நீயின்றி வாழ்வேது-25
“உங்க வீடோ இந்தப் பகட்டான ஆடம்பரம் இரண்டை விட, இந்த இடைப்பட்ட நாள்ல உங்க அன்பு என்ன திக்குமுக்காட செய்யுது.” என்று கூறவும் அவள் அவனைப் பின்னால் இருந்து அணைத்து இருக்க கைகளைப் பிரித்துப் பேச நாவறவில்லை விஷாகனுக்கு.
“விருஷாலி… நான் சொல்ல வர்றத கேளு” என்ற போது, இது எனது முறை என்பது போல விஷாகன் உயரத்திற்குக் காலை எக்கி அவனிதழில் முத்தமிட்டாள்.
மனைவியாக அவளே தரும் முத்தம் இந்நேரம் விஷாகன் வானத்தில் மிதந்திருக்க வேண்டும். ஆனால் தவிப்பாய் விலக முற்பட்டான்.
விருஷாலியாலும் நீண்ட நேரம் அவன் உயரத்திற்குக் காலை எக்கயியலாது விடுவித்து, “நான் கத்துக்கிட்டேனா” என்றாள்.
மூச்சு வாங்க கேட்டதும் அவளின் செயலால் புன்னகை மலர்ந்தது விஷாகனுக்கு.
“ம்… நல்லாவே” என்றவன் கன்னத்தை ஆதுரமாய்த் தடவினான்.
கீழே காலிங் பெல் அடிக்கும் ஒலியால் அவளிடம் உண்மையை உரைக்க முடியாமல் கீழே வந்தான்.
தந்தை என்றதும் கதவை திறந்து வைத்து நின்றான்.
விருஷாலி கிச்சனில் பௌவுலை வைக்க வந்து, அனைத்து பாத்திரமும் கழுவி வைக்கப்பட்டிருந்தது கண்டாள்.
ஒரு வேலையும் இல்லையென்று பளிச்சென்றிருந்த சமையல் அறை பறைச்சாற்றியது. அவளுக்கே என்ன வேலை செய்ய என்று விழித்தாள்.
சற்று நேரத்தில் சுகன்யா வந்ததும் ‘பேசிவிட்டாயா’ என்று மகனிடம் பார்வையை வீச, “முடியலைம்மா.” என்று கூறினான்.
மாலை வரை இதே நடந்தேற, உதயகுமார் பள்ளியிலிருந்து அபர்ணாவை அழைத்து வந்தார்.
விருஷாலி வினோதமாய்க் காணவும் “அவங்க அப்பா அம்மா உடனே வரமுடியாத சூழ்நிலை. குழந்தையை எங்கயும் விடமாட்டாங்க. நம்மளை நம்பி மட்டும் விட்டுட்டு போவாங்க. அதனால தான் கூட்டிட்டு வர போனேன் ” என்று கூறவும் விருஷாலிக்கு நீண்ட நாள் பழக்கம் போல எண்ணி கொண்டாள்.
தனது தோழி வனஜா வீட்டில் இப்படித் தான். வனஜாவின் அம்மா காயத்ரி எங்கேனும் சென்றால் வனஜாவை பொறுப்பாகத் தங்கள் வீட்டில் இருக்கக் கூறுவார்கள். அவளும் தன்னோடு பேசி சிரித்துத் தன் வீட்டிலேயே தங்கிடுவாள். அப்படித் தான் விருஷாலி மனதை சமன்படுத்திக் கொண்டாள்.
விஷாகன் மாலை வீட்டுக்கு வரும்போது விருஷாலிக்கு ஸ்மார்ட்போன் வாங்கி வந்து நீட்டினான்.
கணவனின் முதல் பரிசு என்பதால் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டாள்.
விஷாகன் போனின் செட்டிங்கில் ஒவ்வொன்றாய் விளக்கி கூறினான்.
ஹாலில் அவன் மனைவிக்கு எட்டியிருந்து தான் சொல்லிக் கொடுத்தான்.
சுகிர்தனோ ‘பட்டிக்காடு இப்ப தான் ஸ்மார்ட்போனையே பார்க்குது’ என்று ஏளனமாய் அறைக்குச் சென்றான்.
அன்றைய மீதி நேரங்கள் அபர்ணா பாடம் படித்துச் சிற்றுண்டி விழுங்கி, இரவு உணவை முடித்து, சுகன்யா அறையில் உறங்க சென்றாள்.
உதயகுமாரோ மனைவி அபர்ணாவை அரவணைக்க எட்டியிருந்து கவனித்துக் கொண்டார்.
தானாகப் பேச போனாலும் சுகன்யா முகம் திருப்பிடவும் இத்தனை நாட்களில் மன்னிப்பு கேட்டும் இனி கிடைக்காது என்று சுகன்யா மனம் மாறி மன்னிப்பை தர, இறைவனை வேண்டினார்.
இங்கு விஷாகன் சூழ்நிலையை எதிர்பார்த்து தவறவிட்டு, இனி விருஷாலியே கேட்கும் போது சொல்லலாம். எப்படியும் தன் வீட்டில் அபர்ணா நெடுநாளாய் இருந்தால் கேட்பாள் என்று பிரச்சனையை ஒதுக்கி வைத்தான்.
இப்படியே மூன்று நாட்கள் கழிந்தது. உதயகுமார் மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு கொரியர் அலுவலகம் சென்றார்.
விஷாகனும் தனது ‘வாட்டர் சப்ளை’ கடையை ரெகுலராகத் திறந்திட வந்தான். ராஜன் எப்பொழுதும் போலப் பணியில் கவனத்தை வைத்தாலும் அந்தப் பொண்ணு அபர்ணாவை பற்றி அண்ணிக்குத் தெரியுமா தெரியாதா என்று சிந்தித்தான்.
சுகன்யாவே அபர்ணாவை பற்றிக் கூறியிருக்கலாம். ஆனால் சுகன்யாவும் தயங்கி விருஷாலியிடம் ஆல்பத்தைக் காட்டி, வீட்டின் பழக்கவழக்கமும் பேசி பகிர மட்டுமே முடிந்தது.
ஊரில் நல்லபடியாக வந்து விட்டதாக விவேக் தெரிவித்தான். அதன் பின்
விஷாகன் “என்னால எப்படி இந்த விஷயத்தை விருஷாலியிடம் சொல்லறதுனு தெரியலை விவேக்” என்றான்.
“மச்சான் எப்ப தங்கச்சிக்கு அபர்ணாவை பற்றிச் சொன்னாலும் எனக்குப் போன் பண்ணி தகவல் சொல்லுங்க. நான் உங்களுக்கு ஆதரவா பேசி சமாளிக்கறேன் மச்சான். தயங்காம அவளிடம் பேசுங்க.” என்று ஆறுதல் உரைத்தான்.
விஷாகனுக்கு விவேக் கூறிய ஆறுதல் பெரிய ஆதரவாக இருந்தது. தன்னிலை ஒரளவு விவேக்கிற்காவது தெரிந்ததே என்று.
விஷாகனுக்கு இருக்கும் பொறுமை சுகிர்தனுக்குத் துளியும் இல்லை. அன்று வீட்டில் நடப்பதை எல்லாம் காதலியிடம் கொட்டியதால், இன்று ஏதோவொரு பேச்சிற்கு வாதம் புரிந்தால் ஜெனிபர்.
அந்தப் பேச்சுக் கடைசியாகச் சுகிரின் வாயை அடைக்க, சுகிர் குடும்பத்தை இழுத்தாள்.
தந்தையை இழிவாகப் பேசிய போது செவிமடுத்தவன் அவனை எகத்தாளமாகப் பேசவும் பொங்கிவிட்டான்.
கோபத்தோடு அரைநாள் விடுப்பு எடுத்து வந்தான்.
வீட்டிற்கு வரும் வழியில், தந்தை அந்த அபர்ணாவை பெண்ணைப் பள்ளியிலிருந்து அழைத்து, அங்குப் புதிதாகத் திறந்த ஐஸ்க்ரீம் கடையில் நுழைவதை கண்டான்.
தன் ஒட்டு மொத்த கோபத்தை இடம் பொருள் மறந்து அவரைத் தொடர்ந்து வந்து வெளிக்காட்ட துவங்கினான்.
சின்ன மகனை இந்த நேரம் இங்குக் கண்டதில் உதயகுமார், “சுகிர்தன் வாப்பா.. அபர்ணா ஐஸ்க்ரீம் கேட்டா” என்று மகளோடு தானும் சாப்பிட ஆசைக் கொண்டதாகக் கையில் வைத்த கோன் ஐஸை சுட்டிக் காட்டினார்.
அப்பொழுது தான் “நான் அந்தப் பந்து இருக்கற இடத்துக்குப் போய் விளையாடவா?.” என்று கேட்டாள் அபர்ணா.
கடையில் ஒரு பக்கவாட்டில் குழந்தைகள் விளையாட என்று ஒரு க்ரில் வேலியாக அமைத்து, வண்ண பந்துக்களைப் போட்டு நிரப்பியிருந்தனர். அதனைப் பார்த்து அபர்ணா விளையாட ஆர்வமாய்க் கேட்டதும் தலையாட்டினார்.
அபர்ணா அங்கே ஓடியதும் “குழந்தையை அன்னைக்கு மாதிரி திட்டிடாத டா. அவ நீ திட்டியதிலருந்து என்னை அப்பானு சொல்லறதில்லை. சுகிர் அவ உனக்குத் தங்கச்சிடா.” என்று முன்பு முதல் தடவை விஷாகன் அபர்ணாவை அழைத்து வந்த அன்று திட்டியதை வைத்து, குழந்தையை ஏதேனும் காயப்படுத்துவானோ என்று முந்திக்கொண்டார்.
“அடச்சீ… பேத்தியோட விளையாட வேண்டிய வயசுல, பேத்தி வயசுல பொண்ணைப் பெத்து வச்சிருக்க.
ஏன்யா தெரியாம தான் கேட்கறேன். அப்பானு கூப்பிடாதேனு நான் மட்டும் தான் சொன்னேனா? ஏன் விஷாகன் கல்யாணத்துல பந்தி பரிமாறுற இடத்துல நீயும் தானே படிக்கட்டுல சொன்ன.
பெத்த பொண்ணையே அப்பானு கூப்பிடாதனு சொன்னவன் நீ தானே. உனக்குக் கேவலமா இல்லை.
உனக்குச் சாமர்த்தியம் அதிகம்யா… இந்தப் பொண்ணை நம்ம வீட்டு கல்யாணத்துல கூட்டிட்டு வந்து வந்தவங்க தலையில மிளகா அரைச்சிட்ட… கல்யாணத்துக்கு வந்தவங்க யாரும் கண்டுப்பிடிக்கலை பாரு.
இதுல விஷாகனை எப்படியோ உன் குடும்பத்துல கோர்த்துவிட்டுட்ட. இனி அவன் மானம், மரியாதைனு உனக்காக அவன் இந்தச் சனியனை மறைச்சிடுவான் செம ட்ரிக்.” என்று நகைத்தான்.
உதயகுமார் கூனிகுறுக, “மூன்று நாளா சொந்த வீட்லயே இந்தப் பொண்ணைத் தைரியமா கூடவே இருக்க வச்சிட்ட.
என்ன அடுத்துப் போர்டிங் ஸ்கூல் அனுப்பிட்டுப் பணத்தைச் செலவழிப்பிங்க அப்படித் தானே. பண்ணு பண்ணு.. எத்தனை ஹாஸ்டல்ல எத்தனை பசங்க உன்னால அநாதையா படிக்குதோ? என்று இகழ்ந்தான்.
“டேய்.. சுகிர் அப்படித் தப்பா பேசாத டா. சங்கீதா என் கொரியர் ஆபிஸ்ல வேலை பார்த்தவ. அவளிடம் மட்டும் தான் என் பழக்கம். நான் ஒன்னும் பார்க்கற பொண்ணுங்களிடம் பழகறவன் இல்லை.” என்றதும், நிறுத்தக் கூறினான்.
“என்னை விட அந்தப் பொண்ணு சங்கீதாவுக்கு ஏழெட்டு வயசு அதிகமா இருக்குமா?” என்றதும் சங்கீதாவிற்கு முப்பத்தியேழு இருக்கலாம் என்பதால் தலையாட்டினார்.
“நான் பொண்ணா இருந்தா என்னையே விட்டு வச்சியிருக்க மாட்ட.” என்று சுகிர் கூறவும் “சுகிர் நீ பேசறது சரியில்லைடா. பெரியவன் மாதிரி அடிச்சிடு. சொல்லால அடிக்காத. நெஞ்சுல சுருக் சுருக்குனு தைய்குது.” என்றார் உதயகுமார்.
“ஆமா பெரிய இவரு… சொல்லால அடிக்கறாங்க. பெத்த பொண்ணையே அப்பானு கூப்பிடாதனு சொன்ன ஆளு.
உனக்கெல்லாம் நெஞ்சு குத்தனும். நானும் விஷாகன் மாதிரி அடிச்சி துரத்தியிருக்கணும். என்ன பண்ணறது உன்னை அடிச்சி பிரச்சனையை இழுக்கப் பிடிக்காது.
நீ உன் பொண்ணை வளர்க்கறதை என் தலையில ஏத்தி விட்டுடுவ. .
எனக்கு இந்தக் குடும்பமே வேண்டாம். உன் பெரிய பையனே அந்தப் பொண்ணை வளர்க்கறானோ? பிச்சை எடுக்க விடுவானோ?
நான் கொஞ்ச நாள்ல, நான் விரும்பின பொண்ணு ஜெனிபரை கல்யாணம் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன். சீக்கிரம் சொத்தை பிரிச்சி வை.
என்ன ஜெனிபர் என்ற பெயரை கேட்டதும் திகைக்கிற, வேற மதம்னு கண்ணு முழி பிதுங்குதோ… ஆமா மதம் வேற தான்.
என்ன நீ கேள்வி கேட்பியா… என்னைக் கேள்விக் கேட்கணும்னா அப்பனா முதல் நீ ஒழுங்கா, ஒழுக்கமா இருந்திருக்கணும்.
யார் கண்டா பெத்த மகளை அப்பானு கூப்பிடாம வளர்ந்ததும் மூனாவதா மாத்த கூட யோசித்து வச்சிருப்ப.” என்றதும் உதயகுமாருக்கு நெஞ்சு வலி வராத குறை தான். மகளை எப்படிப் பேசுகின்றான். தன்னைப் பேசினாலாவது பரவாயில்லையே என்றது மனம்.
ஐஸ்க்ரீம் உருகிவழிந்து கூழ் பதமாகி வீணானது. சுகிர்தனோ காதலியிடம் போட்ட சண்டையோடு இங்கு வந்து வார்த்தையைக் கொட்டிவிட்டு, அவன் வீட்டிற்குப் புறப்பட்டான்.
“அப்பா அப்பா… அண்ணா போறார். நாம போகலையா.” என்று அபர்ணா வந்தாள்.
திகைத்த விழியோடு மகளைக் காண, அவளோ “யாருமில்லைனு அப்பானு சொல்லிட்டேன். சாரிப்பா” என்று நடுங்கினாள்.
சுகிர் தற்போது பேசி சென்றதில் மகள் ‘அப்பா’யென விளித்து நடுங்குவதும் எண்ணி வழிந்த கண்ணீரை துடைத்தபடி வீட்டுக்கு சென்றார்.
ஆட்டோவில் ஏறி சிவனேயென்று வீட்டை வந்தடைந்தார்.
வழிநெடுக, ‘பெத்த பொண்ணே அப்பானு கூப்பிட தயக்கத்தைக் காட்டுற அளவுக்கு நானே அப்படிக் கூப்பிடாதேனு சொல்ல வச்சிடுச்சே’ இந்த விதியென அதிலேயே மனம் சுழன்றது. அபர்ணா வீட்டுக்கு வந்து துள்ளி ஓடவும் பிணம் போல மெத்தையில் படுத்தார்.
சுகன்யாவும் ஒரு வார்த்தை பேசவில்லை, சுகிரும் இப்படி வார்த்தையால் சவுக்கடி தருகின்றான்.
தந்தையை அடித்தாலும் விஷாகனே பரவாயில்லை… ‘அப்பா’ என்று பேசிவிட்டான்.
மருமகளிடம் தானாகச் சென்று உண்மையை உரைக்கலாமென்றாலும், அவள் முன் பேச அத்தனை தைரியம் வரவில்லை. ‘உதயகுமார் மாமா’ என்று ‘பெரிய பிம்பம்’ அவள் மனதில் இருப்பதை அவர் நன்கு அறிவார். தனக்கு இத்தனை நல்லப்பெயர் சுற்றத்தில் இருக்க, செய்த தவறு தற்போது இமயமளவு தெரிந்தது.
மாலை மனசு கேட்காமல் சங்கரனை போலக் குடியை நாடிப் பார்ப்போமா என்று அவருக்குத் தோன்றியது. பிறகு அதற்கும் பிள்ளைகள் பேசுவார்கள். ஏற்கனவே குடித்து விஷாகனிடம் திட்டு வாங்கியது வேறு நினைவில் வந்துப்போனது.
வீட்டிலிருந்தால் பைத்தியமே பிடித்திடும் என்று வெளியே சென்றார்.
அபர்ணா ஓடிவந்து யாருமில்லையென்று “கடைக்குப் போறியா அப்பா. எனக்கு வோர்ல்ட் மேப், சாக்லேட் வேண்டும்பா. ஸ்கூல்ல கேட்டாங்க. வர்றப்ப மறந்துட்டேன்.” என்று கேட்டாள்.
“உனக்கு ஏதாவது வேண்டுமின்னா என்னிடம் தயங்காம சொல்லு. அப்பாவிடம் எல்லார் எதிர்ல சொல்ல முடியலைனா, விஷாகன் அண்ணாவிடம் சொல்லு, அவன் வாங்கித் தருவான் டா. இனி விஷாகன் அண்ணா தான் உனக்கு உலகம்.” என்றவர் வாயுக்கு வந்ததை உளறி வெளியேறியிருந்தார்.
அபர்ணாவோ சுகன்யா மார்கெட்டில் வாங்கிய ஸ்கிப்பிங் கயிறால் தனியாக விளையாட துவங்கினாள்.
மனம் முழுவதும் பாரத்தைச் சுமந்து தன் வாழ்வில், தான் தடம் புரண்ட காரணத்தால் கழிவிரக்கம் அடைந்து சுற்றியுள்ள இடத்தை மறந்து வண்டியை செலுத்தினார்.
சிக்னல் சிவப்பு காட்டியதை கவனிக்காமல், இருசக்கரவாகனத்தை ஓட்டவும் அப்பொழுது தான் பச்சை ஒளியை உமிழ்ந்தது.
ரேஸுக்கை நின்ற வண்டிகள் போலக் காரும் பைக்கும் பறந்தது. அப்பொழுது அதிவேகமாக வந்த வண்டி ஒன்று, உதயகுமார் வண்டியை இடித்துத் தள்ளியது.
விபத்து சாலையின் மையத்தில் நிகழவும், கூட்டம் கூடியது.
அதில் விஷாகன் தோழன் ரவி எட்டிப்பார்த்து, ஆம்புலன்ஸிற்கு அழைத்து விட்டான். ஆம்புலன்ஸ் வரும் முன் விஷாகனுக்குப் போனில் அழைத்துத் தகவல் தந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து உதயகுமாரை அள்ளி சென்றது.
பெரிய அடியெல்லாம் இல்லை உயிர் பிழைச்சிடுவார் என்று தான் ஆம்புலன்ஸில் இருந்த பையன் அவன் அனுபவத்தில் ரவியிடம் கூறினான்.
அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்து காயத்திற்கும் வழிந்த ரத்தத்திற்கும் மருந்துகள் போட்டு சரிப்படுத்தும் போது இதயப்பகுதி மேலும் மேலும் வலியெடுக்க, மனமானது சுகிர் பேச்சிலேயே சிறைப்பட்டது.
உடலும் விபத்தால் பாதிக்கப்பட, மனமும் சுகிரால் பாதிக்கப்பட்டு இதயத்தில் சுருக்கென்ற வலி அதிகரித்தது.
இரண்டு எமர்ஜென்சி மருத்துவர்கள், இரண்டு நர்ஸ், வார்டு பாய் வேறு உதயகுமாரின் உடையை அப்புறப்படுத்தியபடி படைசூழ்ந்து இருக்க, இனி உலகில் உன் பங்கு நிறைவடைந்து விட்டதென்று இறைவன் எழுதி வைக்க, எமனின் பாசகயிற்றால் நொடியில் உயிரை துறந்தார்.
சிலருக்கு மருத்துவமனை சென்றால் உயிர் பிழைத்திருக்கலாம் என்றளவு பாஸிபிள் இருக்கும். ஆனால் சில மரணத்தை யாராலும் தடுத்த நிறுத்த இயலாது.
உதயகுமார் ஆன்மா ஆடி அடங்கியது.
-தொடரும்.
Praveena Thangaraj

அச்சோ உண்மை தெரியாமலே போய் விட்டதே
இனி விஷாகா உன் தலையில் தான் அபர்ணா விடிவால் ஒரு அப்பா என்று பழி உன் மீது சுமத்தி பார்க்க போகிறது விதி
அச்சோ. .. இந்த சுகிர் பக்கா சுயநலவாதி. .. பாவம் இந்த அபர்ணா வாழ்க்கை முழுசா கஷ்டம்
ஒரு நிமிட சபலத்தால் உதயகுமாரனது மனமும் வாழ்வும் எவ்வளவு சிக்கல் ஆகி சிதறி போனது.
ஆனாலும் அவரது இறப்பு மனதை கனக்கவைக்கிறது
இவர் செய்த பிழையும் பாவமும் அபர்ணா வாழ்க்கை கேள்விகுறி ஆக்கியுள்து…,,,
இனி விசாகன் நிலை என்ன??
விருஷாலி புரிந்து கொள்வாளா????
Very interesting 👌.
Romba sogama poguthoooo
Endha sugirthan ellam oru magan ah pakka suyanalavadhi ennavellam pesitan cha andha kuzhandhiya pathina unmai theriyamaley poiduche eni andha pazhi vishagan mela vizhumo🥺 paavam oru urir a poiduchu eni andha ponnuku appavum Ella ammavum ella🤧🥺😢
Pochu apo vishkan ponnu dan aparna nu ine elarum solura mathiri akirum polaye
Omg. Vishkan very tuff portion waiting for you in your life. Interesting
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 25)
அச்சோ…! இவர் பாட்டுக்கு உண்மையை சொல்லாமலே போய் சேர்ந்துட்டாரு… இப்ப எல்லா பொறுப்பும் விஷாகன் தலையிலத்தான் வந்து விழுந்துடுச்சோ.
ஆனாலும், இந்த சுகிர்தனுக்கு கால்வாயை விட வாய் அதிகம் தான். ஒரு பொறுப்பையும் ஏத்துக்க மாட்டான், ஒருத்தரையும் மதிக்க மாட்டான், ஆனா, ஊரப்பட்ட வாயோடு சுயநலமாவும் இருக்கிறான்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Sukirthan oda vaarththai oru uyirai pokiduchi.. Acho udhayakumar😢😢😢😢 inimel visakan ku prblm perusa aga poguthu 😞😞😞😞😞
Ipo visaganuku than ella pirachanayum😔😔😔😔😔epti samalika porano😌😌😌😌very interesting sister waiting for next ud
So sad☹️☹️ nice epi👍
Appa nu konjam yosichi pesama avan pesiya pechi iniku appa uyir porathuke karanam aeiduchi ipo nee ena solli ketalum pona uyir thirumba varathe sugir. Abarana ipo tha amma va izhantha ipo appa vum intha vayasula ippadi rendu peraium izhanthutu nikura thavippu evlo kastam . Ebi vishakan tha ava poruppa eduthupana aana athuku munnadi virushali kitta enium maraikama sollidu vishaka aduthu enavo nadakatum
Aparna ku amma vum illa ippo per ku aachum appa nu oru uravu irundhuchi athuvum illa ma poiduthu
Sugir unnoda thu vai ah illa vera ethavathu avar thappu panna athuku Vishagan pola adichi ya atha mattum sei atha vittutu andha chinna ponnu aparna ah va yum serthu pesi ipadi andha manushan ore adiya poi serndhutaru
Sugirthan kovathula oru kutty ponnuku family ilatha mari pannita romba kastama iruku intha epi ithula innum suffer aagarathu vishagan than…. 😔😔😔
Achooo 😱….. Yen ipti…. Vishakan tha paavam
அவர் தப்பு செஞ்சிட்டாரு தான் இல்லன்னு சொல்லல அதுக்காக இந்த அளவுக்கு வார்த்தைகளை கொட்டி இருக்க வேண்டாம்.
Soo..sad 😢😢