Skip to content
Home » காதலின் காலடிச் சுவடுகள்-8

காதலின் காலடிச் சுவடுகள்-8

காதலின் காலடிச் சுவடுகள் 8

புகழ் அருண் வந்து சொல்லிவிட்டு சென்று ஒரு வாரம் முடிந்தது….

வெள்ளிக்கிழமை காலை முதலே பரபரப்பாக இருந்தாள் மது….. அவளுக்கு தெரியும் ஊருக்கு சென்றால் என்ன என்ன கலவரங்கள் நடக்கும் என்று…. நினைக்கும் போதே ஒரு பயபந்து தொண்டை குழியை அடைத்தது….

“என்ன மது???என்ன யோசனை”??

” இல்லடி ஊருக்கு போகவே பயமா இருக்கு”…..

“எப்படி இருந்தாலும் போய் தான் ஆகணும் மது.. நைட் 10 மணிக்கு டிரெயின் இப்ப வந்து இப்படி சொன்னா .. என்ன செய்யறது???? யோசிக்காத விடு பார்த்துக்கலாம்”……

” ம்ம்ம் சரி”

“இப்ப ரெடியா காலேஜ் போகணும்”…..

” போகலாம் கவி”…

காலேஜ் போகும் போது நேகாவும் இவர்களுடன் இணைந்து கொண்டாள்.. . ..

” நேகா நாங்க இன்னிக்கி ஊருக்கு போக போறோம்னு.. . . நீ மட்டும் தான் ரூம்ல பார்த்து இருந்துக்கோ”.. . . ..

” சரி கவி.. . திரும்பி வர எவ்ளோ நாள் ஆகும் “… .

” எப்படியும் மண்டே வந்துடுவோம்”… .

” சரிப்பா”

கிளாஸ் ரூமில் அவர் அவர் இடத்தில் அமர்ந்தனர்”… சிறிது நேரத்தில் வகுப்பு மாணவன் பெரிய கூச்சலோடு நுழைந்தான்.. . .” என்னடா இப்படி கத்திட்டு வர” மூச்சு வாங்க நின்று கொண்டு ” நம்ம காலேஜ்ல எல்லாரையும் டூர் கூட்டு போக போறங்க” என்று கூறியவுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. . ..

” டேய் என்னடா சொல்றே”?? ? எதையாவது கேட்டுட்டு வந்து தப்பு தப்பா சொல்லாத” என்று ஒரு பையன் கூற.. .

” நான் சரியா தான் சொல்றேன் ” நோட்டு
எல்லாதையும் சார் எடுத்துட்டு வர சொன்னாங்க” எடுக்க போன அப்போது பேசிட்டு இருந்தாங்க.. . .

“சரி எந்த பிளேஸ் பேசிகிட்டாங்களா…..
கேட்டியா. ..என்று ஆர்வ மிகுதியால் ஒரு
வாணரம் கேட்க”

“அது எல்லாம் கேட்கல டா” எப்படியும் சர்குலர் வரும் இல்ல அப்ப பாத்துக்கலாம்” என்று கூறிவிட்டு அவன் இடத்தில் போய் அமர்ந்தான்.. . .

” கடைசி நேர வகுப்புவரை சர்குலர் வரவில்லை ” மற்ற மாணவர்கள் அனைவரும் சொன்ன மாணவனை மொத்தி எடுத்து விட்டனர்.. .

“மதுவும், கவியும் ஊருக்கு செல்ல ஹாஸ்டலை வெளியே வர புகழ்
காருடன் நின்று இருந்தான். . .. அருண் காரில் இருக்க வேந்தனை காணவில்லை.. . வேந்தன் இல்லை என்றதும் மதுவிற்கு முகம் வாடி விட்டது.. . . .

” என்ன மது முகம் ஏன் போகுது” என்று அருண் கேட்க.. .

“ஒன்றுமில்லை என்று இடம் வலமாக தலையாட்டினாள் மது”… .

” சரி ஏறுங்க டிரைய்னுக்கு டைம் ஆச்சு”” என்று அருண் கூறியதும் அமைதியாக காரில் அமர்ந்தாள் மது… . ..

“ரயில் நிலையம் வரும் வரையில் யாரும் யாருடனும் பேசவில்லை.. . . ரயில் நிலையத்தில் கார் டிரைவர் இருக்க அவரிடம் காரை கொடுத்து விட்டு உள்ளே செல்லவும் ரயில் வருவதற்கான அறிவிப்பு வரவும் சரியாக இருந்தது.. . . ரயில் வந்தவுடன் இருக்கையை தேடி நால்வரும் அமர வேந்தன் வருகிறான என்று பார்த்து கொண்டு இருந்தாள் மது.. . . . ரயில் கிளம்பும் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக வந்து ஏறினான் வேந்தன்.. . . வந்து மதுவின் அருகில் இடித்துக் கொண்டு அமர்ந்தான் வேந்தன்”… .

” இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்று மது முனுமுனுத்தது வேந்தன் காதில் தெளிவாக விழுந்தது.. .

” வேற என்ன குறைச்சல் சொல்லுடி என்னோட மக்கு பொண்டாட்டி சரி பண்ணிடுவோம்” என்று வேந்தன் கேட்க அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது. .. .

நாளைக்கு ஊரில் பார்க்கலாம் பா.. . . என்ன ஊரு இவங்க ஐந்து பேரும் யாரு? ? மது, வேந்தன் உறவு எல்லாம் வரும் அத்தியாயங்களில் தெரிஞ்சிடும்.. . . .

தொடரும்.. . . .

3 thoughts on “காதலின் காலடிச் சுவடுகள்-8”

  1. CRVS 2797

    அது தெரியாமத்தானே குழப்பமா சுத்தி வந்துட்டிருக்கோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *