தேவா குளித்துவிட்டு நார்மலாக வீட்டில் அணியும் ஆடையை அணிந்து கொண்டு குளியல் அறையில் இருந்து வெளியில் வந்தான் என்ன டி புடவை கட்டாமல் இருக்கிறாய் என்று கேட்டான்..
” நீங்கள் குளித்துவிட்டு வெளியில் சென்றால் தான் கட்ட முடியும் என்று சிரித்தாள் .அன்று மட்டும் நான் இருக்கும் பொழுது புடவையை அவிழ்க்க முடிந்ததோ “என்றான் ..
“திரும்பத் திரும்ப அதையே பேசாதீர்கள் நேரமாகிறது என்றாள் லேசாக வெட்கப்பட்டு கொண்டே தேவா அவளது வெட்கத்தை ஒரு சில நிமிடம் ரசித்து விட்டு சரி சீக்கிரம் வா நேரமாகிறது என்று விட்டு வெளியில் சென்றான்” ..
அடுத்த கால் மணி நேரத்தில் வருவும் அழகாக நேர்த்தியாக ஒரு புது புடவையை கட்டிக்கொண்டு வெளியில் வந்தாள். “அவள் புடவை கட்டிக்கொண்டு அவளது அறையில் இருந்து கதவை திறந்தவுடன் ஆது,தேவா இருவரும் ஆர்வமாக அறையை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் “..
அரசி தான் இருவரையும் பார்த்துவிட்டு அறையைப் பார்த்தார். அங்கு ,வரு வந்து நின்று கோலத்தை பார்த்து விட்டு அரசி அமைதியாக இருந்தார் . ஆது தான் சூப்பர் அண்ணி என்றான் ..
“தேவா கண் எடுக்காமல் வருவையே பார்த்துக் கொண்டே இருந்தான் அவள் பெரிதாக எந்த மேக்கப் இல்லை வேற எதுவும் செய்யவில்லை. புடவை மட்டும் புதிது அந்த புடவை கூட தேவா இவளுக்காக என்று வாங்கிய புடவை அதை இதுவரை அவளிடம் எல்லாம் அவன் கொடுக்கவில்லை “..
“அவளுடைய துணி இருக்கும் இடத்தில் வைத்திருந்தான். அதுதான் இப்பொழுது எடுத்து கட்டிக் கொண்டு வந்திருந்தாள் பிளவுஸ் கூட நேர்த்தியாக இருந்தது “..
“எப்பொழுதும் போல் நெற்றியில் சிறியதாக ஒரு ஸ்டிக்கர் பொட்டும் ,நெற்றி வகிட்டில் லேசாக தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை பறைசாற்றும் வகையில் குங்குமமும் ,காதில் எப்பொழுதும் அணியும் சிறியதாக மயில் போட்ட ஒரு தோடும் ,கழுத்தில் நிச்சயதார்த்தத்தின் போது DV என்று தேவா வீட்டில் போட்ட சிறிய செயினும் அதைத் தவிர கழுத்தில் வரு தேவாவிற்க்கு உரிமையானவள் என்று மூன்று முடிச்சிட்ட மஞ்சள் கயிறு”..
” ஒரு கையில் வாச்சும் ,மற்றொரு கையில் சிறியதாக ஒரு பிரேஸ்லெட்டும் , காலில் வெள்ளி கொலுசும் திருமணத்திற்காக கொலுசு எடுக்க சென்ற பொழுதே அதிக முத்து வச்ச கொலுசு போட சொல்லி அவளுடைய அம்மா கூறியதற்கு கூட நான் என்ன தினம்முமா போட்டுக் கொண்டு சுற்றுப் போகிறேன் “.
“இப்பொழுது திருமணத்திற்கு மட்டும் தானே அது தேவையில்லை என்று சொல்லி சிம்பிளாக அவளுக்கு பிடித்தது போல் எடுத்து கொண்டாள். அந்த கொலுசும் ,கீழே இருபக்க கட்டை விரலுக்கு அடுத்து விரலில் தேவா ஆசைப்பட்டு எடுத்த மூன்று முத்துக்கள் வைத்து மெட்டியும் அணிந்திருந்தாள்”..
” மற்றபடி அவளது உடலில் வேறு எந்த அலங்காரமோ ,அணிகலன்களோ இல்லை. எப்பொழுதும் ,போல் தான் இருந்தால். அவள் அலுவலகத்திற்கு தினமும் செல்வதும் இப்படியே தான்.என்ன தினமும் சுடிதாரில் செல்பவள் இன்று புடவையில் இருக்கிறாள்”
“. ஆனால் இந்த எளிமையான தோற்றத்திலே தேவாவிற்கு அவள் தேவதை போல் தான் தெரிந்தாள் .அவள் தேவாவின் அருகில் வந்து தேவா நேரம் ஆகிறது .நீங்கள் போய் வேறு ஒரு உடை மாற்றிக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பினாள் . தேவாவும் ஒரு நிமிடம் அவளைப் பார்த்துவிட்டு சுற்றி தன் அப்பா ,அம்மா ,தம்பி இருப்பதை உணர்ந்து விட்டு எதும் பேசாமல் அவனது அறைக்குச் சென்று வேஷ்டி சட்டை மாற்றிக்கொண்டு வந்தான் “..
“வரு கட்டி இருந்த புடவையின் கலரில் தான். அவனும் உடை மாற்றிக் கொண்டு வந்தான் .வருவுமே தேவா தன்னை ரசித்தது போல் தேவாவை ரசிக்க செய்தாள் .அவன் தலை குளித்ததற்கு ஏற்ப அவனுக்கு அடங்காமல் ஆடி கொண்டிருக்கும் முடியை கோதிக் கொண்டே வந்தான்”..
” நெற்றியில் சிறியதாக சந்தன கீற்று , கழுத்தில் நிச்சயத்தின் போது வரு வீட்டில் போட்ட சிறிய செயின் ,மற்றபடி அவனுடைய ஒரு கையில் வாட்ச் இன்னொரு கையில் சிறிய கயிறு கட்டி இருந்தான் “.
“என்ன அவனுடைய ஒரு கை வேஷ்டியின் நுனியையும் ,மற்றொரு கை அவனது தலையை கோதிக் கொண்டும் இருந்தது அதை ரசித்துக் கொண்டு வரு நின்றாள். ஆது தான் விசில் அடித்தான் என்னடா என்று தேவா அருகில் வந்து கேட்டான் “..
” ஆது வருவை பார்த்து சிரித்து விட்டு ஒன்றுமில்லை என்றான். அவன் விசில் அடித்தவுடன் வருவும் தான் ரசிப்பதை நிறுத்தி விட்டாள். பிறகு ,அண்ணா உங்க போன் கொடுங்க என்றான் . “
“ஏன் டா என்று கேட்டதற்கு கொடுங்களேன் என்று அவனது சட்டை பாக்கெட்டில் இருக்கும் போனை எடுத்து இருவரும் ஒன்றாக நில்லுங்கள் என்று வருவை தேவாவின் பக்கம் தள்ளி விட்டான். டேய் ஏன் டா நேரமாகிறது என்றான் “..தேவா ..
“அண்ணா ஒரு நிமிடம் செம்மையா இருக்கீங்க ரெண்டு பேரும் .ஒரே கலர்ல டிரஸ் வேற என்று கூறி இருவரையும் நிற்க வைத்து போட்டோ எடுத்தான் .தனது அண்ணனை இப்படி பார்ப்பதற்கு அவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது ஆசையாக இருந்தது “.
“இப்படி போடுங்கள் கையை இப்படி வையுங்கள் என்று இரண்டு மூன்று போட்டோக்கள் எடுத்தான். அப்பொழுது அரசி தான் அவரது போனை நீட்டினார் .தேவாவிற்கு ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது. ஆது அமைதியாக தனது தாயை பார்த்தான் “..
“சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றவுடன் வேகமாக தனது தாயின் போனை வாங்கிவிட்டு தனது அண்ணன் போனை அவரது சட்டை பாக்கெட்டில் வைத்துவிட்டு அதேபோல் இரண்டு மூன்று போட்டோக்களை எடுத்தான். பிறகு தீரன் எனக்கு டா என்றார் “..
“அப்பா உங்களுக்கு அம்மா போன்ல இருந்து இல்லை, அண்ணன் போனில் இருந்தோ வாட்ஸப்பில் அனுப்பிக் கொள்ளலாம் நேரமாகிறது .நாம் கோவில் வேறு சென்று விட்டு செல்ல வேண்டும் என்றான்”..
சரி என்று விட்டு கால் டாக்ஸி புக் பண்ணலாம் என்று இருந்தான் .அப்பொழுது தீரன் தான் ஒன்றும் வேண்டாம் நீங்கள் இருவரும் உங்கள் பைக்கில் வாருங்கள் .நாங்கள் மூவரும் ஒன்றாக வருகிறோம் என்றார் .அப்பா மூன்று பேரும் எப்படி வருவீர்கள்..
ஆது பள்ளிக்கு வேறு செல்ல வேண்டும் என்றான்.அப்பொழுது வரு தான் அவர்கள் மூவரும் ஒரே வண்டியில் வரட்டும் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆது அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு வருவான். அவன் பள்ளிக்கு சுவாதி உடன் சென்று விடுவான்…
சுவாதி நம்முடனே அவளும் அலுவலகம் வந்துவிடுவாள் .அப்பொழுது ,ஆதுவை பள்ளியில் விட்டு விடுவாள் என்றாள் .தேவா ஒரு நிமிடம் வருவைப் பார்த்துவிட்டு சரி என்று விட்டு அமைதியாக இருந்தான் .
பிறகு , தேவா அவனது வண்டி சாவியை எடுத்துக் கொண்டே கீழே இறங்கினான். பிறகு வரு, தேவாவும் ஒரு வண்டியிலும் ஆது ஓட்ட தீரனின் வண்டியில் ஆது தீரன் ,அரசி மூவரும் கிளம்பினார்கள் .அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்து கொண்டு சுவாதி வீட்டிற்குச் சென்றார்கள் ..
அவர்கள் சுவாதி வீட்டிற்கு சென்று இறங்கும் பொழுதே கலை மாணிக்கம் இருவரும் அங்கு தான் இருந்தார்கள் .பிறகு மலர் ,வசந்த் இருவரும் தேவா பெற்றவர்களையும் ,தம்பியும் வரவேற்றார்கள்.. பிறகு ,அனைவரும் வந்த பிறகு கலை ஏற்கனவே வந்த உடனே அக்கம் பக்கம் இருந்த ஒன்றிரண்டு வீடுகளில் சென்று இத்தனை மணி போல் ஐந்தாவது மாதம் சாதம் கொடுக்கிறோம் வந்த விட்டு செல்லுங்கள் என்று அழைத்து இருந்தார்”..
” அதற்கு ஏற்ப நேரம் ஆகியவுடன் தேவா, வசந்த் இருவரும் சேர் எடுத்து போட்டு அதன் மேல் சிறியதாக டவல் போல் போட்டுவிட்டு பிறகு ஒவ்வொரு தாம்பூல தட்டிலும் அனைத்து பொருட்களையும் வரு,கலை ,சுவாதி மூன்று பேரும் எடுத்து வைத்தார்கள்”..
” ஆதுவும் தானும் ஒவ்வொரு வேலையாக செய்தான் .பிறகு நேரமாவது உணர்ந்து திரும்பவும் ஒருமுறை கலையும் ,வருவும் சென்று அனைவரையும் அழைத்துவிட்டு வந்தவுடன் அக்கம்பக்கம் ஒரு நாலு வீடுகளில் இருந்து வந்தார்கள்”..
“நல்ல நேரத்தில் சந்தனம் வைத்து நலங்கு வைத்துவிட்டு வளையல் போட்டு விட்டார்கள். நிறையவே கலை சாதம் செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்ததால் அக்கம் பக்கம் இருப்பவர்களையும் உட்கார வைத்து அனைவருக்கும் சாதம் போட்டுவிட்டு மலருக்கும் ஊட்டி விட்டார்கள்”..
” அனைவரும் சாப்பிட்டு பிறகு அனைவருக்கும் சிறிதாக ஒரு தட்டும் அதில் இரண்டு வளையல் ,மஞ்சள் குங்குமம், பூ வைத்து கொடுத்து அனுப்பினார்கள் .அப்பொழுது வரு தான் ஆதுவிற்கு நேரமாவதை உணர்ந்து ஆது நேரம் ஆகிறது பார் தினமும் வழி செல்லும் நேரம் ஆகிவிட்டது சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு என்றாள்”..
“அண்ணி இரண்டு வேலையுமே இந்த சாதமே வா என்று கேட்டான். அப்பொழுது வசந்த் டேய் இரண்டு வேலையும் இதையே சாப்பிட்டால் எப்படி வேண்டாம் .நான் காலையில் உனக்கு தோசை உத்தி தருகிறேன். மதியத்திற்கு மட்டும் சாதமெடுத்துக் கொள் என்று விட்டு சமையல் அறைக்குள் புகுந்தான்”..
“வரு மாமா நான் செய்கிறேன் என்றாள் நீ இருக்கும் வேலையை பாரு என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு ஆதுவிற்கு ஒரு பொடி தோசையும் ,ஒரு ஆனியன் தோசையும் ஊற்றிக்கொண்டு எடுத்துக் கொண்டு வந்தான் “..
“வரு தான் அதை வாங்கி நேரமாவதை உணர்ந்து ஆதுவிற்கு ஊட்டி விட்டாள் .பிறகு சாப்பிட்டவுடன் அவனுக்கு வீட்டில் இருந்தே வரும் பொழுது மூன்று கேரியர் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள் “..
சிறியதாக மூன்று அடுக்கு கேரியர் எடுத்துக் கொண்டு வந்தாள். ஆதுவிற்கு மூன்று வகையான சாதத்தில் கொஞ்சம் கொஞ்சம் வைத்துவிட்டு இன்னொரு கேரியரில் அவனது நண்பர்களுக்கு என்று சொல்லி வைத்துவிட்டு இனியாவிடம் ஒன்று கொடுத்து விடு என்று மூன்று கேரியர்களையும் சிறிதாக ஒரு பேக்கில் போட்டுக் கொடுத்தாள் ..
அவனுக்கு அவனுடைய லஞ்ச் பேகிலும் வைத்தாள் .அப்பொழுது வசந்த் தான் நீங்கள் மூவருமே கிளம்புங்கள் உங்களுக்கும் நேரம் ஆகிறது பாருங்கள் என்றான்.சரி என்று விட்டு மற்ற மூவரும்க்குமே காலையில் இதுவே சாப்பிட்டால் சரியாக இருக்காது என்பதால் வசந்த் அனைவருக்குமே வீட்டில் இருப்பவர்களை விட்டுவிட்டு மற்ற மூன்று பேருக்கும் அலுவலகம் செல்வதால் தோசை ஊற்றி கொடுத்தான்..
அனைவரும் நேரமாவதை உணர்ந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பினார்கள். ஆது சுவாதிவை அழைத்துக் கொண்டாள் .”தேவா சுவாதி இடம் நான் வேண்டுமானால் ஆதுவை அழைத்துக் கொண்டு போகிறேன். நீ வருவை அழைத்துக் கொண்டு அலுவலகம் வந்து விடு சுவாதி என்றான் “..
ஆதுவும் ,சுவாதியும் தேவாவை முறைக்க செய்தார்கள். அரசி தான் அப்பொழுது டேய் ஆது நீ சுவாதி அக்கா கூட கிளம்பு நேரம் ஆகிறது பார் என்றார்.
“ஆது சிரித்துக்கொண்டே அண்ணா அதற்கு அண்ணி அவர்களுடைய வண்டியை தனியாக எடுத்துக்கொண்டு வந்திருப்பார்களே ,உங்களுடன் வர வேண்டிய அவசியமில்லை “என்றான் சிரிப்புடன் தேவா வருவைப் பார்த்தான்..
வரு முறைத்துக் கொண்டிருந்தவுடன் கிளம்புங்கள் நேரமாகிறது என்றான். சரி என்று விட்டு சுவாதி ஆதுவை அழைத்துக்கொண்டு அவனது பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகம் வந்துவிட்டாள். தேவா வருவை அழைத்து கொண்டு அலுவலகம் நோக்கி சென்றான் ..
“வரு தான் அவனை முறைத்து கொண்டே வந்தாள்.சரி டி தெரியாமல் சொல்லி விட்டேன். சுவாதிக்கு அலைச்சல் வேண்டாம் என்று எண்ணி என்றான் . ஆது சொன்னது தான் அதற்கு நான் என்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருக்க போகிறேன் “என்றாள் ..
“அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் என்று ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி கையெடுத்து கும்பிட்டு விட்டான். வரு சிரித்துக் கொண்டே நேரமாகிறது கிளம்புங்கள் என்றாள் .இருவரும் அலுவலகம் சென்ற பிறகு அவர்களது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் “..
அப்படியே அன்றைய காலை பொழுது முடிந்து மதிய வேளை வந்திருந்தது. “மதிய வேளையில் அலுவலகத்தில் இருக்கும் ஒரு சில பெண் தோழிகள் தான் வரு விடம் என்ன வரு இன்று புடவை கட்டி இருக்கிறாய் என்று கேட்டார்கள் “அப்பொழுது ,இன்னொரு பெண் ஒருத்தி நம்ம தேவா சார் பொண்டாட்டியை சைட் அடிக்க கட்டிட்டு வர சொல்லி இருப்பார் அதனால கட்டியிருக்கா போல என்று கூறி சிரித்தாள் வரு அனைவரையும் பார்த்து முறைத்தாள் “..
வரும் தன் அலுவலக நண்பர்களிடம் என்ன சொல்வார்கள்? என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம் ..
அன்புடன்
தனிமையின் காதலி
Nice
Interesting epi