புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -45

அத்தியாயம்-45

  சரவணவேலன் "என் மாமன் பொண்ணு எல்லாம் முடிவெடுத்துட்டு பேசறாப்பள தெரியுது. எதுக்கோ இதயத்தை பாத்து பத்திரம் பண்ணி தேற்றிக்கோ. எனக்கென்னவோ சரியாப்படலை" என்று சொல்லிவிட, விதார்த் நகம் கடித்தபடி 'என்னயிவன் இப்படி சொல்லி சொல்லியே ஏய்க்கறான். அவளும் தள்ளி விட்டப்ப வலுவா தான் தள்ளினா. எதுக்கும் அவளிடம் தனியா பேசணும்.' என்றவனின் மூளையோ நிம்மதியடையாமல் இப்பவே பேசு என்று உசுப்பேற்றியது.

கைகடிகாரத்தில் நேரம் பார்த்து முடிக்க “என்னடா யோசனை படிச்சிட்டு தூங்கற வழியை பாரு” என்று விதார்த் தாய் ஆர்கலி சூடான பாலை தரவும், “அப்பா தூங்கிட்டாராம்மா” என்று கேட்டான்.‌

“உங்கப்பா இத்தனை சீக்கிரம் எப்ப தூங்கியிருக்கார். அட்லீஸ்ட் ஒன்பதரைக்காவது தூங்குவார். எனக்கு தான் நர்சரி கார்டனில் நேரம் போனதுல தூக்கம் தூக்கமா வருது. நீ பாலை குடிச்சிட்டா நிம்மதியா தூங்கப்போவேன்” என்றுரைக்க, ஒரே மடக்கில் குடித்து நீட்டினான்.

விதார்த்தின் அன்னை வெளியேறியதும் கதவிடுக்கில் அன்னை போவதை கண்டு மெல்ல மெல்ல தலை நீட்டினான்.

ஆர்கலியோ கணவர் வித்யுத் முன் வந்து “இன்னுமா பாலை குடிக்கலை. ஒரு நிமிஷம் ஆகுமா? குடிச்சிட்டா என் கடமை முடியும். நான் பாட்டுக்கு தூங்கப்போவேன்‌” என்றதும் வித்யுத் மனைவியை கண்டு “ஒன்பதரை தானே ஆகுது?” என்றார்.‌

“எனக்கு தூக்கம் வருதுங்க.” என்றார்.

“எங்கப்பா அம்மா இல்லைனா ஒன்பது மணிக்கே தூங்கணும். அம்மா இருந்தா பத்து பத்தரை வரை பேசணும்?

வெளியே தான் நீதிபதி அதுயிதுனு மரியாதை. இங்க நீ என்னை சுத்தல்ல விடற பட்டர்பிளை” என்று புலம்ப, “உங்களுக்கென்ன அந்த புத்தகத்தை கட்டிட்டு தூங்குவிங்க.” என்று இடக்காய் பேசி அகலவும் வித்யுத் லேசாய் சிரித்து தன் பணியில் மூழ்கினார்.

நாளைக்கு வரும் வழக்கில் சாதகம் பாதகம் கண்ணுற்றார். எப்படியும் நியாயத்துக்கு வாதாடும் பக்கம் அவரது கருணை பார்வை நிச்சயம் உண்டு.

விதார்த் அங்கும் இங்கும் நடந்து தந்தை உறங்க சென்றதும், தன் பைக்கை தள்ளியபடி வெளிவந்து அதனை இயக்கி பறந்தான்.

நட்ட நடு இரவில் வெளியேறுவது எல்லாம் புதிதல்ல. தன் சித்தப்பா(ஆத்விக்) மகன் ஊர்சுற்றுவது இப்படி தான்.

பைக்கில் புயலென பறந்தவன் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி செல்ல ஒன்றரை மணி நேரமாகும். இரண்டு இடத்திற்கும் மத்தியில் கல்லூரி என்றதால் முக்கால் மணி நேரப் பயணம் தான். ஆனால் இன்று திருநெல்வேலியில் இருக்கும் திருநிறையகம் வரவே ஒன்றேகால் மணி நேரம் ஆனது.

சரவணவேலன் கூறியதால் மெயின் கேட் வழியாக வந்தால் சிசிடிவியில் மாட்டிவிட வாய்ப்புண்டு என்று பின்னால் இருக்கும் கேட் பக்கம் வந்து நிறுத்தினான்.

இந்த பக்கம் ஆர்யன் வளர்க்கும் ராயல் கட்டவிழுந்து ராஜநடை போட்டிருக்கும்.

விதார்த் இப்பக்கம் வர, ராயல் மோப்பம் பிடித்து வந்தது, குலைக்கும் முன் காதல் பார்வையை வீசியது.

விதார்த் கையில் “ரோஸ்லின் இந்த நேரம் எதுக்கு அவுட்டிங் கூட்டிட்டு வந்தேன்னு பார்த்தியா? எல்லாம் ராயலை பார்க்க தான்” என்று தன் வீட்டில் அன்னை வளர்க்கும் ரோஸ்லினை நாயை பைக்கின் முன் வைத்து அழைத்துவந்திருந்தான்.

ராயலும் தன் இணையை கண்டு துள்ளியது.

நெஞ்சில் கை வைத்து ரோஸ்லினை விட்டுவிட்டு துளிர் அறைக்கு மெதுவாய் சென்றான்.

நிபுணன் அறை, சர்வேஷ், ராணி ஆச்சி அறையெல்லாம் அறிந்து வைத்திருக்க, துளிரின் அறைக்குள் நுழைந்தவன் கதவை லேசாக மூடிவிட்டு, அவளருகே வந்தான்.

“ராஜா வீட்டு கண்ணுக்குட்டி நல்லா தூங்குது. இங்கவொருத்தன் வந்ததே தெரியலை.” என்றவன் மெத்தையில் ஏறி அவள் உறங்க, தன் இரு கால்களை முட்டிப்போட்டு அவளது முகத்திற்கு நேராக வந்தான்.

சீரான மூச்சு விடுத்தவள் மறுப்புறம் திரும்பும் நேரம் தன் முன் ஏதோ உருவம் தெரிய அலற தயாரானவளை விதார்த் தன் கரத்தால் வாய் மூடினான்.

“கொழுந்து நான் தான் விதார்த்.” என்றதும் முகத்தை அங்கும் இங்கும் திருப்ப, “இதப்பாரு கத்திடாதே. நான் உன்னிடம் பேச வந்திருக்கேன்.” என்று கூறவும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.

விதார்த் மெத்தையில் சரிய, எழுந்தவள் விளக்கை போட்டு கதவை பார்த்தாள். கதவு லேசாக மூடியிருக்க, முதலில் தாழிட்டாள்.

விதார்த்தோ விளக்கை அணைத்து விட, துளிரோ சுவிட்சை போட, விதார்த் மீண்டும் அணைத்துவிட்டு 'இந்த நேரத்துல உன்‌ ரூம்ல லைட் எறிந்தா உங்கம்மாவோ ராணி ஆன்ட்டியோ வந்து தொலைக்க போறாங்க" என்றதும் டேபிள் லைட்டை போட்டாள். 

“இங்க என்னடா பண்ணிட்டியிருக்க?” என்று கத்தவும், “இன்னும் சத்தமா கத்து உங்கண்ணா ஆர்யன் மாடியிலயிருந்து வரட்டும்.

பக்கத்துல சர்வேஷ் ரூம் தானே. உங்கப்பா அவருக்கும் பக்கத்து ரூம் கரெக்டா.” என்றதும் சரவணவேலன் மச்சானை வஞ்சனையின்றி உள்ளுக்குள் திட்டினாள்.

“எங்க வந்த? காலேஜ்ல திட்டியும் சுரணையில்லாம வந்திருக்க.” என்று கேள்வி கேட்கவும், “நீயே கத்தி உங்க வீட்டு ஆட்களை எழுப்பு. நான் வேடிக்கை பார்க்கறேன்” என்று மெத்தையில் நீட்டி நிமிர்ந்தான்.

துளிரோ தலையிலடித்தபடி குரலை தழைத்து, “இங்க எதுக்கு வந்த? எங்கப்பா, அம்மா, அண்ணன்‌ எல்லாம் பார்த்தா என்னாகறது. இங்கயிருந்து கிளம்பு.” என்று பதட்டம் கூட கூறினாள்.

“இன்னிக்கு என்னை விரும்பறதா வாய் வார்த்தையா ஒத்துக்கிட்ட, ஆனா அடுத்த செகண்ட்டே பிரேக்கப் பண்ணற விதமா பேசற. ஏன் கொழுந்து. நான் உன்னை பார்த்தப்ப, நீயும் என்னை பார்த்த. நான் நேசிக்கறப்ப, நீயும் சாதகமா தான் சிக்னல் தந்த. நான் டிரஸை கிப்ட் கொடுத்தா, அதை வாங்கி போட்டுக்கிட்டு சந்தோஷமா துள்ளின.

எங்கப்பா வித்யுத், ஒருகாலத்தில் சிற்பிகா அக்காவை பத்தி தெரிந்ததால் தானே உங்கண்ணா அடிச்சது தப்புன்னு பேசினார். அதோட உங்கண்ணா சாரி கேட்கலை என்றதும் உங்கப்பாவிடம் உங்கண்ணா கோபத்தை குறைக்க சொன்னார்‌. அதுகூட எங்க உங்கப்பா மாதிரி எமோஷன்ல உங்கண்ணா சிக்கிடுவார்னு அட்வைஸ் பண்ணியது தப்பா?

அதை வச்சிட்டு எங்கப்பாவால என்னை அவாய்ட் பண்ணற? எனக்கு புரியலை. இன்னிக்கு சீரியஸாவே கேட்க வந்துட்டேன். என்னை விரும்பற. ஆனா ஏற்க என்ன தயக்கம்?" என்று கேட்டான். 

“கடவுளே காலேஜ்ல வந்து கேளு. இப்ப கிளம்பு. அப்பாவோ அண்ணாவோ உன்னை பார்த்தா அவ்ளோ தான்‌.

ஏற்கனவே சர்வேஷ் அண்ணா எதிரே நீ பேசிட்ட, இதால எப்பபாரு எங்களுக்குள் மோதல். எனக்கு எப்ப அப்பாவிடம் சொல்வாரோனு பயம். இப்ப மட்டும் வந்தார். இன்னியோட இதுக்கு முடிவுக் கட்டிடுவார்.” என்று புலம்பினாள்.

“நானும் முடிவு தெரிய தான் துடிக்கறேன்‌. ஆன்சர் பண்ணு” என்று கையை கட்டி கூர்ந்து நோக்கினான்.

துளிரிடம் பலத்த அமைதி வரவும், “நான் உன்னை முன்ன விருப்பினேன்‌ இப்ப விரும்பலை. இது மாதிரி வீட்டுக்கு வராத. கிளம்பு. இப்படி டார்ச்சர் செய்து காதலை பெறணும்னு உனக்கு என்ன அவசியம்?

கெஞ்சி கூத்தாடி காதலை வாங்கணுமா? உனக்கு வேற பொண்ணே கிடைக்கலை?

எனக்கு தெரிந்து இந்தளவு அவமானப்படுத்தியும் பின்னாலயே அலைந்து வருவது நீ தான்” என்றதும் அவளது முகமாறுதலில் கதவை வேகமாய் திறந்தான்.

அங்கே எதிரே சர்வேஷோ, காதில் போனை வைத்தபடி “மூனு மணிக்கு பிளைட்டா? நல்லது… அங்க போய் சிராப் கூட பேசி முடிவெடு. எக்காரணத்துக்கொண்டு நடுவுல திரும்ப,” என்றவன் விதார்த் தங்கை அறையிலிருந்து வரவும் நெற்றி சுருக்கி, “திரும்ப வராத தமிழ். தமிழ் நான் அப்பறம் கால் பண்ணறேன். தேங்க்ஸ் எல்லாம் நீயே வச்சிக்கோ பை” என்று துண்டித்தவன், “நீயெங்க இங்க?” என்றதும் சர்வேஷ் தங்கையை வெட்டுதல் பார்வையை வீசினான்.

