புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-15

நீயின்றி வாழ்வேது-15

      ஏசி பஸ்ஸினை வாடகைக்குப் பேசி, தன் திருமணத்திற்காக சென்னையிலிருந்து கூட வருபவர்களுக்காக, திருமண மண்டபத்திலிருந்து சற்று தள்ளி அமைந்திருந்த லாட்ஜில் ரூமை புக் செய்து தங்க வைத்தான் விஷாகன்.
  
    பெரும்பாலும் சென்னை வீட்டில் அருகே இருந்த அக்கம் பக்கத்தினர், சுகன்யாவின் நட்புறவால் ஏழெட்டுக் குடும்பம் வந்தார்கள். ஏசி பஸ், ஊர் சுற்றும் வாய்ப்பு கூடவே திருமணம் கண்டு களிக்க என்று வந்தவர்களே அதிகம்.

    உதயகுமாரின் கொரியர் அலுவலகத்தில் வேலை செய்யும்  வளவன் குடும்பம். தண்ணி கேன் போடும் ராஜன் குடும்பம். கூடுதலாய் தண்ணிக்கேன் கடையிலேயே இருக்கும் அகஸ்டியன். கொஞ்ச நாளாய் உடல்நலக்குறைவால் விடுப்பில் இருந்தான். அதன் காரணமாகத் தான் ஆர்.ஓ மாட்ட விஷாகனே சென்று வந்தது.

    சுகிர்தன் நண்பர்கள் என்று யாரையும் அழைக்கவில்லை. விஷாகன் நண்பர்கள் தனுஷ் மற்றும் ரவி குடும்பத்தோடு வந்தார்கள். ரவி குடும்பஸ்தன் தனுஷ் மணமாகாதவன்.

    சுகிர்தன் அப்பத்தா வீட்டிலே தங்க ஓடினான்.

   உதயகுமாரும் சுகன்யாவும் கூடச் சொந்த வீட்டை விட்டு வெளியே தங்க கூடாதென விஷாகனை நலங்கு வைக்க அழைத்துச் சென்றார்கள்.

    வேலையாட்கள் அவர்கள் குடும்பம் மற்றும் சுற்றத்தார்கள் என்று தங்க வசதி செய்து கொடுத்து அபர்ணாவை அழைத்து வந்தான்.

      மற்றவர்கள் அபர்ணாவை யாரெனக் கேட்டால் சென்னையில் தெரிந்தவங்க பெண் திருமணத்திற்குச் சுகன்யாவை நம்பி அனுப்பியதாக மூவரிடமும் கூறியிருந்தான்.

     சுகிர்தனோ “என்னிடம் யாராவது கேட்டா..  எனக்குத் தெரியாது விஷாகனுக்குத் தெரிந்தவங்கனு சொல்லிடுவேன்” என்று திட்டவட்டமாய்க் கூறிவிட்டான்.

    சுகன்யாவோ என்ன சொல்வதென்று தெரியாமல் பையன் சொல்லிக் கொடுத்ததையே சொல்ல முடிவெடுத்தார்.
 
   உதயகுமாரோ “தெரிந்த பிள்ளைனு சொல்லிடறேன் தம்பி” என்று விஷாகனிடம் கை கூப்பி நன்றி நவில்ந்தார். அவருக்கு மகள் கண் பார்வையில் இருக்க வேறென்ன வேண்டும்.

       அப்பத்தா வீட்டில் நுழையும் போதே கண்ணைச் சுருக்கி “யாரு இந்தப் பிள்ளை. நம்ம விஷாகன் கணக்கா இருக்கு” என்று கூறவும், விஷாகனோ “ஒருத்தர் லட்சணமா என் கலர்ல இருந்திட கூடாதே. உடனே என்னை மாதிரினு சொல்லிடுங்க. வேலைசெய்யற பொண்ணோட தங்கச்சி அப்பத்தா.” என்று அதன் பின் அபர்ணாவை அப்பத்தாவிடம் ‘நெருங்கி அமராதே அவங்க வந்தா வேற இடத்துல போய் உட்காரு’ என்று கூறினான்.

    பெரும்பாலும் மணமகன் என்பதால் வீட்டில் இருக்க வேண்டும். அபர்ணாவை வீட்டினுள் ஒரேயிடத்தில் அமர சொல்லி போனை கையில் கொடுத்தான்.

     விருஷாலிக்காக வாங்கிய புதுபோன் மேலே டிஸ்பிளே லேசாக உடைந்து இருந்தது. அபர்ணாவுக்குப் போரடிக்குமென்று குழந்தைகள் விளையாடும் விளையாட்டை ஏற்றி அவளிடம் தந்தான்.

ஒரேயிடத்தில் அமர வைக்க வசதியாகப் போனது. போதாதற்குப் போன் பார்க்க குனிந்து கொண்டு இருப்பதால் முகம் பார்க்கும் நிலை ஒரளவு தவிர்க்கப்படும் அல்லவா.?!

   விஷாகனுக்கு நலங்கு வைத்துச் சந்தனம் பூசி நீராடி கடவுளை வழிபட்டுப் புதுத் துணிகளைச் சொந்தப் பந்தத்திற்கு வழங்கினார்கள்.

    உதயகுமாரின் தம்பி செல்வகுமார் குடும்பம் சாமி கும்பிடும் நேரம் வந்து வஞ்சனையின்றிச் சாப்பிட்டு அபர்ணாவையே நோட்டமிட்டுக் கடந்தார்கள்.

செல்வகுமார் மனைவி தாமரை என்ன கேள்வி கேட்டாலும் “தெரிந்த பொண்ணு சித்தி” என்றான் விஷாகன்.

அதைத் தவிர்த்து விஷாகனிடம் வார்த்தை வாங்க முடியாதென அறிந்தவர். ஏனன்றால் இவர்கள் மகன் செழியன் காதல் கல்யாணம் என்று சென்றதால் தனியாக கணவன் மனைவி மட்டும் வந்திருந்தனர்.

இன்றொரு நாளை கடத்தி விட்டால் திருமண நாள் வந்துவிடும். அந்த நாளையும் ஒப்பேத்திவிட்டால் இங்கே தங்க சரிபடவில்லையெனக் கூறி தன்னவளை மட்டும் கையோடு ஊருக்கு அழைத்துக் கொண்டு பறந்திடவேண்டும் என்று விருஷாலி நினைவோடு செடியை கிள்ளி கிள்ளி எறிந்தான்.

“அட மருதாணியை எதுக்குக் கிள்ளி போடற” என்று அன்னபூரணி அப்பத்தா கேட்கவும் தான் விஷாகன் சுயவுணர்வு பெற்றான்.
 
     “ஒன்னுமில்லை அப்பத்தா. சும்மா.” என்றவன் திரும்பினான்.

கல்யாண கனவில் மிதப்பவனை மிதப்பாய் தான் பார்த்து அகன்றார் அன்னபூரணி அப்பத்தா.

“அய்… மருதாணியா? எனக்கு மருதாணி வேண்டும்.” என்று அபர்ணா ஆசையாய் ‘அண்ணன்’ என விளிக்காமல் விஷாகனிடம் மொட்டையாக கேட்டாள்.

   சென்னையிலிருந்து வரும் போதே உதயகுமாரை ‘அப்பா’ ‘டேடி’ என்று மாறி மாறி அழைக்க, கண்டிப்போடு அவரை வெளியே அப்படிக் கூப்பிடாதேறென்று கூறினான்.

  சுகன்யாவை ‘பெரிம்மா’ என்று அழைக்க, சுகன்யா விளுக்கென்று திரும்பி கொண்டார். ஏற்கனவே விஷாகன் சங்கீதா இறந்துவிட்டதாகக் கூறியதில் சற்று நிம்மதியானாலும், அபர்ணாவை கண்டு லேசான பயம் உண்டு.

  சுகிர்தனை ‘அண்ணா’ என்று அழைத்துப் பேச, “யாரை அண்ணா சொல்லற. அடிச்சி பல்லை பேத்துடுவேன் என்னை அப்படிக் கூப்பிடாதே” என்று விஷாகனிடம் காட்ட முடியாத கோபத்தைச் சிறுமியிடம் காட்டினான்.

    அதனால் விஷாகனிடமே மொட்டையாக உறவுமுறை பெயரை நீக்கி பேசினாள்.

  தனுஷ், ரவி இருவரும் அப்பத்தா வீட்டின் பக்கத்தில் வாடகைக்கு இருந்த மணியின் துணையோடு வலம் வந்தார்கள். விஷாகன் தான் மணியை இவர்களுக்குக் கெயிட்டாக(guide) மாற்றிச் சுற்ற விட்டான்.

      அபர்ணா மருதாணி கேட்டதும் எதுவும் பேசாமல் இருக்க அபர்ணா தானாகக் கவலையாய் போனை வைத்து விளையாட சென்றாள்.

   குழந்தை மனம் கேட்டதும் சில சமயம் சாந்த சொரூபனாக மாறிடும் விஷாகனோ “மா… கல்யாணத்துக்கு மருதாணி வைக்கலையா?” என்று பறித்துச் சுகன்யாவிடம் கொடுக்க அவர் மகனுக்காக அம்மிகல்லில் அரைக்க ஆரம்பித்தார்.

பழைய அம்மி கல் என்றாலும் அன்னபூரணி அப்பத்தா அடிக்கடி உபயோகப்படுத்துவார் என அதன் அரைபடும் விதத்திலேயே தெரிந்தது.

மருதாணி அரைத்து எடுத்து விஷாகனின் கையில் வைத்து விட்டார்.

   பெரும்பாலும் ஆண்கள் மருதாணி வைக்கத் தயங்குவார்கள். அதில் விஷாகன் வித்தியாசமானவன் மருதாணி என்றால் உள்ளங்கையில்  வட்டம் வைக்கப் பிரியபடுவான். அதிலும் குளிர்ச்சி என்று கால் கட்டை விரலும் வைக்கத் தயங்காதவன்.
 
   அதனால் சுகன்யா விஷாகனுக்கு வச்சி விடவும் அபர்ணா ஏக்கமாய் எட்டி நின்று பார்த்தாள்.
   விஷாகனே அன்னை மருதாணி வைத்து முடிக்கவும், “அம்மா அந்தப் பொண்ணுக்கும் வச்சிவிடேன் ப்ளிஸ். பாவம் சின்னப் பொண்ணு ஆசைப்பட்டா. அவர் செய்ததுக்கு இந்தப் பொண்ணை என்ன பண்ணறது?” என்று கண்கள் சுருங்க கெஞ்சினான்.

     வேண்டா வெறுப்பாய் அவளை அவனருகே அமர வைத்து அபர்ணாவுக்குக் கையில் மருதாணி வைத்தாள். ஏழு வயது குழந்தையின் பிஞ்சு கைகள் இன்னமும் குழந்தை தனம் இழக்காமல் மிருதுவாக இருக்க, முதலில் வேண்டாவெறுப்பாய் வைத்து விட ஆரம்பித்த சுகன்யா பின்னர் அழகாய் பார்த்து பார்த்து வைத்து முடித்தார்.

   “கையை அங்க இங்க ஆட்டி அசைத்துட கூடாது. அதே மாதிரி போனை தொடக்கூடாது.” என்று கூறி ரைம்ஸ் ஒன்றை போட்டுவிட்டு சென்றாள்.

   மருதாணி கைகளோடு விருஷாலி நினைவாக விஷாகன் கனவுக்குச் சென்றிருந்தான்.   

   பெண் பார்க்க வந்த பொழுது அவளின் வெள்ளை கைகளில் சிவப்பு நிறத்தில் பூசியிருந்தவை அத்தனை அழகாய் இருந்தது.

  அவள் கையைக் கூம்பு வைத்து சொன்ன வணக்கம், சாப்பிடும் போதும் வறுவலை எடுத்து கோழியின் பெயரை கூறினாளே அப்போது அந்தச் சிவப்பு நிற மருதாணி கைகளை ரசித்தான்.

    இந்நேரம் அவளுக்கும் நலங்கு முடிந்திருக்கும் என்று சாப்பிட்டான்.

ஏற்கனவே ‘அபர்ணாவிடம் நீங்க நெருங்காதிங்க. தூரத்துல இருந்து ஒரு கண் வச்சிக்கோங்க.’ என்று உதயகுமாரிடம் கூறியிருக்க, தன்னோடு அமர்ந்து சாப்பிட அபர்ணாவை அழைத்தான்.

சுகன்யா மருதாணி கையோடு மகன் சாப்பிடுவது கடினமென ஊட்ட துவங்க, பிடித்தோ பிடிக்காமலோ அபர்ணாவுக்கும் சேவகம் பார்த்தார்.

செல்லம்மா அம்மாச்சி வந்து “இந்தப் பொண்ணு யாரு” எனக் கேட்க, “உங்க பேரனை கேளுங்க தெரிந்த பொண்ணு” என்று நொடித்தாள். மகனும் தன்னை இந்தப் பெண்ணைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை திணிக்க வைத்த கடுப்பில் மொழிந்தார்.

செந்தூரன் தாத்தா வந்து சுகிர்தனிடம் கேட்க, ஏதோ கேட்க கூடாததைக் கேட்டது போல, “கண்ட கழுதைங்க கல்யாணத்துக்கு வர ஆசைப்பட்டா கூட்டிட்டு வந்துடுவான் உங்க பெரிய பேரன்” என்று கத்தியதும் அவர் மனதுக்குச் சரியாகப் படவில்லை.

அடுத்த நாள் காலை திருமணத்திற்குத் தயாராக வேண்டும். இங்கு ரிசப்ஷன் வைக்கும் திட்டமில்லை. தன் மாமா சங்கரனுக்குத் திருமணம் நிச்சயம் என்று இரண்டு நாள் செலவை தராமல், ஒரே நாளில் திருமணம் மட்டும் போதுமென்று கூறியதால் திருமணம் முடிந்து மதிய உணவும் மண்டபத்திலேயே என்று அறிவித்து, மாலை அன்னபூரணி அப்பத்தா வீட்டில் விளக்கேற்றி, விருஷாலி வீட்டில் சாந்திமுகூர்த்தம் என்பது பேச்சு.

மணமகன் மணமகள் என்று தனிதனி அறையிருக்க, தனுஷ்,ரவி இருவரும் விஷாகனோடு கூடவேயிருந்தார்கள். ஹாலில் அபர்ணா போனை வைத்து ஓரமாய் விளையாட சொல்லியிருந்தான் விஷாகன்.

திருமணத்திற்கு வந்த மற்ற குழந்தைகள் விளையாடவும் அவர்களையே பார்த்துப் போனை தனது சின்ன உடைமையை வைக்கும் பையில் வைத்து “நானும் விளையாட வரவா?” என்று குழந்தைகளோடு கலந்தாள்.

குழந்தைகள் உலகம் அனைவரையும் இணைத்துக் கொள்ள, கண்ணாம்பூச்சி ஆடி டேபிள், சேர், தூண், மேடைமீது என்று ஒளிந்து விளையாட திருமணத்திற்கு வந்தவர்களில் ‘யார் இந்தக் குழந்தை அழகாயிருக்கே.’ என்ற விசாரிப்பு வராமலிருக்குமா?

விஷாகன் வீட்டுக்கு வந்த கெஸ்ட், உறவு, பக்கத்து வீட்டுப்பெண் இப்படித் தான் அபர்ணாவின் அறிமுகம் சென்றது.

அப்படியிருந்தும் ‘இந்தக் குழந்தை விஷாகன் மாதிரியே இருக்கே.’ என்ற கிசுகிசுப்பு பரவ ஆரம்பித்தது.

மணமகள் அறைக்குள் விளையாட்டின் ஆர்வத்தில் ஒளிந்தாள் அபர்ணா. விருஷாலி கண்மை போடும் நேரம் ஒளிய வந்து அசைத்து விட முகம் சுணங்கினாள்.

தன் முகத்தின் எழிலை அலங்கோலமாக அந்த ‘ஐ லைனர்’ இழித்துக் காட்டவும், அபர்ணா விருஷாலியின் முதல் சந்திப்பு அதிருப்தியில் ஆரம்பமானது.

வனஜா தான் “ஏ பிள்ளை ஒளிய வேறயிடமே கிடைக்கலையா? கல்யாண பொண்ணோட ‘மேக்கப்’ல இப்படி அசைத்து விட்டிருக்க” என்று அதட்டி வெளியே போகத் திட்டிவிட்டாள்.

