அத்தியாயம் – 6
மறுநாள்..
“அந்த பொண்ணுதான் யாருனு தெரிஞ்சுபோச்சுல இனி என்ன செய்ய போறடா?” என்று கேட்டான் ஜோனஸ்..
“லவ் தான்” என்றான் அசால்ட்டாக..
“எதே.. லவ்வா.. ஏன்டா பிரச்சனைனு தெரிஞ்சே போய் தலைய கொடுக்க போறியா?.. இதுல எவ்ளோ ப்ராப்ளம் வரும்னு யோசிச்சியா? அதும் அந்த பொண்ணு உன்ன லவ் பன்ன ஒத்துக்குமா?” என்று கூற..
“முதல்ல ஒத்துக்க மாட்டா சண்ட போடுவா..ஆனா கண்டிப்பா லவ் பன்னுவா.. நான் பன்ன வைப்பேன்” என்றான் உறுதியாக..
அவனது உறுதியை கண்டவன்..
“எப்படிடா.. இவ்ளோ உறுதியா சொல்ற?” என்று ஜோனஸ் கேட்க
“அது வந்து ஜோனி.. அதுவா..” என்று அவன் வெட்கப்பட..
“இந்த கன்றாவிலாம் செஞ்சு தொலையாதடா எனக்கு உயிரே 1போய்டும்போல இருக்கு..” என்று ஜோனஸ் கோவமாக பேச..
“ஓஓ..மை ஜோனி டார்லிங்.. அதுலாம் லவ் மச்சி” என்று மீண்டும் இஷான் வெட்கப்பட்டு அவனை கட்டிபிடிக்க
“ச்சீ..ச்சீ..விடுடா..அவனா நீ..நினைச்சேன்டா லண்டன்ல பொறந்தவன் ஏன்டா பொண்ணுங்க பக்கம்கூட திரும்பாம நம்மகூட சுத்துறான்னு யோசிச்சேன் இப்போதான்டா அதுக்கு விடை கிடைச்சு இருக்கு..இனி உன்கூட தங்கினா என் கற்புக்கு சேதாரம் ஆகிபோகும்..நான் போறேன்..நீயே இருந்துக்கடா..எப்படி எப்படிலாம் நினைச்சேன் இவன இப்படி இப்படிலாம் நடந்துக்குறானே..எப்படி எப்படிலாம் யோசிக்க வெச்சுட்டான் என்னை” என்று அவன் கோவப்பட பக்கென சிரித்துவிட்டான் இஷான்..
“ஜோனிமா.. செட் ஆவல..” என்று அவன் சிரிக்க..
“ச்சே…நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போனதே..கூறும் கூறித்தொலையும்” என்று அவனிடமிருந்து தப்பிக்க முடியாத வருத்தத்தில் பேச..
இஷான் தீவிரமாக எதையோ யோசித்தான்..
“என்னடா யோசனை?” என்று கேட்க..
அவனிடம் நடந்ததை கூறியவன்
“நான் பார்த்தேன்டா அவ கண்ணு என்கிட்ட ஏதோ பேசுச்சு.. அந்த பார்வை என்னமோ பண்ணுதுடா” என்று கண்கள் மின்ன காதலை கூறும் இஷான் இவனுக்கு புதிதாய் தெரிந்தான்..
‘கடவுளே அவன் காதல்ல இவன் கஷ்டப்படாம கரை சேரணும்’ என்று அவசரமாக மனதில் ஒரு வேண்டுதலை வைத்தான்..
“இஷா..நீ அந்த பொண்ணை நிச்சயம் லவ் பண்றியா?” என்று அவன் வாயாலே உண்மை அறிய கேட்டான் ஜோனஸ்..
“எனக்கு தெரியல ஜோனி.. ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்கனும்.. அப்பாவும் அம்மாவும் இருக்க அந்த பாண்டிங் அதேமாதிரி இருக்கனும்னு தோணுதுடா.. நாளைக்கே அவகிட்ட சொல்லலாம்னு இருக்கேன்..மேரேஜ் பண்ணிக்கிறியானு” என்று அவன் கூற..அதில் அதிர்ந்தவன்..
“டேய்..ஏன்டா இவ்வளவு அவசரம்..இது என்ன லண்டனாடா? உடனே லவ்வ ஏத்துக்குறதுக்கு..அதும் ஸ்டெரெய்ட்டா கல்யாணம்னு சொல்ற?” என்று கேட்க..லேசாக சிரித்தவன்..
“ஜோனி லவ் பண்ணாதான் இண்டியால எதிர்ப்பாங்கனு கேள்வி பட்டு இருக்கேன்.. அதான் மேரேஜ் பண்ணிக்க கேட்கிறேன்..ஐ ஃஹோப் யூ அண்டர்ஸ்டான்ட் மை வோர்ட்ஸ்” என்று கூற..
