Skip to content

விழித்தெழு தமிழா-ரோஹிணி

1 Posts
1 Users
1 Reactions
353 Views
(@santirathevan_kadhali)
Posts: 8
Active Member
Topic starter
 

விழித்தெழு தமிழா!

விழித்தெழு தமிழா வீழ்ந்தது போதும்
உலகை ஆழ்வோம் துணிந்து வா
உலகில் தமிழனின் அவலத்தைக் கண்டு
வேடிக்கைப் பார்த்து நிற்கின்றாய்!

ஆதியில் தோன்றிய தமிழ் இனமே
உன் வரலாறு தோன்றியது எப்பொழுது
தமிழனின் பெருமையை மறக்கின்றாய்
மேல் நாட்டவரைக் கண்டு வியக்கின்றாய்!

பண்பாட்டில் தலைச்சிறந்த தமிழனே −நீ அடையாளத்தைத் தொலைப்பது சரிதானா?மூதாதையர்கள் விதித்த வரையறையை மூடநம்பிக்கை என்று கூறி தூற்றிவிட்டாய்!

சந்தம் நிறைந்த செந்தமிழை
சொல்லாடவே கூச்சம் கொள்கின்றாய்
தமிழர்கள் நிறைந்த பொது சபையில்
உன் ஆங்கில மோகத்தைக் காட்டுகிறாய்

விழித்தெழு தமிழா இழந்தது போதும்
தமிழின் பெருமையை அறிந்து கொள்
ஆதியில் உதித்த தாய்மொழியை மிதித்து
உன்னை உயர்த்திக் கொள்வதால் பயனில்லை!

 

-ரோகினி.

 
Posted : 15/04/2024 9:58 pm