புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -35

அத்தியாயம் -35

   காரிலிருந்து வந்த இரு பெண்களில், தமிழ்-மின்மினியை கண்டதும் நிபுணனுக்கு தன் நண்பன் முதலமைச்சர் அரவிந்த்னகன் மகள், அவன் தம்பி இந்திரஜித் மகளென வரவேற்றார்‌.

    தமிழ் கார் உள்ளே நுழையும் போதே தலைதெறிக்க ஓடிய சர்வேஷை கண்டு, “அவனவன் என்னை கண்டா பேச ஓடி வர்றாங்க. இவன் இருக்கானே அப்படியே ரிவர்ஸீல ஓடறான்.” என்று தமிழ் கத்தினாள்.

  பக்கத்திலிருந்த சித்தப்பா இந்திரஜித் மகள் மின்மினியோ, “அக்கா அங்கிள் காதுல விழப்போகுது. இவராவது பரவாயில்லை. இவர் அண்ணா‌உங்களை கண்டுக்கவே மாட்டார். அதுக்கு இவர் தேவலை” என்று உண்மையை உரைத்திருந்தாள்.

‘ஆமா அவன் ஒரு கல்லுளிமங்கன், அவனிடம் சிக்கின பொண்ணு பாவம். அவங்க அப்பாவையே அறைந்துட்டதா டேடி மம்மியிடம் பேசினார். நம்ம எல்லாம் பழகினா ஆளையே ஏப்பமிடற மாதிரி செய்வார். அதுக்கு இவன் தேவலை’ என்று இறங்கினாள்.

   காரிலிருந்து தமிழ், மின்மினி இறங்கியதும், “வாங்கம்மா, என்னம்மா சொல்லாம கொள்ளாம வந்திருக்கிங்க? உள்ள வாங்க” என்று வரவேற்றார் நிபுணன்.

இரண்டு தினத்திற்கு முன் ஆண்டு விழாவிற்கு செல்லும் போது தான் தொகுதியில் போட்டியாளராக அறிவிப்பு அளிக்க சென்றிருந்தார்.

  ”உங்க அப்பா வர்றாராம்மா?” என்று கேட்டார் ஆதிரா.

‌முதல்வர் அரவிந்த் தங்கள் வீட்டிற்கு வருகை தந்தால் சில பாதுகாப்பு வேண்டுமே என முன்னறிப்பகற்கு கேட்டார்.‌ ஏற்கனவே இவ்வீடு பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தாலும் கேட்டு நின்றார்.

  இவர்கள் வரவேற்பை ஒரு பக்கம் ஏற்று, மறுபக்கம் ‘என்ன பார்த்தா ஒளியற? இப்ப பாரு சர்வேஷ் எப்படி ஓடி வர வைக்கிறேன்’ என்று தமிழ் நினைத்து, “அப்பாவே உங்களை பார்க்க வரலாம்னு இருந்தார் அங்கிள். ஆனா அடுத்த எலெக்ஷன் வருதுன்னு வேலையிருந்தது. அதுக்குள்ள உங்களுக்கு இப்படி ஆனது தெரிந்ததும் அப்பா சங்கடப்பட்டார்.
உடனே உங்களை பார்க்க கிளம்பினா, அங்கே நிறைய வேலை தடையாகுது.

   அதான் நான் போறேன் என்றதும் அப்பா என் கூட மின்மினியை அனுப்பினார்.” என்று சூட்சமமாக பேசினாள்.

கதவருகே ஒட்டு கேட்ட சர்வேஷோ, இப்படி ஆனதுன்னா என்ன அர்த்தம்? அப்பாவுக்கு என்ன? என்ற எண்ணம் எக்ஸ்பிரஸ் ரயிலில் எண்ணங்கள் சென்றது.

     “என்ன ஆங்கிள் கட்சி ஆபிஸ்ல உங்களை வெட்டற வரை என்ன பண்ணிட்டு இருந்திங்க. முதுகுல வெட்டா?” என்றதும் தமிழ் குரலில், சர்வேஷ் படக்கென கதவை திறந்தான்.

    “அப்பா என்னப்பா ஆச்சு? வெட்ட வந்தாங்களா? யாரு?” என்று குரல் அதிர, வந்தான் சர்வேஷ். இவன் குரல் கேட்டு துளிரும் வந்தாள்.

   ‘எப்படி வரவழைச்சேன் பார்த்தியா?’ என்று தமிழ் சர்வேஷை நக்கலாய் பார்த்தாள்.

தமிழின் கேடித்தனம் தெரிந்தாலும் நிபுணன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

தமிழ் அவள் அம்மா ஷமிரா போல இருக்கலாம். ஆனால் சர்வேஷ் எங்களின் கலவையில் தோன்றியவன். பார்த்து பதமாக பேசுபவனே.