“புரியுதுடா..ஆனா அந்த பொண்ணு அவங்க பேரண்ட்ஸ்லாம் சம்மதிக்க வைக்க எவ்ளோ நாள் ஆகுமோ தெரியலையே?”
“ஐ வில் வெயிட்டா..ஆனா அவ என்ன ரிஜக்ட் பண்ணா நான் அதுக்கு அப்புறம் வெயிட் பண்ண மாட்டேன் டா..” என்று உறுதியாக கூறினான் இஷான்..
“யோசிச்சு செய் இஷா.. எதுவா இருந்தாலும் நான் உன்கூட இருப்பேன்டா” என்று கூற அவனை கட்டிக்கொண்டவன்..
“நீ ஃஹெல்ப் பண்ணுவனு நம்பிதான்டா இண்டியாவே வந்தேன்.. எது எப்படியோ நாளைக்கு அவகிட்ட கண்டிப்பா லவ்வ சொல்லணும்டா.. அவ ஓகே சொன்னா வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணுவேன்.. ஓகே இல்லனு சொன்னா கல்யாணம் செஞ்சுட்டு வெயிட் பண்ணுவேன்.. ஆனா வாழ்வோ சாவோ அவளோடதான்னு முடிவு பண்ணிட்டேன்டா.. அப்பாகூட அட்வைஸ் பண்ணுவாரு..இண்டியன் கல்ச்சர் ஒருத்தனுக்கு ஒருத்தினு.. அவர் சொல்லும்போது ஐ கிட்டிங் ஹிம்..நவ் ஐ அண்டர்ஸ்டான்ட் தட் வேர்ட் வேல்யூடா” என்றான் இஷான் உணர்வுபூர்வமாக..
“நீ இண்டியன் மருமகனா வாக்குப்பட எல்லா தகுதியும் அடைஞ்சுட்டடா..” என்று ஜோனஸ் கிண்டல் செய்ய அவனது முகம் வெட்கத்தில் சிவந்ததை எண்ணி மகிழ்ந்து ரசித்தான்..
ஆண்கள் வெட்கப்படும் தருணம் அரிது.. அது தனி அழகு.. அவனை வெட்கப்பட வைக்கும் பெண்ணவள் பேரழகு..
என்னை உணரவைத்தாய்..
உன்னை அறியவைத்தாய்..
விழி வழி என் எண்ணங்களை..
பறித்தெடுத்தாய்.. உன்
மனதுக்காய்..
பறிகொடுத்த பாதையிலேயே
தங்கிவிட்டேன்..
வழி நடத்த உன் விழி வருமென..
-டைரியில்.
மறுநாள் அன்று காலையே அவனை சந்திக்க அப்பாயிண்மென்ட் வாங்கி இருந்தாள் கயல்விழி.. அவனும் சரியென ஓத்துக்கொண்டான்..
அவனிடம் வந்தார் அந்நேரம் அந்த ஆபீசின் வாட்ச்மேன்..
அவர் அனுமதி பெற்று உள்ளே வர எழுந்து சென்று அவனை வரவேற்றவன் அவரை ஃசேரில் உட்கார வைத்தவன்..
“சொல்லுங்க” என்று கேட்க.. அவனது மரியாதையான பண்பில் மெய்மறந்து அவர் அவனையே பார்க்க..
“நான் பொண்ணு இல்லீங்க வாட்ச்மேன் சார்” என்று அவரை உலுக்க நினைவு வந்தவர்.. அவன் கூற்றின் அர்த்தம் விளங்கியவர்
“அய்யோ சார் அப்படி இல்லை சார்..அந்த பொ..பொண்ணு நேத்து காசு கொடுத்துட்டு போச்சு சார் அதான் அதை கொடுக்க வந்தேன்..நேத்து நீங்க வேற ஏதோ டென்ஷன் ல இருந்தீங்க அதான் போய்ட்டேன்” என்றபடி நீட்ட அதை வாங்கியவன்..
“இதை ரெடி பண்ண ரொம்ப கஷ்டப்பட்டாங்களா அவங்க.. தப்பு என்மேலதான் சார் நான் கொஞ்சம் கவனமா பார்க் பன்னி இருக்கனும் அவங்க காடிய டேமேஜ் பண்ணிட்டேன்” என்று கூற
“கூட இருந்த பையன போய் ஏ.டி.எம்ல எடுத்து வர சொன்னாங்க சார் கூடவே நான் காசு சொல்லவும் அவ்ளோ ஆகிடுச்சானு பேசுச்சு சார் அந்த பொண்ணு”என்று கூற
“ஓஓ..ஒகே..என்வேய்ஸ் தேங்க்யூ சார்..நான் எக்ஸ்ட்ரா பே பண்ணேன்னு அவங்களுக்கு தெரிய வேணாம்..யூ கேன் கோ” என்று விட்டு அவரை போக சொல்ல அவரும் கிளம்பி விட்டார்.. போகும் முன் அவனிடம் திரும்பியவர்..
“சார்..ஒன்னு சொல்லவா?” என்று கேட்க..அவரை கேள்வியாய் பார்த்தவன்
“சொல்லுங்க சார்” என்றான்..
“நீங்க பார்க்க மட்டும் இல்ல மனசுலேயும் ரொம்ப நல்லவருங்க..உங்களை கட்டிக்க போற மகராசி ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கனும்” என்றுவிட்டு அவர் கிளம்ப அவர் சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிய தானாக அந்த மகராசியின் முகம் கண்முன் வந்து செல்ல புன்னகைத்துக் கொண்டவன்..
“கார்ஜியஸ் ஐஸ்.. இட்ஸ் கில்லிங் மீ பேபி” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு திரும்ப.. அந்த கார்ஜியஸ் ஐஸ்க்கு சொந்தக்காரி அவனை சந்திக்க வந்து அவனது கதவை தட்டிக்கொண்டு இருந்தாள்.. டக்கென்று சுயநினைவுக்கு வந்தவன் சிசிடிவியில் அவளை பார்க்க..’வந்துட்டா கண்ணுலேயே பேசி என்னை கொல்ல.. இன்னைக்கு உன்கிட்ட லவ்வ சொல்லிடுறேன்டி..மிர்ச்சி’.. என்று எண்ணியவன்.. அவளை உள்ளே வர அனுமதித்தான்..
“எஸ் கம் இன்” என்று அவன் கூற
“சார்..கு..குட் மார்னிங் சார்..அ..அது..அது உங்களை வந்து பார்க்க சொல்லி” என்று அவள் இழுக்க,
“எஸ்.. ஐ செட்(i said)..ப்ளீஸ் பீ சீட்டட்..” என்று அவளது இருக்கையை காட்ட..அதில் அமர்ந்தவள் அவனிடம் ரிப்போர்ட்டை நீட்டினாள்..
அதை வாங்கி படித்தவனிடம்..
“சார்..அது வந்து..” என்று அவள் ஆரம்பிக்க..
“ஐ நோ த ரீசன் மிஸ்.இசை யுவர் ஃபாதர் வாஸ் இன் ஹாஸ்பிடல் தட் டைம்..ஐ காட் இன்ஃபர்மேஷன்..பட் யூ நோ வெரி வெல் about this program..We r workers so we can’t express our own feelings in working place that’s y ur getting high salary u know mam..(எனக்கு காரணம் தெரியும் மிஸ்.இசை..உங்க அப்பா அந்த டைம்ல ஹாஸ்பிடல்ல இருந்தார் எனக்கு தகவல் வந்தாச்சு.. ஆனா..உங்களுக்கு நல்லாவே தெரியும் இந்த ப்ரோகிராம் பத்தி.. நாம இங்க வேலை செய்யுறவங்க நம்மளோட சொந்த விருப்பு வெறுப்பு எதையும் இங்கே காட்டிக்க கூடாதுனு உங்களுக்கு தெரியும் தானே.. அதுக்காக தானே உங்களுக்கு சம்பளம் அதிகமா கொடுக்குறது)” என்று அவன் கேட்க.. அவளோ தன் தவறை எண்ணி தலையை குனிந்து கொண்டாள்..
“ஐ நோ சார் பட் தட் டைம்.. ஐ கேனாட் ஏபில் ட்டூ மேனேஜ் தட் சுட்சுவேஷன் சார்..இட்ஸ் மை மிஸ்டேக் சார் தட்ஸ் வை ஐ கிவ் ரிசைனிங் லெட்டர் சார்..பிகாஸ் ஐ கேனாட் ஏபில் ட்டூ ஹாண்டில் திஸ் லாஸ் சார் ஐ டோன்ட் கேம் ப்ரம் ரிச் பேக்கிரவுண்ட்..சோ ப்ளீஸ் அக்செப்ட் மை ரிலீவிங் லெட்டர்(எனக்கு தெரியும் சார் ஆனால் அந்த நேரம் என்னால அதை சமாளிக்க முடியல..அது என்னோட தப்புதான் சார் அதனால்தான் நான் வேலையை விடுறேன் சார்..ஏன்னா என்னால இந்த நஷ்டத்தை சரி செய்ய முடியாது நான் அவ்ளோ பெரிய பிண்ணனியில இருந்து வரலை சார்..அதனால என்னோட ரிசைனிங் லெட்டரை ஏத்துக்கனும்) என்று கூறினாள் அதுவரை அவனை நிமிர்ந்து கூட அவள் பார்க்கவில்லை அவனும் அதை கவனித்துக்கொண்டான்..
“சோ..யுவர் நாட் கேம் ப்ரம் ரிச் பேக்கிரவுண்ட்.. அம் ஐ கரெக்ட்..” என்று அவளை பார்த்துக்கொண்டே கேட்க
“எ..எஸ் சார்” என்று அவள் திக்கி கூற..
“வெல்..ஓகே..ஐ வில் ஹாண்டில் திஸ் ப்ராப்ளம் மிஸ்..நவ் யூ மே கோ யுவர் டியூட்டி” என்று கூற அவனை அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்..
“சார்” என்று அவள் பேசவர..
“ஐ செட் யூ கோ யுவர் வொர்க்” என்று கூற அவள் மெதுவாக எழுந்து சென்று கதவில் கை வைக்கும் நேரம்..
“ஓன் மினிட் விழி” என்று கூற அவள் மீண்டும் அதிர்ந்து திரும்பினாள்..
“உங்க நேம் அதானே” என்று கேட்க
‘ஆமாம்’ என்பதை போல் தலையாட்டினாள்..
“ம்ம்.. நேத்து என்கூட சண்டை போட்டு என் கார் மிரர்ர உடைச்சது நீங்கதானே?” என்று கேட்க..
“அது சார்.. சாரி தெரியாம..” என்று கூற
“கார் பார்க்கிங்ல பைக் பார்க் பன்றது கூட தெரியாமலா?” என்று கேட்க திருதிருவென முழித்தாள் அவள்..
‘ஐயோ இவன்கிட்ட வசமா மாட்டிக்கிட்டேனே’ என்று யோசிக்க..
அவளை அப்படியே ரசித்தவன்..
“அதனால நேத்துல இருந்து ஐயம் ஃபாலிங் லவ் வித் யூ விழி” என்றான் காதலாய்.. அதை கேட்டு அதிர்ச்சி ஒருபுறமும் கோவமும் வர..
“வாட்..நீங்க என்ன லூசா?” என்று கோவமாய் கேட்டாள்..
அதில் லேசாக சிரித்தவன்..
“நோ விழி..சீரியஸ்லி ஐ லவ் யூ..வில் யூ மேரி மீ” என்று புன்னகையோடு
“நீங்க எனக்கு மேனேஜரா இருக்கலாம் அதுக்காகலாம் லவ்னு வந்தா உடனே ஈஈனு இளிச்சுட்டு ஓகே சொல்லுவேன்னு நினைச்சீங்களா? அதுக்கு வேற ஆளை பாருங்க..அவ்ளோதான் உங்களுக்கு மரியாதை” என்றுவிட்டு போய்விட்டாள்..
“என்னா வாய்? இஷா..உன் பாடு ரொம்ப கஷ்டம்டா..அவ்ளோதான் மரியாதைனா இனிமேல் வாடா போடானு சொல்லுவாளோ?” என்று அவனே அவனுக்கு பேசிக்கொண்டான்..
வெளியே சென்றவளுக்கு கோவம் தலைக்கு ஏறியது..
“இவன் என்ன பெரிய ஆளா? லவ்வாம் லவ்வு மண்ணாங்கட்டி.. வெளிநாட்டுகாரன்னு ப்ரூப் பன்றான் பாரு..புன்னாக்கு..கிளம்பி வரான் பாரு எனக்குனு..இன்னொரு முறை இப்படி பேசட்டும் செருப்படி கன்ஃபார்ம்” என்று போனவள் நேரே கெளதமிடம் சென்று தனது ப்ரோகிராம்மை முடித்துக்கொண்டு கிளம்பினாள்.. அதுவரை எடிட்டரிடம் அமர்ந்து அவளது ப்ரோகிராமை கவனித்தவன்..
அவள் அவனை முறைக்கவும் சிரித்து ஒற்றைக்கண் சிமிட்டிவிட்டு சென்றான் அதில் கோவத்தில் அவள் முகம் சிவக்க.. கெளதமிற்கோ ஏதோ சந்தேகமாக இருக்க அவளிடம் அப்புறம் பேசிக்கலாம் என்றுவிட்டு விட்டான்..ப்ரோகிராம் முடித்து இருவரும் கிளம்ப..
“டேய் கெள.. நாளைக்கு எங்கனா வெளியே போலாமா?” என்று கேட்க..
‘ரைட்டு மேடம்ம ஏதோ டென்ஷன் பண்ணி விட்டுட்டான் வெள்ளைக்காரன் அதான் வெளியே போக கேட்கிறா’ என்று எண்ணியவன் அவளாக சொல்லட்டும் என்று விட்டான்..
“சரிடி போலாம்” என்றுவிட்டு அமைதியானான்..
ஆனால் மறுநாள் நடக்கப்போவது தெரிந்தால்..
சூப்பர்…. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
👍👍👍
மிக்க நன்றி சகோ😍
Interesting
மிக்க நன்றி சகோ❤️🥰
Nice epi👍