காதலின் காலடிச் சுவடுகள் 7
" உங்க அண்ணன் சொல்ற???? ஏன் ரெண்டு பேரும் சரியா பேசிக்கல " என்று நேகா கேட்க என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் கவி......
"அது ரெண்டு பேருக்கும் சண்டை" என்று மது கூற.....
“என்ன சண்டை”?????
” அது டிவி ரிமோட் சண்டை “
“எது டிவி ரிமோட் சண்டையா???? டிவி ரிமோட் சண்டைக்கு எல்லாம் பேசமா இருப்பார்களா”?????
” சண்டையில கவி அப்பாவ பத்தி அவரு திட்டிட்டாரு”….
“இரு இரு கவிக்கும், வேந்தனுக்கும் ஒரே அப்பா தானே”…. சரி மது நீ ஏன் பேர் சொல்லாமா அவருன்னு சொல்ற”??????
” அய்யோ இப்ப பார்த்து இவளுக்கு இவ்ளோ அறிவா ???? கேள்வியாக கேட்டு சாவடிக்கிறா” …. என்று கவி மதுவின் காதில் கிசுகிசுத்தாள்……
“சரி விடு கவி எதாவது சொல்லி சமாளிப்போம்”……
அதற்குள் கவி, மது இருவரையும் ஹாஸ்டல் வார்டன் கூப்பிடுவதாகச் சொல்ல இருவரும் வார்டனை பார்க்க சென்றனர்……
” நீ போய் நேகா நீங்க வார்டனை பார்த்து விட்டு வரும்”…… என்று கூறிய கவி மதுவுடன் வார்டன் அறை சென்றாள்….
வார்டன் அறை வாசலில் நின்று கதவை தட்டிய மது “மேம்”
“வாங்க பசங்களா”
“மேம் வர சொல்லி இருந்திங்கலாம் அதான்” என்று மது கூற. …
“ஹம்ம்ம் ஆமா உங்க ரெண்டு பேரையும் பார்க்க விசிட்டர் வந்து இருக்காங்க.. பார்த்துட்டு சீக்கிரம் வாங்க… அப்புறம் இன்னொரு விஷயம்”…..
” சொல்லுங்க மேம்” என்று கவி வினவ…
” ஆறு மணிக்கு மேல் யாரும் பார்க்க வர கூடாது உங்களுக்கு தெரியும் தான”????
“எஸ் மேம் தெரியும்”
“இனிமேல் இப்படி நடக்காம பார்த்துக் கோங்க முதல் தடவை அதனால ஓகே…. மறுபடி இப்படி நடக்காம பார்த்துகாகோங்க” என்று இருவரையும் எச்சரித்து அனுப்பினார்…
” மது யாருடி நம்ம பார்க்க அதுவும் டைம் முடிஞ்சு வந்து இருப்பா”????
” தெரியல கவி வா போய் பார்த்துட்டு சீக்கிரம் வரலாம் இல்லையா அதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க”……
அங்கு மரத்தடியில் இருவருக்காக புகழ், அருண் இருவரும் நின்று இருந்தனர்…..
“புகழண்ணா என்ன ஆச்சு” ???”இப்ப தான பார்த்துட்டு வந்தோம்”…. என்று பயத்தோடு கேட்டாள் மது….
“எதுவும் இல்லை மது இந்த வாரம் நாம எல்லாரும் ஊருக்கு போறோம்னு வேந்தன் சொல்லிட்டு வர சொன்னான்… அதான் சொல்லிட்டு போக வந்தோம்.. வெள்ளி கிழமை பேக் பண்ணிட்டு ரெடியா இருங்க… வந்து அழைச்சிட்டு போகிறோம்”…. என்று அருண் கூற….
” ஏதாவது முக்கியமான விஷயமா”?????
“ரெடியா இருக்க சொன்னான்… சொல்லிட்டோம் .. நாங்க கிளம்புறோம்”… அருண் கிளம்ப….. வாசலில் எட்டி பார்த்த மதுவிடம் “வேந்தன் வரலை மது” என்று அவளை கவனித்துக் கொண்டு இருந்த புகழ் கூறினான்…… வந்ததிலிருந்து மதுவை புகழ் பார்த்துக் கொண்டு தானே இருந்தான்… மது அருண் சொல்வதை கவனித்தாலும் நொடிக்கு ஒரு முறை பார்வை சென்ற திசையை……
“சரிண்ணா “என்று கூறிவிட்டு அமைதியாக திரும்பி நடந்தாள் மது”…
அருணும் , புகழும் வெளியே வர அங்கு காரில் அமர்ந்து இருந்தான் வேந்தன்…..
” டேய் வேந்தா இப்படி பண்ணாதடா…. மது பாவம்.. கொஞ்சம் கூட வாடா உனக்கு இரக்கமே இல்ல ” என்று பட பட வென்று அருண் பொறிய……
“என்னாச்சு”???
“பாவம்டா மது நீ வந்து இருக்கின்ற, இல்லையான்னு எட்டி பார்த்து கிட்டே இருந்தா”……
எதுவும் கூறாமல் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட வேந்தன் காரில் ஏறி அமர்ந்தான்……
தொடரும்…..
எல்லாரையும் அவங்க ஊரில் பார்ப்போம்…. நிறைய கேள்விகளுக்கு விடையோட……
Going nice
ஒண்ணும் புரியலை சொல்லத் தெரியலை..
ரொம்ப குழப்புதே.
Nice epi