Skip to content
Home » புன்னகை 61

புன்னகை 61

“அனைவரும் அரசியை இப்போது பார்த்தவுடன் அரசியின் பார்வை முழுவதாக வருவிடம் மட்டும்தான் இருந்தது “..

“அரசி வேகமாக எழுந்து வந்து  அவளது அருகில் வந்து அவளது நெற்றியில் இதழ் பதித்தார் “..

“தேவா அமைதியாக தனது தாயை வருவின் மடியில் இருந்து நிமிர்ந்து பார்த்தான் ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க அத்தை அது உங்க உடம்புக்கு நல்லது இல்லை என்றாள்”..

“அவரும் சிரித்த முகமாகவே நான் எமோஷனல் ஆகலடி இத்தனை வருஷமா இந்த வீட்ல தான் இருக்கேன் .ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் என்னோட மன வலியை  இங்க இருக்க யாருமே புரிந்து கொள்ளவில்லை”..

ஆனால் ,”நீ இந்த வீட்டுக்கு வந்து மூணு மாசம் தான் ஆகுது. என்னை ஒரு நாலு மாசம் உனக்கு தெரியுமா ?என்று கேட்டார்.தேவாவின் தலையை கோதிக் கொண்டிருந்த வருவின் கை அரசியின் கன்னத்தை பற்றியது “..

“அவரது கண்ணை உற்றுப் பார்த்து கொண்டே மாமாவுக்கும் , ஆதுவிற்கும் உங்க வலி புரியாமல் இல்லை அத்தை .உங்க வலி புரியாமல் இருந்தாங்க என்று நீங்க நினைச்சிருந்தீங்கன்னா அவங்க ரெண்டு பேரும் உங்கள விட்டு விலகி இருப்பாங்க”.

“நீங்க மறந்துறாதீங்க, நீங்க தேவாவை விட்டு விலகி இருக்கீங்கன்னு நெனச்சி தேவாவுக்கு துணையாக இருக்கணும்னு நினைச்சிட்டாங்க”..

“அவங்க தேவா மேல வச்ச பாசம் கண்ணை மறைத்துவிட்டது”.

“உன்னால் எங்கள் யாரையும் விட்டுத் தர முடியவில்லை தானே ?என்று கேட்டார்  அவள் சிரிக்க செய்தாள்”..

” அரசி சிரி டி என்றார். தீரன் வேகமாக அரசியின் அருகில் வந்து அவரது காலிலே விழ செய்தார். என்னங்க என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அரசி கத்தினர் “..

“கலை கூட அண்ணா என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார் வரு தான் ஒரு சில நொடிக்கு பிறகு மாமா எழுந்திருங்கள் இது நீங்கள் அத்தைக்கு தான் பாவத்தை சேர்க்க செய்கிறீர்கள் என்றாள்”..

” வேகமாக எழுந்து விட்டு வருவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் அவரது கையை கீழே இறக்கி விட்டு மாமா நீங்கள் ரொம்பவே உணர்ச்சி வசபடுகிறீர்கள்.”..

” நான் உங்கள் மீது முழு தவறும் சொல்ல மாட்டேன் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒவ்வொரு தவறு  செய்ய தான் செய்திருக்கிறீர்கள்”..

“அத்தை முழுமையாக தேவாவிடம் கோபம் கொண்டிருந்தாலும் ஏண்டா என்னை விட்டு விலகினாய் ?என்று அவரது சட்டையை பிடித்து கேட்டிருக்கலாம் “..

“,அடித்திருக்கலாம் அவர் அங்கு அடிக்காமல் இருப்பதற்கு காரணம் திரும்பவும் நீங்கள் அதே வார்த்தையை சொல்லி விடுவீர்களோ என்ற பயம் அதை அவர்களை செய்ய விடாமல் தடுத்து விட்டது “..

“அந்த வார்த்தையை திரும்பவும்  கேட்க அவர்கள் விரும்பவில்லை .நீங்கள் செய்த விஷயம் உங்கள் மீது தவறு என்று தெரிந்தும் நீங்கள் அத்தை இடம் உங்கள் தவறை சரி செய்ய நினைக்கவில்லை”..

” தன்னை திருத்திக் கொள்ள முயற்சி செய்தீர்களே தவிர ..தேவாவை அத்தையிடம் மீண்டும் அம்மா மகனாக சேர்க்க வேண்டும் என்பதை நீங்கள் அங்கு இப்பொழுது வரை செய்யவில்லை அதுதான் உங்களுடைய பெரிய தவறு”.

“ஆது சின்ன பையன் அவன் அத்தையிடமும் சரி ,தேவாவிடமும் சரி இப்படி இருக்க காரணம் என்ன என்று கேட்டிருக்கிறான் .ஆனால் இருவரிடமும் பதில் இல்லை “..

“ஆகையால் அவனுக்கு எந்த பக்கம் போவது என்று தெரியாமல் இரண்டு பக்கமும் தத்தளித்து கொண்டிருக்கிறான். இருந்தாலும் அவனுக்கு அத்தையை விட தேவா ஒரு படி மேலாக இருந்திருக்கிறார் “..

“அதனால் ,அவன் அனைத்து இடங்களிலும் தேவாவை விட்டுக் கொடுக்க கூடாது என்பதற்காக தனது தாயிடமே சண்டையிட்டு இருக்கிறான் “..

ஆனால் ,”தன் தாயை எனது தந்தையிடமும் அவன் விட்டுக் கொடுக்கவில்லை. என்ன தான் இருந்தாலும் ஒரு தாயாக அத்தையின் வலியை யோசிக்கவில்லை”..

“தேவா அமைதியாக வருவை பார்த்தான்  எழுந்து நின்று தேவாவையும் நிற்க வைத்து நான் இதற்கு மேல் உங்களிடம் சொல்வதற்கெல்லாம் என்னிடம் எதுவும் இல்லை “..

“நீங்கள் இத்தனை நாள் உணராதது  ஒன்றே ஒன்று தான் அத்தைக்காக எல்லாம் செய்தீர்கள் சரி. அத்தை உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்கள் அதுவும் சரி “..

ஆனால் ,”நீங்கள் ஒன்றை தவற விட்டீர்கள் அது என்ன தெரியுமா ?அத்தை உங்களை விட்டு விலகவில்லை. அத்தையை விட்டு நீங்கள் விலகி இருந்ததால் தான் உங்களுக்குள் இத்தனை வருட விரிசல் இருக்கிறது “..

“நீங்கள் மட்டும் தான் அத்தையின் அன்பிற்காக ஏங்கினீர்களா ?அத்தை எதற்காகவும் ஏங்கவில்லையா ? என்று கேட்டாள் “..

“தேவாவின் தலை கீழே கவிழ்ந்தது. நான் உங்களை குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. அத்தைக்கு தேவையானதை செய்வதில் மட்டும் அனைத்தும் கிடைத்து விடாது தேவா என்று விட்டு அமைதியாக அவளுடைய அறைக்கு சென்று கதவை சாற்றிக் கொண்டாள் “..

“தேவாவிற்கு வலிக்க செய்தது .வேகமாகச் சென்று கதவைத் தட்ட சென்றான் .அப்பொழுது சகுந்தலா தான் தேவாவின் கையை பிடித்து தடுத்து வேணாம் தம்பி என்றார்”..

” இல்லை அத்தை என்றான். அவளுக்கு சிறுவயதில் இருந்தே ஒரு பழக்கம் இருக்கிறது .அவள் அதிகமாக வார்த்தையை விட்டு விடுவோமோ என்று எண்ணி ஒரு சில நேரங்களில் தனிமையை எதிர் பார்ப்பாள். “..

“அவள் கொஞ்ச நேரம் இருக்கட்டும் அவளாகவே வெளியில் வருவாள். ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ள மாட்டாள் என்றார் தேவாவுமே ஒரு சில நேரங்களில் அவளை இப்படி பார்த்து இருப்பதால் சரி என்று விட்டு அமைதியாக இருந்தான் “..

“ஒரு அரை மணி நேரம் அங்கு அமைதி நிலவியது .அனைவரையுமே யோசனையில்  இருந்தார்கள். அரை மணி நேரம் கழித்து வரு முகம் கை கால் கழுவிக்கொண்டு தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டு அவளுடைய அறையில் இருந்து வெளியில் வந்தாள் “..

“தேவா அமைதியாக தனது அறை கதவையே பார்த்து கொண்டு இருந்தான்.  என்ன சகு வீட்டுக்கு வந்து இருக்கு ஏதாச்சும் மகளுக்கு சமைச்சு தரணும் அல்லவா ?என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் “..

“சகுவும் சிரிப்புடன் நீதாண்டி வந்தவள் கண்டுக்காம போய் உள்ள ரூமுக்குள்ள உக்காந்துட்டு வர, அக்கா சமைச்சு இருக்காங்க சாப்பிடலாம் வா நேரம் ஆகுது என்றார் “..

“அதன் பிறகு,யாரும் எதுவும் பேசவில்லை. அனைவரும் அமைதியாக ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். இரவு அதிக நேரம் எடுத்திருந்தது அனைவரும் சாப்பிட்டுவிட்டு தீரன் அரசி இருவரும் மாத்திரை போட்டுக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றார்கள் “..

“ஆதுவும் எனது தாய் தந்தைக்கு தனிமை வேண்டும் என்று யோசித்தான் ஆனால் ,தான் யோசிப்பது சரியா ?என்று கூட புரியாமல் ஒரு நிமிடம் அப்படியே நின்று கொண்டு இருந்தான் “..
“அரசி தான் சிரித்து கொண்டே காலை படித்துக் கொள்வாய் வா வந்து தங்கி என்றார். சரி என்று விட்டு தனது தாயுடனே அவரது அறைக்கு சென்றான் “..

“அனைவரும் சாப்பிட்டவுடன் சகுந்தலா ,கலை, மாணிக்கம் மூவரும் கிளம்பினார்கள். தேவா மூவரையும் இருக்க சொன்னான். இல்லை பா நாங்கள் காலையில் வேண்டுமானால் வருகிறோம் என்றார்கள் “..

“அதன் பிறகு ,யாரும் எதுவும் பேசாததால் மூவரும் கிளம்பி விட்டார்கள். அவர்கள் வீடு நோக்கி வரு அறைக்குள் செல்வதற்கு முன்பே தேவா அமைதியாக பால்கனியில் நின்று கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான்”..

“வரு தங்கள் அறை கதவை சாற்றி விட்டு தேவா யோசிக்கட்டும் என்று எண்ணி கட்டிலில் உட்கார்ந்து இருந்தாள் ஒரு அரை மணி நேரம் இருக்கும் அவளால் இதற்கு மேல் இருக்க முடியாது என்றவுடன் தேவாவை பார்த்துவிட்டு படுக்க செய்தாள் “..

“அவள் தூங்கவில்லை அமைதியாக கண் மூடி படுத்துக்கொண்டு இருந்தாள் அவளுக்குள் பல யோசனைகள். நான் பேசிய அனைத்தும் சரியா ?யாரையாவது எங்கேயாவது மனது நோகும் படியாக  பேசி விட்டோமா ?என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்”..

ஆனால் ,”எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு தான் அமைதியாக இருந்தாள் .தேவா  11 மணி போல் அறைக்குள் வந்தான் .”..

“பால்கனி கதையை சாற்றிவிட்டு அதுவரை வரு தூங்கவில்லை. ஆனால் ,கண் மூடி படுத்திருந்தாள். தேவா அமைதியாக அவளை பார்த்துவிட்டு இரவு விளக்கை எறிய விட்டு மற்ற லைட்டுகளை நிறுத்திவிட்டு வந்து படுத்தான்”..

“அவன் படுத்த அடுத்த நொடி வருவின் தலை தன் நெஞ்சில் இருப்பதை பார்த்துவிட்டு அவளது நெற்றியில் இதழ் பதித்தான் அங்கு எந்த பேச்சு வார்த்தையும் இடமில்லை தேவாவின் நெஞ்சில் தலை வைத்த உடன் வரு உறங்கியிருந்தாள்”..

“தேவா அவளது சீரான மூச்சுக்காற்றை உணர்ந்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். நீ எனக்கு கிடைத்து வரம் டி .உன்னை நான் இந்த குடும்பத்திற்காக, அம்மாவிற்காக என்று எண்ணி ஒதுக்கி வைத்திருந்தாள்  கூட எனக்கு தான் அதிக இழப்பீடு என்று விட்டு அழ செய்தான்”..

” அவனது கண்ணீர் துளிகள் பட்டு வரு நிமிர்ந்தாள் தேவா அழுவதை பார்த்துவிட்டு ஒரு சில நொடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஒன்னும் இல்லை. நீ தூங்கு நானும் தூங்குகிறேன் என்று விட்டு தனது கண்ணீரை துடைத்துக் கொண்டு அவளுக்கு தட்டிக் கொடுத்தான் “..

“அவளும் தூங்கி இருந்தாள் அவனும் தூங்கி இருந்தான். இங்கு அரசியின் அறையில்  ஆது இருவருக்கும் இடையில் படுத்திருந்தான். ஒரு சில நொடி அமைதியாக இருந்தான்”..

பிறகு,” தனது தாயின் இடுப்பை கட்டிக்கொண்டு உறங்கி இருந்தான். தீரன் அவ்வப்போது எழுந்து அரசியை பார்த்தார். அரசி தான் எழுந்து விட்டு தூக்கம் வரவில்லையா ?உங்களுக்கு தூங்குங்கள் என்றார் “..

“அரசியை அமைதியாக பார்த்த தீரன். பிறகு ,எழுந்து வந்து அரசியின் காலடியில் உட்க்கார்ந்து கொண்டு மடியில் படுக்க செய்தார் .தீரனின் தலையை கோதிக் கொண்டே ஒன்றும் இல்லை நான் எதுவும் பேசவில்லை பேசவும் விரும்புவதில்லை”..

” உங்கள் மருமகள் பேசிய அனைத்தும் உண்மை சரியா ?நீங்கள் இங்கு தவறு செய்து விட்டீர்களா ?இல்லையா ?என்றெல்லாம் நான் இப்பொழுது யோசிக்கவில்லை “..

“இனி யோசிக்க போவதில்லை எனக்கு தேவையானது கிடைத்துவிட்டது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு தூக்கம் வருகிறது .தூங்கலாமா ? என்றார் “..

“தீரன் நிமிர்ந்து அரசியை பார்த்துவிட்டு உனக்கு கோபமே இல்லையா டி என் மேல் என்றார் .இருந்தது இப்போது இல்லை என்றார் . தீரன் அரசியை அமைதியாக பார்த்தவுடன் எனக்கு காலப்போக்கில் அந்த கோபம் மறந்து விட்டது “.

“எனக்கு இப்பொழுது தேவாவின் மீது மட்டும் தான் கோபம் வந்தது .அந்த கோபம் தான் ஒவ்வொரு நாளும் வெளிவர தொடங்கியது .அதனால் ,நான் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உங்களுக்கும் ஆதுவிற்கும் வலியை தர செய்கிறது என்று எனக்கும் தெரியும் “..

“எனக்கும் வலிக்க தான் செய்தது அனைத்தும் என்னுடைய கோபம் தான் .ஆனால் ,இப்பொழுது எதுவும் இல்லை . எனக்கு தூக்கம் வருகிறது நான் சந்தோஷமாக இருக்கிறேன் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? என்றார் “..

“தீரனும் அரசி தூங்க வேண்டும் என்பதற்காக அமைதியாக வந்து படுத்தார் அரசியும் தூங்கி இருந்தார் .இங்கு தீரனும் தூங்கி இருந்தார் .அனைவரும் இதற்கு மேல் இதைப் பற்றி பேச விரும்பவில்லை “..

“வரு சொன்னது போல் அனைவரின் மனநிலையும் அவ்வாறு தான் இருக்கு செய்தது என்பதால்  அங்கு யாருக்கும் சமதானமோ இல்லை வேறு எதுவும் நம்ம தேவைப்படவில்லை “..

“மறுநாள் பொழுது நன்றாக இருந்தது .தேவா அசதியில்  தூங்கி கொண்டிருந்தான். ஆது தான் முதலில் எழுந்தான் .யாருமே எந்திரிக்கவில்லை என்பதை உணர்ந்து விட்டு சமையலறைக்கு சென்றான் டீ போடலாம் என்று பாத்திரம் எடுக்கும்போது பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு வரு தான் தன்னுடைய அறையில் இருந்து எழுந்து வந்தாள் “..

“ஆது  சமையல் அறையில் இருப்பதை பார்த்துவிட்டு அவனைப் பார்த்து சிரித்து விட்டு குட் மார்னிங் சொல்லிவிட்டு நீ போய் படிக்கும் வேலையை பார் இரவே படிக்கவில்லை என்றாள் “..

“ஆதுவும் தனது அண்ணியை முறைத்தான். வரு சிரித்து கொண்டே படிக்கவில்லை என்றால் பரவாயில்லை மெதுவாக உட்காரு நான் டீ போடுகிறேன் என்றாள் .சரி என்று விட்டு பாலை சிம்மில் அடுப்பில் வைத்து விட்டு வெளியே வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு வந்தாள் “..

“அப்பொழுது ,அவளது கையில் டீ கப் வைக்கப்பட்டது. நிமிர்ந்து யார் ?என்று பார்த்தாள் அவளுக்கு அப்படி ஒரு ஆச்சரியம் அவளது கையில் டீயை  வைத்தது யாராக இருக்கும் ?”..

“ஏன் வரு ஆச்சரியமாக பார்க்கச் செய்தாள் “என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்..

அன்புடன்

தனிமையின் காதலி

3 thoughts on “புன்னகை 61”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *