புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -42

அத்தியாயம்-42

ஆர்யன் சிற்பிகாவை இழுத்து மாடிக்கு சென்றிட, அரவிந்த் இவ்வூரில் இருக்கும் தன் கட்சி ஆபிஸிற்கு சென்றான்.‌

தமிழ் மின்மினி இருவரும் அறைக்குள் சென்றார்கள்.

துளிரும் அவளது அறையில் கிடந்திட, ராணி ஆச்சி சமையலில் தனக்கு உதவும் பெண்மணியிடம் காய் வெட்டி சமையலை கவனித்தார். உள்ளுக்குள் சர்வேஷ் தம்பி என்ன பொசுக்குன்னு அந்த வாயாடி தமிழை கட்டிக்கறேன்னு சொல்லிடுச்சு. இறைவா இந்த குடும்பத்தை ஒற்றுமையா வாழவிடுய்யா" என்று வேண்டிக் கொண்டிருந்தார். 

ஆதிராவோ"என்னங்க இது இப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டான். 

இந்த பொண்ணு இங்க வந்த நாள் எல்லாம் முகத்தை தூக்கிட்டு சுத்தினான்.
இப்ப இப்படி பேசிட்டான்.‌ உங்களிடம் சொல்லறேன் பாருங்க. உங்களுக்கு தான் முதலமைச்சர் சம்பந்தம் கசக்குமா?” என்று கவலயானார்.

“வார்த்தையை விடாத ஆதிரா. நானே சின்னவரு பேசியதில் ஆடிப்போயிருக்கேன். பெரியவரு சிற்பிகாவிடம் மன்னிப்பு கேட்கலை. அதை தவிரத்து அவரோட கல்யாணத்த எல்லாமா நம்ம பொறுப்புல விட்டார். அதோட சிற்பிகாவை தான் நீ தேர்ந்தெடுத்தனு தெரிந்தும் உன் பேச்சை என் பேச்சை மறுத்து பேசாம சம்மதிச்சார். ஆனா சர்வேஷ் நம்மிடம் ஒரு வார்த்தை கலந்து ஆலோசிக்கலை. மனசு என்னமோ சுணக்கமாகுது ஆதிரா.

என்னயிருந்தாலும் அம்மா வளர்ப்புல வளர்ந்த ஆர்யனுக்கும். என்கிட்ட அப்பா வளர்ப்புல வளர்ந்த சர்வேஷுக்கும் வித்தியாசத்தை காட்டிட்டாப்ல.

என்னால இந்த வருத்தத்தை தான் அடைய முடியுது. மத்தபடி நண்பனே சம்பந்தி ஆகறான்னு மகிழ முடியலை.

என்னவோ நெருஞ்சி முள்ளா குத்துது. ஆதிரா” என்றதும் ஆதிரா கணவன் அருகே வந்தாள்.

“என்னங்க நீங்க. ஏதோ என் வருத்தத்தை சொன்னா, என்னை விட நீங்க அதிகமா வருந்தறிங்க.

நான் வளர்த்தா என்ன. நீங்க வளர்த்தா என்ன? துளிரெல்லாம் நீங்க தூக்கி வளர்த்த குழந்தை ஆச்சே. ஒரு கெட்ட பெயர், தலைக்குனிவு இழுத்து வச்சிருக்காளா?

இந்த சர்வேஷ் ஏன் இப்படி கலந்தாலோசிக்கலை. வர்ற கோபத்துக்கு நாலறை விடலாமானு இருக்கு. ஆர்யனிடம் பகிர்ந்த இருப்பானோ?" என்று மனைவி கேட்டதும் நிபுணன் மறுப்பாய் தலையாட்டினார். 

"நீ நானாவது சங்கடமா இருந்தோம்‌. ஆர்யன் கோபமா போனாரே பார்க்கலையா? தேன்நிலவை கூட உதறி தள்ளிட்டு கோபமா வந்திருகாகாப்ல." என்று தலையை தாங்கினார். 

ஆதிராவோ மெதுவாக கணவர் அருகே அமர்ந்து, தோளை தீண்டி, “நீங்க உடைய கூடாதுங்க. என்னனு கேட்போம்‌ ஒருவேளை முதலமைச்சர் பொண்ணு அவனோட பழகியது போட்டோ போட்டதுல கூட அப்படி நடந்திருக்கலாம்.” என்று கூறவும் நிபுணனோ “போட்டோவுக்கு எல்லாம் மசியற ஆளா? இவன் தமிழ் என்னவோ சரியில்லை. புதுப்பிரச்சனை எதுவும் இழுத்துடக்கூடாது” என்று நிபுணன் பேசவும், ஆதிராவோ எச்சிலை விழுங்கி கவலையானார்.

  சர்வேஷ் அறைக்குள் சங்கடமாய் நடந்தவன் அண்ணனை காணும் எண்ணத்தோடு மாடிக்கு விரைந்தான். 

அண்ணனுக்கு தமிழின் கர்ப்பம் அறிந்ததால் பேச விறுவிறுவென ஓடினான்.

மாடி வாசலில் காலடி வைக்கவும் சிற்பிகா இருக்க தயங்கினான். 

”உள்ள வரலாமுங்களா அண்ணி.” என்று அனுமதி கேட்டான்.

”இதென்ன புதுபழக்கமுங்க தம்பி. இது உங்க வீடு. உங்கண்ணாவை பார்க்க உரிமையா வந்திருக்கிங்க வாங்க.” என்று கூப்பிட்டாள்.

“ஏய்… என்ன உரிமை மண்ணாங்கட்டி கிடக்கு?” என்று மனைவியை எரிந்து விழுந்தான்.

அண்ணனும் தம்பியும் என்னவோ போங்க. நான் என் நாத்தனார் துளியை பார்க்க போறேன் என்பது போல கோவாவில் துளிருக்கென்று வாங்கிய பரிசுகளை எடுத்து கொண்டு பேசுவதற்கு தோதாக அறையை விட்டு சென்றாள் சிற்பிகா.

‌‌ “அண்ணா… உன்னை போல் தானே எனக்கும் தமிழை பிடிக்காது. அப்படியிருக்கப்ப நான் எப்படி அவளை கல்யாணம் பண்ண சம்மதிச்சுயிருப்பேன்.

அதோட அவ பிரக்னண்டா இருக்கா உன் தம்பி இந்த மாதிரி தவறை செய்வானா?

பைக்ல ஊரை சுற்ற கூப்பிட்டாளே அன்னைக்கு தான் தமிழ் உதவி கேட்டா.

ஆக்சுவலி அவ பிரகனன்டா இருக்கறது யாருக்கும் தெரியாது.
அரவிந்த் அங்கிளுக்கு தமிழை உங்களுக்கு கல்யாணம் பண்ண நினைச்சார். ஆனா நீங்க தமிழை நிராகரிச்சுட்டிங்க.
அவருக்கு தமிழை எப்படியாவது இங்க கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறாரு.

இன்னொரு காரணம்‌ சென்னை தவிர்த்து அவருக்குன்னு ஒரு ஊர்ல அவர் பெயர் நிலை நாட்ட துடிக்கறார்.‌ அப்பாவோட நல்ல பேரை நட்பு காரணம் காட்டி இங்க அரசியலுக்கு உபயோகப்படுத்த திட்டம் தீட்டறார்.

ஏற்கனவே அவர் தொகுதி கட்சி ஆளு பொண்ணு மேல கை வச்சி இங்க அரவிந்த் அங்கிள் கட்சி படுத்தோல்வி.

அப்பா நட்பை நேசிக்கிறார் அதே நேரத்துல அரசியல்ல சாதகமா காய் நகர்த்தி சுயநலமாவும் இருக்கார்.

இதுக்கு தமிழை என் தலையில கட்ட விருப்பப்படுறார். தமிழும் இந்த வீட்டுல ஒருத்தியா வந்தா அவருக்கு இங்க கட்சில தூணா இடம் பிடிக்கலாம்னு மிதப்பு.

‌ ஆனா தமிழ் அவ படிச்ச இடத்துல ஒரு பையனை விரும்பியிருக்கா. அவனோட பழக்கத்துல இப்ப பிரகனென்ட். இப்ப போய் அவ அப்பா அரவிந்திடம் அவ காதலை சொன்னா அவங்களை பிரிச்சிடுவாராம். அதோட அவ கருவை கலைச்சிடுவார்னு பயப்படறா. இப்ப இரண்டரை மாசமாகுது.
அவளுக்கும் எனக்கும் கல்யாண பேச்சு ஆரம்பிச்சு. நான் இப்ப தானே அண்ணா கல்யாணம் நடந்ததுனு சொல்லி ஒரு ஆறுமாசம் தட்டு மட்டும் மாத்திட்டு, டைம் கேட்க சொன்னா.‌ அப்படி நேரம் கிடைச்சா அவ அவளோட அப்பாவிடம் மேற்படிப்புன்னு அதே நாட்டுக்கு போயிடுவா. அங்க ஆறு மாசம் சமாளிச்சா குழந்தை பிறந்துடும். கையில குழந்தையோட அவ அப்பாவை பேஸ் பண்ணினா அவர் அக்சப்ட் பண்ணிடுவார்னு நம்பறா.

ஒரு சின்ன குழந்தை உயிர் முக்கியம் இல்லையா அண்ணா. அதனால் அவ வெளிநாட்டு போக உதவினேன். இதுவரை அவ நம்மிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. நான் உதவுவேன்னு இங்க நம்பி வந்திருக்கா.

கல்யாணத்துக்கு தலையாட்டியதுக்கு வேறெந்த காரணமும் கிடையாது அண்ணா.

என்னை தப்பா நினைக்காத.” என்று வருந்தினான்.

ஆர்யனோ பெருமூச்சை விடுத்து, “மடையா மடையா… அந்த குழந்தைக்கு காரணமானவன் சட்டுனு பிரேக்கப் பண்ணி தமிழை கைகழுவினா என்ன பண்ணுவ?

குழந்தைக்கு நீ தான் காரணம்னு பிளேட்ட திருப்பினா.? நல்லவேளை டி.என்.ஏ ரிசல்ட்டை வச்சி நீ அப்பன் இல்லைனு ப்ரூஃப் பண்ணிடலாம். ஆனா பேசிய பேச்சுக்கு தட்டு மாத்தியதற்கு அரவிந்த் அங்கிள் அப்பாவிடம் தமிழை மணக்க கோரிக்கை வச்சா என்ன செய்வ?

கண்ணை மூடி உதவி செய்வியா? எந்த நம்பிக்கையில் அந்த சூர்ப்பனகைக்கு உதவற?

உதவி செய்தா நமக்கு உபத்திரவமா திரும்பிடாம கவனமா இருக்கணும்." என்று கூறவும் சர்வேஷ் திகைத்தான்.‌

நேற்று தமிழ் அவள் காதலை கூறி உதவி கேட்க, முதலமைச்சர் மகள் இப்படி நம்மிடம் கேட்கின்றாளே என்ற எண்ணத்தில் உதவுவதாக வாக்கு தந்தான். ஆனால் ஆர்யன் கூறியது போல சிந்திக்க நேரம் அமையவில்லை. இப்பொழுது சிறு மலைப்பு.

தமிழ் சட்டென மாற்றி பேசினால் மணக்க முடியாதென கூறிடலாம். ஆனால் பத்திரிக்கையிலும் சோஷியல் மீடியாவிலும் தன் பெயரும் புகைப்படமும் பேசும் பொருளாக மாறும். தந்தைக்கு கெட்டப் பெயர் வரலாம்.

எதை வைத்து தமிழை நம்புவது.

“அண்ணா… தமிழை நம்பறதோ நம்பாததோ இப்ப எந்த முடிவும் எடுக்க முடியலை. ஒரு வேளை அவளுக்கு இந்த உதவி செய்யறதால அவ குழந்தை பாதுகாப்பா வளரும்னா நம்பி பாருன்னு மனசு சொல்லுது. இதை தவிர்த்து உங்க மனசுல ஏதாவதே முடிவுயிருந்தா நீங்க எடுங்க. அதுக்கு நான் கட்டுப்படுவேன்.” என்று சரணடைய, ஆர்யனோ மௌவுனமானான்.

தரை தேயும் விதமாக நடந்தான். "ஐயாவிடமும் அம்மாவிடமும் என்ன சொல்லப்போற? என்னை மாதிரியே அவங்களும் அதிர்ச்சியில இருப்பாங்க. கல்யாணத்தை கூட நம்மிடம் அபிப்ராயம் கேட்கலைனு வருந்தலாம். 

முதல்ல அவங்களிடம் என்ன சொல்ல?” என்றான்.‌

“அரவிந்த் அங்கிள் போகறவரை உண்மையை கூறாம, மறைக்கலாம். அவர் போனதும் எடுத்து சொல்வோமா அண்ணா?” என்று கேட்டான் சர்வேஷ்.

"ம்ம்ம்." என்றவன் தம்பியிடம் "அந்த பொண்ணுகிட்ட அவ காதலன் யார் என்னனு கேட்டா விசாரி." என்றதும் சரிங்கண்ணா" என்று தலையாட்டினான்‌.

“அண்ணா அப்பறம் துளிரு…” என்று இழுக்க, “துளிருக்கு சிற்பிகா பரிசு பொருளா வாங்கி குவிச்சிருக்கா. ஒவ்வொன்னா காட்டி சிற்பிகா சந்தோஷப்படுவா.

ஆங்… சர்வேஷ் இது உனக்கு வாங்கியது.” என்று பரிசுகளை கொடுக்க, தற்போதா அண்ணனிடம் துளியை பற்றி பேசலாமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடக்க, சர்வேஷ் எதுக்கும் சரவணவேலன் மச்சானிடம் விதார்த்தை பற்றி கேட்டு தெரிந்துக்கிட்டு பேசுவோம்.

ஒருவேளை துளிர் விரும்பலை என்று தெரிந்தா அண்ணனிடம் சொல்லாம தவிர்க்கலாமென்ற முடிவெடுத்தான்.

அதனால் ஆர்யன் அண்ணனோடு பாதச்சுவடை பின் தொடர்ந்தவனாக நடந்தான் சர்வேஷ்.‌

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

27 thoughts on “என் நேச அதிபதியே -42”

    1. என்னாத்தை வாக்குறுதி கொடுத்துட்டு, தட்டையும் மாத்திக்கிட்ட பிறகு திட்டம் போட்டு என்ன செய்யப் போறாங்களோ தெரியலையே…???
      😤😤😤

  1. NALLA iruntha kudumbathula kummi adika vanthita intha Tamil korangu.enna panna porano.Sarvesh prachanai ipdi na namma Thulir pappa prachanai.iyooo ipavae kanna kattuthae

  2. Nambi emanthutan sarvesh anna crt ah yosikiran paru ava ketathum ena ethunu yosika sari solviya unga amma kitta ethulaum mayanga maten solitu thana pona ava sonnathu elam ketiye yara love pana enanu visarichi ya

  3. Nice sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  4. Super sis nice epi 👍👌😍 endha tamizh kadaisila yemathita enna pandradhu aaryan soldradhum correct dhan pa

  5. Yaru intha thulira 🤦 Ava enna pandranu thayriyama avalukku support aa paysatha adhi 😮‍💨 Ava visiyam thayriya varum poothu ipti thaan varatha paduvinga rendu payrum 😤😤😤😤😤
    Enna onnu Ava love panium appa va mathikkathavanganu innum othukama veemba irruka , athukkaga vayra paiyana neenga pathalum kattikarathu doubt than …..

    Adai sarva ipovathu puritha yathukku ivangala ellam namba kudathunu 🤦🤦🤦 ne nallathu thaan yosippa, nallathu panna thaan poova ana athu unakku reverse aa maritta 🤨🤨🤨🤨🤨🤨
    Konjam yosikkanum la 😤😤😤😤😤

  6. அந்த தமிழ் சரியான கேடி எப்படி எல்லாம் பிளான் பண்ணி சர்வேஷ சம்மதிக்க வச்சிருக்கா அரசியல்வாதி பொண்ணாச்சே, கொஞ்சமாவது அவரிடத்தில் உள்ள தில்லு முல்லு எல்லாம் இவளுக்கும் இருக்க வேண்டாமா.

  7. ரொம்ப ரொம்ப நல்லா போகுது மா சர்வேஷ் மாட்டுவானா ஆர்யன் காப்பாற்றுவானா எதிர்பார்க்க வைக்கிறிங்க இவர்களின் பிரச்சனையில் துளிர் தப்பி சிட்டா வாழ்த்துகள்

  8. Interesting👍👍👍👍👍👍👍👍👍👍👍ini Thulir visayam ennagumo ………Nibunan ipove feel panna aarambichutaru paiyyan namma valarppu sol pechu kekama mudivedutthutanu ini ponnu visayamum therinja romba feel panna poraru😔😔😔😔😔😔😔😔

  9. சர்வேஷ் உதவி செய்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறான் தமிழ் கிட்ட…. ஆனால் ஆர்யன் கூறுவதை போல நடந்தால் நிலைமை என்னவாகும்…. இனி என்ன ஆகுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!