புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது -16

நீயின்றி வாழ்வேது-16

   விருஷாலியோ அடிக்கடி விஷாகனை கடைக்கண்ணால் கள்ளத்தனமாய்க் கண்டு, புகைப்படத்திற்கு ஏற்றவாறு முகம் விகாசித்து நின்றாள்.

       ‘இந்த மச்சான் ஏன் இப்படிப் பேசி வம்பு இழுக்கறார்.’ என்று ஒருநொடி புரிய துவங்கவும், அதிர்ச்சியாய் அவனை விளுக்கென்று அவனைத் திரும்பி பார்த்தாள்.

கண்சிமிட்டி கன்னத்தில் லேசாய் குழி விழும் அளவிற்கு அளவோடு சிரித்தான்.

பெண்ணைக் கண்டு மதிமயங்கி நாட்டையும், வீட்டையும் இழந்த ராஜாக்கள் உண்டு. ஏன் முனிவர்களும் தன் தவத்தை மறந்து துறவறம் துறந்து, பிரம்மசரி விரதத்தைக் கைவிட்டு பெண்ணின் அழகில் விழுந்ததைப் பல கதைகள் வரலாற்றில் படித்திருப்போம்.

அதே போல ஆண்களின் அழகில் தன் மனதை தொலைத்து, தன்கற்பை தொலைத்து, கந்தர்வ மணம் புரிந்து கணவனாகக் காலம் தள்ளிய பெண்களும் உண்டு. இந்த நிமிடம் விஷாகனையே எண்ணி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பாயா? என்ற வினாவை விருஷாலி முன் வைத்தாலும் ‘அவரைக் கண்ணெதிர இருந்தா கூட நினைச்சிட்டே வாழ்ந்துடுவேன். அதுவும் இந்தச் சிரிப்பு வெட்கம் போதும்’ என்பாள் பேதையவள்.

இந்தளவு காதலை வழியவிட்டு, செம்பருத்தி அம்மாச்சியின் அறிவுரைகளைக் கூட மறந்து விழியகலாது பார்த்தாள்.

அப்பொழுது அபர்ணா மேடையேறி வந்து, விஷாகனின் சட்டை நுனியை இழுத்து நின்றாள்.

விஷாகன் மேடையிலிருந்த மற்றவரை சங்கோஜமாகப் பார்த்து, அபர்ணா அளவிற்குக் குனிந்து, “எதுக்கு வந்த? என்ன வேண்டும். ஒரமா போன் வச்சி விளையாட சொன்னேன்ல?” என்றான் மென்குரலில்.

போன் கொடுத்தால் குழந்தைகள் ஒரேயிடத்தில் அமர்ந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதனால் விஷாகன் ஏன் வந்தாயெனக் கேட்டு, இவளை யாரேனும் பார்த்திடுவாரோ எனக் கடைக்கண்ணால் நோட்டமிட்டான்.

“எனக்குப் பசிக்குதே.” என்று அபர்ணா கூறவும் தான் விஷாகனுக்குப் ‘பசி வந்தால் பத்தும் பறக்குமாம்.’ மானம் குலம், கல்வி, அறிவு, வாய்மை, தானம், தவம், முயற்சி, காமம், ஊக்கம் இந்தப் பத்தையும் மேதைகள் கூடத் தவிர்த்து பசியைத் தேடு நாடுவார்கள்.

அப்படியிருக்கச் சிறுமி அபர்ணாவுக்கு விளையாட்டு பொருளை தவிர்த்து வைத்து, பசிக்கு உணவை சாப்பிட யாரிடம் கேட்க என்று யோசித்து, தன்னை அழைத்து வந்தவர், மற்றும் தன்னிடம் தன்மையாக நடந்து கொள்பவர் என்ற கண்ணோட்டத்தில் மேடையேறி வந்து விஷாகனிடம் கேட்டாள்.

உதயக்குமார் மகனின் திருமணத்தில் வந்தவரை கவனிக்கச் சென்றிருந்தார். அதன் காரணமாக எந்த இடத்தில் அவரைத் தேடுவதுனென்று அவரை விடுத்து, கண்ணுக்கு எதிரே மேடையில் இருந்த விஷாகனை நாடவும், சில நொடி போட்டோ எடுக்கும் நேரம் தடைப்பட்டது.

விஷாகனோ சட்டெனக் கண்ணில் பட்ட விருஷாலி அண்ணனை அழைத்து “விவேக் இந்தப் பாப்பாவுக்குப் பசிக்குது. அம்மா மத்தவங்களைக் கவனிக்கற ஆர்வத்துல மறந்திருப்பாங்க. கொஞ்சம் சாப்பிட வச்சி கூடவேயிருந்து கூட்டிட்டு வந்துடு” என்று பொறுப்பாய் ஒப்படைத்தான்.

விவேக்கோ விஷாகன் மச்சான் தன்னிடம் ஒரு பொறுப்பை வழங்குவதாய் மகிழ்ச்சியோடு அபர்ணாவை அழைத்துச் சென்று, அமர வைத்துச் சாப்பாட்டைப் பரிமாறினான்.

அதற்குள் விருஷாலி “எப்படிப் பெத்த அப்பா அம்மாவே குட்டி பொண்ணைத் தனியா உங்க கல்யாணம் பார்க்க அனுப்பினாங்க.” என்று முதல் வினாவை தொடுத்தாள்.

அவளிடம் எதையும் மறைக்கும் எண்ணம் விஷாகனுக்கு இல்லை. ஆனாலும் இந்த இடத்தில், இந்த நேரத்தில் எப்படி உண்மையைச் சொல்வது? உண்மையைக் கூறவும் இடம் பொருள் ஏவல் முக்கியமே.

“உலகத்துல பிறந்த குழந்தையைக் கூட ஒரு பொறுப்பானவங்களிடம் கொடுத்துட்டு வேலைக்குப் போறாங்களே ஷாலி. அப்படியிருக்க கல்யாணத்துக்கு தெரிந்தவங்கனு அனுப்பிட்டாங்க” என்று வாயடைத்து விட்டான்.

போதாதற்கு “போட்டோவுக்கு சரியா நில்லு. இங்க பாரு தாலி செயின் திரும்பி கிடக்குது.” என்று சரிப்படுத்தினான்.

அவன் எதச்சயமாகத் தீண்டிய நேரம் பெண்ணவள் தான் நாணினாள்.
தன் முன்னழகிற்கு மத்தியில் விஷாகன் கைகள் தாலியை சரிப்படுத்த, மூச்சு விட மறந்தவளாய் கற்சிலையாய் மாறினாள்.

விஷாகனோ தீண்டியப்பின் கையைச் சட்டென எடுத்துவிட்டாலும், லேசாய் கைகள் நடுங்க நின்றான்.

அவனுக்கும் என்னவோ குற்றம் புரிந்தவனாய் தவித்தான்.

புகைப்படக்காரரோ, “அண்ணே… என்ன பசிக்குதா? இரண்டு பேர் முகமும் டல்லாயிருக்கு” என்றான்.

விஷாகன் விருஷாலி இருவரும் நடந்தவையை யாரிடமும் கூறயியலாது தவித்து அப்பாவியாய் நின்றார்கள்.

புகைப்படக்காரர் கடிகாரத்தைப் பார்த்து ” மணி பத்துக்கு மேல ஆகுது. போய்ச் சாப்பிட்டு தெம்பா வந்து போட்டோவுக்குப் போஸ் கொடுங்க.” என்று விரட்டினார். அவருக்கு அவர் தொழிலில் புகைப்படம் அழகாக வேண்டும் என்ற தொழில் பக்தி.

விஷாகனே “சாப்பிடலாமா?” என்றதும் விருஷாலி தலையாட்டினாள்.

இருவரும் மெதுவாய் படிக்கட்டில் நடந்தார்கள். தனுஷ். ரவி ஏற்கனவே நேரமாகின்றதென்று அவர்கள் வயிற்றை நிரப்பினார்கள். வனஜாவும் தன் பெற்றோர் வரவும் அவர்களோடு சென்று சாப்பிட்டிருந்தாள்.

அதனால் மணமகன் மணமகள் தற்போது தனியாக, மற்ற நெருக்கமான உறவை தவிர்த்து அங்கிருந்தவரோடு சாப்பிட அமர்ந்தனர்.

வாழையிலைப் போட்டுத் தண்ணீர் தெளித்து இனிப்பு வரவும், குலோப்ஜாமூனை உருட்டியபடி, விஷாகன் “கை தெரியாம பட்டுடுச்சு ஷாலி.” என்றான்.

அங்கிருந்த சின்ன வாட்டர் பாட்டிலை வேகமாய்ப் பிரித்து விருஷாலி தண்ணியைக் குடித்துத் தன்னை நிதானித்துக் கொண்டாள்.

“சாரி ஷாலி” என்று மீண்டும் உரைக்கவும் தலையாட்டி “ம்.. சாப்பிடுங்க.. போட்டோக்காரர் வேற சாப்பிடறதும் எடுக்க வந்துட்டார்.” என்று சுற்றத்தை நினைவுப்படுத்தினாள்.

குலோப்ஜாமூனை தவிர்த்து அல்வா, இடியாப்பம் இட்லி தோசை, வெண்பொங்கல் என்று வரிசையாய் வைத்து அதற்குப் பொருத்தமாய்ப் பன்னீர்குருமா, சாம்பார், இரண்டுவகைச் சட்னி, வடை என்று சாப்பாட்டில் கை வைக்கும் தருணம் அபர்ணா ஓடிவந்தாள்.

அவள் ஓடிவரவும், “சாப்பிட்டியா அபர்ணா” என்று விஷாகன் கேட்டான். அவளோ விஷாகன் பின்னே இருந்த உதயகுமார் செய்கையில் ‘சாப்பிட்டியா கண்ணு’ என்று கேட்டு முடிக்க, தந்தைக்குப் பதில் தரும் வேகத்தோடு, “சாப்பிட்டேன் அப்பா” என்று கூறினாள். பார்ப்பவருக்கு விஷாகனை அப்பா என்கின்றாளே என்று சந்தேகம் வந்து சூழ்ந்திருக்க வேண்டும்.

ஆனால் ஒரளவு புதுமணத் தம்பதிகள் என்றதால் யாரும் அருகில் இல்லை.

விருஷாலி மட்டும் ‘என்னது அப்பாவா?’ என்று முழிக்க, விஷாகன் தன் பின்னால் இருந்த உதயகுமாரை பார்த்து அபர்ணா பதில் தந்ததை ஊகித்து விட்டான்.

விஷாகன் சமாளிக்க வேண்டியது, தன் மனைவி விருஷாலியை தான்.

“அது… வாப்பா போப்பானு பேசுவாங்களே விருஷாலி அப்படி. வனஜாவை நீ ‘சொல்லுப்பா’ ‘ஓகேப்பா’ இப்படிப் பேசிக்க மாட்டிங்க. அது மாதிரி சாப்பிட்டேன்பா’னு சொல்லியிருப்பா.” என்றவன் தந்தையைத் தவறாக நினைத்தாலும் பரவாயில்லையெனத் தந்தையிடமே அபர்ணாவை அவ்விடம் விட்டு அழைத்துப் போகக் கூறினான்.

அவரோ “அபர்ணா இங்க என்னோட வா” என்று உதயகுமார் அழைத்தபடி படியில் இறங்கி “என்னடா அப்பானு கூப்பிட்டுட்ட, இங்கிருந்து போகற வரை யாரிடமும் பேசாதே. என்னைய அப்பானு சொல்லாதே.” என்று தன் குழந்தையிடம் வேண்டுதல் வைத்தார்.

சுகிர்தனோ மாடிக்கு வந்தவன் அப்பா அவர் மகளிடம் கொஞ்சி பேசுவதைக் கண்டு தலையிலடித்து வந்தவழி திரும்பினான்.

விருஷாலியோ விஷாகனின் பதிலில் ஏதோ ஏற்றுக்கொண்டதாகத் தலையாட்டினாள்.

தலையாட்டும் விதமாக விஷாகன் அவளுக்கு ஊட்டிவிட்டான். அவனாகச் செய்தால் செம்பருத்தி அம்மாச்சி திட்டும் என்று ஒதுங்கும் பெண். புகைப்படக்காரரோ விஷாகனை ஊட்டிவிடக் கூறி அதனைப் புகைப்படமாக அழகாய் எடுத்தார்.

பாதிக் குலாப்ஜாமூன் கடித்தவன், புகைப்படக்காரர் வேறுபக்கம் மற்றவரை போட்டோ எடுக்கச் சென்றதால், விருஷாலியின் வெண்டக்காய் விரலை நாவினால் சீண்ட ஆரம்பித்தான் விஷாகன்.

அவன் விரலை கடிப்பானோ என்ற அச்சத்தில் விளுக்கெனக் கையை இழுத்து கொண்டாள்.

“ஷாலி.” என்று கூப்பிட, “என்ன திரும்பச் சாரியா… போங்க… ஏதாவது பண்ணிட்டு பிறகு சாரி கேட்கறிங்க.” என்று சிணுங்கினாள்.

“சரி இனி சாரி கேட்க மாட்டேன்.” என்று அவள் மடியில் இருந்த அவளது கையைத் தன் கையோடு கோர்த்துக் கொண்டான்.

“அம்மாச்சி திட்டும்.”

“ம்..”

“அம்மாவும் திட்டுவாங்க” என்று கூறியவள் தானாகக் கையை விடுவிக்கப் போராடவில்லை.

“ஊரே திட்டினாலும் இனி கைவிடறதாயில்லை. எனக்குள்ள ரசாயன மாற்றமாகுது. எக்குதப்பா இதயம் துடிக்குது. இப்பவே இவளை தூக்கிட்டு நம்ம வீட்டுக்கு போடானு மனசாட்சி அடம் பிடிக்குது.” என்று பேச பேச விருஷாலி மதியிழந்து போனாள்.

அதன் பின் உணவு முடித்துக் கை அலம்பும் இடத்திற்கு வந்து கையை அலம்பி விருஷாலியின் சின்னக் கைக்குட்டையினைப் பிடுங்கி தன் கையை வாயை உரிமையாய் துடைத்தான்.

“ஏலேய் விவேக்கு… அங்க சங்கரன் மாமா மம்பு அதிகமாகி ஆடிட்டு இருக்கார். இங்க தனியா வந்து என்ன பண்ணற?” என்று ஊர்க்காரன் ஒருவன் விவேக்கிடம் கேட்கவும் விஷாகன் விவேக் அங்கே இருப்பதை அறிந்து வந்தான்.

விவேக்கோ கவலையாக எழுந்து சங்கரன் இடம் நோக்கி வந்தான். சமையல் கட்டிற்குப் போகும் பாதையில் ஒர் அறை இருக்கவும் அங்கே தான் சங்கரனை இருக்கக் கூறி விவேக் அமர வைத்து அபர்ணா சாப்பிடும் வரை அவளிடம் பேச்சு கொடுத்தபடி தந்தையைக் கண்கானித்தான்.
அபர்ணாவை பேசவிட்டு கேட்டவன், சில விஷயம் அபர்ணாவை அறியாது உளற, அதைக் கேட்டு விவேக் அதிர்ந்தவனாய் இங்கு அமர்ந்தவன் தான். இதோ இப்பொழுது தான் எழுந்து தந்தையை நோக்கி நடந்தான்.

‘எம்மகளுக்குப் பெரிய இடத்துல நல்ல…. படியா.. கட்டிக் கொடுத்துட்டேன்.
நான் நல்ல அப்பன்” என்று இழுத்து இழுத்து பேசி நாக்கு குழற உலறினார் சங்கரன்.

மகளின் திருமணத்தில் குடித்துவிட்டு உலறுவது எல்லாம் நல்ல அப்பன் செய்யும் செயலேயில்லை.
விவேக் தந்தையை மீண்டும் அதே அறைக்குள் தள்ள முயன்றான்.

குடித்தவனின் எடை, பிணத்தை விடக் கூடுதலாக இருந்தது.

விஷாகனே முன் வந்து “ஒரு நிமிஷம் விவேக்” என்று அவனை நிறுத்தி குண்டுக்கட்டாகத் தன் மாமனாரை தூக்கினான்.
அறைக்குள் வந்து படுக்க வைத்து, “மாமா நல்லா தூங்குங்க.” என்று கூறிட, “நீ தான் நல்ல மாப்பிள்ளை. இதுக்குத் தான், உனக்கு என் பொண்ணைக் கண்ணை மூடி தூக்கி கொடுக்க முடிவெடுத்தேன்.” என்று உளறிடவும், விவேக் தன்னையும் அறியாது “ஏன்யா அப்பனுங்க எல்லாம் இப்படி இருக்கிங்க. உங்களால் பசங்க ஒவ்வொரு நொடியும் சாகணுமா?” என்று அடக்கமாட்டாமல் வார்த்தையை உதிர்த்தான்.

விவேக் இதுவரை அசட்டுதனமாக, பொறுமையாக, பண்பாய் பேசுபவன். இன்று உதிர்த்த வார்த்தையோ விஷாகனுக்கு அதிர்ச்சி அளித்தது.

அபர்ணா வேறு ஓடிவந்து, “நான் அவரிடம் சங்கீதா அம்மாவை பத்தி பேசியது தப்பாயிடுச்சா? அவர் தான் அம்மா பெயர் அப்பா பெயர் கேட்டார்” என்று அபர்ணா சாப்பிட அழைத்து வந்தப்பொழுது, அவள் பேசியதை வைத்து விஷாகனிடம் விவேக் சண்டையிடுகின்றாரோ என்று பதில்தந்தாள்.

விஷாகனோ “அதெல்லாம் இல்லை நீ போ” என்று விரட்டினான்.

அபர்ணா சென்றதும் “எதுக்கு விரட்டறிங்க? என் தங்கை விருஷாலிக்கு ஏதாவது தெரிந்திடும்னு பயமா. அவளுக்கு அப்பா தண்ணி அடிச்சாளே அந்த வாடை குமட்டும் என்று தள்ளி போயிடுவா. இதோ இப்ப அங்கயே நின்று, இங்க என்ன நடக்குதுனு தெரியாம இருக்காளே அதுமாதிரி.” என்று விவேக் பேசவும் விஷாகனுக்கு விவேக்கிடம் அபர்ணா என்ன பேசினாளோ என்ற அச்சம் உருவானது.

ஒருபக்கம் விருஷாலியை மணந்தாயிற்று இனி எதுவென்றாலும் சமாளித்தாக வேண்டிய நிலை தனக்கெனப் புரிய விவேக்கை கண்டு பேச ஆரம்பிக்க, “பச் பேசாதிங்க” என்றான் வேகமாக.

தனது குடும்பத்தின் நிலை விருஷாலிக்கு தாலி அணிந்த கொஞ்ச நேரத்திலேயே தெரியவந்து தங்கள் குடும்பமானம் இழக்க போவதோடு, தன் காதல் மனைவி விருஷாலி மனதில், தன் குடும்பம் கெட்டதாகப் பதிவாகுமோ என்ற கலக்கத்தோடு மணமகன் அவதாரத்தில் நலுங்கி நின்றான்.

மாங்கல்யம் அணியும் நேரம் கூட இறைவனைத் துளியும் துதிக்கவில்லை. மனதில் மாங்கல்யம் அணிந்த நொடியின் போது, விருஷாலி காதல் தேசமாய்த் தன்னை ஆளப்போவதாகக் கனவில் துளிர்விட்டு காதல் சாம்ராஜ்ஜியம் நிகழ்த்தும் காளையாகத் தன்னை எண்ணியும் கல்யாண கனவில் மிதந்தான்.

தற்போது தன் குடும்பமானம் கூடப் போய்த் தொலையட்டும். அதைப் பாதுகாத்து யாரும் நிம்மதியாக வாழப்போவதில்லை. தன் காதல் சிதைந்திடக் கூடாதென இறைவனை வேண்டினான். குடும்ப மானத்தை விட விருஷாலியை அதிகம் நேசித்தவனாய் விவேக் முன் நின்றான், விஷாகன்.

-தொடரும்
Praveena Thangaraj

14 thoughts on “நீயின்றி வாழ்வேது -16”

  1. Super super super super super super super super super super super super super super super super super vishali itha epti eduthupalo🤔🤔🤔🤔🤔🤔😌😌😌😌visahagan family ya epti samalika poran😔😔😔😔

    1. அச்சோ விஷாகா உன் நிலைமை பனை மரத்தின் கீழ் பால் குடித்த கதை ஆகிவிட்டதே

  2. Super sis nice epi 👍👌😍 paavam vishagan kalyanam panna happiness konjam neram kooda Ella enna nadakumo parpom 🤔🙄

  3. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 16)

    இப்ப எதுக்கு விசாகன் பயப்படணும்…? அதான், விக்கி ‘அப்பன்ங்க செய்த தவறாலே பசங்க காலத்துக்கு பயந்து, பயந்து வாழணுமா’ன்னு சரியாத்தானே பாயிண்டை பிடிச்சிட்டான். அப்புறம் ஏன் விசாகன் கலங்கணும்..?
    அப்பனை கெட்டதுக்கு மட்டும் தான் உதாரணமா எடுத்துக்கணுமா…? ஏன், அப்பன் மாதிரி கெட்டவழியில போகக் கூடாதுன்னு.. நல்லதுக்கும் உதாரணமா எடுத்துக்கலாமே. நம்ம விசாகன் ஆல்ரெடி அப்படித்தானே வாழ்ந்திட்டிருக்கான். ஸோ…
    விக்கியாகட்டும், விருஷாலியாகட்டும் தான் அப்பன் மாதிரி கிடையாதுன்னு
    தெளிவா, தைரியமா புரியற மாதிரி எடுத்துச் சொன்னா…
    புரிஞ்சுக்கப் போறாங்க… அம்புட்டுத்தான்..! “தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை… ! தாயை குழாயடியில பார்த்தா, மகளை வீட்டுலப் போய் பார்க்கவே தேவையில்லை…” ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறே பதம்..” இந்த மாதிரி பழமொழி எல்லாம் நடைமுறை வாழ்க்கைக்கு செட்டாகாதுங்க. அப்படிப் பார்த்தா, ஏட்டுச் சுரைக்காய் கூட்டுக்கு உதவாதன்னு கூடத்தானே சொல்லி வைச்சிருக்காங்க.
    ஒருத்தரை வைச்சு இன்னொருத்தரை எடை போடத் தேவையேயில்லை. அவங்கவங்க வழியை, அவங்கவங்க தான் தேர்ந்தெடுக்கணும். அது ஒழுக்கமும் சேருது.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. குடும்பத்துல மூத்தவனா பொறந்ததற்கு இப்படி ஒரு தண்டனையா கிடைக்கணும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!