Skip to content
Home » தேவதையாக வந்தவளே-3

தேவதையாக வந்தவளே-3

தேவதை 3

உள்ளே வந்தவள் தன் டேபிளின் மீது இருந்த நீர் பாட்டிலை எடுத்து அப்படியே தன் தொண்டையில் கவிழ்த்தாள்.. அதன் வேகத்தை அந்த தொண்டை வழியாக அவனால் பார்க்க முடிந்தது. ஆம் அவன் அதையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அவன் அவளைப் பார்க்க வரும்போது அவனுக்கு அப்படி தோன்றவில்லை. ஆனால் மூன்று மாதங்களுக்கு முன்பாகவே. இரவோடு இரவாக அந்த க்ஃரஷுக்குள் நுழைந்து கேமராவை ஆட்கள் மூலமாக பொருத்தி இருந்தான். அது வாசலில் இருந்து குழந்தைகளை பார்க்கும் விதமாக இருந்தது. அதில் தான் அவளை மட்டுமல்லாமல் ஷாலினியையும் அவன் பார்த்துக் கொண்டிருப்பது. இப்பொழுதும் அதன் வழியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

முதலில் கேமராவை பொருத்துவதற்கு மிகவும் தயங்கினான். ஆனால் அந்த பெண்ணின் மீது அவனுக்கு ஈர்ப்பு வந்த பிறகு. கேமராவை வைத்தே ஆக வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது. குழந்தையவளிடம் இவள் காட்டும் அன்பு அது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது தெரிந்து கொண்டு விட்டான். ஆனாலும் அவளை நெருங்குவதற்கு தயங்கினான்.

அவள் நெருப்பாகத்தான் இருந்தாள்.. எந்த ஆண்களையும் அவள் நம்பத் தயாராக இல்லை. அவள் முந்தைய காலத்தில் வடு அதுபோல அவளைப் பற்றி முழு விவரத்தையும் தெரிந்து கொண்ட பிறகும். அவளின் மீது அவனுக்கு காதல் வந்தது அவனுக்கே வியப்பு தான்.

அதை ஈர்ப்பு என்றெல்லாம் சொல்ல முடியாது. அவளை விட எவ்வளவோ அழகான பெண்களை அவன் பார்த்து கடந்து வந்திருக்கிறான். அவன் ஆளுமைக்கும் பணத்திற்கும் அவனை சுற்றி வந்த பெண்களை துச்சமாக எண்ணி இருக்கிறான். ஆனாலும் அவளுடைய தாய் அன்பு அவனை சிறிது சிறிதாக கரைத்து காதலில் விழ வைத்திருந்தது. ஷாலினிக்காக அவன் ஒரு முடிவை எடுக்க நினைத்திருக்க. அவர்கள் இருவரின் பாச பிணைப்பை கலைக்க வேண்டுமா என்று தயங்கி இருந்தவனுக்கு. இப்பொழுது கலைக்கத் தேவையில்லை என்ற உணர்வு. ஆனால் அதை அவள் ஏற்க மறுப்பால் என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனாலேயே அவளை நெருங்கி செல்ல அவன் தயங்கிக் கொண்டிருந்தான்.

………

உறங்கிக் கொண்டிருந்தவன் பிளாட்டின் அழைப்பு மணியில் எழுந்து சென்று தூக்க கலக்கத்துடன் கதவை திறந்தான். அவனுடைய தாய் விசாலாட்சி நின்று இருக்க. அவனுக்கு அருகிலேயே அவனுடைய மாமன் மகள் சசி.

“காலையிலேயே இவங்க ரெண்டு பேர் முகத்துல முழிக்கணுமா??, என்று மனதினுள்ளே சலித்துக் கொண்டவன். கொட்டாவி விட்டபடியே தலையை கோதினான். அவர்களை உள்ளே கூட அழைக்காமல் அமைதியாக திரும்பி நடந்து சென்றான்.

ஆங்காரமாக உள்ளே நுழைந்த விசாலாட்சி தன் திருவாயை அதே ஆங்காரத்துடன் திறந்திருந்தார் . அவன் காதை குடைந்து இன்னும் கொட்டாவி விட்டபடி சோபாவில் படுத்து விட்டான்.

“ஏண்டா நான் ஒருத்தி இங்க கத்துக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு அமைதியா படுத்தா என்ன அர்த்தம்??”, என்றார் கோபத்துடன்.

கண்களை விரித்து அவர்கள் இருவரையும் பார்த்தவன். மீண்டும் கண்களை மூடிக்கொண்டான்..

“அரவிந்தா நீ என் கோபத்தை ரொம்ப கிளப்புற. என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற?”, என்றார் விசாலாட்சி.

“அம்மா நைட் முழுக்க வேலை செஞ்சுட்டு விடியல்ல தான் தூங்கினேன். நீங்க தூங்குறவன டிஸ்டர்ப் செஞ்சது இல்லாம, கேள்வி வேற கேட்டுக்கிட்டு அதுக்கு பதில் சொல்லலைன்னு கோபப்படுறீங்க“, அவனிடம் அசட்டையான பதில்.

“இவளுக்கு ஒரு பதில் சொல்லு”, என்று அந்தப் பெண்ணை பிடித்து இழுத்து அவன் முன்னால் நிறுத்தினார்.

“என்னமா, நான் என்னமோ இவள ரேப் பண்ணி கழட்டி விட்டுட்டு வந்தா மாதிரி இல்ல பேசுறீங்க? “, கட்டுப்படுத்த நினைத்தும் அவன் கோபம் பெருக்கெடுக்க வார்த்தைகளை விட்டு விட்டிருந்தான்.

“மாமா”, என்று அவளும். டேய்”, என்று விஷாலாட்சியும் குரல் கொடுக்க.

“பின்ன என்னமா??. உங்களுக்கு நான் நிறைய வாட்டி சொல்லிட்டேன். எனக்கு தேஞ்சு போன ரெக்கார்ட கேக்குறதுக்கு விருப்பம் இல்ல. ஆனா உங்களுக்கு விருப்பம் இருக்கு போல திரும்ப திரும்ப அதையே கேட்டுகிட்டு இருக்கீங்க . எனக்கு இவளை கட்டிக்கிறதுல விருப்பம் இல்ல. இவள நான் அந்த மாதிரி பாக்கல. போதுமா? “.

“மாமா நான் உங்களுக்காகவே காத்துக்கிட்டு இருக்கேன் உங்க மேல உயிரையே வச்சிருக்கேன்”, அவளும் படபட என்று பேசினாள். அவன் இன்னொரு காதையும் குடைந்தான்.

“இங்க பாரு உனக்கு நல்லா என்ன பத்தி தெரியும். நான் எடுக்கிற முடிவு தான் பைனல். யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன். இந்த அம்மாவை கூட்டிட்டு வந்து கத்தினா பயந்துடுவேன்னு நினைக்காத. எதையும் என்கிட்ட திணிக்க முடியாது. நானா விருப்பப்பட்டா மட்டும்தான் அத நான் செய்வேன். அது உன் அத்தைக்கு நல்லா தெரியும். இவங்களுக்கே புள்ளை நானு. இவங்கள விட அதிகமான திமிரும், கொழுப்பும் பிடிவாதமும் எனக்கு நிறைய இருக்கு “, அதை அவன் கூறும் போதே,

“அப்படினா எனக்கு கொழுப்பு இருக்குன்னு சொல்ல வரியா? “.

“எனக்கு இருக்குன்னு தான் மாம் சொன்னேன். உங்களுக்கு இருக்கா இல்லையான்றது உங்களுக்கு தான் மாம் தெரியும் “, அசால்டாக கூறினான்.

“ இப்ப நீ சொன்னதுக்கு அர்த்தம் தெரியாதளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் கிடையாது”.

“சரி, நீங்க புத்திசாலின்னு எனக்கு நல்லாவே தெரியும் மாம்”.

“ இப்ப நீ கடைசியா என்ன சொல்ல வர? “.

“உங்களோட பையன் தானே உங்கள மாதிரி இருக்கேன்னு வச்சுக்கோங்க”.

“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு. இப்ப நீ கடைசியா என்ன முடிவு பண்ணி இருக்க?”.

“என்ன மாம் இப்பதான் நான் சொன்னேன். தெளிவா சொன்னேன், இருந்தாலும் கேக்குறீங்க தேஞ்சு போன ரெக்கார்டு கேட்க உங்களுக்கு விருப்பம் தான் போல. ஆனா பாவம் மாம் இவள். இவள் எத்தன வாட்டி ஹர்ட்டாவாள். அதை ஒரு வாட்டியாவது நீங்க யோசிச்சு பாத்தீங்களா??. நானும் உங்களுக்கு பொறுமையா புரிய வைக்க நினைக்கிறேன். ஆனா உங்களுக்கு தான் அது புரிய மாட்டேங்குது. எனக்கு இவளை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. நீங்க கேட்டுட்டீங்கன்னா இப்ப கிளம்புங்க”.

“சரி உன்னுடைய அந்த காதலி, அவ பேரு என்ன??, கவியோ சுவியோ அவள மனசு நினைச்சுகிட்டு இருக்கியா??,. கல்யாணம் பண்ணிக்கிட்டா சல்லி காசு கிடைக்காதுன்னு, நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு ஓடிப்போனவளையா நீ கல்யாணம் பண்ணிக்க போற?? “, நக்கல் இருந்தது அவர் குரலில்..

அவர் உயரத்துக்கு எழுந்து நின்றான் கைகளைக் கட்டிக் கொண்டு அவரை ஆழமாக பார்த்தான்.

“இல்ல”, என்றான் ஒற்றை சொல்லாய். ஆனால் அவன் பற்கள் நரநரத்துக் கொண்டிருந்தது.

“அப்புறம் வேற யார பார்த்து வச்சிருக்க? “.

“நான் யாரைப் பார்த்து வைக்கிறேனோ??, ஆனா கண்டிப்பா நீங்க சொல்ற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். தயவு செஞ்சு இவளை கூட்டிகிட்டு கிளம்புங்க”..

அவர் உடனே நீளி கண்ணீரை வெளியேற்ற தயாராக இருக்க.

“கிளிசரின் போட்டுட்டு வந்தீங்களா? “, என்று சலைக்காமல் கேட்டிருந்தான் அரவிந்த் .

“என்னோட கண்ணீரை பார்த்தா உனக்கு நடிப்பா தெரியுதா??. உன் மேல நான் உயிரையே வச்சிருக்கேன்”.

“சரி வச்சிருக்கீங்க. நான் இல்லைன்னு சொன்னா மட்டும் நீங்க கேட்கவா போறீங்க. அதுக்கு இப்ப என்ன பண்ண சொல்றீங்க?“.

“நான் சொல்ற பொண்ண கட்டிக்கோடா நீ நல்லா இருப்ப”.

“நடக்காத ஒன்னை ஏன்மா கேட்டுகிட்டு இருக்கீங்க. உங்ககிட்ட இருக்கிற அதே பிடிவாதம் தானே எனக்கும் இருக்கும். நீங்க சொல்றத நான் கேட்கணும்னு நினைக்கிற மாதிரி நான் சொல்றது நீங்க கேக்கணும்னு நான் நினைக்க மாட்டேனா? “.

“பழசை எல்லாம் பேச வேண்டாம். இப்ப புதுசா பேசலாம் “.

“ இப்ப புதுசா பேச ஒன்னும் இல்ல அதான் உங்களுக்கு புரிய வச்சுக்கிட்டு இருக்கேன்”.

இப்படியே இருவருக்கும் வாதங்கள் தடித்துக் கொண்டே போக.
“இவன் உண்மையில் தன்னைவிட கில்லாடியாக இருக்கிறான். இவனிடம் தன்னால் வாய்கு வாய் பேசி ஜெயிக்க முடியாது”, என்று உணர்ந்து கொண்டார் விசாலாட்சி.

“எப்படியோ போ. நான் பெத்ததுங்க ரெண்டும் தருதலைங்களா போயிடுச்சுங்க. என் பேச்சை பொண்ணும் கேக்கல புருஷனும் கேட்கல, பையனும் கேட்கல “, அவர் மீண்டும் அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டார். மூக்கை உறிஞ்சி அழுவது போல நடிக்க ஆரம்பித்து விட்டார் .

அவன் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக தன்னறைக்குச் சென்றவன். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து சமையலறைக்கு சென்றவன். தனக்கு தேவையானதை மட்டும் செய்து கொண்டான் . அங்கேயே நின்றபடி சாப்பிட்டவன். தன் கார் சாவியை எடுத்து அதைத் தன் ஆள்காட்டி விரலில் சுருட்டிக் கொண்டே. கண்ணாடியை கண்களுக்கு பொருத்தியவன்.
“நீங்க போகும் போது எதிர் வீட்ல சாவிய கொடுத்துருங்க. நான் வாங்கிக்கிறேன்”, என்று கூறி விட்டு சென்று விட்டான்.

“டேய் நாங்களும் கிளம்புறோம்”, என்று அவர் கூறிய வார்த்தைகள் எல்லாம் அவன் காதை எட்டி இருக்கவில்லை.

“மாமா அவர் மட்டும் செஞ்சி சாப்பிடுகிறாரு. எங்களுக்கு எதுவுமே செஞ்சு கொடுக்கல. ஒரு வார்த்தை சாப்டீங்களா இல்லையான்னு கூட கேட்கல”, சசிகலா தன் தந்தையிடம் அலைபேசியில் புகார் செய்து கொண்டிருக்க. அவள் தலையில் தட்டினார் விசாலாட்சி.

“நீ இப்படி தின்றதே குறியா இரு. அதான் அவன் உன்னை கண்டுக்கவே மாட்டேங்குறான். உன்னை கூட்டிட்டு வந்ததுக்கு என் வீட்ல வேலை செய்ற வேலைக்காரிய கூட்டிட்டு வந்தா கூட சரியா இருந்திருக்கும் போல”, என்று பேசியே அந்த பெண்ணின் மனதை காயப்படுத்தினார்.

அவள் முகம் சுருங்கியது. ஆனாலும் அவளுக்கு தன் மாமனை கட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அத்தையின் சொத்து தன் கைக்கு வரும். இதை சொல்லிக் கொடுத்தே வளர்க்கப்பட்டிருந்தால் அவள். இத்தனைக்கும் அவளுக்கும் அரவிந்துக்கும் வயது வித்தியாசம் அதிகம். வளர வளர அவன் அழகு அவளை ஈர்த்து விட. அரவிந்த் மீது அவளுக்கு காதலும் வந்து விட்டிருந்தது.. அதனால் மானம் ரோஷம் வெட்கம் எல்லாவற்றையும் ஓரம் இறக்கி விட்டு. “அத்தை எனக்கு ஒன்னு தோணுது நான் சொல்லவா?“, என்று கேட்டு நின்றால் சசிகலா.

“சொல்லு சொல்லித் தொலை”.

“இந்த வீட்டு சாவியை நாமளே எடுத்துக்கிட்டு போயிடலாம். மாமா வீட்டு சாவி இல்லாம நம்ம வீட்டுக்கு தான் வந்தாகணும் . அதாவது உங்க வீட்டுக்கு தான் வந்தாகணும்”, என்றவளை கேவலமாக பார்த்தார் விசாலாட்சி.

“ஐயோ என் அறிவு கொழுந்தே. இதை நான் ஏற்கனவே பண்ணிட்டேன். இந்த வீட்டு சாவியை அவன் நிறைய வச்சிருகான். ஒரிஜினல் அவன் கிட்ட தான் இருக்கு. அவன் இங்க மாட்டி வச்சிருக்கறது ஃபுல்லா டூப்ளிகேட் “.

“இந்த வீட்டு ஓனர் கிட்ட சொல்லி வீட்டை காலி பண்ண சொல்லி பிரச்சனை பண்ணலாம் அத்தை”, என்று அவள் முகம் மலர்ந்து ஒரு யோசனை கூறிவிட்டது போல பாவனை செய்தாள் .

“இந்த வீட்டு ஓனர் அவன் ஃப்ரெண்ட்டோட அக்கா தான். அதனால அதுவும் கஷ்டம் முடியாது. அப்படியே பண்ணாலும் இந்த வீடு இல்லனா வேற வீடுன்னு போய்கிட்டே இருப்பான். அவன் சொன்னதுல ஒன்னை நீ கவனிக்கலையா??. அவன் என் பையன். கொழுப்பு திமிரு பிடிவாதம் இது எல்லாம் என்ன போலவே அவன் கிட்ட நிறைய தான் இருக்கு “.

“உண்மையிலேயே அவர் உங்கள மாதிரி தான் அத்தை இருக்காரு. உங்கள மாதிரியே பிடிவாதம்”, சசி சாதாரணமாக கூற.

“இதான் சாக்குனு பேசுறியா?”, அவளை முறைத்துப் பார்த்து கொண்டை கூறினார் விசாலாட்சி.

“ஆறு மாசமா இங்க உக்காந்துட்டு என்ன பண்றான்னு தெரியலையே முதல்ல அதை கண்டுபிடிக்கணும். முதல்ல கம்பெனி விஷயமா வரேன்னு சொன்னான். பதினஞ்சு நாள்னு சொல்லிட்டு வந்தான். இப்ப ஆறு மாசமா இங்கே டேரா போட்டுட்டு இருக்கான். நான் கேட்கும் போது எல்லாம் இன்னும் ஒரு மாசம் இன்னும் ஒரு மாசம்னு சொல்லிக்கிட்டு இருக்கானே தவிர. இங்க இருந்து வர மாதிரியே தெரியல. இப்ப என்னன்னா திமிரா பேசுறான் “, என்று அவர் முகவாயில் கையை வைத்தபடியே யோசிக்கலானார்.

மாலினியை பற்றிய விஷயங்கள் மட்டும் அவருக்கு தெரிய வந்தால் சாமி ஆடி விடுவார்.
……

9 thoughts on “தேவதையாக வந்தவளே-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *