Skip to content
Home » தீரா காதலே – 9

தீரா காதலே – 9


மறைத்து வந்த மேகக்கூடாரங்கள் சற்றே விலக நிலவன் மெதுவே தன் தலையை நீட்டி தண்ணொளியில் மேதினி மகளை வெளிச்சத்தால் நிறைத்திட பார்க்க, இன்னும் கட்டாந்தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு அதனை காண இயலாத நிலவன் தன்னை மேகங்களுக்குள் மீண்டும் மறைத்து கொண்டான்.

கடந்த ஒரு வாரமாக இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது. மெர்ஸி வாரம் முழுதும் காவல் நிலையம் சென்றும் எந்த தகவலும் அவளுக்கு வழங்கபடவில்லை. காலையில் தான் அவளின் பொக்கிஷங்கள் கிடைத்தது எனவும் ஆனால் விசாரணை முடியும் முன் தரபட மாட்டாது என்றும் உறுதியாக சொல்லி அனுப்பிவிட்டனர்.

இனி தன்னை விசாரணை செய்யும் போது அனைத்தும் சொல்ல வேண்டும்.. அதற்கு தன்னை தயார் படுத்த வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டாலும் தன்னால் அது முடியுமா? தன் தீபக்கை பற்றி தானே சொல்ல முடியுமா? என்ற கேள்விகள் அவளை துளைத்தது. மனம் முழுவதும் வேதனையோடு தன்னவன் பட்ட கஷ்டங்களை நினைத்து பார்த்து கண்ணீரோடு தன்னவன் புகைப்படத்தை கையில் வைத்து மனதால் காதல் பேசிக்கொண்டிருந்தாள்.


சென்னை மாநகரின் பாரம்பரிய உணவக விடுதி அது. அதன் வளாகம் பாரம்பரியம் நிறைந்த சூழலலாகவும் இயற்கை எழிலோடு அன்பான விருந்தோம்பலையும் கொண்டது. உணவகத்தின் ஒரு பகுதி கடற்கரையை ஒட்டி இயற்கை சூழலோடு அமைக்கப்பட்ட குடிலின் வெளியே நான்கு நபர்கள் அமரும் இடத்தில் பிரியதர்ஷனும் நிகிலும் அமர்ந்து சூப் அருந்தி கொண்டே தங்களை சந்திக்க வரும் அதிகாரிக்காக காத்திருந்தனர்.

மீட்டிங் நடைபெற்ற போது தவிர்க்க இயலா காரணத்தால் வராது போன அதிகாரியை சந்திக்கவே இந்த காத்திருப்பு. சில நாட்களாக வழக்கு விஷயமாக ஓடி அலைந்தவர்கள் தங்களையும் தங்கள் மனதையும் இந்த சூழலோடு பொருத்தி மனதை நிதானபடுத்த முயன்றார்கள்.

“டேய் நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. என்ன தான் கமிஷ்னர் ரிலேட்டீவ்னாலும் அவர் அவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கும்போது நக்கல் நையாண்டி பண்ணிட்டு இருக்க. ரியலி டிஸ்ஸபாயிண்ட் டூ யூ” என்று தர்ஷன் நிகிலிடம் கூறினான்.

“தர்ஷா நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு. உண்மையதானேடா சொன்னேன்” மிதமான குரலில் சொன்னவனை உக்கிரமாக முறைத்து “நிகில் பீ சிரியஸ்”

“ஹேய் இதுக்கு மேல சீரியஸானா ஹாஸ்பிட்டல்ல தான் அட்மிட் பண்ணணும். இப்ப என்னடா சொல்ல வர்ர? இந்த NCRB ரிப்போர்ட்ஸ்ல க்ரைம் ரிப்போர்ட்ஸ் மட்டும் தான் பப்ளிஷ் பண்ணியிருகாங்களா? என்விரான்மென்டல் க்ரைம் ரிப்போர்ட்ஸூம் சேர்த்து தானே பப்ளிஷ் பண்ணியிருகாங்க. போன வருஷத்தை விட இந்த வருஷம் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கு எதுல தெரியுமா எக்கோ க்ரைம்ல. ஏன் அதைப்பற்றி கமிஷ்னர் பேசலை” நிகில் உணர்ச்சிவேகத்தில் பொங்கினான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே பக்கத்து மேஜையில் வந்தமர்ந்த நபரை பார்க்கவில்லை அவர்கள்.

