நீயின்றி வாழ்வேது-6
“விஷாகனா இது. நல்லா வளர்த்தியா உதயகுமார் கணக்கா இருக்கானே” என்று அப்பொழுது வந்த முதியவர் ஒருவர் கேட்டார்.
விஷாகனுக்கு அமர்ந்திருக்கும் நாற்காலியை தூக்கி எறிந்து ‘இன்னும் எத்தனை பேர்யா வந்து இதையே சொல்லிட்டு சொல்லிட்டு என்னை குறுகுறுனு பார்ப்பிங்க.
நானும் வந்ததிலருந்து பார்க்கறேன் எக்ஸிபிஷன் கணக்கா ஆளுங்க வர்றாங்க போறாங்க, நலம் விசாரிக்கறாங்க, ஆளு வாட்டசாட்டமா இருக்கான், உசரமா இருக்கான், களையா இருக்கான், அப்பனை கணக்கா இருக்கான் இதே சொல்லி வயிறெரிய வைக்கிறாங்க. சென்னைக்கே திரும்ப ஓடிடலாம்’ என்று விஷாகன் மூளை கத்தி கூச்சலிட்டு அலறியது.
‘இன்னமும் ‘ஷாலி’யை பார்க்கலை. அவளை பார்க்காம போவியா? சும்மா டன்கணக்கான கோபத்தை மூட்டை கட்டிட்டு அந்த மஞ்சள் ரோஜாவுக்காக வெயிட் பண்ணு’ என்று மனம் அதட்டி சாந்தப்படுத்தியது.
விருஷாலி அவனுக்கு இந்த மூன்று நாளில் ‘ஷாலி’யாக மாறி, இதயத்தில் செங்கல் சுவரெல்லாம் கட்டி மாளிகை எழுப்பி, ஒரு காதல் சமஸ்தானத்தையே எழுப்பி விட்டாள்.
நேரில் நல்ல நேரத்தில் பெண் பார்க்க போக வேண்டுமென்று அடுத்த நாள் பெண் பார்க்கும் படலத்தை தள்ளி வைத்திருந்தனர்.
இங்கு வந்து ஐந்து மணி நேரமானது. அப்பத்தா வீட்டில் சின்னதாய் டிவி பெட்டி, ரேடியோ, இதை தவிர பொழுது போக்க ஒன்றுமில்லை.
சுகிர்தன் அடிக்கடி வருவதால் யாரையாவது நிற்க வைத்து பேச்சு கொடுத்து நேரம் கடத்துகின்றான். அப்படி யாருமில்லையென்றால் போனை எடுத்து காதில் பொருத்தி நண்பர்களோடு பேசுவதாக விருஷாகன் எண்ணம்.
அப்பா அம்மா எல்லாம் ஏதேதோ சொந்தங்களின் பெயரை கூறி, அவர்களை பார்த்துட்டு வர்றேன் இவர்களை பார்த்துட்டு வர்றேன் என்று கூறிவிட்டு சென்றதால் இவனுக்கு வீட்டில் அடைந்து கிடக்கவே பிடிக்கவில்லை.
செந்தூரன் தாத்தா வீட்டிற்காவது கிளம்பலாமென்று வார் செருப்பை மாட்டினான்.
“அப்பத்தா தாத்தாவோட வீடும் பார்த்துட்டு வந்துடறேன். இங்கயே இருக்க போரடிக்கு” என்று செல்லும் நோக்கத்தோடு புறப்பட, “வழி தெரியுமா ராசா. பாதையெல்லாம் உருமாறி கிடக்கு. உனக்கு பாதை குழப்புதுனா பக்கத்துவீட்டு மணியை அழைச்சிட்டு போப்பா. அவன் வண்டி வச்சியிருக்கான்.” என்று கூறிவிட்டு விஷாகன் பதில் அளிக்கும் முன், “ஏலேய் மணி… என் பேரனை சம்பந்தி வீட்டுக்கு அழைச்சிட்டு போயிட்டு வா” என்று ஏவினார்.
“அப்பத்தா… யாருனே தெரியாதவரோட கோர்த்து விடற. வண்டியெல்லாம் வேண்டாம். நான் நடந்து போறேன்.” என்றான்.
திடுதிப்பென சொந்தமென்று ஒருவனை அறிமுகப்படுத்தி கூட துணைக்கு போ என்றால் விஷாகன் எல்லாம் முடியாதென்று மறுப்பவன். அதனால் அப்பத்தா யாரையோ தன்னோடு அனுப்ப கூற, மறுத்தான்.
“அட நம்ம வீட்ல வாடகைக்கு இருக்கற பையன். வீட்ல தான் இருக்கான். அழைச்சிட்டு போவான்யா” என்று “ஏலேய் மணி” என்று இம்முறை உச்சஸ்தாதியில் குரல் கொடுத்தார்.
மூச்சு வாங்க சுகிர்தனை விட சிறிய வயதில் ஒருவன் ஓடிவந்தான்.
“மோர் குடிச்சிட்டு வந்தேன் அப்பத்தா. நீயென்ன கூச்சல் போடற” என்று வந்தான்.
“இவன் என் பெரிய பேரன் விஷாகன். இவனோட சம்பந்தி வீட்டுக்கு போ. கூடவே ஊரை சுத்தி காட்டு. வண்டில கூட்டிட்டு போடா. என் குலசாமியை நடக்க விடாதே” என்று கூறவும், “சரித்தா சரித்தா” என்று தலையாட்டினான்.
“அண்ணே சின்ன அண்ணா வர்றாங்களா?” என்று கேட்டான்.
சுகிர்தன் காதில் ப்ளுடூத் போட்டு வரவில்லையென்று செய்கையில் தெரிவித்தான்.
“அவன் வரலையாம். நாம போகலாம்” என்று விஷாகன் ஏறி அமர்ந்தான். அவன் வராதது தான் விஷாகனுக்கும் வசதி.
கொஞ்ச தூரம் போக ஆடி ஆடி வண்டி செல்லவும் நிறுத்த கூறினான்.
“உன் வயசென்ன?” என்று கேட்டான். வண்டியை நிறுத்திவிட்டு வயசை கேட்கின்றாரே என்று “பத்தொன்பது அண்ண” என்றான் மணி.
“மணி என்னால பின்னாடி உட்கார முடியலை. நான் வண்டி ஓட்டறேன்” என்றதும் மணியும் மகிழ்ச்சியாய் சரியென்றான்.
விஷாகன் உயரத்திற்குகேற்ற பரந்த தோளும் கச்சிதமான எடையும் உள்ளவன். மணியோ குச்சி போல இருக்க வண்டியில் பேலன்ஸ் செய்ய கஷ்டப்பட்டான் எனலாம். விஷாகனே வண்டியை ஓட்ட கேட்டதும் யோசிக்காமல் தலையாட்டினான்.
விஷாகன் வண்டியை கிளப்பி தாத்தா செந்தூரன் வீட்டுக்கு வந்து சேர, “என்ன அண்ணா இப்படி வண்டி ஓட்டறிங்க. இது வளைவு பாதை. ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுனா” என்று வண்டியை கொடுத்துவிட்டு விஷாகனின் வேகத்திற்கு கண்ணை இறுக மூடியவன் கீழே கால் பதித்த பின்னே வாயை திறந்தான். இடையில் வேகத்தை குறைக்க கூற, வாய் எடுத்தவன், ‘என்ன கேட்கலை’ என்று விஷாகன் ஓட்டுதலில் கவனம் சிதறி தடுமாறி விடுவாரோ என்று வாயை மூடியபடி வந்தான்.
“ஆமா உருட்டிட்டு வந்ததெல்லாம் ஒரு வேகம்” என்று தாத்தாவை கண்டு முறுவலித்து வீட்டை அளந்தான்.
“என்னயா… வீடு மாறியிருக்கா?” என்று கேட்டார்.
“என்ன தாத்தா இது. ஏழு வருடத்துக்கு முன்ன இருந்த அதே மாதிரி இருக்கு. எதுவும் மாறலை. எப்படி தாத்தா இந்த ஊர்ல இருக்கிங்க. போரடிக்கலை?” என்று திண்டில் அமர்ந்து கேட்டான்.
ஊட்டிக்கு போகும் வழியில் குன்னூர் மற்றும் மேட்டுபாளையம் இரண்டிற்கும் நடுவே அமைந்திருந்தது அந்த கிராமம். செந்தூரன் தாத்தாவோ “கண்ணை திறந்து சுத்தி பாருப்பா. இயற்கை என்னமா இருக்குனு. அதை பார்த்துட்டே இருந்தா பொழுது போயிடும் ராசா” என்றார்.
அதன் பின்னரே சுற்றியிருந்த இடத்தை கவனித்தான்.
பச்சைபசேலென்ற செடிகொடிகள் மரங்கள் சுற்றிலும் இருந்ததை கவனித்தான்.
சற்று தூரத்தில் மலை முகடுகளும், மரத்தில் கிளிகளும், குருவிகளும் பறந்து ஒலியெழுப்பி அமைதியான இடத்தில் இசை மீட்டுவதை.
செந்தூரன் தாத்தா வீடு இருக்குமிடத்தில் சிறுவோடை வேறு இருந்தது. தண்ணீர் சலசலப்பு வேறு மனதை குளிர்ச்சிப்படுத்தியது.
மரங்கள் எல்லாம் உயரமாக, சற்று பருமனாக இருக்க, ஓவியர்கள் ஓவிய பலகையில் வடித்து வைக்கும் இயற்கைகளும் நிறங்களும், நேரில் இறைவன் ஆதிகாலத்தில் தீட்டிய வண்ணத்தில் மிளிர்ந்தது.
அம்மாச்சி வளர்த்த தோட்டத்தில் மஞ்சள் சாமந்தி மலர்கள் இடத்தை ஆக்கிரமித்திருக்க, மஞ்சள் மலர்கள் அவளை தான் நினைவுப்படுத்தியது.
‘எவ்ளோ அழகான இயற்கைகாட்சிகள் சுத்தியிருக்கு, விஷாகா உனக்கு அதை ரசிக்க முடியாம கண்கட்டு போட்டு அவளை மட்டும் தேட வைக்கிறாளே. பூவை பார்த்தாலும் அவநினைப்பு. என்னடா விஷாகா இப்படி ‘தொபுக்கடீர்’னு விழுந்துட்ட’ என்று தனக்கு தானே கேட்டு கொண்டான்.
“தாத்தா… ரொம்ப அழகாயிருக்கு சுத்தி பார்க்க. நான் இங்க முன்ன அடிக்கடி வந்துட்டு போனதால் ஆர்வம் குறைந்துடுச்சு.” என்று இயற்கையை ரசித்தவாறு கூறினான்.
“இனி அடிக்கடி வந்துட்டு போகணுமே. அம்மா வீட்டுக்கு போகணும்னு பேத்தி கேட்பாளே” என்று தாத்தா கோடு போடவும், விஷாகன் சந்தடி சாக்கில் “அவ வீடும் இங்க தான் இருக்கா தாத்தா” என்று நயமாய் கேட்டான்.
“விருஷாலி பக்கத்து ஊரு ராசா.” என்று வழிபாதையை கூறவும் மனதில் குறிப்பெடுத்தான்.
வண்டியை எடுத்துட்டு ஊர் சுத்தி பார்க்கும் ஆர்வத்தை தெரிவித்துவிட்டு அவளை காண மனம் முரண்டு செய்தது.
மணியை ஒருகணம் ஆழ்ந்து அளவெடுத்தான். அப்படியொன்றும் விவரமில்லை அப்படியே விருஷாலியை காண போனாலும் அதட்டி எதுவும் கூறாமல் பார்த்துக் கொள்வோமென தோன்றவும் வண்டியில் ஏறினான்.
ஓடையில் காலை வைத்து நீரில் மேல் துண்டு வைத்து மீனை பிடிக்க முயன்ற மணி விஷாகனின் அழைப்பில் ஈரத்துண்டை ஒட்டப் பிழிந்து உதறியபடி வீட்டுக்கு போவதாக எண்ணி ஏறினான்.
ஏழு வருடம் வராத இடமென்றாலும் ஒரே பாதையில் சென்றால் ஆலமரம் வரும் அதற்கு பக்கத்திலிருக்கும் பாதை வழியே சென்றால் தன்னவள் ஊர் வரப்போகின்றது.
தாத்தா சொன்ன அடையாளம் வைத்து வீட்டை அடைந்திட மாட்டோமா என்ற கணக்கிடு போட்டு வண்டியை முறுக்கி வேகமெடுத்தான்.
மணியோ ஈரத்துண்டை தலையில் போட்டு, காற்றுக்கு காய்ந்திடும் என்று உலறவிட்டபடி கண்களை மூடிக்கொண்டான்.
‘தவிட்டுமேடு’ அன்புடன் வரவேற்கின்றது என்ற பலகை கண்டு முறுவல் பூத்தது.
விஷாகன் லேசாய் வேகத்தை குறைத்து வரவும் மணி கண் திறந்து எந்தயிடமென்று ஆராய்ந்தான்.
“அண்ண… அண்ண… தவிட்டுமேடு ஊரா அண்ண?” என்று மணி கேட்டான்.
“இங்கயே தானே இருக்க. பக்கத்தூரை பார்த்தவுடன் தெரியாது.” என்று தாத்தா கூறிய அடையாளங்களை வரிசையாய் மனதில் குறித்ததை நேரில் இருக்க அங்கு வந்துவிட்டதை குறித்து கொண்டே தூரத்திலிருந்து தன்னவள் வீட்டை அலசினான்.
“அண்ண… அண்ணி வீடு எனக்கு தெரியும்.” என்று மணி ரகசியம் பேசுவது போல கிசுகிசுத்தான்.
விஷாகனோ எலிப்பொறியில் மாட்டியவனாக காட்டிக்கொள்ளாமல், கெத்தை விடாமல், “எதுனு சொல்லு ஓரெட்டு பார்த்துட்டு வந்துடுவோம்” என்றான்.
மணியோ வெட்கப்பட்டு, “நீங்க அண்ணியை பார்க்க தான் வந்திங்களா?” என்று நாணினான்.
“சென்னையிலருந்து வந்ததே அதுக்கு தான்.” என்று மொழிந்துவிட்டு, “அந்த வீடு தானே?” என்று கேட்டான்.
“ஆமா அண்ண. ஆனா நாளைக்கு தானே பொண்ணு பார்க்க போறிங்க. இன்னிக்கு போகலாமா? அப்படி என்ன அவசரம்னு அப்பத்தா கேட்குமே” என்று கூறவும், மணியின் தோளில் கை வைத்து “நான் அங்க போய் பார்க்கலை.” என்று பேச்சை தொடரும் முன் மணி இடைவெட்டி “அப்ப ஒளிஞ்சு நின்னு பார்க்க போறிங்களா?” என்று கேட்டு விட்டான்.
இதற்கு மேல் ஆமென்றோ இல்லையென்றோ மறுக்கவா முடியும்.
“நான் ஏன் ஒளிஞ்சு நின்னு பார்க்கணும்? நீ சும்மா இந்த பக்கம் வந்ததா போய் இரண்டு வார்த்தை பேசு. அவளை எப்படியாவது வெளிய வரவழைச்சு பேச்சு கொடு. நான் இங்கிருந்து பார்த்துடுவேன். என்னதான் கலரான பொண்ணுனாலும் சாதாரணமா வீட்ல இருக்கறப்ப ஒரு அழகு முகத்துல இருக்கும். அதை வச்சி கல்யாணத்துல பிடிச்சி கட்டிக்குதா இல்லையானு அனுமானிச்சிடுவேன்.” என்றான் விஷாகன்.
மணி தலையை சொறிந்து “நீங்க இங்க இருங்க அண்ண போயிட்டு வர்றேன்” என்று விருஷாலி வீட்டுப் பக்கம் நடந்தான்.
அங்கே அன்னம் மட்டும் இருக்க, வாசலிலேயே நிற்க வைத்து பேசுவதை கண்டான். பின்னர் அன்னம் வீட்டுக்குள் நுழைய விருஷாலி வருவாளென ஆர்வமாய் தவமிருந்தான்.
அவன் எண்ணத்தை பொய்யாக்கி அன்னம் செம்பு எடுத்து வர அதை வாங்கி மணி பருகினான்.
மணி உடனே வருவதாக தலையாட்டி நடக்க, “அவளை வெளியே வரவைக்காம அப்படியே வர்றான் மடையன்” என்று திட்டினான்.
மணி விஷாகன் இருக்குமிடம் வந்ததும், “என்னடா வந்துட்ட?” என்று கவலையாய் மொழிந்தான்.
“அத்த மோர் கொடுத்துச்சு. மறுக்க முடியுமா குடிச்சேன்… அண்ணி வீட்ல இல்லையே அண்ணா. அவங்க காலேஜிக்கு போயிருக்காம். பரீட்சை என்பதால லீவு போடலைனு அத்த சொல்லுச்சு” என்று கூறவும் நெற்றியில் கட்டைவிரலால் தேய்த்து சலித்தான்.
இதை எதிர்பார்க்கவில்லை… எப்படியும் அவளை இன்று நேரில் தரிசித்து விடுவது என்ற மனகோட்டையில் வந்தவனுக்கு ஏமாற்றம் கூடியது.
இருசக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன்முகம் பார்க்க, ‘இந்தளவு ஆசையை எதிர்பார்ப்பை தூண்டிவிட்டாளே’ என்ற கடுப்பு அப்பட்டமாய் முகத்தில் தெரியவும் வண்டியை முறுக்கினான்.
அப்பத்தா எப்படியும் சாப்பிட வரலையா என்று தேட ஆரம்பித்து போன் போட்டாலும் ஆச்சரியமில்லை.
ஊருக்கு செல்லும் பாதையிலிருந்து மெயின் ரோட்டுக்கு வரவும், “அண்ண அண்ண அண்ணி” என்று உலுக்கவும் விஷாகன் சடன்பிரேக் போட்டு நிறுத்தினான்.
சற்று முன் பேருந்து நிறுத்தத்தில், நின்று சென்ற பேருந்திலிருந்து நடந்து வந்து கொண்டிருந்தாள் விருஷாலி.
சிவப்பு நிற சுடிதார் அணிந்து, கல்லூரி தோள்பையை சுமந்து கொண்டு வினாத்தாளை சுருட்டி எதிர்புறம் நடந்துவந்தாள்.
அடர்த்தியான புருவம், முன் நெற்றியில் விளையாடிய சிகையும், கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்த அலைச்சலோடு சோர்ந்திருந்த வட்டமுகம். சாயத்தை தீட்டாத உதடே இளஞ்சிவப்பில் இருந்தது. உதட்டை கண்டவனுக்கு லேசாய் முறுவல் கூடியது. இப்பொழுதே அதை வருடி பார்க்கும் ஆசையை அடக்கினான்.
தன்னை ஒருவன் அங்குலம் அங்குலமாக பார்ப்பதை அறியாமல் குதிரைக்கு கடிவளமிட்டது போல நேராக பார்த்து நடந்தாள் விருஷாலி.
கருப்பு வார் செருப்பின் சப்தமும், சிவப்பு வளையலின் சிறுவோசையும் என்று அவனை நிமிடத்தில் கடக்க, அவளின் கொலுசொலி மெலிதாக தூரம் சென்றப்பின்னும், அவன் செவியை எட்டி இதயத்தை குளிர்வித்தது.
பக்கத்திலிருக்கும் மற்றொரு பெண்ணோ, “விருஷா.. நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்கனு சொல்லுற, நீ படிக்கிற உனக்கு கல்யாணம் பண்ண சம்மதாமா டி” என்று கேட்பது தெளிவாய் விழுந்தது.
ஆனால் அடுத்து அவனின் ஷாலி பேசுவதை கேட்க இயலாமல் ஹாரன் சத்தம் காதை அடைந்திட, ஏற்கனவே மணி வேறு முதுகை சுரண்ட என்று எரிச்சலை தர, விஷாலினியும் கண்ணிலிருந்து மறையும் அளவிற்கு தூரத்தில் வளைவு பாதையில் சென்றதும் “என்னடா?” என்று எரிந்து விழுந்தான்.
“பார்த்தும் பேசலையா அண்ண?” என்று கேட்டப்பின் இல்லையென்று தலையாட்டினான்.
-தொடரும்.
Praveena Thangaraj

😍😍😍😍😍😍
Wow super love story. Vishakan beautiful romance. Intresting sis.
Interesting 😍😍🤩🤩
Super super akka🥰🥰
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 Evan evlo aarvama erukan endha aarvam avalukum erukuma parpom 🤔🧐
Story super, appa ku stepni vaika thonuchu parunga anga nikuringa neenga, bcoz idhu adhigam pesapadha and pesa virumbadha oru concept…and ipo virushali indha marriage istama nu yarume kekalaya yyy
Mappillai oda engaluku tha romba eagar ah iruku ivanga scene pakrapa next enna epdi pesuvaga rendu perum reactions epdi irukum apdi nu think panna vachute irukinga sisy 😍❤️ super epi🥰
Superb epi
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 6)
பொண்ணு பார்க்க போறதுக்குள்ள இந்த விஷாகனுக்கு என்ன அம்புட்டு அவசரம்…? யாராவது பார்த்தா…
பறக்காவெட்டின்னோ….
ஆர்வ கோளாறுன்னோ.. சொல்லிட மாட்டாங்க…?
அட… நானே உள்ளக்குள்ள
அப்படிதான்ப்பா அவனை வைய்ஞ்சுக்கிட்டு இருக்கேன்.
அட விருஷாலி என்னடான்னா… அவனை முன்னே பின்னே பார்த்தும் பார்க்காத மாதிரியே போயிட்டிருக்கா…! அப்ப அவ கிட்ட யாரும் அவனோட போட்டோவை முன்னாடியே காட்டலையா என்ன…?
இதை நம்பற மாதிரி இல்லையே..?
😃😃😃
CRVS (or) CRVS 2797
Mapillai manasula sengal suvar vachi building katti irukan ok aana ponnu enna mindset la iruku yae theriyala yae
Unga appa Voda sonthama nu ketu ipo intha alavuku vanthutiye vishaka avlo ena avasaram unaku ava vera ena mind set la irukalo
Virushali ku ok dana bcoz nega dan horn sound vera kekura mthiri vachutega so twist ethuvum vachurathega sis
😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕💕💕💕💕👌👌👌👌👌👌👌
Super super super sago
Nice
ஆனாலும் விஷாகன் இப்படி ஒரே நாளில் மாறியிருக்க வேண்டாம்