அத்தியாயம்-48
ஆர்யன் இரண்டரை மணியளவில் வீட்டிற்கு வந்தான்.
சிற்பிகாவிடம் “என்னோட கிளம்பு” என்றான்.
“எங்கங்க?” என்றதும் ஹாஸ்பிடலுக்கு, உன் அப்பாவுக்கு பொண்ணு பிறந்திருக்கு” என்றதும் சிற்பிகாவோ கையை பிசைந்து நின்றாள்.
தனக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறக்கும் தருணம் தந்தைக்கு குழந்தை பிறந்ததாக ஆர்யன் கூற ஏற்பது கடினமாக இருந்தது.
”சிற்பி எனக்கு தெரியாதுன்னா சும்மாயிருப்பேன். உங்க சித்தி நான் வேலைப் பார்க்கற ஹாஸ்பிடல்ல தான் சேர்த்திருந்தாங்க. ஆக்சுவலி டெலிவெரி நான் பார்க்க வேண்டியது. ஆனா நான் எப்படி? அதனால் லேடி டாக்டரை அனுப்பினேன்.
உங்கப்பா ஊர்ல இல்லையாம். குழந்தை பிறந்து தனியா இருக்காங்க.
அவர் வர்ற வரை நீ கூடயிருக்கலாம்” என்று சகஜமாய் கூப்பிட சிற்பிகாவோ சங்கடமாய் கிளம்பினாள்.
தன் ஐயா நிபுணனிடம் விரைவில் வந்து விடுவதாக கூறி சென்றார்.
ஆதிராவோ “ஆர்யன் சாயந்திரம் தங்கையை பொண்ணு பார்க்க வர்றாங்க” என்றதும் “நினைப்புல இருக்கும்மா அதுக்குள்ள வந்துடுவேன்.” என்று சென்றான்.
சிற்பிகாவோ தன் அத்தை ஆதிராவிடம், “அம்மா நான் வந்துடுவேன்.” என்று தயங்கி செல்ல, “எந்த சங்கடமும் இல்லாம போயிட்டு வா. துளிரை பொண்ணு பார்க்க வரலைனா நானுமே கூட வந்திருப்பேன்.” என்றார் ஆதிரா மருமகளை தேற்றும் விதமாக.
நிபுணனோ பணியாட்களிடம் சொல்லி ஊட்டசத்து உணவும் உடையும் வாங்கியிருக்க, வீட்டில் பறித்த பழங்கள் என்று ஆர்யன் பைக்கில் வைத்தார்.
குழந்தை பெற்றவருக்கு என்று கொடுத்தனுப்ப, சிற்பிகா அமைதியாக வாங்கி கொண்டு வந்தாள்.
“என்ன டல்லாயிருக்க?” என்று ஆர்யன் வண்டியை செலுத்தி கேட்க, “இந்த வயசுல குழந்தை தேவையா? நம்ம குடும்பத்துல யாராவது கேலி செய்வாங்களோ?” என்று மனதை அழுத்திய கேள்வியை கேட்டாள்.
ஆர்யனோ “உங்கப்பா அந்த லேடிக் கூட தாலி கட்டி தானே வாழ்ந்து பிள்ளையை பெத்தாரு. ஸ்டெப்னியா வச்சிக்கலையே. அப்படின்னா தப்பில்லை.
அவர் திருமணமாகி இப்ப குழந்தைக்கு அப்பாவா மாறியிருக்கார். அதனால் மனசார வாழ்த்து. யாரும் கேலி செய்ய மாட்டாங்க. அப்படி செய்தா நீ தான் சொல்லணும். எங்கப்பா முறையா தாலி கட்டி வாழ்பவர்னு” என்று ஆர்யன் இயல்பாக எடுத்துரைக்க, “என்னை இருந்தாலும் மூத்த பொண்ணு எனக்கு இப்ப கல்யாணமாகியிருக்கு நாலுபேரு நாலுவிதமா அசிங்கமா பேசுவாங்க” என்று மனதாங்கலாகவே பேசினாள்.
“சிற்பி வாழ்க்கை துணை என்பது ஒருத்தருக்கு ஒருத்தி இறந்ததும் திருமண வாழ்வு மூடுவிழா செய்வதில்லை. மறுமணம் செய்து இன்னொரு துணையோட மனமொன்றி வாழ்ந்தா கூட நல்லது தான்.
