Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -29

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -29

துஷ்யந்தா-29

      குளித்து முடித்து கிளம்பியவள் ஓலா புக் செய்தே புறப்படவும் கதிர் அதனை விதுரனுக்கு தெரிவித்தான்.

    ஆதித்யாவோ பிரகதியின் திருமணம் பற்றியே நினைவுகளில் முழ்கினார்.

    இறக்கும் முன் தன் கடைசி ஆசையென்று இவர்களை சேர்த்து வைக்க கூட முடியாது. அது பெரும் தவறு. இனி விதுரன் வாழ்வு எப்படியோ மலரட்டும் என்றவர் சாய்ந்தமர்ந்தார்.

     இங்கு இன்பா வீட்டுக்கு வந்தப்பொழுது வெள்ளி வளையாக வளைக்காப்பிற்கு அணிவித்து அழகு பார்ப்பதை வாங்கி வந்து அஞ்சலிக்கு அணிவித்தாள்.

   “சாரிங்க வளைகாப்பு வரை என்னால இங்க இருக்க முடியாது. அதனால இப்பவே பார்த்து ரசிச்சிக்கறேன். இது பாய் பேபி  கேர்ள் பேபி யூனிக்க போடற டிரஸ். இரண்டும் ஜஸ்ட் பார்ன் தான். இது அஸ் எ பிரெண்டோட கிப்ட்டா குழந்தைக்கு…” என்று தங்க சங்கிலியை நீட்டினாள்.

   அஞ்சலி வாங்க மறுக்க இன்பாவை சந்தித்து நின்றாள்.

    இன்பாவிடம் பிரகதி “டேய் வாங்கிக்க சொல்லு. எனக்குனு யாரும் இல்லை. அட்லிஸ்ட் உனக்கு போன் செய்தப்ப நீ சொன்ன இந்த நல்ல விஷயத்தால நானா வர்றப்ப கடையில வாங்கினேன். இது என்னோட சேவிங். வாங்கிக்கமாட்டியா.?” என்றாள் பிரகதி.

   அஞ்சலிக்கு ஏதோ பால்வாடை வீசவும் குமட்டிக்கொண்டு வாந்தி எடுக்க சென்றாள். அவள் நலன் பெற்றதும் பேச்சு தொடர்ந்தது.

    “சே சே அப்படியில்லை பிரகதி. வாங்கிக்கறேன். அதே மாதிரி உரிமையா நான் ஒரு கேள்வி கேட்கவா?” என்றான் இன்பா.

   “ம் கேளு” என்று டீயும் குக்கிஸும் சாப்பிட்டபடி சோபாவில் கால் மடித்து அமர்ந்தாள்.

    “எப்படி நீ இரண்டாவது திருமணம் பண்ணிக்க ரெடியாகிட்ட? அதான் யோசனையா இருக்கு. நீ விதுரனை வேண்டாம்னு முடிவெடுத்தது ஆச்சரியமா இருக்கு.

   என்னயில்லை அவரிடம். இப்ப திருமணத்துக்கு பெண் பார்த்தா கூட நான் நீனு போட்டி போடறாங்க. அவரோட வேல்யூ அப்படி. எப்படி நீ டிவோர்ஸ் வாங்கிட்டு போயிட்ட?” என்றான் இன்பா.

     சிறிது நேர அமைதியானது அவ்வறை. அஞ்சலியோ “சும்மாயிருக்க மாட்டிங்களா இன்பா. சாரி சிஸ் அவர் அப்படி தான் விதுரனை அடிக்கடி தூரத்துல பார்த்து மாசத்துக்கு ஒருமுறையாவது இப்படியே பேசிட்டு சொல்வார். அதான் நீங்க வந்ததும் கேட்டுட்டார்” என்று அஞ்சலி சகஜமாக்க முயன்றாள்.

    “நோ பிராப்னம் அஞ்சலி. கேட்டதில என்ன தப்பு.” என்றவள் ஆழ மூச்செடுத்து விட்டு இன்பா பக்கம் திரும்பினாள்.

    “நீ முதல்ல விதுரனை பற்றி என்னிடம் பேசினப்ப என்ன சொன்ன நினைவுயிருக்கா? பிரகதி அவன் ஒரு அரக்கன் நீ இங்க இருப்பது தெரிந்தா உன்னை விடமாட்டான். எங்கயாவது போயிடுனு.

   அப்ப சொன்னவன்… இப்ப மட்டும் எப்படி? அது மாதிரி தான். என்னால விதுரனை ஏற்றுக்க முடியலை. தீபிகா இப்ப இறந்துட்டதா ஆதித்யா தாத்தா சொன்னார். மேபீ அவளோட ஆக்டிவிட்டிஸ்காக இறந்திருக்கலாம். ஆனா யோசித்து பாரு உன்னை கட்டிக்கிட்டு அவ உங்க வீட்ல சண்டை போட்டாவது உன்னை பிரிச்சிட்டு போயி தனியாவது வாழ்ந்து இருப்பா தானே? இந்தளவு மோசமா மாறியிருப்பாளா? சாரி அஞ்சலி தீபிகா பேச்சை நான் இனி எடுக்க மாட்டேன்.

    இன்பா இது மட்டும் என்று சொல்ல மாட்டேன். இதுக்கு முன்ன விதுரன் ஆபிஸ்ல ஓர்க் பண்ணின ஒரு ரிசப்ஷன் பெண்ணோட கர்ப்பத்தை கலைக்க சொல்லி கட்டாயப்படுத்தி செய்துட்டான். இது தர்மா மூலமா தெரிந்தது.

    எங்கம்மா குடிச்ச ஜூஸ்ல ஆசிட் கலக்க வந்தவனை கண்டுபிடிச்சப்ப குரல்வளைய நெறிச்சான். நான் கூட விட்டுட்டான்னு நினைச்சேன். ஆனா என் கண் முன்ன கொன்னுட்டான். அவனோட ஆபிஸ்ல டெரரஸ்ல… ஆக்சிடெண்ட்னு பக்கவா மாற்றிட்டான்.

   அது கொலைனு தெரிந்தும் ஆதாரம் இல்லை. ஆனா எனக்கு தெரியும் அது விதுரனால ஏற்பட்டதுனு. ஒரு பொண்ணு போன்ல எனக்கு சாபமிடறா…

   முடியலை இன்பா. அவனோட நல்லப்பக்கம் இல்லைனுலாம் சொல்ல மாட்டேன். அதை விட கெட்ட பக்கம் அதிகம் பார்த்துட்டேன். அந்த இறந்தவன் சாகும் போது என்னை ஒரு பார்வை பார்த்தான். மறக்க முடியால.

    இப்பவும் நானா கல்யாணத்துக்கு தலையாட்டலை. என்னை ஆஸ்திரேலியாவுல விரும்பின எட்வின் மறுபடியும் வந்து கேட்டப்ப, நோ சொன்னேன். ஆனா அவன் என்… என்… என்னை இடைப்பட்ட நாளில் கவனிச்ச விதம் இம்பிரஸ் பண்ணிடுச்சு.

   கணவன் மனைவி என்ற வாழ்க்கைய நான் யோசிக்கலைனு சொன்னேன். இப்ப மேரேஜ் பண்ணிக்கோ எப்ப வாழணுமோ வாழலாம்னு சொன்னான். இரண்டு வருடம் கேட்டுயிருக்கேன்.

   இது நீங்க நினைக்கிற மாதிரி கல்யாணம் இல்லை. எனக்கு இதுல ஹாப்பியா சேடா இரண்டும் தெரியலை” என்றாள்.

   இன்பாவுக்கு கேட்டப்பின் ஏன் கேட்டோம் என்றானது.

     “சாரி பிரகதி… பிரகதி இப்படியொரு மேரேஜ் வேண்டுமா? நீ விதுரனோட வாழலாம்.” என்றான் ஆலோசனையாக.

    “அவன் நிழல் கூட என் கு.. வேண்டாம் டா. தீபிகா பற்றி நான் பேசலை. நீ விதுரன் பற்றி பேசாதே.

   அஞ்சலி உங்க டீ பிரமாதம். ஆமா உன் தங்கை எங்க? ஆளைக் காணோம். சின்ன தங்கச்சி செம வாயாடி அஞ்சலி. எனக்கு இன்பாவை விட அவ சின்ன தங்கச்சி ரொம்ப பிடிக்கும். எங்க அவ…? அம்மாவையும் காணோம் பெரிய தங்கை வீட்டுக்கு போயிருக்காங்களா?” என்று கேட்டாள்.

     “இல்லை… பெரிய தங்கை அவங்க கணவரோட வேலை விஷயமா விசாகப்பட்டினம் போயிட்டாங்க. அத்தையும் சௌமியாவும் ஹாஸ்பிடல் போயிருக்காங்க.” என்று அஞ்சலி இன்பாவை கண்டாள்

    இன்பாவோ மீதி தொடர்ந்தான் “சௌமி சின்ன வயசுல ஊருக்கு போனப்ப கிணற்றுல குதிச்சு குளிக்கிறப்ப வயிற்று ஏதோ கல்லு பட்டுடுச்சு. அது வயிற்றை கிழிச்சது
அப்போ மருத்துவமனையில பார்த்து தையல் எல்லாம் போட்டாச்சு. அதுக்கு பிறகு ஏஜ் அட்டன் பண்ணினப்ப ஒரே வலி. சாதாரணமா ஏற்படுகின்ற வலிதானேனு அம்மா கண்டுக்கலை. அதுக்கு பிறகு அடிக்கடி வலிக்குது சொல்வா. அப்பறம் பீரியட்ஸ் டேட் அது இதுனு அம்மா பெரிசுப்படுத்தலை. இப்ப ரீசண்டா திருமணம் செய்யலாம்னு முடிவெடுத்தப் பிறகு அஞ்சலியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போற அன்னிக்கு வயிற்று வலி வந்தது. டாக்டரிடம் அப்ப எதச்சமா காட்டினோம். வயிற்றுல கர்ப்பபை வீக்கா இருக்கு தெரிந்தது.

   என்ன செய்யறதுன்னு தெரியலை. ஆறு மாதமா அம்மா நடையோ நடைறினு ஹாஸ்பிடலில் ஏறியிறங்கி பார்க்க சின்ன வயசுல நடந்ததை சொல்லவும் அதோட பாதிப்பு கர்ப்பபைல இப்ப காட்டுதுனு சொல்லறாங்க.

   கல்யாணம் பண்ணினா குழந்தை எதிர்பார்ப்பாங்களே
எல்லா ஆண்களும் எதிர்பார்க்கிற செல்வம் இல்லையா. அதனால மருத்துவமனை வாசல் வாசலா ஓடறாங்க.

  முன்ன மாதிரி சௌமியா பேசறதில்லை. அமைதியாகிட்டா..” என்றான் கவலையாக.

    “சாரி டா. இன்பா… இந்த ஹாஸ்பிடலுக்கு போ. அங்க சுதன் என்பவர் இருப்பார். உனக்கு லேடி டாக்டர் வேண்டுமின்னா… மேக்னா அங்கயே இருக்காங்க. சரியான வழி பிறக்கும் டா.” என்று அட்ரஸ் எழுதி நீட்ட, வாங்கி படித்தவன் சிரித்துவிட்டான்.

   “என்னைய இங்க தான் அடிச்சி ஒரு மாசம் அடைச்சி வச்சார் விதுரன்.” என்றான்.

    “அதானே.. நீ போய் பிரகதி அனுப்பினானு சொல்லு. என்ன மாறினாலும் அந்த விதுரன் எனக்குனா கண்டிப்பா செய்வான்.” என்று பேசினாள்.

     இத்தனை கோபமிருந்தும் எத்தனை நம்பிக்கை. ‘எனக்குனா கண்டிப்பா செய்வான்.’ என்று தான் இன்பாவுக்குள் தோன்றியது. ஆனால் கேட்டுக்கொள்ளவில்லை. மதியம் உணவை முடித்து கொண்டு சற்று நேரம் சௌமியாவை எதிர்பார்த்தாள். தாமதமாகவும் புறப்பட்டாள்.

    “சரி இன்பா கிளம்பறேன். நாளைக்கு கிளம்பிடுவேன். பை… எந்த குழந்தை பிறந்தாலும் இன்பார்ம் பண்ணுங்க.” என்று அஞ்சலியிடம் விடைப்பெற்றாள்.

     அந்த நேரம் சௌமியா வரவும் அவளிடம் எதுவும் கேட்காதே” என்றான் இன்பா.

    “இதை நீ சொல்லணுமா டா.” என்று கட்டிக்கொண்டு நலன் விசாரித்தாள். பிறகு இன்பா தாயிடம் பேசிவிட்டு ஓலோ புக் செய்ய முயன்றவளை “அக்கா உட்காருங்க நானே டிராப் பண்ணறேன்.” என்று சௌமி கூற, பிரகதி மறுக்க, “பிரகதி அவளை கூட்டிட்டு போ. அம்மாவிடம் நான் பேசிக்கறேன். அவ இல்லைனா மருத்துவ டீடெய்ல் தெளிவா கேட்டுப்பேன்.” என்றதும் பிரகதி சௌமியாவோடு ஸ்கூட்டியில் புறப்பட்டாள்.
  
     வழி கூறவும் அதன் படி சென்றவள் விதுரன் வீட்டை கண்டு மலைத்தாள்.

   “சரி நான் கிளம்பறேன் அக்கா” என்று நழுவினாள்.

    வரலை என்று பிடிவாதம் பிடிக்க பிரகதி சுட்டுவிரல் காட்டி மிரட்டி வீட்டிற்குள் அழைத்து வந்தாள்.

   ஆதித்யாவிடம் இன்பாவின் தங்கையென அறிமுகப்படுத்தியவளை மேலிருந்து பார்த்து கொண்டே வந்தான்.

   உட்காரு மா.” என்று ஆதித்யா கூறி நியூஸ் பேப்பரை எடுக்க திரும்பினார்.  சௌமியா திரும்பி அமர போனவள் எதிரே விதுரன் நிற்க வலது பக்கமென நகர அவனும் அதே பக்கம் செல்ல, இடது பக்கம் சென்றாள். அவனுமே அதே நேரம் இடது பக்கம் நகர அவளை நிறுத்தினான்.

    “என்ன…?” என்றவன் அதட்ட “அக்கா..” என்றவள் மென்குரல் கொடுக்க “இப்ப போ” என்று வழிவிட்டான்.

    ஆதித்யா காட்டிய இடத்தில் அமர்ந்தவள் விதுரனை ஏறிட தயங்கி குனிந்தே இருந்தாள்.
 
    பிரகதி அவள் கையாலேயே காபி எடுத்து வந்து கொடுக்க நடுங்கி எடுத்தாள்.

   அவசரமாய் பருகி முடித்தவள் விதுரனை கண்டு நடுங்கி  சௌமியா அஞ்சுவதும், விதுரன் சௌமியாவையே குறுகுறுவென நோட்டமிட்டு இருந்தான்.

   “அக்கா… நான் கிளம்பறேன்” என்று ஓடினாள். செல்லும் நேரம் விதுரன் பார்வை தொடர்ந்தது.

      இரவு உணவு முடிகின்ற நேரம் “தாத்தா நாளைக்கு ஈவினிங் நான் கிளம்பறேன். உங்க ஆசைக்கு வந்துட்டேன். அங்க எட்வின் தனியா…” என்றதும் பேச்சை கத்தரித்தே “கிளம்பறேன் தாத்தா.” என்றதும் “சரிம்மா..” என்று அறைக்கு மெதுவாக நடந்தார்.

    விதுரனோ “தனியா கஷ்டப்படுவானா… இல்லை உன் பிரெண்ட் அனிலிகா கூட இருப்பானா?” என்றான்.

    “திஸ் இஸ் தி லிமிட் விதுரன். உங்க இஷ்ட கூந்தலுக்கு பேசாதிங்க.  யாரை தான் சந்தேக கண் கொண்டு பார்க்காம இருந்திங்க. இன்னிக்கு சௌமியாவை எதுக்கு அப்படி முறைச்சி முறைச்சி பார்க்கறிங்க. கண்ணுலேயே எடைப் போடறிங்களோ?” என்று கத்தினாள்.

     “அவளிடம் சின்னதா விளையாடினேன். அது உனக்கு தப்பா தோன்றுதா.” என்றான்.

    “என்ன விளையாடினிங்க.? அதான் அவ பயந்து ஓடினாளா? என்ன பண்ணி தொலைச்சிங்க?” என்று அதட்டினாள்.

    “உன்னோட காலையில் விளையாடினேனே அந்த விளையாட்டு” என்று அவன் உதட்டை வருடினான்.

    பிரகதிக்கு தூக்கிவாறி போட்டது. உடனே சௌமியாவுக்கு போனை போட்டு “சௌமி” என்று பேச, விதுரன் போனை பிடுங்கி மாடிக்கு ஓடினான்.

   “போனை கொடு டா. போனை கொடு” என்று பிரகதி கத்த, விதுரன் தலைக்கு மேலே வைத்து நைசாக மாடிக்கு அழைத்து சென்றான். பிரகதி அதனை கவனிக்கவேயில்லை.

    ஆதித்யாவுக்கோ இருவரின் இந்த விளையாட்டு மனதிற்கு இதம் தந்தது. அந்த நேரம் பிரகதி விதுரன் விவாகரத்தோ , பிரகதி எட்வின் திருமணமோ இரண்டுமே நினைவினில் இல்லை.

     அறைக்குள் சென்றதும் போனை மெத்தையில் எறிந்தவன் அவளை கட்டி அணைத்து மெத்தையில் தள்ளி, கைகள் இடையில் படர்ந்து அழுத்தம் தர பிரகதி விழி திறந்து தன் மேலிருந்த விதுரனை தள்ள முயன்றாள்.

    ஆனால் விதுரன் இதழை முற்றுகையிட்டு இதழ்நீரை பருகிட, போன் மணி அடித்தது.

   அதில் சற்று எரிச்சல் உண்டாகி கைகளை தளர விட பிரகதி அவனை தள்ளிவிட்டு போனை எடுக்க அதே நேரம் “லூசுதனமா ஏதாவது கேட்க போற. நான் ஒன்னும் பண்ணலை.” என்றான்.

   போனை வெறித்து “ஒ.. ஒன்னுமில்லை சௌமி வீட்டுக்கு போனதும் மெஸேஜ் பண்ணலையா அதனால கால் பண்ணினேன். சாப்பிட்டியா?… ஓகே குட் நைட்” என்று அணைத்தாள்.

    “இன்னொரு தடவை இப்படி விளையாடதே” என்றவள் போர்வை எடுத்து மெத்தையில் உறங்க போனவள் அதன் பின்னே தனது செய்கையின் மடத்தனம் புரிய, கீழே ஓடினாள்.

விதுரனோ இன்று காலையில் ஆரம்பித்த முத்தம் இரவும் உறங்கும் நேரம் கிடைத்த திருப்தியில் உறங்கினான்.

    பிரகதியோ இங்க இருந்தேன் என்னை பைத்தியமாக்கி வேடிக்கை பார்ப்பான் என்று திரும்பி திரும்பி உறங்க முயன்றாள்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

2 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *