நீயின்றி வாழ்வேது-23
நேற்றைய இரவில் அதிகக் குளிர் தனக்குச் சளிப்பிடிக்கும் என்று ஏசியைக் கூடலுக்குப் பின் அமர்த்திவிட்டு வெளிப்பக்க ஜன்னலும், பேனும் போட்டுவிட்டு ஷாலி தன்னவனின் மஞ்சத்தில் உறங்கினாள்.
விஷாகனின் அறைக்குப் பின்னால் இருந்த ஜன்னல் வழியே யாரும் வருவதற்கான வாய்ப்பில்லாததால் விருஷாலி திறந்து வைத்திருந்தாள்.
அந்த ஜன்னல் வழியாக, “இன்னும் உதயகுமார் வரலையா… நீ என்ன பதறாம சோறாக்கிட்டு கிடக்க” என்ற செம்பருத்தி அம்மாச்சியின் கணீர் குரலும், அதைத் தொடர்ந்து, “அய்யோ அத்த அவர் வேலை விஷயமா போயிருக்கார். அவரா வருவார்.” என்று சுகன்யா பதில் தரவும் அது செவியில் ஏற்றிக்கொள்ளாமல் கத்தவும், விஷாகன் எரிச்சலோடு எழ முற்பட்டான்.
அவன் முகத்தில் விருஷாலி கைகள் அவள் முகத்தோடு ஒட்டி வைத்து இருக்கவும், ஒரு நொடியில் எரிச்சல் காணாமல் முறுவல் உதிர்த்தது.
அவள் கைகளை மெதுவாய் எடுத்து விட்டு, போர்வையைப் போர்த்தி நெற்றியில் முத்தமிட்டு எழுந்தான்.
‘ஒரு அட்டனன்ஸ் போட்டா தான் வேலைக்கு ஆகும்’ என்று பல் விளக்கி வெளியே வரும் நேரம், “இந்தா.. அப்பனை காணோம். ஆனா பையைத் தூக்கிட்டு ஓடறான். கொஞ்சமாவது அக்கறை இருக்கா? தேடறானா பார்றேன்” என்று சுகிர்தனை சுட்டிக்காட்டி பேசவும், ‘அந்தாளு நடந்துக்கிடறதுக்கு நான் தேடணுமாம்.’ என்று முனங்குவது விஷாகனுக்கு மட்டும் கேட்டது.
“சுகிர்” என்று குரல் உயர்த்த, ‘மத்தவங்க காதுல விழுந்தா என்னாகறது.’ என்ற அதட்டல் அதில் பொதிந்திருக்க, ஒரு வயது மூத்தவன் என்றாலும் விஷாகனின் இந்தக் குரலில் லேசாய் அதிர்ந்து விட்டான்.
மன்னிப்பாய் தலை குனிந்து சாப்பிடாமல் ஓடினான். சுகன்யாவோ பெரியவன் விஷாகனை ஏறிட்டார்.
“நீயே எழுந்து வந்துட்ட, அந்தச் சிறுக்கி என்ன பண்ணறா?” என்று கத்தியபடி அறைக்குள் செல்ல முயன்ற செம்பருத்தியை விஷாகன் வழிமறைத்து, “ஏன் அப்பத்தா… கொஞ்ச நேரம் யாரையும் ‘டிஸ்டர்ப்’ பண்ணாம இருக்க மாட்டியா. முதல்ல எங்கம்மா, இப்ப விருஷாலியா.
அவ எழுந்து என்ன பண்ணப்போறா? கொஞ்ச நேரம் தூங்கட்டும். எங்கம்மா தான் சமையல் முடிச்சிடுச்சே.” என்று பரிந்து வந்து கதவை சாற்றினான்.
‘ஆட்டோமெடிக் டோர்’ என்பதால் இனி விருஷாலி தான் திறக்க வேண்டும் என்பதால் பேசிவிட்டு செம்பருத்தி அப்பத்தாவை சோபாவில் அமர்த்தி, “இங்க ஆயிரெத்தெட்டு ஜோலி இருக்கு. ஆறுமணி ஆனா இருட்டிடும்னு வீட்ல உட்கார முடியாது. மணி பன்னிரெண்டுக்கு கூட வெளிச்சமா ஆட்கள் நடமாடிட்டு தான் இருப்பாங்க. டே-ஷிப்ட் நைட்-ஷிப்ட் என்று ஓடறவங்க, அதுக்கு ஏற்ற மாதிரி அப்பாவுக்கு வேலை.
ஏதோ கொரியர் சரியா போகலைனு காலையிலயே ஒருத்தங்க அப்பா நம்பருக்கு போன் பண்ணி இம்சை கூட்டவும், நைட்டு வந்தவர் காலையில கிளம்பிட்டார்.
வேலை விஷயமா அவர் வந்துட்டு போறதை தடுக்க முடியுமா? அவர் பொறுப்பை அவர் தானே சுமக்கணும்.” என்று அன்னை கொடுத்த காபியை பருகினான்.
“சரி உதயகுமாரை விடு. அவன் ஆம்பளை… இப்ப மணி ஏழாரை ஆகுது. இந்த விருஷாலி கழுதை எழுந்துக்கலையேப்பா.” என்று கேட்டதும் தன்னவளை கழுதை என்றாரே என்று கொந்தளித்து, “ஏன் அப்பத்தா.. அவ தூங்கினா உனக்கென்ன. அவ வீடு அவதூங்குவா.” என்று எரிந்து விழுந்தான்.
இரவெல்லாம் அவளைத் தூங்கவிடாமல் படுத்தி எடுத்தது அவனென்பதால் அவள் காலையில் உறங்குவதில் அவனுக்குத் தவறாகத் தோன்றவில்லை. அவனுக்குத் தெரியும் தவிட்டுமேட்டில் குளிரிலேயே எழுந்து குளித்து வந்தவள் ஆறுமணியையே லேட்டாகிடுச்சு என்று புலம்பி தள்ளினாள்.
அவள் வழக்கமாய் நாலு முப்பது அல்லது ஐந்து மணிக்கு எழுந்து கொள்பவளெனக் கூறியிருந்தாளே.
“இப்படிச் செல்லம் கொடுத்து அவளைச் சோம்பேறி ஆக்காத ராசா. முதல்லயே கண்டிச்சு வை.” என்று பேசவும் தந்தை-தாய் அறையிலிருந்து அன்னம் வெளிவந்து, சங்கடமாய் மாப்பிள்ளையைப் பார்த்து நின்றார்.
மகள் நேரம் கழித்து உறங்குகின்றாள். கணவர் சங்கரனோ சுகிர்தன் அறையில் இன்னமும் விழுந்து கிடக்கிறார். விவேக் மட்டும் வெளியே சுற்றி பார்த்துட்டு வர்றேன் மா. இந்தபக்கம் போனா பெசண்ட் நகர் பீச் வரும். ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.’ என்று அவன் எப்பவோ கிளம்பியிருந்தான்.
உதயகுமார் வீட்டு வாசலில் நின்றார். “இதோ வந்துட்டான் என் பையன்” என்று செம்பருத்தி தன் அக்கா மகனை கண்டதும் புன்னகைத்தார்.
“எங்கப்பா போன?” என்று கேட்டதும் “வேலை சித்தி.” என்றவன் மகன் தனக்குப் பின்னால் அபர்ணாவை தேடவும், “விவேக்கிட்ட…” என்றவர் மகன் தலையாட்டி கையைத் தூக்கவும், புரிந்துவிட்டது விவேக் வந்து உங்களை அனுப்பியிருக்கான் பேசாதிங்க’ என்பது போலக் கூறவும் உதயகுமார் அமைதியாகச் சென்றுவிட்டார்.
‘இவரைக் காப்பாத்த ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கஷ்டப்பட வேண்டியதா இருக்கே. ம்… இதுக்கு ஒரு முடிவெடுத்துடணும்’ என்று மனதில் பேசிக்கொள்ள, கதவு தட்டும் சப்தமும், கூடுதலாக ஷாலியின் மெல்லிசை குரலும் கேட்டது.
“அத்த… அத்த.. என்னங்க.. என்னங்க… அம்மா.. அம்மா..” என்று ஒவ்வொருத்தராய் ஏலமிட்டாள்.
கதவருகே வந்து “என்ன?” என்றான்.
“கதவு இழுத்தா திறக்க மாட்டேங்குது.” என்று அழும் நிலையில் கூறினாள்.
“ஏய்… அது ஆட்டோமெடிக் டோர் டி. அப்படியே இழுக்காத, கொஞ்சம் கீழே இறக்கி புஷ் பண்ணி அழுத்தி திற” என்றான்.
அவளும் அதே போலச் செய்யத் திறந்து கொண்டது.
“என்ன நீ இதுக்குப் போய்ச் சின்னப் பிள்ளை மாதிரி அழுவற” என்று கன்னத்தில் வழிந்த நீரை துடைத்து விட்டான்.
“எனக்கென்ன தெரியும். ஐந்து நிமிஷமா திறக்க முடியாம திணறி, உங்க பேச்சுக் குரல் கேட்டதும் கூப்பிட்டேன். லேசா பயம் வந்துடுச்சு.” என்று கூறவும் செம்பருத்தியோ, “நேரத்துக்கு எழுந்துக்கலை. கதவு திறக்க தெரியலை.” என்று நொடிக்கவும், ‘அய்யய்யய்ய… இவங்க எல்லாம் யாரையாவது திட்டிட்டே இருந்தா தான் தூக்கம் வருமோ’ என்ற பார்த்து வைக்கச் செம்பருத்தி பேரனின் பார்வையில் சத்தமின்றிச் சென்றார்.
கதவை நன்றாகத் திறந்து வைத்தான். அது சுவரில் பொருத்தியிருந்த காந்தத்தில் இறுக்கமாய்ப் பிடித்த கொள்ள அதனை ஆராய்ந்தவாறு விருஷாலி திரும்ப விஷாகன் நெஞ்சில் அவள் முகம் முட்டியது.
கிச்சனில் சுகன்யாவும் அன்னமும் ஏதோ பேசிக்கொள்ள, செம்பருத்தி, அன்னபூரணி இருவரும் ‘சன்லைப் டிவி’யில் பழைய எம்ஜிஆர் படத்தைப் பார்க்க ஆரம்பித்தார்.
விருஷாலியோ “விளையாடாதிங்க… பசிக்குது.” என்றதும் ‘எல்லாரும் சாப்பிட்டார்களா?’ என்று கேட்டு இருவரும் உணவு மேஜையில் அமர்ந்தார்கள்.
விஷாகனுக்கு எப்பொழுதும் ஒரே வகை உணவுகள் பிடிக்காது. காலை இரவு டிபன் வேண்டும். மதியம் ஒருவேளை மட்டும் சாப்பாடு.
தினமும் வேற வேற உணவு வேண்டுமென்பதால் சுகன்யா ஒருமுறை ‘என்னடா செய்யப் பேசாம லிஸ்ட் போட்டு கொடுத்துடு’ என்றதும் அடுத்த நாளே லிஸ்ட் போட்டுக் கிச்சனில் ஒட்டிவிட்டான்.
விஷாகனை பொறுத்தவரை ஜிம் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கப் பிடிக்காது. மூதாதையர் என்ன தனி அறையை எடுத்து ஜிம் கருவிகளை வீட்டில் அடைத்து, தன் உடலை சரியாகப் பேணினார்களா? உண்ணும் ‘உணவே மருந்து’ என்ற கோட்பாடு உடையவன். அதனால் சாப்பாட்டில் அனைத்தும் மாறி மாறி கலந்து உடலுக்கு வலுவை சேர்த்துச் சரிவிகிதத்தில் பராமரிப்பவன்.
இவனின் இந்த முறை வீட்டில் பிடிக்கவும் சுகிர்தனோ சுகன்யாவோ பின் தொடர ஆரம்பித்தார்கள்.
இதுவரை இதற்கு மாற்று கருத்து வந்ததில்லை.
விஷாகனின் இந்த லிஸ்டை கண்டவள் ‘ஆ’வென்று படித்தபடி சாப்பிட்டு முடிக்க அடிக்கடி பார்வை ஹாலிலும் கிச்சனிலும் ஆராய்ந்தது.
“இதுவொன்னும் பெரிய மாளிகை இல்லை. உங்க வீட்ல இருக்கறவங்க ஈவினிங் கிளம்பிடுவாங்க. பிறகு பொறுமையா பாரு.” என்று தண்ணீரை நீட்டினான்.
அவளுக்கு விக்கல் சத்தம் தனக்குள்ளிருந்து வருவதை அப்பொழுது அறிந்து, அதற்கு விஷாகன் தண்ணீர் நீட்டுவதை உணர்ந்து அசடு போலவே வாங்கிப் பருகினாள்.
விஷாகன் அதன் பின் மதியம் வருவதாகக் கூறி அபர்ணாவுக்கு உணவை எடுத்துக் கொண்டு மருத்துவமனை போவதாகச் சுகன்யாவிடம் மட்டும் சொல்லிவிட்டுச் சென்றான்.
மருத்துவமனை பில் செட்டில் செய்து, அபர்ணாவ அழைத்து ‘விஷாகன் வாட்டர் சப்ளை’ கடைக்குச் சென்றுவிட்டான். விவேக் வீட்டிற்குத் திரும்பியிருந்தான்.
கடைக்கு வந்தப்பின் அபர்ணாவை உட்கார வைத்து விளையாட போனையும் கொடுத்துவிட்டு, அவனே ஏசி மெஷினை சரிச்செய்ய ஆரம்பித்தான்.
“உங்களுக்கு இதெல்லாம் சரி பண்ண தெரியுமா?” என்று அவன் பின்னே வந்தாள் அபர்ணா.
“போன்ல கேம் விளையாடலையா? இங்க வந்துட்ட” என்று கேட்டு விட்டு ஏசி மிஷினில் பாகத்தைத் தனிதனியாகக் கழட்டி ஆராய ஆரம்பித்தான்.
“எனக்குப் போரடிக்குது. முன்ன அம்மா இருப்பாங்க. போன் இருக்காது. அதனால அப்பா போன் கொடுத்தா எப்பவும் போன்ல விளையாடுவேன். இப்ப போன் இருக்கு… ஆனா போரடிக்கு. முன்ன மாதிரி அம்மா கூட விளையாடணும்னு ஆசையா இருக்கு. எங்கம்மா திரும்ப வரமாட்டாங்களா?” என்று கேட்டாள். அவள் எளிதாகக் கேட்டாலும் பிஞ்சு குழந்தையின் பேச்சில் சோகம் இழையாகவே அவனுக்குத் தோன்றியது.
“இறந்தவங்க யாரும் திரும்ப வரமுடியாது.” என்று பதில் தந்தான்.
தந்தை இவரை ‘அண்ணா’ என்று கூறினாரே. அப்படி அழைப்போமா என்று விஷாகனை தன் சின்னசிறு கண்ணால் நோட்டமிட்டாள்.
தந்தையைப் போல உயரமாய் இருந்தவன், அன்று மருத்துவமனையில் தாயை கண்டு திட்டும் போது கோபான முகத்தைக் காட்டிய நாளில் விஷாகனை பெரிய வில்லனாக மனதில் உருவகப்படுத்தியிருந்தாள்.
தற்போது தன்னிடம் அண்ணனான இவர் பேசும் போது கனிவு எட்டிபார்க்க, வாய் நிறைய ‘அண்ணா’ என்று அழைக்க ஆவல் கொண்டாள். ஆனால் சுகிர்தன் ‘அண்ணானு சொன்ன அடிச்சிடுவேன். யாருக்கு யார் அண்ணா அனாதை நாயே.’ என்று மிரட்டி தள்ளி விட்டிருந்தான்.
அபர்ணாவுக்கு சுகிர்தனின் கடின வார்த்தையால் விஷாகனை அண்ணா என்று அழைக்காமல் தவிர்த்தாள்.
ஏசி மெஷினை சரிபார்த்துக் கொண்டே, “எதுக்கு என்னையே பார்க்கற?” என்று கேட்டதும் தலையாட்டி ஒன்னுமில்லையென்று சுழலும் நாற்காலியில் அமர்ந்தான்
விஷாகன் அவளை ஒரெட்டு கண்பார்வையிலேயே வைத்துக் கொண்டு, ஏசி மெஷினை சரிபார்த்து முடித்துப் பழையபடி பொருத்தினான்.
அதற்கான டூல்ஸை எடுத்து வைத்து, பெருக்கி ஓரமாய் வைத்து கைகால் அலம்பினான்.
ராஜன் இன்று விடுமுறை நாளையிலிருந்து தான் வருவான்.
எதிரேயிருந்த சேரில் அமர்ந்து அன்றைய நாளிதழை மனதுக்குள் வாசித்தான்.
போன் விளையாட்டு போரடிக்கவும் அங்கிருந்த மற்றொரு பேப்பரை எடுத்து விஷாகனை போலவே கால் மேல் போட்டு தமிழை எழுத்து கூட்டி படிக்க முயன்றாள்.
“முக…நூ…லில் வா..லிபர்.. பண..மோ..சடி” என்று படிக்கவும் பேப்பரை இறக்கி அவளை ஏறிட்டான்.
என்னதான் வாசிப்பு அனுபவம் நல்லதென்றாலும் இன்றைய இளைஞர்கள் என்ன படிக்கின்றார்கள் என்பதும் முக்கியம். பேப்பரில் தான் கற்பழிப்பு காமூகன் கைவரிசை, கள்ளக்காதல் என்று பலதும் வருகின்றது. நல்ல செய்திகள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அதனால் பேப்பரை பிடுங்கி வைத்து இலவச இணைப்பாகக் கொடுத்த குழந்தைகள் மலரை எடுத்து நீட்டினான்.
ஏற்கனவே கையில் பிடிக்க முடியாமல் வாசித்தது. தற்போது கைக்கு அடக்கமாகப் புத்தகம் என்றதும் மகிழ்ச்சியாய் வாங்கிப் படித்தாள் அபர்ணா.
அந்த நேரம் கடைக்குச் சண்முகம் அண்ணாச்சி வந்தார்.
விஷாகனையும் அபர்ணாவையும் தினுசாய் பார்த்தார்.
“யாருப்பா விஷாகா? புதுசா இருக்கு?” என்று கேட்டார்.
“சொந்தம் அண்ணாச்சி. நேத்து நிச்சயம் எப்படிப் போச்சு. இரண்டாவது மகளுக்குத் தானே நிச்சயம்.” என்று பேசினான்.
“உன் ஜாடையில உரிமையா உன் சேர்ல உட்கார்ந்து இருக்கவும், அட பையன் பயங்கர ஸீபீடுல புள்ளயை பெத்துட்டானோனு நினைச்சேன்.
சொந்தமா… அதான் ஜாடை ஒன்னுப்போல இருக்கு.” என்று இழுத்தவர் “இரண்டாவது மகளுக்குச் சொந்தத்துல தான் கட்டி தர்றேன். அதான் வீட்ல சிம்பிளா பொண்ணு பார்த்து தட்டு மாத்தினோம். மாடில சாமினார் போட்டு ஜமாய்ச்சிட்டோம்ல. இந்தா… தண்ணிகேனுக்குக் காசு.” என்று கத்தை பணத்தை எடுத்து எண்ணி அவனுக்குக் கொடுக்க வேண்டியதை நீட்டினார்.
மெதுவாய் வாங்கி அவனும் அவர் எதிரே எண்ணி பார்த்து, “சரியா இருக்கு அண்ணாச்சி. வீட்ல விஷேஷம் வந்தா மறுபடியும் கூப்பிடுங்க.” என்று புன்னகைத்தான்.
“கண்டிப்பா விஷாகன். ஆமா… கல்யாணம் முடிஞ்சி இரண்டாவது நாளே கடைக்கு வந்துட்ட. ஊட்டி கொடைக்கானல் போகலையா.” என்றார்.
“ஊட்டி கொடைக்கானல் அவ பார்த்திருக்கலாம். அதனால கோவாவுக்கு டிக்கெட் புக் பண்ணிட்டு அழைச்சிட்டு போகணும்” என்றான் வெட்கம் கொண்டு.
தன்னவள் ஊரை விட்டே தாண்டாதவள் என அடிக்கடி மறந்து போனான்.
“ஆகட்டும் ஆகட்டும்” என்று கிளம்பினார்.
விவேக் இரண்டாவது முறை போனை அழைக்கவும், நெற்றியை ஆள்காட்டி விரலால் இருமுறை தட்டினான்.
அங்கும் இங்கும் நடந்து, போனை எடுத்தான்.
மச்சான் சாப்பிட்டாச்சு, ஒருமணி நேரத்துல கிளம்பணும். மணி இரண்டு” என்று கூறினான்.
“விவேக் அபர்ணாவை கடையில விட்டுட்டு வர்றேன்” என்றான் விஷாகன்.
“மச்சான் நேத்து மாதிரி ஏதாவது.?” என்று பயந்தான்.
“இல்லை சொல்லிட்டு தான் விட்டுட்டு வருவேன்.” என்றவன் அணைத்தான்.
அபர்ணாவிடம் “இங்க பாரு எதையும் தொடாதே. இங்க இதே இடத்துல உட்கார்ந்து எட்டு வித்தியாசம் கண்டுபிடி.” என்று இதுநாள் வரை சேர்த்து வைத்த புத்தகத்தை எடுத்து அவள் புறம் கொடுத்தான்.
“ஐ… ஜாலி” என்று அபர்ணா தலையாட்டினாள்.
“மொத்தமும் படிச்சி முடிச்சி எட்டு வித்தியாசமும் நிறைய விளையாட்டும் உள்ள இருக்கு. அதை முடி. நான்.. நான் ஈவினிங் ஐஸ்க்ரீம்…. இல்லை அதுவேண்டாம்.. பப்ஸ் வாங்கித் தர்றேன்” என்றான்.
அபர்ணாவும் ‘டன்’ என்றாள்.
ஒருவழியாக உள்ளே வைத்து பூட்டிவிட்டு, வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
விருஷாலி ஒரே அழுகை. அன்னத்தை அணைத்துக் கொண்டு தேம்பினாள்.
சங்கரனோ மகளை “அழாதமா” என்று கூற அவரின் செய்கையால் அவர் பேச்சை கூடக் காதில் ஏற்றவில்லை.
அன்னமோ “நல்லபடியா நடந்துக்கோ டா. உங்கப்பா குடிக்காரர்… அவரால மானம் போனது தான் மிச்சம். அதையெல்லாம் அண்ணா வீட்ல பெரிசாவே எடுத்துக்கலை. அவங்க ஒரு வார்த்தை உன்னைக் குறை சொல்ற மாதிரி நடக்காதே.
உனக்கு நாங்க பெரிசா சீர் எதுவும் செய்யலை அப்பவும் உங்கண்ணா கஷ்டப்பட்டுத் தான் கல்யாணத்தை நடத்தினான்.
நீ சந்தோஷமா இருந்தாலே நாங்க அங்க நிம்மதியா கஞ்சி குடிக்க முடியும். தினமும் போன் போடு. இந்தா செலவுக்கு ஏதாவது தேவைப்படும். என்னிடம் இவ்ளோ தான் இருக்கு” என்று மகளிடம் மூவாயிரம் கொடுத்தார் அன்னம்.
விருஷாலி மறுக்கவில்லை பெற்ற தாய் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.
விவேக்கும் அருகே வந்து, “மச்சான் தங்கமான குணம். உனக்கு இப்படியொருத்தர் எங்க தேடினாலும் கிடைக்க மாட்டார். நீ இனி சந்தோஷமா இருப்படா. சர்டிபிகேட் எல்லாம் பிறகு வந்து வாங்கிக்கோ.” என்று கூறினான்.
விருஷாலி மூக்குறிந்து அழுது சரியென்று தலையாட்டினாள்.
செம்பருத்தியோ “காலையில விரசா எழுந்து சமைச்சு முடி. எல்லா நாளும் இப்படி இருந்தா ஒரு நாள் நீ சலிச்சி போய் புருஷனிடம் திட்டு வாங்குவ. உன் நல்லதுக்குத் தான் சொல்லற. புருஷன் உன் முந்தானையில சுத்திட்டு இருக்கறது எல்லாம் ஒரு வருஷம் இரண்டு வருஷம் தான். அதுக்குப் பிறகு உன்னை இப்படித் தாங்க மாட்டாங்க. இப்ப எதைக் குறையில்லைனு ஆதரவா பேசறாங்களோ அதே பிற்காலத்தில் குறையா பேசுவாங்க.
பார்த்து நடந்துக்கோ. ஏன்னா ஆம்பளைங்க எப்பவும் தாங்கிட்டே இருக்க மாட்டாங்க” என்று கூறி விருஷாலிக்கு கிலியை உண்டு செய்தே காரில் ஏறினார்.
இங்கிருந்த டிராவல்ஸ் இடம் வரை காரில் சென்று விட்டு பிறகு பஸ்ஸில் மாறுவதால் முன்கூட்டியே கிளம்பினார்கள்.
விஷாகன் விருஷாலியை அருகே தான் இருப்பதாகத் தோள் சாய்த்து அவள் குடும்பத்தை வழியனுப்பினான்.
உதயகுமார் சுகன்யா விருஷாலி விஷாகன் என்று நால்வர் இருக்க, பின்னர் உதயகுமார் மட்டும் மகளைத் தேடி மகன் கடைக்குச் சென்றார்.
சுகன்யா அவரின் அறைக்குச் சென்றிட, விஷாகன் விருஷாலியை தங்கள் அறைக்குத் தள்ளிக்கொண்டு சென்றான்.
“அத்த இருக்காங்க.” என்று சிணுங்க, “அம்மா மதியம் தூங்குவாங்க. அதுவும் இல்லாம அவங்க ரூம்ல இருக்காங்க.” என்றவன் சட்டை பட்டனைக் கழற்ற துவங்கினான்.
“பட்ட பகல்லயா?” என்று விருஷாலி மறுத்திட, “இரவாயிருந்தா என்ன? பகலாயிருந்தா என்ன?” என்று அவளை மெத்தையில் வீழ்த்திருந்தான்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super sis nice epi 👍👌😍 endha ponna marubadium thaniya vititu vandhutangaley🙄 paavam avanga Amma va romba miss pannudhu papa🤧 ayiram per erundhalum Amma pola varuma🥺 edhu veetla therinji enna nadakumo parpom 🧐
Superb epi interesting
Interesting episode
Interesting ah pogudhu ka…. Super 🥰🥰🥰🥰…. Waiting for next ud….
Aparna oda vishyatha innum evolo nallaiku maraikka mudiyum nu.theriyala
ena tha appa mela kovam irunthalum abarnava nalla pasama pathrama pathukura vishaka. thaniya vitu vanthu iruka aana ethum panama nee sonnatha senjitu irupa . appatha solra mari 1 or 2 yr la salichi poiduma vishaka unaku apadi illama pathupa kandipa un shali ah. nice epi
Super super super super super super super super super
Interesting 😍😍😍😍🥰🥰🥰🥰
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 23)
அட.. அவசரத்துக்கு பொறந்தவனே…! இங்கிட்டு எத்தனை பெரிய பிரச்சினை ஓடுது. அதை முதல்ல கவனிக்காம, என்ன வேலையைப் பார்க்குறான் பாரு. பாவம் அந்த குட்டிப் பொண்ணு, வீடு இருந்தும் கடையே கதின்னு உட்காந்திருக்கா. சொந்தங்கள்
இருந்தும், சொல்லிக்க முடியாம
தவிச்சிட்டிருக்கா. முதல்ல அதுக்கொரு வழியைப் பார்ப்பானா… அதை விட்டு இப்படி காய்ஞ்ச மாடு கணக்கா
தாவுறானே…!
😃😃😃
CRVS (or) CRVS 2797
🤣🤣🤣🤣
Super. Intresting
Nice
Spr going sis waiting for nxt epi😍😍😍💕💕💕👌👌👌👌
Nice episode
இந்த செம்பருத்தி கெழவி ரொம்ப ஓவரா தான் பேசுது.
படிச்ச புள்ள அவளுக்கு தெரியாதா எப்படி சூதானமா இருக்கணும்னு சும்மா எதையாவது சொல்லி மனச குழப்பி விட்டுட்டு போகுது.