” இயற்கைக்கும் உயிர் இருக்குதானேடா அதனை அழிக்கிறது குற்றமில்லையா..?” மீண்டும் நிகில்

” “

“என்னடா நான் பேசப்பேச பாத்துட்டே இருக்கே பதில் தெரிலயா இல்லை நீயும் மரத்து போயிட்டியா?” கோவத்தில் கத்தினான்.

“நிகில்… பஸ்ட் நாம நமக்கு கொடுத்த அசைன்மெண்ட்ட முடிப்போம் அப்புறம் இத..”

“அப்புறம் பொங்கலும் வடையும் சாப்பிட்டு தூங்கலாம்னு சொல்றியா?” காட்டமாகவே கேட்டான்.

“நிகில் ஜஸ்ட் ஸ்டாப் இட்”

“நோ ஐ வோண்ட் ஸ்டாப் தர்ஷா. ஆக்சுவலி செவன் ஆக்ட்ஸ் ப்ரோமோட் பண்ணியிருகாங்க. அதுல சிகரெட் டொபக்கோ பிராடக்ட்ஸ்(Tobacco Products) மூலமா சட்டத்தின் கீழ் ரிஜிஸ்டரான கேஸஸ் கணக்கே இல்லாமல் அதிகமா இருக்கு. அதிலும் ரீசண்ட்லி ரிப்போர்ட் சின்ன பசங்க தான் அடிக்ட் ஆகுறாங்கனு ஆணித்தரமா சொல்லுது. இதுக்கு என்ன ஆக்ஷன் எடுக்க போறோம்? “

“நாம மட்டும் என்னடா பண்ண முடியும்? அண்ட் செவன் இல்லை எய்ட் ஆக்ட்ஸ் “

“எக்ஸ்கியுஸ்மீ மே ஐ ஜாயின் வித் யூ ?”

குரல் வந்த திசையில் இருவரும் திரும்பி பார்த்தார்கள். அவர்கள் அருகிலுள்ள மேஜையில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். விரிந்த கூந்தலில் பாதி போனிடெயிலில் அடங்கியிருந்தது. கூர்மையான கண்களை கருநிற கூலர் மறைத்திருந்தது. நேர்த்தியான உடையும் கம்பீரமான குரலும் அவள் உடல் மொழியின் மிடுக்கும் சொல்லாமல் சொல்லியது அவளும் அவர்களின் துறைதான் என்று.

” ஹாய் நிகில் ஹாய் ப்ரியதர்ஷன்” என்று எழுந்து வந்து கையை நீட்டினாள்.

“ஹாய் பட்..” நிகில் பேசும் முன்

” ஐஅம் இம்ப்ரஸ்டு யுவர் தாட்ஸ். குட் ஹூமானிட்டி” என்றாள்.

“தேங்க்யூ பட் நீங்க யாருனு சொல்லவே இல்லையே” நிகில்

“அண்ட் ஒன்மோர் திங்க் இப்படி ஒட்டுகேக்ரது நல்லாயில்லை” தர்ஷன்

“எக்ஸ்கியூஸ்மீ நீங்க பேசுர டோன்க்கு ஹோட்டலோட எண்ட்டரன்ஸ் வரைக்கும் கேக்கும் தனியா ஒட்டு எல்லாம் கேக்க வேண்டாம்” என்று பொரிந்தவள்

“ஐஅம் அன்பினி ஸ்பெஷல் க்ரைம் ப்ராஞ்ச்ல இருந்து இந்த அசைன்மெண்ட்க்கு என்னயும் ஒரு மெம்பரா அலாட் பண்ணியிருகாங்க. எஸ்டர்டே ஒரு கேஸ் விஷயமா அவுட்டோர்ல இருந்தேன். கமிஷ்னர் வரதராஜன் சார்தான் உங்களை மீட் பண்ண செண்ட் பண்ணாங்க.மே ஐ? ” என்று நாற்காலியை கை காட்டினாள். இருவரும் அமரசொன்னார்கள்.

“நிகில் உங்க ஆதங்கம் புரியுது. இந்த பிராஜக்ட் முடிச்சதும் நெக்ஸ்ட் நாம இந்த பிராஜக்ட்ல ஜாயின் பண்ணிக்கலாம். கண்டிப்பா கமிஷ்னர் சார்கிட்ட நான் பேசுரேன்” அன்பினி

” நீங்களும் இயற்கை விரும்பியா?” நிகில்

“அப்கோர்ஸ். இயற்கை இல்லனா நாம இல்லை. உங்க ஆதங்கம் எனக்கும் இருக்கு . கண்டிப்பா எக்ஸ்கியூட் பண்ணலாம்” அன்பினி

√வனச் சட்டம் 1927 & வனப்பாதுகாப்புச் சட்டம்(Forest Act & Forest Conservation Act)


√காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972(Wildlife Protection Act)


√சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986(Environment Protection Act)


√சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் சட்டம்(Cigarettes and Other Tobacco Products Act)


√காற்று 1981 மற்றும் நீர்ப் பாதுகாப்புச் சட்டம் 1974(Air and Water Conservation Act)


√தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம்(National Green Tribunal Act)


√ஒலி மாசுபாட்டுச் சட்டம்(Noise Pollution Act)


இதில் அணுஆற்றல் சட்டம்(Atomic Energy Act) தொடங்கபட்ட ஆண்டு மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு அடுத்த ஆண்டே நீக்கப்பட்டுவிட்டது.

” ஷ்யூர் மேடம். எனக்கு இன்னொரு மனதாங்கல் கூட இருக்கு . பாரஸ்ட் ஆக்ட்டையும் பாரஸ்ட் கான்செர்வேஷன் ஆக்ட்டையும் ஒன்னா ஜாயின் பண்ணிட்டாங்க. இதுல இந்திய பாரஸ்ட் ஆக்ட் பாரஸ்ட் மேனஜ்மெண்ட்காக ஆரம்பிச்சது பாரஸ்ட் கான்செர்வேஷன் ஆக்ட்டில் தான் காடழிப்பு ப்ரொடெக்டடு பாரஸ்ட்ட அழித்தலும் ஆக்ரமித்தலும் இன்குளுடு ஆகும்” நிகில்

” எக்சாட்லி இந்த ரெண்டு ஆக்ட்ஸையும் ஒன்னாக்குனதால எந்த ஆக்ட்டுக்கு கீழ் எவ்வளவு குற்றங்கள் பைல் பண்றாங்கன்னு தெளிவு கிடைக்கமாட்டிக்கு” அன்பினி
“எஸ் மேடம். ஆல்சோ விண்ட் வாட்டர் ஆக்ட்ஸையும் ஒன்னாக்கி அந்தந்த ஆக்ட் படி க்ரைம்ஸ்கான டேட்டாஸ் எதுவும் சரியா பைல் பண்ணாமலே ரிப்போர்ட்ஸ் பப்ளிஷ் பண்ணியிருகாங்க” நிகில்

“ம்ம்ம் அப்புறம் நேஷனல் கிரீன் ட்ரிப்னல்(National Green Tribunal Act) ஆக்ட்ட எதுக்கு இதோட லிஸ்ட் பண்ணாங்கனு எனக்கு புரில . க்ரைம் பற்றியும் பேசபடல பனிஷ்மென்ட் பற்றியும் பேசபடல. இந்த ஆக்ட் NGTயோட பங்சன் பவர்ஸ் அண்ட் ப்ரொசிசர எப்படி பாலோ பண்ணலாம்னு தான் கொடுத்துருகாங்க. இதை ஏன் க்ரைம் பிரான்ச்க்கு கீழ் கொண்டு வந்தாங்கனு தெரில” அன்பினி
“மேடம் இதை சொல்றீங்களே சிகரெட்ஸ் அண்ட் அதர் டொபாக்கோ பிராடக்ட் ஆக்ட்ஸ்படி பொது இடத்தில் சிகரெட் பிடிக்ககூடாது, 18 யேர்ஸ்க்கு கீழ உள்ளவங்க இத யூஸ் பண்ண கூடாது ஸ்கூல் காலேஜ் பக்கம் இதலாம் விற்க கூடாதுனு கூவுனா கூட எவன் கேக்ரான் சொல்றாங்க. அட அத விடுங்க மேடம் NCRB ரிப்போர்ட்ஸ்ல இதுக்கான டேட்டாஸே இல்லை. சரியா எதையும் பைல் பண்றதே இல்லையே. எதுக்கு இந்த விஷயத்துக்கு இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறாங்கனு தெரில”

“ஏன்னா என்விரான்மென்டல் க்ரைம்ஸ் பத்தி இந்தியாவுல அதிகம் விழிப்புணர்வு இல்லை அத பத்தி யாரும் பேசுரது இல்லை சொல்லபோனால் அலட்சிய போக்கு. விளைவு வயலேஷன் சிவில் க்ரைமா இம்ப்ரூ ஆகுது. கொடுங்கையூர் பெருங்குடில குப்பைகளை கொட்ராங்க அதோட கெபாசிட்டி தாண்டி கொட்ராங்கனு கவர்ன்மெண்ட்க்கே தெரியும். பட் டேட்டாஸ் சரியா இல்லையே” அன்பினி

“எக்ஸாட்லி மேடம். இன்னும் மக்கள் இதை ஒரு சீரியஸ் க்ரைம்மா கன்சிடர் பண்ணல. மெல்ட்டிங் ஆப் போலார் ஐஸ், ஓசியன் அசிடிபிகேஷன், சி லெலல் ரைஸ்(துருவப்பனி உருகுதல், கடல் அமிலமயமாதல், கடல் மட்ட உயர்வு)-க்கான அடிப்படை பிரச்சினை என்னனு ஒவ்வொருத்தரும் சிந்திக்கனும். இண்டஸ்டீரியல் பொலுயுஷன், என்விரான்மென்டல் கேர்லெஸ் டெவலப்மெண்ட் பிராஜக்ட்ஸ் எல்லாம் பேரழிவுக்கு அடிக்கோலா இருக்கு. சோ கண்டிப்பா என்விரான்மென்டல் வயலேஷன்ன க்ரைம் லிஸ்ட்டில் கன்சிடர் பண்ணி சரியான டேட்டாஸ் கலெக்ட் பண்ணியே ஆகனும்” நிகில்

“எக்சாட்லி என்னை கேட்டீங்கனா நம்ம போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறமாதிரி ஒவ்வொரு டிபார்ட்மெண்ட்க்கும் தனிதனி யூனிட் எப்படி டிசைன் பண்ணிருகாங்களோ சேம் என்விரான்மென்டல் க்ரைம் பிராஞ்ச்னு தனியா ஒரு செக்சன் கொண்டு வரனும். ஒரு என்விரான்மென்டல் க்ரைம்க்கு சயின்டிபிக் எவிடன்ஸ் தான் ரொம்ப முக்கியம் சோ அதுல எகாலஜிஸ்ட், சயின்டிஸ்ட் , ரிசெர்ச்சர்ஸ், ஃபாரன்சிக்ஸ், போலிஸ் ஆபிஸர்னு எல்லா டிபார்ட்மெண்ட்லிருந்தும் வேலை பாக்கனும். அப்ப தான் எல்லாம் சரியா நடக்கும்” அன்பினி

” வாவ் மேடம் சூப்பரா சொல்லிடீங்க எக்ஸாட்லி இது ரொம்ப நல்ல ஐடியா.” நிகில்

“எஸ் மிஸ்டர் நிகில். க்ரைம் டாக்குமெண்ட்ஸ்னா வெறும் லாட்ஸ் ஆப் டேடாஸ் கலெக்ட் பண்றது மட்டும் இல்லை. குற்றங்களோட சிவியரிட்டிய பொறுத்து பிராப்பர்லி கம்பைல் பண்ணணும்.” அன்பினி

” ஆமா இந்தியால என்விரான்மென்டல் க்ரைம்ஸ் ரிஜிஸ்டர் பண்றதுலேயே நிறைய குளறுபடி இருக்கு. டேட்டாஸ் கம்பைல் பண்ற மெத்தட்லயே கிளியர் டெபினிஷன் இல்லை இதை முதல்ல டிஸ்போஸ் பண்ணணும் மேடம்” நிகில்

” எஸ் பண்ணுவோம். இந்த என்விரான்மென்டல் க்ரைம்ஸ் 2014லிருந்து தான் சர்வே பண்ண ஸ்டார்ட் பண்ணாங்க. 2016 ல வெறும் 4732 ஆக இருந்த என்விரான்மென்டல் க்ரைம்ஸ் ஒரே வருஷத்துல அதாவது 2017ல ஒரேயடியாக எப்படி 40000 ஆக உயர முடியும்? அதுக்கு அப்புறம் ஏன் எந்த ரிப்போர்ட்டும் பப்ளிஷ் ஆகல? பப்ளிஷ் ஆனாலும் இந்த டேட்டாஸ் எல்லாம் சரிதானா? இதுக்கு என்ன காரணம் ? இதை எல்லாம் எப்படி தடுத்து நிறுத்துறதுனு நாம கோரிக்கை வைக்கலாம் கமிஷ்னர் கிட்ட “

இவர்கள் பேசுவதை கருமமே கடனாய் பார்த்திருந்த தர்ஷன் இதற்கு மேல் பொறுக்கமாட்டாது
” உங்க பிளானிங் பிளா பிளா எக்ஸட்ரா முடிஞ்சதுனா இப்ப நாம இந்த கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா?” என்று வினவினான்.

“யா ஷ்யூர் “என்று சிரித்தாள் அன்பினி.

“ஓகே பைன். நமக்கு கொடுத்த அசைன்மெண்ட் சூசைட் கேஸஸ் ஏன் அதிகம் நடக்குது? என்ன காரணம்? அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன? இதைத்தான் நாம ரிப்போர்ட் பண்ண போறோம் இல்லையா?” தர்ஷன்

“காரணம் என்ன பெரிய காரணம் லவ் பெயிலியர் , பிஸ்னஸ் பிராப்ளம், பினான்ஸியல் ப்ராப்ளம், எகானமிக் க்ரைஸ், மென்டல் ஹெல்த் ப்ராப்ளம், பீலிங் ஆப் ஐசோலேஷன், பேமிலி பிராப்ளம் ஒர்க்லோடு இவ்வளவு தான் ரீசன்ஸ். கேஸ் பைல் பினிஷ்” என்று நிகில் ஏற்ற இறக்கத்துடன் பேச தர்ஷன் உக்கிரமாக முறைத்தான் என்றால் அன்பினி சிறு புன்னகையுடன் அவனை பார்த்திருந்தாள்.

“நிகில் கொஞ்சம் சீரியஸா பேசலாமா?” தர்ஷன்

” நான் என்ன காமெடியாடா பண்ணிட்டு இருக்கேன். ப்ரிவியஸ் யேர் 1,64,033 சூசைட் கேஸஸ் கரண்ட் யேர்ல 1,88,051 சூசைட் கேஸஸ் பைல் ஆகியிருக்கு. அதிலயும் தமிழ்நாடு தான் செகண்டா இருக்கு”

பொறுமையிழந்த தர்ஷன் ” நிகில் நான் சொல்ல வரதை கொஞ்சம் காது கொடுத்து கேக்ரீங்களா? உங்க உயர் அதிகாரி முன்னாடி இப்படி தான் டிஸ்ரெஸ்பெக்ட்புலா பிகேவ் பண்வீங்களா?” என்று காட்டமாகவே உரைத்தான்.

“நிகில் அவர் ஏதோ சொல்ல வரார் உங்க இமோஷன்ன கண்ட்ரோல் பண்ணுங்க ரிலாக்ஸ் ஓகே” என்று அன்பினி சொல்லவும்


” எக்ஸ்ட்ரீம்லி சாரி சார். சொல்லுங்க சார்”


“லாஸ்ட் டைம் நாம ஒரு சூசைட் கேஸ் இன்வெஸ்டிகேஷன் பண்ணோம் ஞாபகம் இருக்கா?”

“எஸ் சார் தீபக் கேஸ்தானே ராயபுரம்”

“ம்ம்ம் நிகில் நீங்க லாஸ்ட் வீக் யாரோடயோ அந்த வீட்டுக்கு போனத பாத்தேன் நான். அதுவும் கொட்டுற மழையில். இப்யூ டோண்ட் மைண்ட் என்ன பர்பஸ்காக போனீங்க? இந்த கேஸ் விஷயமா தானா” என்று அன்பினி வினவ தர்ஷன் ‘ இதான் நீ ரகசியமா போன லட்சணமா’ என்று நிகிலை கண்களால் தூற்ற நிகில் அசட்டு புன்னகையுடன்

“என்ன மேடம் என்ன பாலோ பண்ணி வந்தீங்களா?” நிகில்

“நோ மிஸ்டர் நிகில். நான் ஒரு கேஸ் விஷயமா அந்த பக்கம் வந்து மழையில் மாட்டிகிட்டேன். மழைக்கு ஒதுங்கி நிற்கவும் நீங்களும் இன்னொரு ஆபிஸரும் அந்த வீட்டு கேட் மேல ஏறி குதிச்சீங்க. உங்க முகம் பரிச்சயமான போல தோணவும் யோசிக்கும் போது வரதராஜன் சார்கூட பாத்ததா ஞாபகம் வந்தது ” அன்பினி

“எஸ் இந்த கேஸ்காக நான் தான் அனுப்புனேன். லெட் மீ த பாயிண்ட். தீபக் தானா சூசைட் பண்ணிக்கல. கொல்லப்பட்டுருக்கான்” தர்ஷன்
“வாட் ?” நிகில் அன்பினி இருவரும் அதிர்ந்தார்கள்.

தீரா தேடலுடன்…

4 thoughts on “தீரா காதலே – 9”

  1. Kalidevi

    Ore crime and actoda definition niraya varuthe .Story Name thhera kadhal but crime varuthe pa . Sikram story kulla ponga theeran ku rna achi kandu pidinga

  2. ராவ்..! வெரி இன்ஸ்ட்ரெஸ்டிங் அன்ட் நைஸ் கோயிங்.
    😜😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *