நீயின்றி வாழ்வேது-27
வீடே மாயான அமைதி கொண்டிருந்தது. வீட்டிற்கு அடித்த புதுப் பெயிண்ட் இன்னமும் கல்யாண கலையை இழக்கவில்லையென்று பறைச்சாற்றியது. கல்யாணத்திற்காகச் செய்த அலங்காரங்கள் இன்னமும் வீட்டின் முகப்புகளில் தோரணங்களாக எஞ்சியிருந்தது.
மங்களகரமாகக் காட்சியளித்து வீட்டுக்குப் புதுமணத் தம்பதியர்களைக் கண்டு கேலி கிண்டல் செய்து உறவினர்கள் வரவேண்டியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் துஷ்டி கேட்கவே ஆட்கள் நிறைந்திருந்தனர்.
விருஷாலி அறைக்குள் இல்லையென்றதும் விஷாகன் அறைக்கதவை மூடி, அபர்ணாவை ஏறிட்டான்.
அபர்ணா மேலிருந்த போர்வை ஈரமாக இருந்தது. விஷாகன் தொடவும், “அம்மா.” என்று கத்தவும் ‘உஸ் நான் தான்” என்று கூறவும் “நான் தெ..தெரியாம ஒன் பாத்ரூம் போயிட்டேன். என்ன திட்டாதிங்க” என்றாள் அபர்ணா நடுக்கத்துடன்.
“சரி… பரவாயில்லை…முதல்ல குளிச்சிட்டுப் பாத்ரூம் போயிட்டு வா” என்று உடையை நீட்டவும் வாங்கிக்கொண்டு சென்றாள்.
தனக்குத் தங்கையிருந்தால் டயப்பர் மாட்டி விட்டு, அவளுக்கு மூக்குசிந்தி, சோறூட்டி விட்டிருப்போமோ, அதில் சிலதாக நேரத்திற்குச் சோறும், அவளைக் கவனித்து இதோ இந்த இடத்தைச் சுத்தம் செய்கின்றான். வேடிக்கையாக இருந்தாலும் ஏதோவொன்று அந்தப் பெண் அபர்ணாவை உரிமையோடு மனம் தானாகத் தங்கையென்று எடுத்து கொண்டதை கண்டு வியந்தான்.
இறந்தவரை பற்றி நல்லவரா கெட்டவரா என்று ஆராயாமல், இனி நடப்பதை அறனோடு மாற்ற எண்ணினான்.
அபர்ணா குளித்து உடைமாற்றி வரவும், அவளாகவே தலைவாறி நின்றாள். பாப்கட் என்பதால் வாறியதும் அழகாக இருந்தாள்.
விருஷாலியின் கைப்பையில் இருந்த பொட்டு பேக்கெட்டிலிருந்தை ஒன்றை எடுத்து அபர்ணாவுக்கு வைத்து விட்டான்.
“உன்னை இப்ப நம்ம ரிலேட்டிவோட இன்ட்ரோ பண்ணப் போறேன். இன்ட்ரோ பண்ணிட்ட பிறகு அங்க நிச்சயம் உன்னைத் திட்டி கோபமா பேசுவாங்க. அதை எதையும் மனசுல ஏற்றிக்காதே.
உனக்கு இந்த வீட்ல உரிமையா நடமாடணும்னா அந்தத் திட்டும் கோபத்தையும் தயங்காம கேட்டு தான் ஆகணும்.
இதேயிடத்துல இருக்க முடியாது சரியா” என்றதும் பாதிபுரிந்தவளாய் சரியென்றாள்.
முன்ன உனக்குனு சங்கீதானு அம்மா இருந்தாங்க. அவங்க இறந்ததும் உதயகுமார் அப்பா இருந்தார். இப்ப அவரும் இல்லை.
அவங்க இருவருக்குப் பிறகு நீ உரிமையா பழகற வீடும் ஆட்களும் நாங்க தான்.
ஏற்கனவே சுகன்யா அம்மா, சுகிர்தன் அண்ணாவை தெரியும். ஏன் விவேக் மாமாவையும் தெரியும். இப்ப மத்தவங்களையும் தெரிந்துக்கற நேரம் வந்துடுச்சு.” என்றான் விஷாகன்.
“நேத்து நைட் பார்த்த அக்கா யாரு?” என்றாள். அவள் விருஷாலியை கேட்கின்றாளென்றதும் விஷாகன் உதட்டில் முறுவல் உடைப்பெடுத்து, “அவ அக்கா இல்லை. அண்ணி. என் ஓய்ப் விருஷாலி” என்றான்.
“ரொம்ப அழகா பொம்மை மாதிரி இருக்காங்க” என்றாள் அபர்ணா.
லேசாய் மனம் இலகுவாக, “சரி வெளியே கூட்டிட்டுப் போய்ச் சாப்பிட வச்சிட்டு பேசுவேன். நீ சைலண்டா இருக்கணும்.” என்று கூறினான்.
அறைக்கதவை திறந்து வெளியே வரும் நேரம் வயோதிகர்களுக்குக் கண்கள் சுழட்டுகின்றதென்று கொஞ்சமாய் மோர்கஞ்சி காய்ச்சி தொண்டையும் வயிற்றையும் நிரப்பினார்கள்.
என்ன தான் இறப்பு நடந்த வீடு என்றாலும் வாயும் வயிரும் வேறு. வயிற்றுக்கு லேசாய் ஏதேனும் செலுத்தாவிட்டால் வயாசன காலத்தில், தள்ளாட்டத்தைக் கொடுத்துப் படுத்தபடுக்கையாக்கி விடும். அதனால் காலையில் டீயும், தற்போது மோர்கஞ்சியும் குடித்திருந்தார்கள்.
விஷாகனோ வெளியே வந்துவிட்டு “அபர்ணா வெளியே வா” என்று அழைத்தான்.
விஷாகனின் அழைப்பு தந்தை குரல் போல இருக்க, “வர்றேன்ப்பா..” என்றவள் விஷாகன் விழிக்கவும் “சாரி.. அண்ணா அப்பா வாய்ஸ் மாதிரி இருந்தது.” என்றதும் பார்வையைச் சரிப்படுத்திக் கொண்டான். விஷாகன் மோர்கஞ்சியை அவளிடம் நீட்டினான். பசிக்கவும் மடமடவெனக் குடித்தாள்.
அன்னமோ ‘இந்தப் பொண்ணுக்கு இங்க என்ன வேலை. அதுவும் நம்ம மாப்பிள்ளை-மகளோட அறையிலருந்து வர்றா’ என்று வன்மமாய்ப் பார்வையிட்டார்.
ஒட்டு மொத்த குடும்பத்தின் பார்வையும் அபர்ணா மீது பதிந்தது.
அன்னபூரணி அப்பத்தா அருகே வந்து, “அப்பத்தா… இந்தப் பிள்ளை யாரை மாதிரி இருக்கு?” என்று அபர்ணா வாயில் மோர்கஞ்சி வாயோரம் இருக்கக் கைக்குட்டையை வைத்து துடைத்து விட்டான்.
“நம்ம சொந்தக்கார பிள்ளை மாதிரி இருக்கு. ஏன்யா கேட்கற?” என்று பேரனை கேட்டதும், “இங்கயிருக்கற எல்லாருக்கும் ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்த விரும்பினேன். அப்பா இருந்து இதைச் சொல்ல சொல்லிருக்கணும். ஆனா துரதிர்ஷ்டவசமா அப்பா விபத்துல இறந்துட்டார்.
அவர் ஏழு எட்டு வருஷமா மறைச்ச விஷயத்தை, இன்னமும் மறைக்க என்னால முடியாது.” என்றவன் அபர்ணாவை தன்முன் நிறுத்தினான்.
தன்னை வெகுவாய் தயார்படுத்திக் கொண்டு “கொஞ்ச நாளைக்கு முன்ன அப்பாவோட போட்டோவை, சங்கீதானு ஒரு பொண்ணோட வீட்ல பார்த்ததா, என்னோட கடைப்பையன் ராஜன் என்னிடம் வந்து சொன்னான்.
நானும் அந்த வீட்ல போய்ப் பார்த்தேன். அங்க அப்பா அந்தப் பொண்ணோட போட்டோல ஜோடியா இருந்தார். அப்பா சங்கீதாயென்ற பொண்ணோட பல வருஷமா வாழ்ந்திருக்கார். அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கா.” என்று சங்கடமாய்க் கூறவும் ஆளாளுக்கு ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“அவ தான் அபர்ணா… அபர்ணாவோட அம்மா சங்கீதா கொஞ்ச நாளைக்கு முன்ன ஆஸ்துமாவுல இறந்துட்டாங்க. அபர்ணா… இனி இந்த வீட்ல தான் இருக்கப் போறா” என்று விஷாகன் கூறவும் குண்டூசி விழும் அளவிற்கு அங்கே நிசப்தம் சங்கமித்தது.
சுகன்யா முகம் பொத்தி அழவும், சுகிர்தனோ ‘வெண்ணெய் தாழி உடைஞ்சிடுச்சு’ என்று எகத்தாளமாக இருந்தான்.
“என் பையன் இப்படிச் செய்யறவன் இல்லை.” என்று அன்னபூரணி அப்பத்தா வீடே அதிர கத்தினார்.
உதயகுமாரின் தம்பி செல்வகுமாரோ “என்ன விஷாகா… எங்கண்ணா இறந்துட்டாருனு இஷ்டத்துக்குக் கதை கட்டற. கல்யாண வீட்லயிருந்து இந்தக் குழந்தை உன் பின்னாடி தான் சுத்திட்டு இருந்தது.
நானும் எதுவும் கேட்ககூடாது. நான் ஏதாவது கேட்டா, என் மகன் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிட்டான்னு என்னைக் கேள்வி கேட்பனு வாயை மூடிட்டு இருந்தேன். எங்கண்ணா மேலயே பழிசுமத்துற?” என்றார்.
“ஆமா சித்தப்பா… நான் தான் அப்பாவிடம் அபர்ணா இருந்தா வாய் தவறி அவரை அப்பானு கூப்பிட்டுடுவானு நானே பார்த்துக்கிட்டேன்.” என்று உரைத்தான்.
“பொய் சொல்லாதிங்க மாப்பிள்ளை. அந்தப் பொண்ணு அபர்ணா அப்பானு உங்களைத் தான் கூப்பிட்டுச்சு.” என்று அன்னம் வந்தார்.
“யாரும் பார்க்கலைனு நினைக்காதிங்க. எங்க வீட்டுக்காரர் தண்ணியைப் போட்டுட்டுக் கிடந்தார். நான் என்ன பண்ணறாருனு எட்டி பார்க்க வந்தேன். நீங்களும் விருஷாலியும் சாப்பிட போனப்ப அந்தக் குழந்தையிடம் ‘சாப்பிட்டியா அபர்ணா?” நீங்க கேட்க அந்தப் பிள்ளை ‘சாப்பிட்டேன் அப்பா’னு உங்களைத் தான் சொன்னா. ஏன் இப்பவும் ‘வர்றேன் அப்பா’னு தான் சொன்னா.” என்று இத்தனை நாள் பழுதான விஷயமா பாம்பான விஷயமா என்று குழம்பி இன்று பாம்பு போன்ற விஷச்செய்தி என்று முடிவுக் கட்டிக் கொண்டார்.
“சரியா தெரியாம பேசாதிங்க அத்த. எனக்குப் பின்னாடி அப்பா இருந்தார். அபர்ணா அவரிடம் தான் பதில் சொன்னா.” என்று சற்றுக் காட்டமாக வந்தது அவன் பதில்.
“இந்தத் தோழிகள் கூப்பிட்டுக்கற மாதிரி ‘சாப்பிட்டேன்ப்பா’ என்று சொன்னானு நீங்க சொன்னதை அப்ப நம்பி தான், உங்க ஜாடையில இருந்தவளை பத்தி மூச்சுவிடாம இருந்தேன். நாம தான் தப்பா புரிஞ்சிட்டோம்னு வாயை மூடிட்டேன்.” என்று அன்னமும் குரல் கொடுத்தார்.
“அன்னம் என்ன பேசற?” என்று சங்கரன் பதறினார்.
“என்ன பேசறேன்னா.. என் வாழ்க்கை தான் ஒரு குடிக்காரனோட போச்சு. என் பொண்ணு வாழ்க்கையில எவளும் சக்களத்தி இருக்காளேனு பதறி பேசறேன்.” என்றதும் விஷாகனுக்கு அன்னம் பேசுவது அபத்தமாகத் தோன்றியது.
மாமியாரால் பேச்சு திசைமாறி தன் வாழ்க்கையை அழித்திடுமோ என்று பயந்தான். அடுத்த நிமிடம் தாய், தம்பி, விவேக்கிற்குத் தெரியும் என்று திடமானான்.
அதற்கேற்றார் போல விவேக், “அம்மா.. சும்மாயிரு.. மச்சான் மேல தப்பில்லை. அவர் என்னிடம் ஏற்கனவே சொல்லிட்டார்.” என்றதும் அன்னம் கூடுதலாகத் தான் கத்தினார்.
“என்னடா சொல்லிட்டார். அவருக்கு ஏற்கனவே குழந்தையிருக்கு மனைவி தவறிட்டா, அதனால அந்தப் பாரம் என் தலையில விழுது. எங்கம்மா அபர்ணாவை பார்த்துக்க மாட்டேங்கிறாங்க. ஏழை குடும்பமா இருந்தாலும் உங்களை நல்லா மேல ஏத்தி விடறேன் பொண்ணைக் கொடுங்கனு விருஷாலி கட்டிக்கிட்டாரா? அதுக்குத் தான் பணத்தை உன் அக்கவுண்ட்ல போட்டாரா? உனக்குக் குடும்பப் பாரம் தாங்க முடியாம என் பொண்ணைத் தள்ளிவிட்டுட்ட” என்று வெடித்தார்.
விருஷாலிக்கு போன் வாங்க விவேக்கின் அக்கவுண்டிற்குப் பணத்தைச் செலுத்தியதை இப்படி எடுத்துக் கொண்டு பேசுவாரென விஷாகன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.
அதை மீறி ‘போன் வாங்க கொடுத்ததாக’கூறினான். அங்கே அன்னம் காதில் அந்தப் பதில் எடுப்படவில்லை. சங்கரனுக்கும் பஸ்ஸில் விஷாகன் உதய் காலில் விழவும் மனதை நெருடியது.
செந்தூரன் தாத்தாவும், செல்லம்மா அம்மாச்சியும், “என்னயா இது இப்படிப் பிரச்சனையா இருக்கு. மாப்பிள்ளை தப்பானவருனு சொல்லிறியே ஐய்யா” என்று தங்கள் மகள் நிலையை எண்ணி கலங்கினார்கள்.
செல்வகுமாரோ “மாமா… எங்கண்ணா உதயகுமார் உத்தமர். அவர் வயசென்ன இந்தப் பொண்ணு வயசென்ன. விஷாகனோட பொண்ணு தான் அபர்ணா. இது முகஜாடையில தெரியலையா” என்று மீண்டும் மீண்டும் விஷாகனை அபர்ணா மகளென்றே முடிச்சிட்டார்.
“சித்தப்பா… அப்பா பொண்ணு தான் ஒரே முகஜாடை இருக்கணும்னு அவசியமில்லை. அண்ணன் தங்கச்சியும் ஒரே முகஜாடை இருப்பாங்க. அவ என் தங்கச்சி சித்தப்பா” என்றான்.
விஷாகனின் சித்தி தாமரையும் “நீங்க தான் உதயகுமாரோட மச்சான் பொண்ணுனு அந்தப் பிள்ளையைச் சொல்லறிங்க. ஊருல சுகன்யா அக்காவும் தான் இந்தப் பிள்ளையைச் சுற்றிட்டு இருந்தாங்க. இந்தா…. இப்ப வரை என் புருஷனோட குழந்தைனு வாயை திறக்கலையே. உன் தம்பி சுகிர்தன் அவனும் வாயை திறக்கலை.” என்று பேசவும் விஷாகன் அன்னையை நோக்கினான்.
அவரோ மகனின் பார்வையில் தான் நடக்கும் விபரீதம் அறிந்து “என் பையன் சொல்லறது உண்மை. இந்தப் பொண்ணு அபர்ணா என் வீட்டுக்காரருக்கு பிறந்தவ. இது எனக்கு முன்னவே தெரியும். கல்யாணப்பேச்சு எடுக்கறதுக்கு முன்ன, ஹாஸ்பிடல்ல இருந்தாரே அப்ப தான் அவருக்கு இன்னொரு பொண்ணோட தொடர்பு இருக்கறது தெரியும். இந்தக் குழந்தை அவங்க அம்மா சங்கீதா இறந்தப்பிறகு விஷாகன் தான் அழைச்சிட்டு வந்தான்.” என்று கூறவும், “அம்மா சொன்னது சரி. எங்கப்பாவுக்குத் தான் தவறான பழக்கம் இருந்துச்சு. இந்தப் பொண்ணை விட்டுடுனு சொல்லியும் இவன் தான் நடு இராத்திரி தூக்கிட்டு வந்து இவனுக்கு இவனே ஆப்பு வச்சிக்கிட்டான்.” என்று சுகிர்தனும் வாயை திறந்தான்.
“என்ன விஷாகன்… நீ ஏற்கனவே அதட்டி மிரட்டி பேசற ஆளு. உன் பார்வைக்குப் பயந்து எங்கண்ணி எங்கண்ணா மேல பழிப்போடுது. உன் தம்பி இந்த வீட்டுல நீ நாட்டாமை பண்ணறதால உன் பேச்சுக்குத் தலையாட்டலாம். எங்கண்ணா யோக்கியமானவர்.” என்று விஷாகனையே குறிவைத்து பேசினார் செல்வகுமார்.
அன்னபூரணி அப்பத்தாவோ, உதயகுமாரின் போட்டோவை பார்த்து “ஏலே ராசா உதயகுமாரு… உன் பிள்ளை உன் மேல பழிச்சுமத்தறான்யா.. இதைக் கேட்டும் உசுரோட வச்சியிருக்கியே. ஆத்தாவை அழைச்சிக்கக் கூடாதா.” என்று ஒப்பாரி வைத்தார்.
“அக்கா… நான் மோசம் போனேனே… என் பேத்தி கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு வீட்ல கிடந்தாளே. இப்படிச் சொந்தத்துல தானா தேடி வருதுனு உன் பேரனுக்குக் கட்டி வச்சி என் பேத்தி வாழ்க்கை அழிச்சிட்டியே…” என்று அவரும் புலம்பினார்.
செந்தூரன் தாத்தாவும் செல்லம்மா அம்மாச்சியும் கையைப் பிசைந்து நின்றார். பேரன் பக்கம் பேசுவதா? இறந்து போன மாப்பிள்ளை பக்கம் நிற்பதா? மகளே ஏதோ கூறுகின்றாளே… எதுவென்றாலும் சங்கடம் என்று அவர்கள் நொந்து போனார்கள்.
அன்னமோ “எனக்கென்னவோ உதயகுமார் அண்ணாவுக்கு உங்க குழந்தை என்றதால தான் அந்தப் பொண்ணைப் பேத்தியா அரவணைச்சார்.
அவருக்கு அப்பவும் மனசு நெருஞ்சி முள்ளா குத்த போய்ச் சேர்ந்துட்டார்.” என்று மேலும் ஒரு பழியைப் போட முனைந்தார்.
“இங்க பாருங்க அத்த… உங்க கற்பனைக்கு நான் ஆளுயில்லை. அபர்ணா எங்கப்பா உதயகுமாரோட பொண்ணு. நம்பினா நம்புங்க.
எங்கப்பாவுக்கு விபத்து நடந்த இடத்துல சிசிடிவி இருக்கு. சிக்னல் சிவப்பு போட்டும் அப்பா அசால்டா ரோட்ல வந்திருக்கார். எவனோருத்தன் அந்தபக்கம் பச்சை விழவும் ஸ்பீடா வந்து விபத்து நிகழ்ந்திருக்கு. போலிஸ் என்னிடம் வீடியோ புட்டேஜ் காட்டி கேஸை க்ளோஸ் பண்ணியது.
சும்மா இறந்ததுக்கும் நான் தான்னு பழித்தூக்கி போடாதிங்க.
உங்களிடம் நான் நல்லவன்னு ப்ரூப் பண்ணணும்னு எனக்கு அவசியம் இல்லை. விவேக்கிற்குப் பணம் போட்டது விருஷாலிக்கு போன் வாங்கித் தரச்சொல்லி கொடுத்தது.
விவேக்கிற்கு என் கல்யாணத்தப்பவே அபர்ணா எங்கப்பாவோட பொண்ணுனு தெரியும்.
எத்தனை நாள் மறைச்சி வைக்க முடியும்னு தான் இன்னிக்கு நம்ம சொந்தம் மட்டும் இருக்குனு உங்களை உட்கார வச்சி விளக்கினேன். யார் நம்பனிங்க நம்பலைனு எனக்கு எந்தக் கவலையும் இல்லை. எனக்கு என் விருஷாலி புரிஞ்சுக்கிட்டா போதும்.
விருஷாலி…” என்று அவள் புறம் திரும்பினாள்.
அவளோ நடக்கும் வாதம் விவாதம் கண்டு ஆடிப்போயிருந்தாள்.
விஷாகனோ அத்தை பேசியதால் விருஷாலி எப்படி எடுத்துக்கொள்வாளோ. இங்கு நிற்பவர் யாருமே தன்நிலை புரியாது பேசிக்கொண்டு இருந்தார்கள். தன் பேச்சை நம்பாமல் போனாலும் பரவாயில்லை. அபர்ணாவை தன்மகள் என்று இந்தச் சித்தப்பாவும் அன்னம் அத்தையும் பறைச்சாற்றுவது எரிச்சலை தந்தது.
திருமணமாகி சிறிது நாட்களில் விருஷாலி தன்னை எப்படிப் புரிந்து வைத்திருக்கின்றாளோ என்று பரிதவிப்பாய் அவளைப் பார்த்தான்.
-தொடரும்.
Praveena Thangaraj

Intersting sis pavam vishagan
Super👍👍👍
Sema sema interesting epi
Acho eppdi Ellamey serndhu Evan pakkam thirumbiduche kadavuley 🙄 eppo unmaiya kooda yaarum namba matengurangaley enna nadaka pogudho 🤔 endha vrushali enna solla poralo 😢
அச்சோ விருஷாலி சரியா புரிஞ்சுக்கிட்டா போதும்
interesting ……………………………waiting for next
Super super super super super super super super super super super super super super super
Interesting. Pavam visagan
Vishakan amma panathu thappu avan sollum pothe ivangalum pesi irukanum ipo pali vishakan mela. Ippo virushali mattum nalla purinjikitta pothum vera ethum venam
Omg. Shali try to understand vishakan situation. Sema twist. Interesting
Super super akka ❤️….. Waiting for next ud….
Ithu enna ya aniyayam ah iruku aparn udayakumar oda ponnu nu sonna avar per la pazhi podathiga nu.sollurvaga Vishagan ah mattum sandega padraga easy ah Shali enna sollura nu parpom
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super super super
Waiting for next episode sis
Very interesting
Intresting spr going waiting for nxt epi👌👌👌👌😍😍😍😍
நீயின்றி வாழ்வேது…!
(அத்தியாயம் – 27)
அட போங்கடா… லூசு புண்ணாக்குங்களா…? இன்னும் எத்தனை நாளைக்கு கண்டதே காட்சி, கொண்டதே கோலம்ன்னு பேசுவிங்க…?
அதான் அவங்கப்பாவோட பொண்ணுன்னு தெளிவா சொல்றான் இல்லை. போகட்டும் அந்த குழந்தையோட பர்த் சர்ட்டிபிகேட், ஸ்கூல் சர்ட்டிபிகேட் எல்லாம் இல்லையா விஷாகா….? இருந்தா எல்லாத்தையும் கொண்டு வந்த அவங்க மூஞ்சியிலேயே போடு. அபர்ணா ஸகூல் படிக்கிறாத்தானே…? உன் பொண்டாட்டியும் காலேஜ் ஃபர்ஸ்ட் ஹியர் வரைக்கும் போயிருக்காத்தானே….? இதெல்லாம் கொண்டு வந்து காட்டு. தவிர, எந்த பேச்சையும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதற்கான ப்ரூஃப்பை பக்காவ வைச்சிருக்கிறது தானே புத்திசாலியோட அடையாளம்.
அதெல்லாம் கொண்டு வந்து காட்ட வேண்டாமா…? வெறும் வாய் வார்த்தைக்கெல்லாம் இங்க மதிப்பில்லை விஷாகா…
இதற்கப்புறமும், உங்கப்பா உத்தமர், நீ அசுத்தமர்ன்னு
அட போஙட்ய்யா…. நீங்களும் உங்க கூறு கெட்ட நியாயமும்ன்னு போயிட்டே இரு
நம்பினா நம்பட்டும், நம்பலைன்னா போகட்டும்.
மத்தவங்களுக்காக, நம்ம வீட்டுப் பொண்ணை ஹாஸ்டல் ஹோம்ன்னு பாடாப்படுத்தறது
தப்பாயிடும்.
இதோ சங்கீதா, உங்கம்மா வாழ்க்கையில் தெரிஞ்சோ தெரியாமலோ குறுக்க வந்த பாவம்… அற்பாயுசுல போயிட்டா. அதே மாதிரி உங்கப்பனும் கட்டின பொண்டாட்டி இருக்கிறச்சவே கூத்தியாளை கொண்டு வைச்சுட்ட பாவம் ஆக்சிடன்ட்லயும், பெத்த புள்ளைங்க வாயிலயே அசிங்கப்பட்டு குற்ற
உணர்ச்சியிலயே போய் சேர்ந்துட்டான். இப்ப அந்த சின்ன பொண்ணுக்கு தெரிஞ்சும் தெரியாம நாம செய்யுற பாவம் உன்னையும்,
உன் குடும்பத்தையும் அடிச்சிடக் கூடாது, பின் தொடரக் கூடாது.
ஸோ… எல்லா உண்மையையும்
உடைச்சிடு.
என்னவொண்ணு, பழி ஓரிடம் பாவம் ஓரிடம்ங்கிற மாதிரி…
உங்கப்பன் செஞ்ச தப்புக்கு மொத்த தண்டனையும் உங்கம்மா தலையில வந்து
விடிஞ்சு, அவங்களோட மங்களத்தையும், சௌந்தர்யத்தையும் கொண்டு
போயிடுச்சு. போகட்டும்,
இனி நீ உங்கம்மாவையும், அந்த பொண்ணையும், உன் குடும்பத்தையும் நல்லா பார்த்துக்க… பார்த்துப்ப. உன் அருமை தெரிஞ்சவங்க உன் பின்னாடி நிக்கட்டும், தெரியாதவங்க வந்த வழி வாயை மூடிட்டு போகட்டும்.
😴😴😴
CRVS (or) CRVS 2797
அடுத்தவங்களுக்காக யோசித்து ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து செய்றவங்களுக்கு தான் கடவுள் அதிகமான சோதனைகளை தருவார் போல.
ஆனாலும் விருசாலியோட அம்மா கொஞ்சம் ஓவரா தான் பேசிக்கிட்டு இருக்காங்க அவங்க இஷ்டத்துக்கு கதைக்கட்டி பேசிகிட்டு இருக்காங்க கொஞ்சம் கூட அறிவே இல்லையா அவங்களுக்கு.
Achacho.. Vishaga