Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

தமிழ் மகளே -2024 (சிறுகதை & கவிதை) அறிவிப்பு

3 Posts
2 Users
1 Reactions
409 Views
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 7 months ago
Posts: 424
Topic starter  

                     மீண்டும் ஒரு போட்டி வைப்போமா?

                 அட சைட்ல குறுநாவல் போட்டியே முடியலை. என்று 'க்கூம்' வச்சி பேசறவங்க அங்குட்டு தள்ளி போய் பேசுங்க. 

               தேர்வறையில் நேரமும், (கதைக்கருவும்)கேள்வித்தாளும் கொடுப்பது தான் என் வேலை‌.

                      பதில்(கதை முடிப்பது) ரைட்டர் சாய்ஸ். முடிஞ்சாலும் முடிக்காட்டியும் போட்டியில் அவர்கள் பெயர் கொடுத்து நிறைவு செய்வது அவரவர் விருப்பம். என் வேலை முடிவுற்றதில் ஐந்தை நடுவர் வாசித்து முடிக்க அதற்கானதை மற்றவற்றை பார்வைக்கு வைப்பது மட்டுமே. அப்போட்டி எக்ஸ்டன்ஷன் இல்லாமல் ஏப்ரல் 25 முடிவுற்று மே 1 அன்று முடிவும் அறிவிக்கப்படும்.

                         அந்த போட்டியை விடுங்க‌. இப்ப தமிழ் புத்தாண்டில் என்ன போட்டி வைக்கறிங்க. டெல் மீ... கேட்பவர்களுக்கு....

                 சொல்லறேன் சொல்லறேன். இன்று தமிழர் திருநாள். நாம வாழற காலத்தில், நிறைய நல்ல மாற்றங்களை இழந்துட்டு, நிறைய நிறைய தேவையற்றதை இழுத்துட்டு வர்றோம்.

                     தேவையற்ற இழுத்துட்டு வர்ற நாம சில நல்லதை தெரிந்து நம்ம கதை வாயிலாக, கவிதை வாயிலாக அதை ஓரளவு மற்றவர்களுக்கு கருத்தாக சென்றடைய வைக்கலாம்.
           

           தமிழ், தமிழ் காலாச்சாரம், பண்டைய கால நல்ல பழக்கவழக்கம், மரியாதை, மாண்பு, குணங்கள், அழிந்து வருகின்றது.
   

             அதையெல்லாம் கதையில் கொண்டு வருவதற்கே இந்த போட்டி.
  
                           * சிறுகதை எழுத விரும்புவோர் சிறுகதை எழுதலாம்.

                           *கவிதை எழுத விரும்புவோர் கவிதை எழுதலாம்.

                          யாரெல்லாம் ரெடி‌?

      பங்கு பெறுபவர்களிலிருந்து சிறந்த இரண்டு சிறுகதை, சிறந்த இரண்டு கவிதை தெர்ந்தெடுக்கப்பட்டு புத்தகம் பரிசாக கொடுக்கப்படும். மேலும் சான்றிதழ் அளிக்கப்படும். (புத்தகம் சிறுகதையா, கவிதையா, நாவலா என்பது மட்டும் மாறும்)

                         விதிமுறை:

                             1.சிறுகதை என்றால் 1000 வார்த்தை இருக்க வேண்டும்.

                             2.வேறெங்கும் பதிவிடாத கதையையே இங்கே பதிவிட வேண்டும்‌. கதையை ஏப்ரல் 14, 15, 16மூன்று நாட்கள் மட்டுமே பதிவிடமுடியும்.

                             3. முடிவு ஏப்ரல் 16 அன்று மாலையே அறிவிக்கப்படும். முடிவு அறிவிக்கப்பட்டாலும் கதை இத்தளத்திலேயே இருக்கும். 
                             4. கவிதை என்றால் 15 வரிகள் இருக்க வேண்டும்.

                             5.ஏற்கனவே எழுதியது, மற்றும் வேறொருவருடைய கவிதையை சுடக்கூடாது.

                 சிறுகதை என்றால் எப்படி கவிதை என்றால் எப்படி என்று சிந்திக்கும் எழுத்தாளருக்கு, சிறு உதாரணம் 👇
                             இப்ப பிறந்து பெயர் வைக்கும் குழந்தை கையில் கட்டும் வசம்பு மருத்துவர்கள் சிலரே வேண்டாம் என்கின்றனர். ஆனால் வசம்பு பயன் என்ன என்று அறிந்து சிறுகதை வாயிலாக மருத்துவ காரணம் கொண்டு வீட்டின் மூத்த பெண்மணி எடுத்துரைத்து வழிக்காட்டி அறிவுறுத்துவது போல... மூத்தவரின் பேச்சும் மதிப்பது போல... புரியுதா?

                    மெட்டி தாலி அணிவது காரணம் இருக்கும் இல்லையா. அதை சிறுகதை வழியா நீங்க உங்க பாணியில் எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும்.

                       ஆஸ்திரேலியாவில் தமிழ் வகுப்பு... இப்படி.. இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போல பல... காரணம் காரியம் கொண்டு கதையில் எடுத்துரைத்து தமிழையும் தமிழ் மாண்பையும் கூறப்படுவதாக.

                                   யார் வேண்டுமென்றாலும் பங்கு பெறலாம்.

                       ஜனவரி 14 பொங்கலில் ஆரம்பிச்சது இந்த தளம்.
       

                      Feb-14 காதலர் தினத்தில் MARK-2024 போட்டி தொடர்ந்து, இந்த மாதம் முடிவுறும்.
   

                     இப்ப நான்காம் மாதத்தில் இந்த போட்டி.

   

               போட்டியின் பெயர் *தமிழ் மகளே*

                                  தமிழ் மகளே ...
                                  மரபு கவிதையெனும்
                                  சேலைக் கட்டவே
                                  துடிக்கின்றேன்
                                   முடியவில்லை
                                   'சல்வார்', 'சோளி' போல
                                   புதுக்கவிதை , வசனக்கவிதையே
                                   அணிவிக்கின்றேன் .
                                   ஹைக்கூ-யெனும்
                                   அணிகலன்களையும்
                                   மாட்டிவிடுகின்றேன்
                                   இதுவும் உனக்கு
                                  அழகு சேர்க்கத் தான்
                                   செய்கின்றது .
                                   எதுகை, மோனை, இயைபுவென

                                   சில நேரத்தில் அணிகலன்களாக
                                   மெருகேற்ற
                                   அணிவித்தாலும்
                                   மாச்சீர், விளச்சீர்,
                                   காய்ச்சீர், கனிச்சீரென
                                   அணிகலன் புகட்டவே
                                   ஆசையெனக்கு
                                   என்றாவது ஒருநாள்
                                   உனக்கு மரபு கவிதை அணிவித்து
                                   வெண்பா அணிகலன் பூட்டி
                                   அழகுப் பார்ப்பேன்
                                    என் தமிழ் மகளே...
                                    என்னுள் ஞானவொளி ஏற்று .

                                                          - பிரவீணா தங்கராஜ் .
  
சும்மா ஒரு கவிதை🏃‍♀️முன்ன எழுதியது. 


   
ReplyQuote
Avatar
(@santirathevan_kadhali)
Active Member
Joined: 3 months ago
Posts: 8
 

எப்படி பங்கேற்பது சகி 


   
ReplyQuote
Praveena Thangaraj
(@praveena)
Member Admin
Joined: 7 months ago
Posts: 424
Topic starter  

@santirathevan_kadhali தமிழ் மகளே போட்டி என்ற தலைப்புக்கு கீழ் தமிழ் மகளே சிளீகதை கவிதை என்று இரண்டு பிரிவாக போட்டிருக்கேன். அதுல கவிதை என்றால் அதற்குண்டான இடத்துல சென்று add topi   போங்க. தலைப்புல கவிதை  பெயர் எழுதுபவர் பெயர் போடுங்க.  இப்ப கமெண்ட்ஸ் பண்ணியது போல உங்க கவிதை எழுதிட்டு add topic click பண்ணுங்க. நான் அப்ரூவல் செய்திடுவேன்


   
ReplyQuote