Skip to content
Home » இதயனின் ஹிருதயம் அவள்-2

இதயனின் ஹிருதயம் அவள்-2

இத்தனை வருடத்தில் தன்னை யாரிடமும் ஏன் தன்னை பெற்றோர்களிடம் கூட விட்டு கொடுக்காது தனக்கு உறுதுணையாக இருந்த மாமனா தன்னை அடித்தது என நம்ப முடியாமல் பார்த்தான்….

            மாமா இன்னும் அதிர்ச்சி விலகாமல் அழைக்க....

            அடித்தவன் நிலைமையோ அதற்கு மேல் தன் அக்கா மகன் , தன் மனைவியின் தம்பி என்பதற்கு மேல் தன் முதல் பிள்ளையாக நினைத்தவனை  அடித்து விட்டது கவலையாக இருந்தாலும் அவன் செய்த செயலால் இன்னும் கோபம் தான் வந்தது அவனுக்கு அவன் சாரதி....

       என்னடா மாமா இல்ல என்ன மாமான்னு கேக்குறேன் என்ன சொன்ன அந்த புள்ளை உன்ன  புரிஞ்சுக்கலையா நீ புரிஞ்சுக்கீட்டியா டா முதல்ல அந்த பொண்ண....

       என்ன மாமா இப்படி சொல்றீங்க எனக்கு புரியுது இப்போ கொஞ்சம் நிலைமை சரி இல்ல அதான் தள்ளி இருந்த சரி ஆய்டும் நினைச்சேனே தவிர அவளை பிரியனும்னு நினைக்கலையே .....

             நீ நினைச்சது எல்லாம் சரிதான் அதை தங்கச்சி கிட்ட சொன்னியா.....

            நான் ஏன் மாமா சொல்லனும் அவ சொன்னாலா என்கிட்ட எதாவது...

            நீ சொல்றது எதுவும் நல்ல இல்ல மாப்ள கேட்க ....

            அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது மாமா அவ அப்பவே ஹாஸ்பிடல் மன்னிப்பு கேட்டு இருந்த  கூட பிரச்சினை கொஞ்சம் சரி ஆய்டுக்கும் நான் அவ்வளவு தூரம் சொல்றேன் அவ பாட்டுக்கு அவங்க அப்பா கூட போனா அப்போ எனக்கு என்ன மரியாதை , எனக்காக கொஞ்சம் விட்டு குடுத்து போயிருக்கலாம் தானா .......

              சரிதான் மாப்ள நீ சொன்ன தான் சரி அந்த புள்ளை இன்னும் உன் காலுக்கு செருப்பு இருந்து இருக்கனும் இல்ல ....

                   மாமா...ஆஆ....

                   சும்மா கத்தாதடா நீ சொல்றது அப்படி தான் இருக்க நான் தான் அவ்வளவு தூரம் சொன்னேன் பொறுமை இருடா நீ நினைக்கிற மாதிரி இல்ல , அங்க நடந்தது வேற அப்படின்னு சொல்றேன் நான் சொன்ன எதையும் காதுல கூட வாங்கமா உன்னோட இஷ்டத்துக்கு பேசிட்டு இப்போ வந்து குதிக்கிற என்கிட்ட வந்து சொன்னாலன்னு முதல்ல அந்த புள்ள பேச வந்ததை கேட்டியா டா நீ ......

                 என்ன பேசுற மாமா நீ அவ என் அக்காவ அடிக்க வர , அம்மாக்கிட்ட அப்படி பேசுறா அப்போ நான் எதுவும் கேட்க கூடாது சொல்றியா....

              உன் அக்காவ,  அம்மாவ பேசுனான்னு சொல்றீயை  ஏன் அப்படி பண்ணான்னு கேட்டியா டா ஏன் நான் , மாமா அங்க தானா இருந்தோம் நாங்க ஒன்னும் பேசலையே ஏன் எங்களுக்கு பேச தெரியாத அப்படி இருந்தும் நாங்க ஏன் அப்போ அமைதியா இருந்தோம்ன்னு யோசிச்சுயா , சரி அப்போ கூட வேண்டாம் கோபத்துல இருந்த  இது நடத்து எத்தனை நாள் ஆச்சு அதுக்கு அப்புறம் கூட உனக்கு யோசிக்க தோணலையே படிச்சவன் தான நீ , ஏன்டா எங்க இரண்டு பேருக்கும் இல்லாத அக்கறையா டா உனக்கு .....

              இப்போ என்னதான் மாமா சொல்ல வர அப்போ என் குடும்பத்துல இருக்க யார்க்கிட்டையும் அவ எப்படி வேணா பேசலாம் ஆனா நான் ஏன் என்னனு கேட்டது தப்பு அப்படி தானா மாமா.....

             சூப்பர் டா மாப்ள சூப்பர் என கை தட்டியவன் என்ன சொன்ன உன் குடும்பமா , சரி தான் அப்போ அந்த புள்ள யாரு மாப்ள அது நம்ப குடும்பம் இல்லையா....

            இந்த கேள்வியை எதிர்ப்பாராதவன் அதிர ....

             சொல்டா இதயா அப்போ அந்த புள்ள யாரு....

                மாமா நான் அப்படி சொல்ல வரல மாமா .....

             ‌‌ நீ அப்படி சொல்லலா ஆனா அந்த புள்ளையா அப்படி தான் டா நீ நினைக்க வச்சு இருக்க அந்த பொண்ண நமக்கு யாரோன்னு   .....

                 சாரதி சொல்வது நூறு சதவீதம் சரி என்பது போலவே தான் இங்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தவளின் நிலையும் இருந்தது.....

                  அப்போ நான் யாரும் இல்லையா இதயன் உங்களுக்கும், நம்ம குடும்பத்துக்கும் "நம்ம குடும்பம்மா இல்லல்ல அச்சோ அது தான் உங்க குடும்பம் ஆச்சே அதுல தான் நான் இல்லையே மறந்துட்டேன் " இன்னும் கூட நான் யாரோன்னா அப்போ இதுக்கு என்ன மதிப்பு இதயன் என தன் கழுத்தில் இருந்த திருமாங்கல்யத்தை எடுத்து கையில் வைத்திருந்தவள் மனதில் ஆயிரம் கேள்விகள் அவள் தன்யா ....ஹீருதன்யா.....

ஹூருதன்யா இதயன் ……

3 thoughts on “இதயனின் ஹிருதயம் அவள்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *