புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

என் நேச அதிபதியே -50

அத்தியாயம்-50

  விதார்த் குடும்பத்தை கை நனைக்க வைத்தே ஆர்யன் அனுப்பி வைத்தான். 

விதார்த் தந்தை வித்யுத்தோ காரோட்டும் மகனிடம், "ஏன்டா மருமகளிடம் பேசப்போனியே அப்ப என்ன பேசி தொலைச்ச? கண்ணு கலங்கி விசும்பின மாதிரி தெரிந்தது." என்று கேட்டதும் காரோட்டும் விதார்த்தோ 'பார்த்துட்டாரா? இந்த கொழுந்து இருக்காளே' என்று வாழ்க்கை துணையாக வரப்போகின்றவளை மனதில் வறுத்தெடுத்தான்.

“விதார்த் அப்பா கேட்கிறார்ல” என்று அன்னை ஆர்கலி வேறு கேட்டதும், “அம்மா… துளிருக்கு ஒரு பயம். துளிரோட முதல் அண்ணன் இளவயசுல சிற்பிகா அக்காவை சீர்த்திருத்த பள்ளியில கன்னத்துல அடிச்சார். நம்ம அப்பா அப்ப வக்கில். சிற்பிகா அக்கா பக்க நியாயம் தெரிந்ததால துளிர் அண்ணனை பார்த்து நிபுணன் மாமாவிடம் அட்வைஸ் பண்ணினார். உங்களுக்கு நினைவுயிருக்கா அப்பா?” என்று தந்தையிடம் வேறு நினைவுப்படுத்த முனைந்தான்.

“நீ ராயல் பக்கத்துல பம்மிட்டு இருந்தப்ப போன் கால்ல பேசினதுலயே தெரியும் டா. ஆர்யன் அதை மனசுல வச்சி பேசியது. இப்ப அதுக்கென்ன? என் பிரெண்ட் நிபுணன் அதை மறந்துட்டான்” என்றார் வித்யுத்.

“இத்தனை நாளாக துளிருக்கு நீங்க ஏதோ அட்வைஸ் பண்ண அப்பயிருந்த நிபுணன் மாமா பீல் பண்ண அப்பாவை பேசிட்டாங்கன்னு உங்க மேல சரியா காரணம் புரியாம கோபத்துல இருந்திருக்கா.
இதுல பையனை சரியா வளர்க்கலை பொண்ணும் காதல்னு வளர்த்ததா, நீங்க நிபுணன் மாமாவை சொல்வீங்கன்னு என்னை நைஸா பிரேக்கப் பண்ண நினைச்சா. நான் சுவர் ஏறி குதிக்க, அவங்க அண்ணனிடம் மாட்டி, நாயிடம் மாட்ட, காதல் ஆட்டோமெடிக்கா வந்துடுச்சு. இப்ப வருங்காலத்துல எங்கப்பா கொலைக்காரன் எங்கண்ணா சட்டுனு பொட்டப்பிள்ளையை அடிச்சவருன்னு என்னை காயப்படுத்திவியான்னு கண் கலங்கிட்டா. நான் அப்படி பேசமாட்டேன் பிராமிஸ்னு சொன்னேன்.
அதோட என்னை அவாய்ட் பண்ணியதுக்கு சாரி கேட்டா. நான் பரவாயில்லைனு சொன்னேன். கொஞ்சம் கொஞ்சமா கண்கலங்கறதை நிறுத்தினா. அவ்ளோ தான் அப்பா.” என்றுரைத்தான்.

“இது மட்டும்னா ஓகே டா. ஏதாவது வில்லங்கம் பண்ணி வைக்காத. அங்க ஆர்யன் சர்வேஷ்னு இரண்டு பேர் அவங்க தங்கச்சி கண்ணுல அழுகை வரவும் எங்களிடம் பேசற தோரணை சட்டுனு நின்றது.

நிபுணன் தான் மாப்பிள்ளை வீட்ல சாப்பிட்டு போகணும்னு சமாளிச்சு வேலையை ஏவி விட்டு பேச்சை மாத்தினான்.

எதுனாலும் மச்சினங்க உயிரை கொடுப்பாங்க டா. அழ விட்டுடாதே. நம்மளை நம்பி வர்ற பொண்ணை கண் கலங்க விடக்கூடாது. அதுவும் தங்கத்துல தாங்கற இடத்துலயிருந்து வர்றா துளிர். நீயும் எங்க வீட்டுல பார்த்துக்கற மாதிரி பார்த்துக்கறனு மருமக சொல்லற மாதிரி நடக்கணும். 

இது நீயா உன் வேலையை டிசைட் பண்ணறேன்னு சொல்லற மாதிரி கிடையாது. விதி நம்மளை டிசைன் டிசைனா டிசைட் பண்ண நினைச்சாலும் நாம நிலையான அன்பை தரணும்.” என்று பக்கம் பக்கமாக உரைக்க, காதில் கேட்டு அசட்டுதனமாய் வண்டியோட்ட, அவன் புஜத்தில் “பெரியப்பா சொல்லறார் ஆகட்டும்னு வாய் திறக்கிறார்?” என்று ஆதினி இடித்தாள்.

 "உங்க பெரியப்பா வீட்டுக்கு போய் ஒன்னு கேட்பார். அதுக்கும் ஆகட்டும்னு நீ வாய் திற." என்று சந்தடி சாக்கில் ஆதினியிடம் வாயளந்தான் நிபுணனின் மருமகன். 

“என்னது பெரியப்பா?” என்று ஆதினி கேட்க, “ஒன்னுமில்லை டா‌‌, உங்கண்ணன் ஏதாவது சொல்வான்.” என்று மைந்தனிடம் இந்த பேச்சு இப்பொழுது வேண்டாமென்று பாவித்தார்.

ஆருத்ராவோ பெரிய அத்தானின் எண்ணம் புரிய, தன் கணவன் சரணிடம் கலந்து பேசாது ஆதினியிடம் வாயெடுக்கவில்லை என் புரிந்தது.

சி.எம் மகளை விடுத்து தன் மகளை கட்டுவார்களா? என்று அந்தளவு ஆசையை ஒதுக்கி ஆருத்ராவும் அமைதியானார்.

 அதன் பின் வந்த நாட்களில் துளிர் விதார்த் ஒரே கல்லூரியில் அடிக்கடி அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். 

விதார்த் தான் தன்னவள் தங்கள் இடம் நோக்கி வருவதை தவிர்த்து அவனாக வருவான். இம்முறையும் சரவணனை விட்டுவிட்டு தான் வந்தான்.

சரவணவேலன் வீட்டில் முத்துவேலனோ மகள் ராகவி வீட்டில் சரவணனை இத்தனை நாள் அவர்கள் ஒன்றுவிட்ட சம்பந்தி மகளை மணக்க கேட்டார்கள்.

துளியை மனதில் நிறைத்து தட்டி கழித்தார் முத்துவேலன்‌. தற்போது துளிர் காதலிப்பது அறிந்தும், மகனின் நண்பனே காதலிப்பதும், அதுவும் நீதிபதி மகன் என்பதில் தானாக எவ்வித மனகசப்பும் இன்றி ராகவியிடம் தம்பிக்கு உங்க சைட்ல பொண்ணு இருக்குன்னு சொன்னாங்கலமா, அவங்களிடம் படிப்பு முடியா சரவணன் உலகளவுல பூக்கள் ஏற்றுமதி நிறுவனம் ஆரம்பிச்சி, பிஸினஸ்ல காலடி எடுத்து வைக்கவும் கல்யாண பேச்சு பேச வருவதா சொல்லிடும்மா” என்றார் முத்து.

சாருலதாவோ கணவரை இமைக்க மறந்து அளவெடுத்தார்.

போன்‌பேசி முடித்து முத்து வேலன் மனைவியிடம் “என்ன என்னையே பார்க்குற?” என்று மீசையை நீவி விட்டபடி வந்தார்‌.

“இல்லைங்க எங்கண்ணா வந்து என்னை பத்தி சொல்லி கட்டிக்க கேட்டப்பவும் நிதானமா கட்டிக்கிட்டிங்க. இப்ப அண்ணன் மக நம்ம வீட்டுக்கு எதிர்பார்த்திருந்தோம். சட்டுனு துளிர் காதலிக்கறான்னு அண்ணா வீட்டுக்கு வந்து, சொன்னது, நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க முத்து. என் நண்பன் நீதிபதி வித்யுத் பையன் விதார்த்.

வீட்டுக்கு வரச்சொல்லிட்டேன் நாளைக்கு நீயும் வந்துடுனு அண்ணன் சொல்லுச்சு. போதாதக்குறைக்கு சரவணன் பிரெண்ட் என்று தெரிய, உங்க ஆசையை விடுத்து போனோம்.

என்னை கட்டிக்கிட்டப்பவும் முத்தா மிளிர்ந்திங்க.
இப்பவும் அதோட ஒளிகுறையாம வீசறிங்க” என்று பாராட்ட, “பையன் மனசுல ஆசையில்லை‌. அப்பறம் என்ன சாரு. அதோட துளிர் மனசுல அந்த விதார்த் இருக்கானே. நம்ம அடுத்து ஆக வேண்டியதை பார்க்கணும்ல.

நிபுணன் கூட ஒன்னாக்கொன்னா இருந்தது நான், பரதன், சுமன்.

பரதன் அவன் பொண்ணு ப்ரீத்திக்கு நம்ம நிலவனை கல்யாணம் முடிச்சிட்டான்‌.

இதோ இப்ப அவன் பொண்ணு முழுகாம இருக்கா. நம்ம சுமன் அவனோட மகளை இந்தா இருக்கற குமரில மீனவர்களுக்கு உதவி செய்யற சுதர்சனனுக்கு கட்டி கொடீத்திருக்கான்.‌ பையன் விக்ரமுக்கு இரண்டு வருஷம் படிப்பு கிடக்கு. என் பிரெண்ட் நிபுணன் பெரியவன் ஆர்யனுக்கு கல்யாணம் பண்ணிட்டான். துளிருக்கும் நல்ல இடமா அமைஞ்சிடுச்சு.

அடுத்து நம்ம பிள்ளை தானே சர்வேஷை விட பெரியவன்.

துளிர் வாழப்போற இடத்துல நம்ம சர்வேஷை பார்க்கற பார்வையே என்னவோ வேறுவிதமா தெரியுதுன்னு உங்கண்ணன் சொன்னாரே அதை கேட்டும் நம்ம பையனுக்கும் ஒரு துணையை கட்டி வைக்காம இருக்க முடியுமா.

சரவணன் இருக்க சர்வேஷுக்கு தயங்குவான்ல. என்‌ பிரெண்ட் நிபுணனுக்கு அந்த கஷ்டம் தேவையா? ராகவி வீட்ல ஏற்கனவை சரவணனை பத்தி கேட்டது தானே. இப்ப நாம தலையசைத்தா நாளைப்பின்ன வரிசையா கல்யாணத்தை வச்சமா, வந்தவங்களை வரவேற்றமானு இருப்போம்” என்று உரைத்தார்.

சாருவிற்கு முத்து வேலனின் நல்லமனம் கூறியதில் “சரவணாவுக்கு அர்ச்சனாவை பிடிக்குமாங்க” என்று கேட்க, “அர்ச்சனாவா? அம்மா… பல்லுல க்ளிப் போட்டு ஸ்பெக்ஸ் போட்டிருப்பாளே அவளா?” என்று ஒளிந்து இருந்தவன் முன்வந்து கேட்டான்.

“வாடா நான்‌பெத்த மகனே” என்று முத்து சிரிக்க, “டேய் அந்த க்ளிப் கண்ணாடி இப்ப இல்லை டா. ஆளே அல்ட்ரா மாடர்னா மாறியிருக்கா. போட்டோ வேண்டுமின்னா உங்க அக்கா கிட்ட கேட்டு தர்றேன் பாரு” என்றார் சாருலதா.

“உனக்கு பிடிச்சா எனக்கும் பிடிக்கும்மா.‌” என்று கொஞ்சியவன் மாமன் மகள் துளிரிடம் தோன்றாத மயக்கம் அர்ச்சனா என்ற பெயரில் கிடைத்தாக வெட்கம் கொண்டான்.


இங்கே வெட்கப்பட வேண்டிய முதல்வர் அரவிந்தின் கட்சியாள் பந்தாவாக, தான் தன்னோடு சகபாலின பெண்ணிடம் நடந்த அசிங்கத்தை மறந்து தொகுதியில் நிற்க பெயரை கொடீத்தார்.

அதே நேரம் நிபுணனும் தன் மருமகள் சிற்பிகாவுக்கு துணையாக வந்தார். அரசியலில் போட்டியிட சுயேட்சையாக பெயர் பதிவிட வந்த சிற்பிகாவை மற்றவர்கள் ஏளனமாய் காண அதை கருத்தில் ஏற்றிக்கொள்ளாமல் மலர்ந்த பூவாய் கையெழுத்திட்டார்‌.

'என்ன நிபுணன் அண்ணே, சி.எம் பொண்ணு உங்க பையனோட சுத்தறது தெரிந்தும் எங்களுகாகு எதிரா சுயேட்சையாக நிற்கறிங்க. ஒரீ ஓட்டுக்கு விலை தெரியுமா? தப்போ சரியோ நாங்க தான் லீடிங்ல வருவோம். எதுக்கு இந்த போட்டி. எப்பவும் போல ஊர் பஞ்சாயத்தை மட்டும் பார்க்கலாம்னு. இதுல மருமக வேற. மருமகளோட நீங்களே போங்கன்னு உங்க பையனே அனுப்பிட்டாரா" என்று அசிங்கமாய் ஆரம்பித்தான் அந்த ஆசாமி. 

 நிபுணனோ பெயர் கொடுக்க வந்ததை கருத்தில் ஏற்றி அமைதிகாத்து, எவ்வித இடையூறின்றி, எதிராளியை கண்டு வாதிடாமல் நகர்ந்தார். 

சிற்பிகாவோ “அப்பா நாமினேஷன் பண்ணிட்டேன். போகலாம்” என்று வரவும், பெறாத பிள்ளையாக சிற்பிகாவை வழிநடத்தி கூட வந்தார்.

இந்த முறையும் “குட்டி நல்லா தான் இருக்கா. நம்மூர் பொம்பளைங்க சேலை உடுத்தி வந்தாலே ரசிக்கலாம். நம்ம தலைவனோட சொந்தம் தானே. நாளையபின்ன உடன்படிக்கை வந்தா நல்லா தான் இருக்கும்” என்று கூற, நிபுணன் பொறுமை காற்றில் பறந்தது‌.

வேஷ்டி மடித்து திரும்பி அவன் பக்கம் செல்ல, "அப்பா ப்ளீஸ் போகலாம்." என்று சிற்பிகா தடுத்தாள். 

ஆனாலும் நிபுணனோ 'இரு' என்பதாக கையை காட்டிவிட்டு வந்தார்.‌

"இந்த தொகுதிக்கு நானா ஏன் நிற்கமுடியலை தெரியுமா? என் மேல கொலை கேஸுயிருக்கு.

எங்க வீட்டு பொண்ணா நினைச்சவங்களுக்கா, ஒருத்தன் வம்பு பண்ணியதுக்கு அவன் தலையை பதினெழு வயசுல துண்ட வெட்டி இருக்கேன். அதுக்காக நான் ஏழு வருஷம் சிறைசாலையில் தண்டனை அனுபவித்து இருக்கேன்‌‌.

யாரோ ஒருத்தவங்கள எங்க வீட்டுக்கு பொண்ணா நினைச்சதுக்கே அந்த முடிவு கொடுத்தேன். கண்ணா இது எங்க வீட்டுக்கு வாழ வந்த மகாலட்சுமி. என் மூத்த பையனோட சம்சாரம்‌. தேவையில்லாம பேசினா மூச்சுவிட உசிர் இருக்காது.
தலைவன் இருக்கற திமிருல தொண்டன் ஆடாவே கூடாது. ஏன்னா உன் தலைவனுக்கு எதிரா தான் என்‌ மகளை நிற்க வைக்கிறேன். பேசறதுக்கு முன்ன யாரு என்னனு விசாரிச்சுக்கோ. உன் தலைவன் இருக்கறது சென்னையில, இது திருநெல்வேவிக கண்ணா.. புரியுதா?” என்று கன்னம் தட்டி பேசியவனுக்கே அதிர்வை கொடுத்து சென்றார் நிபுணன்.

கட்சி சார்பில் போட்டியிட வந்த தலைவன் அருகேயிருந்த தொண்டனோ, “தலைவரே நம்ம பெரிய தலைவரோட பொண்ணு இவரோட இரண்டாவது பையனை விரும்புது. கட்டிக் கொடுக்க பேச்சு எல்லாம் நடந்தது. முதல்ல போட்டிக்கு பெயரை கொடுங்க.” என்று இழுத்து செல்லவும் நிபுணன் காரையே வெறித்து புறப்படவும் நகர்ந்தான் அவ்வூரில் சிற்பிகாவுக்கு எதிராக நிற்கும் ஞானவேல்‌.

-தொடரும்
பிரவீணா தங்கராஜ்

29 thoughts on “என் நேச அதிபதியே -50”

    1. போச்சு…! அப்ப திரும்பவும் சிற்பிகாவுக்கு ஏதோ வில்லங்கம் வரும் போலவே.

  1. ஆஹா…கல்யாண வேலையோட…. அரசியல் வேலையும் நடக்குதே….nice..nice…

  2. ரொம்ப அழகான கதை பயணம் மருமகளே மகளாக பார்க்கும் மாமனார் ரொம்ப அழகாக இருந்தது நிபுணன் தான் இதிலேயும் கதாநாயகனாக இருக்கிறார் ஆர்யனை விட நிபுணன் தான் மாஸ் எல்லோருக்கும் ஜோடி போடுவதே பார்த்தால் கதை முடிய போகுதோ என்று தான் வருத்தமாக உள்ளது மா வாழ்த்துகள்

    1. Praveena Thangaraj

      60 அத்தியாயம் கொடுத்து விட முடிவு பண்ணியிருக்கிறேன். பிரதிலிபில ஓரிரு நாளில் பதிவு வரலாம் அம்மா.

  3. Interesting pothu namma nobuna story paravala vitharth promise kapathu. Namma nibuna kitta yarum vachika mudiyathu sonnathuke evlo bayama ithula nee overa pesura sirpika jeipa paru

  4. Sema sis spruuuu….. Nibu always mass😍😍😍😍😍 50 ud la ye mudinjidum sonninga 60ah spr💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌

  5. கொஞ்ச நேரத்துல பழைய நிபுணனை கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டீங்களே 😍😍😍எவ்வளவு கெத்து 🫰🫰🫰
    அந்த ஞானவேலுக்கு நேரம் சரியில்ல போல ஒரு உதை நிபுணன் கிட்ட வாங்கிட்டானா அத்தோட வாய மூடிட்டுகுவான்

  6. Nipu is back 🔥🔥🔥 par ivlo nal aa kudumbam paiyan poonu life nu irruntha yanga nipu paliya action athiradi nipu va mari nikkaratha par 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    Magan kuda varama mamanar kuda vanthathukku paysunavangalukku appa nu oru varthai la pathiadi kudutha sirpi 👏👏👏

    Yanga Muthu epavum panbu maratha gunam kondavan thaan charu 😍🥰❤️

    Macha thaiyavu vaynum appa soldratha kayttuka vidhu 😂

  7. Wow semma Mass👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!