என் தைரியம்-அப்பா
அப்பா....
இவரோடு முதுகுல ஏறி கழுத்துல உட்கார்ந்து அவர் சாப்பிடும் போது தொல்லை பண்ணுவேன். அப்பவும் என்னை சுமந்து, சாப்பிட்டுக்கொண்டே புத்தகம் வாசிப்பார்.
நமக்கு எழுத வந்தது இரத்ததில் ஊறியது. இதனால் கூட இருக்கலாம்.
அப்பா கடை வைத்திருந்த காலத்தில் கடைக்குள்ள போனா இஷ்டத்துக்கு திண்பேன்.
நாங்க சாப்பிட்டது போக வித்தா போதும்னு சொல்வார். இன்னிக்கு வரை நான் என் பிள்ளைகளுக்கு அதிகம் செலவு பண்ணுவது சாப்பிடற விஷயம். என் தந்தை போல நானும் வயிற்றுக்கு எப்பவும் கணக்கு பார்க்க மாட்டேன்.
எல்லார் வீட்டிலும் டிவி இல்லாத காலம். நாங்க வெளியே போய் கஷ்டப்படக்கூடாதுன்னு டிவி வாங்கியவர். படம் போட்டா எப்படியும் பத்து பேராவது வந்து வீட்ல உட்காருவாங்க. பேய் படம் போட்டா யார் இருந்தாலும் என்னால் பேய் படம் பார்க்க மாட்டேன் அப்படி தான் நாளைய மனிதன் என்ற படம் வந்தப்ப பயத்துல திண்டுல வந்து தனியா உட்கார்ந்துட்டேன். அப்போ அப்பா சென்னை வந்துட்டு திரும்பிய நாள்.
ஏன்டா பாப்பா தனியா இருக்கன்னு கேட்டு அழைக்க பேய் படம்னா பயமாயிருக்குப்பா சொன்னது.
அப்பா இருக்கேன் வான்னு அழைச்சிட்டு போவார். இரவு ரெஸ்ட் ரூம் போகணும்னா கூட அப்பா தான் அழைப்பேன்.
எப்பவும் பயப்படாத என்று போதிச்சு புத்தகத்தை தந்தவர். கூடவே தைரியமும் கோபமும் அவரிடமிருந்து தான் தொற்றிக்கொண்டது.
அம்மாவும் தைரியசாலி தான். ஆனாலும் கூடவே பார்த்து வளர்ந்தது அப்பாவிடம் தான்.
இம்முன்னு வர்ற தேவையற்ற கோபமா இருக்காது. நியாயமானதாக இருக்கும். அண்ண, நான் இரீவரும் ஒரே விஷயத்துக்காக கோபப்பட்டாலும், அண்ணா அப்பா அதட்டினா சட்டுனு வாயை மூடிட்டு போயிடுவான். ஆனா நான் மட்டும் அவரை விட கூடுதலாக கத்தி என் தரப்பு கருத்தை சொல்வேன். அவருக்கு ஏற்கும் விதமாக. அதனால் தான் குட்டி கழுதை கோபம் நியாயமாக இருக்கும்னு சொல்வார்.
எப்பவும் அவரோட டிட்டோ என்று சொன்னா நிச்சயம் இல்லை என்று வாதாடுவேன். ஆனா உண்மையில் அவர் கோபம் தைரியம், விடாமுயற்சியான உழைப்பு அவரிடமிருந்து கிடைத்தது.
கதையை விடாம எழுதி எனக்கான அடையாளத்தை உழைப்பால் ஈட்ட கற்றுத்தந்தவர்.
வாழ்க்கை கற்றுத் தரும் முக்கிய விஷயம். எதைவும் எதிர்க்க பழகணும். அப்பா நீங்க சொல்லி தந்தது. இன்று வரை வாழ்க்கையில் எதுவந்தாலும் பழகிக்கறேன்.
கடந்து போவது அவ்வளவு சுலபமல்ல... இதுல மேலோட்டமா விஷயமா இருக்கா.. தெரிந்தவர்களுக்கு இதன் பதிவு கூட இரண்டு விதமாக புரியும்.
-பிரவீணா பிரபாகரன்
- 130 Forums
- 2,087 Topics
- 2,355 Posts
- 4 Online
- 980 Members