புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-29

நீயின்றி வாழ்வேது-29

அன்னபூரனி அப்பத்தா அபர்ணாவை அடித்துக் கீழே தள்ளி, “இந்த அனாதை நாயை வீட்டை விட்டு வெளியே தள்ளிவிடு. டேய் சுகிர்தா.. இவளை ஏதாவது அனாதை ஆசிரமத்துல விட்டுட்டு வாடா. சும்மா எங்க அப்பா பேரு உதயகுமார். அம்மா சங்கீதானு சொல்லறா.

இவ இங்க இருந்தா இந்தக் குடும்பத்துல இருக்கறவங்களுக்கு மட்டும் தெரிந்தது. ஊருக்குகே தெரியப்படுத்துவா” என்று பேசவும் விஷாகன் பதறி வந்து “அப்பத்தா” என்று கத்தினான். அவனின் அதட்டலில் மிரண்டு அன்னபூரணி இரண்டடி பின்னால் நகர்ந்தார்.

“மனசாட்சி உள்ள மனுஷியாயிரு அப்பத்தா. உன் பையன் செய்த தப்புக்கு, அந்தப் பிள்ளை என்ன பண்ணுச்சு.

பெத்தவங்க செய்த பாவத்துக்குப் புள்ளைங்க தான் அனுபவிப்பாங்கனு சொல்வாங்க. இங்க நான் பாவத்தை இன்னமும் கூட்ட கூடாதுனு பார்க்கறேன்.” என்று எரிந்து விழுந்தான்.

“இங்க இருந்தா அபர்ணாவை சகிச்சிட்டு தான் இருக்கணும். யாருக்கும் இஷ்டமில்லைனா இப்பவே கிளம்புங்க” என்று காலியாக இருந்த சேரை எட்டி உதைத்தான்.

அது வாசலை தாண்டி, கேட்டில் சென்று விழுந்தது.
தனுஷூம் ரவியும் இத்தனை நேரமாய் அனைத்தும் கேட்டவர்கள் விஷாகனின் கோபத்தைக் கண்டு மிரண்டார்கள்.

தன் தோழன் கோபங்கள் எல்லாம் மிக அரிதானவொன்று. இலகுவாக அவனுக்குக் கோபம் வராது. அதை மீறி கோபம் வந்தால் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பதுகிணங்க இருக்கும்.

தனுஷ் சேரை எடுத்து வந்து வீட்டிற்குள் வைக்க, அப்பத்தாவை சுகிர்தன் அவனின் அறைக்குச் சென்று அமர்த்திக் கொண்டான்.

செல்வகுமாரும் தாமரையும் ஹாலில் அமைதியாக மாறினார்கள்.
அன்னமும் சங்கரனும், ‘பெண்ணை வேறு கொடுத்துவிட்டோம்’ என்று கீழ்படிந்து நின்றார்கள்.

“ஷாலி… அபர்ணாவை உன் பொறுப்புல விடறேன். விவேக் எதுனாலும் உடனே கால் பண்ணு. அநேகமா கால் பண்ணற அளவுக்கு இனி எதுவும் நடக்கக் கூடாது. அம்மா… அபர்ணா உன் பொண்ணு..” என்று கர்ஜித்து வெளியேறினான்.

தனுஷூம் ரவியும் விஷாகனோடு சென்றனர்.
அவர்கள் பள்ளிக்காலத்திலிருந்து பேசுவதற்காகத் தேர்ந்தெடுத்த பட்டறையாக ஒரு மைதானம் தேர்ந்தெடுத்தனர். அங்குத் தான் மூவரும் சென்றார்கள்.

ரவியோ “என்ன மச்சான்… இப்படிக் கோபம் வருது. நீ கோபப்பட்டுக் கடைசியா காலேஜ்ல பார்த்தது… உன் பார்வைக்குப் பயந்து மத்தவங்க பேசுவாங்களே தவிர உன்னைக் கோபப்படுத்தி யாரும் பார்க்க மாட்டாங்க.” என்று பேசவும் தனுஷோ, “நீ எட்டி உதைச்சதுல சேர் உடைந்து போச்சு டா.” என்று கூறினான்.

“ஏன்டா… முதல்ல சொல்லலை.” என்று ரவி கேட்டான். தனுஷோ பொறுமையாகச் சொல்வதாகக் கூறியது இதைத் தானோ? என்று அமைதிக்காத்தான்.

“பின்ன என்னடா… இப்ப வந்த விருஷாலி என்னைப் புரிஞ்சிட்டு பேசறா. எங்கப்பத்தா என்னைக் குற்றம் சுமத்துது.
அதுலயும் எங்க சித்தப்பா என் உசுரை வாங்கறார்.” என்று கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப்பட்டுப் பேசினான்.

ரவியோ “சிஸ்டர் எப்படி டா அன்டர்ஸ்டாண்ட் பண்ணினாங்க? சத்தியமா ஊர்ல கல்யாணத்துக்கு வர்றப்ப, உன் மேல சந்தேகம் வந்துச்சு.” என்றதும் விஷாகன் ஒரு கூர்ப்பார்வை ஆழ்ந்து வீசவும், “அப்ப டா… அப்ப.. இப்ப டவுட் இல்லை. உங்கப்பா செய்திருப்பார்.” என்று கூறினான்.

“மச்சான் தங்கச்சி செமையா பதில் தந்துட்டாங்க. டேய்.. தங்கச்சிக்கு கூடபிறந்த சிஸ்டர் இருக்கா?” என்றதும் விஷாகன் சிரிக்க, “ஒன்னுவிட்ட தங்கை” என்றதும் விஷாகன் கூடுதலாய் சிரித்தான்.

   “ஏன் இருந்தா கட்டிக்கவா? என்ற ரவி கிண்டல் செய்தான்.

“சே… லக்கி டா நீ” என்று தனுஷ் புகழ, “மச்சி மச்சான் சொல்லறது சரிடா. எப்படிப் பேசினாங்க. ‘இங்கயே இருந்து டிஎன்ஏ ரிசல்ட் பார்க்காம சும்மாவே என் புருஷனை குறை சொன்னிங்க நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்.’ வாவ் வாவ்…” என்று ரவி புகழ விஷாகனுக்கும் விருஷாலியின் நினைவு வந்து
ஒட்டி கொண்டது.

கண்ணில் காதல் வழிய, பெண்ணவளின் மீது கொண்ட மயக்கம் கண்ணில் தேக்கி, “எனக்கும் ஆச்சரியமா இருந்தது. என் விருஷாலி என்னைப் புரிந்து பேசியதை கண்டு மெய்மறந்துட்டேன்.

எப்படித் துள்ளியமா நான் முதல்ல போன் பேசியதுக்கும், இப்ப நடந்ததுக்கும் கனெக்ட் பண்ணி என்னைப் புரிஞ்சுக்கிட்டா. இதான் லவ்வா டா.

அச்சோ… ஏழு வருஷம் ஏன்டா ஊருக்கு போகாம இருந்தேன்னு இப்ப பீல் பண்ணறேன் டா. எப்படிப்பட்ட சூழ்நிலை… என்னைச் சந்தேகப்பட எவ்ளோ வாய்ப்பும் ஆதாரம் இருந்தும், என்னைத் துளியும் சந்தேகப்படலைடா.” என்று காதல் ததும்பத் ததும்ப அவன் சிலாகித்திட, தனுஷூம் ரவியும் மாறிமாறி பார்த்து நண்பனை ஏறிட்டனர்.

“அப்பா இறந்த சோகத்துல இருப்பனு கூட இருக்க வந்தோம். நீ என்னடானா லவ் மோட்ல இருக்க?” என்று ரவி சிரித்தான்.

“பச் அவர் இறந்ததும் ரொம்ப அப்செட் ஆனேன். என்னடா இது அபர்ணாவை அம்போனு விட்டுட்டாரேனு. இன்னிக்கு நேற்றை விடப் மச்பெட்டர். செய்த தப்புக்கு அகால மரணத்தைக் கொடுத்துட்டார் கடவுள்” என்று பேசியவன் நண்பர்களிடம் நிதானமாகத் தன் மனகாயத்தைப் பகிர்ந்தான்.

“சோ… இனி அபர்ணாவை தங்கையா வளர்க்க போற” என்று ரவி கேட்க ஆமென்றான்.

வீட்டுக்குத் திரும்பச் சென்றப்போது இங்கிருந்து கோபத்தோடு சென்ற நேரம் இருந்த அமைதி போலவே அப்பொழுதும் இருந்தது.

அன்றைய இரவு அப்பத்தா மகனின் போட்டோவை கண்டு கண்ணீர் விடுத்தார். மற்ற உறவுகள் உதயகுமார் இறப்பை பற்றிய பேச்சை விட, அபர்ணாவை தான் அதிகமாய் உற்றுஉற்று நோக்கி பேசினார்கள். விஷாகன் காதுக்கு எட்டாமல்…

மூன்றாவது நாள் ‘காடமர்த்துதல்’ செய்ய வீட்டிலிருந்து பால், அரைத்த வசம்பு, இளநீர், தேங்காய் சூடம் என்று வழிபட்டு, அதனைத் தகனம் செய்த இடத்தில் கொண்டு சென்று ஊற்றி, மீதி பாலை குளத்திலோ கடலிலோ கலக்க வேண்டும்.

விஷாகன் இருந்த ஏரியாவில் கடல் இருக்க அக்கடலில் கலந்தனர்.
கூடவே அஸ்தியும் கரைத்து முடித்தான்.

வீட்டுக்கு வந்ததும் செல்வகுமாரும் தாமரையும் கிளம்புவதற்குத் தயாராய் இருந்தனர்.

விஷாகன் யாரையும் இருக்கக் கூறி வற்புறுத்தவில்லை. அதனால் அவர்கள் கிளம்பினார்கள்.

அவர்கள் கிளம்பும் போது “சித்தப்பா… இப்பவே சொல்லிடறேன்… முப்பதாம் நாள் படையலுக்கு வந்துடுங்க. அப்பறம் அண்ணன் மகன் மதிக்கலைனு ஊர்ல சொல்விங்க. சித்தி உங்களுக்கும் தான் மறக்காம வந்துடுங்க.” என்று முழுக்கை உடையை மடக்கி விட்டு கூறினான்.

  “புறப்படறேன் அம்மா” என்று அன்னபூரணி அப்பத்தாவை பார்த்து சொல்லி செல்வகுமார் செல்லவும், இனி ஊர்ல இருக்கறவங்களுக்கு வைரஸ் மாதிரி உதயகுமாருக்கு பொண்ணு இருக்குனு பரவும்” என்று முனங்கியபடி அறைக்குள் நுழைந்தான்.

அன்னமும் சங்கரனும் விவேக்கும் கூடக் கிளம்பினார்கள். முப்பதாம் நாள் குடும்பத்தை அழைத்து வருவதாகத் தெரிவித்தான் விவேக். செம்பருத்தி அம்மாச்சி மட்டும் இங்கே இருக்கட்டும் அலைச்சல் வேண்டாமென்று கூறிவிட்டான்.

செந்தூரன் தாத்தாவும், செல்லம்மா அம்மாச்சியையும் விஷாகன் போக விடவில்லை. உங்களுக்குப் போயிட்டு போயிட்டு வந்தா அலைச்சல் தானே’ என்று கண்டித்து விட்டான்.

அன்னபூரணி அப்பத்தா தான் விடாமல் புலம்பினார். அடிக்கடி அபர்ணாவை கூர்ந்து பார்த்து மகனின் சாயலில் தெரிய லேசாய் “ஏ… பொண்ணு.. தண்ணி எடு’, ‘சுகன்யாவை கூப்பிடு’, ‘உங்கண்ணா சாப்பிட இன்னும் வரலை’ ” என்று பேச ஆரம்பித்தார்.

சுகிர்தன் அறையில் அன்னபூரணி அப்பத்தாவும், செம்பருத்தி அப்பத்தாவும் தங்கிட சுகிர்தன் மாடிக்கு நடையைக் கட்டினான்.

ஒரு வழியாக ஜெனிபரை சமாதானம் செய்து வீட்டு விவரத்தை சுருக்கமாகக் கூறினான். முன்பு போல நீட்டி முழக்கி கூறவிருப்பமில்லை.

விஷாகன் அபர்ணாவை தந்தையின் மகளென முன்னிலைப்படுத்தித் தெரிவித்தது மட்டும் அல்லாமல், வீட்டிலேயே வளர்க்க போவதாகக் கூறினான். மற்றபடி இம்முறை தரம் தாழ்த்தி குடும்பத்தை இகழவில்லை. மாறாக அண்ணன் நியாயவாதி, அண்ணி பாயிண்டா பேசி மத்தவங்களைப் பேசவிடாம பண்ணிட்டாங்க என்று மரியாதையாய் புகழ்ந்தான்.

சுகன்யா அறையில் செல்லம்மா அம்மாச்சியும், அபர்ணாவும் என்று உறங்கினார்கள்.

செந்தூரன் தாத்தா ஹாலே போதுமென்று உடலை நீட்டி படுத்துக் கொண்டார்.

விருஷாலியும் விஷாகனும் தனியறையில் சந்திக்க, சட்டை பொத்தனை கழட்டி ஹேங்கரில் மாட்டி, முகம் கைகால் அலம்பி வந்தான்.

விருஷாலி துண்டை கொடுத்ததும் லேசாய் முறுவலித்து வாங்கினான்.
இந்நேரம் அன்னம் அத்தையோடு சென்றிருக்க வேண்டும். நல்ல புரிதல் கொண்ட விருஷாலியால் விஷாகனின் வாழ்க்கை சீரானது.

அவளைச் சீண்டுவதோ காதல் யுத்தம் நடத்துவதோ தற்போது தவிர்த்தான்.

அவளுமே சூழ்நிலையை மனதில் கொண்டு அவனிடம் அவளாக வேறெந்த உணர்வையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் விஷாகனிடம் பேச கையால் சுரண்ட வந்து, அவன் எப்படி எடுத்துப்பானோ என்று கையை எடுத்திடயென்று, மூன்று நான்கு முறை செய்யவும், டிரஸிங் டேபிள் கண்ணாடி உதவியால் அறிந்தான்.

அவள் பக்கம் திரும்பி, “என்னாச்சு… என்னிடம் ஏதாவது சொல்லணுமா? அபர்ணாவை பத்தியா” என்றான்.

‘ஏதாவது சொல்லணுமா?’ என்ற நேரம் ஆமென்று தலையாட்டியவள் ‘அபர்ணாவை பற்றியா?’ என்றதும் இல்லையென்று மறுத்து தலையாட்டினாள்.

“என்ன பேசணும்.” என்று அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான். அதில் தோழமை என்ற உணர்வை தாண்டி காமத்தை வழங்கவில்லை.

“இல்லை… அன்னைக்கு நீங்க என்னிடம் ‘நீ கிராமத்து பிள்ளை இந்தளவு எப்படி முதிர்ச்சியா பேசற’னு கேட்டிங்க… நான் அப்ப சொல்லணும்னு இருந்தேன். அதுக்குள்ள அன்னபூரணி அம்மாச்சியால வெளியே போயிட்டிங்க.” என்று இழுத்தாள்.

“ஆமா… அன்னபூரணி அப்பத்தா அபர்ணாவை அடிச்சதா கோபம் வந்திடுச்சு. அன்னைக்கு ஏதாவது பேச நினைச்சியா?” என்று கேட்டான்.

“அன்னிக்குனு இல்லை… கல்யாணம் ஆனா நாள்லயிருந்து பேசணும் நினைச்சேன். ஆனா தயக்கம் இருந்துச்சு. இப்ப உங்களிடம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.” என்று கூறினாள்.

விஷாகன் ஆண்மகனாய் கர்வமாய் உணர்ந்து, “தயக்கம் இல்லைனா இப்ப பேச வந்ததைச் சொல்லு” என்று தாடையை நிமிர்த்தினான்.

விருஷாலி மெத்தையில் எழுந்தமர்ந்து, எனக்குப் புக்ஸ் படிக்கறது ரொம்பப் பிடிக்கும். எங்க ஊர்ல அரசாங்க லைப்ரரி ஒன்னு இருக்கு. எங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல லட்சுமி டீச்சருனு ஒருத்தங்க தான் எனக்கு லைப்ரரில படிக்கலாம்னு சொல்லித்தந்தாங்க. அப்ப பத்தாவது படிச்சேன். ஸ்கூல்ல கட்டுரை, கடிதம், பெரிய பெரிய தலைவர்களைப் பத்தி படிக்கப் பொதுஅறிவு சார்ந்த புத்தகம் எல்லாம் அங்க இருக்கும்னு சொன்னாங்க. அப்படிப் பள்ளிக்கூடத்துக்குத் தேவையா படிக்கப் போய்த் தான் அந்த லைப்ரரி எனக்குப் பழக்கம்.
நிறைய முறை அந்த லைப்ரரில புக் எடுத்துத் தலைவர்களைப் பத்தி நோட்ஸ் எடுத்து பேச்சு போட்டில முதல் பரிசுலாம் வாங்கினேன். அங்க எல்லாம் சர்டிபிகேட்டும் பென்சில் பாக்ஸும் பேனாவும் கொடுப்பாங்க.

பரிசா சின்னதா கிடைச்சாலும் அதுவொரு சந்தோஷம்ல.

லைப்ரரில ஸ்கூல் சம்மந்தமான புத்தகம் எல்லாம் கரைச்சி குடிச்சேன்.

நிறைய விஷயங்கள் மனசுல புத்தகம் படிக்கப் பதிந்தது. பிளஸ்டூ படிச்சிட்டு லீவுல வந்தப்ப, லைப்ரரி மேடம் தமிழரசினு ஒருத்தங்க கதை புக் படிக்கிறியானு விளையாட்டா கேட்டாங்க.

காதல் கதை படிச்சா அம்மா துடைப்பத்தால் அடிக்கும். இந்த வயசுல படிக்கக் கூடாதுலனு சொன்னேன்.

அவங்க படிச்ச தரமான நாவலா எடுத்து இதெல்லாம் மோட்டிவேஷன் கதை. ஒரு பெண் தனியா நின்று ஜெயிக்கற கதைகள். காதலும் இருக்கும். ஆனாலும் ஒரு பெண் எந்தெந்த சந்தர்ப்பத்துல எப்படி முடிவெடுக்கலாம்னு கதைமூலமாகத் தீர்வு சொல்வாங்க. நான் படிச்சிட்டேன். ஏதும் தப்பான கதைகள் இல்லை. தாராளமா படினு கொடுத்தாங்க.

நானும் வீட்ல வந்து வாசிச்சேன். பெரும்பாலும் அம்மா புக்கும் கையுமா இருந்தா என்னைக் கண்டுக்காது.

அதுவும் காசு செலவில்லாம லைப்ரரில புக் எடுத்தா திட்டாது.

அப்படித் தான் நிறையப் புக் வாசிச்சேன். முன்ன சிறந்த தலைவர்கள் சமூகத்துல மதிக்கதக்க பெண்களைப் பற்றிப் படிச்சி நல்லது கெட்டதை அலசற பக்குவம் வந்தால் ஒரளவு நல்ல புக் வாசிக்க வாசிக்க மெச்சூர்டு வந்தது.

எங்க தனக்காகப் பேசுணும், எந்தயிடத்துல மத்தவங்க பேச்சுக்கு கட்டுபடணும், எதுசரி எது தப்புனு புரிஞ்சிடுச்சு.” என்று கூறினாள்.

“சூப்பர் ஷாலி…. எனக்கெல்லாம் புக் படிக்கிற பழக்கமில்லை. உனக்கு அந்தப் பழக்கமிருக்கா. இனி பாரு வீட்ல புக்கா வாங்கிக் குவிக்கறேன்.” என்றான்.

“ஒரு நிமிஷம்… நான் முடிக்கலை.” என்று வெகுவாய் தயங்கினாள்.

ஏனோ அவள் கூறவந்த செய்தியே இனி தான் ஆரம்பம் என்று புரிய, “சொல்லு ஷாலிம்மா?” என்று கேட்டான்.

“பிளஸ் டூ ரிசல்ட் வந்தப்ப அடுத்துக் காலேஜ் போகற சூழ்நிலை வந்துச்சா. அப்ப வீட்டுல நிலவரம் சரியில்லைனு காலேஜ்ல சேரலை.

அப்ப தான் தமிழரசி மேம் என்னைக் கூப்பிட்டு என்னோட பிளஸ்டூ மார்க்கை கேட்டாங்க. நான் டோட்டல் மார்க்ஸ் சொல்லவும், ஏன் நல்ல மார்க் வாங்கிட்டு காலேஜிக்கு விண்ணப்பம் போடலைனு ஒரே திட்டு.

நான் வீட்டு நிலவரத்தை சொன்னேனா. அவங்க அதுக்கு நீ என்ன தனியார் காலேஜா படிக்கப் போற, கவர்மெண்ட் காலேஜில படிக்க ரொம்பப் பணம் எல்லாம் தேவைப்படாது. முதல்ல போய்க் காலேஜ் பார்மை வாங்கிப் பில் பண்ணுனு திட்டினாங்க. கவர்மெண்ட் காலேஜில படிக்கிறளவுக்குக் கூடப் பணம் வசதி அப்பாவிடம் கேட்க முடியாதுனு சொன்னேன்.

தமிழரசி மேடம் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, நான் உன்னைப் படிக்க வைக்கறேன் சொன்னாங்க.

ஆசையா இருந்தது… ஆனா செம்பருத்தி அம்மாச்சி திட்டுமேனு சொல்லவும், நான் அந்தக் காலேஜ்ல தான் முன்ன வேலை பார்த்தேன். நடுவுல ரொம்ப நேரம் நிற்க முடியலை, போதாதற்குக் கால்ல ஆணி வேற, வேலைக்குப் பழகிய உடம்பா… அதான் தெரிந்தவங்க மூலமா நம்மூர்லயே லைப்ரரிக்கு இன்சார்ஜரா வந்து உட்கார்ந்துட்டேன்.
இன்னிக்கு உன்ன அந்தக் காலேஜிக்கு அழைச்சிட்டுப் போய்ப் பார்ம் பில் பண்ணி பணம் கட்டிடலாம்.
நீ படினு சொன்னாங்க. வீட்ல விடமாட்டாங்கனு சொல்லவும், அவங்களா காலேஜ் பிரின்சிபால் ரூமுக்கு அழைச்சிட்டு போய் இந்தப் பொண்ணுக்குச் சீட் கொடுங்க, நான் சொல்லித்தர்றேன். எக்ஸாம் மட்டும் எழுத அலோவ் பண்ணுங்க ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி அதுக்குத் தனியா கடிதம் எழுதி சப்மிட் பண்ணி, புக் வாங்கித் தந்தாங்க. பஸ்ட் இயர் படிக்கிற மேம்கிட்ட எல்லாம் தனிப்பட்டு என்னை அழைச்சிட்டு போய் இப்படி ஒரு மாணவி படிக்கிறானும், ஏதாவது டவுட்ஸ் இருந்தா என் நம்பர்ல இருந்து அழைச்சி கேட்கறேன்னு சொன்னாங்க. மோஸ்டா அவங்க பிரெண்ட்ஸ் தான் என்றதால ஓகே ஆச்சு.

என் புக் எல்லாம் லைப்ரரில அவங்க பெர்ஸனல் ஸெல்ப்ல வச்சிப்பாங்க.
நான் தினமும் லைப்ரரில போய் நியூஸ் பேப்பர் வாசிக்கற மாதிரி போய்ப் பாடம் படிச்சி முடிச்சிடுவேன். அப்படியும் டவுட்னா மத்த மேமோட தமிழரசி மேம் நம்பர்லயிருந்து கேட்பேன்.

எக்ஸாமுக்கு மட்டும் எழுத வச்சாங்க. அப்ப தான் வனஜாவுக்கு நான் படிக்கிறேன்னு தெரியும். அவளும் யாரிடமும் சொல்லலை. நான் இப்ப பஸ்ட் இயர் படிக்கிறதா வீட்ல நினைக்கறாங்க. ஆனா நான் செகண்ட் இயர் படிக்கறேன். இப்ப செகண்ட் இயருக்கான எக்ஸாம் தான் எழுதிட்டு வந்தேன். எனக்கு இன்னமும் ஒரு வருஷ படிப்பு மட்டும் தான் இருக்கு.” என்றாள்.

விஷாகனோ ஆச்சரியமும் அதிர்ச்சியும் காட்டி, “இந்தக் காலத்துல இப்படியொரு கேரக்டர் எல்லாம் இருக்காங்கல… ஊருக்கு போனா லைப்ரரி மேம் அப்பறம் உங்க ஸ்கூல் டீச்சர் அவங்க பெயரென்ன?” என்றதும் “லைப்ரரி மேடம் பேரு தமிழரசி, ஸ்கூல் டீச்சர் லட்சுமி” என்றாள் விருஷாலி.

“ம்ம்… இரண்டு பேரையும் பார்த்து தேங்க் சொல்லறேன். நீ புத்திசாலி ஷாலி.” என்று நெற்றியில் முத்தமிட்டான்.

“எங்கண்ணாவுக்கும் நான் படிக்கறது தெரியாது. அண்ணா பிறவு என்னால தங்கச்சியைப் படிக்க வைக்க முடியலைனு கஷ்டப்படக்கூடாது.” என்று கூறவும், “சரி விவேக்கிடம் எதுவும் சொல்லலை.” என்று கன்னம் தட்டினான்.

விஷாகனிடம் தன்னிலையை விவரித்ததும் நிம்மதியாய் விருஷாலி படுத்துக் கொண்டாள்.

விஷாகனோ “நான் மறைச்ச விஷயத்தை விடக் கம்பேர் பண்ணினா, என் விருஷாலி மறைச்ச விஷயம் தப்பானாதேயில்லை. ஆனாலும் அவளுக்கு என்னிடம் மறைச்சதா பீல் பண்ணி ஷேர் பண்ணிருக்கா. நானும் இனி என் விருஷாலியிடம் சின்ன விஷயத்தைக் கூட மறைக்கக் கூடாது என்ற முடிவோடு படுத்தான்.

விதிக்கு உறக்கம் வராமல் இருவரின் தலையெழுத்தை எடுத்து மாற்றி எழுத காத்திருந்தது.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

ஹாய்.. வர்ற ஒவ்வொரு கமெண்ட்ஸும் என்ஜாய் பண்ணினேன்.‌ரிப்ளை தான் பண்ண முடியலை. பிரதிலிபி சைட், முகநூல், ஆடியோ நாவல், இத்யாதி சோஷியல் மீடியாவுல வர்ற அனைத்து கமெண்ட் கும் பார்த்து ரசிக்கின்றேன் ஆனா பதில் தர முடியலை. அதிலும் சைட்ல பிரதிலிபில வர்ற கமெண்ட்ஸ் ரொம்ப ரசிக்கின்றேன்.

. புக்குக்கு கதை எழுதறேன். ப்ரூஃப் பார்க்கணும். அந்த நேரம் விழுங்குது. உங்களிடம் காரணம் கூறினா மனசு ரிலாக்ஸ் ஆகும். அதான்‌ நன்றியுடன் வந்துட்டேன்.

ரைட்டர் அடுத்த ஆப்பு வைக்க வந்துட்டாங்க நீங்க படிங்க‌ லவ் யூ‌

20 thoughts on “நீயின்றி வாழ்வேது-29”

  1. எல்லாம் சரி ஆகி வர நேரத்துல ,பிரவீணாம்மா ஏன் ஆப்பு வைக்கிறீங்க.
    பாவம் விசாகன்& ஷாலிம்மா.
    சுகிர்தனுக்கு கொஞ்சமா ஆப்பு வைங்க அப்பதான் புள்ளை கொஞ்சம் திருந்தும்.

    கதை அருமையாக இருக்கு.
    தொய்வே இல்லாம அழகா நகர்த்தி செல்லறது சூப்பர்மா.
    வாழ்த்துக்கள்.
    Waiting for next epi .

  2. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 29)

    உண்மையிலேயே நல்ல புரிதல் விஷாலிக்கு… ஒருவேளை அந்த புரிதலும், மெச்சூர்ட்நஸ்ஸூம்
    பல புத்தகங்களை படிக்கிறதால கூட வந்திருக்கலாம்.

    வாழ்க்கையில ரெண்டு விதமான குரு இருப்பாங்க.
    ஒண்ணு அனுபவப்பாடம் சொல்லித் தரவரு…. இவர் கொஞ்சம் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்
    ரஃப் அண்ட் டஃப்பாத்தான் எதையுமே சொல்லி
    கொடுப்பாரு. இன்னொருத்தர்
    புத்தக குரு. இவர் ரொம்ப அமைதியாவும், ஆழமாவும் சிந்திக்க வைப்பதோட, வாழ்க்கையில எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையையும் எப்படி ஹாண்டில் பண்ணலாம்ங்குறதை ரொம்ப
    அருமையா சொல்லித் தருவாரு.
    எனக்கெல்லாம் நல்ல புத்தகங்கள் தான் மிகச் சிறந்த வழிகாட்டியே அண்ட் ஸ்ட்ரெஸ் பூஸ்டர்.

    அது சரி, ரைட்டர் அம்மா அடுத்து என்னவோ வெடிகுண்டு போட ரெடியாயிட்டாங்கன்னு தோணுது… அது என்னன்னு
    பார்க்கலாம். அவங்களுக்குத்தான் எதுவும்
    அமைதியா போனாலே பிடிக்காதே. அடுத்து என்ன ஆப்பை வைச்சிருக்காங்களோ தெரியலை. வெயிட் அண்ட் ஸீ !
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

  3. Super sis nice epi 👌👍😍 vishali evlo aarvama padichirka super 😘 endha mathiri help pandra teachers neraiya per erukanga pa 🥰 eppo enna sis dhideer nu twist vaika poreenga pls renduperaium pirichidadheenga pa🙏🤧

  4. wow super shali ippadium padikalam padika mudiumnu kamichita help panra teachers kedaikurathu la periya varam than. superb. ithuvarai ellam nalla poitu iruku aana vithi vachi etho twist kodukuringle sisy papom apadi ena panringanu periya aapu ethum vachidathinga vishakanuku

  5. 😍😍😍oru middle class la ponnuga expect panntra paiyan tha visagan… 😍 really rendu perume azhagu… Appada epdiyo abarna ini ingaye irupaa…intha sugir kum abarna kum ini bonding epdi irukum nu papom

  6. 😍😍😍 ovvoru middle class ponnum expect pantra character tha visagan 😍😍😍 such a cute pair ivanga 😍❤️ appadaaaa epdiyo ini abarna ingaye irupaaa entha problems ila…. Sugir abarna bonding epdi irukum nu terilaaa… Papom

  7. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  8. விருஷாலிய நெனச்சா ரொம்பவே பெருமையாவும் பிரம்மிப்பாவும் இருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!