புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை?-13

அத்தியாயம்-13

   காலையில் அர்ஜுனின் அக்கா பேசியதையே அசைப்போட்டாள் அமிழ்தினி‌. ஒட்டு கேட்டதில்லை ஆனால் துல்லியமாக போன் பேச்சு வெளியே கேட்டது.

    இளவழகி எப்படிப்பட்டவரென இந்த ஒரு வாரத்தில் ஒரளவு கணிக்க முடிந்தது.

   அவருண்டு அவர் வேலையுண்டு என்று கிடக்கின்றார். காலையில் சமைத்து மதியம் சமைத்து, இரவும் அவரே சமைக்கின்றார். 

   இங்கு வந்ததிலிருந்து எடுபிடி வேலையை தான் அம்மு பார்க்கின்றாள்.

  கணவர் கடையில் நிறுத்திவிட்டு சென்றாலும் கூட, எனக்கு என்ன தெரியுமென்று வந்து “நீ போ கண்ணு” என்பார். என்ன சதா எந்நேரமும் டிவியில் சீரியலை ஓடிவிடுவார். இது அம்முவிற்கு புதிதல்ல. வீட்டில் அம்மாவும் டிவி சீரியலை போட்டு உட்காரும் ஆள் தான்.
சில நேரத்தில் அன்னையிடம் இதெல்லாம் ஒரா சீரியலா என்று ரிமோட்டால் மாற்றி விட்டு பாட்டை கேட்பாள். இங்கே மாற்ற இயலாது.

    மற்றபடி தனது இடத்தை, துணியை சுத்தமாக வைதாது மடித்து வீட்டை பெருக்குவது என்று ஓரளவு உதவி செய்து வேலை பார்த்தாள்.

   ‘பரவாயில்லை கல்யாணம் என்றதும் பயந்தது சுத்த மடத்தனம் என்று நினைத்தாள்.

    அமிழ்தினியை பொறுத்தவரை இளவழகி நல்லவரே. ரஞ்சிதம் எப்படியோ?

   தன்னை மணந்தவனை பற்றி தான் உடனே முடிவெடுக்காத அளவிற்கு இருந்தாள்.

  பேசுவானா இல்லையோ என பயந்ததற்கு மாறாக, ஒரளவு வாய் திறக்கின்றான்.
   தன்னிடம் கணவனாய் அக்கறை காட்டி செல்கின்றான்.‌

  இதெல்லாம் நிரந்தரமாக வாழ்வில் அமையவும் நிம்மதி தான்.

இரவு அர்ஜுன் குளித்துவிட்டு நெருங்கி வந்தவன், நகம் கடித்துக் கொண்டிருத்தவளின் பல்லிடுக்கில், தன் ஆள்காட்டி விரலால் கட்டைவிரலில் அழுத்தி விடுவித்து சுண்டி விட்டான்.‌

லேசான வலியில் எதற்கு சுண்டினானென்று முகத்தை சுனங்கி பார்க்க, “எனக்கு நகம் கடிச்சா பிடிக்காது.” என்று மொழித்தான்.

ஆளைப்பாரு ஆளை. வாயை திறந்து நகம் கடிக்காதேனு சொல்ல என்னவாம்.’ என நினைத்தாள்.

“என்னத்த யோசிச்சிட்டு இருக்க?” என்றான்.‌ இயல்பாய் அமிழ்தினி தோளில் கையை ஊன்றினான்.

பெண்ணவளுக்கு நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. அவன் உரசலில் நெகிழ்ந்தவள், “அத்தைக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கலாமா?” என்றாள்.

‌ அமிழ்தினியை புருவம் சுருக்கி பார்த்தவன், “அவங்களுக்கு ஸ்மார்ட் போன் மூவ் பண்ண தெரியாது” என்றான்.

“அப்ப பட்டன் போன்லயே புது போன் வாங்கலாமா?” என்றாள்.‌

“ஏன் எங்கம்மாவுக்கு எதுக்கு இப்ப போன்? இப்ப உன்கிட்ட கேட்டுச்சா?” என்றான் அர்ஜுன்.

“இல்லை… ரொம்ப பழைய மாடலா தெரிந்தது.” என்று மழுப்பினாள்.‌

“பழைய போனா இருந்தாலும் ரிப்பேர் எதுவும் இல்லையே.‌ ஏன்‌ பழைய போன்‌ என்றால் மாத்தணுமா?” என்றான்.

“அதுக்கில்லைங்க அத்தை போன் பேசினா அது வெளியே அப்படியே கேட்குது.” என்றான்.‌

“கேட்கட்டும்” என்றான்.‌

இந்த மாங்காமடையனிடம் என்னவென உரைக்க என்றவள் நெடுமூச்சு விட, “எங்கம்மா யாரிடமாவது பேசியதை கேட்டியா?” என்றதும் முட்டைக்கண் ஆச்சரியத்தில் அவன் புறம் திருப்பினாள்.

பெட்ரமாக்ஸ் லைட் ஒளிப் பெற்று விட்டதே.

“எங்கம்மா யாருக்காவது போன் போட்டாங்கன்னா இல்லை போன் வந்ததுனா எனக்கு தெரிந்து ரகசியம் ஏதுமில்லைனா என் எதிர்ல பேசுவாங்க.
அதே ஏதாவது எனக்கு தெரியக்கூடாதுன்னு பதுங்கி பேசினா எனக்கு அவங்க போனே காட்டி கொஞுக்கும். இந்த தரகருக்கு, எங்கக்காவுக்கு எங்க மாமாவுக்கு எல்லாம் போன் போட்டா, என்னை பத்தி வண்டி வண்டியா கரிச்சு கொட்டுவாங்க. அப்படியே விஷயத்தை தெரிந்துப்பேன்.
அதனாலயே புது போன் வாங்கித் தர்றதில்லை.

கல்யாணம் கூட வேண்டாம்னு இருந்தேன். எங்கக்கா மாமாவிடம் ஒரே அழுகை.
நான் நல்லாயிருக்கறப்பவே ஒருத்தியை கட்டி வைக்கணும்னு. அடிக்கடி அப்பா நினைப்பு வருது. செத்துட்டா அர்ஜுனுக்கு யார் இருக்கான்னு ஒரே ஒப்பாரி‌.

தரகரிடம் கண்ணீரும் கம்பளையுமா மளிகை கடைக்காரனுக்கு படிக்காத பொண்ணாயிருந்தாலும் முடிங்கன்னு கேட்டுட்டாங்க‌.

அதான் நானும் கல்யாணமே வேண்டாம்னு இருந்து, அம்மாவுக்காக தலையாட்டிட்டேன்.

படிக்காத பொண்ணு கிடைக்கும்னு” என்று பேசியவன் அவளை கண்டு நிறுத்தினான்.

அவளோ அவனையே கண்டு கதைக்கேட்டவள், அவன் நிறுத்தவும் ‘அச்சோ வழிஞ்சுட்டு இப்படியா பார்க்கணும்’ என்று தலை தாழ்த்தினாள்‌.

படிக்காத பெண்ணாக தந்தை கட்டி வைத்துவிட்டாரன வருந்துகின்றாள் என்று எண்ணியவன், “அம்மா ஏதாவது உன்னை பத்தி யாரிடமாவது பேசி கேட்டியா?” என்றான்.‌

”சேசே இல்லை. ஸ்பீக்கர்ல சத்தம் கேட்கவும் நானா தான் புது போன் வாங்கினா என்னனு தோணுச்சு. நீங்க வேண்டுமின்னே உளவு பார்த்திருக்கிங்க‌.

நீங்க கேடி” என்றாள்.

“நானா?” என்று கையால் கேட்க, மெத்தையில் பின் நகர்ந்தாள்.

அவள் சேலையில் கையூன்றி இருந்த அர்ஜுனால், மகன் பட்டென்று தோளில் வாய் பிளந்தது.

சுரீக்கென்ற ஊசி குத்த, ‘ஸ்’ என்று தொடவும், “சாரி.” என்றவன் மாட்ட உதவினான்.

முட்புதர் தாடி முகமருகே கண்டதும், அவர் கன்னத்து கதுப்பில் பார்வை செல்ல, பின்னை சரிச்செய்து மாட்ட உதவியவன், அவளை பார்த்து கழட்ட ஆரம்பித்தான்.

நொடியில் முந்தானா அவன் வசம் செல்ல, அதன்‌பின் நடைப்பெற்ற மாயங்கள் அனைத்தும் அவன் ஆட்சியில்.

நள்ளிரவில் அவளருகே அவளை அணையிட்டவன், “என்னை பிடிச்சிருக்கா உனக்கு?” என கேட்டான்.‌

“ம்ம்.” என்றாள்.

அர்ஜுனுக்கு நேரமெடுக்காமல் ம்ம் என்றேன் நிம்மதி. 

அடுத்த நாள் அலாரம் வைத்து எழுந்தவன், அவள் கண் விழிக்கும் முன் ஆரணிக்கு காய்கறி வாங்க சென்றான்.

அர்ஜுன் பயந்தது போல அமிழ்தினி இல்லை. நன்றாக தான் தன்னிடம் பழகுகின்றாள்.

என்ன அவள் படித்த பெண் என்று உண்மை உரைக்காமல் கமுகாகமாய் இருக்கின்றாள்.

ஒருவிதத்தில் தந்தை சொல்லிய பொய்யிற்கு இன்னமும் பாதுகாத்து ஆமோதிக்கின்றாள்.

போக போக என்றாவது உண்மை உரைப்பால் அப்பொழுது ஒரு பெண்ணின் மனதை ஜெயித்த திருப்தி கிடைக்குமென நம்பினான்.

ஒளிவுமறைவுயின்றி பழகினால் தானே பொய்யை தவிர்த்து உண்மையை கூற முடியும்‌.

கேரட்டை கடித்தபடி, பணத்தை கொடுத்து பெட்டிகளையும், காய்கறி மூட்டையும் பஸ்ஸிற்கு மேலே ஏற்றினான். 

அப்பொழுது வாழைபந்தலில் இருந்து காய் வாங்கும் நண்பன் பைக்கிலே வந்தான். மடமடவென வண்டியில் ஏற்றி செல்ல, தானும் வண்டியோடு வந்தே ஏற்றலாமோ என நினைத்தான்.

பேருந்தில் ஜன்னலில் வீட்டுக்கு வரும் நேரமெல்லாம் அமிழ்தினியோடு இல்லறத்தில் இனித்த அனுபவத்தை நினைத்து நினைத்து புன்னகையை வெளியிடாமல் உள்ளுக்குள் குதுகலித்தான்.

அதே நினைப்போடு வந்தவனுக்கு குளித்து முடித்து வாசத்தோடு வந்த அமிழ்தினியை கட்டியணைத்து தூக்கி சுற்றினான்.

“அச்சோ நான் குளிச்சிட்டேன். என்ன ஸ்மெல் இது. ஒரு மாதிரி குமட்டுது” என்று முகம் சுழிக்க, அர்ஜுனின் வேர்வை வாசம் தாண்டி அழுகிய வெங்காயத்தின் நெடி அவளை ஆட்டிப் படைத்தது.

அழுகிய வெங்காயத்தை எடுத்து தூரயெறிந்தவன் சட்டையிலேயே துடைத்ததனின் விளைவு.

அர்ஜுனுக்கு இயல்பான விஷயம் அமிழ்தினி செய்தாலும் எரிச்சலாய் மாறியது.

“என்னடி இப்ப மட்டும் குமட்டுதா?” என்று கர்ஜிக்க, அவன் சினம் முகத்தில் திகிலை தந்திருக்கும்.‌ ஆனால் அவள் தான் அவன் முகத்தை பாராது “பின்ன இல்லையா. தயவு செய்து இப்படி வராதிங்க” என்றாள்.

அர்ஜுன் முகம் கருத்தது. தனது நெருக்கம் ஒருத்திக்கு குமட்டுவதா என்ற அடிபட்ட வலி உணர, அவளை தள்ளி விட்டு அகன்றான்.‌

அப்படியொன்றும் கீழே விழும் அளவிற்கு தள்ளிவிடவில்லை.‌ அதனால் அவன்‌கோபம் உணராமல் கூந்தலை துவட்ட‌ ஆரம்பித்தாள்.

நொடிக்கொரு முறை இப்படி தன்னை தவிக்க வைக்க இவளால் சாத்தியமாகிறதே என்ற எரிச்சல் அமிழ்தினி மீது வந்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

23 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை?-13”

  1. Ava yedhuku solranu ivanum kekala avalum solala…indha thaadikaran romba tan kovama suthitu irukan… super ka…. waiting for next ud

  2. Intha kadai vacha pasangaluku epo eppadi irukanumnu theriyatha illa theriyamalaye irupangala mrg munnadi tha apadi na ipo mrg agiduchi la vervai smell vera intha mari alugiya smell vantha yaruku pidikum . Atha sonna kovam varuma udane arjuna thappu pa

  3. அட போடா கூமுட்டை…! அவை எதுக்கு சொல்றா ? ஏன் சொல்றா?
    எதையும் புரிஞ்சுக்காமலே குதிக்க வேண்டியது.

  4. Arjun ellathaiyum thappu ah vae purinchikiran yae ava normal than ah sonna ah ithu enna molaga puli.ah paravala nu thodachikirathuku azhuguna porul oda smell eppudi irukum kastam unkooda

  5. அச்சோ amizhthini என்னமா இப்படி ஆகிவிட்டதே
    ஜான் ஏறினால் முழம் சருக்குமோ

  6. வீணா மேடம் தயவு செஞ்சு அந்த அர்ஜுனுக்கு ஒரு ரெண்டு நாள் கிளாஸ் எடுங்க. அவனுக்கு ஒரு விஷயம் பழக்கப்பட்டிருக்குன்னா எல்லாருக்கும் அது பழக்கப்பட்டுருக்கணும்னு அவசியம் இல்லையே அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறான்

  7. Arjun enn daa unkuda oree akkaporaah irukuda….
    Ethuku eduthalum kova padurathu….
    Apdiye moonchila vitana paaruu….👊👊👊👊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!