 அதனால் தமிழிற்கு மட்டும் விடை தந்தார். “அட என்னை யாரும்மா வெட்ட முடியும். ஆளுங்கட்சியில இருந்த தொண்டன் எதிர்த்து பேசினான். அதுக்கே நம்ம ஆளுங்க வறிஞ்சிகட்டிட்டு கை ஓங்கிட்டாங்க.” என்றார் நிபுணன்.

‌‌ இதில் சர்வேஷ் குறுக்கே, “அப்பா என்கிட்ட சொல்லவேயில்லை. சென்னையில் இருக்கறவங்களுக்கு தெரிந்திருக்கு எனக்கு தெரியலை.” என்று தந்தையிடம் கோபமானான். பின்னே தமிழிற்கு தெரிந்த விஷயம் தனக்கு தெரியவில்லையே.

    நிபுணனோ சர்வேஷை சாந்தப்படுத்தும் பொருட்டு, “உங்கண்ணா ஆர்யனே வாயை திறந்து ஹனிமூன் பத்தி பேசினான்.
அந்த நேரம் ஆர்யனிடம் ஏதாவது சொன்னா ஹனிமூன் போறதை நிறுத்திடுவான், யார் என் ஐயாவை எதிர்த்து பேசினானு துள்ளுவான். அதுக்கு தான் அமைதியா இருந்தேன். இதெல்லாம் சொல்லணுமா டா. தேர்தல்ல நம்ம தொகுதியில நிற்க போறேன். இத்தனை நாள் தொகுதியை ஆண்ட கட்சியாட்கள் இதுக்கு கூட சலசலக்கலைனா தான் ஆச்சரியம்.‌

   நாம போட்டியில நின்றாலே, நாம ஜெயிப்போம்னு தெரிந்து கத்தறாங்க. நம்ம எதிர்ல ஒருத்தன் கை நீட்டவும் அதட்டியிருக்காங்க. ஒரு விடலைப் பையன் அங்க துள்ளியெழுந்தான்.

  இதெல்லாமாடா ஒவ்வொன்னா சொல்லுவாங்க. ஏதோ அரவிந்த் போன்‌ பண்ணி தேர்தலுக்கு அப்ளை பண்ணிட்டியாடானு பழகிய தோஷத்தில் கேட்டான்‌” என்றதும் சர்வேஷ் மனம் தாளாமல் கவலையானான்.

  நிபுணன் ஊர் தலைவராக தந்தை வழி நடந்தான்.‌ சில அரசாங்க இடத்தில் பணிகள் தாமதமாக நடக்க, அரசாங்க ஆட்களில் ஒருவர் தங்கள் ஆட்களில் நியமிக்க நினத்தார். ஆனால் அரவிந்த் தன் தோழன் நிபுணனை நிற்க கூறினார்.

   முதலில் மறுத்த நிபுணன் அரவிந்த் வற்புறுத்த தங்கள் தொகுதி நலம் பெறவும் நிற்க முடிவெடுத்தார்.
இதோ எதிர்கட்சி ஆட்களின் ரகளை துவங்கிவிட்டது.

இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தவருக்கு இவனால் ஏதும் புதுப்பிரச்சனை ஆரம்பிக்க முன்கூட்டியே அதிருப்தியை காட்டுகின்றனர்.

   லேசாக தொகுதியில் கட்சி ஆட்கள் கேள்விக் கேட்டதற்கே நிபுணன் கூடயிருந்தவர்கள் பாய்ந்து விட்டனர். இதில் எதிர்த்து பேச ரகளையால், கைகலப்பில் சண்டை உருவெடுக்க, அரவிந்திடம் நாமினேஷன் செய்த கையோடு கூறியிருந்தார்.

ஏற்கனவே குடும்பத்தோடு திருமணத்திற்கு வரயியலாது, தமிழ் முகம் தூக்கி வைத்திருந்தாள்.
இப்பொழுது தமிழிற்கு கிடைத்த லீவில் பறந்து வந்து விட்டாள்.

   அவளுக்கு சர்வேஷ், ஆர்யனிடம் வம்பு இழுக்க பிடிக்கும். ஆர்யன் சரியான கல்லுளிமங்கன் எதற்கும் எதிர்வினையாற்ற மாட்டான்.
 
  தந்தை நிபுணன் போல எட்டி நிறுத்தும் வல்லமையுண்டு அவன் பார்வைக்கு. அதனால் தான் தாத்தா வீட்டில் இருந்தப்போது கூட தமிழ் பேச வந்தால், முதலமைச்சர் மகளென்றெல்லாம் பாராது கடந்துவிடுவான்.

  அதை மீறி எரிச்சல் ஏற்படுத்தும் செய்கை புரிந்தால், தன் கண் பார்வையால் பிடிக்காததை உணர்த்துவான்.
    அதோடு தமிழ் பேச வந்தால், அரவிந்திற்கே அழைத்து, “உங்க பொண்ணை இங்க அடிக்கடி அனுப்பாதிங்க அங்கிள் முதலமைச்சர் பொண்ணு இங்கே வர்றானு பேசுற மாதிரி வந்துடும். ஏற்கனவே உங்களோட வருகை, உங்களுக்கு இரண்டு திருமணம் ஆனது எல்லாமே மீடியாவுக்கு வெட்ட வெளிச்சமா தெரியும். இவளும் மீடியாவுல சிக்கினா‌ உங்க அரசியல் வாழ்வு பாதிக்குமென்று ஊசியெற்றுவான். அதனால் கறார் பேர்வழி என்றும், வயதில் தமிழின் அண்ணன் ப்ருத்வி வயதிருக்கும் ஆர்யனை தள்ளி நிறுத்திக்கொண்டாள்‌.

   சர்வேஷ் அப்படியல்ல, அவளது வயதுக்குரியவன், லேசாக சீண்டினாலே, சண்டைக்கு வருவான். கூட கூட ‘ஏய் சீ பே, என்று எரிந்து விழுவான்‌.

   சில நேரம் அப்படியே பேசுவான்.

   என்ன தான் பேசினாலும், தமிழை கண்டால் கொஞ்சம் அலர்ஜி உண்டு. முதல் காரணம் அவளது செய்கை திமிரென்றால், மற்றொரு காரணம் அரவிந்திற்கு சர்வேஷை மாப்பிள்ளை என்று கூறி பேசுவார். தமிழும் பார்வை அம்பும், பலமாய் செலுத்த, திகில் இருக்கும்.

  அவள் வந்தால் தலைதெறிக்க ஓட்டம் பிடிப்பான்.

    தந்தை அரசியலில் நிற்க புது பிரச்சனை எழுவது அறிந்தாலும், ஊர்மக்களில் பலரும் கண்ணை மூடி ஓட்டு போடுவார்களென்ற மிதப்பில் கவனிக்கவில்லை. ஆனால் தந்தை நிற்க அரசியல் ஆட்களுக்கு அதிருப்தி ஆவதை இன்று தான் அறிந்தான்.

   அதுவும் தமிழால்.

    ஆதிரா வந்தவர்களை குளிர்பானம் கொடுத்து, புத்துணர்வு பெற்று வர, அறைக்கு துளிரோடு அனுப்பினார். மின்மினி துளி ரோடு நடைப்போட்டாள்.

   தமிழோ சர்வேஷ் அருகே வந்தவள், “இந்த வருஷத்தோட படிப்பு முடிஞ்சிடும் தானே?” என்று கேட்க வேண்டாவெறுப்பாய், “ஆமா” என்றவன் அறைக்குள் புக, “இங்க தான் ஒன் வீக் ஸ்டே பண்ண போறேன் சர்வேஷ்” என்று உபரி தகவலை வழங்க, ‘கடவுளே முடிஞ்சா ஒரு வாரம் நான் எங்கயாவது ஒடிடணும்.
   ஆனா இந்த துளிருக்கு துளிர் விட்டுடும். அந்த பையன் எந்த காலேஜ்னு கண்டுபடிக்கணும்.’ என்றவன் கதவை தாழிட்டு கொண்டான்.

   ஏற்கனவே ஒரு முறை கதவு திறந்திருக்க, உன்னிடம் பேசணுமென்று வந்து இரண்டு மணி நேரம் அறுத்து விட்டாள்.

‌ இதுல இந்த முறை அவ தங்கச்சி வேற வந்திருக்கா. மின்மினி கண்மணினு,’ என்று முனங்கினான்.

துளிரோ அப்பாடி இந்த ‘வேம்பையர்’ தமிழ் போகற வரை சின்ன அண்ணன் ரூம்லயிருந்து வெளியே வராது. அவனுக்கு தமிழ் என்றாலே அலர்ஜி.

   பெரியண்ணா ஆர்யனும் ஹனிமூன் போனதால எப்படியும் பத்து நாள் ஜாலி. கொஞ்சமாவது நிம்மதியா இருப்போம் என மகிழ்ந்தாள்‌.

   ஆர்யனோ கோவாவிற்கு பிளைட் ஏறி, அவரவர் இருக்கையில் வீற்றுஙாகொண்டு, தாளமிட்டபடி அடிக்கடி சிற்பிகாவை பார்த்து திரும்பினான்.‌

   ஜீன் குர்தி என்று அணிந்து வந்தவளை, அவன் கொண்டு வந்த உடையை மனதிற்குள் மனக்கண்ணில் போட்டு பார்த்து சிரித்தாள்.

“இப்ப எதுக்கு என்னை பார்த்து பார்த்து இளிக்கறிங்க,” என்றாள்‌.

  “ஒன்னுமில்லை தூக்கம் வந்தா தூங்கு” என்றான்.‌
“இப்படி வச்ச கண்ணு வாங்காம பார்த்தா எப்படி தூங்கறதாம்” என்றவள் சலுகைமாக தோளில் சாயவும், “சிற்பிகா, போர் ஹவர்ஸ் கழிச்சு நான் சொல்லறதுக்கு மறுக்காம எதுக்குன்னாலும் தலையாட்டணும்” என்றான்.‌

“ம்ம்” என்று உரைத்ததும் அதற்கும் சிரித்தான்.‌

தன் வாழ்வில் தனக்கானவள் என்று ஏறிட்டு பார்த்து ஆசைக் கொள்ளாதவனாக ஆர்யன் இருக்கலாம்.

ஆனால் தனக்கு வரப்போகும் மனைவிக்கு நிறைய ஆசைகளை சேர்த்து வைத்திருந்தான்.
அதையெல்லாம் செயல்படுத்த துவங்கினாள் சிற்பிகா தாங்குவாளா? என்று திரும்பி பார்க்க, ‘கண்டிப்பா மறுக்க வாய்ப்பிருக்கு ராசா. எக்ஸ்பெக்டேஷனை குறைத்துக் கொள்’ என்றது மனசாட்சி.
சிற்பிகாவும் இதற்கு முன் திருமண கனவை காணாதவளாக இருந்தவளுக்கு, ஆர்யனின் அருகாமை வாழ்வின் நிறைவுகளை அள்ளி வழங்கியது.

அதன் களிப்பில் கணவன் புஜத்தை கட்டி கொண்டு, விமான பயணத்தை ரசித்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

35 thoughts on “என் நேச அதிபதியே -35”

    1. சர்வேஷ் அவனை ஓட விட்டது அரவிந்த் மகள் தமிழ் தானா…. இனி சர்வேஷ் நிலை என்னவோ….🤔🤔🤔🤔🤔…. நிபுணன் அரசியல் தலைவர் ஆக போவது மகிழ்ச்சி ஆக உள்ளது அக்கா….

  1. Haha….indha vampire sarvesh paiyan indha oru vaaram thamizh ku bayandhu roomkullayae irupan pola😂ivan tholla thulir ku ilama iruka ore vazhi Ivan thamizh ah love panradhu tan ana vampire ku love Varavaikuradhu tan kastama irukum polayae….aryan atrocities super ah iruku…. superb writing akka…..

  2. Nice sis waiting for next ud 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  3. Super epi. Aaryan solratha sirpika kepala western dress podanume . Sarvesh Yen ippadi oduran avala pathu oru vela ava tha sarvesh jodi ah

  4. Sema sema new twist👌🏻👌🏻👌🏻 sarvesh ku aravindh ponnu tamil tan jodi ah👌🏻👌🏻👌🏻👌🏻 nibunan arasiyal la Entry aga poraru superu 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 enna twist vechirukano intha aryan😳😳😳 sirpi enna panna pora waiting 😍😍😍😍😍😍

  5. Super sis nice epi 👌👍😍 sarvesh unaku oru aala partha bayama🤣 tamiz avlo bayangaramana aala pa romba arumaiya pogudhu sis 🥰🥰🥰

  6. அப்படி… என்னென்ன ஆசைகளோ…?
    வண்ண விழி கண்ணுக்குள்ளே !

  7. Nibu election la nikka poran ada ithu super news aachae sarvesh unnaku ipadi oru allergy iruku nu theriyala yae tamizh ah pathu ah ipadi thalai therika oduna ah 🤣🤣🤣🤣🤣aari sir oda aasai enna nu pakka nangalum.goa varuvom

  8. ஆர்யன் சிற்பிஜோடி சேர்ந்தாச்சி இனி சர்வேஷ் தமிழ் ஜோடியின் அக்க போரைகாணலாம் என்று நினைக்கிறேன் கதையை முடிக்கபோறேன்என்று சொன்னதுதான் வருத்தமே ஆனால் இன்னும் இரண்டு ஜோடி இருக்கிறதே மாசரி உங்களின் கதையின் பயணிக்க நானும் தயார் மா வாழ்த்துகள்

  9. Super,
    Nibunan வாரிசுகள் ஒ‌வ்வொருவரு‌ம் ஒரு மார்க்கமாக சுத்துது. என்ன செய்வது பார்க்கலாம்.
    Very interesting.
    Nice moving

  10. நிபுணன் விஷயம் மட்டும் ஆர்யனுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் சாமியாடிடுவான்.
    ஓஹோ… சர்வே சுக்கு அந்த பொண்ணு தமிழ் ன்னா அவ்வளவு பயமா

  11. Wow😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 eagerly waiting for next ud sis 😘😘😘😘😘😘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!