உங்கப்பாவுக்கு அப்படியென்ன வயசு. நீ பிறந்ததும் உங்கம்மா இறந்துட்டாங்க. உன்னை படிக்க வச்சி ஆளாக்கி வளர்த்தவரை அவருக்கு துணை தேடலை. நீ பிரபுவுக்காக சிறைக்கு போனதும் யாருக்காக வாழறோம்னு அவரா மனசை மாற்றி ஒரு பொண்ணு கூட தாலி கட்டி வாழறார். இதுல என்ன தப்பு. அவரிடம் மிஞ்சியிருக்கற இளமை இந்த குழந்தை வளர்ந்து ஆளாகற வரை இருக்கும். இந்த குழந்தை தேவையை பூர்த்தி செய்வார். அப்படியிருக்க பிள்ளை பிறந்தது தப்பேயில்லை. இப்பவாவது வாழட்டும்னு நினை” என்று கூறவும் சிற்பிகா மனம் உண்மை தானே தன்னை வளர்க்க என்று தந்தை இளமையை துறந்தவர். பிரபுவால் சிறைக்கு சென்றதால் விரக்தி அடைந்து சாந்தி சித்தியை மணந்தார். இப்பொழுதாவது நன்றாக வாழட்டும் என்று கணவர் பேச்சால் பக்குவமானாள்.
இருவரும் மருத்துவமனை வந்து சேரும் போது எதிர்பட்டவர் எல்லாம் ஆர்யனுக்கு வணக்கம் வைத்தனர். சிற்பிகாவுக்கு இத்தனை வசதியிருப்பவன் தனியாக மருத்துவமனை ஆரம்பிக்கலாமே என்ற கருத்து ஏற்பட, அதனையும் கேட்டாள்.
“ஒன்னென்ன இந்த ஜில்லா முழுக்க மருத்துவமனை கட்டறதுக்கு எங்க ஐயா ரெடி. ஆனா அரசாங்க மருத்துவமனையில பத்து வருஷம் சர்வீஸ் பண்ணனும் என்றது என்னோட குறிக்கோள்.” என்று கூறி சிற்பிகாவிற்கு ஸ்கீரின் பக்கம் திறந்து விட்டான்.
சாந்தி அங்கு தான் இருந்தார். அருகே பச்சிளம் குழந்தையிருக்க, சிற்பிகா மெதுவாக அடியெடுத்து காண வந்தாள்.
அவள் கொண்டு வந்த உடை பழங்கள் கீழே வைத்துவிட்டு, “அப்பா இல்லையா? தனியா வந்து அட்மிட் ஆனதா அவர் சொன்னார்” என்று ஆர்யனை சுட்டி காட்டி கேட்டதும், “பிரசவ டேட் அடுத்த வாரம் என்றதால் அவர் வேலைக்கு போயிட்டார். போன்ல தகவல் சொல்லலாம்னா உங்கப்பா எடுக்கலை. அதான் வலி வரவும் பக்கத்து வீட்டு பொம்பள அட்மிட் பண்ணுச்சு.
இங்க வந்ததும் ஆர்யன் தம்பியை பார்த்து பயந்தா அவரா தான் லேடி டாக்டரை அனுப்பினார்.” என்று கூறவும் வார்த்தையில் அசதி தெரிந்தது.
சற்று நேரம் குழந்தையை தூக்கி வைத்திருந்தாள். அதற்குள் சாந்தியின் அன்னை வரவும் “குட்டி பாப்பாவை நல்லா பார்த்துக்கோங்க நான் வர்றேன்.” என்று கூறி எழுந்தாள்.
“உன்னை ரொம்ப திட்டிட்டேன். மனசுல வச்சிக்காத. உன்னால எப்பவும் எனக்கு தொந்தரவு கிடையாது. உங்கப்பா குடிப்பது தான் என்னை அன்னைக்கு அப்படி பேச வச்சிடுச்சு” என்று கலங்க, சிற்பிகாவோ “பரவாயில்லை சித்தி” என்று நடந்தாள்.
ஆர்யனும் சிற்பிகாவும் வெளியே கடக்கும் நேரம் அவள் தந்தை வந்தார்.
ஆர்யன் தோளில் வண்டியை நிறுத்த கூறி தட்டினாள். அவன் நிறுத்தவும் தந்தை பக்கமாக வந்து, “எங்கப்பா நான் பள்ளிக்கூடம் படிக்கிற வரை கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகலை. என்னால தான் குடிக்க ஆரம்பிச்சிங்க. இப்ப நான் உங்க கூட இல்லை. இனியும் குடிக்கனுமா? அம்மா என்னை எந்த நிலையில் விட்டுட்டு போனாங்களோ அந்த நிலையில் இப்ப உங்களுக்கு திரும்ப ஒரு குழந்தை. அந்த குழந்தையை இனி கவனிங்க. தயவு செய்து குடிக்காதிங்க. நான் பிரபுவை விரும்பலை. அவனோட எந்த தப்பும் செய்யலை. அந்த டீச்சர் தான் எல்லா தப்பும் பண்ணியது. முன்ன தான் என்னை புரிஞ்சிக்கலை. இப்பவாவது புரிந்து கொள்ள முயற்சி பண்ணுங்க.
என்னிடம் எப்படி நல்ல அப்பாவா வாழ்ந்திங்களோ. தங்கச்சி பாப்பாவுக்கு நல்ல அப்பாவா இருங்க. நான் வர்றேன் அப்பா” என்று பதிலை கேளாது நடந்தாள்.
சிற்பிகாவின் தந்தை மௌவுனமாய் தனக்கு தற்போது பிறந்த மகளை காண சென்றார்.
ஆர்யனோ “அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு. திருந்துவாரா?” என்று கேட்டான்.
“திருந்தறாரோ இல்லையோ ரொம்ப நாளா நெஞ்சுக்குள்ள சொல்லணும்னு நினைச்சது.” என்று கூறவும் மனைவியை ஏற்றி வீட்டுக்கு வந்திருந்தான்.
வீட்டுக்கு வந்ததும் நிபுணன் ஆதிரா விசாரித்தார்கள்.
பின்னர் குளித்து முடித்திட, கீழே இரண்டு மூன்று கார்கள் வாசலில் நுழைந்தது.
“துளிரை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்காங்க.” என்று மடமடவென இறங்கினான் ஆர்யன்.
சிற்பிகாவும் சேலையுடுத்தி நடந்துவர, அதற்குள் ஆதிரா நிபுணன் வந்தவர்களை வரவேற்றார்கள்.
வித்யுத் ஏற்கனவே நிபுணனிடம் “ஐந்து மணிக்கு என் மகன் விதார்த்துக்கு பொண்ணு பார்க்க வர்ற்.” என்று கேட்க, “தாராளமா வாங்க ஜட்ஜ் சார்” என்றான் நிபுணனும்.
வரலாமா வேண்டாமா என்று வித்யுத் யோசிக்கவில்லை. அதே கணம் மறுப்போமா வேண்டாமா என்று நிபுணனும் நினைக்கவில்லை.
மகள் விரும்புவதை வார்த்தையால் அறிந்ததால் மறுப்பாரா?
கல்லூரியில் இருந்து விதார்த் அப்படியே வந்திருப்பது தெரிந்தது.
ஆர்யனோ வணக்கம் வைத்து வாய் நிறைய வாங்க என்று புன்னகையோடு உள்ளே அழைத்தான்.
‘நைட்டு ராயலை வச்சி மிரட்டிட்டு இந்த பூனையும் பால் குடிக்குமான்னு வாங்க வாங்கனு எப்படி உபசரிக்கராரு’ என்று ஆர்யனை கண்டு விதார்த் நினைக்க, சர்வேஷோ சரவணவேலன் அருகே நின்றான்.
நிபுணன் குடும்ப உறவாக தங்கை அருகேயிருக்க சாருலதா-முத்துவேலன் வரவும் சரவணவேலனும் ஒட்டிக் கொண்டான்.
“ஏன் மச்சான் உங்க பிரெண்ட் என் மேல கோபமாயிருப்பாரா?” என்று சரவணன் காதை கடித்தான்.
“சேச்சே.. அவனை நீயென்னடா செய்த? பெரியவர் தான் ராயலை வச்சி செய்துட்டார்.
