அத்தியாயம்-9
இறந்துப்போன பெண்ணின் டெட் பாடியை எடுத்து செல்பவரை வழிமறைத்து, முகத்தை உன்னிப்பாக பார்வையிட்டான் தீப்சரண்.
“சார் என்ன சார் அந்த பொணத்தை அப்படி பார்க்கறிங்க? தெரிந்த பொண்ணா?” என்று கேட்டதும் இல்லையென்று மறுத்துவிட்டு, “ஸ்டேஷன்ல வர்றப்ப மிஸ்ஸிங் கேஸ் வந்ததில்லையா? அந்த பொண்ணுன்னு பயந்துட்டேன்” என்று உண்மையை கூறினான்.
“மேடத்தோட பிரெண்ட்டா சார்? எதனால் காணாம போயிருப்பாங்கன்னு கேட்டிங்களா சார்?” என்றான் மாரியப்பன்.
தீப்சரணோ எதனால் காணாம போனானு இனி தான் விசாரிக்கணும்” என்றவன் சோர்வாக காணப்பட்டான்.
“சார்.. அதான் அந்த பொண்ணு எந்த பையனோட சாட் பண்ணியதா சொல்லுச்சே சார். அவனை விசாரிச்சா தெரியும். அவனை கண்டுபிடிக்கலாம் சார். போன் கம்பெனில போனா, பேசறது யார் என்னனு துல்லியமா தெரியுமே சார்.” என்று கூறவும், மாரியப்பனை முறைத்து அதெல்லாம் எங்களுக்கு தெரியும். உங்க வேலையை பாருங்க மாரியப்பன்.” என்று மொழிந்தான்.
உள்ளுங்குள் ‘இந்த சஞ்சனாவை சொல்லணும். வாசல்ல வந்து பேசி தொலைச்சிருக்கா. டிரைவர் கூட ஒட்டு கேட்டு நிற்கான். விட்டா இவனே இன்வஸ்டிகேஷன் நடத்திடுவான்.’ என்று முனங்கினான்.
அதன் பின் இறந்துப்போன பெண்ணின் சடலத்தை புதைத்தது இருவரென்று கூறவும் யார் எவரென விசாரணை ஓடியது. ஸ்டேஷன் வந்து அவனது பைக்கை எடுத்து வீட்டிற்கு சென்றான்.
நள்ளிரவு மணி ஒன்றிற்கு சஞ்சனா போனிலிருந்து அழைப்பு வந்தது. அவன் எடுக்காமல் நிராகரிக்க, அதன் பின் குறுஞ்செய்தி வந்தது.
அதில் ‘சரண் இப்ப கால் அட்டன் பண்ணலை. நம்ம நிச்சயத்தை நிறுத்திடுவேன்’ என்றதும் தலையிலடித்து அட்டன் செய்தான்.
“எதுக்குடி நிச்சயத்தை நிறுத்துவேன்னு பேசற?” என்று எடுத்த எடுப்பில் பாய்ந்தான்.
“எவ்ளோ நேரம் உனக்கு போன் போடுறது? அங்க ஆனந்தி அம்மா கவிதாவை விட்டுட்டு வந்ததிலருந்து கால் பண்ணறேன். அட்டன் பண்ணாம நழுவற, ரம்யா போன்ல யார் நம்பர் பார்த்தேன்னு உனக்கு தெரியவும் அப்படியே பம்முற” என்று குரல் உயர்த்தினாள்.
“ஏய்.. யார் பம்மினா? ஆங்… நான் போலீஸ்காரன். நான் ஏன் பயப்படணும்டி” என்று உறும, “அதானே.. நீ ஏன் பயப்படணும்? போன் உன்னிடம் தானே இருக்கு. சரசரனு ரம்யாவுக்கு வந்த மெஸேஜை இந்நேரம் அழிச்சிருப்ப. அதோட போன் கம்பெனிகாரனிடம் வந்த சாட் ஹிஸ்ட்ரி எல்லாம் டெலீட் பண்ண ஏதாவது பண்ணிருப்பியே” என்றவளுடன் பொறுமை பறந்தது.
“ஏய்… இப்ப என்ன உன் பிரெண்ட் செத்தா போயிட்டா. காணாம தானே போயிருக்கா? ஜஸ்ட் மெஸேஜ் தானே அதுல இருந்தது. எதையும் எதையும் கனெக்ட் பண்ணற? யார் நம்பர்னு தெரிந்தும் இப்படி பேசற?
இங்க என் வேலையில் என் உயிர் போகுது. ஒரு காலேஜ் பொண்ணை இரண்டு பேர் கற்பழிச்சு கொண்ணு புதைச்சிருக்காங்க. அந்த இடத்துல போய் பாடியை ஹாஸ்பிடலுக்கு அனுப்பிட்டு இப்ப தான் வீட்டுக்கு போறேன். அப்ப கூட ரம்யா எங்க காணாம போனானு யோசிச்சிட்டு தான் இருக்கேனே தவிர, போன்ல இருக்கற சாட்டிங் மெஸேஜை டெலீட் பண்ணலை. புரியுதா?
திரும்பவும் சொல்லறேன் உன் பிரெண்ட் ரம்யா காணோம். செத்து போகலை. சும்மா சந்தேகப்படாத. அப்பவும் என் மேல நம்பிக்கை இல்லைன்னா, நாளைக்கு பதினொரு மணிக்கு நேர்ல அந்த போனை காட்டறேன். சரியாடி” என்று கர்ஜித்தான்.
“நாளைக்கு நேர்ல சந்திப்போம்” என்று துண்டித்துவிட்டாள் சஞ்சனா.
தீப்சரணுக்கு சஞ்சனாவிடம் கத்தியப்பின் பைக்கை உதைத்து புறப்பட்டான்.
சஞ்சனாவுமே ‘ரம்யா எங்க போனா? எங்க மாட்டிக்கிட்டு இருக்கா? ஆனந்தி அம்மா வேற அழுவறாங்க. கவிதா பாவம். இந்த விஷால் தடியன் வேற காணோம். இதுல பொண்ணு காணோம் என்றது கூட தெரியாத நிலையில் அவங்க அப்பா. கடவுளே… என் பிரெண்ட் சின்ன சின்ன சந்தோஷத்தை கூட தனக்குன்னு யோசித்ததில்லை. அவளை நல்லபடியா வாழவை.” என்று வேண்டுதல் வைத்தாள்.
அடுத்த நாள் விடியல் அழகாய் மலர்ந்தது. ஆனால் பைரவிற்கு மட்டும் இருளாகவே காட்சியளித்தது. பால்கனி வந்து சூரியன் எழும் காட்சியை பார்த்து அழுதான்.
நேற்று ரம்யாவோடு நடந்த கூடலில் கூடல் மட்டும் நிகழவில்லை. அவளோடு மனம் விட்டு பேசவும் செய்தான். அப்பொழுது பால்கனியில் நின்று அணைத்தப்போது, “இங்கயிருந்து பீச் ரொம்ப அழகாயிருக்கு. காலையில் சூரியன் வரும்போதும், மாலையில் சூரியன் மறையும் போதும் ரம்யமா இருக்கும்ல” என்று அவள் கேட்க, “எந்த ரம்யமான சூழ்நிலையும், இந்த ரம்யா முன்ன ஒன்னுமேயில்லை. இந்த உலகத்துல அழகானது நீ தான்” என்று பிதற்றியதை எண்ணி குலுங்கி அழுதான்.
அவள் உயிரோடு இருந்திருக்க வேண்டும். என்ன தான் முதலில் பயந்து ஒதுங்கினாலும் பின்னர் ஏதோ இது தான் கடைசி நாள் என்பதாக தன்னுடன் ஒன்றினாள். அப்பொழுது கூட முட்டாள்தனமாக பிதற்றினாளே, கடவுள் இன்னிக்கு என் மொத்த வேண்டுதலுக்கும் மோட்சம் அளிப்பதா கேலண்டர்ல போட்டிருக்கு. இதான் அதுவா? இது என் வாழ்க்கையில் கிடைச்ச முதல் முத்தம். முதல் தீண்டல், முதல் ஆண் வாசம். ஆனா இதுதான் முதலும் கடைசியும். இது ஒரு சாக்கா வைத்து என்னை டார்ச்சர் பண்ணாதிங்க. பண்ண மாட்டிங்க தானே?!' என்றெலல்லாம் பேசினாளே. அவள் முட்டாள் பெண் அல்ல. அவள் முடிவு அவளுக்கு தெரிந்துள்ளது. அது தான் அவள் வாய் வார்த்தையில் வந்து விழுந்திருக்க வேண்டும்.' என்று கலங்கினான்.
கண்ணீரை துடைத்து இந்நேரம் ரம்யாவோட வீட்ல அவளை தேடியிருப்பாங்களே? அவளை காணோம்னு பதறி என்ன செய்திருப்பாங்க? சுவாதிக்கு கால் பண்ணிருப்பாங்களா?’ என்று மனைவிக்கு அழைத்தான்.
பைரவ் கால் என்றதும் ரம்யாவோ உற்சாகமாக எடுத்து, “குட் மார்னிங் பைரவ்.” என்றாள்.
“குட் மார்னிங் சுவாதி. எப்படியிருக்க? அங்க எல்லாம் சரியா இருக்கா?” என்று வினவினான்.
இதென்ன நீண்ட இடைவெளியுடன் பேசுவது போல நலம் விசாரிப்பு’ என்று குழம்பியவள் ‘அச்சோ அம்மா மயங்கியதுக்கு வந்தேன். அதனால் நாசூக்கா அவங்களுக்கு என்னாச்சுன்னு விசாரிக்கறார்’ என்று எண்ணி, “பைரவ் அம்மாவுக்கு இப்ப பரவாயில்லை. ஆனாலும் நம்ம தொழிற்சாலை திறப்புவிழாவுக்கு வரமுடியாது. முன்னவே தெரிந்தா தள்ளி வச்சிருக்கலாம். இட்ஸ் ஓகே. நம்ம வேலையும் பார்க்கணுமே. நீங்க இப்ப தான் எந்திரிச்சிங்களா?” என்று சோர்வாய் கேட்டாள். பைரவ் கால் செய்தாலே உற்சாகமாக மாறும் சுவாதி குரல் சோர்வுடன் ஒளித்தது.
ஆனால் அதை வைத்து அவள் பேச்சிலேயே ரம்யாவை பற்றி அவள் வீட்டில் இவளிடம் எதுவும் கேட்கவில்லையா என்று குழப்பம் தோன்றியது.
பைரவால் வாய்விட்டு கேட்க முடியுமா?
“ஆமா சுவாதி இப்ப தான் எழுந்தேன். அப்பறம் ஏதோ சோர்வா இருக்கம்மா?” என்று தூண்டிலாக பேச்சை போட்டான். அது சரியாக பதிலை இழுத்து வர போதுமாதாக இருந்தது.
“என்னத்த சொல்லறது பைரவ். ரம்யாவை காணோமாம். அவ தங்கை கவிதா போன் பண்ணி விசாரிச்சா. அவங்க அம்மா ஆனந்தி ஒரே புலம்பல் அழுகை. சமாதானம் செய்யவே முடியலை. இந்த நேரம் பார்த்து நான் ஊர்லயில்லை. சஞ்சனா தான் நேத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு உதவிக்கு போனா” என்றதும் பைரவிற்கு என்ன போலீஸ் ஸ்டேஷனா? என்று அதிர்ந்து அதை மறைத்து கொண்டான். பின்ன ஒரு பெண் வீட்டிற்கு இன்னமும் வரவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷன் போகாமல் இருப்பார்களா?’ என்று அவன் மனசாட்சி எடுத்துரைத்தது.
ஒன்றும் தெரியாதவன் போல, “ரம்யா காணோமா? எப்போ? என்னாச்சு? போலீஸ் ஸ்டேஷன் வரை ஏன் போகணும்?” என்று அடுக்கடுக்காய் வினாத்தொடுத்தான்.
“பச்… உங்களுக்கு தான் ரம்யா பத்தியும், அவ பேமிலி பத்தியும் தெரியுமே. என்னனு தெரியலை அவ தம்பி விஷாலுக்கும் அவளுக்கும் இரண்டு நாள் முன்ன முட்டிக்கிச்சு. என்னனு கேட்டதுக்கு மூச்சு விடலை. இப்ப இரண்டு பேரையும் ஆளைக்காணோம். விஷால் அவன் பிரெண்ட் கூட இருப்பதா ஆனந்தி ஆன்ட்டி சொன்னாங்க. இந்த ரம்யா தான் எங்க போனானு தெரியலை. நேத்து நம்ம வீட்டுக்கு வர்றதா இருந்தது. நான் இங்க வர்றேன்னு அப்பாயின்மெண்ட் கேன்சல் பண்ணிட்டேன்.
விஷாலை தேடி அலையறாளா? ஒன்னும் புரியலை” என்றாள்.
இதுவரை காணாமல் போனதாக கேஸ் பதிவாகி இருக்க, அதுவரை நிம்மதிக் கொண்டான் பைரவ்.
”சரிங்க… நான் சஞ்சனாவுக்கு போன் போட்டு ரம்யா பத்தி என்ன நிலவரம் என்று கேட்டு தெரிந்துக்கறேன்.” என்று அணைக்க போக, “ஹேய்.. சுவாதி... ரம்யா பத்தி எந்த டீட்டெயில் என்றாலும் உடனே சொல்லறியா'” என்று தயக்கமாய் கேட்டான்.
“சொல்லறேன்ங்க… எனக்கு புரியுது. அவளை நீங்க ரொம்ப விரும்பனிங்க. அந்த நேசம் இருக்கும். கண்டிப்பா அவ கிடைச்சிட்டா சொல்லறேன்” என்று முடித்தாள்.
பைரவிற்கு ‘சே எந்த மனைவி தன் முன்னால் காதல் பற்றி இந்தளவு பேசி தனக்கு ஆறுதல் தருவாள். உண்மையில் சுவாதியும் அன்பான துணைவியே. ரம்யாவோடு நடந்துக்கொண்டதை அறிந்தால் இந்த அன்பையும் இழக்க நேரலாம்’ என்று பயந்தான். இதில் இன்ஹேலர் வேறு தேடிக் கண்டறிய அறையையே இரண்டாக்கினான்.
நேரங்கள் கடந்தது.
தீப்சரணோ நேற்று பிச்சைக்காரனால் புதைக்கப்பட்ட பெண் யார் எவரென்று அறிய நேர்ந்தது. கல்லூரி பெண்ணை, கூட பயிலும் காதலனும் அவன் தோழனும் கற்பழித்து கொன்றதாக விசாரணையில் அறிய நேர்ந்தது. அதில் தீப்சரண் பிஸியாக இருந்தான். சஞ்சனாவின் அழைப்பு வந்ததும், “சாரி பன்னிரெண்டு மணிக்கு இங்க கேஸ் முடிச்சி சப்மிட் பண்ணிட்டு வந்துடறேன்.” என்று அணைத்தான்.
'இவன் ஏதாவது கோல்மால் பண்ணறானா?' என்று கூடுதலாக காத்திருந்தாள்.
இதற்கிடையே கவிதா வேறு போன் போட்டு போலீஸ் அண்ணா என்ன சொன்னார் அக்கா. ஏதாவது தகவல் கிடைச்சதா? அம்மா கேட்க சொன்னாங்க’ என்று நச்சரித்தாள்.
“இல்லைடா… நேத்து அவர் போனது கூட ரம்யாவா இருக்குமோனு பார்த்தார். நல்லவேளை அது வேறயாரோ. நீ பயப்படாத ரம்யாவுக்கு ஒன்னுமில்லை அவ எங்கயாவது நல்லபடியா இருப்பா’ என்ற ஆறுதலை தான் வழங்கினாள்.
ஒரு பன்னிரெண்டு மணிக்கு தீப்சரண் அவனது பைக்கில் மப்டி உடையில் வந்தான். சுவாதியோ தீப்சரண் வந்த திசையில் அதிருப்தியாக பார்த்து முகம் திருப்பினாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Nice epi👍👍👏👏
Super sis nice epi 👌👍 unmai eppdi veliya varumo parpom 🧐🤔
Ramya uyir oda irupu ah nu nambikitu irukaga pavam ava erandhu ponathu theriyama
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தேநீர் மிடறும் இடைவெளியில்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 9)
அப்ப அது ரம்யாவோட பாடி கிடையாது. தப்பிச்சான் சரண் & பைரவ். அதெப்படிடா, மனைவியோட ப்ரெண்டையே
கலெக்ட் பண்ண பார்க்கறிங்க.
ஒருத்தன் என்னடான்னா என்கேஜ்மெண்ட் ஆனப்பிறகும், நேர்ல சைட் அடிச்சது பத்தாம, போன்லயும் மெஸேஜ் அனுப்பியிருக்கான். இன்னொருத்தன் என்னடான்னா கல்யாணம் ஆனப்பிறகும் அவ கிட்ட நேரிடையாவே காதலை சொல்லி, அவ கூட கூடலையும் வைச்சிருக்கான். என்ன பண்றிங்கடா ரெண்டு பேரும்..?
ஒருவேளை, மாற்றான் தோட்டத்து மல்லிகைத்தான் மணக்கும் என்கிற கான்செப்ட்டுக்கு போயிட்டாங்களோ…?
இவங்க ரெண்டு பேர் தான் கல்பிரிட்டா, இல்லை மூணாவது ஒருத்தன் இருக்கானா…?
தெரியலையே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nan 1st epi padichathum ramiyavoda porattamana life thaan story nu ninachan …2 nd epi la Ava frnd lover ye avakitta valiyavum kandippa ithu thaniya oru poonu society ya face pandra mariyana story avalukku family sari illatha nala natural aa irrukura chinna chinna happyness kuda romba yosikkaranu thonuchu ….but aduthu aduthu padikum poothu adi pavam da avangara mari thaan thonuchu ana intha epi la ramya sethum avalukku nalla name kidaikkathinu doubt varuthu because rendu frnds oda husband um ipti avala thappana kannottathula patha thala kandipa ramya va thappana poona muthirai kutha thaan papanunga athuvum sammatha patta oruthan police vayra aprom epti avalukku nimathi kidaikkum 😤
Akka intha epi la rendu idathula mistake aa ramya name vanthuruku onnu Swathi ta phone call apo innonu sanju antha police meet panum poothu… Swathi, sanju name ku pathila ramya nu irruku
Sissy oru chinna mistake Pani irukinga kadaisi line la sanjana nu podradhuku badhila Ramya nu potu irukinga. Ramya dha sethu poitale.but story very very interesting super ah iruku na unga silent reader.unga stories onayum Vida maten. Avlo pudikum. Alaparai kalyanam seekrama epi podunga sissy eagerly waiting for that story.
@Pooja edit panidaren ma. Thank u so much
Naan kooda Ramya dead body than nu ninachen, enna nadakka pogutho theriyalaye, interesting ah irukku sis
Ipo eppadi ramya va kandu pidika poranga athula yar mata poranga ena nadaka pothu ????very interesting thrilling