புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது -24

நீயின்றி வாழ்வேது-24

   உதயகுமார் மகளைப் பார்த்து “வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்டு அழைத்து வந்தார்.
   
     வீட்டுக்கு அபர்ணா காலடி எடுத்து வைத்ததும், சுகிர்தன் முகம் இஞ்சி திண்றது குரங்கு போல மாறியது.

   அபர்ணாவை பார்த்து அண்ணி விருஷாலியை தான் நோக்கினான்.
   அபர்ணாவோ விஷாகன் அருகே வந்து, “நான் எட்டு வித்தியாசம் எல்லாம் கண்டுபிடிச்சிட்டேன்.” என்றாள்.

    விஷாகனோ தர்மசங்கடமாக “நைஸ் பப்ஸ் வேண்டாம் பர்க்கர் ஆர்டர் பண்ணிருக்கேன். இப்ப வந்துடும்” என்று அவளை அன்னையிடம் அமர வைத்தான்.

   விருஷாலியிடம் “அவங்க அம்மா அப்பா ஏதோ டெத் வீட்டுக்கு போயிருக்காங்க. அங்க எல்லாம் குழந்தையை அனுப்ப முடியாது பாரு. அதான் இங்க அனுப்பி ஸ்டே பண்ண சொல்லியிருக்காங்க. நாளைக்கு… நாளைக்கு வந்து அழைச்சிட்டு போவாங்க, உன்னையும் பார்க்க வர்றதா சொன்னாங்க.” என்று விருஷாலியிடம் கூறிவிட்டு ‘நாளைக்குள்ள சொல்ல முயற்சி பண்ணறேன்.’ என்று அழுத்தமாய்த் தாய் தந்தைக்குப் பதில் தந்தான் விஷாகன்.

   சுகிர்தனோ ‘அச்சு வார்த்த மாதிரி பொண்ணு பெத்துவச்சியிருக்கார். ஒருத்தருக்கும் சந்தேகம் வரலை.’ என்று மனதிலே புலம்பி சாப்பிட்டு எழுந்துப் போனான்.

  சுகன்யாவோ அபர்ணாவுக்கு உணவை பரிமாறினார். கணவருக்கு எதுவும் பரிமாறவில்லை. முன்பு ஒருத்தியோடு உறவாடியிருக்கின்றார் என்ற வகையில் மட்டும் ஊட்டி விட்டு, பாசம் காட்டினால் தன் வழிக்கு வருவாரென்று நம்பினார்.

   ஏனென்றால் சில ஆண்களுக்கு வயது ஏறினாலும் தாம்பத்திய மோகம் தீராமல் மனைவியை நாட, வளர்ந்த மகன் இருக்கின்றான் என்று மனைவி கணவனை தவிர்த்து விட, வீட்டில் கிடைக்காத இன்பம் வெளியில் தேடியதாகச் சுகன்யா முடிவுக்கட்டினார்.

   அதனால் ஒரளவு சகித்து உதயகுமாரிடம் நெருக்கமாய் ஊட்டி விட்டு அன்பு செலுத்த முயன்றார்.

   எப்பொழுது வாரிசாக மகள் ஒருத்தி இருக்கின்றாளென அறிந்தாரோ உதயகுமாரை அறவே ஒதுக்க ஆரம்பித்தார்.
   அதன் காரணமே திருமணத்தில் பரிசு பொருளை கொடுக்கும் போதும் விலகிவிட்டார். ஒரே இருக்கையில் வந்தாலும் பாதிப் பிரயாணத்தால் அவரை விலகிவிட்டு அபர்ணாவோடு அமர்ந்தது.

    ஒரு விதத்தில் அந்தப் புண்ணியவதி சங்கீதா இறந்துவிட்டாள். இல்லையென்றால் சுகன்யாவை பொறுத்தவரை நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கும்.

   ஒருவரின் இறப்பில் நிம்மதி அடைய கூடாது. ஆனால் சங்கீதா சக்காளத்தியாக எண்ணும் போது, மற்ற சாத்தான் எண்ணங்கள் தான் மனதில் வந்து நின்றது.

  என்ன தான் சுகன்யா உதயகுமாரை வெறுத்தாலும் இந்தக் குழந்தையை வெறுக்க மனம் முரண்டியது.

   முதல் காரணம் விஷாகனுக்கு  தங்கை பிறந்தால் எப்படியிருப்பாளோ அப்படி இருந்தாள்.
   இரண்டாவது காரணம் தாய் என்னும் பெண் மனம். இரண்டு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்த வயிறாக இருந்தாலும் பெண் குழந்தைக்கு ஏக்கம் இருந்தது. அது தனக்குக் கடவுள் கொடுப்பினை இல்லையென்று எடுத்துக் கொண்டவருக்கு, கணவன் மூலமாகப் பெண் குழந்தை கண்ணுக்கு இனிமையாகக் காணவும் கொஞ்சிட தோன்றியது.

     தன் குடியை அழித்த பெண்ணின் மகள் என்றாலும் தனக்கே குழந்தை முகம் கண்டு கொஞ்சும் எண்ணம் வர, கணவருக்கு வராததா? என்று சிந்தித்தது.

  அதனால் உதயகுமாரை இனி மன்னிக்க மாட்டேன். ஒரு தவறும் செய்யாத குழந்தையை வேண்டுமென்றால் மன்னிக்கலாம் என்ற முடிவு எடுத்தார் சுகன்யா.

  மகன் விஷாகன் வேறு மதியம் அழைத்து ஹாஸ்டல் சேர்க்கலாமா? விருஷாலியிடம் உண்மை கூறிடவா? என்று கேட்டான்.

     சுகன்யாவோ ‘விருஷாலி புரிஞ்சுக்கிட்டு நம்மை அனுசரிப்பானா சொல்லலாம். ஆனா பிரச்சனை பெருசாகும்னா ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைப்போம்’ என்று கூறினார்.

     சுகன்யாவே பர்க்கர் சாப்பிட்டு இரவு உணவை உண்ட அபர்ணாவை தங்கள் அறைக்கே அழைத்துச் சென்றார். உதயகுமாருக்கு லேசாய் மகிழ்ச்சி பெருகியது.


   சுகிர்தனோ தனியறையில், “அட சரியான பட்டிக்காட்டு பொண்ணு ஜெனிபர். அவர் சொந்தம் வேற. தலையாட்டிட்டு இருப்பா. படிப்பும் பிளஸ்டூ தான்.

  பஸ்ட் இயர் போட்டுச்சு.. ஆமா இனி படிக்குமா. அப்ப பிளஸ்டூ தானே.” என்று கேலியாக அண்ணியைப் பற்றிப் பகிர்ந்தான்.

    அங்க இருக்கறவங்களில் ஒருத்தருக்கும் கேள்விக் கேட்க தோணலை பார்றேன். இந்தாளு சாமர்த்தியம் அப்படி. ஏழு வருஷம் குழந்தை பெத்ததே மறைச்சிருக்கார். எத்தனை வருஷப் பழக்கமோ.

  இதுல எங்கம்மா லூசு தனமா அந்தப் பொண்ணுக்கு ஊட்டி விடறாங்க. அவங்களே இப்படியிருந்தா அந்தாளு மூனாவதா ஒருத்தியை நிறுத்தினாலும் ஆச்சரியப்படறதுக்கில்லை.” என்று இம்முறை அம்மா அப்பா இருவரையும் மட்டம் தட்டினான்.

     எங்கப்பா ஒரு களவானினா. இவன் தான் எதுக்கு இப்ப ஆதரவா நிற்கறான்னு தெரியலை. அந்தப் பொம்பள செத்தா இவனுக்கு என்னவாம். குழந்தையைக் கூட்டிட்டு வந்ததே இவன் தான்.
   இவனுக்கும் அறிவில்லை.” என்று விஷாகனையும் பேசினான்.

    எல்லாரும் நம்மளை மாதிரி இல்லை ஜெனிபர். இத்தனை நாள் அண்ணன் கல்யாணம் ஆகலைனு தான் உன்னை வெயிட் பண்ண சொன்னேன். இப்ப தான் பட்டிக்காட்டைக் கட்டிட்டு வந்துட்டானே
இனி நம்ம கல்யாணம் எப்படினு உடனே யோசிக்கறேன்.

   லாஸ்ட் டைம் மாதிரி அப்பா அம்மா சம்மதம் வேண்டும்னு உன்னிடம் மொக்கை போட மாட்டேன். எங்கப்பா அம்மாவுக்கு நம்ம மேரேஜ் பண்ணிட்டு இன்பார்ம்  பண்ணிடலாம். உங்க வீட்லயும் மேரேஜ் பண்ணிட்டு சொல்லிடலாம்ல?” என்று பதிலை எதிர்பார்த்தான்.

    “சூர் சுகிர். கர்த்தர் நமக்கு நல்வழிக்காட்டுவார்.” என்று கூறவும் சுகிர்தன் நிம்மதியானான்.
  அப்ப மத்த வேலையைப் பார்க்கவா? ரெஜிஸ்டர் ஆபிஸ்ல அப்ளை பண்ணிடலாமா?” என்று கேட்டான் சுகிர்தன்.

  “சூர் சூர்.” என்றாள் ஜெனிபர்.

     இவர்கள் பேச்சு இப்படிப் புதுப்பிரச்சனையைக் கொண்டு போகுமோ?

அபர்ணா பிரச்சனையை எப்படிக் கையாள என்று விஷாகன் சிந்தித்தான்.

    புதிதாக மணமான விருஷாலி தன் கணவனின் இனிக்கும் தாம்பத்தியத்தில் கட்டுண்டவள் அவன் நாடிபிடித்து முத்தமிட, சிந்தனை கலைந்தவனாக, “ஷாலிம்மா… நீயா தந்த பஸ்ட் கிஸ்.” என்று முத்தமிட்டான்.

     “அடிக்கடி குத்துது.” என்றாள். மீசையும் முட்போன்ற தாடியும் தொட்டு, “மீசை தாடி எடுத்துடவா?” என்றான்.
   “மீசை தாடி இரண்டும் இருக்கட்டும்.” என்று நாணத்தோடு கூறினாள்.

    “ஷாலிம்மா சொன்னா ஓகே தான்” என்று நாளைய பிரச்சனையை ஒத்தி வைத்து அவளின் ஏக்கத்தைத் தீர்த்தான்.


   அபர்ணா காலையில் எழுந்து குளித்துப் பள்ளி உடைமாற்றிப் பளிச்சென மாறினாள்.

   உதயகுமார் அதிகாலையே சங்கீதா இருந்த வீட்டுக்கு சென்று அபர்ணாவின் பள்ளி உடமைகளையும் மற்றவைகளையும்  எடுத்து வந்தார்.
  
     சுகன்யாவோ தலைவாறிவிட்டு டிபன்பாக்ஸில் உணவை கட்டினார்.

சுகிர்தனோ ‘வாழ்வுதான்… பேத்தியை ஸ்கூலுக்குக் கூட்டிட்டு போகற வயசு’ என்று அவனின் உணவை மட்டும் எடுத்து, தந்தை காதுபடப் பேசி சென்றான். இந்த இரண்டு நாளாகக் கேண்டீனில் தான் காலை உணவை விழுங்குகின்றான்.

    விஷாகன் எழுந்து வந்தப்போது உதயகுமார் முகம் சுகிர்தன் பேச்சில் செத்துவிட்டது.

    “எந்தத் தப்பும் செய்யறதுக்கு முன்ன யோசிக்கணும். தப்பு செய்துட்டு விதி மதி சதினு சொல்லறது ரொம்ப ரொம்பத் தப்பு” என்று கூறி பள்ளிக்கு நேரமாகும் என்று கையை வாசல் பக்கம் நீட்டினான்.

   அன்னை கொடுத்த காபியை பருகினான். தன்னைப் போலவே தன் அன்னை மனம் பக்குவப்படுவதை விஷாகன் உணர்ந்தான்.

   நேற்று போலத் தாமதம் செய்யாமல் விருஷாலி வந்தாள்.

வீட்டில் யாருமில்லை என்றதும் “சாரி அத்த. எப்ப எழுந்து சமைக்கணும்னு சொல்லுங்க. நான் எழுந்துக்கறேன். எனக்கே தெரியுது.. நான் நேரத்துக்கு எழுந்துக்கலைனு.” என்று மன்னிப்பு வேண்டி நின்றாள். விருஷாலியும் அதிகாலை எழ தான்  நினைத்தாள். ஆனால் விஷாகனின் பிடியில் இரவெல்லாம் காதல் மழையில் நனைந்து இருக்க காலையிலும் உறக்கமே வாட்டியது.
  
   சுகன்யாவோ காபியை வழங்கி, “காலையில எழுந்துக்கணும், சுப்ரபாதம் பாட்டு போட்டு சாமி கும்பிடணும்னு எந்த அவசியமும் இல்லை.

    நீ என் பையனை நல்லா கவனிச்சிக்கோ. அவனுக்கு எது பிடிக்குதோ எது பிடிக்கலையோ கேட்டு நடந்துக்கோ. அவனை எப்பவும் கைநழுவ விட்டுடாதே.” என்று தனது அனுபவத்தினால் மருமகளுக்குப் புரிய வைக்க முயன்றார் சுகன்யா.

  தலையும் புரியாமலும் வாலும் புரியாமலும் விருஷாலி நிற்க, புரிந்த விஷாகனுக்கோ, தன் அன்னை அடிப்பட்ட வலியில் ஓட்டு மொத்த ஆண் இனத்தைத் தந்தையோடு ஒப்பிடுவதாகப் புரிந்து அமைதியானான். இது வலியால் உமிழும் வார்த்தை. எப்படியும் தன்னைப் பற்றி ஒரு குறை கூறினால் ‘என் மகன் அப்படிபட்டவன் இல்லையென்று தாய் கூறுவது உறுதி.’ என்று அன்னையையே வெறித்தான். அவனுக்கு அவர்களிடம் வேறென்ன பதில் செய்து சாந்தப்படுத்த முடியும்.

  பெற்ற தந்தையைச் சாரமாரியாக அடித்து, மருத்துவமனையில் சேர்த்தாயிற்று. மீண்டும் போனால் சாகடிக்கவும் தயங்க மாட்டேன் என்று முடிவில் இருக்கச் சம்மந்தப்பட்ட பெண் சங்கீதாவே இயற்கை மரணம் தழுவி விட்டார்.
  
    குழந்தையை எடுத்து வந்தது மனிதாபிமானம் அடிப்படையில். தன்னைப் போலவே தன் அன்னைக்கும் மனிதாபிமானம் உண்டே.

    விருஷாலியிடம் இப்பொழுதே ஹாலில் அமர வைத்து கூறத்துவங்கலாமா? என்று அவளை ஏறிட்டான்.

   அவளோ இந்தப் பெரிய ஹாலில் இரண்டு பேனுக்கு மத்தியில் இருந்த அலங்கார விளக்கில் என்ன என்ன வண்ணம் ஒளிர்கின்றது என்று சுவிட்போர்டில் ஆப் ஆன் செய்து விளையாடினாள்.

   திருமணமான சின்னப் பெண், வறுமையிலும் கிராமத்திலும் வளர்ந்தவள். இவளிடம் பல கனவுகள் மனதில் இருக்க மணமுடித்து வந்து வீட்டை கூடச் சுற்றிக் காட்டாமல் அபர்ணாவை பற்றி உரைக்கவேண்டுமா? என்று எண்ண, அவனுக்கு அது சுயநலமா தோன்றியது.
  
   புதிதாக மணமான பெண்ணின் மனம் எதிர்பார்க்கும் ஆசை கனவு காதல், அன்பு, கெஞ்சல், கொஞ்சல், தாபம், மோகம் ஏக்கம், நேசம் நட்புறவு நான் உனக்கிருக்கின்றேன் என்ற உறுதி எல்லாம் தான் ஒருவனே வாறிவழங்க வேண்டும். அப்படியிருக்க, வீட்டின் பிரச்சனையைத் தற்போது தீர்வு தேடி அவளிடம் பேசலாமா என்று மிகப்பெரிய கேள்வி எழும்பியது.

     “விஷாகா… நான் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன். நீ விருஷாலிக்கு வீட்டை சுத்தி காட்டு. மறக்காம சாப்பிடுமா” என்று நாசூக்காய் தனிமை தந்து வெளியேறினார்.
   மனதிற்குக் கலக்கம் சூழ இறைவனைத் தரிசிக்க நடந்தார்.

    மயிலாப்பூர் என்பதால் திருத்தலங்களுக்குப் பஞ்சமேயில்லை. பர்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு நடந்தார்.

   வீட்டை உள்பக்கம் தாழிட்டு, விருஷாலியை கண்டு மென்னகைத்தான்.

   அவளோ ஒரு பௌவுலில் உப்புமா எடுத்து போட்டு சீனி தூவி, ஸ்பூன் எடுத்துக் கொண்டு விஷாகன் முன் வந்தாள்.

    “நீங்க சாப்பிட்டிங்க தானே?” என்று கேட்டாள். “சாப்பிட்டேன்… நீ சாப்பிடு” என்று கூறினான்.
 
    “அத்தை மாமா ரூமா? டோர் கலர் யார் சூஸ் பண்ணினா. நல்லாயிருக்கு. ஸெல்ப்பிற்கு டோர் போட்டது சூப்பர்.” என்று சுற்றி விட்டு, சுகிர்தன் அறைக்கு வந்தான்.

   “ஏதோ ஸ்மெல் வருது.” என்று மூக்கை உறிஞ்சி, சிகரேட் ஸ்மெல்.?” என்றதும் விஷாகனோ பல்லைக்கடித்தபடி, ஆமென்று கூறினான்.

   ‘என்ன தைரியம்… வீட்ல ஸ்மெல் வர்ற அளவுக்கு ரூம்லயே ஸ்மோக் பண்ணிருக்கான்.’ என்று விஷாகனின் அடிமனதில் இருந்த கோபக்காரன் ஆக்ரோஷமானான். ஆனால் எதிரே பூவையவளை வைத்து தன் சினத்தைக் கட்டுப்படுத்தி நின்றான். 

   டிரஸிங் டேபிள் பெர்ஃப்யூம் ஹேர் ஸ்பிரே ஜெல் என்று ஏகப்பட்டது இருந்தது.

    “வெளியே போகலாமா” என்று அவளாகக் கேட்க வெளியேறினார்கள்.
  
   கிச்சனில் எட்டி பார்க்க வரிசையாய் கண்ணாடி குடுவையில் மளிகைப்பொருட்கள் வாங்கி வைத்து நீட்டாக இருந்தது.

   “நீங்க இதைத் தானே சேல்ஸ் பண்ணறிங்க?” என்று ஆர்.ஓ மெஷினை சுட்டிக் காட்டி கேட்டாள்.

   “ஆமா… அதோட வாட்டர் கேன் ராஜனை வச்சி போடறேன். இன்னொருத்தன் இருக்கான் நீ கல்யாணத்துல பார்த்தியா கிறிஷ்டியன் பையன் அகஸ்டியன். இரண்டு ஆட்களை வச்சி மேனேஜ் பண்ணிடறேன்.

    இரண்டு பேருக்கும் சம்பளம், கடைக்கு வாடகை தர்றேன். வீட்டுல ஏசி நான் தான் யூஸ் பண்ணறேன். சோ கரண்ட் பில் நானே பே பண்ணிடறேன்.
  கிச்சன்ல புட் மெனு என் அட்டவணைப்படி தான் சமைக்கறாங்க. அதனால மளிகை பில் நான் தான் கொடுக்கறேன். காய்கறி நான்வெஜ் எல்லாம் அம்மாவிடம் கணக்கா பணத்தைக் கொடுத்துடுவேன்.

   இத்தனையும் என் உழைப்பு. சென்னையில தண்ணி கேன் போடறதுல என்ன லாபம்னு சிரிக்கக் கூடாது.  வாட்டர்சப்ளை பிறகு இந்த மேரேஜ் ஹோட்டல்ல தண்ணி கேன் போடறது எல்லாம் மேல சொன்னதுக்குச் செலவாகறதை ஈட்டிதரும்.
   
   ஆர்.ஓ-ல வர்றது தனி லாபம். மாசத்துல ஒரு லட்சம்கிட்ட வந்துடுமென அலட்டாமல் மிகப் பவ்யமாகக் கூறினான்.

     விருஷாலிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் ஊரில் பத்தாயிரம் இருபதாயிரம் சம்பாதிப்பவனே ஓவராக ஆடுவான்.
   “என்ன பார்க்கற?” என்று கேட்டான்.
  
     “இல்லை… மாமா கொரியர் ஆபிஸ் வச்சியிருக்காரா. நீங்க வாட்டர் சப்ளையா, சுகிர்தன் மச்சான் ஐடி ஜாப்பா, மூன்று பேரோட இன்கம் தான் எல்லாம் ஷேர் பண்ணறிங்கனு பார்த்தேன். ஆனா நீங்களே எல்லாம் பார்த்துக்கறது ஆச்சரியமா இருக்கு. சூப்பர்” என்றாள்.

விஷாகனுக்கு அவள் ஆச்சரியம் காட்டி பேசுவது பெரிதாகத் தோன்றவில்லை. மனசை அழுத்தும் பாரம் எப்பொழுது விடுதலை அடையும் என்று தவித்தான்.

    “சுகிர்தன் சம்பளம் சேர்த்து வைப்பான். மொத்தமாய் வருடத்திற்கு இரண்டு முறை சுற்றுலா செல்வான். உடை ஷூ பெர்ஃப்யூம் என்று வாங்கிக் குவிப்பான். அதனால் சம்பளம் எங்கடா என்றால் ஏதோ வச்சிருக்கேன் என்பான்.”

    உதயகுமாரை அச்சு வார்த்தது போலத் தோற்றத்தில் இருப்பது விஷாகனாக  இருந்தாலும் உதயகுமாரின் செய்கை அனைத்தும் சுகிர்தனில் காணப்படும்.

    மாடியில் கிளிகள் சத்தமிட, பயந்து திரும்பினாள்.
   “லவ் பேர்ட்ஸ்… எனக்கு லவ் பேர்ட்ஸ் பிடிக்கும்” என்றான்.

   “பெயரே சொல்லுது. பறவைகள் பிடிக்கும்னு” என்றதும் விஷாகன் திரும்ப, விஷாகன்னா ‘பட்சியின் மேல் சஞ்சரிப்பவன்’ பட்சின்னா.. பறவை தானே… அதான் லவ் பேர்ட்ஸ் மேல காதலோ?!” என்று கேட்டாள்.

    “ஹலோ பட்சிதாசன்…. வீடு அழகாயிருக்கு. அதை விட உன் இதயம் ரொம்ப அழகாயிருக்கு.” என்றாள் வெட்கமும் கிறக்கமுமாக.

     “ம்ம்.. தேங்க்ஸ்.” என்றான். அபர்ணா பற்றி யோசித்து அவள் பேசியதை அறியாமல்.

    “என்னாச்சி.. லேட்டா எழுந்தேன்னு கோபமா?” என்றாள்.

   “இல்லையே…” என்றான்.

   “அப்போ… அத்தான் என்னங்க மச்சான்.. இப்படிக் கூப்பிடாம ‘பட்சி தாசன்’ கூப்பிட்டுயிருக்கேன். கண்டுக்கவேயில்லை நீங்க.” என்றதும் தலையை உலுக்கினான்.

    “என்ன பெயரு.?” என்றான்..
  
    “பட்சிதாசன்” என்றாள் அவள் லேசாய் உதடு சிரிப்பை விழுங்கி, அவனை ஏறிட்டாள்.

    “நல்லாயிருக்கு… விருஷாலி.. நான் உன்னிடம் பேசணும். ரொம்ப முக்கியமான விஷயம்” என்று ஆரம்பித்தான்.

   உப்புமாவை மொத்தமாய் விழுங்கி மாடியில் வெயில்ப்படாத இடத்தில் லவ்பேர்ட்ஸ் அருகே நின்று காதல் பறவையையும் அவனையும் நேக்கினாள்.

   விஷாகனோ கூறிடும் முனைப்பில் “ஷாலிம்மா” என்று கூறி எச்சியைக் கூட்டி விழுங்கினான். அவனுக்குள் தடுமாற்றம் தயக்கம் இன்னமும் போகவில்லை.
எப்படி உரைப்பது என்ற தவிப்பில் வேறு பக்கம் திரும்பி கொண்டான். வானத்தைப் பார்த்து இமை மூடி ஆழ்ந்து மூச்சைஇழுத்து சுவாசித்தான்.

-தொடரும்.
Praveena Thangaraj
   
  

15 thoughts on “நீயின்றி வாழ்வேது -24”

  1. Adei vichu payalae skrm solliduda…..
    Indha sugir paiyan romba over ah tan panran…

    Super super🥰🥰… Waiting for next ud….

  2. Super sis nice epi 👍👌😍 endha sugirthan dhan romba worst character pola anni ya eppdi ellam pesuran edhula love vera kalyanam panni urupatta mathiri dhan 😬 endha vishayatha eppdi dhan Evan solla porano parpom 🤔

  3. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 24)

    அடேய்… இப்பவாவது சொல்லித் தொலை டா..! ராகு காலம், எமகண்டம் பார்க்குற விஷயமா டா..? அது சின்னப்பொண்ணு டா…
    உங்கப்பன் பண்ண தப்புக்கு அவளை போட்டு வதைக்குறிங்க.

    அவங்கப்பனுக்கு மேல இந்த சுகிர்தன் இருப்பான் போல…
    மைனர் ஜாலி, மணிபர்சு காலிங்கற மாதிரி. எல்லாரையும் இஷ்டத்துக்கு கமெண்ட்ஸ் அடிக்கிறான். வீட்டுச் செலவுக்குன்னு உத்தர ரூபா கொடுக்கிறது இல்லை.
    இதுல எல்லா செலவையும் அண்ணன் தலையில கட்டிட்டு
    இவன் பாட்டுக்கு எனக்கென்னன்னு இருக்கிறான். பொறுப்பகளை தட்டி கழிச்சிட்டு ஜாலியா ஊர் சுத்தறான். இதுல வீட்டுல இருக்கிற எல்லாரைப்பத்தியும்
    இவன் இஷ்டத்துக்கு அடிச்சு விடறான். ஒரு மட்டு இல்லை, மரியாதை இல்லை… என்னமோ இவன் ரொம்ப யோக்கியன் மாதிரி. நானும் பொறுத்து, பொறுத்து பார்க்குறேன். அநாவசியமா என் வாயை வேற கொண்டித் தொலைக்கிறான் நாதாரிப் பையன். நாளைக்கே அந்த ஜெனிபரை கட்டின பிறகு தான் தெரியும், இவன் அவங்கப்பனை விட படு மோசம்ன்னு… முசக்குட்டியை
    பிடிக்கிற நாயை, மூஞ்சைத்
    பார்த்தாலே தெரியாது.

    யம்மாடி விருஷாலி…! நீயாவது உன் புருசன் பக்கத்து நியாயத்தை கேட்டு, அவனுக்கு சப்போட்டா வித்துக் கொடு, உனக்கு புண்ணியமா போகும்.
    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  4. Sister neenga romba mosam engala romba tempt pantringa solliten… Naanga romba pavam… Vishagan a vida engaluku tha bakku bakku nu iruku… Sugi ivlo mosam parents pathi react pannuvanu expect panala….

  5. Vishagan pavam pa avanga appa panna thappu ku ivan ennavo kuttravali mathiri indha alavuku feel panran
    Sukirthan oda vai odacha enna jolly ooru suthitu love pannitu epudi veetula iruku ah ellar yum korai solluran ivan rombha yogiyam paru Shali plus 2than padichi iruku ah athuku enna ava veetula varumai atha na la konjam late ah college pona pattikadam poda po ne jenifer ah kalyanam panni nalla azhuva ah

  6. இன்னைக்காவது அபர்ணா பத்தி உண்மையா சொல்லுவானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!