அத்தியாயம்-18
இளவழகி கதவை வெறுமென சாற்றி வைத்தார்.
எப்படியும் மகனும் மருமகளும் வருவார்களென்று உறங்கிவிட்டார்.
“கதவு மூடியிருக்கு” என்று அமிழ்தினி கூற, வண்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு, வந்தவன் கதவில் அழுத்தமாய் கைவைக்க திறந்தது.
அமிழ்தினி ‘அச்சோ ஒழுங்கா பார்க்கலையே’ என்று தோன்றினாலும், இவர் வீட்டுல என்ன மாதிரி சாத்துவாங்கன்னு இவருக்கு தானே தெரியும். அம்மா எல்லாம் செடிகிட்ட சாவி மறச்சி வைப்பாங்க.’ என்றவளுக்கு அர்ஜுன் மீது எஞ்சிய கோபம் இருந்தது.
வீட்டுக்கு வந்ததும் வராததும் ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு போனாள்.
குளித்து முடித்து தன்னை சுத்தம் செய்துக் கொண்டாள். வரும் வழியிலேயே இயற்கை உபாதை கழிக்க எண்ணினாள். ஆனால் பப்ளிக் டாய்லேட் உபயோகப்படுத்தாமல் வீட்டுக்கு வந்து உபயோகப்படுத்தும் ரகம்.
குளித்ததும் கூடுதலாய் பசிக்க ஆரம்பித்தது. எதற்கும் கிச்சனை உருட்டி விட்டு வர சென்றாள். எஞ்சியது எதுவானாலும் சாப்பிடும் முடிவோடு. ஆனால் அன்று பார்த்து எதுவும் இல்லை.
அறைக்குள் வந்து போர்வை போட்டு படுத்துக்கொள்ள, தலையை துவட்டிக் கொண்டு, ‘டயர் வேற பஞ்சரா போச்சு. காலையில காய்கறி சரக்கு வாங்கி வந்தா பஸ் ஸ்டாப் டீ கடையில் வச்சிட்டு பொறுமையா எடுத்தாரணும்.’ என்றவன் வயிறும் காந்தியது.
தன்னால் அமிழ்தினி பசியோடு உறங்க, “கடையில மாவு பாக்கெட் இருக்கு தோசை சுட்டு சாப்பிடு.” என்றான்.
“எனக்கு பசிக்கலை.” என்றாள். விட்டால் பெருங்குடல் சிறுகுடலை சாப்பிட்டு விடும். ஆனாலும் அவன் மீது கொண்ட கோபத்தால் தவிர்த்தாள்.
“ஏய்… பசிக்குதுன்னு முகறகட்டையில தெரியுது.” என்று கூப்பிட்டான்.
“என்னால கிச்சன்ல நின்று இப்ப தோசை சுட முடியாது. சட்னி செய்ய முடியாது. அங்க போய் லைட் போட்டா அத்தை எழுத்துப்பாங்க. பிறகு ஏன் ஹோட்டல்ல சாப்பிடலை கேட்பாங்க. எனக்கு சாப்பாடே வேண்டாம்” என்றாள் கோபமாக.
அர்ஜுனுக்கு அவள் கோபம் காட்டவும், லேசான கவலை.
கடைக்கு சென்று பண் எடுத்து வந்து நீட்டினான்.
“எனக்கு வேண்டாம்” என்று கூற, அவள் கையை பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி, “பசிக்குதுன்னு நல்லா தெரியுது. சாப்பிடாம படுத்தா தூக்கம் வருமா?” என்று பண்ணும் சின்ன சரத்தில் இருந்த ஜாமும் எடுத்து நீட்டினான்.
இதற்கு மேல் பசி தாளாது என்று வாங்கி சுவைத்தாள்.
மற்ற நேரமென்றால் ஒன்றையும் தின்று இருக்க மாட்டாள்.
மடமடவென சாப்பிட, “நீங்க?'” என்றாள்.
“பண்ணு இன்னிக்குன்னு பார்த்து இரண்டு தான் இருக்கு. பிஸ்கேட் இருக்கு எனக்கு பிடிக்காது. எனக்கு எதுவும் வேண்டாம்” என்றான்.
“இதென்ன பாவம். நான் சாப்பிட்டு வயிரை நிறைச்சிக்கிட்டேன். நீங்க எதுவும் சாப்பிடலைனா எப்படி? உங்களுக்கு மட்டும் வெறும் வயிற்றோட படுத்தா தூக்கம் வருமா?” என்று அவனை கடைக்கு இழுத்தாள்.
“அம்..அம்மாடி.. முழிச்சிக்கிட்டா பஞ்சாயத்தாயிடும்” என்று கூறினாலும் அவள் இழுத்து இழுப்பிற்கு சென்றான்.
தண்ணீரில் பிஸ்கேட் தொட்டு கொடுக்க விழுங்கினான்.
சுற்றி சுற்றி அவன் கடையை பார்த்து விழுங்கினானே தவிர அவளை ஏறிடவில்லை. அவளும் ஊட்டி விட்டாலே தவிர, கரிசனம் காட்டவில்லை.
கடைக்கும் ஹாலுக்கும் எட்டி பார்க்கும் கதவை சாற்றினான்.
“எ..எதுக்கு சாத்தினிங்க?” என்று வந்தவளை தக்காளி உருளை வெங்காயம் என்று கிடந்த பக்கம் இழுத்தான்.
காய்கறிகள் மீது உருளவும், அய்யோ தக்காளி என்றவளை மறுவார்த்தை பேச விடாது மஞ்சமாய் மாற்றிக் கொண்டான்.
“அத்..அத்தை.. வரப்போறாங்க. கதவு திறந்துடுமா? இங்கயேவா? என்ன நினைச்சிட்டு இருக்கிங்க?” என்ற எந்த வினாவிற்கும் பதில் தராமல் தன் கைகளை சுதந்திரமாய் படரவிட்டான்.
வினா கொடுத்தவள் மௌவிரதம் மேற்கொள்ள, கடையிலிருந்து பேனை தட்டி விட்டான்.
முகத்தில் வந்து காற்று மோத, கடைக்கு மேலே இருந்த சுவற்றின் ஜன்னல்கள் மூலம் சிறு வெளிச்சமும் வந்தது, காற்றும் வீசியது.
அவளை ஆக்கிரமிக்கும் நேரம் நைட்டி வசதியான ஆடை என்று புரிந்தது.
மூச்சு முட்ட, தாம்பத்தியம் முடியவும் அவன் கை வளைவில் தலையை பதித்து நெஞ்சில் கையை போட்டாள்.
வித்தியாசமான அனுபவம், இது போல இங்கே அமையும் என்று திட்டம் தீட்டாமல் நடந்தது.
அவன் அருகேயிருக்க எந்த வாடையும் நாற்றமும் இல்லை. நடந்து வந்த அலுப்பும், அர்ஜுனின் லீலையும் அவளை உறக்கத்தில் ஆழ்த்தியது.
அர்ஜுனுமே களைந்து ஓய்ந்து விட்டான்.
அதிகாலை அலாரம் வைத்திருந்தான். எங்கே காய்கறி வாங்க செல்லாமல் உறக்கத்தில் இருந்திடுவோமோயென.
அதன் புண்ணியத்தில் போனில் சப்தம் வரவும் கண்ணை கசக்கி எழுந்தான்.
அருகே அமிழ்தினி அவனது சட்டையை கன்னத்தோடு வைத்து உறங்க, கதவை மெல்ல திறந்து பார்த்தான். அன்னை இன்னமும் உறங்குமிடத்தில் இருக்க, பெண்ணவளை எழுப்பாமல் கையில் ஏந்தி தங்கள் அறைக்கு வந்து மெத்தையில் கிடத்தினான்.
தலையை இடது கையால் கோதி முடித்து, பல் விளக்கி லேசாக குளித்து முடித்தான்.
பணத்தை எடுக்க கடைக்குள் வர, சிதறிய காய்கறி ஷாம்பு சரங்கள் என்று மாட்டினான். பிறகு நேரமாகின்றதென்று கிளம்பிவிட முடிவெடுத்தான்.
தான் டிப்ளமோ படித்த காலத்தில் உபயோகித்த சைக்கிள் எடுத்து சென்றான். டீக்கடையில் நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறியமர்ந்து உறங்கினான்.
இங்கே “இதென்ன இப்படி கிடக்கு” என்று புலம்பும் சப்தம் கேட்டு அமிழ்தினி பதறி இமை திறக்க, கட்டிலில் அவர்கள் அறையில் இருக்கவும் ஒன்றும் புரியாமல், அவசரமாய் நைட்டி ஜிப்பை மேலே ஏற்றி விட்டு, சிகையை க்ளிப்பால் அடக்கி வந்தாள்.
“எ..என்னாச்சு அத்தை” என்று வேர்த்து விட்டது.
“பாரு அம்மு.. கடையில புதுசா நேத்து எலி வந்துயிருக்கு. எப்பவும் அர்ஜுன் கடை அடைக்கிறப்ப எலி தொல்லையே இருக்காது. நேத்து நான் சரியா பார்க்காம விட்டுட்டேன். எலி வந்துட்டு போயிருக்கு. அவன் வந்தான் என்னை திட்டுவான். இது கூட சரியா பார்க்காம கடையை அடைச்சிருக்கேன்னு.” என்று விவரம் தெரியாமல் கண்ணீர் வடித்தார்.
எந்த எலியின் வேலை இது என்று அறிந்த அமிழ்தினிக்கோ, “அய்யோ அத்தை அவர் திட்டமாட்டார். நீங்க போங்க நான் பார்க்கறேன்” என்று டீ போட அனுப்பி வைத்தார்.
மடமடவென உருண்டு எங்கெங்கோ சென்ற உருளையை எடுத்தாள். உருளை இருந்ததை இருட்டில் தள்ளி விட்டது அமிழ்தினி தான். என்னதான் எடுத்து வைத்தாலும் சில உருளை உருண்டு இருந்தது. அதனை எடுத்து கூடையில் போட்டாள். அரிசி மூட்டைய ஏற்கனவே நெய்ந்து போய் இருக்க, இருவரின் கைகள் இணைந்த நேரம் அர்ஜுன் நகத்தால் கிழிப்பட்டிருந்தது. அதிலிருந்து அரிசி வெளியே குமிந்திருந்தது. கூடுதலாக இவளை கடித்தது போதாதென்று தக்காளியை பாதி கடித்திருந்தான்.
இருநூறு கிராம் அளவிற்கு அரிசி வெளியே குமிந்திருக்க, பாதி கடிப்பட்ட தக்காளி கண்டு இளவழகி எலியென்று முடிவு கட்டிருந்தனர்.
அதனை எல்லாம் சரிசெய்து தலையில் அடித்து கொள்ளாத குறை. ஆனாலும் வெட்கம் பூத்தது.
அக்கா வீட்டில் தங்கிருந்தால் நிச்சயம் இந்த கூத்து நடந்திருக்காது. எதுவும் நல்லதுக்கென்று நினைத்தாள்.
அமிழ்தினியை பொறுத்தவரை படிப்பு காரணம் காட்டி மறுப்பதாக இருந்தாள் முன்பே தந்தையிடம் மறுத்திருப்பாள்.
தந்தையே கடை வைத்து கஷ்டப்பட்டு தானே தன்னை தன் அக்காவை வளர்த்தார். அதனால் தந்தை இறக்கவும் டிப்ளமோ படிப்பு படித்ததாக தரகர் கூற அர்ஜுன் மீது மதிப்பு வந்ததே தவிர கல்லூரி படிக்காதவன் என்ற கோணத்தில் அவள் சிந்திக்கவில்லை. அதனால் பெரிய விஷயமாக மூளைக்கு எடுத்துக்கவில்லை.
தான் படித்ததை பொய் உரைத்ததும் அவளுக்கு பெரிதான விஷயமாக இல்லை. ஏனெனில் படிக்காதவள் என்று கூறி படித்தவளாக இருக்க அதனால் என்ன பிரச்சனை வரப்போகின்றது என்ற அலட்சியம்.
ஆனால் இங்கொருவன் உண்மை தெரிந்தும் உலாத்தி தன்னை நோட்டமிட்டு, லேப் எலியாக தன்னை மதிப்பாளா? தனக்கானவளா? என்று ஐயம் கொண்டு அவனை தான் தாழ்த்திவிடுவதாக எண்ணி கோபத்தில் சுற்றுவது அமிழ்தினி அறியாததே.
இளவழகி அம்முவிற்கு டீ கொடுத்து, படம் பார்த்திங்களா? நல்லாயிருக்கா? நைட்டு வெளியே சாப்பிட்டிங்களா? எத்தனை மணிக்கு வந்திங்க? ரோட்டுல ஆள் நடமாட்டம் இல்லையோ? இவன் ஏன் பைக்கை இங்க வச்சிட்டு போயிட்டான்?” என்று கேள்விக் கேட்க, ”படம் நல்லாயிருந்தது அத்தை. வெளியேவே சாப்பிட்டோம். ரோடு தான் இருட்டிட்டு இருந்தது. இங்க வரவும் பஞ்சர் அத்தை. அதான் வண்டியை விட்டுட்டு போயிருக்கார்.” என்று கூறவும், “அடக்கடவுளே. பஞ்சரா.. பிறவு… நடந்து வந்ததுக்கு முனங்கியிருப்பானே. என்னை வேற திட்டியிருப்பான். அவனை படத்துக்கு போன்னு வற்புறுத்தி அனுப்பியது நான் தானே.” என்று பயந்தார்.
“அதெல்லாம் திட்டமாட்டார் அத்தை. நீங்களா அவரை டெரரா பார்க்கறிங்க. அவர் வெல்லக் கட்டி மாதிரி. பார்க்க பிசுபிசுன்னு தள்ளி நிறுத்த தோணும். சுவைச்சா இனிப்பா இருப்பது போல.
வெளியே கத்தினாலும் அன்பா இருக்கார்” என்று கூறினாள்.
இளவழகிக்கு முனுக்கென்று கண்ணீர் வழிந்தது.
“பெத்தவ என்னிடம் நல்ல பெயர் எடுக்கறது சுலபம் அம்மு. கட்டினவளிடம் நல்லம் பெயர் வாங்கறது தான் கஷ்டம். என்ன பார்த்துக்கிட்டாலும் என் அப்பா வீட்ல எப்படியிருந்தேனு பேசறவங்க தான் பொண்ணுங்க.
நீ இந்தளவு அர்ஜுனை பத்தி புரிஞ்சி பேசறது மனசுக்கு நிறைவா இருக்கு. நான் இல்லைனாலும் அவனை நல்லா பார்த்துப்ப சந்தோஷம் அம்மு” என்று தவிப்பாய் பேசினார்.
அமிழ்தினிக்கு அதன் பின்னரே ‘நேத்து அக்கா வீட்டுக்கு வாங்கன்னு சொன்னதுக்கு அந்தளவு முகம் காட்டினார். நைட் சாப்பாடு கூட ஹோட்டலுக்கு போகாம வந்து திட்டினேன். நானா எப்படி அவரை இந்தளவு புகழறேன். அத்தை சொன்னதுக்கு பிறகு தான் அர்ஜுனை இந்தளவு புரிஞ்சுக்கிட்டேன்.’ என்று வியந்தாள்.
காதலும் காமமும் இல்லாத உலகம் ஏது? உயிர் ஏது? இதில் மனிதபிறவியான தாங்கள் என்ன விதிவிலக்கா? நேசித்தால் பாசம் பிறக்காதா?!
அந்த ‘முட்தாடி வேந்தனின்’ மீது காதல் பிறக்காதா?!
அர்ஜுன் வருகைக்கு காத்திருந்தாள் அமிழ்தினி.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

❤❤❤❤❤
Interesting👍 But shop nilama than pavam
Super super ka…. Romba romba nalla irukku😍😍😍…. Waiting for next ud
Super sis nice epi 👍👌😍 love start ayiducho doi😍😍😍😘🥰
Super Arjun sema. You are a different design. Interesting sis.
ரொமப ரொம்ப அழகாக இருந்தது கதையின் பயணம் ஏதோ பக்கத்து வீட்டில் நடக்கும் கதை போல் ஏதார்த்த மாக அழகாக இருந்தது சீடு முச்சி அம்முவின் குடும்ப கதை வாழ்த்துகள்
Athu eli illa peruchaali….. Spr going 😍😍😍💕💕💕💕
super
அது சரி..! இவன் தான் ஒரு நாளைக்கு, ஒரு முகம்ன்னு சுத்திக்கிட்டு இருக்கானே..
இப்ப சந்தைக்கு போயிட்டு வந்து எந்த முகத்தை காட்டுவானோ..? ஆசை முகத்தையா…? இல்லை
ஆவேச முகத்தையா…???
அய்யோடா
Super super sis
🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🫰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍🥰🥰🥰😍🥰🥰😍😍
Interesting ah pothu story ipo tha arjun vai vitu nee padichava nu ketu pesitale inum athigam love varum aana avan tak nu kovam kamikiran apram romance nadakuthu ipo kadaiku poitu vanthu ena panuvano
Illavazhgi avangalukku kadai ku vandha eli rendum avanga veetuku la than iruku nu theriyala 🤣🤣🤣🤣
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
அர்ஜுன் அவனோட எல்லா உணர்வுகளையும் அந்த தாடிக்குள்ள போட்டு மறச்சிக்குறானே அப்புறம் எப்படி அவனோட ஆசாபாசம் மத்தவங்களுக்கு தெரியும்
Super super super super
அருமையான பதிவு
செம…