இதுல உன் தங்கை வேற காதலிக்கலைனு பொய் சொல்லி அவனை மண்டை காய வச்சிட்டா.
எனக்கு தெரிந்து விதார்த்துக்கு நீ எந்த தீங்கும் தொந்தரவும் தரலை. அதனால் அவன் உன் மேல கோபப்படலை. கோபமெல்லாம் அவன் கொழுந்து மேல தான்.” என்று சிரிக்க, துளிரை தான் கொழுந்துன்னு சொல்லறாரா? என்று விதார்த்தை கண்டு ஆர்யன் அண்ணன் அருகே நகர துவங்கினான் சர்வேஷ்.
சிற்பிகா துளிரை அழைச்சிட்டு வா" என்றதும் அப்பொழுது தான் முகமலம்பி ஹாயாக அறையில் உலாத்தினாள்.
விதார்த் பேச்சுக்கு பொண்ணு பார்க்க வருவதாக நினைத்து சாதாரணமாய் இருந்தாள்.
“துளிர் உன்னை பொண்ணு பார்க்க அந்த தம்பி வந்திருக்கு. ரெடியா கலை” என்று மேலோட்டமாக தலை வாறினாள்.
“அண்ணி நிஜமாவே அந்த திமிர் பிடிச்சவன் வந்திருக்கானா?” என்று திகைத்தாள்.
“அவர் மட்டுமில்லை. அவர் குடும்பமே” என்று கூறவும் துளிர் தயங்க, விதார்த் அன்னை ஆர்கலியோ “மேக்கப் எல்லாம் வேண்டாம். சட்டுனு அழைச்சிட்டு வாம்மா” என்று அவசரப்பட்டார்.
ஜட்ஜ் வித்யுத்தின் தாய் தந்தையான வம்சிகிருஷ்ணன்-மதிவதனி இருவரும் அவரது இரண்டாவது பிள்ளை ஆத்விக் சென்னையில் இருக்க அங்கே சென்றிருந்தார்கள். அதனால் ஆர்கலி தங்கை ஆருத்ரா ஒரே ஊரில் இருக்க அவரையும் அவர் மகள் ஆதினியையும் அழைத்து வந்திருந்தார்கள். ஆருத்ரா ஆர்கலி இரட்டையர்கள். முக அமைப்பு ஒன்று போல இருந்தது. ஆருத்ரா மகள் ஆதினி மட்டும் அன்னை ஆருத்ரா கையை பிடித்து நின்றாள்.
சிற்பிகா நாத்தனார் துளிரை ஆர்யன் அருகே அழைத்துவர, “சிற்பி நீ காபி கொண்டு வா. என் தங்கை என் கூட இருக்கட்டும்” என்று அனுப்பினான்.
விதார்த்தோ, ‘ம்கூம் இவர் இருந்தாரே பார்க்க சங்கடம். இதுல இவர் பக்கத்துல கொழுந்து இருந்தா நான் எப்படி ரசிக்க? ஏற்கனவை துளிருக்கு துளிர் விட்டு போச்சு. இப்ப அண்ணன் பக்கமா இருக்குன்னு என்னை மதிக்கமாட்டாலே’ என்று ஏறிட, கல்லூரியில் பார்த்த அதே உடை. வீட்டிற்கு வந்து உடை மாற்றாமல் என் பேச்சை விளையாட்டு தனமாக எண்ணி விட்டாளே என்று அன்னையை கவனிக்க, ஆர்கலியோ ‘டேய் எங்கூர் பிள்ளை. அடக்கவொடுக்கத்தை பார்த்தியா? எவ்ளோ சாதாரணமா இருக்கு. ஆருத்ரா பொண்ணு எப்படியிருக்கா?” என்று தங்கையிடம் அபிப்ராயம் கேட்க “விதார்த்கு பிடிச்சிருக்கு. பொண்ணும் அழகா இருக்கா அக்கா” என்று கூற, துளிரோ விழி நிமிர்த்தினாள்.
“நிபுணனா இது பார்மாலிட்டிஸ். துளிரை எங்களுக்கு பிடிச்சிருக்கு. இப்ப தான் ஆர்யனுக்கு திருமணம் முடிச்சிருக்க. இருந்தாலும் விதார்த் கல்யாணம் பார்க்க எங்களுக்கு ஆசையாச்சே. எப்ப தீளிரை என் மகனோடு கல்யாணம் செய்து அனுப்ப போற?” என்று கேட்டார்.
“வீட்ல பெரியவங்க இப்பொழுதைக்கு என் மனைவியோடு அம்மா அப்பா தான். அதாவது என் மாமனார் மாதவன் அத்தை தங்கலட்சுமி தான். அவங்களை தான் நாள் பார்க்க சொல்லணும்.
பெரியவருக்கு முடிந்ததால் பொண்ணுக்கு இழுக்க மாட்டேன். என்ன தான் இருந்தாலும் மகளுக்கு முடிஞ்சாகணும்.
அப்ப தானே நாளைக்கு சர்வேஷுக்கு பொண்ணு பார்க்க முடியும்” என்று பேச்சு சென்றது.
“சர்வேஸுக்கு அரவிந்த் மக தமிழை கல்யாணம் செய்வதா பத்திரிக்கை பேப்பர்ல இரண்டு நாளைக்கு முன்ன செய்தி வந்ததே” என்று கேட்டார் வித்யுத்.
“அது உண்மை இல்லை. அரவிந்துக்கு அந்த ஆசையிருக்கு. ஆனா சர்வேஷுக்கு அந்த எண்ணமில்லை. வெளியே சுத்தி பார்க்க கூட்டிட்டு போனவளோட கிடுகிசுக்க போட்டுட்டாங்க. சில காரணத்துக்காக அரவிந்த் மனசு புண்பட வேண்டாமேனு அதை மறுத்து பேசாம இருக்கான்.” என்றதும் வித்யுத் பார்வை விதார்த்தை தழுவியது.
விதார்த்தோ “அப்படின்னா வீட்ல பேசியதை கேளுங்கப்பா” என்று கிசுகிசுத்தான்.
-தொடரும்.

🌹🌹🌹🌹
Ponnu kuduthu ponnu eduka poranga doiii.sooperrrr.kolunthu un ala paru. Pavam pa vidharth.epdi vanthu sikki irukan paru.adutha mrg waitinggg
Interesting
Interesting sis
Sema sema interesting epi
Superb kolunthu nambama iruntha pathiya vanthutan thimiru pidichavan eppvum namba nibuna periyavanga kitta ketu tha mudivu edupanga itha mudichiti sarvesh mrg ena agumo
விதார்த் என்ன கேட்க சொல்லுறான் ?
ஒருவேளை, சர்வேஷ்க்கும் இவங்க வீட்டு பொண்ணையே கட்டிக் கொடுக்க உத்தேசமோ…?
Super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Spr sis….. Aathiniku sharvesh ah kepangalo🤔🤔🤔 eagarly waiting for nxt update😍😍😍😍😍😍 💕💕💕💕💕💕💕
Interesting… Ena anda new girl korthu vida poringala
Super sis semma epi romba interesting ah pogudhu story 👌👍😍
செமயா போகுது மா கொழுந்து ஜோடி சேர்த்தாச்சி சர்வேஷ்க்கு ஜோடி வரும் வரை கதையை தொடருங்கமா ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு உங்கள் கதைகள் வாழ்த்துகள்
சித்தி மகளை குடுக்கவா
Super super oru vazhiya ah kozhundhu ku thimirpidichavan oda kalyanam nadakapoguthu
Super. Intresting. Again marriage. Excellent.
Sema
Interesting
Nice epi sis👍
Oru vayla sarvaku Avan thangachiya kaykka soldranoo 🤔🤔🤔
Orye vittula ponnu kuduthu poonu edukkaramari 😍
ஒரு வேலை ஆஷினி க்கு சர்வேஷ கேக்குராங்களோ
❤️❤️❤️❤️❤️
Ivan ennatha keka solran🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍👍👍👍
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super super super super super
அருமையான கதை நகர்வு அக்கா….👌👌👌👌👌…. சிற்பிகா தன் தந்தைக்கு கூறிய அறிவுரை அவரை மாற்றுமா….🤔🤔🤔🤔🤔…. விதார்த் – துளிர் ஜோடியின் பெண் பார்க்கும் படலம் சூப்பர் அக்கா….👌👌👌👌👌
nice!!