Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 16

வஞ்சிப்பதோரும் பேரவா! – 16

டிஸ்க்ளைமர்: இந்த அத்தியாயத்தில் வரும் வெகு சில காட்சிகள் முகம் சுழிக்கும்படி, சென்சிடிவ்வாக இருக்கலாம். அதை பார்த்து, ஆசிரியர் இவ்வளவு கொடூர எண்ணம் படைத்தவரா என்று எண்ண வேண்டாம்! ஏனெனில், அந்த காட்சி ஒரு உண்மை சம்பவம் ஆகும். நாமும், இந்த கொடூர குணம் படைத்த ‘மனிதர்’களுக்கு மத்தியில் தான் வாழ்கிறோம் என்று நினைவில் கொள்வோமாக!!!

அத்தியாயம் 16

அபிஜித் கூறியதைக் கேட்டு புருவம் சுருக்கிய ஹர்ஷவர்தனோ, “கமிஷனர் பொண்ணா? என்னாச்சு அபி?” என்று வினவ, “இந்த ஈனச்செயலை செய்றவங்களுக்கு சப்போர்ட்டா இருக்க பெரிய ஆளுங்களை தாண்டி, எப்படி இவங்களுக்கு தண்டனை வாங்கி தரதுன்னு நான் யோசிச்சுட்டே, அந்த ‘ஃபேன்டஸி நைட்ஸ்’ வெப்சைட்டை செக் பண்ணும் போது தான் கமிஷனரோட பொண்ணு வீடியோஸ் அதுல இருந்ததை பார்த்தேன். *****, அந்த வீடியோவை என்னால முழுசா பார்க்க கூட முடியல… பதினைஞ்சு வயசு பொண்ணு… நாலு முகம் தெரியாத ****ங்க சேர்ந்து நாசம் பண்ணி, அதோட விடாம, அந்த பொண்ணோட முகத்தை சிதைச்சு… அதுவும் பத்தாம, அந்த பொண்ணு உயிரோட இருக்கும் போதே, முகத்துல ஆசிட் ஊத்தி, தோலை பிச்சு எடுத்துருக்கானுங்க. ராஸ்கல்ஸ்…” என்று கோபத்தில் இன்னும் பல கெட்ட வார்த்தைகளை பேசினான் அபிஜித்.

அபிஜித் கூறும்போதே ஹர்ஷவர்தனிற்கு ஒவ்வாமை ஏற்பட, சில நொடிகளில் சமன்படுத்திக் கொண்டு, “கமிஷனர் பொண்ணையே எப்படி டா? இவனுங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட பயமே இல்லையா?” என்று மனம் வெதும்பியபடி வினவினான். அவனால் இன்னும் கூட அக்காட்சியை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

“இளம் கன்றுல்ல அப்படி தான் இருக்கும். கூட்டிட்டு வந்து ***** கட் பண்ணிட்டா சரியாகிடும். இதுல, அந்த தறுதலைங்க, அவங்க செஞ்ச காரியத்துக்கு நியாயம் வேற சொல்லிக்குறானுங்க! அந்த பொண்ணோட சோசியல் மீடியா அக்கவுண்டுல ‘கேட் ஃபிஷிங்’ மூலமா ஃபேக் ஃபோட்டோ போட்டு ரெக்வஸ்ட் குடுத்து ஃபிரெண்ட்ஷிப் தாண்டி லவ் வரை வந்து, நேர்ல மீட் பண்றப்போ, அந்த பொண்ணு ஷாக்காகி வேணாம்னு மறுத்துருக்கு. அதுக்கு தான் இப்படி பனிஷ் பண்ணாங்களாம் பன்னாடைங்க. இதை பெருமையா அதே வீடியோல வேற பேசியிருக்கானுங்க பா*****!” என்று பல்லைக் கடித்தான் அபிஜித்.

“கமிஷனருக்கு தெரியுமா அபி?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “ஹ்ம்ம், நேத்துல இருந்தே பொண்ணு காணோம் போல. வெளிய சொல்ல சங்கடப்பட்டு, அவரே தேடியிருக்காரு. இன்னைக்கு எதேச்சையா அந்த சைட்ல அப்லோட் ஆகியிருந்த புது வீடியோ பார்த்துட்டு, நான் தான் அவருக்கு தகவல் சொன்னேன். பாவம் மனுஷன், கதறி அழுதுட்டாரு. இடியட்ஸ், போய் சாத்துற சாத்துல உண்மையை முழுசா கக்கிடனும்!” என்று கோபத்தில் கொந்தளித்தான் அபிஜித்.

“அப்போ அவங்களை கண்டு பிடிச்சுட்டீங்களா?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “ஹ்ம்ம், கமிஷரோட நேரடி கண்காணிப்பு வேற… சோ, வேலை வேகமா நடந்து முடிஞ்சுடுச்சு. ஆனா, சிக்குனவங்க எல்லாரும் மந்தைல இருக்க ஆடுங்க மட்டும் தான். இவனுங்களை கோர்த்து விட்டு, பெரிய தலைங்களோட தறுதலைங்க எல்லாரும் எஸ்கேப்பாகிட்டானுங்க.” என்றான் அபிஜித் எரிச்சலுடன்.

“மாட்டுனவனுங்க ஏதாவது சொன்னாங்களா?” என்று சந்தேகமாக ஹர்ஷவர்தன் கேட்க, “ஹ்ம்ம், சொன்னானுங்க, எல்லா தப்பையும் அவனுங்க தான் பண்ணானுங்களாமாம். இடியட்ஸ்! இவனுங்க எல்லாரும் லோயர் மிடில் கிளாஸ். ஆனா, வீடியோ எடுத்த கேமரா விலை என்ன தெரியுமா? கோடிக்கும் மேல… பிளஸ், இதுல பல கோடி மதிப்பிலான டிரக்ஸ் யூசேஜ் வேற இருக்கு! இவனுங்களோட மொத்த வருமானமும் சேர்த்தா கூட அவ்ளோ வருமான்னு தெரியல. இதுல, எல்லாமே இவனுங்களே பண்ணதாம்! என்ன பண்றது? எல்லாம் பணம் படுத்தும் பாடு! இவனுங்களை பணத்தை காட்டி மசிய வச்சாங்களா, இல்ல மிரட்டி அடிபணிய வச்சானுங்களான்னு ஒன்னும் தெரியல.” என்று சோர்வுடன் கூறினான் அபிஜித்.

அவனை ஹர்ஷவர்தன் தட்டிக் கொடுக்க, “இனி, இந்த கேஸ்ல கமிஷரோட ஹெல்ப் நமக்கு இருக்கும்னு நினைக்குறேன், அன்லெஸ் அண்ட் அண்டில், அவரை யாரும் மிரட்டாம இருக்க வரை! சோ, நம்மளும் அதுக்குள்ள மௌனிகாவை கண்டு பிடிக்கணும், அந்த யஷ்வந்த்தையும் அவன் குரூப்பையும் தூக்கணும். இனி, யஷ்வந்த்தும் சும்மா இருக்க மாட்டான்னு நினைக்குறேன்.” என்று யோசனையுடன் அபிஜித் கூறினான்.

அதற்கு ஒத்து ஊதியபடி, “ம்ம்ம், ஆனா, இப்படி இவ்ளோ பெரிய தப்பை பண்ணிட்டு ஜாலியா சுத்திட்டு இருக்குறவனை எப்படி  குற்றவாளின்னு ப்ரூவ் பண்றது அபி. நடக்குறதை எல்லாம் பார்த்தா, எனக்கு அந்த நம்பிக்கையே இல்ல. இருந்த ஒரே ஆதாரம், மௌனிகா… அவளும் இப்போ மிஸ்ஸிங். இதோ, இந்த சம்பவம் எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு அபி.” என்று சோர்வுடன் ஹர்ஷவர்தன் கூற, “எவ்ளோ பெரிய ஜீனியஸா இருந்தாலும், அவனால எப்போவும் தப்பிச்சுட்டே இருக்க முடியாது ஹர்ஷா. தேர் இஸ் நத்திங் ஸச் அஸ் பெர்ஃபெக்ட் க்ரைம்! அவனும் ஏதாவது ஒரு சந்தர்பத்துல தப்பை தப்பா செஞ்சுருப்பான். அதை தான் நாம கண்டு பிடிக்கணும். பிடிப்போம்!” என்ற அபிஜித், “இந்த டைரி என்கிட்ட இருக்கட்டும் ஹர்ஷா. எக்ஸ்பெர்ட்ஸ் கிட்ட குடுத்து ஏதாவது க்ளூ கிடைக்குதான்னு பார்க்க சொல்றேன்.” என்று கூறிவிட்டு கிளம்பி சென்றான்.

அவனை வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்த ஹர்ஷவர்தனை வரவேற்றது நிர்மலமான முகத்துடன் படுக்க தயாரான பிரியம்வதா தான்.

அவளிடம் மறைத்த குற்றவுணர்வு லேசாக தலை தூக்க, “வது…” என்று பெயருக்கு கூட வலிக்காதவாறு மென்மையாக அழைத்தான் ஹர்ஷவர்தன்.

அதைக் கேட்டது போல பாவனையுடன் அவனை திரும்பி பார்த்தவள், மறந்தும் பேசவில்லை!

“சாரி…” என்று ஹர்ஷவர்தன் கூறுவதற்குள் மொத்த கோபத்தையும் அவன் மீது அந்நொடி இறக்கி வைக்க தயாரானவளாக, “எதுக்கு இந்த சாரி ஹர்ஷா? உங்க எக்ஸ்-கேர்ள் பிரெண்டு கிட்ட கால் பண்ண சொன்னதுக்கா, இல்ல மால்ல யாருக்கும் தெரியாம மறைஞ்சு நின்னு பேசுனதுக்கா, இல்ல அதை என்கிட்ட மறைச்சதுக்கா? ஒருவேளை, இது எதுவுமே இல்லாம, இன்னும் என்கிட்ட எதையாவது மறைச்சு, அதுக்காக இந்த சாரியோ?” என்றவளின் குரல் என்றும் இல்லாத வகையில் நிதானத்துடன் ஒலித்தது.

அதுவே கூறியது அவளின் கோபத்தின் அளவை!

அவள் அடுக்கிய ஒவ்வொன்றும் இப்போது ஹர்ஷவர்தனிற்கு எதிராக அவனை குற்றம்சாட்ட, நிஜமாக அவனிற்கு அச்சமயம் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை!

“வது, உன்கிட்ட மறைச்சதுக்கு காரணம்…” என்று சொல்ல வந்தவனை தடுத்தவள், “செய்றதை எல்லாம் செஞ்சுட்டு, அதுக்கு காரணம் சொன்னா சரியாகிடுமா ஹர்ஷா? இன்னைக்கு இவ்ளோ பெரிய விஷயம் செய்ய யோசிச்ச நேரத்துல, என் ஞாபகம் சுத்தமா வரவே இல்லையா?” என்றவள் ஒரு விரக்தி சிரிப்புடன், “அது இருந்துருந்தா, நான் வந்தது கூட தெரியாம, தலை தெறிக்க அங்க ஓடியிருக்க மாட்டீங்கள!” என்றாள் பிரியம்வதா.

அவளின் கேள்விகள் அனைத்தும் நியாயமாக இருந்தாலும், அதற்கு பதில் சொல்ல தெரியாமல் மௌனியானான் ஹர்ஷவர்தன்.

அவன் மனமே அவனை கேவலமாக திட்ட, “உண்மையை சொல்லணும்னா, என்கிட்ட உன் கேள்விக்கான பதில் இல்லை வது. அப்படியே என் மனநிலையை சொன்னாலும், அது உனக்கு காரணமா தான் தெரியும்.” என்றான் ஹர்ஷவர்தன்.

“சோ, பதில் சொல்ல மாட்டீங்க அப்படி தான?” என்று அதற்கும் பிரியம்வதா பேச, கடுப்பாகி விட்டது ஹர்ஷவர்தனிற்கு!

‘இப்போ பதில் சொல்லணும்னு சொல்றாளா இல்ல வேண்டாம்னு சொல்றாளா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

பிரியம்வதாவுமே ஒரு குழப்ப மனநிலையில் தான் இருந்தாள். அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளிற்கே சரிவர தெரியவில்லை.

ஆனால், ஏதோ தவறாக நடக்கப் போவதாக  அவளின் மனம் அடித்துக் கொண்டது உண்மை. அதன் பிரதிபலிப்பே, அவளின் இந்த குழப்ப மனநிலை.

ஆனால், அதே பிரதிபலிப்பு அவனிடமும் இருக்க வேண்டுமே!

அது இல்லாமல் போனதால் நடக்க இருக்கும் விபரீதங்கள் ஏராளம். ஒருவேளை, இவற்றை முன்பே அறிய கூடிய சூழலில் இருந்திருந்தால், இருவருமே இந்த பேச்சுவார்த்தையை தவிர்த்திருப்பரோ என்னவோ! விதியை, குழப்ப மனநிலையில் இருக்கும் இருவரால் வெல்ல முடியுமா என்ன?

விளைவு, ஹர்ஷவர்தனை அப்படி பேச வைத்தது!

“நிறுத்து பிரியம்வதா! சும்மா என்னையே குற்றம் சொல்லிட்டு இருக்க. நான் விளக்கம் குடுக்க வந்தாலும் தப்பு, வேண்டாம்னு ஒதுங்குனாலும் தப்பு. ச்சே, நான் இந்த கல்யாணத்தை செஞ்சது தான் பெரிய தப்பு! வேண்டாம் வேண்டாம்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன், யாராவது கேட்டீங்களா? இப்போ வந்து குறை சொல்லிட்டு…” என்று ஹர்ஷவர்தன் புலம்ப, அவனை ஒரு பார்வை பார்த்தவளோ, “நாங்க உங்களை கம்பெல் பண்ணதால தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்களா? அப்போ இத்தனை நாள் நீங்க நடந்துகிட்டது கூட கம்பெல்க்ஷனால தான்ல. உங்களுக்கு பிடிக்காம தான் இந்த வாழ்க்கையை அக்செப்ட் பண்ணிக்கிட்டீங்க அப்படி தான?” என்று அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு கேட்டாள்.

அவனின் வார்த்தைகள் அவளிற்கு அதை தானே கூறின. ஒரு கட்டத்தில், தான் மறைமுகமாக மனதிற்குள் பூட்டி வைத்த காதலினால் தான் அவனை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி விட்டோமோ என்று நினைக்கும் அளவிற்கு அவளை தூண்டிவிட்டன அவனின் பேச்சு!

அதை அறியாதவனோ, ‘ப்ச், எவ்ளோ சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டிங்குறாளே!’ என்ற மன உளைச்சலில், “ஆமா, எல்லாரும் சேர்ந்து என்னை கம்பெல் தான பண்ணீங்க? அம்மா ஒரு பக்கம், நீ ஒரு பக்கம்… போதாததுக்கு, ஆஃபிஸ்ல பிரஜன்னு எல்லா பக்கமும் பிரஷர்… என்னை யோசிக்க கூட விடல…” என்று சொல்லிக் கொண்டிருந்தவனை இடைவெட்டியவள், ‘போதும்’ என்று கைகளால் சைகை செய்து விட்டு, “எல்லாத்துக்கும் சாரி ஹர்ஷா. உங்களுக்கு பிடிக்காத கல்யாணத்துக்கு கம்பெல் பண்ணதுக்கு சாரி… உங்களை இங்க கூட்டிட்டு வந்ததுக்கு சாரி.” என்று அழுது கொண்டே சொன்னவள், பட்டென்று அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

“ம்ச், நான் எப்போ பிடிக்கலன்னு சொன்னேன்? என்னை முழுசா பேச விடுறாளா? அவளா ஒன்னை கற்பனை பண்ணிக்கிட்டு, அதுக்கு அவளே முடிவெடுத்துட்டு போயிடுறா! ச்சை, கல்யாணமானா இப்படி தான் புலம்பனும் போல!” என்று நீள்சாய்விருக்கையில் தஞ்சமடைந்தான். அதுவும் எப்போதும் போல அவனை வாகாக தாங்கிக் கொண்டது.

நடந்ததை அசைபோட்டுக் கொண்டிருந்த ஹர்ஷவர்தனின் மனமோ, ‘நீ கொஞ்சம் யோசிச்சு பேசியிருக்கலாம்!’ என்று காலங்கடந்த அறிவுரையை கூற, அவனும் அதை ஒப்புக்கொண்டவனாக மறுநாள் அவளை சமாதானப்படுத்துவதற்கு தயாராக, அவளோ அதற்கான அவகாசத்தை அவனிற்கு தரவில்லை.

மறுநாள் அவன் கண்விழித்த போது முதல் நாள் போலவே வெள்ளை நிற சீட்டு அவன் முன்னிருந்த மேஜையில் படபடக்க, ‘இவ என்ன இதையே தொடர்கதையா ஆக்கிடுவா போல!’ என்று சலித்துக் கொண்டே அதை எடுத்து படிக்க, முன்தினம் போல வேலைக்கு செல்கிறேன் என்று இல்லாமல், தந்தையை காண செல்கிறேன் என்று எழுதியிருக்க, ஹர்ஷவர்தனிற்கு வருத்தத்துடன் கோபமும் சேர்ந்து கொண்டது.

‘இதை என்கிட்ட சொல்லிட்டு போக கூட தோணலையா? ஏதாவது சண்டைன்னா இப்படி தான் உடனே அப்பா வீட்டுக்கு போயிடுவாளா?’ என்று எண்ணியபடி அவளிற்கு அழைப்பு விடுக்க, அது இன்னும் பிளாக் செய்த நிலைமையில் தான் இருந்தது.

அதில் அவன் சினம் மேலும் அதிகரிக்க, “இனி, நானா உன்னை கூப்பிட்டேனா பாரு!” என்று வாய்விட்டே கூறியவன், கோபத்தில் அலைபேசியை தூக்கி எரிந்து விட்டு, கட்டிலில் விழுந்து, உறக்கத்தை தொடர்ந்தான்.

தங்களிற்குள் நடக்கும் உரிமை போராட்டத்தில், கணவன் மனைவி இருவருமே அவர்களிற்காக காத்திருந்த ஆபத்தை மறந்து தான் போயிருந்தனர்!

யஷ்வந்த் பிரியம்வதாவிடம் ஹர்ஷவர்தனை பற்றிய தகவலை எதற்கு கூற வேண்டும் என்பதை இருவருமே யோசிக்க மறந்திருந்தனர். ஒருவேளை யோசித்திருந்தால், அந்த கயவனின் பார்வை இப்போது பிரியம்வதாவின் மீது என்பதை கண்டு கொண்டிருந்திருப்பரோ?

தொடரும்…

9 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *