அத்தியாயம்-43
மதிய விருந்து நேரம் அரவிந்த் சத்தமாய் சிரித்து பேசி நண்பன் நிபுணன் வீட்டில் விருந்து சாப்பிட்டார்.
முத்துவேலனும் அரவிந்தை காணும் ஆவலோடு வந்திருந்தார்.
சாருலதாவோ முதல் முறை அரவிந்த் வீட்டில் தான் திருமணமான புதிதில் விருந்து சாப்பிட்ட நினைவு வந்து உபசரித்தார்.
"என்னயிருந்தாலும் ஊர் சாப்பாடு ஊர் சாப்பாடுடா. ராணிம்மாவுக்கு எங்க அம்மா வயசு இருகாகும்மா நிபு. அதனால் தான் அம்மா கையால சாப்பிடற ஆனந்தமாகுது." என்று கண்ணீரை துடைத்தபடி உணவை விளாசி தள்ளினான்.
ராணிக்கா அரவிந்துக்கு மட்டன் சுக்கா எடுத்து வையுங்க" என்று நிபுணன் கூறவும் ராணி அக்கா எடுத்து வைத்தார்.
"சாயந்திரம் பிளைட்டுக்கு கிளம்பறேன் டா. தமிழையும் மின்மினியையும் கூட்டிட்டு போறேன்.
சப்போஸ் மீடியாவுல தமிழை பத்தி கேட்டா சர்வேஷ் மாப்பிள்ளைனு பகிரங்கப்படுத்தலாம் இல்லையா?" என்று நிபுணனிடம் கேட்க, "கல்யாணத்தையே அவர் வாயால சொன்னார். இந்த விவகாரம் அவரிடமே கேளு." என்று நிபுணன் உரைக்க சர்வேஷ் தந்தை மனதை வதைப்பட்டது புரிந்தது.
அரவிந்த் சர்வேஷை காண, “மீடியால எதையும் இப்ப வெளியிடாதிங்க அங்கிள். எனக்கு பிடிக்காது. வீ ஆர் ஜஸ்ட் பிரெண்ட்ஸ் அப்படின்னு அறிவிச்சிடுங்க. எனக்கு என் பிரைவேஸி தோல்லையாக கூடாது.” என்று ஆணித்தரமாக மொழிந்தான்.
அரவிந்தோ தலையாட்டி நண்பனை கண்டு “அரசியல்ல யாரை நிறுத்த போற?” என்றான்.
"சிற்பிகா நிற்பா அங்கிள்" என்று நிபுணனுக்கு பதிலாக ஆர்யன் பதில் தத்தான்.
”ஐயா நீங்க நிற்க முடியாத பட்சத்துல நம்ம சார்புல நம்ம வீட்ல ஒருத்தங்க நின்றா தான் இரண்டு தொழிற்சாலையை இங்க வரவிடாம பண்ண முடியும். அதோட இன்னிக்கு நாம ஒருத்தரை நிற்க வைப்போம். நாளைக்கு பணத்துக்கு மயங்கி தொகுதில நிற்கற நபரே மனசு மாறி நமக்கு பாதகமா போயிட்டா.
அதனால் சின்ன வயசுல கஷ்டம் உணர்ந்து, ஏழை மக்களோட மனசை தெரிந்த சிற்பிகா நிற்கட்டும்னு இவர் இந்த டாபிக் பேசறப்பவே, யாரை நிற்க வைக்கலாம்னு சிந்திச்சப்ப சிற்பி தான் சரியா வருவான்னு மனசுக்கு பட்டுச்சு. இதை சிற்பிகாவிடம் கூட கலந்து ஆலோசிக்கலை.
நீங்க சரியா வருமான்னு முடிவெடுங்க ஐயா.” என்று தந்தை பக்கம் பார்த்து அரவிந்தை வெட்டுதல் பார்வை வீசினான் ஆர்யன்.
நிபுணன் நிற்க முடியாது. ஆதிராவுக்கு சீர்த்திருத்த பள்ளியில் பணியை கவனிக்கவே குறிக்கோள்.
ஆர்யன் ஒரு அரசாங்க மருத்துவன், துளிர் சின்ன பெண், அதனால் மாப்பிள்ளையாக வரப்போகும்(?) சர்வேஷை நிறுத்துவார்கள். காலப்போக்கில் மாப்பிள்ளைக்கு அரசியல் கற்றுக்கொடுத்து கைக்குள் வைக்கும் திட்டத்தில் அரவிந்த் இருக்க, ஆர்யன் சிற்பிகாவை முன்னிருத்தி பேசவும் மட்டன் சுக்கா ருசித்தவனுக்கு பாவக்காய் பொரியலை சுவைத்தது போல கசந்தது.
அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் நடிக்க பாடுபட்டார். ஆர்யனோ ‘நீ தலைகீழா தண்ணி குடிச்சாலும் உன்மேல எனக்கு நல்ல அபிப்ராயம் வராது. நீ பக்கா சுயநலவாதி. அரசியல்வாதி’ என்று முகப்பாவணையில் காட்டினான்.
நிபுணனுக்கு ஆர்யனே சிற்பிகாவை பற்றி அபிப்ராயம் கொடுக்க நல்ல திட்டமாக தோன்றியது.
"சாப்பிடும் போது அரசியல் வேண்டாமே" என்று ஆதிரா தோளை தீண்ட, நிபுணனோ மனைவியை கண்டு புன்னகை செலுத்தினார்.
விருந்து உபச்சாரம் முடித்து அரவிந்து எழுந்தான் தன் தனது மகள் தமிழிடம் அவளது உடைமைகளை எடுத்து வைக்க கட்டளையிட்டான். தன் அண்ணன் இந்திரஜித்தின் மகள் மின்மினியையும் உடைமைகளை எடுத்து வைக்கச் சொன்னார்.
இரு பெண்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறைகளுக்குச் சென்று தங்கள் உடைமைகளை எடுத்து வைத்தனர்.
தமிழ் மட்டும் தந்தை வீட்டிற்கு சென்றப்பின் எப்படி நடப்பாரோ என யோசித்தாள்.
இங்கு அனுப்பும் போதே, ‘இங்க பாரு ப்ருத்வி மேரேஜ் முடிஞ்சுது. என் நண்பன் நிபுணனோட இரண்டாவது பையனை உனக்கு கல்யாணம் செய்ய விரும்பறேன்.
ப்ருத்வியை தாரா(முதல் மனைவி) அரசியல்ல நுழைய கூடாதுன்னு சொல்லி சொல்லி வளர்த்துட்டா,
சர்வேஷை அங்க தொகுதியில நிற்க வச்சி என் மருமகனை என் அரசியல் வாரிசா மாத்திப்பேன். உன் தரப்புல நீ அவனை கல்யாணம் பண்ணிக்கொள்ளணும் என்ற கட்டளை மட்டும் விடுத்தார் முதலமைச்சர் அரவிந்த்.
தந்தையிடம் தலையாட்டி பழகியவளுக்கு சர்வேஷிடம் உதவி கேட்க வந்துவிட்டாள்.
சர்வேஷ் தந்தை நிபுணன் நீதி நியாயம் என்ற கொள்கையில் வாழ்பவர். உதவும் மனம் கொண்டவர். சர்வேஷிற்கும் அந்த குணமிருக்குமென நம்பினாள். இதோ அதன் பலன் சர்வேஷ் உதவுகின்றான்.
சர்வேஷ் அக்கம் பக்கம் பார்த்தபடி தமிழின் அறைக்கு வந்தான்.
மின்மினியிடம் நான் உங்கள் அக்காவிடம் பேச போறேன் நீ கொஞ்ச நேரம் வெளியே போ” என்று
உரைத்தான்.
மின்மினியும் தமிழையும் சர்வேஷையும் பார்த்து மற்றொரு அறைக்கு சென்றாள்.
இந்தக்கா கூப்பிட்டான்னு கூட வந்திருக்கவே கூடாது. அவ பாட்டுக்கு எனக்கு பீரியட்ஸ்னு இவர் கூட பைக்ல என்னை கட் பண்ணிட்டு போனா. சரி அதாவது சித்தப்பா இவங்களுக்குள் மேரேஜ் விஷயம் பேச வரப்போறார் இவர்களா பழகட்டும் நாம எதுக்கு நந்தின்னு இருந்தோம். இவர் என்னடான்னு என்னை விரட்டிட்டு அக்காவோட பேசறார். ஒரு மாதிரி இன்சல்டிங்கா இருக்கு.’ என்று கடுகடுப்பாய் மின்மினி இருந்தாள். அப்படியென்ன பேசுகின்றாரென் ஒட்டு கேட்டு மறைந்தாள்.
தமிழிடம் சர்வேஷோ “இங்க பாரு எங்க அண்ணன் ஆர்யன்கிட்ட நீ உதவி கேட்டதை சொல்லிட்டேன்.” என்றதும் ‘அவரிடம் ஏன் சொன்ன. உங்க அண்ணா ஏற்கனவே என்னை மதிக்க மாட்டார். இதுல…” என்று ஆரம்பித்தவளிடம், “ஏய்… எங்கண்ணா உன் கையை பிடிச்சப்பவே நீ பிரகனென்ட்னு கண்டுபிடிச்சிட்டார்.
அவரிடம் எப்படி பொய் சொல்வேன். என்னை பற்றி தப்பா நினைக்கவா?
நாளைக்கு நீ ஏதாவது கோல்மால் பண்ணி, உங்க அப்பா மாதிரி செல்பிஷ்ஷா நடந்தா, எனக்கு யாரு சப்போர்ட் பண்ணுவா? அதனால அவரிடம் சொல்லிட்டேன். அதனால அமைதியா இருக்கார் ஆனாலும் உன் மேல நம்பிக்கை வரலை.
நீ உங்க அப்பா மாதிரி சுயநலமா மாறிட்டா என்ன செய்யறதுன்னு ஒரு பயம் எனக்குமேயிருக்கு.
நீ காதலிக்கிறவன் எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியாது. உன்னை பிரேக்கப் பண்ணினா கூட, அது உன் ப்ராப்ளம் ஆனால் என்ன மாட்டி விடாதே.
எப்படியாவது இந்த ஆறு மாசத்துல படிக்க கேட்டு வெளிநாட்டிற்கு செல்ல திட்டம் வகுத்து அங்க ஓடிடு.
சட்டப்படி கல்யாணம் பண்ணிடு. தயவு செய்து இங்க ஒரு கேனையன் இருக்கான். உன் குழந்தைக்கு என்னை அப்பாவா மாத்த, திட்டம் போட்ட, போடி ம…ருனு இருந்துப்பேன்.
இந்த ஊரு எதிர்த்தாலும் எனக்கு எங்க அண்ணா இருக்கார். அதனால தில்லாலங்கடி பண்ணிடாத” என்று மிரட்டினான்.
மின்மினியோ என்னது தமிழ் அக்கா பிரகனென்டா? என்று திடுக்கிட்டாள்.
“லுக்… சிராக் அப்படிப்பட்டவர் இல்லை.” என்று தமிழ் பேசவும், “சிராக்?” என்று பெயரை உச்சரித்தான் சர்வேஷ்.
”யா… சிராக். என் காலேஜ்மேட். லிவிங் டூ கெதரா இருந்தோம். அவனுக்கு நான் என்றால் உயிர்.
என்னை ஏமாத்த மாட்டான்.
என் குழந்தைக்கு உன் இன்சியல் தேவைப்படாது. எங்க அப்பா மாதிரி நானும் செல்பிஷ் தான். ஆனா உதவி கேட்ட உன்னிடம் வம்பு வச்சிக்க மாட்டேன்.
முக்கிய காரணம் உங்கண்ணா. நான் ஏதாவது செய்தா என்னை கொல்லவும் தயங்கமாட்டார். எனக்கு உன்னை விட உங்கண்ணாவை பத்தி நல்லாவே தெரியும்” என்று பேசவும் சர்வேஷ் புன்னகைத்தான். சர்வேஷிற்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே ஆர்யன் அண்ணன் எந்த பெண்ணையும் யாரையையும் அருகே விடமாட்டார். கிட்டதட்ட முனிவராக தந்தையை போலவே நடமாடுவார்.
அண்ணனின் நினைவிலிருந்து தமிழிடம் “மச் பெட்டர். உங்கப்பாவிடம் நீ படிக்க கேட்டு அங்க போயிடுவியா?” என்று கேட்டான் சர்வேஷ்.
“கண்டிப்பா, அப்பா அதுக்கு எல்லாம் தடை சொல்ல மாட்டார்.
அதோட எனக்கும் வேற வழியில்லை.” என்று பேசவும், “ஓகே குட்லக் நான் வர்றேன்.” என்று செல்லும் நேரம் மின்மினி கதவிலிருந்து நகரவும் பக்கத்து அறையில் இருந்தவளிடம், “ஒட்டு கேட்கறது தப்பு” என்றான்.
தமிழ் அவள் காதலன் சிராக்கிடம் பேச போனை எடுத்து பால்கனி நுழைந்திருப்தாள்.
அக்கா இல்லையென்றதும், “நான் ஒன்னும் ஒட்டு கேட்கலை. உங்க குரல் தான் கணீர்கணீர்னு மிடுக்கா கேட்டுச்சு.” என்றாள்.
”ஓஹோ உங்க அக்கா எங்க போறா எங்க வர்றான்னு நீ தானே உன் சித்தப்பாவுக்கு அப்டேட் கொடுக்கற?” என்றான்.
“சீ… எனக்கு அப்படியொரு மட்டமான புத்தி இல்லை. சித்தப்பா போன் பண்ணி அக்கா சாப்பிட்டாளா? என்ன பண்ணறா என் மேல கோபமாயிருக்கா அதனால் உன்னிடம் விசாரிக்கறேன்னு கேட்பார். அதுக்கு பதில் தருவேன். மத்தபடி அப்டேட் இல்லை.” என்று சின்ன கண்களை உருட்டி அழாத குறையாக கூறினாள்.
“நம்பிட்டேன் நம்பிட்டேன். உங்கக்காவை பத்தி இன்டேரக்டா அவர் விசாரிக்கறார். கொஞ்சம் இன்னோசென்டா இல்லாம யோசி” என்று கடந்தான்.
உண்மை தானோ? சித்தப்பா அரவிந்த் தினமும் போன் போடுகின்றார் என்று பார்த்து சர்வேஷை ஏறிட்டாள்.
அவனோ அவள் பக்கம் பார்வை வீசி, ‘அக்கா தங்கை மட்டுமில்லை குடும்பமே காரியவாதிங்க’ என்று முனங்கினான்.
மாலை அரவிந்த் அவர் தம் மகள்களோடு கிளம்பினார்.
நிபுணனோ எப்பொழுதும் மனதார வழியனுப்புபவர் சர்வேஷால் சங்கடமாய் வழியனுப்பினார்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Sema
Super sis nice epi 👌👍😍 endha tamizh appdiye odi pona paravaella kadavuley 🙄 aana minmini ku Jodi ya ayiduvano🤔 parpom
செம சர்வேஷ்
Sarvesh, annankitta unmaiyasollitan athu varaikum santhosam…. Pinnadi yethum problem vanthalum annan help pannuvan…
Interesting
அண்ணனோட பேசியதும்
தைரியம் வந்திடுச்சு போல
Spr sis waiting for nxt ud😍😍😍
Nice update sis
Annan iruka bayamen…
Veena akka indha thamizh ponnu love panra paiyan ivala yemathiduvano nu bayama iruku ka….aprm sarvesh nelamai….
Super super ka…. waiting for next ud
Interesting. Nibu paiyan ah kokka
❤️❤️❤️❤️👌
Super sarvesh. Excellent move. Fantastic narration sis. Very emotional intresting sis. Pls give daily updates sis. I miss very much ariyan. And nibu
Nice episode
Superrrrr ❤️
Kal kilo kadhal epo poduvinga
Super super super super
Super sis sarvesh character super sis waiting for next episode ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அந்த சிராக் உண்மையிலேயே, தமிழை கை பிடிப்பானா..? இல்லை கை விட்டுடுவானா…???
Soopeeerrrrr.sarvesh Aaryan ku thambi nu nirubichitan.semmaaaaaaaa.sirpiga va nikka vaikka semmaaaaa idea.Nibunan Aathira enna mudivu edukka poranga
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Aryan…mmmm….super………,😍😍😍😍😍
Super epi tamil sarvesh ah love panala so avan thapichan bt ava love panura payan nalavana? Enaku 1st la irunthu sarvesh ku jodi ya intha minmini dan varuva nu thonuthu
Tamizh apadi yae foreign ku poidu sarvesh life la disturb panna aariyan definite ah endha extreme kum povan
Interesting and nice
Super super sis
ARYAN move arumai.
அரவிந்த்க்கு nose cut kuduthuttae இருக்கான்.
Sarvesh enna agaaporanao,
தமிழ் சரியான கேடி
என்னவோ மின்மினி sarvesh jodi pola தோணுது.
Very interesting.
Next UD plz
Super sagi Semma interesting waiting for next episode sis
Sema sema interesting epi
Super super super super semma semma semma semma semma semma semma 👌👌👌👌👌👌👌enakku ennamo minmini dhan sarveshku jodiyonu thonudhu☺️☺️☺️☺️☺️☺️
Super epi . aaryan crt ah nibu ku idea koduthutan ipp sirpi election la nika poea Aravind oda next step enna . Intha tamilnnadula siraque lover irukan solra avan ethupana
wow sema twist by Aryan. Arumai arumai
sema!!!
யம்மா தமிழ்…. சொன்ன வார்த்தைகளை அப்படியே காப்பாற்றினால் நல்லது…. இல்லை என்றால் ஆர்யன் போதும் உன்னை ஒரு வழி ஆக்க…. இனி என்ன ஆகுமோ
♥️♥️♥️♥️
Ariyan 🔥🔥🔥🔥🔥
Aravind un thittam yathum Inga palikkathu 🤩😂