Skip to content
Notifications
Clear all

ஜுன் போனால்... ஜூலை காற்றே... போட்டி அறிவிப்பு

1 Posts
1 Users
1 Reactions
384 Views
Site-Admin
(@veenaraj)
Honorable Member
Joined: 10 months ago
Posts: 212
Topic starter  

*ஜுன் போனால்... ஜூலை காற்றே...* (JJ-2024)

Hi friends...

    திரும்பவும் நானே... 

      என்னடா பாட்டு பாடிட்டு இருக்கேன்னு பார்ங்கறிங்களா?

இல்லைங்க போட்டி நடத்தும் முனைப்போடு வந்துள்ளேன். போட்டியின் தலைப்பு தான் *ஜுன் போனால்... ஜூலை காற்றே...* செல்ல சுருக்கமா 💞JJ-2024💞 வைக்கலாம்னு இருக்கேன்.

  எப்பவும் எல்லாரும் வைக்கிற மாதிரி போட்டிகளா, நிச்சயம் இந்த போட்டி இருக்காது. வித்தியாசமான சிந்தனைகள் பெற்ற, வித்தியாசமான போட்டியா இருக்கணும் என்று தனித்துவம் கொண்டவள் நான். இதற்கு முன் நடத்திய போட்டியே அதற்கு சான்று. 

அதனால் இனி வரும் போட்டியும் வித்தியாசத்தை கொண்டதாகவே இருக்கும்.

    போட்டியா? என்ன ஏதுன்னு சொல்லாம பில்டப் கொடுக்கறாளே.... மனசுல திட்டறிங்க தானே... இங்க எனக்கு புரையேறுது.

 சரி நகைச்சுவையை தள்ளி வைப்போம்.(Mokka joke) 

  போட்டி பற்றி என்னனு தெரிஞ்சுக்கனுமா? வாங்க தளத்தில் அதற்கான டீட்டெயில் சொல்லறேன். 

     வணக்கம் நண்பர்களே...   

    முதலில் PraveenaThangarajNovels.Com தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. 

   தளம் குறுகிய கால இடைவெளியில் நிச்சயம் நியாயமான முறையில் நாமும் வளரணும், நம்மை சுற்றியுள்ள திறமைசாலிகளும் வளரணும். இந்த அடிப்படையில் வியூஸை புறக்கணித்து நல்ல வாசகரின் ரசனைக்கு மட்டும் தீனியாக கதைகளை உங்கள் பார்வைக்கு வைக்க முயல்வதே என் நோக்கம்.  

   இந்த ஜுன் போனால் ஜூலை காற்றே... (JJ-2024) போட்டி முறை. 

   போட்டியில் கதை கான்செப்ட்(கதையின் கருவை few line paragraph) தளத்தின் நிர்வாகி கொடுக்க அதற்கான தீம்மை வைத்து, உங்கள் எழுத்தில், உங்கள் கற்பனையில், உங்கள் பாணியில் 10000 வார்த்தை அளவுகளிலிருந்து வார்த்தைகள் அளவற்ற கதையை நீங்க எழுதலாம். 

   அதாவது படத்தை பார்த்து கதையை புனைந்திடு, கவிதை எழுது, என்பார்கள்.‌ அது போல சில கதை தீம் பொதுவா கொடுக்கப்படுகின்றது. 

  அது குறுநாவலாக இருக்கலாம். தொடர்கதையாகவும் அமையலாம். அது உங்கள் விருப்பமே. ஆனால் செப்டர் 2024 மாதம் முடியும் நேரம் கதைகள் முடிவடைந்து இருக்க வேண்டும்.  

    *தீம் பொதுவானதாக எல்லாருக்கும் கொடுக்க மாட்டேன். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு தீம் கொடுக்கப்படும்.* அதனை வைத்து நீங்கள் கதையை புனையலாம். 

   அதாவது ஒரே கான்செப்ட் வராது. வெவ்வேறு தரப்பில் வெவ்வேறு கதைகள். 

உதாரணம்:

 'பார்க்காத காதலை வைத்து எழுதுக' என்றால் எழுதணும். இது உதாரணம் மட்டுமே. பங்குபெறும் எழுத்தாளருக்கு மட்டுமே கதை தீம் கொடுக்கப்படும். எந்தவகை என்றாலும் என்னால் எழுத முடியுமென்ற திறமை வளர வேண்டும். அதற்காக தீம் கடினமாக இருக்காது. எழுத்தாளர் பெயர் கொடுத்ததும் அவரவர் வருகையின் பொறுத்து கதை தீம் தருவேன்.     

    அப்பறம் கதைக்கு பெயர் கொடுத்தா நிச்சயம் எழுதி முடிப்போமென்றவர்கள் மட்டும் பெயர் கொடுங்கள். 

  கடந்த முறை 17 பேர் போட்டியில் கலந்துக்க வந்தப்போதும் 25 பேர்‌மட்டும் போதுமென்று முடிவு செய்திருந்தேன். அதனால் பெயர் கொடுக்கும் காலம் முடிவடைந்தப்பின் வந்தவர்களுக்கு 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' என்று கூறி தவிர்த்து விட்டேன். ஆனால் போட்டி கதையில் சிலர் முடிக்கலை. மேபீ எழுதமுடியாத கிரிட்டிக்கல் சூழலில் தவிர்த்தால் ஓகே. பட் சும்மாவே பெயர் கொடுத்து எழுதாமல் போவது கொஞ்சம் கஷ்டமில்லையா. 

பெயர் கொடுக்க ஆர்வமாக இருந்த 17 மெம்பர் எழுதி முடித்திருந்தால் அவருக்கான வெற்றி இலக்கை தொட்டுயிருந்தால்.... இலைமறைவாய் அவரது திறமையை தடுத்தது போல ஆகுமே. 

   அதனால் பெயர் கொடுத்தால் நிச்சயம் முடிப்பேன் என்பர் மட்டும் இந்த மாதம்(ஜூன்-15) வரை பெயர் கொடுக்கலாம்‌.

   ஜூலை-11 லிருந்து தளத்தில் கதை எழுதலாம். இல்லையேல் உங்களுக்கு தோதான நாட்களில் கூட கதை எழுதி தளத்தில் பதிவிடலாம். ஆனால் (sep-30) செப்டம்பரில் முடிவுற்றிருக்க வேண்டும். 

   அக்டோபர் வாசகர்களுக்கான மாதம். புது முயற்சிக்கு ஆதரவு குறைவு என்று தெரியும். ஆனாலும் நியாயமான வாசகருக்கு வாசிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு நேரம் வேண்டும் இல்லையா?!

நவம்பர் 16 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த 1st Extension 2nd Extension கொடுக்கப்பட மாட்டாது. 

   தேர்வுக்கான நேரம் ஒன்று தான்‌. எழுதுபவரின் சாமர்த்தியம் வெற்றியை ஈட்ட வேண்டும். மற்றபடி சைட் ரைட்டர்ஸ் என்ற பார்ஷியாலிட்டி கூட இவ்விடம் பார்க்க மாட்டாது. (எனக்கான கொள்கைகள் என்றும் மாறாது. பெரிய ஒழுங்கு... அப்படின்னு இல்லைங்க. முடிந்தவரை சில கொள்கையை பிடித்து தொங்குவதே காரணம்.) 

    இந்தமுறை பெயர் சொல்லி எழுதறதா? பெயர் சொல்லாமலா.? என்ற குழப்பம் வேண்டாம். 

பெயர் சொல்லி எழுதுங்கள். ஏன்னா பெயர் மறைச்சி எழுதறேன்னு சொல்லிட்டு சிலர் பெயரை மற்றவருக்கு ரகசியமா சொல்லி அது என் பார்வைக்கு வந்தால்... தேவையற்ற கசப்பான சம்பவம் தவிர்ப்போம் என்பதற்காகவே.

   இங்கு வியூஸை விட எழுத்துக்கு முன்னுரிமை. 

வேண்டுமென்றே தளத்தை நிராகரித்து வாசிக்க கூடாதென்ற முடிவோடு இருக்கும் சில பாலிடிக்ஸ், தளத்தில் வெகுவாக இருப்பதால் என்னை போலவே வியூஸை நம்பாமல் முயற்சியையும், திறமையும் மட்டும் அனுபவமாக மாற்றி வெற்றி தோல்வியை இயல்பாய் ஏற்பவர் வாருங்கள். 

    என் கதை வாசிக்கலை. உன் கதை வாசிக்கலை, வியூஸ் போகலை என்ற வருத்தம், கவலை வேண்டாம். இம்முறையும் நீதிபதி அவர்கள் தரப்பும், என் தரப்பும் வாசித்து வெற்றியை அறிவிப்பேன். 

  குறைந்த எழுத்தாளர் பங்கு பெற்றாலும் நிறைவோடு முடிக்கும் ரகம் நான். 

போட்டி விதிமுறை:

*பெயர் சொல்லி எழுதலாம். யார் வேண்டுமென்றாலும் எழுதலாம்‌. தளப்பாகுபாடு இல்லை.

*வார்த்தை அளவு10000-♾️Infinity(கட்டுப்பாடு அற்ற வார்த்தை அளவு.) 

*நிச்சயம் பெயர் கொடுத்தால் எழுதி முடிப்பவர் மட்டும் பங்கு பெறுங்கள்.

*பங்கு பெறும் அனைவருக்கும் இ-சான்றிதழ் வழங்கப்படும். 

*முதல் மூன்று இடத்தில் வெற்றி பெறுவோருக்கு பரிசு 🏆 கோப்பை வழங்கப்படும்‌.

*வேறெந்த எழுத்தாளரின் கதையை தழுவி எழுதக்கூடாது. 

*உங்கள் கதை உங்கள் சொந்த முயற்சியாக இருக்க வேண்டும். 

*July-11 முதல் sep-30 க்குள் கதைகள் எழுதி முடித்திருக்க வேண்டும்.

*Extension கொடுக்க மாட்டேன் என்பதை தாழ்மையுடன் தெரிவிக்கின்றேன். 

*Nov-16 result முடிவு அறிவிக்கப்படும். 

*போட்டி முடிவடையும் வரை எழுதப்பெறும் கதை வேறெங்கும் பதிவிடக்கூடாது. 

*கதைகள் போட்டி முடிவடைந்தப்பின்னும் நவம்பர் 30 வரை தளத்தில் இருக்கும். அதற்கு பின் தளத்திலிருந்து நீக்கிடுவேன். அதைமீறி இங்கேயே இருக்கட்டும் என்று எழுத்தாளர் அனுமதி தந்தால் மட்டுமே தளத்தில் இருக்கும். 

வாசகர்களுக்கான விதிமுறை:

  கடந்த முறை போலவே எல்லா கதையையும் பாரபட்சமின்றி வாசிக்கும் வாசகருக்கு புத்தக பரிசு உண்டு. 

 ஆனால் தளத்தில் விமர்சனம் வழங்குபவர்களுக்கும் கருத்து அளிப்பவருக்கும் மட்டும் இந்த பரிசு அளிக்கப்படும். 

  எவ்வாறு பதிவிடுவது என்று வாசகர் கேட்டால் சொல்லி தரப்படும்.


   
ReplyQuote