அத்தியாயம்-34
விதார்திற்கு தன் செய்கை அசிங்கமான உணர வைத்திருந்தாள் துளிர்.
முன்பு அவளை பார்த்து ரசிக்கும் பொழுதெல்லாம், அவளும் பதிலுக்கு பார்ப்பாள். அப்பொழுது காதலுணர்வு என அழகாய் இதயத்தில் அமிழ்ந்தது.
எப்பொழுது வித்யுத் மகன் என்று அறிந்தாளோ அப்பொழுதுயிருந்து தன்னை அவள் பார்வையால் கூட நெருங்கவிடாதது கவலையை தந்தது. இத்தனைக்கும் தந்தை பெயர் பெற்ற வக்கீலாக இருந்து தற்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்.
அவளுக்கு தான் யாரென அறிந்ததும், சந்தோஷத்தில் வாயடைத்து நிற்பாளென்று எண்ணியதற்கு மாறாக, காதலென்று நெருங்கினாலே வாயடைக்கின்றாள்.
இதில் அவள் சின்ன அண்ணன் வேறு பார்த்து விட்டு அவளை என்ன செய்கின்றானோ. துளிர் முன்பு போல மகிழ்ச்சியான முகத்தோடு நடமாடுவது குறைந்திருந்தது.
நானாவது அவளால் வாடுகின்றேன். அவள் அவன் அண்ணனாலும் துவளுவது புரிய தனியாக வகுப்பறையில் வீற்றிருந்தான்.
சரவணவேலன் வந்து ”என்ன பங்காளி சோகமா கிடக்க?” என்று வந்தான்.
“அங்க என்னடா நிலவரம்” என்று கேட்டான்.
“என்ன விளையாடறியா? ஏற்கனவை பொங்கல் அப்ப நீ கொடுத்த டிரஸை அவ போட்டாளா இல்வையானு சொன்னேன்.
அதுக்கே மாட்டியிருப்பேன். கொரியருக்கு இருந்தவரை பிடிச்சு டிரஸ் எல்லாம் கொடுத்து, தனுஜா கொடுத்ததா பொய் புரட்டு வேலையை பார்த்தேன்.
அந்த கொரியர் ஆளு வேற என்னவோ நான் தான் துளிரை விரும்புறதா தலைசொறிந்துட்டு சிரிச்சிட்டே போயிட்டார்.
இப்பல்லாம் சர்வேஷிடம் எந்த விஷயமும் கேட்கறதில்லை.
பயப்புள்ள உஷாராயிடுச்சு. நீயும் நானும் ஒரே காலேஜ் ஒரே கிளாஸ்னு தெரிந்தது பெரியவர் அவதாரத்தை இவனே எடுத்துடுவான்.
நான் வரலை. உனக்கு உன் கொழுந்து பத்தி தெரியணும்னா நீயே அவளிடம் பேசு. ஆளை விடுடா சாமி” என்றான்.
“எங்கப்பாவை ஏன் பிடிக்காது. ஏதோ அந்த நேரம் அட்வைஸ் பண்ணிட்டார். அதுக்கு உங்க மாமாவே பெரியவர் கல்யாணத்துக்கு அப்பாவுக்கு பத்திரிக்கை வச்சிருக்கார். இவளுக்கு என்ன?
என்னை விட அவங்க அப்பா தான் பெரிசா. பச் லவ்வே பண்ணாம இருந்திருக்கலாம் நிம்மதியா இருந்திருப்பேன்.
உன்னை பாரு மாமன் மக பார்க்கலைனு கஷ்டப்படாம சுத்தற.” என்று விதார்த் புலம்பினாள்.
“அட சின்னதுல பொம்மை பிடுங்கி முடியை கருக்கிட்டேன். அதுக்கு உன் ஆளு பெரியவரிடம் போட்டு தந்துடுச்சு. அன்னைக்கு என் தங்கை பொம்மையை ஏன்டா எடுத்த, என் தங்கையை ஏன் அழவச்சன்னு பெரியவரு விட்டாரு ஒரு அறை. அதுலயிருந்து துளிர் பக்கம் போறது பேசறது எல்லாம் கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்.
அதுக்கிட்ட பேசணும்னா சந்தோஷமா பேசிட்டு அப்படியே வந்துடணும். இல்லை ஆர்யன் மச்சான் இப்பவும் செவுள்ள விடுவாரு.
தங்கச்சின்னா அம்புட்டு உசுரு. தங்கச்சியை யாரும் அழவிடமாட்டார்.
அதுக்காக தங்கச்சி எது செய்தாலும் தலையில தூக்கி வைக்க மாட்டார். தப்புன்னா காதை திருகிடுவார்.
விளையாட்டுக்கு திருகியது நிறைய இருக்கு. ஆனா துளிர் பொய் சொன்னதுக்கு காதை திருகி இரண்டு நாள் காதை பிடித்து அழுது தூங்கினா தெரியுமா.
(ஆர்யன்)அவருக்கு பிறகு குழந்தை இல்லைனு முடிவே பண்ணியிருந்தப்ப சர்வேஷ் பிறந்தான். அதுக்கு பிறகு தான் துளிர் பிறந்தா.
அந்த கேப்ல அவர் தான் எல்லாம் என்று அந்த வீடே முடிவெடுத்துடுச்சு.
நிபுணன் மாமாவே தோளுக்கு மேல வளர்ந்தவருன்னு, பெரியவர் சொல் கேட்பார்.
உன் லவ் ஸ்டோரில முதல்ல இருக்கற குழப்பத்தை க்ளியர் பண்ணு.
*துளிர் உன்னை விரும்புதா இல்லையா?
*உங்க வீட்ல நீதிபதி அப்பா. எங்க மாமா அவங்க அம்மாவை கொன்றவனை கொலை செய்து ஜெயிலுக்கு போனவர். அங்க படிச்சி அதுக்கு பிறகு பருத்தி மில்லை நிர்வாகம் பண்ணறார்.
*அதோட உங்கப்பா அட்வைஸை எங்கமாமா துளிர் மாதிரி மனசுல வச்சியிருந்தா?
*வீட்ல துளிர் எப்ப வேண்டுமென்றாலும் சர்வேஷ் மாட்டி விடலாம். அப்படி மாட்டினா உன் பக்கம் என்ன ஆதரவு. அங்க துளிர் என்ன சொல்லும்?
*ஆர்யன் மச்சானிடம் துளிர் விரும்புவதை சொல்வியா?
*நீ உங்க வீட்ல துளிரை பத்தி எப்ப சொல்ல போற? என அடுக்கடுக்கான வினா தொடுக்க, விதார்த் எழுந்தான்.
“இந்த வக்கீல் மாதிரி கேள்விக் கேட்க பிடிக்காம தான் உன்னோட இங்க எம்.பி.ஏ குரூப் எடுத்தது. போடா” என கிளம்பிவிட்டான்.
சரவணவேலன் பேசியதை அசைப்போட்டபடி வீட்டிற்கு சென்றான் விதார்த்.
ஆர்யனோ, கோவாவில் தேன்நிலவு கொண்டாட சிற்பிகா உடைகளை எடுத்து வைத்தாள் அவன் அதனை வீசினான்.
“என்ன பண்ணிட்டு இருக்கிங்க? கஷ்டப்பட்டு துணியெல்லாம் எடுத்து வச்சா, தூக்கி வீசறிங்க” என புடவையை எடுத்து மடித்தாள்.
“புடவையை எடுத்து வைக்க சொன்னேனா? அங்க என்ன கோவிலுக்கு தீ மிதிச்சு கூழ் ஊற்ற போறியா?
மாடர்னா டிரஸ் தானே எடுத்து வைக்க சொன்னேன்.” என்றான்.
“சுடிதார் எடுத்து வச்சேன். கண்ணு தெரியலையா?’ என்று அவன் புடவையை அறைக்கு ஒருபக்கமாக வீசியடிக்க எடுத்து திட்டிக்கொண்டே மெத்தையில் வைத்தாள்.
“வரவர சேட்டை பிடிச்ச மனுஷனா இருக்கார். ஊருக்கு வந்தப்ப, இந்த குழந்தையும் பால் குடிக்குமான்னு முகத்தை வச்சிட்டு அளவான சிரிப்பு, அதிகார தோரணைனு, வீராப்பா இருந்திங்க. இப்ப அழுச்சாட்டியம் பிடிச்சு என்னை இம்சை படுத்தறிங்க. மடிச்சு வைச்ச டிரஸை களைத்துவிட்டா திரும்ப மடிக்கணும். எனக்கு வேலையிருக்கு ஆஹ்” என்று திட்டினாள்.
குறும்புடன் “எல்லா பூனையும் பாலை குடிக்கும்.” என்றவன் விளையாட்டை ஓரம்கட்டி, “நீ மட்டும் என்னவாம். என்னை பார்த்தாலே தலைதெறிக்க வீட்டுக்கு ஓடின. இப்ப வேண்டாம்னு சொல்லியும் எடுத்து வச்சா என்ன அர்த்தம். இப்படி தான் இம்சை பண்ணுவாங்க. இந்த சூட்கேஸில் இந்த டிரஸ் மட்டும் இருந்தா அப்படியே தூக்கி போறவழில உருட்டி விட்டுட்டு கோவாவுக்கு கூட்டிட்டு போயிடுவேன். சொல்றதை கேட்காம எதிர்க்கறது. மாமியாரிடம் இருந்து இந்த குணத்தையும் மட்டும் கத்துக்கறது” என்று சலித்தான்.
“தேவையில்லாம ஆதிராம்மாவை இழுக்காதிங்க.
சுடிதார் எல்லாம் மாடர்ன் டிரஸ் இல்லையா?” என்றாள்.
“இல்லவே இல்லை. அதெல்லாம் ஓல்டு பேஷன். புடவைக்கு பதிலா சுடிதார். நீ ஒன்னும் டிரஸ் எடுத்து வைக்க வேண்டாம். நான் எடுத்து வச்சிக்கறேன்” என்றான்.
அவனை மேலும் கீழும் அளந்தெடுத்து, "என்னவோ எடுத்து வையுங்க. ஆதிராம்மா கூப்பிட்டாங்க நான் என்னனு கேட்டுட்டு வர்றேன். தயவு செய்து பிடிக்காத டிரஸை இப்படி தூக்கியெறியாதிங்க அங்க ஓரமா வையுங்க" என்று சென்றாள்.
அவள் தலை மறையவும், நேற்று வாங்கிய ஆடைகளை எல்லாம் பெட்டியில் அடுக்கி, மூடிவிட்டு, லாக்கர் நம்பரை அழுத்தினான்.
அண்ணனிடம் பேச வந்த சர்வேஷோ வாசனை திரவியம், ஹேர் ஜெல் என்று எடுத்து வைத்த ஆர்யனிடம், துளிரை பற்றி விஷயத்தை காதில் போட வந்தான்.
அண்ணனின் சந்தோஷம் தீளகர் விஷயத்தால் தவிடுப்பொடியாகுமென யூகித்து, “எப்ப அண்ணா திரும்பி வருவிங்க?” என்று கேட்டான்.
“பத்து நாள்ல வந்துடுவேன் சர்வேஷ். ஐயாவை அம்மாவை பார்த்துக்கோ. முக்கியமா துளிரை பார்த்துக்கோ. ராயலை வாக்கிங் அழைச்சிட்டு போ.” என்று கூறவும் தலையாட்டினான்.
பத்து நாள் தானே என்று சர்வேஷ் நினைக்க, “ஏன்ல அடிக்கடி உம்முனு இருக்க?” என்று தம்பியை நிறுத்தி கேட்டான்.
“ஒன்னுமில்லை அண்ண. முன்ன இங்க வந்தா எங்களோடவே இருப்ப. இப்ப கம்மியா இருக்க. துளிர் வேற… துளிரும் என் கூட சண்டை. அதான்” என்றான்.
“ஓ… குட்டச்சி கூட சண்டை போட்டியா? சாரில எனக்கு தெரியாது. முன்ன டூயூட்டி இருக்காது. லீவுக்கு தலை காட்டுவேன். இப்ப ஹாஸ்பிடல்ல டூயூட்டிக்கு போகணும்ல” என்றவனுக்கு சிற்பிகாவோடு நேரம் செல்வதால் இரண்டும் முகம் தூக்கியிருக்காங்களா? என சர்வேஷிடம், “கல்யாணம் ஆனதும் அண்ணன் நம்ம கூட பேசலைனு நினைச்சிட்டியா?” என்று தம்பியின் தாடை பிடித்து கேட்டான்.
“அய்யோ அப்படியில்லிங்க அண்ணா. நீங்க விருப்பமில்லாம அப்பாவுக்கா கட்டிக்கிட்டதா பீல் பண்ணிருக்கேன். இப்ப அப்படியில்லையில்லைனு தெரியும்.
குட்டச்சி படிப்புல கோட்டை விடுது. சொல் பேச்சை கேட்டுக்க சொல்லுங்க” என்றதும் தம்பி தோளில் தட்டி, “இதுக்கு தான் ஒரே காலேஜில அவளை சேர்க்கலாம்னு சொன்னேன். நீ தான் உன் ப்ரீடம் போகும்னு சரவணன் காலேஜ்ல சேர்த்துக்கோங்கன்னு பிடிவாதம் செய்த.
சரி ஒரு வருஷம் தானே. ஆமா எதுக்குடா விரப்பா இருக்க. ம்ம்ம்.” என்றவன் தம்பியின் தலையை வாறி முடித்தான்.
சிற்பிகா வரவும் அவசரமாய் எழுந்தான் சர்வேஷ்.
“ஆச்சியிடம் கோவா போறதை சொல்லலையா? போன்ல இருக்காங்க. அம்மா கொடுத்தாங்க” என்றாள்.
”அச்சோ.. கொண்டா” என்று வாங்கவும், தங்கலட்சுமி காது சவ்வு கிழிய பேரனை வசைமொழிந்தார்.
“ஆச்சி… சாரி ஆச்சி. கால் பண்ணனும்னு நினைச்சேன். ஆனா முக்கியமான கால் வரவும் பேச மறந்துட்டேன்.” என்று சமாளிக்க, “பேசாதடா. உன் முக்கியமான டாக்டர் யாருனு தெரிந்துடுச்சு. இரண்டு நாளா ஹாஸ்பிடல் போகலை. தெரியும் தெரியும். நீ கோவா போயிட்டு வா. அப்பறம் இருக்கு. என்று பேசி, “தாத்தா ஜாக்கிரதையா போயிட்டு வர சொன்னார்” என்று கூறவும்”ஓகே ஆச்சி” என்றான்.
சர்வேஷ் சத்தமில்லாமல் கீழ் இறங்கியிருந்தான்.
கோவா செல்ல காரில் ஏற்றி வைக்கவும், “மெதுவா காரை ஓட்டுங்க ஐயா. செல்ஃப் டிரைவிங் பார்த்து” என்றார் நிபுணன்.
“சரிங்கய்யா” என்று ஆதிராம்மா காலில் விழுந்தவன் தங்கையிடம் “குட்டச்சி ஒழுங்கா படி.” புறப்பட்டு சென்றார்கள்.
துளிரோ சர்வேஷை பொசுக்கும் வகையில் பார்த்து ஜங்ஜங்கென்று வீட்டிற்குள் சென்றாள்.
அவர்கள் கார் புறப்பட்டு செல்ல, மற்றொரு கார் உள்ளே நுழைந்தது.
சர்வஷோ அதிலிருந்து இறங்கியவர்களை கண்டு தலைதெறிக்க தனதறைக்கு ஓடினான்.
இவங்க எங்க இங்க? கடவுளே ஆண்டவா முருகா காப்பாத்து’ என வேண்டியவன் கதவை தாழிட்டு முடித்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Paru da…….sarvashu kku…..payama…….yara irukkummmmmmmmmmm……🧐🧐🧐🧐🧐
apdi yar vandhirupanga
Superrrrr ❤️
Next pair???
அருமையாக போய்க்கொண்டிருந்த நேரத்துல
கடைசியாக ஒரு ட்விஸ்ட்..
சூப்பருங்க
யாரு அது? சர்வேஷ் ஏன் ஓடினான்?
Waiting for the next UD
nice sis waiting for next episode ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Sarvesh ku oru story varanum appo than Thulir ,Sarvesh a adakka mudiyum.
Nice story!!!
😂😂 veena akka idhu yaaru varavanga ipadi oduren indha sarvesh paiyan thulir ah maati vidradhuku paarthen ipo Avan yaarkuta mattunan nu therilayae …. super super ka….romba nalla irundhudhu 😘😘😘😘
All the best aarya . Pondati ku aaryan ena dress eduthu vachi irukaro therilaye atha sirpika poduvala pidikuma papom ena panranu. Ivan thalai therila ulla oduran yara pathu pannuran yar varanga veetuku .
Saravanavelan vakkeel mathiri kelvi kekuran. Avan kekurathuku nee answer pannu vidharth… Aryan sirpi so lovely ❤️❤️❤️❤️❤️ thulir ku aappu vekalanu nenechitu unaku neeye yetho aappu vechiruka pola sarvesh🤣🤣🤣🤣 yaara irukum🤔🤔🤔
Interesting
Wow. Honeymoon started. Super sis. Who came? Eagerly waiting for next episode sis.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super epi sis👍😀
இதோ பாருடா…! தங்கச்சியை அந்த மிரட்டு மிரட்டிட்டு, இப்ப காரைப் பார்த்து பயந்து ஓடறான் பயபுள்ளை.
சூப்பர். Nice. தங்கலக்ஷ்மி பாட்டி சூப்பர் சூப்பர்
விதார்த் அப்பாவுடன் பெண் பார்க்க வந்து விட்டானா ?
Apti Yara pathu Ivan ipti odaran 🤔
Oru vayla vidharth Avan appa oda vathurupanoo ?
Apti nalum ivan Yan athukku odanum naiyapadi patha ninu moraippan 🤦
Something wrong ivanukku tholla thara yaroo varanga poola 😉😆😅
ரொம்ப ரொம்ப சூப்பரா போகுதுமா கதை ஆர்யன் சிற்பியை சேர்த்தாச்சி கொழுந்தையும் விதார்தோடு சேர்த்து டுவிங்க சர்வேஷ் யாரை பார்த்து அரண்டு ஒருகிறான் ரொம்ப எதிர்பார்க்க வைக்கிறிங்கமா வாழ்த்துகள்
செம சூப்பர். யார பார்த்து இந்த சர்வேஷ் தலைதெறிக்க போறா இப்படி கடைசியா டிவிஸ்ட் போடுடிங்களே வீணா அக்கா
Spr going sis… Eagarly waiting for nxt ud
பாவம் ஒரே ஒரு காதல் பண்ணிட்டு விதார்த் படுற பாடு பெரும்பாடா இருக்கு😂 இந்த பக்கம் காதலிக்கிற பொண்ணு அவனை படுத்துறா ன்னா இந்த பக்கம் ரெண்டு மச்சானுங்க பாவம் அவன் யார தான் சமாளிப்பான் . மார்டன் டிரஸ் ன்னா அது சுடிதாரா 😳😳 ஏன் மா சிற்பி நீ இன்னும் ரொம்ப வளரனும் போலயே .
ஆமா யாரு வீட்டுக்கு வந்தாங்க இந்த நல்லவன் சர்வேஷ் யாரை பார்த்து ஓடி ஒளியறான்
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 ada namma sarvesh a bayapudran ah ennava erukum parpom 🤔
Super super super super
❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
Sarvesh ipadi thalai therika oodura alavukku yaru vandhu iruka ah ennavo kadaparai ah muzhugina mathiri apadi verapa thalir ah look vittavan ipadi odum pothu sirippa ah iruku
❤️❤️❤️❤️🫰
அவனோட ஜோடி வந்தாச்சா
Super super sis
ஆர்யன் – சிற்பிகா ஜோடி தேன் நிலவுக்கு கோவா போகிறார்கள்…. துளிர் அவளை அந்த மிரட்டு மிரட்டி விட்டு யாரை கண்டு மிரண்டு ஓடுகிறான்….🤔🤔🤔🤔🤔🤔
Interesting sis
Ivan yen oduran yara irukum ena vambu pani vachurupano?
குட்டசிக்கு ஒரு லவ் ஸ்டோரி போல சர்வேஷ் ககும் இருக்கும் போலவே
அதான் ஓடி ஒ
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌Indha sarvesh edhukku ipdi padhunguran 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔vandhavanga yaara irukkum
Ayyaya… Onnuku rendu annanunga irundhaley idha prachna…. Adeii sarveshuuu… Née enada Avala overtake panitu odra… Yar vandhurpa apdi…???
nice!!!