“ஹலோ உங்க தங்கச்சி மேல தப்பில்லை. நான் தான் காதலிக்கறியா அப்படின்னு வெட்கமேயில்லாம கெஞ்சிட்டு தொல்லை பண்ண வந்தேன். அவ என்னை விரும்பலை.” என்றதும் சட்டையை பிடித்தான் சர்வேஷ்.

விதார்த் சர்வேஷின் கரத்தை கண்டு, தட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர் போல வெளியே வரவும், ஆர்யனோ மாடியிலிருந்தே “ராயல்” என்று குரல் கொடுக்கவும், விதார்த் பக்கம் பாய்ந்தது.

வரும்பொழுது ரோஸ்லினை கண்டு வழிந்தவனாக ராயல் இப்போது இல்லை. பற்கள் கூராக, விதார்த்தை நோக்கி வந்தது.

"அச்சோ ராயல் அவரை ஒன்னும் பண்ணிடாத" என்று குறுக்கே வந்தாள் துளிர். 

ஆர்யனோ மாடிப்படிக்கட்டில் ஒவ்வோரு அடியாக நடத்துவந்தான். சிற்பிகாவோ “அச்சோ ராயல் கடிச்சிடப்போகுது. அது உங்க சொல்லை அப்படியே கேட்டு தொலைக்கும்” என்று ஆர்யனிடம் கூற அதனை காதில் வாங்கவில்லை ஆர்யன்.

“ராயல் பைட் ஹிம்” என்ற சிம்ம குரலில் ஆர்யன் கட்டளையிட, ராயல் கிட்டதட்ட உருமியது, “அண்ணா வேண்டாம் அண்ணா.” என்று விதார்த்திற்கு முன்னே முன்னே வந்து நின்றாள் தங்கை துளிர்.

தன் எஜமானனின் செல்ல தங்கையை மீறி வீட்டுக்கு அடியெடுத்து வந்தவரை கடிக்க முடியாது ஆர்யனை கண்டது ராயல்.

  "அண்ணா.. காலேஜ்ல துளிரிடும் லவ் பண்ணறதா சொல்லிட்டு இருந்தான். ஏற்கனவே வார்ன் பண்ணிட்டேன். இன்னிக்கு இப்படி வந்து நிற்கிறார். 

நம்ம துளிர் விரும்பலைனு சொல்லிட்டா அண்ணா. நான் விசாரிச்சிட்டேன்.” என்று சர்வேஷ் கூற ஆர்யனோ “ராயல் ஐ சே ஃபைட் ஹிம்” என்றான்.‌

இம்முறை சர்வேஷிற்கு சிறு சங்கடம், விதார்த் நீதிபதி வித்யுத் மகன் என்பதால், ஒரு அறிமுகமாக அண்ணாவிடம் கூறிடலாமென்ற வேகம் பிறக்க, “அண்ணா இவன் அப்பா பிரெண்ட் ஜட்ஜ் வித்யுத் பையன்” என்று கூற, “தெரியும்” என்றவன் “ராயல் என்னடா தொடைக்கறி பிடிக்கலைனா நெஞ்சி எலும்பை கடிச்சி எடு” என்றதும் ராயல் விதார்த்தை நெருங்கியது.

“அண்ணா… அண்ணா ப்ளிஸ்‌.” என்ற துளிரின் குரல் அதிகரித்தது.

நிபுணனோ கதவை திறக்க, அவருக்கு பின்னால் ஆதிரா வரவும், ராணி ஆச்சி "என்ன துளிர் குழந்தை அழுவுது" என்று கண்ணை கசக்கி வந்தார். 

"தெரியும் டா" என்றவன் "ஏன் துளிர். காதலிக்கறதா டார்ச்சர் பண்ணறவன் நம்ம ராயலிடம் கடி வாங்கினா தான் என்ன? நகர்ந்து போ" என்று கூற, அண்ணனின் பார்வை வித்தியாசம் உணர்ந்தவள், "நா... நானும் விரும்பறேன் அண்ணா." என்று தேம்பவும் ஆர்யனோ துளிரை இமைக்காமல் பார்த்து விதார்த்தை பார்வையிட்டபடி, "உன் போன் எடுத்து உங்கப்பாவுக்கு கால் பண்ணு." என்றதும் விதார்த் தயங்கவும், "சர்வேஷ் ஐயாவிடம் போனை வாங்கி ஜட்ஜ் வித்யுத் என்ற நம்பருக்கு கால் பண்ணு" என்றதும் சர்வேஷ் திகைத்தான்.

நிபுணனோ “ஐயா.. இந்த நேரத்துக்கு எதுவும் வேண்டாம். அவரை போக சொல்லு.” என்றுரைக்க, “சர்வேஷ் நீ கால் பண்ணறியா? நான் பண்ணட்டுமா?” என்றதும் “அம்மா அப்பா போன்” என்று கேட்டு நின்றான் சர்வேஷ்.

ஆதிரா நிபுணன் போனை எடுத்து தர, சர்வேஷ் விதார்த்தை கண்டு பாவமாக அவன் தந்தை வித்யுத்திற்கு அழைத்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

‌‌

35 thoughts on “என் நேச அதிபதியே -45”

  1. ஆர்யன் தங்கைக்கு சப்போர்ட் பண்றாரா இல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர்றாரா?

  2. Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super sis ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ excited for next episode 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  3. Very nice epi
    விதார்த் ஒரு வகை அதிரடி என்றால்
    Aryan அதிரடி செம mass.
    துளிர் pavam மாட்டிகிச்சு .
    Sarvesh விதார்த்துக்கு பாவம் பார்க்கிறான்.
    விதார்த்துக்கு இது தேவை தான் ராயல்க்கு ஜோடி ரோஸ்லின் வேறே
    இப்போ நல்ல மாட்டிக்கிட்டு முழி.

    நிபு வீட்டுக்கு மருமகனா.
    வரணும்னா சும்மாவா இதுல எல்லாம் பாஸாகனும் கண்ணு

  4. Oru vazhiya ellarukum unnai therinchiduchu….epadiyum vidharth varun bodhu Aryan thoongama tan irundhrupano….adhan crcta vandhutan….thulir um love panren nu sollita…. super super ka 😍😍

  5. CRVS2797ओं टिम पिट

    ஏண்டா விதார்த்…! உன் காதலையே வெளிப்படையா
    அவ துளிர் ஒத்துக்கலை, இதுல ராயலோட ரோஸ்லினை சேர்த்து வைக்க வேற வந்தியா…?

    இப்ப பாரு, நம்ம ஆர்யனோட அதிரடி ஆக்சனால, எம்புட்டு
    அழகா உன் காதலை சேர்த்து வைக்கப் போறான் பாரு.

  6. Wow super. Ariyan smart move. How he knows? Sarvesh also.good. sema suspense. Y very small ud sis. Give a big ud pls.

  7. வித்யூத் ஆர்காலி கதை பெயர் தெரியவில்லை. ஆர்யன் மூவ் சூப்பர். Very nice epi and good move

  8. ஆர்யன் மூவ் சூப்பர். Very nice epi.
    வித்யுத் ஆர்கலி கதை பெயர் தெரியவில்லை
    பெயர் தெரிவிக்கவும்

  9. Nibu un paiyan nu apo apo aaryan nirubikiran . Smart ah move panran ippadi vitharth matuvan ninaikala matinathum tak nu judge kupduraru nibu solratha kuda kekama ipo thulir unamiya sollita veetla yar ena mudivu pana poranga

  10. ஆர்யன் சூப்பர் அக்கா….👌👌👌👌👌👌👌…. ஆர்யன் அவனுக்கு விதார்த் – துளிர் காதல் தெரிந்து இருந்தால் தான் ராயல் அவனை விட்டு கடிக்க சொன்னது…. இந்த துளிர் அதற்கு பயந்து தன் காதலை கூறி விட்டாள்…. இனி என்ன ஆகுமோ

  11. இதுவும் நல்லதுக்கு தான். கலகம் பிறந்தால் தான் அதுக்கான தீர்வும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!