மகா நிலாவின் தோழிகள் மூவரின் பெற்றவர்களிடமும் பேசிவிட்டால் அவர்களும் ஒத்துக் கொண்டார்கள் பிறகு காலை கல்லூரி செல்லும் பொழுது கல்லூரிப் பையை வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னதற்கு நாங்கள் கொண்டு வந்து கல்லூரியில் கொடுத்து விடுகிறோம் என்று மூவரின் தந்தைகளும் சொன்னார்கள் …
சரி என்று மகா அமைதியாக இருந்தால் கீழே அனைவரும் சாப்பிட்டவுடன் காவேரி நிலா எழில் இருவரையும் சாப்பிட சொன்னார் அப்பொழுது நிலா எழிலை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு நாங்கள் இருவரும் மேலே சென்று சாப்பிட்டுக் கொள்கிறோம் பெரியம்மா என்றால் காவேரி இருவரையும் முறைத்து விட்டு இரண்டு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு இது என்னடா என்று தாம்பூல தட்டை காண்பித்தார் …
இது கூடவா அத்தை தெரியவில்லை வரவேற்பிற்கு வந்தவர்களுக்கு பரிசாக கொடுத்தது தாம்பூலத்தட்டு என்றான் டேய் இது என்ன என்று தெரியாத அளவிற்கு நான் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை இதை எப்பொழுது வாங்கினீர்கள் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்று சொன்னார் அத்தை என்னை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு இதை நான் வாங்கவில்லை என்றான் ….
காவேரி எழிலை முறைத்தார் அத்தை நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேளுங்கள் என்று சொல்லிவிட்டு சுற்றி பார்த்தான் தனது வீட்டு உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள் நிலாவின் தோழிகள் இருக்கிறார்கள் என்றவுடன் நிலாவின் தோழிகளை பார்த்தான் அவர்கள் மூவரும் இது எதுவோ குடும்ப விஷயம் போல என்று எண்ணி அமைதியாக சிறிது நகர்ந்து சென்று விட்டார்கள்….
அவர்கள் மூவரும் நகர்ந்துவிட்டார்கள் என்றவுடன் எழில் காவேரி அத்தை இடம் அத்தை இதை மகிழ் தான் வாங்கி இருந்தான் ஆனால் அவன் வாங்கி இருப்பது எனக்கும் தெரியாது இன்னும் சொல்லப்போனால் இன்று காலை 10 மணி அளவில் தான் இது டெம்போவில் வந்து இறங்கியது இதை அவன் இந்த வீட்டு பையனாக வாங்கி தரவில்லை ….
வேணியின் அண்ணனாக வரவேற்புக்கு வருபவர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக வாங்கி இருக்கிறான் என்று சொன்னார் வேணியின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது அந்த தாம்பூல தட்டை தனது மாமியார் காவிரியின் கையில் இருந்து வாங்கி பார்த்தால் அந்த தாம்பூல தட்டு ரொம்ப பெரிய சைஸ் ஆகவும் இல்லாமல் சிறியதாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது ….
அந்த தாம்பூல தட்டு நடுவில் புடவையையும் துண்டையும் முடி போட்டு இருப்பது போலும் ஆண் பெண் மணமக்கள் மணமகன் கைபிடிப்பது போலும் இருந்தது கீழே இளவேனில் கார்முகிலன் என்றும் எழுதியிருந்தது அதை பார்த்தவுடன் வேனி அந்த தாம்பூலத்தட்டை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் முகில் வேனியின் கையில் அழுத்தம் கொடுத்தான் பிறகு வேணி தன் கண்ணீரை துடைத்துவிட்டு தனது மாமியாரை பார்த்தால் …
அவர் வேணியை ஒரு சில நிமிடங்கள் பார்த்துவிட்டு வேறு எதுவும் பேசாமல் என்னவோ செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அமைதியாக வீட்டிற்குள் சென்று விட்டார் நிலா எழில் இருவரும் காலையிலிருந்து இன்னும் சாப்பிடவில்லை காலையில் மகா தான் இருவரையும் வற்புறுத்தி இரண்டு இட்லி சாப்பிட வைத்தால் நிலாவிற்கு மாலை 4 மணி ஆகியதால் பசி எடுத்ததால் எழிலை கையோடு அழைத்துக் கொண்டு மேலே சென்றாள்…
நிலாவின் தோழிகள் இவள் எங்கே எழில் சாரை அழைத்துக் கொண்டு செல்கிறாள் என்று அவள் பின்னாடியே சென்றார்கள் நிலா எழில் அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு சென்றவுடன் நிலா தனது அக்காவை பார்த்து சாப்பிட்டாயா என்று கேட்டால் அவள் இல்லை என்றவுடன் மணி என்ன ஆகிறது என்ன மாமா பண்ணிட்டு இருக்க நீ என்று மகிழை திட்டி விட்டு தட்டை எடுத்து வைத்து அங்குள்ள சாப்பாடு எடுத்துக் கொண்டு வைத்து மகிழ் மகா இருவரையும் உட்கார சொன்னால்….
மூவரும் உட்கார்ந்தவுடன் நிலாவே நால்வருக்கும் எடுத்து போட்டால் பிறகு என்ன மாமா சாப்பாடு என்று கேட்டுக்கொண்டே சாதத்தை போட்டால் வத்தக்குழம்பு நிலா குட்டி என்றவுடன் அதன் மேல் குழம்பை உற்றினால் அப்பொழுது நிலாவின் பின்னாடியே மேலே வந்த நிலாவின் தோழிகள் அங்கு வட பாயசத்துடன் இருந்த விருந்து சாப்பாட்டை விட்டுவிட்டு மேலே வந்து வத்த குழம்பு ஊத்தி சாப்பிடுகிறாய் என்று கேட்டார்கள்…..
எனக்கு கீழே இருக்கும் சாப்பாட்டை விட இந்த சாப்பாடு தான் பெரிது என்று தனது தோழிகளை பார்த்து சொல்லிவிட்டு பசி இருந்ததால் வேறு எதுவும் பேசாமல் சாப்பிட்டால் அப்பொழுது மகிழ் எழில் இருவரும் ஆளுக்கு ஒரு ரூபாய் அவளுக்கு ஊட்டி விட்டார்கள் நிலா இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு சாப்பிட்டால் சாப்பிட்டுவிட்டு கை கழுவிக்கொண்டு வரும்வரை நிலாவின் தோழிகள் அமைதியாக இருந்தார்கள் …..
அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்கும் வேணி முகிலை அழைத்துக்கொண்டு மேலே வருவதற்கும் சரியாக இருந்தது இவர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் வேலையில் கீழே முகில் வேனி இருவரும் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினார்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கியவுடன் வேணி முகிலை அழைத்துக் கொண்டு மேலே வந்தால்….
மகிழ் மகா இருவரும் சாப்பிட்டு கை கழுவியுடன் இருவரையும் கிழக்கே பார்த்து நில்லுங்கள் என்று சொன்னால் இருவரும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கீழே விழும் வேலையில் மகா அண்ணா நீ என்னை விட பெரியவன் என்று கத்தினாள் இருக்கட்டும் என்னுடைய மாமனை கட்டிக் கொண்டு நீ எனக்கு சிறியவளாக இருந்தாலும் என்ன முறையோ அதன்படியே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்கள்..
மகா மகிழ் இருவரும் சிரித்துக்கொண்டே இருவரும் இப்பொழுது போல் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி ஆசீர்வதித்தார்கள் பிறகு மகா அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு செல்பில் இருக்கும் பூஜையறைக்குச் சென்று திருநீர் தட்டை எடுத்துக் கொண்டு வந்தால் மகிழ் இருவருக்கும் திருநீர் பூசி விட்டான் பிறகு மகா சாமி பக்கத்தில் இருக்கும் ஒரு செல்பில் இருந்து இரண்டு வலையல்களை எடுத்துக் கொண்டு வந்தால் …
அதை வேணி கையில் போட்டு விட்டால் அண்ணி எதற்கு எனக்கு வேண்டாம் என்றால் வேணி இதை அமைதியாக வாங்கிக் கொள் இதை நீ என்னுடைய அண்ணன் மனைவியாக வாங்கிக் கொண்டாலும் சரி இல்லை வேணியாக வாங்கிக் கொண்டாலும் சரி எப்படி வேணாலும் எடுத்துக் கொள் ஆனால் நான் இதை நீ என்னுடைய அண்ணன் மனைவியாக எண்ணி வாங்கவில்லை என்று சொல்லி அவளது கையில் போட்டு விட்டால் …
வேணிக்கு ஆனந்த கண்ணீர் வந்தது மகாவை இருக்கி கட்டியணைத்துக் கொண்டு அழுதால் அப்பொழுது நிலா தான் வேனியை தள்ளி விட்டாள் நிலாவின் தோழிகள் மூவரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள் வேணி சிரித்துக் கொண்டே சாரிடி தெரியாம ஏதோ ஒரு வேகத்துல என்றால் என்ன ஏதோ ஒரு வேகத்திலா இப்பொழுது அவள் வயிற்றில் வளரும் என் அச்சுமாவுக்கு என்ன ஆவது என்று கேட்டால் …..
எழில் சிரித்துக்கொண்டே இருந்தான் அப்பொழுது மகிழ் தான் ஒன்றும் ஆகாது நிலா குட்டி என்றான் அதை நீ ஒன்னும் சொல்லாதே என்று தனது மகிழ் மாமாவை பார்த்து முறைத்தாள் மற்ற அனைவரும் சிரித்தார்கள் நிலாவின் தோழி மூவருக்கும் ஒன்றும் புரியவில்லை அப்பொழுது வேணி தான் மகா அண்ணி இப்பொழுது மாசமாக இருக்கிறார்கள் அதனால் தான் நிலா அவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று சொன்னால்.
நிலாவின் தோழிகளுக்கும் சந்தோஷமாக இருந்தது கங்கிராஜுலேசன் மேம் என்று தங்களது வாழ்த்தை தெரிவித்தார்கள் அவளும் சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொண்டாள் அப்பொழுது மகிழ் தான் என்னாச்சு மகா எதற்காக கீழே சென்று வந்தாய் என்று கேட்டான் சொல்ற மாமா என்று சொல்லிவிட்டு இவர்கள் மூவரும் நிலாவின் தோழிகள் என்றாள் எனக்கு தெரியும் நிலா போட்டோ காண்பித்திருக்கிறாள் என்றான்….
அவர்கள் நிலா வேணி தோழிகள் என்று தெரியும் அதற்கு என்ன என்றான் ஆனால் எழில் நிலா இருவருக்கும் என்ன உறவு என்றோ இல்லை வேணி நிலா எழில் எனக்கு நால்வருக்கும் என்ன உறவு என்றோ இவர்கள் மூவருக்கும் தெரிய வேண்டியிருக்கிறது நிலாவில் தோழிகளாக நாம் இவர்களுக்கு எங்களது உறவை புரிய வைக்க வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறோம் …
வேறு யாராவது இருந்தால் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும் என்று அமைதியாக விட்டுவிடலாம் இவர்கள் மூவரும் நிலாவின் நெருங்கிய தோழிகள் அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அப்படி விட முடியாது நிலா ஏற்கனவே எழிலுக்கும் இவளுக்கும் என்ன உறவு என்று சொல்லி இருக்க வேண்டும் அதை இவள் சொல்லாமல் விட்டதற்கு காரணம் எழிலாக இருக்கலாம் …
ஆனால் அது ஒரு வகையில் தவறு தானே நெருங்கிய நண்பர்கள் என்று ஆகிய பிறகு இவர்களது உறவை அவள் சொல்லி இருக்க வேண்டும் ஆனால் அவள் சொல்லவில்லை இவர்கள் அதை இப்பொழுது எப்படி எடுத்துக் கொள்வது என்று கூட தெரியாமல் திணறுகிறார்கள் நிலாவை தப்பா எண்ணுகிறார்கள் என்று நான் சொல்லவில்லை ஆனால் அவர்களுக்கு என்ன உறவு என்று புரியாமல் மண்டை வெடிப்பது போல் இருக்கிறது…..
அதனால் தான் அவர்கள் வீட்டில் பேசி இருக்கிறேன் இன்று இரவு இங்கே தாங்கிக் கொள்ளட்டும் என்று என்றால் நிலா வேணி இருவரும் என்ன இவர்கள் மூவரும் இன்று இரவு இங்கே தங்க போகிறார்கள் என்று அதிர்ச்சியாகி கேட்டார்கள் நிலா வேணியின் நண்பர்கள் மூவரும் இவர்கள் இருவரும் ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகி கேட்கிறார்கள் என்று அவர்கள் இருவரையும் பார்த்தார்கள்…
பிறகு இருவரும் ஹை பை போட்டுக்கொண்டு சிரித்தார்கள் ஹே என்று கூச்சலும் இட்டார்கள் அப்பொழுது எழில் தான் இது என்ன காலேஜ் என்று நெனச்சீங்களா வீடு கீழே இருந்து அத்தை கத்தும் அப்பதான் தெரியும் என்றான் சிரித்துக் கொண்டே நிலா வேணி இருவரும் எழிலை பார்த்து முறைத்தார்கள் பிறகு இருவரும் ஒரே போல் உங்க அத்தைக்கு நீங்க வேணா பயப்படுங்க நாங்கள் பயப்பட மாட்டோம் என்று சொன்னார்கள்…..
எழில் இருவரையும் பார்த்துவிட்டு நான் என்னுடைய அத்தைக்கு பயந்தேன். நீங்கள் இருவரும் அதை பார்த்தீர்களா என்று கேட்டான் அப்பொழுது காவேரி வேகமாக எழில் எழில் என்று இரண்டு முறை அழைத்தார் எழில் வேகமாக கீழே இறங்கி ஓடினான் ஓடும் எழிலை பார்த்து நிலா வேணி இருவரும் இப்பொழுது எப்படி பயப்படாமல் இவ்வளவு வேகமாக ஓடுகிறாய் என்று கேட்டு சிரித்தார்கள் …
எழில் ஒரு நிமிடம் நின்று இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு கீழே இறங்கினான் காவேரி ஏன் இவ்வளவு வேகமாக எழிலை அழைக்க காரணம் என்ன கீழே இறங்கியவுடன் வீட்டில் பெரிதாக பிரச்சினை ஏதாவது வெடிக்குமா இல்லை காவேரி சாதாரணமாக தான் எழிலை அழைத்தாரா என்பதை நாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்….
அன்புடன்
❣️தனிமையின் காதலி❣️
INTERESTING