Skip to content
Home » துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -30

துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -30

துஷ்யந்தா-30

காலையில் மாடிக்கு சென்று காபி பருக எண்ணியவள் விதுரனுக்கு பயந்து கீழேயே குடித்தாள்.

விதுரனோ நடந்து வந்தவன் அவளருகே சட்டமாய் அமர்ந்து “மாடிக்கு வரமாட்டனு தெரியும். பயம்… நேத்து மாதிரி கிடைக்கலைனாலும் எனக்கு பிராபிட் தான்” என்றவன் நொடியில் கன்னத்தில் முத்தம் வைத்து பேப்பரை எடுத்து கொண்டான்.

பிரகதியோ எழுந்து கொண்டு திட்டும் நேரம் ஆதித்யா வருவதை கண்டு அமைதியானாள்.

ஆதித்யா பேப்பரில் அதிர்ச்சியான சம்பவம் படித்தவராய் திகைத்து இருந்தார். சற்று முன் கண்ட காட்சியால் மகிழ்வதா அல்லது திகைப்பதா என்று குழம்பி போனார்.

இந்த பிள்ளை கல்யாணம் பண்ணப்போறதா சொல்லிடுச்சு. ஆனா இவன் பண்ணின விஷயம் வேற மாதிரி இருக்கு. இவனும் முறுக்கிட்டு போற மாதிரி இருக்கு ஆனா இப்ப வரை பிரகதிக்கு முன்ன கொடுத்த அதே மதிப்பு மரியாதை, பழகும் விதம் எல்லாம் அதே மாதிரி இருக்கே. இதுங்க ரெண்டும் விவாகரத்து ஆனதுங்கனு சூடம் எடுத்து சத்தியம் பண்ணினா கூட நம்ப முடியாதே. விதுரன்னு பேரை வச்சிக்கிட்டு எமகாதகன் வேலையை சரியா பண்ணறான். பாவம் இந்த பிள்ளையே நான் கூப்பிட்டு என்னவோ குழப்பி விடறேனா… என்னவோ ஈவினிங் கிளம்ப போகுதே. அதுவரை அந்த பிரகதியை இவனிடமிருந்து காப்பாத்து இறைவா” என்று வேண்டினார்.

ஹாலே அமைதியாக இருக்க எட்வின் போன் வந்தது.

பிரகதி அதனை எடுத்துக் கொண்டு தனக்குக் கொடுத்த அறைக்கு சென்றாள்.

“எப்ப வருவ பிரகதி. என்னால முடியலை. கொஞ்சம் குயிக்கா வா. சூயரா வருவ தானே?” என்றான்.

“வராம எப்படியிருப்பேன் எட்வின். அனிலிகா என்ன பண்ணற?”

“…..”

“ஓகே கேட்டதா சொல்லிடு. எதாவது ஹாண்டில் பண்ண கஷ்டமா? எப்படியும் நாளைக்கு அங்க இருப்பேன். உன் டவுட்டை அங்க கேளு விளக்கறேன். இங்க கால் பண்ணாதே.” என்று கூறி அணைத்தாள்.

விதுரன் அலுவலகம் கிளம்பியதும் மதிய நேரம் ஆதித்யா அறைக்கு வந்த பிரகதியிடம் “நான் இங்க உன்னை பார்க்க ஆசைப்பட்டது. இடைப்பட்ட நாளில் உன் மேல வந்த ப்ரியம் மட்டுமில்லை மா. விதுரனோட வாழ்வை சரிபடுத்திடணுமென்ற வேகமும் தான்.

நீ எட்வின், கல்யாணம் என்று பேசினப்ப என்னோட முழு நம்பிக்கையும் போச்சு.

ஆனா எனக்கு பேராசை போகலை மா. விதுரனோட நீ வாழ வழியில்லையா? நான் உன்னை இங்க சந்திக்க ஆசைப்பட்டதே உன்னை விதுரனோடு சேர்த்து வைத்து கண் மூடத்தான்.

இதுக்கு ஒரு வழி சொல்லு டா.” என்று இறைஞ்சினார்.

“தாத்தா… நீங்க சொல்லாமலே உங்க நோக்கம் புரியாம இல்லை. உங்க ஆசைக்காக நான் ஆளில்லை. விதுரனோட என்னைக்கும் சேரமுடியாது. எனக்கு என்… என்னோட சந்தோஷம் தான் முக்கியம்.” என்றாள்.

“கொஞ்சம் இந்த கிழவன் மேல கருணை காட்டு மா. ஏற்கனவே சசிதரன் மனைவியை பறிக்கொடுத்து குழந்தையை வச்சி தனியா இருக்கான். இப்ப விதுரனும் தனி மரமா இருக்கணுமா? என் வம்சம் இதோட முடிஞ்சிடுமா? என்று அழுதார்.

பிரகதிக்கு கரைந்திருக்கும்.. ஆனால் அவள் ஒன்று பேச அவர் ஒன்று பேச என்று பேச்சு நீடித்தது.

கடைசி வரை விதுரனோடு இருக்க மாட்டேன் என்றவளின் கையை பிடித்தார்.

அவளின் போன் அவரிடம் மாறியது. அதில் இருந்த புகைப்படத்தை ஆசைதீர கண்டு சரிந்தார்.

“தாத்தா எழுந்துருங்க… என்னாச்சு… அய்யோ எனக்கு பயமா இருக்கு.” என்று விதுரனுக்கு அழைத்தாள்.

“தாத்தா மயங்கிட்டார் ஹாஸ்பிட்டல் போறேன்.” என்று தகவலை கூறி அணைத்தாள். பிரகதி இங்கு வருவதற்கு முன் விதுரன் அங்கே இருந்தான்.

சுதன் சிகிச்சை அளிக்க தாயின் நினைவே தாக்கியது.

கோமதி சசிதரன் வந்து சேர்ந்தனர். மாலையில் சசிதரன் மற்றும் கோமதி பிரகதியை காண வரவிருந்தனர். ஆனால் இப்படி மருத்துவ வளாகத்தில் சந்திப்பு அமையுமென எண்ணவில்லை.

பிரகதியோ “அம்மா நினைவா வருது.” என்று அஞ்சினாள்.

“இதுக்கே இ.. இப்படின்னா… எங்க விது..ரன் இ..தே இடத்துல எத்தனை நினைவோட சந்திச்…சிட்டு இருக்..கான் தெரியுமா. முதல்ல எங்க அப்பா, சித்…சித்தப்பா-சித்தி எங்க தாத்…தா விமா..ன விபத்..துல ஒரு சேர இறந்ததில விதுரன் தனியா தான் இருந்தான்.

எங்கம்…மா ஆதித்யா தாத்..தா அப்போ இங்க உட..ம்பு சரியில்..லாம இரு…ந்தாங்க. அவ…னே எல். எல்லாம் பார்த்துட்டான்.

உங்க ம்மா போ..னப்ப கூட தவிச்..சான்.” என்று திக்கி கூறினான்.

“உங்க குடும்பம் இறந்தது ஆக்சிடெண்டில. அப்போ மற்ற பேஸன்ஜரும் தான் செத்திருப்பாங்க. எங்கம்மா தாத்தா எல்லாம் இவனால வந்த ஆபத்துனாலையும் கவலையினாலையும்.” என்று கத்தினாள்.

இதுவரை கோமதி சசியின் பேச்சை முதலிலேயே அடக்கிடுவார். இன்றோ பேசவிட்டு அமைதியாக, பிரகதி கூறியதில் குழம்பி தெளிவாக பதில் தந்தார்.

“விமான விபத்து ஏற்பட்டது நீ நினைக்கிற மாதிரி பேஸன்ஜரோட போனப்ப இல்லை மா. அது பிரைவேட் ஜெட். அதுல போனப்ப தான் சசி அப்பா, விதுரனோட அம்மா அப்பா, என் மாமனார் எல்லாரும் இறந்தாங்க. அது கூட விபத்தில்லை.
கொலை முயற்சி…” என்று கூறி நகர்ந்தார்.

பிரகதிக்கு இது புது செய்தி. இதுவரை விமான விபத்தில் என்றதும் அவள் நினைத்தது வேறு. இன்றோ பிரைவேட் ஜெட் என்றதும் வன்மம் எதிலிருந்து ஆரம்பித்ததோ கல்லூரி முடித்து வந்த விதுரனுக்கு அப்பொழுதே ஆபத்தா? என்று தான் யோசித்தாள். என்ன இருந்தாலும் என் சந்தோஷம் இனி இவன் கையில் அல்ல என்று முடிவெடுத்தாள்.

“விதுரன் தாத்தா ஏதோ பேசணுமாம். கூப்பிட்டார்.” என்று சுதன் சொல்ல, பிரகதியும் விதுரனும் ஒரு சேர நுழைந்தனர்.

இருவரையும் ஒன்றாக கண்டவர் கையால் ஆசிர்வதித்தபடி நிறைவாக உயிர் நீத்தார் ஆதித்யா.

“தாத்தா…” என்று பிரகதி தான் அழுதது. விதுரனோ இரும்பு போன்று நின்று “மற்ற பிரோசீஜர் பாரு டா.” என்று சுதனுக்கு கட்டையிட்டான்.

“இந்த நொடிக் கூட உனக்கு விதுரனா கட்டளையிட தான் மனசு சொல்லுது. துளி கண்ணீர் உன் தாத்ருவுக்காக விடமாட்ட?” என்று கேட்டாள்.

“லுக் எங்க தாத்ருக்கு நான் தான் எமன். விதுரன் என்றாலே எமன் தான். போ… எத்தனை பேரை கொன்றேனு லிஸ்ட் போடு. போடி… ஒரு துளி கண்ணீர் கூட வராது. எனக்கு ஏற்கனவே என் தாத்ருவோட ஆயுசு முடியும்னு தெரியும். வந்துட்டா… இரண்டு நாளில் வந்து தலைக்காட்டி இன்னிக்கு கிளம்ப போறேனு வெந்நீரை ஊற்றிட்டு இருந்தவ தானே போடி” என்று கத்தி தள்ளினான்.

விக்னேஷ் மற்றும் தர்மா சத்தமேயில்லாமல் மற்ற காரிய பணியை ஆரம்பித்தனர்.

பிரகதிக்கு எட்வின் கால் செய்ய “என்னால இன்னிக்கு வரமுடியாது எட்வின். இங்க கொஞ்சம் நிலைமை சரியில்லை.” என்று கூற விதுரன் எட்வின் என்ற பெயரை கேட்டு கோபத்தில் போனை தட்டி விட்டான். அது சிதறு தேங்காயாக சிதற விதுரனை பகைக்கவும் வழியின்றி அமைதியாய் நின்றாள்.

இந்த நேரத்தில் அவன் தான் மனம் தாளாமல் முரணாய் இருந்தால் தானுமா என்று சாந்தமானாள்.

இறப்புக்கு இன்பா சௌமியா வந்திருந்தார்கள். தீபிகாவின் தந்தை பரமகுரு வந்திருந்தார். ஆச்சாரியா குடும்பம் வந்திருந்தது. இன்னமும் ஆதித்யாவின் பங்கு வியப்பித்திருந்த எல்லா இடத்தின் ஆட்களும் வந்து சேர்ந்தனர்.

மாலை உடல் தகனம் செய்ய விதுரன் எரியூட்டினான்.

அன்று இரவு விதுரன் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு மாடிக்கு சென்றான். அது மட்டும் பிரகதி அறிந்தது. கோமதி சசிதரன் கூட இருக்க பிரகதி அன்று மாலை செல்ல இருந்தவள் சூழ்நிலை காரணமாக அமைதியாய் மாறினாள்.

போனும் உடைந்ததால் மற்ற எந்த விதத்திலும் எட்வினை அவள் அணுகவில்லை.

பிரகதிக்கு மனதின் ஓரத்தில் தன்னால் அந்த மனிதரின் ஆசையை நிறைவேற்ற இயலாது போகின்றதேயென்று விசனப்பட்டாள்.

இன்பாவோ சௌமியை பிரகதிக்கு துணையாக விட்டு சென்றான்.

அவளின் போனிலிருந்து கால் போகவும் மறுக்க, ஒரு மெயில் மட்டும் தட்டி விட்டாள். ஆதித்யா தாத்தா இறந்ததால் தன்னால் கிளம்பமுடியவில்லை. என்றும், போன் ரிப்பேர் என்றும் கூறியிருந்தாள்.

சௌமியே கோமதியையும் கொஞ்சமாய் சாப்பிட வைக்க போராடினாள். முடியாது போக ஜூஸை பருக வைத்தாள்.

யுகனை முதல் முறை பார்த்தும் அவனுக்கு வாங்கிய விளையாட்டு பொருளை கொடுக்கவும் முடியாமல் தவித்தாள் பிரகதி.

அடுத்த நாள் பிரகதி எழுந்து முகமலம்ப தர்மா யாரையோ திட்ட பதிலுக்கு வந்த குரல் எட்வின் என்று அறிந்து பிரகதி ஓடி வந்தாள்.

அங்கே எட்வினோடு அனிலிகா கைக்குழந்தையை வைத்து நின்றிருந்தாள்.

“யாரு நீங்க என்ன தர்மா பிரச்சனை?” என்று கோமதி வரவும், “என்னோட பிரெண்ட் எட்வின் அத்தை . இது அனிலிகா. அவளோட குழந்தை. ” என்று கூறினாள்.

பிரகதி நட்பு என்றதும் அமைதியாகிட பிரகதி அவர்களை அறைக்கு அழைத்து வந்தாள்.

“நீ வரலை என்றதும் பயத்துல கிளம்பணும் பிரகதி. பிறகு உன் மெயில் கிடைச்சது. ஆனாலும் இறப்பு செய்தி கேட்டு வந்தது வந்துட்டோம். உன்னை கூப்பிட்டுட்டு போகலாம்னு எட்வின் சொல்லிட்டார்” என்று பேசினாள் அனிலிகா.

விதுரனுக்கு எட்வின் இங்கே காலடி தடம் பதித்தானெ தெரியவும் கீழே இறங்க பிடிக்காமல் கத்தினான்.

ஆனால் இவனெல்லம் எனக்கு வில்லனா… எனக்கு நானே வில்லன் என்ற மமதையில் அரை போதையில் நடந்து வந்தான். அவன் நடந்து வர பிரகதிக்கே கிலி உண்டாகியது.

எட்வின் முன் நின்றாள். “என்ன கண்றாவிடி இது. அவனை பாதுகாக்க நீ நிற்கற” என்றான்.

“நாங்க கிளம்பறோம். எதுவும் பேசி காயப்படுத்தாதே” என்று கூறவும் “உன் அம்மா இறப்புக்கு நான் தான் காரணம் நான் தான் காரணம்னு குதிச்ச. இப்ப என் தாத்ரு இறப்புக்கு நீ காரணம்னு நான் சொல்லவா.. நீ மட்டும் தானே இருந்த. சொல்லு டி” என்று கத்த வீல்லென்ற அலறல் எட்வின் இருக்கும் பக்கமிருந்த, அனிலிகா கையில் பொத்தி வைத்த குழந்தை பையிலிருந்து சிறுகுழந்தைனின் அழுகுரல் கேட்டது.

விதுரன் நெற்றி சுருங்க அனிலிகாவினை காண, “விதுரன் அது பிரகதியோட சிநேகிதி அனிலிகா. அவ குழந்தை கத்துது. நமக்கு இனி எந்த சாபமோ, இழப்போ வேண்டாம். தயவு செய்து அமைதியாயிரு. மஹா அக்கா இருந்து அதட்டினா அமைதியாகியிருப்பல என்ன உன் அம்மாவா நினைச்சு அமைதியா இருயா.” என்று விதுரனிடம் யாசித்தார்.

விதுரனோ இனி ஒரு நிமிஷம் நீ இங்க இருக்க கூடாது. கிளம்புடி லண்டணுக்கு.” என்று அவள் கரம் பற்றி இழுத்து வீட்டு வாசலில் தள்ளினான்.

விக்னேஷிற்கோ தர்மாவிற்கோ “சார் வேண்டாம் சார்” என்றனர்.

சசிதரனோ ஏற்கனவே பட்ட சூட்டில் வேடிக்கை பார்த்தான். மகன் யுகனை அணைத்து கொண்டான்.

சௌமியோ “அக்கா… கஷ்டப்பட வேண்டாம். நாம போலாம் மதிப்பு இல்லாத இடம் குபேரனே இருந்தாலும் வேண்டாம் அக்கா. வாங்க” என்று அழைத்து சென்றாள்.

இன்பா வீட்டில் இருந்து ரெப்பிரஷ் செய்து இரவு விமானத்தில் லண்டன் நோக்கி பிரகதி பயணம் துவங்கியது.

கோமதி சசிதரன் கடமைக்கு பதினாறு நாள் அங்கே தங்க கட்டாயத்திற்குள் ஆளானர்.
விதுரனோ யாருமற்ற தனி தீவாக மொட்டை மாடியில் மூன்றாவது மது பாட்டிலை காலி செய்து கொண்டிருந்தான்.

-விதுரகதி தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “துஷ்யந்தா ஏ துஷ்யந்தா -30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *