” ஸ்ஆஆஆ… வலிக்குதுடி கொஞ்சம் மெதுவா.”
” இங்கே பேசு…. ‘எங்க கிராமத்த நான் அப்டி இப்டி. நாலா கம்பு சுத்துனா பயந்து யாரும் இருக்கமாட்டாங்கன்னுங்க’னு பில்டப்பு வேற. அவன ரெண்டு அடி அடிச்சுருக்கலாம்ல டா.” என பிரகாஷின் காயத்திற்கு மருந்திட்டு கொண்டிருந்தாள்.
” நானும் அவனை அடிக்க ட்ரை பன்னுனேன். ஆனா அவன் என் கைய முறுக்கிட்டான். வலி தாங்க முடியல அதான்.”
” அவன் ஏன்டா உன்னை அடிச்சான்.”
” அதான் எனக்கும் தெரியல. ஆமா, அவ்ளோ பேரு சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கும் போது நீ மட்டும் எதுக்குடி என்னை காப்பாத்த வந்த. “
“என் பிரண்ட ஒருத்தன் அடிக்க வரும்போது என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்.
அதான் அவனை மிரட்டி பயந்து ஓட வச்சேன்.” என இல்லாத காலரை தூக்கிவிட ,
” என்னது மிரட்டினியா. காமெடி பண்ணுனன்ல நெனச்சேன்.”
” என்னது காமெடி யா?” என முழிக்க,
” பின்ன அவன் உனக்கு பயந்தா ஓடுனான். நீ போடுற மொக்கைய பார்க்க முடியாமல் போனான்டி லூசு.”
கோபத்தில் அவன் தலையை கொட்ட ” ஸ்ஆஆஆ…வலிக்குதுடி”
” உன்னை நான் காப்பாத்த வந்தேன் பாரு என்ன சொல்லணும். உனக்கு இதெல்லாம் பத்தாது. இன்னும் ரெண்டு சேர்த்து போட்டிருக்கணும்.”
” அடிப்பாவி …விட்டா என்னை அடிக்க அவன கூட்டிட்டு வந்திடுவா போல….”
“போல…இல்லடா… கண்டிப்பா கூட்டிட்டு தான் வரப் போறேன். நீ வேணா பாரு . “
“கொலைகாரி பாவி” என அவன் அடிக்க, மீண்டும் அவள் அடிக்க, ஆனந்தியின் பின்னால் இருந்து குரல் வந்தது.
” என்ன நடக்குது இங்க…?”
” அப்பா” என்ற அதிர்ச்சியுடன் எழுந்து நின்றான், பிரகாஷ்.
கல்லூரியில் சேர்க்கும் போதே ‘பொட்ட பிள்ளங்க கூட பேசக்கூடாது. அப்படி தெரிஞ்சா சீவிடுவேன். ஞாபகம் வச்சுக்கோ…!’ என மிரட்டியது கண்முன் வந்தது.
இப்போது ஆனந்தியுடன் பேசியதை வேற பார்த்துவிட்டார். எப்படி ருத்ர தாண்டவம் ஆட போகிறாரோ என பயந்து கொண்டே இருந்தான், பிரகாஷ்.
பிரகாஷ் ‘அப்பா’ எனக் கூறியதும் முகத்தில் பெரிய புன்னகையோடு அவரைத் திரும்பிப் பார்த்தாள் ஆனந்தி.
” ஹாய் அங்கிள்.”
அவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்தவர் பிரமித்து தான் போனார்.
” மகாலட்சுமி மாதிரி இருக்கமா..” என அருகில் வந்தார்.
வெட்கத்துடன் தலை குனிந்து இருந்த அவளை உட்காரச் சொன்னார்.
அவள் உட்கார்ந்ததும் அவளுக்கும் பிரகாஷிற்கும் நடுவில் அமர்ந்தார் , அவர்.
பிரகாஷின் அப்பா ஆனந்தியை பார்க்க, சற்று பயந்து தான் போனான்,பிரகாஷ்.
” அது… வந்து…” என பிரகாஷ் ஆரம்பிக்கும்போதே அவனை ஒருமுறை முறைத்துவிட்டு ஆனந்தின் பக்கம் திரும்பினார்.
” உன் பேர்….” என அவர் ஆரம்பிக்க,
” ஆனந்தி அங்கிள்.பிரகாஷ் கூட தான் படிக்கிறேன்.” என்றாள் ஆர்வக்கோளாறாய்.
“ஓ….” என்றவாறு தலையை ஆட்டி,
“சொந்த ஊர் எது மா? உன் அப்பா அம்மா…” என ஆரம்பிக்க மீண்டும் ஆர்வக்கோளாறு…
“சென்னை தான் சொந்த ஊர் அங்கிள். அப்பா கார்மெண்ட்ஸ் வச்சு இருக்காங்க. அம்மா ஹவுஸ் வைஃப்.” எனக் கூறவும் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
“அங்கிள், கிளாசுக்கு டைம் ஆயிடுச்சு . நானும் பிரகாஷும் கிளம்பவா…?”
” இல்ல நீ போமா… பிரகாஷ் அப்புறம் வருவான்.” என கூற,
” சரி அங்கிள் பாய். பாய் பிரகாஷ்.” என அவர்களிடமிருந்து விடைபெற்றாள்.
ஆனந்தி செல்வதையே பார்த்தவர் அவள் மறைந்ததும் வியர்த்து வெடவெடத்து இருந்த பிரகாஷை பார்த்தார்.
” உனக்கு ஏன்ல இப்படி வேர்த்து இருக்கு.”
” அது… அது… ஒன்னும் இல்ல பா… அந்த பொண்ணு…” என தயங்க,
” அந்தப் பிள்ளய காதலிக்கிறீகளோ” எனக் கேட்ட உடன் பிரகாஷ் அதிர,
அவன் அப்பா பூதாகர சிரிப்பு ஒன்றை வெளியிட்டார்.
” எனக்கு அந்த பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்குல…” என சிரிக்க, பிரகாஷ் நம்பமுடியாமல் ‘அப்பா’ என்றான்.
💖💖💖
“என்னடா ஆச்சு… என்னைய கூப்பிட்டுட்டு இப்டி சைலண்டா இருந்தா என்ன அர்த்தம். ஏதாவது வாயைத்திறந்து பேசி தொலயேன்.”
” ஆனந்தி உனக்கே தெரியும். நான் யார்கிட்டயும் அதிகமா பேசமாட்டேன். பொண்ணுங்க கிட்ட சுத்தம்.
நான் பேசுர ஒரே பொண்ணு நீதான். உன்னை பார்த்ததும் ரொம்ப பிடிச்சது.
நாம ஏற்கனவே பார்த்து பழகின மாதிரி ஒரு பீல் வருது. அது ஏன்னு எனக்கு தெரியல.
இது லவ்வா ன்னும் புரியல. ஆனா எனக்கு உன்ன பிடிச்சிருக்கு.”
ஆனந்தியை பிரகாஷ் பார்க்க, அவள் இன்னும் அதிர்ச்சியில் தான் இருந்தாள்.
“எனக்கு புரியுது. நீ என்னை அந்த மாதிரி பார்த்திருக்க மாட்ட. நான் உன் கூட பேச ஆரம்பிக்கும்போது இப்டில்லாம் பேசுவேன்னு நான் கூட நினைச்சுப் பார்த்ததில்லை.
என் அப்பா கூட இங்க நான் படிக்க வரும்போது பொண்ணுங்க கிட்ட எல்லாம் பேசக்கூடாதுன்னு வார்ன் பண்ணி தான் அனுப்புனார்.
ஆனால் உன்ன பாத்ததுக்கு அப்புறம் அவருக்கு கூட உன்ன ரொம்ப பிடிச்சிருச்சு.”
சிறிது நேரம் அங்கு ஒரு மௌனமே நிலவியது.
அவன் அவள் பேசித்தான் காத்திருக்கிறான் என புரிந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“ஆக்சுவலி, எனக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல பிரகாஷ்.
எனக்கு உன்னை பிடிக்கும். எனக்கும் கூட உன்னை பார்த்ததும் ரொம்ப நாளா பழகுன ஃபீல் இருக்கு.
ஆனா காதல் அது இதுன்னு நான் நம்பல.
எனக்கு இந்த உலகத்தில் எல்லாமே என் அம்மா ,அப்பா, அண்ணா தான்.
அவங்க தான் என் உலகம். அவங்க பாக்குற பையன தான் நான் கல்யாணம் பண்ணுவேன். அது யாரா இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை.
ஆனா அவங்க பார்க்கிற பையன் மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன்.
ஒருவேளை அது நீயா இருந்தா கூட எனக்கு ப்ராப்ளம் இல்ல.
உனக்கு உண்மையாவே என்னை கல்யாணம் பண்ணிக்கனுமின்னு தோனிச்சுன்னா, என் அப்பா அம்மா கிட்ட வந்து பேசு.
அவங்களுக்கு பிடிச்சதுனா ஓகே. அப்படி இல்லைன்னா. சாரி, பிரகாஷ்.
என்னால எதுவும் பண்ண முடியாது. லவ் அது இதுன்னு மட்டும் சொல்லிடாத. நீ எவ்ளோ ட்ரை பண்ணாலும் என்னால முடியாது.”
பொறுமையாக பேசிய ஆனந்தி பிரகாஷுக்கு புதுமையாகவே தெரிந்தாள்.
அதை ரசித்தவன்.
” சரி ஆனந்தி. நான் அப்பாகிட்ட பேசி உன் பேரண்ட்ஸ் கிட்ட பேச சொல்றேன்.” என கூறியவன்,
” அதை விடு. இதை பத்தி எதுவும் யோசிக்காத. உங்க அப்பா அம்மா என்ன சொன்னாலும் நீ எனக்கு எப்பவும் ஃப்ரண்ட் ஆனந்தி தான்.
அவங்க நெகட்டிவா ரெஸ்பான்ஸ் பண்ணாலும் நீ எப்பவுமே என்கிட்ட ஃப்ரெண்ட்லியாவே இரு.
உன்ன மாதிரி ஒரு நல்ல பிரண்ட நான் எப்பவுமே இழக்க தயாராக இல்ல.”
அதற்கு புன்னகைத்தவள்,
” சரி, பிரகாஷ். நான் கிளம்புறேன். லேட் ஆச்சு.”என அங்கிருந்து நகர்ந்தாள்.
Interesting👍👍
interesting