Skip to content
Home » காவலனே என் கணவனே 3

காவலனே என் கணவனே 3

அத்தியாயம் 3

அமைதியாக பயணம் தொடர விக்னேஷால் அமைதியாக எப்புடி வர முடியும்.. அவன் ஒரு லொட லொட டைப்பாச்சே.. அதனால் பேச்சை ஆரம்பித்தான்..

ஏன் சார் இது உங்க சொந்த ஊர் தானே என கேட்க ஆம் எனும் விதமாக ஆதி தலை அசைத்தான்..ஸ்கூல் காலேஜ் எல்லாம் இங்க தான் படிச்சீங்களா சார்.. அதுக்கும் ஆதி ஆம் என்றதும்..அப்ப உங்க ஆட்டோகிராப் எல்லாம் இங்க தானே சார்.. எத்தனை ஆட்டோகிராப் சார் என விக்னேஷ் கேட்க

அவனை முறைத்தான் ஆதி….

இருந்தா ஆமா.. இல்லைன்னா இல்லைன்னு சொல்றதை விட்டுட்டு ஏன் இந்த முறைப்பு.. ஒரு வேளை எண்ண முடியாத அளவு ஏகப்பட்ட ஆட்டோகிராப் இருக்கும் போல என விக்னேஷ் ட்ரைவர் குமார் காதில் கிசுகிசுக்க ஆதி காதிலும் அது விழுந்தது..

யோவ் வர வர ஏ.சி.பிகிட்ட பேசுறோம்ங்கிற மரியாதை உனக்கு கொஞ்சமும் இல்லாம போய்ட்டு, இருக்கு உனக்கு ஒரு நாளைக்கு என விரல் நீட்டி எச்சரிக்க,

இப்புதிய எப்ப பாரு கடுகடுன்னு இருந்தா எங்குட்டு வரும் ஆட்டோகிராப் என்ற வாய்க்குள் முனுமுனுத்தப்படி அப்போதைக்கு அமைதியாகி விட்டான் விக்னேஷ்….

கொஞ்சம் தூரம் செல்ல செல்ல போகும் வழி எங்கும் இருக்கும் அரசு அலுவலகம் தலைவர்கள் சிலை இருக்கும் பக்கங்களிலும் கமிஷனர் அலுவலகம் முன்பு இருந்தது போன்று கூட்டம் போட்டு கோஷம் போட்டு கொண்டு இருந்தனர்.. வானதிக்கு நீதி வாங்கி தருகிறேன் என்ற பெயரில் இவர்களுக்கு அரசாங்கம் மீதும் காவல்துறை மீதும் இருக்கும் வன்மத்தை கொட்டி கொண்டு இருந்தார்கள்..

இவனுங்களுக்கு எல்லாம் சின்னதா ஏதும் கிடைச்சிற கூடாது போராட்டம் பண்றேன்ங்கிற பெயரில் ஊதி ஊதி பெரிசு பண்ணி விட்டுடுவானுங்க.. இவனுங்க பண்ற போராட்டத்திற்கு காவலுக்கு பின்னாடி போலீஸ் வேணும்.. அதே போலீஸ்ஸை திட்டவும் செய்வாங்க கடுப்புடன் விக்னேஷ் சொல்ல,

கொஞ்சமாக சிரித்த ஆதி விடுய்யா அவங்களுக்கு வேற வேலை வேண்டாம்மா.. நீ ஏன் டென்ஷன் ஆகுற ஓரமா பொது ஜனத்திற்கு இடைஞ்சல் இல்லாம என்னத்தையோ பண்ணிட்டு போகட்டும் என்றான் ஆதி..

மறுபடியும் கொஞ்சம் தூரம் தான் சென்று இருப்பார்கள்.. அங்கும் ஒரு கூட்டம் இதே போல்.. சாலையின் ஓரம் நின்று இருந்தவர்கள்.. மெல்ல மெல்ல சாலை நடுவே வந்து கோஷம் போட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்ய ஆரம்பித்தனர்.. எதிரே ஒரு பள்ளி வேறு.. அவர்களை சாலையிலிருந்து அப்புற படுத்தி ஓரமாக போக சொல்லி அவர்களுக்கு பின்னே நின்ற காவலர்கள் அறிவுறுத்தி கொண்டு இருக்க.. கேட்போமா நாங்க நாங்க எவ்வளவு பெரிய ஆளு என்ற ரிதியில் அங்கிருந்தவர்கள் அடங்காமல் திமிற, போலீசார் எச்சரிக்க என சின்ன சலசலப்பு உருவாக, அப்போது ஒருவன் போலீஸை தாக்கினான்.. அப்புடியே மற்றவர்களும் போலீஸை தாக்க துவங்கினர்…

தூரத்தே வரும் போதே இதை பார்த்த ஆதித்யனுக்கு கோவம் உச்சிக்கு ஏறியது.. ஜீப்பில் இருந்து பாய்ந்து குதித்தவன் கலவரம் நடக்கும் இடத்திற்கு விரைந்து வந்து, போலீசை தாக்கிய ஒருவனை எட்டி மிதிக்க அவன் கீழே விழுந்தான்.. மற்றுமொருவனை முழுங்கையால் ஒரு குத்து வைத்தான்.. இரத்தம் வரவில்லை ஊமைக்காயம் தான்.. ஆனாலும் அவனுக்கு வலி உயிர் போனது.. மூன்றாவது ஒருத்தன் ஆதியையே அடிக்க வர அவன் கையை முறுக்கிய ஆதி, ஏன்டா போலீஸ் மேல்யே கை வைக்கிற அளவு அவ்வளவு தைரியமா, எந்த கருமத்தைனாலும் ஓரமா யாருக்கும் தொந்தரவு கொடுக்காம பண்ணிக்கோங்கன்னு தானே பர்மிஷன் கொடுத்து இருக்காங்க.. உங்களுக்கு தான் வேலை வெட்டி இல்லை.. மத்தவங்க எல்லாம் வேலைக்கு போக வேணாம்.. பக்கத்தில் ஸ்கூல் வேற இருக்கு.. இங்க உங்க ரெளடி தனத்தை காட்டுவீங்களா என, அங்கு நின்று இருந்த போலீஸ் கையிலிருந்த லத்தியை வாங்கி இரண்டு மூணு சாத்து சாத்த

அதற்குள் அருகே வந்த விக்னேஷ் சார் பப்ளிக் பப்ளிக் இங்க வச்சு அடிக்காதீங்க மனித உரிமை ஆளுங்களுக்கு ஏற்கெனவே உங்க மேல்ல பாசம் அதிகம் வேண்டாம் சார் என்றதும் ச்சே என லத்தியை கீழே போட்டவன், இவனுங்க மூணு பேரையும் ஒரு வேனிலும் ஏத்துங்க.. இவனுங்க கண்டிப்பா கலவரம் பண்ணுங்கிறதுக்காகவே போராட்டத்தில் கலந்து இருப்பானுங்களோன்னு டவுட் டா இருக்கு.. மத்தவங்களை வேற ஒரு வேனில் ஏத்துங்க என்று ஆதி ஆணையிட,அதற்குள் கலவரம் கேள்விப்ட்டு அருகே இருந்த காவல் நிலைய காவலர்களும் அங்கு வந்து இருந்தனர்..

விக்னேஷும் ஏனைய போலீஸ்களூம் அதை செயல்படுத்த ஆரம்பிக்க.. மூக்கில் குத்து வாங்கியவன் மட்டும் தப்பி ஓடினான்.. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை…அவனை தடுக்க வேண்டும் என நினைத்த ஆதி அருகே ஒரு இளநீர் கடை இருக்க அதில் காலி இளநீர் கூடு ஒன்றை எடுத்து அவனை நோக்கி வீசினான்.

ஸ்… ஆ… என்ற பெண் குரல்.. படுபாவி நகர்ந்து விட அந்த கூடு அங்கே வண்டியில் நின்று இருந்த ஒரு பெண்ணின் இடது கை மீது பட்டது.. பட்ட வேகத்தில் அவள் நிலை தடுமாறி வண்டியிலிருந்து கீழே விழ போக, நல்லவேளை அவள் பின்னிருந்து தோழி ஒருத்தி விழாதவாறு பிடித்து கொண்டாள்..அவுச் என நெற்றியில் அரைந்து கொண்டான் ஆதி.. குறி தவறியதற்காக அல்ல.. அவளை காயப்படுத்தியதற்காக..

இங்கு வர அவன் எதுக்கு தயங்கினானோ, யாரை பார்த்திடவே கூடாது என நினைத்தானோ அவளை காயப்படுத்தி இருந்தது அந்த இளநீர் கூடு… அவளை பார்க்க கூடாதூ என் அவன் நினைத்து இருக்க,விதியோ வந்த முதல் நாளே பார்க்கவும் வைத்து காயப்படுத்தவும் வைத்து விட்டது… நான்கு வருடத்திற்கு முன்பும் முதல் முறை அவளை பார்த்த போதும் தெரிந்தே அவள் மனதை காயப்படுத்தி இருக்கின்றான்… இப்போதும் ச்சே தெரியாமல் தான் நடந்தது.. ஆனாலும் தன்னையே கடிந்து கொண்டான்.. அப்புடி அவளுக்கே அடிபட்டு விட்டதே அதும் தன்னால் என அவன் கவலைப்பட்டு கொண்டு இருக்க, மறுபுறம் அவன் மனமோ இவ்வளவு ரணகளத்திலும் அந்த எலுமிச்சை நிற சல்வாரும் அடுக்கு கொடை ஜிமிக்கியும் அவளுக்கு எடுப்பா இருக்குல்ல என ரசித்து சொல்ல, டர்ட்டி மைண்ட் ஸ்டாப் இட் என அதட்ட, அது எங்கு அவன் பேச்சை கேட்டது… அவளை கண்டதில் குத்தாட்டம் அல்லவா போடுகிறது… அவன் அடக்க நினைத்தாலும் அது அடங்குவேன்னா என்றது..

அவளும் அந்த எலுமிச்சை சுடியும் அடிபட்ட கரத்தை மறுகையால் பிடித்தபடி அவனை தான் பார்த்தாள்… அவள் கண்கள் ஆதியை முதலில் பார்த்ததும் அதிர்ச்சி வியப்பு அதற்கடுத்து ஏதோ ஒன்று வந்தது.. அது ஆதிக்கு புரியவில்லை.. அதோடு சேர்த்து இப்போது இவன் அடித்த வலியையும் சேர்த்து பிரதிபலித்தது.. அருகே இருந்த தோழி குடிக்க தண்ணீர் குடித்து விட்டு, ஆதியை பார்த்து விட்டு அவள் காதில் ஏதோ கேட்க.. ஆம் என் தலை அசைத்தாள்.. என்ன கேட்டு இருப்பாள் அவனுக்கு தெரியுமே..

என்ன சார் அவங்களை போய் அடிச்சிட்டிங்க ட்ரைவர் குமார் தான் கேட்டது..

அண்ணன் சார் எய்ம் பண்ணது அக்யூஸ்சைட்ட அவன் நகர்ந்துட்டான்.. ஆக்ஸிடென்ட்டா அந்த பொண்ணு மேல்ல பட்டுருச்சு அவ்ளோ தான் வேணும்னு பண்ணலையே விடுங்க என்றான் விக்னேஷ்..

சார் அவங்க யார் தெரியுமா? குமார் கேட்க,

ஐ டோண்ட் நோ விக்னேஷ் தோளை குலுக்க..

கமிஷனர் கங்காதரன் சார் பொண்ணு என ட்ரைவர் குமார் சொல்ல..

அய்யயோ கமிஷனர் சார் பொண்ணா, மற்ற காவலர்கள் ஏன் அவள் அருகே உடனே சென்றது இப்போது விக்னேஷ்க்கு புரிந்தது.. சார் வாங்க சார் சாரி கேட்டுட்டு ஹெல்ப் பண்ணுவோம் என ஆதியை அழைத்து விட்டு அவள் அருகே சென்றான் உதவி செய்ய, ட்ரைவர் குமாரும் சென்றார்..

ஆதி செல்லவில்லை ஆதிக்கு அவளை எதிர்நோக்க ஒரு சங்கடம்.. அதனால் அங்கேயே தான் நின்று இருந்தான்..

ஹாஸ்பிடல் செல்ல போலீஸ் ஜீப்பில் அவளை வர சொல்லி அந்த ஏரியா இன்ஸ்பெக்டர வற்புறுத்த அவள் வேண்டாம் என மறுத்து விட்டாள்.. வழியில் வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்திய குமார்.. அவர்களை ஹாஸ்பிடல் போக சொல்ல, ஆட்டோ வரை சென்றவள் ஏறவில்லை திரும்பி ஆதியை பார்த்தாள்.. ஆதியும் அவளை தான் பார்த்தபடி நின்றான்..

விக்னேஷ்க்கும் குமார்க்கும் என்னடா இது என்றாகியது.. விக்னேஷ்க்கு ஆதியை பற்றி நன்கு தெரியும்.. நான்கு ஆண்டு கூட பணியாற்றி இருக்கிறான் அல்லவா.. பொண்ணை பார்த்தா மண்ணை பார்க்கிற சங்கத்தை சேர்ந்தவன் அவன்.. அவனா இப்புடி ஆச்சர்யமாக இருந்தது… அதோடு மற்றவர்களுக்கு அவனை பற்றி தெரியுமா என்ன நினைப்பார்கள்.. பொது இடம் வேறு,இப்புடி அப்பட்டமாக பார்த்து வைக்கிறானே,

அதனால் அவன் அருகே வந்த விக்னேஷ் சார் பப்ளிக் பப்ளிக் என்றான்.. ஆதி கவனம் எங்கு அவனிடம் அவளிடம் தானே,

சார் கமிஷனர் பொண்ணு சார் என்றார் இவர்கள் அருகே வந்த ட்ரைவர் குமார்.. ஓ.. என்றானே தவிர பார்வையை விளக்கவில்லை..

அவருக்கு கமிஷனர் வரை விஷயம் சென்றால், தனக்கும் சேர்த்து அல்லவா டோஸ் விழும் என்ற பயம்.. ஏற்கெனவே அவள் கையில் காயப்படுத்தி விட்டுட்டு இதுவும் வேறையா நொந்து கொண்ட குமார்.. சார் கமிஷனர் பொண்ணு மட்டுமில்லை.. ஏ.சி.பி ஜீவானந்தம் சாருக்கும் அவங்களுக்கும் கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுதாம் சார்… அடுத்த மாசம் நிச்சயம்னு பேசிக்கிறாங்க என்றார்..அதுக்கும் ஓ.. மட்டும் தான்.. வேறு எந்த ரியாக்சனும் அவன் கொடுக்கவில்லை.. பார்வையை விளக்கவும் இல்லை..

என்ன சார் இது ஜீவா சார் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு சொல்றேன்.. அப்பவும் இப்புடி பார்க்கிறார் விக்னேஷிடம் குமார் முறையிட,

அண்ணே இந்த பக்கம் மட்டுமில்லை அந்த பக்கமும் இதே நிலை தான் என குமாரை அவள் பக்கம் அந்த மஞ்சள் சுடிதார் பக்கம் திருப்பி காண்பித்த விக்னேஷ், எரியுறதை புடுங்குனா கொதிக்கிறது தானா அடங்கும்ன்னு எங்க பாட்டி சொல்லி இருக்குது.. அதனால் நீங்க இங்க கொதிக்கிறதை விட்டுட்டு அங்க எரியுறதை கிளப்பி அந்த ஆட்டோவில் அனுப்புனா மட்டும் தான் இதுக்கு எண்ட் கார்டு போட முடியும்.. இல்லைன்னா இப்பிடியே தான் சங்கீதம் ஸ்வரங்கள் ஏலே கணக்கான்னு சாயங்காலம் வரை நிற்க வேண்டியது தான் போங்க அண்ணே என தள்ள,

அதற்குள் அந்த மஞ்ச சுடியின் தோழியே ஆட்டோவில் ஏறாமல் நின்று இருந்தவளை பின்னிருந்து தள்ளி கஷ்டப்பட்டு ஏற்றி இருந்தாள்.. ஆட்டோவும் கிளம்பியது..விக்னேஷும், குமாரும் அப்பாடா என மூச்சு விட, மற்ற காவலர்கள் ஆதி அருகே வர ஆதி என்ற சிலையும் உயிர் பெற்றது.‌..

சொன்னேன் பார்த்தீங்களா என்ற ரீதியில் விக்னேஷ் குமாரை பார்த்தான்.. யோவ் என்னய்யா இப்புடி மசமசன்னு நின்னுட்டு இருக்க, க்ரைம் ஸ்பாட் போகனம்னு சொன்னது நினைவு இருக்கா இல்லையா, சீக்கிரம் ட்ராஃபிக்கை க்ளியர் பண்ணி ஜீப்பை எடுக்க சொல்லு, நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறதை பாரு என விக்னேஷை திட்டினான்..

யாரு நானு நின்னு வேடிக்கை பார்ததுட்டு இருக்கேன் அது சரி என்று நொந்தான் விக்னேஷ்..

சார் என்று ஆதி அருகே வந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சார் கமிஷனர் சார் பொண்ணு அவங்க என்றார்.. அதுக்கு என்ன பண்ண முடியும் சார்.. இட்ஸ் ஜஸ்ட் ஆக்சிடென்ட் எதுவும் வந்தா நான் பார்த்துக்கிறேன் என்றான்…

அரெஸ்ட் பண்ணுனவங்களில் போலீசை அடிச்சவங்க தவிர மத்தவங்களை ஒரு இரண்டு மணி நேரம் மட்டும் வச்சு இருந்திட்டு அனுப்பி விட்டுருங்க.. இப்புடி அவனுங்களை கலவரம் பண்ண சொல்லி தூண்டுனது யார்னு விசாரிங்க.. அந்த மூணு பேரில் அடிக்கும் போது நகர்ந்தேன்னே அவனை நீங்க யாரும் அடிக்க கூடாது.. நான் வந்து பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு ஜீப் அருகே வரவும் அதில் ஏறினான்..

மினிஸ்டர் மகன் கார்த்திக் வீடு வந்து சேர்ந்தனர்.. அதாவது வானதி தற்கொலை செய்து கொண்ட வீடு.. சிட்டிக்கு அவுட்டர் ஏரியாவில் இருந்தது… அக்கம்பக்கம் பார்த்தால் வீடு எதுவும் இல்லை… வாசலில் காவலுக்கு நின்ற காவலரிடம் சாவியை வாங்கி கேட்டை திறந்து உள்ளே சென்றனர்… இடமே ஒரு மார்க்கமா திகிலா இருக்குப்பா என நினைத்தான் விக்னேஷ்..

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வீடு தெரியவில்லை.. சார் வீட்டை காணோம் சார் வெறுச்சுன்னு கிடக்கு விக்னேஷ் கேட்க.. சார் ஒரு கிலோமீட்டருக்கு உள்ள நடக்கனும் உள்ள போனா தான் பங்களா என்றார் வாசலில் நின்று இருந்தவர்.. ஆதியும் விக்னேஷும் சுற்றியும் பார்த்தபடி ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என பார்த்தபடி நடக்க ஆரம்பித்தனர்..

இருபுறமும் பாக்கு மரம் நெடுநெடுவென வளர்ந்து இருந்தது..

சார் உங்களுக்கு அவங்களை முன்னரே தெரியுமா சார் விக்னேஷ் கேட்க..

யாரை கேட்கிறான் ஆதிக்கு தெரிந்தது.. இருந்தும் யாரை தெரியுமா கேட்கிற என முன்ன நடந்தபடி கேட்டான் ஆதி.

.அதான் சார் அந்த எல்லோ சுடி என்றவனை ஆதி திரும்பி முறைக்க இல்ல இல்ல கமிஷனர் சார் பொண்ணை என திருத்தினான்…

ம்பச் என்று தலை அசைத்தான் ஆதி தெரியாது எனும் விதமாக,

தெரியாதவங்களையா சார் அப்புடி பார்த்தீங்க என்றவனை பயங்கரமாக முறைத்த ஆதி..

அடிபட்டுருச்சேன்னு பார்த்தேன்ய்யா நீயா ஏதும் கற்பனை பண்ணி உளறாத என்றான்..

பார்த்ததை பார்த்தா அடிபட்டுருச்சேன்னு பார்த்த மாதிரி இல்லை.. ரொம்ப அப்பட்டமா பார்த்த மாதிரி இருந்தது சார் அவங்க தான் உங்களோட ஹான் ஹான் என நிறுத்த நின்று திரும்பி பார்த்து சிரித்த ஆதி தெரிஞ்சுக்கனுமா என கேட்கவும்..

ஆம் என ஆர்வமாக தலை ஆட்ட,கிட்ட என்ற ஆதி விக்னேஷ் அருகே வந்ததும் அவன் கழுத்தோட கைப்போட்டு தன்னோடு இறுக்க,

சார் சார் விடுங்க சார் விக்னேஷ் அலற, வாயை மூடிட்டு அமைதியா வரனும் இல்லைன்னா.. உன்னை நானே போட்டு தள்ளிட்டு நாலு தடவை லவ் பெயிலியர் ஆன துக்கம் தாங்காமல் தற்கொலை பண்ணிக்கிட்டன்னு கேஸை மாத்தி விட்டுருவேன் புரியாத ஆதி மிரட்டவும்..

ம்…ஓகே ஓகே சார் என்றான் விக்னேஷ்.. ஆதி விடுவிக்க..

கழுத்தை நீவி சரி செய்தவன் முன்ன டவுட் தான் சார் இருந்துச்சு… ஆனா இப்ப கன்பார்மே ஆகிட்டு அவங்க தான் உங்களோட ஆட்டோகிராப் என சொல்லி விட்டு விக்னேஷ் ஓடி விட,

உன்னை இன்னைக்கு என்ற ஆதி அடிக்க விரட்டினான்..

Tags:

6 thoughts on “காவலனே என் கணவனே 3”

  1. 😂😂😂😂😂😂ena policekar intha ranakalaththilum oru kilukilubbu ketkutha. Yemma yellow sudi unaku peyar illaiya😂😂😂😂 oruvelai autograph ah irukkumo. Wait panni parpoom. Intresting writer ji. Waiting for next ud

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *