Skip to content
Home » புன்னகை 48

புன்னகை 48

“தேவா கட்டிலில் உட்கார்ந்தவுடன் வரு வேகமாக அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்  தேவா அவளை ஒரு பக்கமாக அணைத்துக்கொண்டு அவளது தலையை வருடி விட்டான்”..” அவள் தன் கண்ணில் துளிர்த்த ஒரு சில  நீர் துளிகளை கண்ணை மூடி அவனது தோளில் சிந்தினாள்  தேவா அவளை நிமிர்த்தி விட்டு அவளை தன்னை பார்க்குமாறு செய்துவிட்டு ஒன்றுமில்லை என்று அவளது கண்ணீரை துடைத்து விட்டான்”..”எதுவாக இருந்தாலும் சொல் என்ன ஆயிற்று இப்பொழுது நான் என்ன செய்தேன் எனக்கு புரியவில்லை .உண்மையாகவே புரியவில்லை டி என்ன தவறு செய்தேன் என்றும் தெரியவில்லை” என்றான் ..”நீங்கள் தவறு செய்தீர்கள் என்று நான் சொல்லவில்லையே என்றாள் என்ன தான் உனக்கு என் மீது கோபம் என்று கேட்டான் எனக்கு எந்த கோபமும் இல்லை என்றாள் அவளது கையில் அழுத்தம் கொடுத்து என்னை பாரு டி “என்றான் ..”அவனை  பார்க்கும் போது அவளது கண்கள் கலங்கி இருந்தது எனக்கு உன்னை இப்படி  பார்க்க கஷ்டமாக இருக்கிறது டி நானே உன்னை பல நாள் அழ வைத்து இருக்கிறேன் தான் ஆனால் இன்று என்னால் உன்னை இப்படி பார்க்க முடியவில்லை” என்றான்…”நீங்கள் இப்படி இருப்பதும் எனக்கு அப்படித்தான் இருக்கிறது என்றாள் புரியவில்லையே என்றான் நீங்கள் என்னை எந்த விதத்தில் புரிந்து இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும்” என்றாள் இப்பொழுது “நான் பாத்திரம் விளக்கி விட்டு வந்தது தான் உனக்கு பிரச்சனையா என்றான். நீங்கள் பாத்திரம் விளக்கியது எனக்கு பிரச்சனையா? இல்லை இந்த நேரத்தில் விளக்கியது எனக்கு பிரச்சனையா?”என்று கேட்டாள்..”அவள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவுடன் சரி டி நீ சொல்லியும் நான் இந்த நேரத்தில் பாத்திரம் விளக்கி வைத்து  விட்டு வந்தேன் சரியா அதனால் என்ன பிரச்சனை எனக்கு எதுவும் புரியவில்லை” என்றான் ..”மணி இப்போது என்ன என்று கேட்டாள்  இப்போது மணி 12 இந்த நேரத்தில் தூங்கி எப்படி எழுந்து கொள்வீர்கள் தினமும் இந்த நேரத்திற்கு தூங்கினாள் எப்படி காலையிலும் சிக்கிரம் எழுந்து கொள்வீர்கள் அதனால் தானே இப்போது வேண்டாம் என்றேன் .”நான் எதுவும் தவறாக சொல்லவில்லையே காலையில் கழுவிக் கொள்ளலாம் என்று மட்டும் தான் சொன்னேன் சரியா .அதற்காக உங்களை வேலை செய்ய விட்டு வேடிக்கையும் பார்க்க மாட்டேன்” ..”அதற்காக அனைத்து வேலைகளையும் நான் எடுத்துப் போட்டு செய்வேன் என்றும் சொல்லவில்லை யாருக்காகவும் நான் என்னுடைய குணநலன்களை மாற்றிக் கொள்ள மாட்டேன்” அதுக்காக உங்களையும் நான் எனக்காக மாற்றிக் கொள்ள சொல்லவில்லை..”நான் சொன்னது மணி 12 ஆகிவிட்டது என்பதால் இந்த நேரத்தில் வேண்டாம் என்று மட்டும் தான் சொன்னேன் நேரத்திலே அனைத்து வேலைகளையும் முடித்தால் நான் எதுவும் சொல்லப்போவதில்லை என்றாள் ..”நான் ஆபீஸில் இருந்து இரவு வருவதற்கு எட்டு மணி ஆகிவிடும் அதன் பிறகு தான் நான் தினமும் இரவு சமைப்பேன் அதன் பிறகு என்றான்  நான் இதுவரை நடந்ததை பற்றி பேசவில்லை நான் இப்பொழுது இந்த நிமிடம் அதை  பற்றி மட்டும் தான்  பேசுக்கிறேன்” ..”நீங்கள் இதற்கு முன்பு நடந்ததை பற்றி பேசினால் இது வேற மாதிரி தெரியும் என்றான் அவனுக்குமே அது புரிந்து இருந்தது.  அவளுக்குமே இதை மேற்கொண்டு பேச விருப்பம் இல்லாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்”..”சரி  ஒன்றுமில்லை நேரம் ஆகிறது படுங்கள் என்று விட்டு படுத்தாள் அவன் படுத்தவுடன் அவனது நெஞ்சில் அவளாகவே இன்று அவளது தலையை சாய்த்தாள் அவனும் அவளை கட்டிக்கொண்டு அசதியில் உறங்கி இருந்தான்”..”அவன் தூங்கிய பிறகு இனி உனக்கு நான் இருக்கிறேன் தேவ்  என்று அவனது நெற்றியில் இதழ் பதித்து விட்டு அவனை கட்டி அணைத்துக் கொண்டு தூங்கினாள் “மறுநாள்  நன்றாக பொழுது புலர்ந்தது ..எப்பொழுதும் போல் தேவா எழுந்து ஒவ்வொரு வேலையாக செய்ய ஆரம்பித்தான் அரசியும் அமைதியாக இருந்தார் வரு  காய்கறிகளை எடுத்து கொண்டு வந்து வைத்தாள் ..எளிதாக அவர் தண்ணீரில் கை வைக்க மாட்டார் . துணி துவைப்பதற்கு வாஷிங் மெஷின் இருப்பதால் பெரிதாக எதுவும் வேலைகள் இருப்பதில்லை பாத்திரம் காலையில் இரவு வேளையில் தேவாவே கழுவி வைத்து விடுவான்…நடுவில் அரசிக்கு உடல்நிலை சரியில்லாத போது தான் அவருக்கு வீசிங் பிரபலம் இருப்பது தெரிய வந்தது தண்ணீரில் கை வைப்பது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க சொல்லி இருந்தான் தேவா.அவருக்கு நிறைய விஷயங்கள் ஒத்துக்கொள்ளாமல் போவதால் தேவா ஒரே வார்த்தையாக தீரனிடன் அரசி தண்ணிரில் தேவையில்லாமல் கை வைக்க கூடாது என்று சொல்லி இருக்கிறான் அதனால் அரசி அப்போதும் ஒன்று இரண்டு  வாரங்கள் பாத்திரம் கழுவி வைத்திருப்பார் ..அவன் வேலைக்குச் சென்ற பிறகு அப்போதிலும் அவர் உடல்நிலை சரியில்லாமல் லேசாக சளி பிடித்தது. சளி அதிகமாக பிடித்து அவருக்கு வீசிங் பிரபலம் வரலாம் என்று யோசித்தான்..அது அவருக்கு நார்மலா சளியாக கூட இருந்திருக்கலாம் ஆனால் தேவாவிற்கு பயம் இருந்ததால் தீரனிடம் இனி அவர் எந்த வேலையும் செய்யக்கூடாது என்றான் தீரனுமே சிறிது யோசனைக்கு பிறகு சரி என்றார் . அதனால் தான் அரசி இப்போதெல்லாம்   பாத்திரம் கழுவுவது இல்லை தீரனுமே ஏன் வீட்டில் தானே இருகிறாய்? கழுவா மாட்டாயா ?என்றெல்லாம் கேட்க மாட்டார் .அவருக்கு நேரம் இருந்தால் அவர் கழுவி வைப்பார் ..அவள் காய்கறிகளை எடுத்துக் கொண்டு வந்து காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். அரசி துணி மடித்து வைத்துக் கொண்டு இருந்தார் . ஆது பள்ளி சென்ற பிறகு  வரு வீட்டை மொத்தமாக கூட்டி பெறுக்கினாள்..பிறகு” அனைத்து துணிகளையும் வாஷிங் மிஷினில் போட்டுவிட்டு அவளது அறைக்கு குளிக்க சென்று இருந்தால் அவள் சென்று பத்து நிமிடங்களில் தேவாவும் குளிக்க  அறைக்குள் வந்தான் வரு அவனை அமைதியாக பார்த்து விட்டு குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தாள்”..”தேவா  அவளது கையை பிடித்து அவளது கண்ணை நேருக்கு நேராக பார்க்க வைத்தான் வருவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது என்ன என்று கேட்டாள் ஒன்றுமில்லை என்று விட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்து விட்டு குளியல் அறைக்குள் புகுந்தான்”..பிறகு “அவனும் குளித்துவிட்டு வந்த பிறகு நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவு ஒன்பது மணி போல் சாப்பிட்டார்கள் பிறகு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்று வருவே  விலக்கி வைத்து விட்டு வந்தாள்”..தீரன் தான் இருவரும் வாசு வீட்டிற்கு கிளம்புங்கள் சரியாக இருக்கும் என்றார் வரு தான் இல்லை மாமா கொஞ்ச நேரம் ஆகட்டும் இப்போது தானே சாப்பிட்டோம் 11 மணி போல் கிளம்பி கொள்கிறோம் என்றாள் இப்போதே மணி 9:40 என்றார் ..”இருக்கட்டும் மாமா சீக்கிரம் கிளம்பி விடுவேன் என்றாள் வரு தான் அத்தை என்றாள் என்ன டி என்று அவர் கேட்டவுடன் சேரி கட்டிக் கொள்ள வேண்டுமா ?என்று  கேட்டாள்.அவர் வேண்டாம் என்பது போல் தலையாட்டியவுடன் சரி என்று விட்டு வரு அங்கே உட்காந்து இருவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்”..எனக்கு கொஞ்சம் வெளியே வேலை இருக்கிறது சென்று வருகிறேன் என்றார் தீரன். அப்பா இப்போது என்ன வேலை கணக்கு வழக்கு மட்டும் தானே பார்க்க சொல்லி இருக்கிறேன் இப்பொழுது கடைக்கு எதற்கு செல்கிறீர்கள் என்று கேட்டான்..அவன் அவ்வாறு கேட்டதற்கு இல்லடா கல்யாண கணக்கு வழக்குகள் எல்லாம் கொஞ்சம் பார்க்க வேண்டியிருக்கிறது நான் கடைக்கு செல்லவில்லை என்றார் மாமா இப்பொழுது அவசியமாக செல்ல வேண்டுமா என்று கேட்டால் ஏன் மா என்று கேட்டதற்கு கொஞ்சம் பேச வேண்டும் என்றாள் ..என்ன மா என்று கேட்டதற்கு எனக்கு வீட்டில் இருப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்றாள் அப்போது இருவரும் ஹனிமூன் சென்று விட்டு வாருங்கள் என்றார். வரு தேவாவை பார்த்துவிட்டு இல்லை மாமா நான் அதைப் பற்றி பேசவில்லை..நாளையிலிருந்து அலுவலகம் செல்லலாம் என்று இருக்கிறேன் வீட்டில் இருப்பதற்கு ஒரு மாதிரியாக இருக்கிறது இப்பொழுது ஹனிமூன் வேண்டாமே என்றாள் இப்பொழுது தானமாக திருமணம் ஆகி இருக்கிறது என்றார்..இல்லை மாமா என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டிற்கு நான் உள்ளே வரலாமா? என்று குரல் கொடுத்துக் கொண்டே தேவாவின் எம்டி வந்தார் அனைவரும் தேவாவின் எம்டி யை பார்த்துவிட்டு வீட்டிற்குள் வரவேற்றார்கள் ..”தேவா தான் வாங்க அப்பா என்று அவரின் அருகில் சென்று அவரை அழைத்து கொண்டு வந்தான்  அவரும் தேவாவின் தோளில் கை போட்டுக் கொண்டே என்ன டா புது மாப்பிள்ளை எப்படி இருக்க என்ன சொல்றா என் மருமக என்று கேட்டுக் கொண்டே வந்தார் “..வாங்க சார் என்று வரு அழைத்துவிட்டு சமையலறைக்குள் புகுந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அவருக்கு கொடுத்தாள் அவரும் வாங்கி குடித்துவிட்டு” அடாவடியாக , அரந்தவாளாக இருந்த எனது  மருமகளை எனது மகன் வீட்டு மருமகளாக மாற்றி விட்டானா ?..””குடும்ப இந்த வீட்டுக்கு நல்ல மருமகளாக  மாறி வேலை செய்ற போல என்றார்  சிரித்த முகமாக அவளும் அவரைப் பார்த்து சிரித்து விட்டு இது சாதாரணமா நான் என் வீட்டில் இருக்கும்போது இன்று விட்டு நாக்கை கடித்துக் கொண்டு அம்மா வீட்டில் இருக்கும் போதே செய்வேன்” சார்.”பழக்க தோஷம் அவ்வளவுதான் மற்றபடி பெரிதாக எல்லாம் எந்த வேலையும் நான் செய்ய மாட்டேன் நான் இங்கு வந்த பிறகு என்னை மாற்றிக் கொள்ளவும் இல்லை இங்கு இருப்பவர்களும் என்னை மாற்றிக்கொள்ள சொல்லவும் இல்லை.”.”நான் நானாக தான் இருக்கிறேன்” என்றாள் . சரி மா இந்த சார் என்பதை நிறுத்தி கொள்ளலாமே  .நாம் இப்போ வீட்ல தானே இருக்கிறோம் அவனுக்கு அப்பானா உனக்கு மாமா தானே மாமா என்று கூப்பிடலாமே என்றார் “உடனே மாற்றிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தானே போகப்போக மாற்றிக் கொள்கிறேன் என்று லேசாக சிரித்தாள். அவரும் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு அமைதியாக இருந்தார்..பிறகு “அனைவருக்கும் அவர் இப்பொழுது வந்த காரணம் தெரியாது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் தேவா தான் அப்பா என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான் “..டேய் நான் இப்பொழுதுதான் காலை உணவு முடித்துக் கொண்டு வந்தேன் எனக்கு சாப்பாடு எல்லாம் வேண்டாம் எனது மருமகள் நீர் கொடுத்ததே போதும் என்றார் சாப்பிடாமல் எப்படி என்றான் உண்மையாகவே சாப்பிட்டு விட்டு தான் வந்தேன் வா என்று அவனை அருகில் உட்கார வைத்து வருவையும் அருகில் அழைத்தார்..” அவள் வந்து நின்றவுடன் நீயும் உட்காரு மா என்று அவரது இந்த பக்கம் உட்கார வைத்துக் கொண்டார் இருவரும் அமைதியாக எம்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஒரு முக்கியமான விஷயம் பேசுவதற்காக தான் வந்தேன் என்று விட்டு தீரன் அரசி இருவரையும் பார்த்தார்”..” நால்வரும் கேள்வியாக எம்டியை பார்த்துக் கொண்டிருந்தார்கள் இப்பொழுது தேவாவின் எம்டி எதற்காக தேவா வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று நால்வருக்கும் தெரியவில்லை சாதாரணமாக வந்திருந்தால் பரவாயில்லை ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று தான் வந்திருக்கிறேன் என்றவுடன் இவர் என்ன பேசுவதற்காக வந்திருக்கிறார் என்று யோசித்தார்கள்”..தேவாவின் எம்டி நடேசன் இப்பொழுது என்ன பேசுவதற்காக தேவாவின் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..அன்புடன்தனிமையின்  காதலி

4 thoughts on “புன்னகை 48”

  1. CRVS2797

    ஒருவேளை ஹனிமூனுக்கு போக அரேஞ்ஜ்மென்ட் ஏதாவது பண்ணி இருப்பாரோ…? இல்லைன்னா, ஜாப்ல வேறெதாவது ஹை பொஷிஸன் கொடுக்க நினைக்கிறாரோ என்னவோ..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *