Skip to content
Home » கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள் தமிழ்மொழியில் அற்புதமானது.காதல் கவிதைகள், சமுகத்தினை சாடும் அறமென பல ரசனைக்குயேற்ப கவிதைகள் எழுதப்படுகின்றன

பால் நிலவு

காரிருளில் தன்னந்தனியே கதைப்பேசும் காதல்நிலவே !கண்ணெதிரே வராமல் மேகத்தினுள் குழந்தையாய்…நீ தவழ்ந்து ஒளிந்து கண்ணாம்பூச்சி காட்டுகின்றாய்…மின்மினிப் பூச்சியாய் என் நெஞ்சம்உன்னில் ஒளிப் பெற்றே பிரகாசமாகின்றதடி பனிப்பொழியும் பால்நிலவே பிரபஞ்ச பேரழகே !பன்மொழியில் கதைத்திடவே ஆசையடி நிறைமதியே… Read More »பால் நிலவு

நான் விரும்பும் என் முகம்

முகமூடி அணிந்து   பேசிடும் பழக்கமில்லைஅகம் நாடும் உள்ளுணர்வு   சொல் கேட்டுடும் வழக்கதினால்புன்னகையே எந்தன்   விருப்பமான அணிகலன்தன்னம்பிக்கை தைரியமும்    எந்தன் சொத்துஇன்னலை இனிதே     கையாள்வேன்இசைக்கு மட்டுமே     தலை அசைப்பேன்பொய் பேசி பிரச்சனையை     முடக்குவதை விடமெய் பேசி… Read More »நான் விரும்பும் என் முகம்

கல்வி

பண்பில் சிறக்க பாங்காய் நடந்திட  பாரில் செழிக்க வேண்டுவது கல்வி இருளில் முழுகும் இந்தியாவை இனிதாய் மாற்ற வேண்டுவது கல்வி தன்னிலை உணர்ந்த மனிதராய்  தன் காலில் நிற்க வேண்டுவது கல்வி சமுதாய இன்னலை… Read More »கல்வி

சிசுவின் கதறல்- ஹைக்கூ

தவறு செய்யாமலேயே தண்டனை அநீதியான உலகம் இது அழிக்கபட்ட சிசுவின் கதறல். *ஜூலை 2010 அன்று மங்கையர் மலரில் பிரசுரமானவை.

ஹைக்கூ

என் மகன் வேலைக்கு செல்கின்றான் பெருமைபட்டு அல்ல. வருத்தத்துடன் பெற்றோர். -குழந்தை தொழிலாளி. 💔💔💔 திருமணத்திற்கு  பின்  பெற்றோருக்கு ஒதுக்கப்பட்டது  புது  இல்லம். -முதியோர் இல்லம்             … Read More »ஹைக்கூ

மழலை மொட்டே!

கொஞ்சும் மழலை பேச்சுபிஞ்சு பொன் விரலின் பஞ்சு தன்மைதன்னிலை உணரா நிலையில்தத்தி நடக்கும் பாதம்நடைப்பழகும் தங்க தேரேகை விரல் நீ கடிக்க வலிக்காதுஉன் பற்களின் வளர்வை கண்டுசிரிக்கும் மழலை மொட்டே!உன் அழுகையும் அழகு தான்பொம்மை… Read More »மழலை மொட்டே!

என் கல்லூரி

கல்லூரி நுழைவில் ஓர் மிரட்சிவகுப்பறை தேடலில் ஓர் பதற்றம்நல்லதொரு தோழியின் தேடல் புகட்டவரும் ஆசிரியரை பற்றிய எதிர்பார்ப்பு படிப்பில் வரும் ஆர்வம் சிறிது அரட்டை பெரிது மிதிவண்டி நிறுத்தும் குட்டிசுவர்உண்ணுவதற்கு ஏற்ற இதமான மரநிழல் நினைத்ததை… Read More »என் கல்லூரி

அன்பைத் தேடி

*அன்பைத் தேடி* நிலையற்ற பிரபஞ்சத்தில் நிலையான அன்பைத்தேடி முரண்பாட்டான கவிதையென்று முதலடி நாடி சிறகுவிரிக்கின்றது இதயச்சிறையில் வீற்றிருக்க இருவிழி நயனத்தில் அன்பென்ற மௌனமொழி அடைப்பெடுத்து ஆர்பறிக்க, தன்னருகே தோள்தட்டி தஞ்சமென மனயெட்டில் தாங்கிடவே தேடிகின்றேன்… Read More »அன்பைத் தேடி

நல்லதே நினை

முடக்கி விடவில்லை உலகம் என்னைமுடங்க விடவில்லை நானும் மனதைஎழுந்து நடைப் போடுகின்றேன் ஜெயமாகஎண்ணம் என்ற உந்துதலில் நினைவாலேசிறகை விரித்தேப் பறக்கின்றேன் வானிலேசிரத்தை கொஞ்சம் எடுக்கின்றேன் வலியிலேகொஞ்சமும் இல்லை என்னுள் ஊனம்என்றே சொல்லிடும் தன்னம்பிக்கை மனம்… Read More »நல்லதே நினை