰🤩😍😍🥰🤩😍🥰🥰🤩😍😍🥰🥰🤩😍🥰🤩😍🥰🥰🤩😍😍🥰🤩

  3. Wow. Super . Ariyan romance super sis. Thulir pavam. Sarvesh good boy. Fantastic narration sis. Pls give daily updates sis. I miss ariyan very much.

  4. இருந்தாலும் இந்த சர்வேஸ் ரொம்ப தான் துளிர வெச்சி செய்கிறான்.

  5. Deiii indha sarvesha niruthungalenda…. Matividrathulaye kuriya iruka…. Pesama ivanuku oru jodi ready panungada authoreyyy…. Miss ah ye mativitralam… Student mark thulir aye solranla…. Sarvesh ketha sorna Ka va seekram ready panunga😅😅😅😅…. Indhaaaa thuliruuuu avankita ye epoparu poo pi solra… Idha née sarvesh kita solu… Ila a avan sonnamari u family munadi soluuuu

  6. ஆர்யன் எதை செய்தாலும் அதிகமாக தான் செய்றான்ே கே கோபம் வந்தாலும் காதல் வந்தாலும் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு கதை ஆனா சீக்கிரம் முடிப்பதுதான் வருத்தமாக உள்ளது சர்வேஷ் ஏன் துளிரே இந்தளவு கொடுமைபடுத்துறான் அவனுக்கும் ஒரு ஜோடியைே போட்டு மாட்டிவிடுமா பய மாட்டிகிட்டு முழிக்கட்டும் வாழ்த்துகள்

  7. குட் one. பாவம் துளரி. சந்தோஷ் ரொம்ப தா.. ஹாப்பி for ஆர்யான் couples. நைஸ் one. குட் பீல்

  8. Super super epi sisy. Namma aaryan ivlo romance panra mari koduthutingle sisy. But rendum Sansa kozhi mari irupangalo ninachen illa illa paa oruthar oruthar purinji tha life start aeiruku . Thulir vera manasula ena ninaikira therila ava appa feel panuvaru ninachi ethum solla matrala illa ethum illaya

  9. அப்படின்னா…. நிபுணன், ஆதிரா, ஆர்யன் மூணூ பேரும் விதார்த்தை ரிஜக்ட் பண்ண மாட்டாங்க என்கிற தைரியமோ..!!?

  10. 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️💖💞💞💓💕💕💕💗💓💖❤️❤️❤️💖💞💓💕💕💕💗💞💖💖❤️

  11. ஆர்யன் – சிற்பிகா தங்கள் வாழ்க்கையை காதலுடன் வாழ்வது நிறைவாக உள்ளது அக்கா…😍😍😍😍😍😍…. துளிர் விஷயம் சர்வேஷ் தெரிந்து கொண்டு ஆர்யன் கிட்ட கூற காத்திருக்க, இங்கு துளிர் விதார்த் மீது கோபமாக இருக்கிறாள்…. இனி என்ன ஆகுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!