வணக்கம் மக்களே!!!
இந்தக் கதை இலங்கை பேச்சு வழக்குல என்னோட முதல் முயற்சி. இந்தியால எப்படி ஊருக்கு ஊரு பேச்சு மாறுபடுதோ இங்கேயும் அதே போல தான். நான் படிச்ச வரைக்கும் இது வரைக்கும் இலங்கை பேச்சு வழக்குல வாசிச்ச கதை எல்லாமே பெரும்பாலும் யாழ்ப்பாணத்து தமிழ் அல்லது கிழக்குப் பிரதேச பேச்சுத் தமிழ் தான். ஆனா இந்தக் கதை அப்படி இல்ல. இது எங்க ஊர்ப் பக்கப் பேச்சுல தான் எழுதி இருக்கேன். இலங்கைத் தமிழும் இலங்கையில பெரும்பான்மை மக்கள் பேசும் சிங்கள மொழியும் கலந்து இருக்கு. சிங்கள உரையாடல்களுக்கான தமிழ் விளக்கங்களையும் நான் பக்கத்துல தந்து இருக்கேன். படிச்சுப் பாருங்க. பிடிக்கும்னு நம்புறேன்.
நன்றி.
###############
அத்தியாயம் 1
“புத்தங் சரணங் கச்சாமி…” என வானொலி வழியாக வந்த குரல் வீடெங்கும் ஒலிக்க, வீட்டினர் அனைவரும் காலை நேர பரபரப்போடு தத்தம் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
அதே நேரம் தலை முதல் கால் வரை போர்வையால் மூடிப் படுத்திருந்த அவ் உருவமோ கனவில் தன் ஆதர்ச நாயகன் ஹேமால் ரணசிங்க உடன் டூயட் பாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென அவளின் போர்வை உருவப்படவும் இமைகளைப் பிரிக்காமலேயே அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவளோ, “அனே… தவ டிக்க வெலாவக்… (ஐயோ… இன்னும் கொஞ்சம் நேரம்…)” எனச் சினுங்கினாள்.
“நெகிட்டபன் கெல்லே… எலிவெலா கொடாக் வெலா கிஹில்லா தென். நுப தாமத் நிதி. ஒக்கோட்டம நுபகே அம்மவ கியன்ன ஓனே. எயா தென ஹுரதல் நிசா தமய் மெஹெம ஹெந்திலா இன்னே.(எழுந்திரு பெண்ணே… விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகிடுச்சு. நீ இன்னும் தூங்கிட்டு இருக்க. எல்லாத்துக்கும் உன் அம்மாவ சொல்லணும். அவ தர செல்லம் தான் நீ இப்படி வளர்ந்திருக்க.) எனக் கோபமாகக் கூறியவரின் பேச்சைக் காதிலேயே வாங்காதவளோ, “அனே ஆச்சி… அத நிவாடுனே. டிக்க வெலாவக் நிதாகன்னம்கோ. (ஐயோ பாட்டி… இன்னைக்கு லீவ் தானே. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்குறேனே.) எனக் கெஞ்சினாள் பெண்ணவள்.
“தென் நுபம நெகிட்டினவத? நெத்தம் மம தாத்தட கதா கரன்னத? (இப்போ நீயே எழுந்திருக்கிறாயா? இல்ல அப்பாவ கூப்பிடட்டுமா?) என்ற கேள்வியில் மறு நொடியே பாய்ந்து எழுந்தமர்ந்து இமைகளைப் பிரித்தவள் தன் முன்னே கோபமாக நின்றிருந்தவரை பதிலுக்கு முறைத்துப் பார்த்தாள்.
“இக்மனட நாலா லேஸ்த்திவென்ன. பன்சலட்ட யன்ன ஓனே. (சீக்கிரம் குளிச்சிட்டு ரெடி ஆகு… விகாரைக்கு போகணும்.)” என்று விட்டுக் கிளம்பிய பாட்டியின் முதுகை வெறித்த பெண்ணவளோ, “எனக்கு கரைச்சல் பண்ணணும்டே வந்து சேந்திருக்கு. எல்லாம் இந்த மாமியால வந்தது. அவ ஃபெமிலியோட ட்ரிப் போறன்டா இந்தக் கெழவியையும் கூட்டிட்டுப் போக வேண்டியது தானே. இதுக்கு மட்டும் நாங்க வேணும். லீவ் நாளைக்கு சரி மனுசனுக்கு நிம்மதியா படுக்க ஏலா. (கரைச்சல் – தொந்தரவு/தொல்லை, மாமி – அத்தை, ஏலா – முடியாது)” என சத்தமாகவே முணுமுணுத்தாள் தான் பேசுவது பாட்டிக்கு எப்படியும் புரியப் போவதில்லை என்ற தைரியத்தில்.
இவள் தான் நம் கதையின் நாயகி. அமாயா.
குருணாகலைப் பிறப்பிடமாகக் கொண்டவள் வளர்ந்தது என்னவோ யாழ்ப்பாணத்தில்.
அமாயாவுக்கு எட்டு வயதாக இருக்கும் போது போலீஸாக இருக்கும் அவளின் தந்தை ராஜபக்ஷவிற்கு யாழ்ப்பாணத்திற்கு பணி இடமாற்றம் கிடைக்கவும் மனைவி மற்றும் மகளுடன் குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு குடியேறி விட்டார்.
அமாயாவிற்கு இப்போது இருபது வயதாகிறது.
கடந்த பன்னிரண்டு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறாள்.
அதனாலேயே பிறப்பில் சிங்களவராக இருந்தாலும் தமிழ் அவளுக்கு அத்துப்படி.
யாழ்ப்பாணத்திற்கு வந்த புதிதில் மொழி தெரியாத ஊரில் தடுமாறினாள்.
அவள் வசித்த பகுதியில் சிங்களப் பாடசாலைகள் இல்லாததால் தமிழ் மொழிப் பாடசாலையில் படிக்க வேண்டிய கட்டாயம் அமாயாவிற்கு.
தமிழ் கற்றுக் கொள்ள முதலில் கஷ்டப்பட்ட அமாயா அக்கம் பக்கத்து வீட்டில் இருந்த அவளின் வயது சிறுவர்களால் விரைவிலேயே தமிழ் பேசக் கற்றுக் கொண்டாள்.
எட்டு வயதேயான சிறுமிக்கு புது மொழியைக் கற்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமாக இருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெரும்பான்மையானோர் தமிழர் என்பதாலும் அங்குள்ளவர்களுக்கு சிங்களம் அவ்வளவாகத் தெரியாததாலும் வீட்டில் மட்டும் தான் அமாயா சிங்களத்தில் பேசுவாள்.
சென்ற வருடம் தான் விஞ்ஞானத் துறையில் உயர் தரப் பரீட்சை எழுதி சிறந்த பெறுபேற்றைப் பெற்றிருந்தாள்.
சில மாதங்களுக்கு முன் தான் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே மருத்துவத்துறைக்கு தெரிவாகி இருந்தாள்.
அமாயாவின் பெறுபேற்றுக்கு இலங்கையில் மருத்துவத்துறைக்கு சிறந்து விளங்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்குமாக இருந்தும் தன் குடும்பத்தை விட்டுப் பிரிய மனம் அற்று முதல் விருப்பமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்திருந்தாள்.
அனைவரிடமும் குறும்புக்காரியாகவும் சண்டைக்காரியகாவும் இருப்பவள் தந்தை என்ற சொல்லைக் கேட்டால் போதும் கப்சிப் என ஆகி விடுவாள்.
தந்தை காவல் துறையில் பணி புரிவதாலோ என்னவோ அமாயாவிற்கு சிறு வயதில் இருந்தே தேசப்பற்று அதிகம்.
எந்த இடத்திலும் தன் தாய் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டாள்.
இலங்கையில் தற்போது நிலவும் பண நெருக்கடி காரணமாக அதிகமான இளைஞர்கள் யுவதிகள் மேலைத்தேய நாடுகளுக்கு குடியேற, அமாயாவிற்கு அந்த எண்ணம் துளி கூட இல்லை.
அவ்வளவு ஏன்? இலங்கையில் சினிமாத்துறைக்கு பெயர் போன இந்திய சினிமாவில் கூட அவளுக்கு அவ்வளவு விருப்பம் கிடையாது.
அவளது தோழிகள் அனைவரும் அஜித், விஜய், சூர்யா என ஆதர்ச நாயகனாக வைத்திருக்க, அமாயாவிற்கோ இலங்கையில் சிறந்த நடிகராக டாப்பில் இருக்கும் ஹேமால் ரணசிங்க மீது தீரா அபிமானம்.
அமாயாவிற்கு பதினைந்து வயதாக இருக்கும் போது ஹேமால் ரணசிங்க நடித்த ‘தேதுனு ஆகாசே…’ என்ற திரைப்படத்தைப் பார்த்ததில் இருந்து அவளுக்கு ஹேமால் ரணசிங்கவின் மீது ஒரு அபிமானம்.
அவனின் ஒரு படத்தைக் கூட விடாது பார்ப்பாள்.
அமாயாவின் தோழிகளே இதனை வைத்து அவளைப் பலமுறை கிண்டல் செய்ததுண்டு.
ஆனால் அதெல்லாம் அவள் காதிலேயே வாங்க மாட்டாள்.
இவ்வாறிருக்க, குருணாகலில் அவளின் தந்தையின் மூத்த சகோதரியுடன் வசிக்கும் அவளின் பாட்டியை விடுமுறைக்கு அவளின் அத்தை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதாற்காக அமாயாவின் வீட்டில் கொண்டு வந்து விட்டிருந்தார்.
அவருக்கோ அமாயாவையும் அவளின் தாய் ருவினியையும் குறை சொல்லாவிட்டால் அந்த நாள் விடியாது.
பாட்டியை மனதில் அர்ச்சித்தவாறு குளித்து விட்டு வந்த அமாயா முழங்கால் வரை இருந்த, சீத்தைத் துணியால் தைத்த ஒரு அழகான கவுனை அணிந்தாள்.
இரு பக்கமும் கொஞ்சமாக முடியை எடுத்து க்ளிப் அடித்தவள் கூந்தலைக் காற்றில் விளையாட விட்டாள்.
கண்ணாடியில் ஒரு முறை தன் விம்பத்தைப் பார்த்தவளுக்கு திருப்தியாக இருக்கவும் துள்ளிக்குதித்தவாறு கீழே இறங்க, “அனே லேலி… மே பிஸ்ஸு லமயாட்ட கெல்லெக் வகே ஹெசிரென்ன கியலா துன்னெத்த? டிக்க தவசக்கின் தவ கெதரக்கட்ட யன்ன ஓனே நேத? மெயாகே வயச கெல்லோ அதே எகய், படே எகய் தியாகென இன்னவா. மெயத் இன்னவானே. தாம பபெக் வகே பெனலா பெனலா இன்னவா. (ஐயோ மருமகளே… இந்த லூசுப் பிள்ளை கிட்ட பொம்பளை பிள்ளை மாதிரி நடந்துக்க சொல்லிக் கொடுக்கலயா? இன்னும் கொஞ்சம் நாள்ல வேற வீட்டுக்கு போக வேணும்ல. இவ வயசு பொண்ணுங்க எல்லாம் கைல ஒன்னு, வயித்துல ஒன்னுன்னு இன்னும் இருக்குதுங்க. இவளும் தான் இருக்காளே. இன்னும் குழந்தை மாதிரி தாவித் தாவி இருக்கா.)” என பேத்தியின் செயலில் கடுப்படைந்து மருமகளிடம் எகிறினார் அமாயாவின் பாட்டி.
ருவினியோ மாமியாரிடம் பதிலுக்குப் பேச முடியாமல் மகளை முறைத்துப் பார்க்க, அவரிடம் நாக்கைத் துறுத்தி அழகு காட்டிய அமாயா பாட்டியிடம் திரும்பிக் கை எடுத்துக் கும்பிட்டவாறு, “ஐயோ ஆச்சி. ஒங்கட வயசு கெழடுகள் கூட தான் கல்லறைல கண்ணையும் வாயையும் மூடிட்டு இப்படி கண்ட மாதிரிக்கு கேள்வி கேட்காம, அடுத்தவனுக்கு கரைச்சல் பண்ணாம படுத்துட்டு இருக்குதுங்க. நான் கேட்டேனா ஒங்கள?” எனப் புன்னகையுடன் கேட்கவும் அவளின் பாஷை புரியாத பாட்டியோ, அமாயா தன்னை வணங்கியவாறு மன்னிப்புக் கேட்பதாக நினைத்து, “ஹரி ஹரி சமாவ துன்னா. தெவி பிஹிட்டய். கத்தா எத்தி தென். இக்மனட்ட பன்சலட்ட யமு. சாமின் வகன்சேத் எக்க ஒயாகே விவாஹய கென டிக்கக் கத்தாகரன்னத் ஓனே. (சரி சரி மன்னிச்சிட்டேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். பேசினது போதும் இப்போ. சீக்கிரம் விகாரைக்கு போகலாம். உன் கல்யாண விஷயமா பிக்கு கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு.” என்றவாறு எழுந்து கொண்டார்.
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அமாயா திருமணப் பேச்சை எடுத்த மறு நொடியே சட்டெனத் திரும்பி தாயை முறைக்க, அவரோ மகளைக் கெஞ்சல் பார்வை பார்த்து வைத்தார்.
ருவினியிடம் சென்ற அமாயா பாட்டிக்கு கேட்காதவாறு, “மொன மகுலக்த மேக? தென் மொக்கட்டத மெச்சர இக்மனட்ட மட்ட விவாஹயக்? மம தாம இகெனகன்ன ஓனே. மெஹெமெம கியொத் மகுல் நெமெய் கன்னவென்னே. (என்ன இழவு இது? எதுக்கு இப்போ இவ்வளவு அவசரமா கல்யாணம்? இப்படியே போனா அதுக்கப்புறம் கல்யாண சாப்பாடு இல்ல சாப்பிட வேண்டி வரும்.)” என்றாள் எரிச்சலாக.
“அனே துவே எய் மே நிக்கங் கேந்த்தி கன்னே? ஆச்சி கென தன்னெத்த இதின்? எயா கிவ்வா கியலா எச்சர இக்மனட்ட மகே துவவ விவாஹ கரலா யவன்னே நே. ஹெபெய் கொஹமத் மேக்க விவாஹ கரன வயசனே. (ஐயோ மகளே ஏன் இப்படி கோவம் எடுக்குற? பாட்டி பத்தி தெரியாதா இனி? அவர் சொன்னார்னு என் பொண்ண அவ்வளவு சீக்கிரமா கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க மாட்டேன். ஆனா எப்படியும் இது உனக்கு கல்யாண வயசு தானே.)” என்றார் ருவினி.
“மொகத்த மெத்தன சத்தே? (இங்க என்ன சத்தம்?)” எனக் கேட்டவாறு கையில் கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு போலீஸ் உடையில் ராஜபக்ஷ இறங்கி வர, “மொக்குத் நே. அப்பி நிக்கங் கத்தாகரகென ஹிட்டியா. மொகத்த மே உதே பாந்தரென்ம லேஸ்தி வெலா? பன்சலட்ட யன்ன என்னெத்த? பூஜாவத் தியனவனே. (ஒன்னும் இல்லங்க. நாங்க சும்மா பேசிட்டு இருந்தோம். என்ன இது இவ்வளவு காலைலயே ரெடி ஆகி இருக்கீங்க? விகாரைக்கு போக வரலயா? பூஜை வேற இருக்கே.)” எனக் கேட்டார் ருவினி.
“அதனங் மட்ட வெலாவக் நே நோனா. (நோனா – மனைவி)ஹதிஸ்ஸியென்ம குவன் டொட்டுபலட்ட யன்ன ஓனே. இந்தியாவ இதன் கலாகருவன் கிஹிப்ப தெனெக் எனவா ப்ரசங்கயக்கட. மம கிஹில்லா என்னங். ஒயாலா பரிஸ்ஸமின் யன்ன. (இன்னைக்குன்னா எனக்கு நேரம் இல்லம்மா. அவசரமா ஏர்போர்ட் போக வேண்டி இருக்கு. இந்தியால இருந்து கலைஞர்கள் கொஞ்சம் பேர் கான்சர்ட் ஒன்னுக்கு வராங்க. நான் போய்ட்டு வரேன். நீங்க எல்லாரும் பத்திரமா போயிட்டு வாங்க.” என்று விட்டு கிளம்பினார் ராஜபக்ஷ.
_______________________________________________
“என்ன மகன் இது? வெளிநாட்டுக்கு பெய்ட்டு எத்தனை வருஷம் ஆகிட்டு. இன்னுமே எங்கட நாட்டுப் பக்கம் வராம அங்கேயே குந்திட்டு இருக்குற. இந்த அம்மாவ சரி வந்து பார்க்கணும்னு நினைவு வரவே இல்லையா? ஒனக்கு இப்போ இருவத்தொன்பது வயசாகிட்டு. இன்னும் கலியாணம் வாணம்டுட்டு இருக்குற. (பெய்ட்டு-போய்ட்டு, குந்திட்டு-உட்கார்ந்துட்டு, ஒனக்கு-உனக்கு, கலியாணம்-கல்யாணம், வாணம்-வேணாம்)” என மறு முனையில் மூக்கை உறிஞ்சிய தாயின் பேச்சில் சலிப்படைந்து தலை முடியைக் கோதினான் நவீன்.
“அம்மா... ஒரே இந்த பேச்சி தானா? இதுக்கு தான் நீங்க கால் பண்ணா லேசில ஆன்சர் பண்ணுறல்ல. போன வருஷமே நான் ஃபுல்லா வெலகி வர தானே இருந்தேன். ஆனா எங்கட நாட்டு நெலமை தான் தெரியுமே இனி. அவனவன் சொந்த நாட்ட உட்டுட்டு குடும்பமா வெளிநாட்டுல செட்டில் ஆகுறாங்க. எல்லாம் சல்லிப் பஞ்சத்தால தான். தங்கச்சிட கலியாண செலவுக்கு வாங்கின கடன் எல்லாம் வேற இருக்குது. நான் அங்க வந்து பிச்சை வாங்கியா அதெல்லாம் கட்டி முடிக்க ஏலும்? வர வேண்டிய நேரத்துக்கு வருவேன் நான். லீவ் கெடச்சா இங்க குந்திட்டு இருக்க எனக்கு மட்டும் ஆசையா என்ன? எப்பப் பார்த்தாலும் கலியாணம் கலியாணம்டுட்டு. எனக்கு எப்போ வேணும்னு நினைக்கிறோ அந்த நேரத்துக்கு கலியாணம் முடிச்சிக்குறேன். மறுக கலியாணம் அது இதுன்னு கோல் பண்ணினா இங்கயே எவள சரி வெள்ளக்காரியொன்ட கலியாணம் முடிச்சிட்டு வருவேன். ஃபோன வைங்க. கோல் எடுத்தாவே கரைச்சல் தான். (ஒரே-எப்போதும், லேசில-இலகுவில், வெலகி-விலகி, உட்டுட்டு-விட்டுட்டு, சல்லி-காசு/பணம், ஏலும்-முடியும், கெடச்சா-கிடைத்தால், மறுக-மறுபடியும்) எனக் கோபமாகத் தாயிடம் கத்தி விட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு தாயிடம் கோபத்தில் கத்தியது வருத்தமாக இருந்தாலும் ஏற்கனவே தலையில் பல பிரச்சினைகளைப் போட்டு யோசித்துக் கொண்டிருப்பவனுக்கு இன்று தாயின் பேச்சு பொறுமையை சோதித்து விட்டது.
Nice staring
Very good start sis..but konjam kastam dhan pola language understand panradhu…and Amaya oda appa name vera vachurukalam😔 bcoz andha name pathaley 😡 varudhu…
Nice starting👌👌👌👌 waiting for nxt epi😍😍😍
Nice start👍👍