விருஷாலியோ “ஏன் வனஜா திட்டின. எனக்கும் கோபமா வந்துச்சு. ஆனா சின்னப் பொண்ணு. பார்க்க வேற அழகா பொம்மை மாதிரி இருக்கா.” என்று சென்றவளின் முகம் தன் ஆசை நாயகனின் முக அமைப்பு எனத் தெரியாமலே ரசித்தாள்.

“அந்தப் பொண்ணை எங்கயோ பார்த்த மாதிரி இல்லை” என்று செம்பருத்தி அம்மாச்சி கேட்டு யோசனையில் சென்றார்.

“எனக்கும் அப்படித் தான் அம்மாச்சி தெரியுது.” என்று விருஷாலி கூறினாலும் அதிகம் யோசிக்க விடாமல் சொந்தங்கள், சுற்றத்தார்கள் என்று வருகை தரவும், திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் பெரிய பொறுப்பில் ‘இவள் யார்?’ ‘யாராக இருக்கும்?’ என்ற இரண்டும் அடிமட்டத்திற்கு சென்றது.

இதில் மகள் விருஷாலி திருமணத்தில் சங்கரன் கொஞ்சம் போல மதுவை நாடியிருக்க, விவேக் அவரை வேறு தலையெழுத்தே என்று கடந்தான்.

பெரும்பாலும் சங்கரனை பற்றிப் புரளி பேசி, குறை கூறவே நேரம் தள்ள, அபர்ணாவை பற்றிப் பேச்சு வரும் சட்டெனக் குடத்தில் போட்ட கல்லாக அமிழ்ந்திடும்.

விஷாகன் மேடைக்கு வரும் முன் தனுஷ் தான் அவன் அருகேயிருந்தான். கேட்கலாமா வேண்டாமா என்று ஆயிரம் முறை முடிவெடுத்தே கேட்டான்.

“யார் டா அந்தப் பொண்ணு.? உன் ஜாடையில… சாரி மச்சான்.. என் பிரெண்டை யாரோ என்னவோ பேசட்டும்னு, வேடிக்கை பார்க்க முடியலை. ரவி கூட உன்னிடம் எதுவும் கேட்கவேண்டாம்னு சொன்னான். மனசு கேட்கலைடா.

சுகிர்தனிடம் கேட்டதுக்கு அசிங்கமா திட்டிட்டானாம். அதை வச்சி ஏதோ உன் மேல தப்புனு பேசறான்.” என்று வருத்தமாய் மனதிலிருந்ததை மறைக்காமல் கேட்டான்.

இந்த மூன்று நண்பர்களில் விஷாகன் பெரும்பாலும் நீதி நியாயம் பார்த்து சற்று நல்லது கெட்டதை ஆராய்ந்து பொறுமையாய் முடிவு எடுப்பவன்.
அதனால் அவன் செய்யும் எந்தச் செயலிலும், ஏன்பேச்சிலும் கூடத் தவறிருக்காதென்ற அபிப்ராயம் தனுஷிற்கு.

மணக்கோலத்தில் இருந்தவனிடம் கேட்டப்பின், தனுஷ் அசௌவுகரியம் அடைந்தான்.
அதற்கு நேர்மாறாக விஷாகன் அவன் கையைப் பிடித்து “தேங்க்ஸ் மச்சி. ட்ரூ பிரெண்ட் என்றால் கேள்வி கேட்கணும்டா. ஆனா இப்ப பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில இருக்கேன்.

உனக்கு நம்பிக்கை இருக்குலடா. தேங்க்ஸ்… சென்னை போனதும் கொஞ்ச நாள்ல சொல்லறேன்டா.” என்று பேசவும், தனுஷூம் ‘தவறு செய்தவன் இப்படிப் பேசமாட்டான். மச்சியே கூறட்டும்’ என்று புரிந்து கொண்டான்.

“மாப்பிள்ளையை மேடைக்கு அழைச்சிட்டு வாங்க” என்றதும் தனுஷோ “மச்சி உன்னைக் கூப்பிடறாங்க டா.” என்று அழைக்க, முகமெங்கும் புதுப் பொலிவோடு மேடையேறி வந்தான் விஷாகன்.

ஆறடி உயரம் கொண்டவன் அதற்கேற்ற உடற்கட்டு, சட்டென வசீகரிக்கும் முகம், லேசாய் சிரித்தாலே எதிராளியை மதிமயங்கு வைத்திடும். மாலை அணிந்து கையில் பூச்செண்டை பிடித்து மிடுக்காக வந்தான்.

தன்னிருப்பிடமாக அமர்ந்ததும் “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயர் குரல் கொடுத்து விட்டுக் கர்மசிரத்தையாக ஓமத்தில் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

விருஷாலி நல்ல நிறமாக இருக்கவும் சாதாரணமாகவே அழகு. மெரூன் வண்ண பட்டுபுடவையில், புடவையெங்கும் பட்டு ஜரிகை இழைய, சிக்கென்று ஒட்டியாணம் இடையை இறுக்கி காட்ட, கை முழுவதும் கோல்டன் நிற வளையலும் மெரூன் வண்ண வளையலும் மாறி மாறி நிறைத்திருந்தது.

காதில் ஜிமிக்கி அவள் நடைக்கேற்ப ஊஞ்சலாடி வரவும் விஷாகன் இதயமும் அவள் பக்கம் ஊஞ்சலாடியது.

கழுத்தில் வாடகைக்கு எடுத்த கல் பதித்த நகைகள் டாலடித்தது. அதில் அவள் முகமும் சேர்ந்து ஜோலிக்க, தேவதையின் அம்சமாகத் தோற்றமளித்தாள்.

விஷாகன் அருகே அமர வைக்கவும், சேலையை லேசாய் தூக்கி பிடித்து அமர, கொலுசு கால்கள் பளிச்சிட விஷாகன் அடிகண்ணில் அவள் பக்கமே பார்வை தழுவியிருந்தான்.

குத்து விளக்கு ஒளி விருஷாலி தலை குனிந்திருக்க அவளைக் காணும் போது, விஷாகனின் உள்ளம் இது தன்னவள் தனக்குரியவள் என்ற கர்வம் மிகுந்து பார்த்தான்.

மாங்கல்ய தட்டை ஏந்தி திருமணத்திற்கு வந்தவர்களிடம் தொட்டு ஆசிர்வாதம் அடைந்து மேடைக்கு எடுத்து வந்தார் விஷாகனின் சித்தி.

ஐயரும் நாழி கடக்கின்றதென்று முகூர்த்தம் நேரம் வரவும், ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்று குரல் கொடுக்க, பொன்தாலியை பொன்சிலையான அமர்ந்தவளின் கழுத்தில் அணிய துவங்கினான்.

விருஷாலி முகம் அம்மாச்சி கூறியதால் லேசாய் தலைகவிழ்ந்து இருந்தது. முகம் செக்க சிவந்திருக்க, ஆப்பிளை நினைவுப்படுத்தியது.

அவள் கன்னத்தைக் கடிக்கும் பேராவலை கட்டுப்படுத்தி மெதுவாய் அவளது கைவிரலை மட்டும் சுண்டு விரலால் பிடித்தான்.

விருஷாலி உடல் சிலிர்த்து கைகளைத் தன் பக்கம் இழுக்க, விஷாகனுக்கோ அவளின் கையைப் பிடித்திடும் பிடிவாதம் உதித்தது.

அவன் குறும்பை ஆரம்பிக்கும் முன்னே ஐயரே விருஷாலி பெற்றவர்களை அழைத்து அவள் கையைப் பிடித்து விஷாகனிடம் ஒப்படைக்கக் கூப்பிட்டார். அதே போல விஷாகனின் கையை அவன் பெற்றோர் பிடித்து விருஷாலியிடம் ஓப்படைக்க மேடையேறினார்கள்.

இது கன்னிகாதானம் போன்றதே. மணமகன் பெண்ணின் கரத்தை தன் கரத்தினுள் பதித்துத் ‘தன் துணைவியாக ஏற்கின்றேன் இனி கைவிடமாட்டேன்’ என்றும், மணப்பெண்ணும் ஆணின் கரத்தை தன் கரத்தில் பதித்து, ‘தானும் இன்றிலிருந்து கட்டியவனுக்கு உறுதுணையாகக் கடைசி வரை இன்பத்துன்பத்தில் துணையிருப்பேன்’ என்ற வாக்கை கொடுப்பது அர்த்தமாகும்.

இருவரும் கரத்தை கொடுத்துப் பெற்றவர்கள் விலகிட, விஷாகன் விருஷாலி கையை விடாமல் பிடித்து, தன்னருகே இருத்தி கொண்டான்.

“எங்க ஷாலி ஓடற… இனி அம்மாச்சி அம்மா யாரும் தடை சொல்ல மாட்டாங்க. நீ நான் எவ்ளோ நேரம் என்றாலும் பேசலாம்” என்று கிசுகிசுப்பாய் கூறவும், “யார் சொன்னா… கல்யாணமான பொண்ணு எப்படி நடக்கணும்னு தெரியாது. இத்தனை பேர் பார்க்க மேடையில் என்ன பேச்சுனு என்னைத் தான் கத்துவாங்க. அதனால பேசாம சும்மாயிருங்க” என்று அதட்டினாள்.

“பாருடா… தாலி ஏறியதும் அதட்டலா? ம்ம்… நானும் அதட்டி மிரட்டுவேன் நைட்டு தனியா சிக்க தானே போற?” என்று கூறவும் விருஷாலிக்கு மயக்கம் வராத குறையால் அவள் கையை உருவ முயல, அவனோ ‘விடுதலையே கிடையாது இங்க சிக்கிட்ட’ என்று இதயத்தில் அவள் கையை எடுத்து சென்றான்.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

19 thoughts on “நீயின்றி வாழ்வேது-15”

  1. Interesting epi iniku romba fast ah pochi story tgali katrathu kulla yarathu ethathu prachanai panniduvanglonu oru bayam irunthalum konjam kalayanam ninaipu mathiduchi . Aduthu aparnava pathi shali kitta solvana nu pakanum

  2. Super sis nice epi 👍👌😍 happa kalyanam oruvazhiya mudinjidhu enimey dhan matha prechanai ellam varumo parpom 🧐

  3. Daily next enna next enna nadakum enga curiosity ah increase pannitraga sisy.. ❤️super epi ithula romba pathika pada porathu abarna than.. Pavam antha chinna papa unmai terinchu virushali epdi treat pannuvanu therila vishagan so swt… Avanuku pidikalanalum antha baby kaga yosikaran romba interesting ah poguthu semma waiting for next epi ❤️

  4. நல்ல வேளை marriage முடிஞ்சது..எங்க அபர்ணா வால…கல்யாணம் நின்னுடுமொன்னு நினைச்சேன். ஆமா..அந்த பொண்ணு எங்க போன?..இதை யாரும் கவனிக்கலையா?

  5. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 15)

    எப்பா…! விசாகனை விட நமக்கு டென்ஷனாவே இருக்குதே….?
    இவங்க கதையில் ஹீரோவெல்லாம் ஏகபத்னி விரதன் தான்… ஆனா, அவங்கப்பனுங்க தான் கொஞ்சம் குண்டக்க மண்டக்க இருப்பானுங்க போல. தப்பு பண்ணது, தொடுப்பு வைச்சுக்கிட்டதெல்லாம் விசாகனோட அப்பா உதயகுமார் தான். ஆனா, அவருக்கு எந்த டென்ஷனும் இல்லை, மண்டையில இருக்கிற கொண்டையை பிச்சுக்கவும் தேவையில்லை. ஆனா பாருங்க ஆளாளாளுக்கு அந்த பொண்ணு அபர்ணா விசாகன் மாதிரியே இருக்காங்கன்னு சொல்ல, சொல்ல நமக்கு பகீரெங்குது அடி வயிறு…
    யாரு குட்டையை குழப்ப போறாங்களோன்னு…???

    எனக்கென்னவோ, இது அரசல் புரசலா தெரியவந்து… விருசாலி எங்கே மூஞ்சியை தூக்கி வைச்சிட்டு, விஷாகனை விட்டு பிரிஞ்சுடுவாளோன்னு இப்பவே பக் பக்குன்னு இருக்குது.
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  6. Inimel tha panjayatha…. Spr going waiting for nxt epi😍😍😍😍👌👌👌👌👌💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  7. கல்யாணத்துல எங்க சண்டை வந்துருமோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு…
    But smooth going …
    thanks for this…

  8. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு பக்கு பக்குன்னு யோசிக்கிற அளவுக்கு தான் இந்த கதையை கொண்டு போய்கிட்டு இருக்கீங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!