நீயின்றி வாழ்வேது-39
சுகன்யாவும் அபர்ணாவும் கூடுதலாய் இருநாட்கள் தங்கிவிட்டு, பின்னரே தனது அம்மா வீடான செந்தூரன்-செல்லம்மா வீட்டுக்கு புறப்பட இருந்ததால், சம்பந்தி அன்னத்திற்கு சுகன்யா ஆறுதலாய் அங்கிருந்தனர்.
வீட்டில் தங்கும் சௌவுகரியம் இருந்தால் கூடவே இருந்திருப்பார். ஒரேயிடத்தில் தங்க சிரமமாய் இருந்தது. அபர்ணா வேறு காலை தூக்கி பக்கத்திலிருப்பவர் மேலே போட்டுச் சங்கடம் ஏற்படுத்துகின்றாளே. அதனால் அம்மாவீடான செல்ம்மா வீட்டுக்கும் அன்னபூரணி வீட்டுக்கும் பத்து பத்து நாட்கள் மாறிமாறியிருந்தார் சுகன்யா.
அபர்ணாவுக்குக் கிராமம் மிகவும் பிடித்திருந்தது. அதுவும் செந்தூரன் வீட்டில் ஓடையில் தான் எந்நேரமும் விளையாட்டு.
அதன் பின் இதோ நாளை முப்பதாம் நாள் படையலுக்கு மீண்டும் இங்கே விருஷாலி வீட்டுக்கு வந்தார்கள்.
கூடவே மருமகள் வாரிசை சுமந்து இருக்கின்றதால் கொஞ்சம் பேசி கரைத்து வீட்டுக்கு அழைக்க முயற்சியெடுக்க ஆரம்பித்தார்.
வனஜாவோடு கல்லூரிக்கு சென்று வந்த விருஷாலி சோர்வாய் தெரிய, “எதுக்குடா அலைச்சல் நம்ம வீட்ல ஏசில, வீட்லயிருக்கலாமே. இந்த மாதிரி நேரத்துல படிப்பு முக்கியமா?” என்றார் சுகன்யா.
“கண்டிப்பா படிக்கணும் அத்த. இல்லைனா டச் விட்டு போயிடும்.” என்று சிடுசிடுத்தாள்.
சுகன்யா அன்னத்திடம் “நான் என்ன சொல்ல அண்ணி… அங்க மகேஸ்வரியென்ற பிள்ளை வேலை பார்க்குது…. என்று ஆரம்பித்து அவள் தங்கள் வீட்டில் குடிவந்தது வரை ஒப்பித்தார்.
கொரியர் ஆபிஸ்ல என்ன சண்டையோ விருஷாலி கூப்பிட கூப்பிட நிற்காம விஷாகன் பைக்ல பின்னாடியே போனானாம். அந்தப் பொண்ணு தான் வளவனிடம் சொல்ல அவன் என்னிடம் சொன்னான்.
என் மகன் ஏதாவது மூச்சுவிடுவானா.” என்று கூறினார்.
அன்னமோ “அப்ப நீ சண்டை போட்டு நம்ம வீட்டுக்கு வந்தியாக்கும். அன்னைக்கு என்னவோ அவ்ளோ உறுதியா பேசின. இப்ப எங்கப்போச்சு உறுதி. இதுக்குத் தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். அந்தப் பொண்ணை வேலையிலருந்து எடு எடுனு” என்று அன்னம் பேசவும் சுகன்யாவுக்கு ‘ஏன்டா சொன்னோம்’ என்றிருந்தது.
அன்னம் ஒரு கட்டத்தில் விஷாகனை உதயகுமாரை வைத்தே பேச, “நிறுத்துமா. என் புருஷன் தப்பு பண்ணிட்டார். அதனால இங்க வந்து உட்கார்ந்துட்டேன்னு உன்னிடம் சொன்னேனா. அவர் எந்தத் தப்பும் பண்ணலை. நீ தான் பண்ணிட்டு இருக்க.
நல்லா வாழ்ந்த என் வாழ்க்கையில தினமும் போனை போட்டு அந்தப் பொண்ணு மயக்கிடும், ஊர் பேசும், உறவு பேசும், பொண்ணெல்லாம் ஏன் வேலைக்கு எடுத்தாருனு இஷ்டத்துக்கு நீ தான் பயத்தை உருவாக்குனா. பயம்னா அவர் என்னை விட்டு வேற பொண்ணோட முந்தானையில படுத்துக் கிடக்கிறது இல்லை.
என் அம்மா நீயே இப்படிப் பேசினா, அவரை இந்த உலகத்துல, ஊர்ல இருக்கறவங்க என்ன பேசி தொலைப்பாங்களோனு பயந்தேன்.
அவர் கௌவுரவமா இருந்தாரே இந்தப் பொண்ணால பேச்சு வாங்கிடுவாரோனு பயந்தேன்.
மாமா செய்த வேலைக்கு இவரையும் கேலி பண்ணி முகத்துக்குப் பின்னால பேசி சிரிப்பாங்களோனு பயந்தேன்.
நீ பயப்படற அர்த்தத்துல இல்லை.” என்று மூச்சு வாங்கினாள்.
“இம்புட்டு பேசறவ, அப்பறம் எதுக்கு இங்க வந்தியாம்.” என்று விவேக் கத்தினான். அவள் முதலிலிருந்து இங்க வந்ததைத் தான் அவன் அறிவானே.
“நாம ஒன்னு சொல்லி கணவர் அதைச் செய்ய மாட்டேங்கிறாரே என்ற தவிப்பு. என்னை விடக் கடையும் தொழிலும் முக்கியம். உங்க மச்சான் இங்க வந்தாரே ஒரு வார்த்தை பேசினாரா?” என்று அழத்துவங்கினாள்.
“நான் வேலைவிட்டு எடுத்தா நீ சந்தேப்படறது ஊர்ஜிதமாகிடாது.” என்று விஷாகனின் குரல் கேட்டது.
விவேக்கிற்குப் பின்னால் விஷாகன் வந்திருந்தான். இப்பொழுது தான் ஊரிலிருந்து வந்ததால் அவன் முகம் அசதியை காட்டிக்கொடுத்தது. ஆனாலும் பேச ஆரம்பித்து விட்டாயிற்று. இனி முடிவு தெரியவேண்டுமே என்று கேட்டான். அவன் பேசவும் சுகன்யா அன்னத்தை அழைத்து நாம வெளியே இருப்போம். இல்லைனா அதுக்கும் எகுறுவான்.” என்று மற்றவர்களும் வெளியேறினார்கள்
“சொல்லு… சண்முக அண்ணாச்சியோட பொண்ணும் மகேஸ்வரியும் பிரெண்ட். ஸ்கூல்ல பன்னிரெண்டோட நிறுத்திட்டா. நல்லா படிச்சவ, வசதி இல்லைனு நிறுத்திட்டு வீடே கதினு இருந்திருக்கா.
பொட்டுனு அவங்க அப்பாவும் இறந்து போகவும் தம்பிக்கு அவளுக்கும் வயித்தை கழுவ, அவளுக்குத் தெரிந்த சமையலை வச்சி மெஸ்கடையை ஆரம்பிச்சா.
நம்ம சண்முக அண்ணாச்சி தான் அப்பா இறந்தப்ப அந்தப் பொண்ணு கடையில சாப்பாடு வாங்கிபார்க்க சொல்லவும், ராஜன் மூலமா வாங்கியது.
ஒரு குடிக்கார கபோதி கையைப் பிடிக்கிறேன்னு சேலையை இழுக்க அந்த கடையை மூடிட்டு, நம்ம கடையில வேலைக்குச் சேர்ந்தா.
நீ வந்த அன்னைக்கு அவமேல விழுந்து கிடந்தேன். அப்ப கூட உனக்குச் சந்தேகம் இல்லை அதான் உண்மை. சட்டுனு சேர்ந்து பார்க்க மனசு அடிச்சிக்கவும் படபடனு ஆகியிருக்கும். அது மனுஷனோட பீலிங். நம்மளை ரெக்கவர் பண்ணிக்க நேரமெடுக்கும்.
அடுத்த நாள் சமாதானம் செய்தேன் தானே.
நீ என்ன பண்ணின. வேலை விட்டு எடு வேலை விட்டு எடுனு இதே தானே சொன்ன.” என்று புகைந்தான்.
“நான் பார்த்தேன். இதே ராஜன் மாதிரி யாராவது பார்த்து எல்லாரிடமும் பரவிட்டு இருக்கவா. ஒரு நல்ல பெயரை அழிக்க எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க தெரியுமா?” என்றுரைத்தாள்.
“அவனொரு பொடியன்… குறுக்கு புத்தியும் இருக்கறவன், விஸ்வாசம் இல்லாதவன். ஷாலி அப்படியேனா கூட மத்தவங்க நல்லவன்னு சொல்லணும்னு எனக்கு எந்தவசியமும் இல்லை. நீ புரிஞ்சா போதுமே.” என்றான்.
அவள் கையைப் பிடித்து “ஏன் விருஷாலி… நான் அபர்ணா ரூமுக்கு ஏசி பிக்ஸ் பண்ணினப்ப நீ என்ன சொன்ன. ‘அப்ப நீங்க நம்பலைல. அவ சொன்ன மாதிரி நான் ஏசி ரூம்ல இருந்ததுக்குத் தான் விரட்டினேன்னு நினைச்சு, அடுத்த நாளே ஏசி மாட்டறிங்க’னு சொன்ன.
நான் உன் பேச்சை மீறி ஏசி மாட்டியதுல அப்ப உன்னை நம்பலைனு அர்த்தமா?
அபர்ணா சின்னப்பிள்ளை, புதுசா கல்யாணமான நம்ம ரூமுக்கு அடிக்கடி ஏசி காரணம் காட்டி வர்றதை தவிர்ப்போம்னு தானே அவளுக்குத் தனியா மாட்டினேன்னு விளக்கினேன்.
நான் விளக்கிய பிறகும் நீ என்ன சொன்ன… ‘ஏசி மாட்டியதால என்ன நம்பலைனு தான் அர்த்தம்’னு சிணுங்கிட்டே இருந்த தானே.
இப்ப அதே மாதிரி ஒரு விஷயம். என் கேரக்டரை அழிக்கறாப்ள, நீ அந்தப் பொண்ணை வேலை விட்டு எடுன்னா… நான் எப்படி எடுப்பேன்.
நான் வேலைவிட்டு எடுத்தா… நீ சொல்லற மாதிரி நான் அவமடில விழுந்து கிடக்கறதை நான் ஒத்துக்கறதா ஆகிடாது.
ஏசி மேட்டர் சின்னது. ஆனா இது நம்மை இரண்டு பேரோட விஷயத்துக்குப் பெரிசில்லையா.
சின்ன விஷயத்துக்கே நீ பிடிவாதம் பிடிச்சி இரண்டு நாள் முகத்தைத் தூக்கிட்டு இருந்த. நான் அப்படி முகம் தூக்கலையே. நீயா தான் கோவிச்சிட்டு வந்த.
அங்கேயே இருந்தா எப்படியாவது சமாதானம் பண்ணிருப்பேன். இங்க ஊருக்கு வந்துட்டு, போனையும் எடுக்கலைனா, நான் என்ன பண்ணுவேன். அங்க அப்பா இல்லாத அவரோட கடை, என்னோட பிசினஸ், புதுசா வாங்கின கல்யாண செலவு, கருமாதி செலவு, ஏன் அன்றாடச் செலவுக்கும் ரொட்டேஷன் பண்ண பணம் தேவை. இதெல்லாம் எப்படிச் சம்பாதிக்கறதாம்.
கடையை அடைச்சிட்டா மொத்தமா வியாபாரம் படுத்துக்கும். அதனால தான் அதைக் கொஞ்சம் முடிச்சிட்டு இங்க வருவோம்னு நினைச்சேன்.
உனக்கும் விட்ட படிப்பை தொடர வசதியா இருக்கும்.” என்று பேசிக்கொண்டே அவளருகே வந்து பெண் பார்க்க நிறுத்திய அதேயிடத்தில் அவளை நிறுத்தினான்.
அன்று போலவே “இந்தபக்கம் கதவிருக்கா?” என்றான். இல்லையென்று வேகமாய் முன்பு போலவே தலையாட்டினாள்.
“இப்பவும் சொல்லறேன்… சென்னையில நம்பிக்கையான ஆளை வேலைக்கு வைக்கறதே கஷ்டம். பாரு ராஜன் எல்லாம் முதுகுல குத்திட்டான். சரி விடு அவனுக்கு அனுபவம் போதாது.
இந்தப் பொண்ணு பாவமில்லையா. வேலைவிட்டு எடுன்னா.. அதுவும் எங்க போகும். அன்னைக்கு வேற நீ போன் பண்ணினப்ப தான் அவ நம்ம வீட்ல இருந்தா. போனும் சோபால வச்சிட்டேன். உனக்கே தெரியும் நான் வீட்ல வந்தாலே சோபால போன் வச்சிட்டு நம்ம ரூம்ல தேடுவேன்” என்றவனைப் பேசவிடாமல் அணைத்து கொண்டாள்.
“நான் தப்பா நினைக்கலை.” என்று அழுதாள். அவள் தலையைக் கோதிவிட்டு அவள் அழுகை அடங்கும் வரை அணைப்பில் நிறுத்தியே சிகையை வருடினான்.
“உண்டாகியிருக்கேன்னு ஏன் டி சொல்லலை. அவ்ளோ ஈகோவா?” என்று கன்னம் பிடித்து நிமிர்த்தி, அவன் கண்ணைப் பார்க்க வைத்து கேட்டான்.
“ஈகோ எப்பவோ போயிடுச்சு. எங்க உங்களிடம் பேசினா உடனே உங்களைப் பார்க்கணும்னு ஆசை வந்துடுமோனு தான் பேசலை. அப்ப கூட மனசு கேட்காம தான் நைட் பதினொன்றுக்கு கால் பண்ணிட்டேன்” என்று கூற, அவளின் முகத்தில் வைரத்துளி போலக் கண்ணீர் துளிகள் ஜோலித்தது.
அதனை அவனது வன்கரத்தால் துடைத்துவிட்டு அவ்விடம் முத்தமென்னும் மருந்தை கொடுத்தான்.
நம்ம முதல் சண்டை கல்யாணமாகி நூறாவது நாள்ல ஆரம்பிச்சது. இப்ப தான் சண்டையெல்லாம் க்ளியர் பண்ணிட்டு போறேன்.” என்றான்.
“நான்?” என்று விருஷாலி திகைத்தாள். நாளையோடு அம்மாச்சிக்கு முப்பதாம் நாள் முடிச்சிட்டு ஊர் திரும்ப வேண்டாமா?’ என்று கேட்டாள்.
“இந்த மாதிரி நேரத்துல அம்மா வீட்ல தானே இருப்பாங்க. நீ இங்க இருந்து காலேஜ் போயிட்டு எக்ஸாம் எழுது. போனதடவை மாதிரி பர்மிஷன் வாங்கி எழுத போவியோ, இல்லை தொடர்ந்து காலேஜிக்கு இந்த வயிற்றை வச்சிக்கிட்டு போவியோ அது உன்னோட விருப்பம்.
ஆனா படிச்சிட்டு வா. நீ நல்லா சிந்திக்கிற. ஒர் டிகிரியோட வந்தா கொரியர் ஆபிஸை நீ நடத்த நல்லாயிருக்கும்” என்று இப்பொழுதே தன்னவளை முதலாளியாக்க போவதை கூறினான்.
சண்டை முடிவடைந்து வெட்கம் கொள்ளவும் அவளை மேலும் சிவக்க வைக்கும் விதமாக, “ஷாலிம்மா… ஆளு அங்கங்க லைட்டா சதை போட்டு செமயா இருக்க. இங்க தானே என் குட்டி உயிரை சுமக்கற.” என்று வயிற்றைத் தொட்டான், மெதுவாய் சேலையை விலக்கி முத்தமிட்டான் அவன் மீசை குறுகுறுப்பில் உடலெல்லாம் சிலிர்க்க ஆரம்பித்தது.
விருஷாலிக்கு இந்த மகிழ்ச்சியைப் பெறவே, தாய்மை உள்ளம் ஏங்கியது. அவனை இடையோடு கட்டிக்கொண்டவள், “உங்களை விட்டு எப்படியிருக்கறதாம்?” என்றாள் தவிப்பாய்.
“கார் வாங்கியிருக்கேன் ஷாலிம்மா. மாசம் மாசம் செக்கப் கூட்டிட்டு போக நானே கார் எடுத்து, அங்கயிருந்து இங்க வந்துடறேன். சரியா….” என்றான்.
“ஏன் எல்லாரும் வெளியே இருக்கிங்க. நாளைக்குத் தானே முப்பது” என்று வனஜாவின் கணீர் குரல் கேட்க, விருஷாலி வெட்கம் கொண்டாள். அனைவரையும் வெளியே தள்ளி இங்கே இவரோடு இந்த நிலையில் அவனை விடுவித்து ஓட பார்க்க, அவள் கையைப் பிடித்து “மெதுவா… நட” என்றான் விஷாகன்.
“அய்.. அண்ணா… வாங்க எப்ப வந்திங்க.” என்று கேட்டவள் தோழி முகத்தைக் கண்டு “அட முகம் குண்டு பல்பு போட்ட மாதிரி பளிச்சினு இருக்கு. அப்ப சமாதானம் ஆகிடுச்சா” என்று கேட்டு வந்தாள். விவேக்கோ வனஜா பேச்சில் சிரிக்க, விருஷாலியோ விவேக்கிடம் கண்ணாலேயே ‘வனஜா விஷயம் உங்க மச்சானுக்குத் தெரியுமா?’ என்று கேட்க தலையாட்டி இல்லையென்றான்.
‘சொல்லவா?’ என்று மிரட்ட கையெடுத்து கும்பிட்டு ‘இப்ப வேண்டாம்’ என்றான். அதற்கு இன்னமும் நாட்கள் இருக்கின்றது அதற்குள் நாளை முப்பதாம் நாள் படையலிட்டு செம்பருத்தி அம்மாச்சிக்கு சாமி கும்பிடணும்.
சொந்தங்கள் இறப்பிற்கு வந்தாலும் குடும்பம் ஒன்று சேர மகிழ்ந்தார்கள். ஒரு மரணத்தில் ஒருவர் சென்றால், பின்னாடியே ஜனனம் வந்து அவரிடத்தை நிரப்புகின்றதே. இங்கே செம்பருத்தி பாட்டி பேத்தி மணமானதை கண்டு நிறைவாய் தானே சென்றார்.
-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்

Super super super 🥰🥰😍
Super sis nice epi 👍👌😍 vrushali purinjikitadhu super pa eppdiyo onnu serndhachu very happy 🥰😍😘😘😘
❤❤❤
Oru vazhiya rendu perum samadhanam agitanga….super super….
அப்பாடா ஓரு வழியா விருஷாலி விஷாகன் சேர்ந்துட்டாங்க… சூப்பர்
அப்பாடா ஓரு வழியா விருஷாலி விஷாகன் சேர்ந்துட்டாங்க
Super. Shali good girl. Interesting
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Oru vazhiya sandai samadhanam la mudinchithu
நீயின்றி வாழ்வேது…!
பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 39)
அப்பாடா…! ஒருவழியா சண்டை முடிஞ்சு கொண்டையில இருக்கிற பூவை எடித்தாச்சு..
அட.. அதான்ங்க சமரசம் ஆகியாச்சுன்னு சொல்ல வந்தேன். விஷாகன் சொன்ன மாதிரி, அவ படிச்சு முடிச்சு வந்துட்டான்னா, பேசாம கொரியர் ஆஃபீஸை ஷாலியை பார்த்துக்க சொல்லிட வேண்டியது தான். அப்படி ஷாலி அந்த போஸ்டிங்குக்கு வந்துட்டா, அப்புறம் அந்த மகேஸ்வரி என்ன, அந்த ஈஸ்வரியே வேலைக்கு வந்தாலும் அந்த இடத்துல இனி சந்தேகம் முளைக்காது தானே..?
ஆனா, வேற இடத்துல, வேறொரு சண்டை புது சா முளைக்கும். இதுவெல்லாம் ஊடலும் கூடலும்… Just enjoy and Let’s get past that..!
😃😃😃
CRVS (or) CRVS 2797
Super super super super super super super super super super super super super super super super super super super super super
Wow superb superb superb epi athane namma shali eppadi vushakan purinjikama pova ava nalla yosichi pesuravalache ava bayam vera good .
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting. Waiting for next…. 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
விருஷாலி சின்ன பொண்ணா இருந்தாலும் விஷாகன் மேல நல்ல புரிதலோட இருக்கா
Super super sago