Skip to content
Home » அகலாதே ஆருயிரே-55-60

அகலாதே ஆருயிரே-55-60

��அகலாதே ஆருயிரே��
��56��

காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களை கொண்டு உலகை அணைக்க கிளப்ப ஆரம்பித்த
வேளை, அபியின் மார்பில் தன் தாடையை வைத்து அழுத்தியபடி அவன் முகத்தை
பார்த்துக்கொண்டு இருந்தாள் ரிது.

“என்ன டாலு இப்படி சைட் அடிக்கிற? எனக்கு வெக்கமா இருக்கே.”,என்று அபி அவளை
கிண்டல் செய்ய, அவளோ, “அப்படி தான் சைட் அடிப்பேன் என்ன பண்ணுவீங்க?”, என்று
கேட்கவும்,

“ஏய் நீ வெக்கப்படுவன்னு நினைச்சேன் டாலு. பரவால்ல.. நல்லாவே பேசுற.
இனி நம்ம காதல் வாழ்க்கை ஓஹோன்னு இருக்கும்”, என்று அபி சிரிக்க,

“அதென்ன அபி காதல் வாழ்க்கை? அப்போ சாதா வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை, இப்படி தனி
தனியா வாழற ஐடியா இருக்கோ?”, என்று கிண்டலடிக்க,

“ஆமாம். இந்த ரூம்ல மட்டும் தான் நம்ம காதல் வாழ்க்கை. வீட்டுக்குள்ள கல்யாண வாழ்க்கை,
ஊருக்குள்ள சாதா வாழ்க்கை”, என்று அவன் அடுக்கிக்கொண்டே போக, அவன் தோளில் இடித்த
ரிது,

“எப்பயும் ஒரே மாதிரி இருக்கணும் அபி.”, என்று சொல்ல,

“நல்லா யோசிச்சு சொல்லு. இப்போ நான் ஓகே சொல்லிட்டா, அப்பறம் என் பேச்சை நானே
கேட்க மாட்டேன்.”, என்று விஜய் குரலில் மிமிக்ரி செய்கிறேன் என்று அபி சேட்டை செய்ய,

“அபி”, என்று அவன் மேல் படர்ந்தவள், அவன் வலிய உதடுகளை தன் ஆளுகைக்குள் கொண்டு
வர, அபி முதலில் திகைத்தாலும், அவள் ஆரம்பித்த இதழ் யுத்தத்தை தன்னுடையதாக
மாற்றிக்கொண்டான்.

நேரமானதை ஜன்னல் வழியாக வந்த செங்கதிர்கள் விளக்க, மனமே இல்லாமல் அறையை விட்டு
இருவரும் வெளியே வர, அப்போது தான் அபி யோசனை வந்தவனாக,

“டாலு இவ்ளோ நாள் எனக்கு வீடுன்னா அதை குளிச்சு ட்ரெஸ் மாத்த மட்டும் தான்
உபயோகிச்சேன். மேல இந்த ரூம் கூட சுரேஷ் அண்ணா ரொம்ப கட்டாயப்படுத்தியதால தான்
கட்டினது. நீ வருவ, அப்போ உன்னோட வாழ ஒரு இடம், நல்லா, அழகா வேணும்ன்னு அப்போ
தோணாம போச்சு.”, என்று குரலில் கவலையை அவன் காட்ட,

“அபிம்மா.. எனக்கு ரூம் பெருசா, சொகுசா வேணும்ன்னு எல்லாம் ஆசை இல்லை. எப்படியும்
நானும் வேலைக்கு போயிடுவேன். படுத்து தூங்கி,நீங்க சொல்ற மாதிரி குளிச்சு கிளம்ப ஒரு இடம்
வேணும். அவ்ளோ தான். அதுவும் நீங்க கூடவே இருக்கும்போது எனக்கென்ன? எங்க
வேணாலும் இருப்பேன்.”, என்று முகம் மலர அவள் சொன்னதும் அபியின் முகம் விகசித்தது.

தன் மனையாளை தோளோடு அணைத்து கீழே அழைத்து செல்ல, அங்கே அவனுக்காக தயாராக
காத்திருந்தான் நிதீஷ்.

“சொல்லு நண்பா. என்ன இவ்ளோ காலைல, யாரும் இன்னிக்கு அபர்ணா சமையல்ன்னு உனக்கு
போன் பண்ணி சொன்னாங்களா?”, என்று வம்பு வளர்த்துக்கொண்டே வந்தான் அபினவ்.

மகிழ்ச்சியாக இருக்கும் அவனிடம் தான் வந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று
நொந்துகொண்ட நிதீஷ்,

“அது அபி.. என்னன்னா…”, என்று இழுக்கவே,

“என்ன டெல்லி கேஸ் விஷயமா எதுவும் பிரச்சனையா?”, என்று பளிச்சென்று கேட்டாள் ரிது.

“உனக்கு டெல்லி கேஸ் பத்தி தெரியுமா அபர்ணா? என்று கேட்டுக்கொண்டே, நீ சொல்லு டா
என்ன பிரச்சனை?”, என்று தீவிர குரலுக்கு மாறினான் அபி.

“நாம கஷ்டப்பட்டு பேசி சரி பண்ணி ஒத்துக்க வச்சோமே ஒரு சாட்சி, அவர் நேத்து ஒரு ரோட்
ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டார் டா. இப்போ நாம அடுத்த ஹியரிங்க்கு யாரை பிரட்டியூஸ்
பண்றது?”

அபிக்கு சலிப்பே வந்து விட்டது. பலவாறு பலவித சாட்சிகளை அந்த கயவனுக்கு எதிராக
நிறுத்தியும் பணம் எனும் பெரும் ஆயுதம் கொண்டு அனைத்தையும் வீழ்த்தி விட்டனர். அந்த
பெரியவர் தான் அன்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர். அவரை கெஞ்சி, அந்த பெண்ணின்
நிலையை சொல்லி கேட்டதும் தான் ஒத்துக்கொண்டார். இப்போது அவர் இறந்துவிட்டார்
என்றால் அபிக்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை.

மீண்டும் மீண்டும் தோல்வியா? ஒரு அபலை பெண்ணின் மீது அமிலம் எரிந்தவன், கொஞ்சமும்
தயக்கம் இல்லாமல் திரிய, காயம்பட்டு கிடந்த பெண்ணோ வாழ்வா சாவா என்று இருக்கிறாள்.
மனம் நொந்த அபியை சமாதானம் செய்தாள் ரிது.

“இப்போ என்ன பண்ணலாம் டா?”,என்ற நிதீஷிடம் உதடு பிதுக்கினான் அபி. சற்று நேரம்
வீட்டில் ஒரு அமைதி நிலவ, சசி, நாராயணன், ரிஷி மூவரும் உள்ளே வந்தனர்.

“வாங்க மாமா, வாங்க அத்தை”,என்று எழுந்த

அபியை கைகள் பற்றிக்கொண்ட சசி, “கல்யாணத்துக்கு முன்னாடி நீ பேசாம இருந்தது
என்னவோ போல இருந்ததுப்பா. இப்போ வாய் நிறையா மாமா அத்தைன்னு கூப்பிடும்போது,
நிம்மதியா சந்தோசமா இருக்கு.”,என்றார்

“என்ன அத்தை. நான் கொஞ்சம் குழப்பதுல, ஒரு கேஸ் விஷயமா டென்ஷன்ல இருந்தேன்.”,
என்று அபி விளக்க,

“என்ன கேஸ் அந்த டெல்லி கேஸ் தான? ஏன் ரிது நீ இன்னுமா மாப்ள கிட்ட அதெல்லாம்
சொல்லலயா?”, என்று சசி ரிதுவிடன் கேட்டு நிற்க,

நாராயணன் தலையில் அடித்தபடி, “அவளுக்கு எப்போ சொல்லணும்ன்னு தெரியாதா சசி?
அவங்க வேலையில உன்னை யார் தலையிட சொன்னது?”, என்று கடுமையாக கேட்டதும்,

“என்ன நரேன் நீங்க? கல்யாண நேரத்துலயும் மாப்பிள்ளையை டென்சன் பண்ணினா. இப்போ
வேலைக்கு உதவியா எல்லாமே இருந்தும் அவரை ஏன் டென்ஷன்ல வச்சிருக்கணும்.”, என்று சசி
எரிச்சலாக கேட்க,

ரிது தலை கவிழ்ந்து நின்றாள். மகளை அவ்வாறு காணவியலாத நாராயணன் சசியை கண்டித்துப்
பேச வாயை திறக்க,

“அத்தை, அவளுக்கு தெரியும் அத்தை. எதை எப்போ என்கிட்ட சொல்லணும்ன்னு. காரணம்
இல்லாம செய்யமாட்டா. அவளே அதுக்கான நேரக்காக காத்திருக்கலாம் “, என்று அபி
மனைவிக்காக பரிந்து பேசினான்.

ரிது கண்களில் நீருடன் அபியை கண்டவள், அவன் கைகளுக்குள் தன் கையை
புதைத்துக்கொண்டு, “தான்க்ஸ் அபிம்மா. நான் ஒரு காரணத்துக்காக தான் சொல்லல. நீங்க
நினைக்கிற மாதிரி அந்த பெரியவர் ரோடு ஆக்சிடெண்ட்ல எதார்த்தமா இறந்திருக்க மாட்டார்.
நீங்க அடுத்த ஹியரிங்ல இன்னரை பிரடியூஸ் பண்ணறேன்னு தாக்கல் பண்ணினதும்
எதிர்த்தரப்பு இப்படி சத்தமில்லாம அவங்களை அப்புறப்படுத்திடும். அதனால என்கிட்ட இருக்கிற
சாட்சியை நான் நேரா கோர்ட்ல ஆஜர் படுத்துறேன். அடுத்த ஹியரிங்ல கூட விசாரிங்க. ஆனா
போதிய பாதுகாப்பு வேணும்ன்னு கேட்போம். அப்போ அவங்களுக்கு ஏதாவது ஆனால்
எதிர்த்தரப்பு மாட்டும்.”, என்று நிதானமாக சொன்னாள் ரிது.

“நீ என்ன வேலை பாக்கற? உனக்கெதுக்கு என் தம்பி கேஸ் பத்தி தெரியுது? அவன் வேலைல
கூட தலையிடுவியா?”, என்று எகிறிய ரேகாவை அபி எரிச்சலாக பார்க்க,

“என்ன செய்ய அண்ணி, என் வேலை அப்படி. அன்னைக்கே இதை நான் முடிச்சிருக்கணும்.
முடியல. அதான் என் கணவருக்காவது உதவியா இருக்கேன்.”, என்றாள்.

“நீ என்ன டா தங்கச்சி சொல்ற. புரியலம்மா.”, என்று மகேஷ் கேட்டதும், ரிஷி அவள் யூனிபார்ம்
இருந்த கவரை டீப்பாய் மீது வைத்தான்.

“நான் ரிதுபர்ணா, ஏ சி பி, அசோக் நகர் ஜூரிஸ்டிக்ஷன்”, என்றாள் நிமிர்வாக.

சொல்லும்போதே அவள் குரலில் இருந்த கம்பீரம் கண்டு ஓரடி பின்னடைந்த ரேகா, அவள் துணை
கமிஷனர் என்று தெரிந்ததும், எச்சில் கூட்டி விழுங்கியவள், அமைதியின் சிகரமாக சுவரோடு
சேர்ந்து நின்றாள்.

அவள் சொல்லச் சொல்ல எழுந்து கொண்ட அபி அவள் கைபிடித்து இழுத்துக்கொண்டு
மாடியறைக்கு விரைந்தான்.

அவனின் வேகமான நடைக்கு ஈடுகொடுத்து ரிது அவன் பின்னால் செல்ல, சசி பயத்துடன் தன்
கணவரை கண்டார். அவரோ அவளை குற்றம் சாட்டும் பார்வையோடு நோக்கி விட்டு,
“அவளுக்கு தெரியாதா எதை எப்போ சொல்லணும்ன்னு. நீயா சசி இப்படி பண்ணின? எனக்கு
உண்மையிலேயே அதிர்ச்சியா இருக்கு.”, என்று முகத்தை திருப்ப,

“இல்லங்க, அவ வேலையை மறைக்கிறது எனக்கு நல்லதாப் படல. என் அண்ணன்
வீடுத்தான்னாலும் கட்டிக்கொடுத்துட்டோம். நாளைக்கு ஒரு பேச்சு வந்திடக்கூடாது
இல்லையா?”, என்று தன் தரப்பை சசி விளக்க,

“அதான் உங்க அண்ணன், அண்ணிக்கு தெரியும்ல. நாம ஒன்னும் எதையும் மறைச்சு கல்யாணம்
பண்ணல சசி. என் பொண்ணு ஒன்னும் சாதாரண பொண்ணும் இல்ல.”,என்று எரிந்து விழுந்தவர்,
கண்கள் மட்டும் மாடியை நோக்கியே இருந்தது.

ஆனால் இவர்கள் எண்ணத்திற்கு எதிராக, அங்கே தன் மனைவியை அள்ளி அணைத்து கண்ணீர்
விட்டுக்கொண்டு இருந்தான் அபினவ்.

“டாலு நீ போலீஸா டி?? ஐ.பி.எஸ் பாஸ் பண்ணிருக்கியா?  எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்கு
தெரியுமா அபர்ணா. “, என்று அவளை முத்தத்தால் குளிப்பாட்ட,

அவனின் வேகமான முத்தங்களுக்கு இடையில் அவள் திணறித்தான் போனாள்.

“அபிம்மா.. என்ன இது. எதுக்கு இவ்ளோ எக்ஸைட் ஆகுற?”,என்றதும்,

“நான் ஆசைப்பட்ட வேலை டா. ஆனா என்னோட கோபமான குணத்துக்கு இந்த வேலை
ஒத்துவராதுன்னு தான் நான் லா எடுத்தேன். “

“இதென்ன புதுசா? கோபக்காரங்க போலீஸ் ஆக கூடாதா?”,என்று அவள் சிரிக்க, அவனோ,

“இல்ல டாலு, எனக்கு இயல்புலயே கோபம் அதிகம். நான் மட்டும் அந்த டெல்லி கேஸ்
விஷயத்துல போலீஸா இருந்தா இந்நேரம் அவனுங்களை என்கவுண்ட்டர் செஞ்சிருப்பேன். என்
கோபம் அப்படிப்பட்டது. அதுனாலதான் லா எடுத்தேன். இப்போ அவனை சட்டத்தின் பிடில
மாட்ட வைக்க எனக்கு ஆதாரம் தான் வேணும். அதுக்கான புத்திக்கூர்மை எனக்கு இருக்கு. ஆனா
அவனை சுடுற பவர் எனக்கு இல்லை. இருந்தா அதை செஞ்சிட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.
இப்போ புரியுதா?”, என்றான்.

“நல்லாவே. ரொம்ப ஆழமா யோசனை செஞ்சு உங்க படிப்பை ஆரம்பிச்சு இருக்கீங்க. வெல்
மெச்சுர்ட். அந்த கேஸை நான் வாட்ச் பண்ணினேன். ஆனா அது என் கைக்கு வரல. வந்திருந்தா
கண்டிப்பா நானும் ஷூட் பண்ணி இருப்பேன்.”, என்று அவள் நகைத்துவிட்டு,

“ஐயோ கீழ போகலாம் அபி. எல்லாரும் பயந்து போய் இருப்பாங்க. இப்படியா இழுத்துட்டு
வருவீங்க?”,என்று செல்லமாக அவனை தோளில் அவள் அடிக்க,

“நான் தான் சொன்னேனே, இது தான் நம்ம காதல் வாழ்க்கைக்கான இடம்ன்னு”, என்று அவன்
முத்துப்பற்களை காட்டி சிரிக்க,

“அதெல்லாம் இனி வேண்டாம். எப்பயும் ஒரே மாதிரி இருக்கணும்.”, என்று மீண்டும்
வலியுறுத்தியவள், சிரித்த முகமாக அவனோடு கைகோர்த்து படி இறங்கி ஹாலுக்கு வந்தாள்.

ராகவேந்தர் பதற்றமாக மகனை பார்த்து, “அது பாப்பா நானே சொல்லிக்கிறேன்னு
சொன்னதனால தான் நாங்க சொல்லல பா. அவ எதுக்கு அப்படி நினைத்தாளோ, நிதானமா
கேளு. கோவப்படாதே”, என்று பேச,

“மாமா. ஒன்னும் இல்ல. ஆவர் கோபமெல்லாம் படல. அவருக்கும் என் வேலை தெரிந்து
சந்தோசம் தான். அந்த கேஸ் பத்தி கேட்கத்தான் கூட்டிட்டு போனார்.”, என்று அபியை பார்த்து
சிரித்தாள்.

அவனோ லஜ்ஜை இல்லாமல் அவளை பார்த்து உதடு குவிக்க, அவளுக்கு தான் நாணம் வந்து
தடுமாறினாள்.

“என்ன அபி நீங்க இப்படி பண்றீங்க?” என்று அவனை பார்த்து மூக்கை சுருக்கி அவள் கேட்க,
“நீதானே டாலு எப்பயும் ஒரே மாதிரி இருக்க சொன்ன?”, என்று சர்வசாதாரணமாக அவன்
சொல்ல, தலையில் அடித்துக்கொண்டவள், அப்போது தான் சுவரோடு ஒட்டிய பல்லி போல
இருந்த ரேகாவைக் கண்டாள்.

“அண்ணி”,என்று அவளிடம் நகர, அவளோ முதல்முறை ரிதுவை பயந்த பார்வை பார்த்து,
துணைக்கு தங்கையை கண்களால் அழைத்தாள்.

சட்டென்று குறுக்கே வந்த ஸ்வாதி ரிதுவை அணைத்துக்கொண்டு, “பரவால்ல டா போலீஸா
இருந்தாலும் நேத்தெல்லாம் நீ எவ்ளோ பொறுமையா நடந்துகிட்ட, அதுலயும் சமையல் எல்லாம்
கத்து வச்சிருக்க?”, என்று பாராட்ட,

“இதுல என்ன அண்ணி இருக்கு.சின்ன வயசுலயே அம்மாவுக்கு உதவியா எல்லாமே
கத்துக்கிட்டேன்.”, என்று சிரித்தாள்.

“ஏழு கழுதை  வயசகுது, இன்னும் சாம்பார் வாயில வைக்கிறது போல சமைக்க தெரியாத
ஆட்களும் இதே பூமில தான் இருக்காங்க.”, என்று அங்கலாய்ந்த விக்னேஷை ரேகாவின்
கண்களுக்கு எரிக்கும் சக்தி இருந்தால் பொசுக்கி இருக்கும்.

அவளின் கனல் வீசும் விழிகளை கண்டவனின் திருவாய் சட்டென்று மூடிக்கொள்ள, அபி
வாய்விட்டு சிரித்தான்.

“நல்ல பொண்டாட்டி கிடைச்சிட்ட இருமாப்பா மாப்பு?”,என்று மகேஷ் அவன் காதில் கிசுகிசுக்க,

காலை உணவை முடித்துக்கொண்டு ரிது வீட்டிற்கு மறுவீடு விருந்துக்கு கிளம்பினர் அனைவரும்.

★★★★
��அகலாதே ஆருயிரே��
��57��

அபி, தன் மனைவியுடன் மறுவீட்டு விருந்துக்கு கிளம்பி வந்தவன், அவன் தங்கியிருந்த
நித்திலனின் வீட்டை கடக்கையில், “இங்க இருக்கும்போது தான் டாலு முதல் முதல்ல உன் குரல்
கேட்டேன். அதுவும் ஆரூ பேர் சொல்லி கூப்பிட்ட, நீ சொல்லி தான் அவ பேர் எனக்கு தெரியும்.
ஆனா உன் பேரை அவ வாயில இருந்து வாங்கறதுக்குள்ள.. யப்பா.. முடியல போ.”, என்று அபி
சொல்ல, ரிது சின்ன  சிரிப்புடன்,”என் குரல் வச்சு காதலிச்சிங்களா அபிம்மா.. “,என்று அவன்
தோளில் சாய,

“முதல்ல குரல், அப்பறம் என் மச்சான் சொன்ன உன்னோட கண்டிப்பு, ஆரூ சொன்ன உன்னோட
அன்பு எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா என்னை உன் பக்கம் இழுத்துச்சு. அதுலயும் அந்த
குரங்குக்காக என்கிட்ட நீ தான்க்ஸ் சொன்னல.. அங்க.. அங்க தான் நான் விழுந்துட்டேன்”,
என்று அவன் உல்லாசமாக சிரிக்க, வீடு வந்துவிட்டதை அப்போது தான் உணர்ந்தனர்.

அவனை வரவேற்க ஆரூ ஆரத்தியோடு காத்திருந்தாள். “ஏ நீயா டி? நீ ஆரத்தி சுத்தி கீழ ஊத்த
மாட்டியே என் தலைல இல்ல ஊத்துவ? உன்னை நம்பி யாரு டி தட்டை கொடுத்தது?”, என்று
அபி ஆருவை வம்புக்கு இழுத்தான்.

“பங்கு, உனக்கு நேத்து தான் கல்யாணம் ஆகி இருக்கு. இன்னிக்கே நீ தேவை இல்லாம ஆப்புல
வான்ட்ட்டா ஏறி உக்காறர மாதிரி இருக்கு டா.”,என்று நமுட்டு சிரிப்புடன் ஹர்ஷா சொல்ல,

ரிது, அபியை கையில் இடித்து, “ஆருவை அப்படி எல்லாம் சொல்ல கூடாது.”, என்று கண்டிப்பாக
சொன்னாள்.

“அப்படி சொல்லு டி என் சிங்கக்குட்டி. ஹே ஹேய்.. என்ன ஜே.பி. போலீசை கல்யாணம்
பண்ணிட்டோம்ன்னு லொள்ளு பண்றீங்களா?? நேத்து தான் இந்த போலீஸ் உங்க
பொண்டாட்டி, ஆனா  பால்வாடில இருந்து எனக்கு தோஸ்து தெரியுமா?”,என்று அபியிடம் வம்பு
வளர்த்தாள் ஆரு.

“வீட்டுக்குள்ள விடுவியா மாட்டியா மா?”, என்று ராகவேந்தர் கேட்கவும், “ஐயோ சாரி அங்கிள்,
ஜே.பி கூட வம்பு பண்ணிக்கிட்டே உங்களை எல்லாம் மறந்துட்டேன்.”,என்று நாக்கை கடித்தவள்,
ஆரத்தி எடுக்க,ரிஷி ஓர் ஓரமாக நின்று கொண்டு இருந்தான்.

“என்ன மச்சான் அமைதியா இருக்கான்?”, என்று அபி ரிஷியை நோக்கியபடி உள்ளே வர, ரிஷி
இனிப்பு வழங்கியதாகட்டும், உணவுக்கு இலை எடுத்து வரும்போதாகட்டும் அமைதியாகவே
இருந்தான்.

உணவு முடிந்து, பெரியவர்கள் ஒரு புறம் அரட்டையில் இறங்கி விட, ரிது, ஆரூ, ஹர்ஷா,
சுரேஷ்,நிதீஷ், மகேஷ், விக்னேஷ் என்று ஒரு பக்கம் அமர்ந்து பேச ஆரம்பித்தனர்.

ரிஷி அவர்கள் அறையில் அமர்ந்து, ரிதுவின் புத்தகங்களை மென்மையாக வருடிக்கொண்டு
இருந்தான். அவன் கண்களில் கண்ணீர் திரண்டு இமை ஓரத்தில் இப்போது விழவா என்று
காத்திருந்தது.

அவனை முதுக்குப்புறமாக அணைத்த அபினவ், “என்ன மச்சான்? அக்கா இனி கூட இருக்க
மாட்டாளேன்னு கவலையா இருக்கா?”, என்றதும்,

ரிஷியின் தலை மேலும் கீழுமாக அசைய, அவன் கழுத்தை சுற்றி இருந்த அபியின் கையில் அந்த
கண்ணீர் துளி விழுந்தது. “உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு மச்சான். எனக்கும்
தான் ரெண்டு அக்கா இருக்காங்க. ஆனா ஒருத்தர் கூட எனக்கு அவ்ளோ நெருக்கம் இல்ல.
ஒருத்தர் கல்யாணமாகி போகும்போது கூட எனக்கு அது எந்த பாதிப்பையும் தரல. உன் அக்கா
உனக்கு எவ்ளோ முக்கியம்ன்னு எனக்கு தெரியும் மச்சான். நீ அழாம இரு. அவ உன்னை விட்டு
எங்கயும் போகல. அவளுக்கு பிடிச்ச படிப்பை படிக்க போனப்போ நீ எப்படி இருந்தியோ எனக்கு
தெரியல. ஆனா இனி நீ அவளை விட்டு தள்ளி இருக்க மாட்ட. நானும் விட மாட்டேன். நீ எனக்கு
எவ்ளோ ஸ்பெஷல் தெரியுமா ரிஷி?”, என்று அபி கேட்டதும்,

சட்டென்று திரும்பி அபியை இறுக அணைத்துக்கொண்ட ரிஷி, “மாமா.. மாமா..”, என்று தேம்ப
ஆரம்பித்தான். அவனை முதுகில் நீவி விட்ட அபி, “என்ன ரிஷி நீ ?”என்று அவனை கேட்டதும்,

“அம்மா கிட்ட நான் வளர்ந்ததை விட அக்கா கைல வளர்ந்தது தான் அதிகம். அவ  எக்ஸாம்க்கு
படிக்க என்னோட விளையாடாம இருந்தப்ப எனக்கு காய்ச்சலே வந்துருச்சு. அப்பறமா தான்
அக்கா என்ன ஆனாலும் என்னோட நேரம் செலவு பண்றத விடாம இருந்தா. என்னை அப்படி
பார்த்துப்பா மாமா. போலீஸா ஆனா என்ன இப்போவரை அவளோட எல்லா லீவ் நாளும்
என்னோட தான். ஆனா நான் இனி அதை எதிர்பார்க்க முடியாதுல்ல மாமா. எனக்கும் புரியுது.
உங்க ரெண்டு பேர் வாழ்க்கையில நான் இடைஞ்சல் பண்ண கூடாதுன்னு அதான் மாமா நான்
அமைதியா தனியா வந்துட்டேன்.”

“டேய் குட்டிப்பையா.. என்ன இவ்ளோ யோசிக்கிற. இனிமேலும், அவளோட லீவ் எல்லாம் நாம
சேர்ந்து இருப்போம் நீ ஒதுங்க வேண்டாம் மச்சான். உங்க கூட என்னையும் சேர்த்துக்கோ
அவ்ளோ தான். முன்னாடி ஆருஷியும் அவளும் சேர்ந்து உன்னோட இருந்தா, இனி நானும்
ஹர்ஷாவும் உங்க கூட சேர்ந்துக்கறோம் அவ்ளோ தான் ரிஷி.”, என்று மாமனாய், நண்பனாய்
அவனோடு அபி பேச,

“இங்க என்ன மாமனும் மச்சானும் தனி டிராக் ஓட்டறீங்க?”, என்று ஆருஷி இருவருக்கும்
இடையில் வந்து அவர்களை விலக்கித்தள்ளி நடுவில் நின்றாள்.

“பொறாமை டி உனக்கு. நானும் என் மச்சானும் கொஞ்சுனா உனக்கு ஏன் டி காதுல புகை வருது?”

“ஜே.பி அவன் என் தம்பி, அப்பறம் தான் உன் மச்சான்.. “,என்று ரிஷியின் கைகளுக்குள் ஆரூ
கைகளை கோர்த்துக்கொண்டு சொல்ல, ரிஷி கண்களில் பெருகிய நீரோடு, “ஆருக்கா, யார்
வந்தாலும், நீயும் ரிதுக்காவும் தான் எனக்கு முதல்ல.”,என்று அவளை அணைத்துக்கொண்டான்.

“கவுத்திட்டியே மச்சான்.”, என்று அபி போலியாக கண்ணீரை துடைக்க, ரிது இது அனைத்தையும்
வாசலில் நின்றபடி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அபி அவளை பார்த்து கண் சிமிட்ட, அவளும் அபி ரிஷிக்காக இவ்வளவு மெனக்கெடுவதை கண்டு
உள்ளே மகிழ்ந்தாள்.

நேரம் மாலை நெருங்க, ஆண்கள் அனைவரும் மட்டையையும் பந்ததையும் தூக்கிக்கொண்டு
தெருவில் கிரிக்கெட் விளையாட, நாராயணன் அம்பயராக இருந்தார். ராகவேந்தர் பார்வையாளர்
ஆனார்.

சசியும், சங்கரியும் பேசிக்கொண்டு சமையலறையில் ஏதோ செய்ய, ரேகா, ஸ்வாதி இருவரும்
ஹாலில் அமர்ந்திருக்க, ஸ்வாதியின் குழந்தைகள் சில விளையாட்டுப் பொருட்களோடு
ஐக்கியமாகி இருந்தனர்.

ஆருவும், ரிதுவும் அவர்கள் அறையில் அமர்ந்திருக்க, ரிது மடியில் தலை வைத்த ஆரூ, “என்னால
முடியல ரிது, அவங்கம்மா நான் என்ன செஞ்சாலும் தப்பு சொல்லிகிட்டே இருக்காங்க.
இத்தனைக்கும் அவங்க சசி ஆன்ட்டி பிரெண்ட். கொஞ்சம் கூட அவங்க குணம் இல்ல டி. ஏதாவது
குறை சொல்றாங்க. இவன் கிட்ட சொன்னா, அவங்க பெரியவங்க ஆரூ, கொஞ்சம்
பொறுத்துப்போன்னு எனக்கே அட்வைஸ் பண்ணறேன். லவ் பண்ணும்போது உனக்காக
வானத்தை வளைப்பேன்னு டைலாக் எல்லாம் விட்டான் ரிது. ஆனா இப்போ அவங்க அம்மா
முன்னாடி தலையை கூட ஆட்ட மாட்டேன்கிறான். ரொம்ப கேட்டா, நான் மட்டும் அன்னைக்கு
அவங்க கூட சண்டை போடலன்னா கல்யாணமே நடந்திருக்காது ஆரூ. அந்த கோபம் தான்.
சீக்கிரம் சரியா போய்டும்னு எனக்கு தான் ஆறுதல் சொல்றான். அவங்க செய்யற தப்பை அவன்
சொல்லவே மாட்டேன்கிறான்.”,என்று ஹர்ஷாவை பற்றி குற்றப்பத்திரிகை வசித்துக்கொண்டு
இருந்தாள் ஆரூ.

“செல்லம். அவர் வீட்டுக்கு ஒரே பையன். அவர் கல்யாணம் பத்தி அவங்களுக்கு வேற கனவு
இருந்து இருக்கலாம். ஆனா மகனோட ஆசைக்காக கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அவங்க
மாற கொஞ்ச நாள் ஆகும். முடிஞ்சா அனுசரிச்சு போ. இல்லயா அமைதியா ஒதுங்கிக்கோ. அவங்க
பக்கம் போகாதே. வீட்ல அங்கிள், பாட்டி தாத்தான்னு அத்தனை பேர் இருக்கும்போது நீயேன்
ஆன்ட்டியை மட்டும் கன்சிடர் பண்ணற? கல்யாண லீவ் முடிஞ்சு வேலைல ஜாயின் பண்ணிட்டா
அப்பறம் காலைல போனா சாயங்காலம் வரப்போற. அப்போ சரியா முகம் பார்க்க கூட நேரம்
இருக்காது. விடு ஆரூ. எல்லாத்தயும் ஈஸியா எடுத்துக்கோ.”,என்று ரிது அவள் தலைமுடியை
கோதியபடி சொல்லிக்கொண்டு இருந்தாள்.

“என்ன இரண்டு பேரும் என்ன டிஸ்கஷன். சொன்னா நாங்களும் சேர்ந்து பேசுவோம்ல?”, என்று
ஹர்ஷா ஆருவிடம் கேட்டதும் ஆரூ திருதிருவென்று விழித்தாள்.

அபி அவள் முழிப்பதை பார்த்தே அவள் வில்லங்கமாய் ஏதோ கேட்டிருக்கிறாள் என்று நினைத்து
ரிதுவை பார்க்க, அவள் யோசித்தவளாக, “இல்ல அவங்க இன்னும் ஹனிமூன் போகலையாம்
அதான் லீவ் முடியறதுக்குள்ள போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டு இருந்தேன் என்று
சொல்லிவிட்டு, அபியை நோக்கி இல்லை என்பதாய் தலையசைத்தாள்.

அபி சிரித்துக்கொண்டே, “சரி சரி அப்போ நாமளும் பிளான் பண்ணுவோம். அவங்களும்
போகட்டும் நாமளும் போகலாம்.”,என்று சொல்ல,

“ஜே.பி செம்ம ஐடியா,நாம நாலு பேரும் சேர்ந்து போகலாம்.”, என்று ஆரூ குதிக்க ஆரம்பித்தாள்.

“எதுக்கு நீங்க ரெண்டு பெரும் ஒண்ணா சுத்துவீங்க. நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு பாடிகாட்
வேலை பார்க்கணுமா?”, என்று ஹர்ஷா நக்கலாக கேட்டதும்,

“என்ன வார்த்தை சொல்லிட்ட பங்கு. போலீஸ்க்கே பாடிகாட் வேலையா?”, என்று அபி
அவனோடு இணைந்து கொள்ள,

“என்ன கலாய்கிறீங்களா?? சொல்லுங்கப்பா. இல்லனா புரியலல்ல..”,என்று ரிது பதிலுக்கு ஓட்டி
ஆருவுடன் ஹைஃபை கொடுக்க, சற்று நேரம் அங்கே ஒரு கலாட்டா தான்.

“ஏ சீரியசா நல்ல ஐடியா பங்கு. எங்கயாச்சும் நம்ம நாலு பேரும் போகலம் டா.”, என்று ஹர்ஷா
சொன்னதும், “அந்த கேஸ் முடியட்டும் ப்ரோ”, என்றாள் ரிது,

“அலை என்னைக்கு ஓயறது நாம என்னைக்கு குளிக்கிறது. போலீஸுக்கும் வக்கீலுக்கும் கேஸ்
அடுத்தடுத்து வரத்தான் செய்யும். இதெல்லாம் பார்த்தா வாழ முடியுமா ரிது?”, என்று ஹர்ஷா
பதிலுரைக்க,

“எவ்ளோ அறிவு “, என்று நெட்டி முறித்தாள் ஆரூ.

நால்வரும் ஒன்றாக பயணம் போவது என்று முடிவு செய்ததும், எப்படி என்ன எங்கே என்ற
அடுத்தடுத்த கேள்விகள் வர, உடனே திட்டமிடலாயினர்.

ஆரூ ஊட்டி என்றாள், ஹர்ஷா சிம்லா என்றான். அபி ரிதுவை பார்க்க, ரிது அபியை பார்க்க,
இருவரும் கண்களால் ஏதோ கதை பேசிக்கொண்டு இருக்க, கடுப்பான ஆருவும் ஹர்ஷாவும்,
“ஏன்டா ஏழு வருஷமா லவ் பண்ணினது நாங்க டா. நீங்க பார்த்தே ரெண்டு நாள் தான் டா ஆகுது.
ஓவரா ஓவர்டேக் பண்ணி போகாதிங்க டா”,என்று தலையணையை எடுத்து அபியை நாலு
மொத்து மொத்தினான்.

“ஆக்ரா போகலாமா?? தாஜ் மகால் பார்க்கலாம்”, என்று ஆரூ சொல்ல,

“ஏன் டா செல்லம் அது மட்டும் தான் காதல் சின்னமா? வேற பிளான் போடலாம். ட்ரெக்கிங்
மாதிரி போகலாமா? சென்னைக்கு பக்கத்துலயே பல ரிசார்ட் இருக்கு. பாரா க்ளைடிங், பாரஸ்ட்
ட்ரிப், இப்படி நிறைய இருக்கு. ஒரு நாலு நாள் பிளான் போடலாம். முதல் நாள் ரெஸ்ட் அடுத்த
ரெண்டு நாள் அட்வென்ச்சர் கடைசி நாள் கேம்ப் பயர் போல செலேபிரேட் பண்ணிட்டு
திரும்பிடலாம்.”, என்று அபி சொன்னதும், மற்ற மூவரும் தலையாட்டினர்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��58��

அன்று காலை கண்விழித்த அபியை வரவேற்றது வெற்று அறை தான். சுற்றி தன் மனைவியை
தேடித் தோற்றவன், குளித்து தயாராகி கீழே வர, அங்கே அனைவரும் அமர்ந்து காலை உணவை
உண்டுகொண்டு இருந்தனர்.

ரிது அனைவருக்கும் இன்முகமாக பரிமாற, ராகவேந்தர், விக்னேஷ், மகேஷ், ரேகா, ஸ்வாதியின்
குழந்தைகளும் சேர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

அம்மாவும், ஸ்வாதியும் கிச்சனில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தனர். இதை கண்ட
அபிக்கு எரிச்சல் வர,

“ரிது”, என்றான் வேகமாக, அவன் அந்த பெயர் சொல்லி கூப்பிட்டே பழக்கம் இல்லாததால்,  ரிது
ஒரு மாதிரியாக  விழிக்க, “நீ என்ன இங்க எல்லாருக்கும் சமைச்சு போடத்தான் வந்தியா?
இத்தனை வருஷம் என் அம்மா. இப்போ நீயா?”, என்று அவன் குரல் உயர்த்த,

ரிது, “இல்ல அபிம்மா, அத்தை மதியம் சாப்பிட அப்பளம் பொறிக்கறாங்க. சின்ன அண்ணி ஏதோ
வேலையா இருக்காங்க.”, என்று அவள் அவனை பொறுமை காக்க வைக்க பேச, “ஏன் இந்த
மகாராணி ஒரு வேலையும் செய்ய மாட்டாங்களா?”, என்று ரேகாவின் மேல் பாய்ந்தான்.

ரிது, அபியை கை பிடித்து நிறுத்தி, “அபிம்மா, நான் அத்தைக்குத் தான் முதல்ல டிபன்
கொடுத்தேன். அவங்க சாப்பிட்டாச்சு. நான் இருக்கற வரை அத்தை தான் முதல்ல. அப்பறம்
அண்ணிங்க ரெண்டு பேருக்கும் இது அம்மா வீடு. இங்க வரும்போது தான் ரெஸ்ட் எடுக்க
முடியும். நல்லா சாப்பிட முடியும். அவங்களை பார்த்துக்கறதும் என் கடமை தான். நானும்
நீங்களும் சேர்ந்து சாப்பிடலாம். கோபப்படாம கொஞ்சம் உக்காருங்க”, என்று இருக்கையில்
அவனை அமர்த்தினாள்.

ராகவேந்தர் மனதிற்குள் மருமகளை மெச்சிக்கொண்டார். ரேகா எழுந்து கையை உதறியவள்,
‘என்ன டா ரொம்ப தான் சத்தம் போடற. நான் பார்த்து வளர்ந்தவன் தானே நீ. என்ன
போலீஸ்காரி பொண்டாட்டியா கிடைச்சிட்டா உனக்கு இவ்ளோ பேசணும்ன்னு தோணுதா?”,
என்று அபியிடம் பொறிந்தவள், “ஆமா நீ என்ன சொன்ன? அம்மாவுக்கு முதல்லயே சாப்பிட
குடுத்துட்டியா? எங்க அப்பாக்கு தராம நீ எப்படி அப்படி நடந்துக்கலாம் ?”, என்று ரிதுவிடம்
தந்தைக்கு சார்பாய் பேசுவதாய் அவள் பிதற்ற,

விக்னேஷ் எழுந்தவன், “போய் உன் ட்ரெஸ் பேக் பண்ணு. வீட்டுக்கு போகலாம்.”, என்றான் குரல்
இறுக.

“போதுமா? வந்ததும் என்னை என் வீட்டை விட்டு அனுப்பப் பார்க்கிற. அப்படித்தானே?”, என்று
ரிதுவின் புறம் திரும்பி ரேகா கேட்டதும்,

“ஜஸ்ட் ஷட் அப், என்ன உளறிட்டு இருக்க? அம்மா அப்பாவுக்கு முன்னாடி சாப்பிட கூடாதா? நீ
மாமாவுக்கு முன்ன சாப்பிட்டதே இல்லையா? என் அம்மா என்ன அடிமையா?”, என்று அபி
குரலில் ரௌத்திரம் காட்ட, ரிது தன் மாமனை திருப்பிப்பார்த்தாள்.

ராகவேந்தர், மனம் புண்பட்டவராக முகம் சுருங்கி காணப்பட்டாலும், அவரின் அமைதி ரிதுவுக்கு
அவர் மேல் ஒருவித சங்கடத்தையும், சின்ன மதிப்பிழைப்பையும் ஏற்படுத்த, மீண்டும் அபியின்
கரம் பற்றியவள்,

“விக்கி அண்ணா, எதுக்கு இப்போ அவசரமா ஊருக்கு?”, என்று அவனிடம் வினவினாள்.

“கல்யாணம் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகுது. ஏதாவது பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கா மா
இவ.இவ என்ன பேசினாலும் மாமனார் வாயயே திறக்க மாட்டார். அத்தை முகத்துக்காக தான்
பொறுமையா போறேன். அவருக்கு உடம்பு தாங்காதுன்னு தான் என் கோபத்தை அவர் பக்கம்
காட்டாம இருக்கேன்.”,என்றவன் வேகமாக அறைக்குள் சென்று விட்டான்.

அவன் பேசியதை கேட்ட ராகவேந்தர் திகைத்துப்போய் ரிதுவை பார்க்க, “என்ன மாமா
பார்க்கிறீங்க? அத்தை உங்களுக்கு முன்னாடி எழுந்துக்கலாம், வேலை செய்யலாம்,
உழைக்கலாம், சம்பாதிக்கலாம் ஆனா சாப்பிட மட்டும் கூடாதா? இது என்ன நியாயம்? அண்ணி
அவங்க அம்மா மேல இவ்வளவு மரியாதை வைக்க நீங்க தான் மாமா காரணம். உங்க
மனைவியை நீங்க சரியா நடத்தி இருந்தா, உங்களை பார்த்து இவங்க நடந்திருப்பாங்க.
சின்னவங்களுக்கு புத்தி சொல்லலாம். பெரியவங்களை என்ன சொல்றது?”, என்றவள்,

“நாங்க இன்னிக்கு சாயங்காலம் வெளில போறோம். திரும்ப ரெண்டு நாள் ஆகும். எல்லாரும்
இருந்து பேசி சந்தோசமா இருங்க. அத்தை மாமா வை தனியா விட வேண்டாம் என்று மகேஷ்
பக்கம் திரும்பி பேசியவள், கொஞ்சம் யோசிச்சு வைங்க மாமா. நாங்க இப்போ கிளம்பறோம்.
வேலை இருக்கு.”, என்று அபியின் கை பற்றி மாடிப்பக்கம் நகர,

“எங்க அப்பா தான் வீட்டுக்கு தலைவர், நீ எங்கே போற, என்னன்னு ஒன்னுமே சொல்லாம,
பெர்மிஷன் கூட கேட்காம தகவல் சொல்ற? திமிரா?”, என்ற ரேகாவை பார்த்து அழகாக
புன்சிரிப்பை உதிர்த்த ரிது,

“வீட்டுக்கு தலைவி கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு. அதான் மத்த எல்லாருக்கும் வெறும் தகவல்
மட்டும் சொல்றேன். விளக்கம் போதுமா இன்னும்..”, என்று அவள் இழுக்க, அவளை
இழுத்துக்கொண்டு மாடிக்கு விரைந்தான் அபினவ்.

ராகவேந்தர் ரேகாவை திரும்பி பார்த்தார். தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டில் கை
அலம்பியவர், தன் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டார்.

அவருக்கு யோசிக்க கண்டிப்பாக கால அவகாசம் தேவை என்பதை உணர்ந்த மாப்பிள்ளைகள்
இருவரும், தத்தம் மனைவிகளை அவர் பக்கம் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.

அறைக்கு வந்த ரிதுவை அணைத்துக்கொண்ட அபி, “சாரி அபர்ணா நான் ஏதோ கோபத்துல..
ச்ச.. அம்மா இப்படி தான் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துட்டு உக்கார்ந்திருப்பாங்க. நீ எவ்ளோ
பெரிய பதவியில இருக்க! ஆனா நீ அவளுக்கு சேவை செய்யணும்ன்னு என்ன தேவை அபர்ணா?
அவ எப்படி பேசுறான்னு பாரு”, என்று ரேகாவை பற்றி சொன்னதும்,

“அபிம்மா, நான் ஏ.சி.பி ன்னா அது ஊருக்கு. இந்த வீட்டுக்கு நான் மருமகள். இது என் தாய்மாமா
வீடு. முதல்ல நாம சொந்தம், அப்பறம் தான் கணவன், மாமனார், நாத்தனார் உறவு எல்லாமே.
அத்தை இனி என் பொறுப்பு. அவங்க இனிமே சந்தோசமா இருப்பாங்க. ஆனா நீங்க.. “,
என்றவள் அவனின் அணைப்பில் இருந்து வெளியே வந்து,

“கோபப்பட்டா இனி நோ டச்சிங்.. தள்ளி நில்லுங்க.”, என்று அவள் கட்டிலில் சென்று அமர,

“ஏ.. சாரி டாலு..”, என்று அவளுக்கு கீழே, மண்டியிட்டு அமர்ந்து அவள் மடியில் தலை வைக்க,

“இந்த தாஜா பண்ற வேலையெல்லாம் வேண்டாம். இப்போ தான் நான் டாலுன்னு தெரியுதா?
கீழே ரிதுன்னு கூப்பிடும்போது சாருக்கு மறந்து போயிருந்ததா?”, என்று அவள் புருவம் உயர்த்தி
கேட்க,

“அது கோபம்.. அது வந்து.. எனக்கு கோபம் வந்தா.. இப்படி தான் டாலு கத்திடுவேன்.”, என்று
அவன் தயக்கமாக அவளிடம் பேச,

“எழுந்து உக்காருங்க”,. என்று அவனை அருகில் அமர்த்தியவள், உங்க கோபம் தப்புன்னு
சொல்லல. காட்ற இடம், அளவு ரொம்ப தப்பு. மாமா மேல கோபம் காட்டாம, அதே நேரம்
அவளோட தப்பை உணர வைக்கணும். இனி வீட்டை பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம்.
அப்பறம் ரேகா அண்ணி, அவங்க என்னை பார்த்தா பயப்படறாங்க. ஆனா நீங்க எனக்கு
சப்போர்ட்க்கு வந்தா குதிக்கிறாங்க. அதனால நீங்க உங்க கவனத்தை வேலைல வைங்க. நான்
வீட்டை பார்த்துக்கறேன். “,என்றதும்,

மகிழ்ச்சியாக தலையசைத்த அபி, மீண்டும் ரிதுவின் மடி சாய்ந்தான்.

“கொஞ்சம் ஷாப்பிங் போகலாம். ஆரூ கூப்பிட்டா. பர்சேஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து ரெப்ரெஷ்
பண்ணிட்டு சாயங்காலம், ஈ.சி.ஆர் ல புக் பண்ணி இருக்கற ரெசார்ட் போயிடலாம். நாளைல
இருந்து ரெண்டு நாள் செம்ம ஃபன்”, என்று கண்களில் மின்னல் மின்ன ரிது சொல்ல,

அவள் அழகை கண்களால் பருகிய வண்ணம், “நீ யூனிபார்ம் போட்டு நான் பார்க்கணும் டாலு”,
என்றான்.

“நான் என்ன சொல்றேன். நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க அபிம்மா..”, என்று அவன் தலையில்
அவள் தட்ட,

“பார்த்தியா, போலீஸ்காரின்னு காட்ற.. இப்படி அடிக்கிறியே?”, என்று போலியாய் கண்ணீரைத்
துடைத்தவனை நக்கலாக பார்த்த ரிது,

“இந்த ரிஷி, யூனிபார்ம் மட்டும் தான் கொண்டு வந்திருக்கான். என் கன், என் லத்தி எதுவும்
இன்னும் வந்து சேரல.”, என்று உதடு மடித்து சிரிக்க,

அவள் தேனூரும் அதரங்கள் பல்லிடுகில் அவதிப்படுவதை காண சகியாதவன், அதை விடுவிக்க,

“லத்தி, கன்னு சொல்லிட்டு இருக்கேன், ரொமென்ஸ் பண்றீங்களா? ஆளை பாரு. கிளம்புங்க
அப்பறம் ஆரூ போன் மேல போன் போடுவா.”, என்று அவனை அவள் விலக்க,

“பங்கு போன் மேல அவளோடத போடுவாளா இல்ல மாத்தியா?”, என்று கேட்டவனை அவள்
துரத்த, அவனோ கீழே சென்று தாயருக்கில் பவ்யமாக நின்று கொண்டான்.

இரண்டு தட்டுகள் எடுத்து உணவை வைத்த சங்கரி, வேகமாக ஓடி வந்த மருமகள், தன்னை கண்டு
சடன் பிரேக் போட்டதை பார்த்து நமுட்டு சிரிப்புடன்,

“கண்ணா இந்தாங்க, ரெண்டு பேரும் சாப்பிடுங்க. ஆரூ  போன்ல கூப்பிட்டா. உங்களை சீக்கிரம்
பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கு அனுப்பச் சொன்னா.”,என்று அவர்களிடம் தட்டை திணிக்க,

ஸ்வாதியின் மகள், ஆசையாய் ரிது மடியில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு ஊட்டியபடி,
சாப்பிட்ட தன் அன்பு மனைவியை ரசித்துக்கொண்டே இருக்க, செல்போனில் புலனச்செய்தியின்
சத்தம் கேட்க,

கையில் எடுத்தான் அபி.

“உன் பொண்டாட்டியை சைட் அடித்தது போதும். சாப்பிட்டு கிளம்பு.”, என்று ஒரு எண்ணில்
இருந்து தகவல் வர, திருதிருவென்று விழித்த அபியின் அருகில் வந்த சங்கரி, அவன் முகத்துக்கு
முன், ஒரு லேட்டஸ்ட் மாடல் போனை ஆட்டினார்.

“அம்மா.. வாவ் சூப்பர். எப்போ வாங்கின?”

“நான் எங்க வாங்கினேன். ரிது வாங்கிக்கொடுத்தா. இதுல முக்கியமான விஷயம் எல்லாம்
சொல்லிக்கொடுத்து, தமிழ்ல செய்தி அனுப்ப கூட சொல்லிக்கொடுத்தா தெரியுமா?”, என்று
பெருமையாக சொன்னார்.

“சாரிம்மா. உன்கிட்ட போன் இருக்கேன்னு நான் விட்டுட்டேன். இதெல்லாம் செய்யணும்ன்னு 
எனக்கு தோணால.”,என்றான் மென்மையாக.

“அட இப்பவும் இதெல்லாம் எனக்கு பெருசு இல்ல கண்ணா. ஆனா பாரேன் இந்த பொண்ணு
எப்படி இருக்கான்னு. ரொம்ப நல்ல பொண்ணு டா. கோபப்படாத. அவ்ளோ தான் நான்
சொல்லுவேன்.”, என்றார்.

“சரிம்மா”,என்று உணவில் கவனம் வைத்தவன், மனைவியை அழைத்துக்கொண்டு அந்த பெரிய
மாலை அடைந்தான்.

பார்க்கிங் ஏரியாவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியவன், ரிதுவின் தோளில் கை போட்டு
அணைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அவள் கடக்கையில் அந்த பாதுகாப்பு இயந்திரம் பீப்
ஒலியை எழுப்பியது.

சோதனை செய்ய வேகமாக வந்த பெண்ணிடம், தன் அடையாள அட்டையை காட்டியவள்,
பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்திருப்பதாக சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

“ஏய் காலைல கன் இல்லன்னு சொன்ன?”

“ஆமா. என் போலீஸ் கன் இல்ல. அவன் இன்னும் அதெல்லாம் கொண்டு வரல.”, என்றாள்
கூலாக.

“அப்போ இது?”, என்றதும்,

“என்னோட பாதுகாப்புக்காக, நான் லைசன்ஸ் வாங்கி வைச்சிருக்கற என்னோட துப்பாக்கி.
பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அபிம்மா. குண்டுக்கு கணக்கு சொல்லணும்ன்னு கவலைப்பட்டா
நம்ம உயிர் மிஞ்சாது.”, என்றவள் ஆருவை கண்டுகொண்டு கையசைக்க,

இவள் எப்போதும் கவனமாக இருக்கிறாள் என்று மனைவியை எண்ணி பெருமை கொண்டான்
அபினவ்.

அந்த மாலையே ஆருவும் ரிதுவும் புரட்டிப்போட்டு, தங்கள் தேவைகளை வாங்கிக்கொள்ள,
ஹர்ஷாவும் அபியும் அவர்களுக்கு சுமைதாங்கியாக மாறிபோனார்கள்.

எல்லாம் முடித்து, எப்போதும் போல பெண்கள் இருவரும் ஐஸ்க்ரீம் சாப்பிட பெஸ்கின்
ராபின்சுக்குள் நுழைய, அபி யோசனையாக இருவரையும் உற்று நோக்கினான்.

“என்ன பங்கு கண்டுபிடிச்சியா இல்லையா? இதுங்க யாருனே தெரியதப்போ கூட இதே மாதிரி
ஒரு ஐஸ்கிரீம் பார்லர்ல மீட் பண்ணி இருக்கோம். சிஸ்டர் பரவல்ல, ஆனா இந்த ஐஸ்கிரீம்
இருக்காளே அப்போவே என்னை கலாய்ச்சா டா.”, என்று ஹர்ஷா சொல்ல,

நினைவு வந்தவனாக, “அப்போ என் அபர்ணாவை பார்த்த அன்னைக்கு தான் நான் வேலைக்கு
போக முடிவு எடுத்திருக்கேன். என் அபர்ணா என வாழ்க்கையில் வந்த அப்பறம் தான் என்
வாழ்க்கையே மாறி இருக்கு. சோ ஸ்வீட். “, என்று நின்ற நிலையில் அபி சிலாகிக்க,

“அடேய் பங்கு.”, என்று அவனை தள்ளிக்கொண்டு சென்றான்.

அவரவர் வீட்டுக்கு சென்று கிளம்பி, அபியையும் ரிதுவையும் ஹர்ஷாவின் காரில்
ஏற்றிக்கொண்டு ரிசார்ட்  நோக்கி விரைந்தனர்.

★★★★
��அகலாதே ஆருயிரே��
��59��

இருள் பரவ ஆரம்பித்த அந்த வேளையில் கிழக்கு கடற்கரை சாலை வண்ண விளக்குகளால்
ஜொலித்துக்கொண்டு இருந்தது.

ஹர்ஷா அவனின் ரெனால்ட் டஸ்டர் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஸ்டியரிங்கில் தாளம்
போட்டபடி  ,” எனை மாற்றும் காதலே.. எனை மாற்றும் காதலே..”, என்று சித் ஸ்ரீராம் பாடிய
வரிகளை முணுமுணுத்தபடி வர, அவனை ரசித்தபடி பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆருஷி,
தலையசைத்துக்கொண்டு இருந்தாள்.

பின் இருக்கையில் அபி ஓர் ஓரமாக அமர்ந்திருக்க, அவன் மடியில் தலை வைத்து
தூங்கிக்கொண்டு இருந்தாள் ரிது.

அபி அவள் முகத்தில் புரண்ட குழலை ஒதுக்கியபடி, அவளின் பட்டுக்கன்னத்தை
வருடிக்கொடுத்தான். அவன் எதிர்பாராமல் நிகழ்ந்த திருமணம். அவன் மனம் விரும்பிய காதலி.
அவனின் சொந்த அத்தை மகள். அதை விட அவன் வாழ்வை திசை மாற்றிய அன்று சந்தித்த
அவனின் தேவதை என்று ரிதுவை.. இல்லை.. அவன் அபர்ணாவை கண்களால் வருடியபடி
இருந்த அபியின் கவனத்தை ஆருவின் செருமல் கலைக்க,

“என்ன டி?”, என்றான் எரிச்சலாக,

“அய்ய..என்ன ஜே.பி. ஓவரா பண்ணற.. இப்போ தான் மேடம் உன் ஆளு. ஜிண்டு போட்டதுல
இருந்தே அவ என் ஆளு. ஓய் லாலிபாப் சொல்லிவை உன் பங்கு கிட்ட”, என்று அபியிடம் கெத்து
காட்டி, ஹர்ஷாவை மிரட்டினாள் ஆருஷி.

இரண்டு நாட்களாக சரியாக உறங்காத ரிது, எவ்வித தொந்தரவும் இல்லாமல் சற்று நேரம்
உறங்கட்டும் என்று நினைத்த அபிக்கு கிடைத்ததென்னவோ ஆருஷியின் முறைப்பும், திட்டுமே.

ஆரம்பத்தில் கத்தாதே, எழுப்பாதே என்று கடிந்தவன், மெல்ல மெல்ல இறங்கி வந்து, “என் செல்ல
குரங்குல்ல.. பிளீஸ்”, என்று ரிசார்ட் வரும் வரை கெஞ்சி மனைவியின் தூக்கத்தை பாதுகாத்தான்
அபினவ்.

அந்த ரிசார்டின் முன்னே காரை நிறுத்திய ஹர்ஷா, ஆருஷியை நோக்கி, “நீ சொன்னபடி ரிசார்ட்
வந்துட்டடேன். இப்போவாவது என்ன பிளான்னு சொல்லு ஐஸ்க்ரீம்” என்றான்.

“இது நாம தங்கப்போற ரிசார்ட். அவ்ளோ தான் லாலிபாப். பிளான் எல்லமே நாளைக்கு தான்.
இன்னிக்கு ரிசார்ட் பீச்ல கேம்ப்  ஃபயர்க்கு சொல்லி இருக்கேன்”, என்றாள்.

அபியோ,”மெதுவா பேசு டி. அபர்ணா தூங்கறா.”, என்றதும் ,

“ஹேய்.. அடி வெளுத்திடுவேன். எழுப்பு டா உன் பொண்டாட்டியை. ஆளைப்பாரு. நாங்க
கஷ்டப்பட்டு இங்கயும் அங்கயும் டீட்டைல் எடுத்து எல்லாம் அரேஞ் பண்ணுவோமாம்,
மகாராணியார் தூங்குவாங்களோ?”, என்று கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைக் கொண்டு
அவளுக்கு அபிஷேகம் செய்ய,

அபி பதறிப்போய் கையில் கிடைத்ததைக் கொண்டு ஆருவை அடிக்க, “பங்கு நல்லா போடு”,
என்று விசிலடித்த கணவனுக்கு மீதி தண்ணீரால் தன் பணியை செவ்வனே செய்து முடித்தாள்
ஆருஷி. அவளின் கலகல சிரிப்பொலியில் எழுந்த ரிது. “ஏ மாடே நான் வீட்டுலையே
குளிச்சிட்டேன் டி”,என்று நிதானமாக சொன்னதும், அபி, “பாரு டாலு இவ செய்யற சேட்டையை”
,என்று புகாரளித்தான். “இதுக்கேவா அபிம்மா. கிளம்பறதுக்குள்ள உங்களை அழ வைக்காம
விடமாட்டா இவ. வேணும்ன்னா பாருங்க.”, என்று சிரித்த ரிதுவுக்கு டவலை தந்தது சாட்சாத்
ஆருவே தான்.

“எனக்கு??”, என்ற ஹர்ஷாவின் குரலை டீலில் விட்டவள், “இங்க பாரு ரெண்டு நார்மல் ரூம் தான்
இன்னிக்கு நைட்ல இருந்து, நாளைக்கு நைட் வரை. நாளைக்கு தான் ஹனிமூன் ஸ்வீட் ரூம்.
இப்போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, ட்ரெஸ் அப் பண்ணிட்டு பீச் சைட்ல கேம்ப் ஃபயர்
செட் அப். அப்படியே நைட் கேம்ப் அங்க தான்”, என்று சொல்லிக்கொண்டே உடமைகளை
இறக்கினாள் ஆருஷி.

அவள் சொல்வதற்கெல்லாம் தலையசைத்த ரிதுவை கண்டு ஆண்கள் இருவரும் திரு திருவென்று
விழிக்க, ‘என்ன?’, என்று செய்கையில் கேட்டாள் ரிது,

ஹர்ஷா அவள் அருகில் வந்து ,”சிஸ்ட்டா, இது நம்ம ரெண்டு செட்டுக்கும் ஹனிமூன் தானே. இவ
நம்மளை பீச்ல டெண்ட்ல தங்க சொல்றா.. நீங்களும் மண்டையை மண்டையை ஆட்டுறீங்க?”,
என்று முகம் சுருக்க,

அவனின் காதை திருகிய ஆருஷி, “வாழ்க்கை இன்னிக்கு ஒரு ராத்திரி மட்டும் தானா டா? இப்படி
எல்லாரும் ஒண்ணா இருக்க நேரம் கிடைக்கவே கிடைக்காது டா. கிடைக்கும்போது
அனுபவிக்கணும் லாலிபாப். நாளைக்கே ரிது ட்ரான்ஸ்பர் ஆகி போய்ட்டா? இல்ல உனக்கு நல்ல
ஆப்பர்சுநிட்டி வந்து வெளிநாடு போய்ட்டா? மனைவியா நான் உன்னோட தான் இருப்பேன்.
ஆனா உன் பங்கு? என் ரிது? யோசிச்சியா? இன்னிக்கு ஒரு நைட் தான் பீச் சைட் ஸ்டே.
நாளைக்கு ஸ்வீட் ரூம் சொல்லிட்டேன் லாலிபாப். இது என் ஆசை டா”, என்று ஏக்கமாக
சொன்னவளை கண்டவன் அணைத்துக்கொண்டு,

“சாரி டி நானும் சராசரி ஆம்பளை மாதிரி பேசிட்டேன்.”, என்றதும்,

ரிது,”எல்லாரும் அப்படி தான் ப்ரோ. நோ ப்ராப்ளம். அவ என்கிட்ட இதெல்லாம் ஏற்கனவே
சொல்லிட்டா. அதான் நான் தலையை ஆட்டிட்டு இருந்தேன்”, என்றதும்

அந்த நொடி முதல் அதை ஹனிமூன் ட்ரிப்பாக நினைக்காமல் ஆண்கள் இருவரும் தங்கள்
துணையோடும், நட்போடும் இணைந்து இந்த இரண்டு நாட்களை மகிழ்வோடு கழிக்க முடிவு
செய்தனர்.

ரூமுக்கு சென்று உடை மாற்றி அனைவரும் ரிசார்ட் ரிசெப்ஷனை அடைந்த போது,
அவர்களுக்கான கைட் தயாராக காத்திருந்தார்.

இரவில் அவர்களை பீச்சுக்கு  அழைத்து சென்று இரு டென்ட்களை காட்டி, அவசர உதவிக்கு
அழைக்கும் முன்னெச்சரிக்கைகளையும் சொல்லிக்கொடுத்துவிட்டு செல்ல, கடலலை கால்களை
தழுவும் தொலைவில் ஆருவும் ரிதுவும் கைகளை பிடித்தபடி அலையில் ஆட, வெட்டவெளியில்
இருந்த பார்பிக்யூ அடுப்பில், காய்கறிகள், இறைச்சி எல்லாம் வெந்தபடி இருந்தது.

அபியும் ஹர்ஷாவும் தத்தமது மனைவியை கண்களால் ரசித்தபடி, அடுப்பில் இருந்த
ஸ்க்யூவர்ஸ்களை திருப்பி, உணவு சமமாக வெப்பம் ஏறி கருகாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
சில நிமிடங்களுக்கு பின், உணவை மிதமான சூட்டிற்கு மாற்றி விட்டு அவர்களும் பெண்களோடு
இணைய, இம்முறை இணைகளை கைகளால் தாங்கியபடி திடீரென்று நீரில் அவர்களை போட்டு
விட்டு கத்திக்கொண்டு ஆண்கள் இருவரும் ஓட, அபியை துரத்திய ரிது அவனை நீரில் தள்ளி,
அவளும் அவன் மேல் விழ, அடுத்து வந்த மிகப் பெரிய அலையால் இருவரும் உருண்டு பிரண்டு 
கரையில் ஒதுங்க, அங்கோ, ஆருஷி கையில் செமத்தியாக வாங்கிக்கொண்டு இருந்தான் ஹர்ஷா,
அவளை சமாளிக்க இயலாமல், அவளை கையணைப்பில் கொண்டு வந்து, அவள் கன்னத்தில்
கடித்து வைக்க, அவளோ மொத்தமாக அவன் மேல் ஏறிக்கொண்டு அவனை நீரில் தள்ள
முயற்சித்துக்கொண்டு இருந்தாள்.

இரண்டு ஜோடிகளும் நீரிலும் மணலிலும் ஆடிக்களைத்து, அப்படியே கரையில் படுத்து,
வானத்தை பார்க்க, பால்நிலா ஐந்தாம் பிறையோ, ஆறாம் பிறையோ அரைவட்டமாக உள்ளே
குழிவாய் அழகாய் இருக்க, ஆண்களுக்கு தன் மனைவியின் இடையே அது நினைவுபடுத்த,
சீண்டலில் இறங்கியவர்களை அடித்து, உதைத்து உணவு உண்ண இழுத்து வந்தனர் பெண்கள்.

ஆரூ ஹர்ஷாவுக்கு ஊட்டிவிட்டவள், ரிதுவுக்கு ஊட்ட கை நீட்ட, அவளோ தன் கணவன்
கைகளால் உணவு உட்கொள்ள, செல்லமாய் சுணங்கினாலும், அவளும் இப்படி அன்பும்,
காதலுமாய் வாழத் தானே விரும்பினோம் என்று மனதை தேற்றிக்கொண்டு , பழங்கதைகள் பல
பேசிக்கொண்டு இருக்க, இரவின் குளிரில் ஆண்களின் அருகில் சற்று நடுங்கிய பெண்களை,
அங்கிருந்த விறகுகளை கொளுத்தி ஆதரவாக அமர்ந்தனர் அபியும் ஹர்ஷாவும். சற்று
நேரத்திற்கெல்லாம் அவரவர் டெண்டுக்கு பெண்களை அழைத்து சென்று  உறங்க வைத்து விட்டு,
முதலில் அபி வெளியேறி ஒரு குளிர்பானத்தோடு கனன்று கொண்டிருந்த கனப்பின் முன் அமர,
அவனை முதுகோடு அணைத்துக்கொண்டு அமர்ந்தான் ஹர்ஷா.

“வா பங்கு. என்ன இவங்க என்னென்னமோ பிளான் பண்றாங்க. நாம இயல்பா என்னமோ
யோசிச்சா, இவங்க ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறாங்க இல்ல டா?”, என்ற அபியிடம்,

“உண்மையிலேயே ஆருஷிக்கு ரிதுன்னா உயிர் டா. என்னை விட அவங்களை தான் பிடிக்கும். 
நான் அவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுறது, அவங்க பதவிக்காக இல்ல பங்கு. அவங்க
மனசுக்கு. அன்னைக்கு அவங்க எங்களை வழி நடத்தலன்னா என்ன ஆகி இருக்குமோ?” என்ற
ஹர்ஷாவை தோளோடு அணைத்த அபினவ்,

“ம்ம் தெரியும் டா. நானும் ஆரூ சொல்லி கேட்டிருக்கேன்”, என்று பேச்சு ரிது, ஆருவை சுற்றியே 
சென்றது,

“அப்பறம் பங்கு எப்போ பிசினஸ் ஆரம்பிக்க போற?”, என்று அபி கேட்டதும்,

“இன்னும் ஒரு வருஷம் போகட்டும் பங்கு. பாட்டி தாத்தா வீட்டை மீட்டுக்கொடுத்தாச்சு, அடுத்து
தொழில் முதலீட்டுக்கு சேர்க்கணும். அதான் கொஞ்சம் பிளானிங்ல இருக்கோம். அதனால தான்
ஆரூ உங்களையும் டிஸ்டர்ப் பண்றா.”, என்று ஹர்ஷா சங்கடமாக நெளிய,

“டேய் இது மாதிரி ட்ரிப் கிடைக்கிறது வரம் டா. நாம நண்பர்கள், யாரையோ கல்யாணம் பண்ணி
இருந்தா இப்படி நாம உக்காந்து பேசிட்டு இருக்க முடியுமா சொல்லு.”

“ஆமா  பங்கு. சிஸ்ட்டா ரொம்ப அன்பானவங்க இல்ல.. “,என்று ரிதுவை அவன் சிலாகிக்க,

“ஆமா பங்கு. எனக்கு வாழ்க்கையே நிறைஞ்சு போன மாதிரி இருக்கு டா. ஆரூ கொஞ்சம்
சேட்டை தான் ஆனா ரொம்ப நல்ல பொண்ணு டா”, என்று தன் தோழிக்காக அவன் சான்றிதழ்
வழங்க,

“டேய் நான் நல்லவ இல்லன்னு அவன் சொன்னானா என்ன? மணியை பாருங்க டா பக்கிகளா. 
படுங்க டா. நாளைக்கு முழு நாளும் பெரிய பிளான் இருக்கு டா.”, என்று திட்டி, கையோடு
கணவனை இழுத்துச்சென்றாள் ஆருஷி.

அபி மட்டும் கனப்பின் அருகில் படுத்தவன், வானத்தில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு
இருந்தான்.

“என்ன எவ்ளோ ஸ்டார் இருக்கு? எண்ணியாச்சா?”, என்று அவனுக்கு பக்கவாட்டில் இருந்து
குரல் வர, தலையை திருப்பினால், உரசும் அளவுக்கு அருகில் இருந்த அவனின் அபர்ணா,

“என்ன அபிம்மா, தனியா ஏதோ பீலிங்ல இருந்த மாதிரி இருந்ததே? என்ன??”, என்றதும்,

“இல்ல டா. என் வாழ்க்கையில ஏதோ மாயம் செஞ்சது போல நீ வந்துட்ட , வாழ்க்கை  அழகா
மாறிபோச்சு. அதான் யோசிக்கிறேன்”, என்று சொல்லி அவளுக்கு அருகில் அவன் நகர,

அவளோ வாட்டமாக, அவன் மார்பில் தலை வைத்து அந்த கடற்கரை மணற்பரப்பில்  அவனோடு
கால் விரல்களால்  செல்ல சண்டையிட்டுக்கொண்டு இருந்தாள்.

அவர்கள் அந்த டெண்டிற்கு  செல்லவே இல்லை, அந்த கடலன்னை அவர்கள் கால் விரல்களை
முத்தமிடும் தொலைவில் படுத்துக்கொண்டு இரவெல்லாம் கதையளந்து கொண்டு இருந்தனர்.

அதிகாலை சூரியன் ஆரஞ்சு பந்தாக கடலன்னையிடமிருந்து பிரசவமாகி வர,அதை ரசித்த
அபியின் தோளில் அழகிய கிளியாக ரிது இருந்தாள்.

அவள் கண்களில், அந்த செந்நிற பந்து தெரிந்தாலும், மனதில் அதற்குள் அபியின் முகமே
தெரிந்தது.

எழுந்து வந்த ஆருஷி, மூவரையும் அடிக்காத குறையாக இழுத்துக்கொண்டு சென்றவள், விரட்டி
விரட்டி கிளப்பி,அழைத்துக்கொண்டு சென்ற இடம்  ஏ.டி.வி  என்று அழைக்கப்படும் ஆல்
டெர்ரைன் வேகிக்கிள் (all terrine vehicle) ட்ராக்கிற்கு. அது கடல் மண் பரப்பில் கூட ஓடும்
வகையான வாகனம், நான்கு சக்கரம் பொருந்திய அது, இரண்டு வடிவமைப்பில் இருந்தது.

ஒன்று இரு சக்கர வாகனம் போல ஹாண்டில் பார் பொருத்தியது, மற்றொன்று கார் போல
ஸ்டியரிங் பொருத்தியது. ஆளுக்கு ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு அதெற்கென்று
அமைக்கப்பட்ட பாதையில் சற்று நேரம் ஓட்டிப் பழகியவர்கள், அதற்குப்பின் ஒரே
கொண்டாட்டமாக, நீயா? நானா? என்று போட்டி போட்டுக்கொண்டு அந்த வாகனத்தை
வளைத்து வளைத்து ஓட்ட,

மகிழ்ச்சி பஞ்சமே இன்றி அங்கே உலவ, நால்வர் முகத்திலும் புன்னகை அளவில்லாமல்
ஆர்பரிக்க, அடுத்தடுத்த பொழுதுபோக்கு அம்சங்களில், அவர்கள் தங்கள் பதவி, படிப்பு, அறிவை
தொலைத்து குழந்தைகளாகக் குதுகலிக்கத் துவங்கினர்

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��60��

நால்வரும் ஆளுக்கு ஒரு ஏ.டி.வி எடுத்துப் போட்டி போட்டவர்கள்,ஓடுபாதையில் போட்டியை
முடித்துக்கொண்டு, வுட்ஸ் என்று சொல்லப்படும் காட்டுப்பாதைக்கு இருவரும் அமரும் வகையை
தேர்ந்தெடுத்து, தன் துணையோடு இணைந்து கொண்டனர்.

கடற்கரையை ஒட்டியுள்ள காடுகள் பெரும்பாலும் சவுக்கு, மூங்கில் வகைகளை சேர்த்ததாகவே
இருக்கும். பாதுகாப்பான சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு உரிய இடமாகவே அவை இருக்கும்.

அதனால் மேட்டிலும் பள்ளத்திலும் துள்ளிக் குதித்த அந்த வண்டியை ஆண்கள் அனாயாசமாக
ஓட்ட, பெண்கள் தங்கள் கணவன் முன்னிலை பெற வேண்டும் என்று உற்சாகக் கூச்சல்
போட்டுக்கொண்டு வந்தனர்.

இரண்டு மணி நேர பயணத்திற்கு பின், கடற்கரையோரம் உள்ள கையேந்திக் கடையில் மதிய
உணவை முடித்தவர்கள். சற்று காற்று வாங்க அமர்ந்தனர்.

“சூப்பர் ஆரூ. நான் எதிர்பார்க்கவே இல்ல. என்ன தான் புல்லட் ஓட்டினாலும் இதை
ஓட்டும்போது செமயா இருந்தது”, என்று ஆருவை கட்டியணைத்து ரிது கூற,

“நீ புல்லட் ஓட்டுவியா.?”,என்று ஆச்சர்யமாக அபி கேட்க,

அவன் காதருகில் வந்த ஹர்ஷா, “பங்கு, அவங்க போலீஸ் டா. கெத்தா அதுல தான் சுத்துவாங்க.”,
என்று சொன்னதும்,

ரிது, “எனக்கு அது மேல ஒரு கிரேஸ் அபிம்மா. யூனிபார்ம் போட்டு அதுல போகும்போது மிடுக்கா
ஒரு பீல் வரும். அதே கேசுவல்ஸ் போட்டு போகும்போது
பறக்கற பீல் வரும்”, என்று ரசித்துச் சொல்ல,

“பங்குக்கு வண்டி ஆசையெல்லாம் இல்ல சிஸ்ட்டா, அவனைப் பொறுத்தவரை வண்டி ஒரு
இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்குப் போற கருவி, அதை அதுக்கு மேல யோசிக்க
மாட்டான். இப்போ வரைக்கும் அழகி அக்கா கொடுத்த ஸ்ப்ளெண்டர் தான் வச்சிருக்கான்.”,
என்று ஹர்ஷா தன் நண்பனைப் பற்றிச் சொல்ல,

“அச்சோ எல்லாரும் எழுந்திருங்க”, என்று கூச்சல் போட்டாள் ஆருஷி.

“என்ன டி இவ்ளோ நேரம் அந்த வண்டில செம சுத்து சுத்தி டயர்டா இருக்கு டி”, என்று அபி
சிறுபிள்ளை போல எழுந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தான்.

அபியின் இந்த செயலில் கடுப்பான ஆருஷி, “ரிது அவரை இழுத்துட்டு வா. உனக்கு பிடிச்ச
ஸ்போர்ட் இப்போ”, என்று சொல்லவும், ரிதுவுக்கு முன்னால் அபி எழுந்து கிளம்ப, மற்ற மூவரும்
நமுட்டுச் சிரிப்புடன் அபியைத் துரத்த,

அடுத்து அவர்கள் சென்றது அதே நிறுவனத்தின் பின்னால் இருந்த ஒரு பகுதிக்கு. அங்கே
அவர்களுக்கான உடையை முதலிலேயே வாங்கி வைக்க ஏற்பாடு செய்திருந்தாள் ஆருஷி.

முழுக்கை சட்டை, பேண்ட் என்று நால்வரும் ஒரே மாதிரி உடையில் தயாராக, அவர்களை
அழைத்துச் சென்ற நபர், அவர்களுக்கான விளையாட்டு பகுதியில் விட்டு, அங்கிருந்த பொருளை
செய்முறை விளக்கம் கொடுக்க, ரிது முகத்தில் மகிழ்ச்சி என்றால் ஹர்ஷா முகத்தில் கலவரம்.

அவர்கள் சென்றது பெயிண்ட் பால் விளையாட்டிற்கு. துப்பாக்கியில் பெயிண்ட்டால் ஆனா
குண்டுகள் நிறப்பப்பட்டு இருக்க,  அதை மற்றவர் மேல் சுட்டு விளையாட வேண்டும். யார் மீது
குறைவான வண்ணங்கள் இருக்கிறதோ அவர் தப்பித்தவர் என்றும், அனைவர் மீதும் யாரின்
வண்ணம் அதிகம் இருக்கிறதோ அவர் சிறந்த குறி வைத்து சுட்டவர் என்றும் சொல்லிக்கொண்டு
நால்வரும் அவரவர் வண்ணத்தை தேர்ந்தெடுத்து தங்கள் துப்பாக்கியில் அதை அடித்துக்கொள்ள,
அவர்கள் பதுங்கிக்கொள்ள ஆங்காங்கே மணல் மூட்டைகள் இருந்தன.

நால்வரும், ஒருவரை ஒருவர் குறிவைத்து வண்ண வண்ண பெயிண்ட்களால் தாக்க, ரிதுவின் குறி
தவறாமல் அனைவரையும் தாக்கிறது, அவள் நிலத்தில் உருண்டும், மூட்டைகளுக்கு பின்னால்
பதுங்கியும் சுட்ட அழகை நன்றாக நடுவில் நின்று அபி கவனிக்க, அவனை தங்கள் வண்ண
குண்டுகளால் ஆருவும், ஹர்ஷாவும் நனைக்க,

கணவனை காக்க எண்ணிய ரிது, அவனையும் இழுத்துக்கொண்டு அடுக்கி வைக்கப்பட்ட மணல்
மூட்டைகளுக்கு பின்னால் மறைய,

“டாலு செமயா சுடுற டி. உன்னை பேசாம என்கவுண்டர் டீம்ல போட்டா ஒரு பய மிஞ்ச
மாட்டான்”, என்று அபி சிலாகிக்க,

“அபி.. இப்போ ஜெய்கிற வழிய பாருங்க. அந்த ரெண்டும் உங்க மேல கலரால அபிஷேகம்
பண்ணாத குறை பாருங்க உங்க ட்ரெஸ்ஸை.”, என்று அவனை அன்பாக கடிந்து கொண்டாள்.

அவளை கண்டு சிரித்தவன், “என் பங்கும், குரங்கும் தானே விடு. எப்படியும் நீ தான் ஜெயிக்கப்
போற அப்பறம் என்ன?”, என்று சிரித்த அபியின் கன்னத்தில் முத்தமிட்டவள், “ஒழுங்கா வின்
பண்ணனும். விட்டுக்கொடுக்க கூடாது. போராடி தோற்றா பரவாயில்லை. ஆனா விளையாடாம
தோற்று போனா நமக்கு நாமே ஏமாற்றிக்கிற மாதிரி.”, என்றாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அபியும், ரிதுவும் ஜோடி போட்டு, ஹர்ஷாவையும் ஆருவையும் தங்கள்
பெயிண்ட்டால் தாக்க, அவர்களும் ஜோடி போட்டு இவர்களை தாக்கினர்.

மகிழ்ச்சியாக ஆரம்பித்தது போட்டியாக மாறி, மீண்டும் மகிழ்ச்சியில் நிறைந்தது.

மாலை வேளையில் உடை மாற்றிக்கொண்டு கிளம்பியவர்களை வரவேற்ற ஒரு நபரை பார்த்து
ஆரூ சிரிக்க,

“ஏய் போதும் டி. நாளைக்கு பார்க்கலாம்.”, என்றான் ஹர்ஷா.

“இப்போ இப்படி சொல்ற நீ. என்ன ஸ்போர்ட்ன்னு தெரிஞ்சா முதல் ஆளா ஒடுவ டா என்
டால்டா”, என்று அவன் தலையில் ஆரூ தட்ட,

உண்மையில் அவள் பேச்சால் யாருக்கும் ஆர்வம் எல்லாம் வரவில்லை. விட்டால் கட்டிலோடு
ஐக்கியம் ஆகும் அளவுக்கு அனைவருமே சோர்ந்திருக்க,

ஆரூ ,”சரி எல்லாரும் மேலே பாருங்க. அப்பறமா நாம ஹோட்டல் போயிடலாம்”,
என்றதும்,நிம்மதியாக நிமிர்ந்தவர்கள் அடுத்த நொடி உற்சாகக் கூச்சல் போட்டனர்.

ஆம் அங்கு பறந்து கொண்டிருந்த பாரா க்ளைடேர்களை கண்டால் யாருக்குத் தான் ஆசை வராது?

பாரா க்ளைடேர்கள் என்பது ஒரு வகையில் பாராசூட் போல இருந்தாலும், மோட்டார் வைத்து
பறக்கக்கூடிய ஒன்று.

அதை இயக்க தெரிந்த ஒருவர் உடன் வர, மற்றவர் அதில் பயணிக்கலாம். வானத்தில் பறக்கும்
நெகிழ்வை கொடுக்கும் இவ்வகை விளையாட்டு கொஞ்சம் விபரீதமானது என்றாலும், பயிற்சி
பெற்ற ஓட்டுனர்களுடன் பயணிக்கும்போது வாழ்க்கையில் இதை ஒருமுறை அனுபவிக்க
வேண்டும் என்று தோன்றக்கூடிய ஒன்று தான்.

வானில் பாரா கிளைடர் ஏற ஆருஷி சந்தோஷ குரல் எழுப்பினாள். அவளை கீழிருந்து கண்டு மற்ற
மூவரும் குதித்து மகிழ, அவளோ வானில் மிதந்தபிடி கையசைத்துக் காட்டினாள்.

அதே போல மற்ற மூவரும் தனித்தனியாக வானில் பறந்தபடி கடலையும் அலைகளையும் ரசித்து,
சென்னையின் எழிலை வானிலிருந்து கண்டு குரலெழுப்பி மகிழ,

அன்றைய நாளின் விளையாட்டுக்கள் ஒரு முடிவுக்கு வந்தது.

நால்வரும் சிறு பிள்ளைகள் போல, கைகோர்த்து ஏதோ பாடல் பாடியபடி ரிசார்ட்டை
அடைய,அவர்களுக்கான புதிய அறை தயாராக இருந்தது.

“பங்கு. நாளைக்கு பாக்கலாம் டா.”, என்ற ஹர்ஷாவிடம் ,”ராத்திரி சாப்பிட வேண்டாமா?”,
என்றாள் ஆருஷி.

“எருமை. காலைல இருந்து அந்த ஆட்டம் போட்டதுக்கு போய் படுத்தா நாளைக்கு மதியம் தாண்டி
எழுந்துப்பேன். சோறாம்ல.. போவியா” என்று அவளை முதுகை பிடித்து தள்ளிக்கொண்டு
போனான் ஹர்ஷா.

“டேய் அவளுக்கு பசிக்கும் டா.”,என்று நண்பனிடம் சொன்னவன், “ஆருஷி மறக்காம ரூம்க்கு
கொண்டு வர சொல்லி சாப்பிடும்மா”, என்று அக்கறையாக சொல்ல,

“தான்க்ஸ் ஜே.பி”, என்ற அவளின் குரல் காற்றில் மிதந்து வந்தது.

அபி அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு தன் மனைவியைத் தேட, சற்று தள்ளி, தீவிர
முகபாவத்தோடு போனில் பேசிக்கொண்டு இருந்தாள் ரிதுபர்ணா.

அவள் வரும்வரை ரிசெப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்தவன், செய்தித்தாளை
புரட்டிக்கொண்டு இருந்தான்.

அவனை நோக்கி வேக நடையோடு வந்த ரிது, “ரூம் எங்க மா? போகலாமா?”, என்று கேட்டதும்,
பாதுக்காப்பாக அவளை சுற்றி கைபோட்டு அவர்கள் அறைக்கு அழைத்துச் சென்றான் அபி.

எப்போதும் அடுத்தவருக்கு பாதுகாப்பு வழங்கும் தனக்கு அந்த உணர்வை கொடுத்த கணவனை
முறுவலோடு பார்த்த ரிது, அறைக்குள் வந்ததும் அதற்காக அவனுக்கு பரிசுகள் வழங்க,

“ஏ என்ன? திடீர்ன்னு?”, என்று அபி அவளை கண்ணோடு கண் நோக்க, ரிது, அவன் மார்பில்
தஞ்சமானவள்,

“அண்ணிங்க ரெண்டு பேரும் அவங்கவங்க வீட்டுக்கு போய்ச்சாம். அதான் அத்தையையும்
மாமாவயும் அம்மா வீட்டிற்கு போக சொல்லிட்டேன். ஓகே தானே?”, என்றாள்.

“அங்க எதுக்கு டா?”, என்று கேள்வியாக அபி வினவ,

“அங்க என் அப்பாவும், ரிஷியும் செய்யும் சேட்டை எல்லாம் பார்த்தாலே மாமாவுக்கு சில
விஷயங்கள் புரிய ஆரம்பிச்சிடும்.அப்பறம் அவரை வச்சே பெரிய அண்ணியை சரி
பண்ணிடலாம்.”, என்றாள் ரிது நம்பிக்கையாக.

“ஓ.. போலீஸ் மூளைன்னா இதானா?”, என்று ஆச்சர்யம் போல அபி கேலி செய்ய,
“இப்போ புரியாது. நாளைக்கு நைட் அங்க  போகும்போது நீங்களே புரிஞ்சுப்பீங்க அபிம்மா.”,
என்று அவன் தோளில் இடித்தவள்,குளியலறைக்குள் புகுந்தாள்.

“ஏய், நான் தான் ரிது பர்ஸ்ட் “,என்று அவனும் நுழைய, செல்ல சண்டைகள் பல நடந்து
கடைசியில் வெளியே தள்ளப்பட்டான் அபினவ்.

அறைக்குள் நுழைந்து அடுத்த நொடி ஆரூ என்று அங்கே ஒரு ஜீவன் இருப்பதையே மறந்தவனாக
கட்டிலில் உடை கூட மாற்றாமல் படுத்து உறங்க துவங்கினான் ஹர்ஷா.

“ஏய் லாலிபாப். எழுந்திரு. குளிச்சு ட்ரெஸ் மாத்திட்டு படு”, என்று சொல்லிக்கொண்டு அவள்
குளியலறைக்குள் செல்ல, அவள் திரும்பி வந்து உணவை ஆர்டர் செய்து, அவள் அதை வாங்கும்
வரை ஹர்ஷா எழாமல் போக,கடுப்பானவள்,

“நாளைக்கு வாட்டர் ஸ்போர்ட் டா. உன்னை எதுக்கும் கூட்டிட்டு போக மாட்டேன். இங்கேயே
தூங்கு “, என்று சொன்னாள் அப்போதும் அவன் எழுந்து கொள்ளாமல் இருக்க,

“நான் மட்டும் போய் கடலுக்கு அடியில பவளப்பாறை எல்லாம் பார்ப்பேன். அப்படியே ஷார்க்
கூட பார்ப்பேன்.”, என்று சொல்லிக்கொண்டு அவள் உணவை பிரிக்க,

“நிஜமாவா டி?”, என்று எழுந்து அவள் வைத்திருந்த சிக்கன் பீஸை அவன் எடுக்க,

“எது நிஜமான்னு கேக்குற? இந்த சிக்கனையா?”, என்று உணவை அளைந்தபடி ஆருஷி
கேட்டதும்,

“பிசாசு.நாளைக்கு கடலுக்குள்ள போறோமா?” என்றான்.

“போறோமா இல்ல தம்பி. நாங்க போறோம். நீ தூங்கு. வாழ்க்கையில தூக்கம் எவ்ளோ..
முக்கியம்..”, என்று அவனைப்போல அவள் பேசிக்காட்ட,

“ஏய் ரொம்ப பண்ற டி”, என்று அவள் மீது பாய்ந்தவன்,

அவள் உணவோடு சேர்த்து அவளையும் ஒரு வழியாக்கி, அந்த இரவில் ஊடலோடு கூடிய
இன்பத்தில் இருவரும் மறுநாள் பற்றிய கனவுகளோடு உறங்கிப்போயினர்.

★★★★

2 thoughts on “அகலாதே ஆருயிரே-55-60”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *