புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

கால் கிலோ காதல் என்ன விலை -30

அத்தியாயம்-30

பொங்கல் வியாபாரமென்று அர்ஜுன் வியாபாரத்திற்கு பொருட்களை வாங்கி குவிக்க, கோயம்பேடு சென்றிருந்தான். கரும்பு கட்டு விலை ரெட்ஹில்ஸில் அதிக விலையை கூற, மச்சான் கர்ணாவின் குட்டி யானை வண்டியை எடுத்து கோயம்பேட்டில் வாங்க வந்துவிட்டான்.

இளவழகியும் ரஞ்சிதத்தின் குழந்தைக்கு தலை பொங்கலென்று துணி வாங்க தி.நகர் சென்றிருந்தனர்.

வீட்டில் சந்திரிகா மற்றும் அமிழ்தினி இருந்தனர்.

அமிழ்தினியோ பாத்ரூம் சென்றதும் அலறாத குறையாக ‘அம்மா…அம்மா..‌இங்க வாயேன்” என்றாள்‌ வலியுடன்.

சந்திரிகா உள்ளே வரும் நேரம் பயந்தார். பாத்ரூமில் மகள் வழுக்கி விழுந்துவிட்டாளோயென, ஆனால் பனிக்குடம் உடைந்திருப்பது புரியவும் பதறினார்.

மகள் வலியில் துடிக்க, ‘ஒன்னுமில்லைடா… ஒன்னுமில்லை.. பனிக்குடம் உடைஞ்சியிருக்கு. உடனடியாக ஹாஸ்பிடல் போயிடலாம்” என்று மகளுக்கு ஆறுதலுரைத்தார்.

“எப்பவும் மாப்பிள்ளை சம்பந்தி இருப்பாங்க. இன்னிக்கு பார்த்து யாருமில்லை.” என்று போனை எடுத்து மருமகனுக்கு அழைத்தார்.

அவனோ எடுத்ததும் என்னவென விசாரிக்க, பனிக்குடம் உடைந்ததை உரைத்தார்.

“அத்தை… எப்பவும் போல ஆட்டோ புக் பண்ணி ஹாஸ்பிடல் வந்துடுங்க. நான் அப்படியே நேரா ஹாஸ்பிடல் வர்றேன்.” என்றான். அவனுக்கு இங்கிருந்து வீட்டுக்கு வந்து பின் அழைத்து சென்றால் வேலைக்கு ஆகாதென நன்றாக தெரியும்‌. அதனால் ஆட்டோவில் புறப்பட கூறினான்.‌ இங்கு தான் ஆட்டோ, கார் எல்லாம் உடனே வந்து அள்ளி சென்று சேரும் இடத்தில் விட்டு விடுகின்றார்களே.

“அம்மா பிரசவ நாளுக்கு பத்து நாளிருக்கே.” என்றதற்கு அர்ஜுனும் அதை கேட்க வாயெடுத்தான்.

“சிலருக்கு ஒரு மாசம் முன்ன பிறக்கும். சிலருக்கு ஒரு வாரம் சொன்ன தேதிக்கு பிறகும் குழந்தை பிறக்கும்.” என்று அணைத்தார்.

ஆட்டோ புக் செய்திட இரண்டு நொடியில் வந்தார்.

வீட்டை பூட்டி விட்டு அமிழ்தினி சந்திரிகா அதில் ஏறினார்கள்.

“அண்ணா… பனிக்குடம் உடைந்திடுச்சு. கொஞ்சம் வேகமா பதமா போங்க” என்று கோரிக்கை வைத்தார்.

அமிழ்தினியோ வலியில் அடிக்கடி முகமும் சுணங்கி துடிக்க, ஆட்டோகாரனும் வேகமாய் ஓட்டினார்.‌

என்ன ஓட்டினாலும் பொங்கலுக்கு என்று கூட்டம் அவரவர் ஊருக்கு செல்வதால் டிராபிக் அதிகமாக சூழ்ந்தது. பக்கத்துல இருக்கற ஹாஸ்பிட்லயே பார்த்திருக்கலாம். மாப்பிள்ளை இங்க கூட்டிட்டு போக சொன்னார்‌. என்று புலம்பினாலும் இந்த நேரத்தில் வேண்டாத தெய்வமில்லை.

எறும்பு போல ஊர்ந்து டிராபிக்கில் புகுந்து இரண்டு இடத்தில் சிவப்பு காட்டியும் வந்த ஆட்டோ டிரைவர். அவரால் அதை தான் செய்ய முடிந்தது.

அப்படியிருந்தும் பிஸி ஏரியா என்ற சில ஏரியாவில் ஆமை போல தான் ஊர்ந்தது.
அதற்குள் அமிழ்தினி துடிதுடித்து விட்டாள்.

சந்திரிகா அதற்குள் சம்பந்தி இளவழகியிடம் நிலவரத்தை கூறினார்.
பின்னர் கணவரிடம் தெரியப்படுத்த அழைக்க போன் எடுக்கவில்லை. .‌ ஏற்கனவே தேவராஜன் இங்கு வர தான் பேருந்தில் ஏறியிருந்தார். அவர் போனை பிறகு எடுப்போமென சீட்டில் லக்கேஜை ஏற்றினார்.

இங்கு அக்கம் பக்கம் வண்டிகள் கர்ப்பிணி பெண் இருப்பதால் வழியை விட்டனர்.

ஆட்டோக்காரன் சாமர்த்தியமாக ‘பிரசவ கேஸு தள்ளு தள்ளு’ என்று சென்னை மொழியில் கூவினார். இப்படியாக ஒரு வழியாக ஆட்டோவிலிருந்து இறங்கிய சந்திரிகா “அய்யோ பனிக்குடம் உடைந்து என் மக பிரசவ வலில துடிக்கிறாளே. யாராவது உதவிக்கு வாங்களேன். டாக்டர்… நர்ஸ் பாப்பா” என்று கூவி அழைத்தார்.

ஆட்டோக்காரனோ உதவிக்கு வந்து “பதறாதம்மா அதான் ஹாஸ்பிடல் இட்டாந்துட்டேனே. டாக்டரு இருப்பாங்க” என்று நம்பிக்கையாக பேசினான். சந்திரிகா பணத்தை கொடுக்க, “பிரசவத்துக்கு இலவசம் அக்கா.” என்று தலையில் இரண்டு விரலை ஒற்றியெடுத்து பணத்தை புறக்கணித்து புறப்பட்டான்.

இனி இந்த மருத்துவமனையில் நின்று ஒத்தாசை செய்ய ஆட்டோக்காரனுக்கு மனிதாபிமானம் இருக்கலாம். ஆனால் பொருளாதாரம் இல்லை நேரமுமில்லை.

சந்திரிகா மகளை அழைத்து, உள்ளே வர மருத்துவனையில் அப்படியொன்றும் பிரசவம் என்றதும் ஓடிவந்திடவில்லை.

வயிற்றை பிடித்து வீல் சேரில் அமரவைத்து, செவிலியர்கள் தான் சிகிச்சையை ஆரம்பித்தனர்.

“ஏம்மா டாக்டர் இல்லையா… பனிக்குடம் உடைந்திடுச்சுனு சொல்லறேன்” என்று பதபதப்பு கொஞ்சமும் குறையாமல் கேட்டார் சந்திரிகா.

பனிக்குடம் உடைந்த அமிழ்தினியோ வலியில் விட்டு விட்டு அழுவதில் இருந்தாள். பேசும் சக்தி சற்று பயத்தில் குறைந்திருந்தது.
அதோடு முதல் பிரசவம் என்பதால் நடுக்கமும் இருந்தது.

‘அம்மா வலிக்குது. தாங்கமுடியலை’ என்ற வலிக்குண்டான வார்த்தைகள் மட்டும் தான் அமிழ்தினி உதட்டிலிருந்து மாறிமாறி வந்தது.

“என்னம்மா டாக்டரிடம் காட்டலையா? நீங்களே பார்க்கறிங்க? பனிக்குடம் உடைஞ்சிடுச்சுனு சொல்லறேன்” என்று அர்ஜுன் முன்பு ரெட் ஹில்ஸ் மருத்துவமனையில் செய்த அதே அக்கப்போரை சந்திரிகா இங்கே நர்ஸிடம் காட்டினார்.

ரிசப்ஷன் பெண்ணோ ஒரு காதில் போனை வைத்து, “இங்க பாருங்க அம்மா. இவங்களுக்கு எப்பவும் பார்க்குற டாக்டர் பொங்கல் என்பதால ஊருக்கு போயிருக்காங்க. இப்ப வர்ற கேஸை டியூட்டி டாக்டர் தான் பார்க்கறார். அவரிடம் போன் பண்ணி சொல்லிட்டேன். பேஷண்டை நார்மலா சில செக்கப் பண்ணி ரெடியா தயார்படுத்த சொன்னாங்க வந்துட்டேயிருக்கார். அவசரப்படாதிங்க உங்க பொண்ணு ராசி, டாக்டர் ஆர்யன் வந்துட்டு இருக்கார்.” என்று கூறியவளின் முகம் புது தேஜஸை பிரதிபலித்து.

சந்திரிகா மகளை லேபர் வார்டிற்கு கொண்டு செல்லவும் பின்னாடியே சென்றார்.

கூடுதலாக கைப்பையில் இருந்த சிறு போனை எடுத்து கணவருக்கு மீண்டும் அழைத்தார். இம்முறை தேவராஜன் எடுத்தார்‌. “என்னங்க நம்ம பொண்ணை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. எப்பவும் வர்ற ஹாஸ்பிடல் தான். கொஞ்சம் சீக்கிரம் வாங்க. பனிக்குடம் உடைஞ்சிடுச்சு. புள்ளை துடிக்கிறா. லேபர் வார்டுக்கு கூட்டிட்டு போறாங்க.” என்னும் போது அதோடு சந்திரிகாவை வரவேண்டாமென்று செவிலி தடுத்துவிட்டார்.

“வார்டுக்கு எல்லாம் கூட்டிட்டு போயிட்டாங்க. டாக்டரை காணோம். எப்பவும் பார்க்கற டாக்டரம்மா ஊருக்கு போயிட்டாங்க” என்று மூக்குறிந்தார்.” சந்திரிகா.

“மாப்பிள்ளையிடம் சொல்லிட்டல…
சென்னையில் வசதியான ஹாஸ்பிடல்மா. நீ பதறாத. கொஞ்சம் தெம்பாயிரு. நான் பஸ் ஏறிட்டேன். நேரா அங்க வந்துடறேன்” என்றார். அவர் வருவதற்குள் குழந்தை பிறந்திடும் என்பது வேறு கதை. இருந்தாலும் மனைவிக்கு ஆறுதல் உரைத்தார்.

போன் துண்டிக்கப்பட்டதும் வார்டு பக்கமும் அதற்கு மேலே தொங்கிய வினாயகர் புகைப்படத்தை கண்டு மகளுக்காக மனதில் இறைவனை துதித்தார் சந்திரிகா.

இரண்டு செவிலியர்கள் லேபர்வார்டிற்குள் இருந்தார்கள்.

“டாக்டர் எப்ப வருவாங்க? பனிக்குடம் உடைந்துடுச்சே ஆப்ரேஷன் பண்ணப்போறிங்களா?” என்று கண்ணீர் ஒருபக்கம் கவலை மறுப்பக்கமென்று அமிழ்தினி கேட்க, ”டியூட்டி டாக்டர் வந்துட்டு இருக்கார். அவர் வந்து பார்த்து சொன்னா தான் தெரியும். நீங்க கவலைப்படாதிங்க அவர் கைராசிக்காரர்” என்று புகழ்ந்தார்கள்.

“லேடி டாக்டர் இல்லையா? எப்பவும் பார்க்கறவங்க வரமாட்டாங்களா?” என்று இதுவரை பெண் மருத்துவரிடம் மட்டும் தன் செக்கப்பை முடித்த அமிழ்தினி கூடுதல் பயத்தில் கேட்டாள்.

“டியூட்டி டாக்டர்ல லேடிடாக்டர் இல்லைங்க. எல்லாரும் பொங்கல் முன்னிட்டு லீவுக்கு முன்னாடியே கிளம்பிட்டாங்க. இவர் தான் இப்ப இந்த லீவுல வர்ற பேஷண்டை எல்லாம் பார்க்கறார்.” என்று கூறினாள் செவிலி.

ஆண் மருத்துவர் வந்து தன் பிரசவத்தை காண வருவதே லேசான மயக்கத்தை தந்தது. இதில் பனிக்குடம் உடைந்திருக்க, அயர்ச்சியடைந்தார் அமிழ்தினி.

சற்று நேரத்தில் எல்லாம் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் அணிந்து லேபர் வார்டிற்குள் நுழைந்தார் டாக்டர் ஆர்யன்.

“டாக்டர் ஆர்யன் வந்துட்டார்” என்று அவ்வறை அமைதியாக, “பேஷண்ட் டீடெய்ல் என்ன?” என்று ஸ்டெதஸ்கோப்பை ஓரமாய் வைத்து தன் மீது லேபர் வார்டில் அணியும் ஆப்ரேஷன் உடையை போர்த்தி கட்டிக் கொண்டிருந்தார்.

இரு செவிலியில் ஒருத்தி முந்திக்கொண்டு “வீட்லயே பனிக்குடம் உடைந்திடுச்சாம் டாக்டர். ஆல்ரெடி ரெகுலர் செக்கப் நம்ம டாக்டரிடம் தான் வருவாங்க. இந்த லேடிக்கு இப்ப டேட் இல்லை. டாக்டர் இரண்டு வாரம் கழித்து தான் டெலிவெரி டேட் கொடுத்திருந்தாங்க. அதுக்குள்ள இப்படி எமர்ஜென்சி கேஸா வந்துட்டாங்க” என்று பேஷண்ட் வரலாற்றை ரத்தின சுருக்கமாய் உரைத்தாள்.

“மனிதர்களோடு பிறப்பும் இறப்பும் யாரும் சொல்லி வச்சி முடிவாகறதுயில்லை ஸ்டெல்லா சிஸ்டர். அது ஆண்டவன் முடிவுபண்ணறது.” என்று தத்துவம் பேசியவன் அமிழ்தினியை சிகிச்சை முறையில் ஆராயவும் செய்தார் ஆர்யன்.

இன்ஞெக்ஷன் போட நெருக்கமாய் வரவும், இமையை மெதுவாய் திறந்த அமிழ்தினியோ, பயந்து போக, “ஒரு கவலையும் இல்லைங்க. பேனிக் ஆகாதிங்க. ஜஸ்ட் ரிலாக்ஸ் ரிலாக்ஸ். உங்க பையனையோ பொண்ணையோ வரவேற்க உற்சாகமா இருக்கணும். எதுக்கு பயப்படறிங்க. பஸ்ட் பிரகனன்ஸியா” என்று கேட்க ஆமென்று தலையாட்டினாள் அமிழ்தினி.

“அதான் திணறுறிங்க.” என்று ஊசியை செலுத்த முனுக்கென்று முகம் சுருங்கினாள் அமிழ்தினி.

“லேசான நடுக்கமும் பயமும் ஒரு முன்பின் தெரியாத ஆண் தன் அந்தரங்க பாகத்தில் ஆராயவும் பதட்டமானாள்.

டாக்டர் ஆர்யனோ “குழந்தை இப்பவோ அப்பவோ வெளிவந்திடலாம். நீங்க பயந்து குழந்தையையும் பயப்பட வைக்கறிங்க. கொஞ்சம் நிதானமா மூச்சு இழுத்து விடுங்க.” என்று வயிற்றில் கைவைத்து அங்கும் இங்கும் அழுத்தம் கொடுத்து பார்த்தான்.

அமிழ்தினி மேலும் பயந்து பின்வாங்க, “என்னை ஒரு ஆம்பளையா பார்க்காதிங்க. டாக்டரா மட்டும் பாருங்க. பயம் வராது. பிரசவம் என்பது மறுபிறப்பு. இந்த நேரத்துல எதிர்ல இருக்கற என்னை நினைச்சி உங்களோட குழந்தை வரவை தடைப்பண்ணாதிங்க. நீங்க சாந்தமா எனக்கு கோஆப்ரேட் செய்து காலை அகட்டி புஸ் பண்ணினா குழந்தை தானா வந்துடும்.
ஏற்கனவே குழந்தை இருக்கற கர்ப்பபையில தண்ணீர் முக்கால்வாசி இல்லை. இருக்கற கால் வாசி தண்ணியும் வெளிவந்துட்டா ஆப்ரேஷன் தான் முடிவு. உங்களுக்கும் தான் கஷ்டம். பல்லைக்கடிச்சிட்டு பத்து நிமிஷம் நான் சொன்ன மாதிரி ரிலாக்ஸா இருந்து புஸ் பண்ணினா குழத்தைக்கு நல்லது. உங்களுக்கும் நல்லது.” என்று கூறவும் வலி வந்து வந்து உயிரை வாட்டியது அமிழ்தினிக்கு.

கண்ணீரும் கதறலும் கூடுதலாக, “உங்ககணவரை இங்க வரச் சொல்லவா? உங்களுக்கு பலமா இருக்கும்” என்று கேட்டான் ஆர்யன்.

சட்டென மறுப்பாய் தலையசைத்து பல்லை கடித்தவள். அவர் இன்னும் வரலை. அம்மா தான் இருக்காங்க” என்றாள் அயர்ச்சியுடன்.

“சரி சரி” என்று சின்னதாய் இருந்த மருத்துவ உபகரணம் கொண்டு குழந்தை வெளிவரும் பாதையில் சிறிதளவு கத்தரித்தான்.

அமிழ்தினி அலறலில், “அக்கா.. கொஞ்சம் புஸ் பண்ணுங்க வித் இன் ப்யூ மினிட்ஸ் உங்க குழந்தை வெளிவந்துடுவான்” என்று ஆதுரமாய் பேச, ஏனோ இம்முறை மருத்துவன், ஆடவன், என்ற அன்னிய மாயங்கள் உடைந்தது.

அதோடு மருத்துவ ஊசியும் தன் வேலையை காட்ட, அமிழ்தினிக்கு குழந்தை வெளிவரும் பாதை இலகுவாக ரத்தமும் சதையும் கலந்த அர்ஜுனின் உதிரம் ஆண் குழந்தை பிறந்தது.

சிறு குழந்தையின் வீறிட்ட அலறல் அமிழ்தினியிடம் இதுவரை இருந்த வலியை மட்டுப்படுத்தியது.

“அவ்ளோ தான் அக்கா. இதுக்கு போய்..” என்று மாஸ்கை அகற்றி முறுவலிக்க அமிழ்தினியோ தன் அசதியை புறம் தள்ளி கண்ணீரால் நன்றியுரைத்தாள்.

“சிஸ்டர் இனி நீங்க பார்த்துக்கோங்க.” என்றவன் பிறந்த குழந்தையை எடுத்து பிரசவித்தவளின் முகம் அருகே கொண்டு சென்றான்.

“பையன் பிறந்திருக்கான். சேட்டைக்காரன் போல. அம்மா வயித்துல பனிக்குடத்தையே உதைத்து குயிக்கா உலகத்தை பார்க்க இரண்டு வாரத்துக்கு முன்னயே வந்துட்டார். முடியெல்லாம் அடர்த்தியா இருக்கு” என்று காட்டவும், ஆர்யன் அறைக்குள் நுழைந்த கணம் இருந்த வெட்கம், ஆண்மகன் என்ற பயம், தன் அந்தரத்தை ஒரு ஆண் காண நேருமே என்ற படபடப்பு தற்போது மாயமாய் களைந்திட புன்னகைத்தாள்.

பிரசவம் என்பது மறு ஜென்மம். அங்கே வாழ்வா? சாவா? என்ற போராட்டத்தில் ஆண் பெண் என்ற பாலினம் தாண்டி, மற்ற உணர்வுகள் மழுங்கி ஒரு உயிரை பெற்றெடுக்கும் முயற்சி பெண்ணவளுக்கு. டாக்டருக்கு ஒரு உயிரை மீட்டு எடுக்கும் முயற்சி‌ தான்‌.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

24 thoughts on “கால் கிலோ காதல் என்ன விலை -30”

  1. ரொம்ப ரொம்ப அழகா இருக்குமாகதையின் பயணம் ஆர்யனை மீண்டும் கண்டது மகிழ்ச்சி சகி வாழ்த்துகள்

  2. Super 🥰ammu kutty arjun vandhutan….dr. Aryan ah kuttitu vandhudhu romba happy akka🥰🥰🥰…. Azhagana nigazhvu❤️❤️… Skrama va da arjun payalae kutty arjun waiting andha thaadikulla irundhu enna reaction varudhu nu paarkanum🤭….

  3. Super sis semma epi 👍👌😍 namma aaryan ah wow semma pa evlo azhagai delivery parkuran🥰🥰🥰
    Welcome kutti Arjun🎉🥳

  4. Wow excellent. Ariyan sema mass. Real fact of delivery. I got goosebumps while reading it sis. Awesome narration sis. Kutty Arjun came. Interesting

  5. Semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma semmmmma feeling sis, superrrrrr 👌👌👌👌👌👌👌👌

  6. சூப்பர் சகி ஆர்யன் entry mass போங்க
    ஆட்டோ பிரசவத்துக்கு இலவசம் என்றது இன்னமும் பாட்சா படம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றேன் சூப்பர் சூப்பர்

  7. ஐய்… இங்க சுத்தி, அங்க சுத்தி நம்ம ஆர்யன் கிட்டயே வந்து நின்னுட்டாங்க.
    அர்ஜூன் குழந்தைக்கு முடி அதிகம் இல்லைன்னாத்தான்
    ஆச்சரியமே. ஆமா.. தாடியிருக்கா…. ? சும்மா… சும்மா…ஃபன்னுக்கு.
    இனி அர்ஜூன் ஓவர் செலவுக்கு புலம்பினாலும்
    தன் குழந்தையை கொண்டாடிட மாட்டான்.
    😁😁😁

  8. Naysa athipathi la ariyan 1st entry Inga ipo pakkarathu happy 😍😍😍😍😍 yanakkum delivery Tim kitta vanthuruchu ….intha epti padikkum poothu yanna ariyama oru valium bayamum vayra varuthu …ana at last baby vayliya vantha feel irrukuilla athu apti oru happiness aa tharuthu ❤️❤️❤️❤️❤️❤️❤️ 🤗🫂

  9. Namma athipathiyoda 1st scene la😍😍😍👌👌👌👌👌👌👌 enakkume 1st delivery gents tha pathanga😊

  10. ஐ சூப்பர் நம்ம ஆரியன் இங்க வந்துட்டாரு. அர்ஜுனோட பையனை உலகத்துக்கு கொண்டு வந்தது நம்ம ஆரியன் தானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!