அப்பா என்உயிர்...
எத்தனை உறவுகள் வந்தாலும் தந்தை உறவுக்கு ஈடு இல்லை...பதினைந்து ஆண்டுகள் கழித்து மண்ணில் வந்து குதித்த போது அவர் அடைந்த சந்தோஷம் எவ்வளவு இருந்திருக்கும்...இந்த பதினைந்து ஆண்டுகள் இந்த சமுகம் எத்தனை ஈட்டி வார்த்தைகளால் எய்திருக்கும். ... எத்தனை மனவுளைச்சலுக்கு ஆளாகிருப்பார்கள் தாயும் தந்தையும், எத்தனை பண்டிகைகளில் நமக்கு புது துணி வாங்க அவர் ராப்பகலாக கல் உடைத்திருப்பார் ...வேலை சென்றுவரும் போதெல்லாம் திண்பண்டங்களால் என்னை நிறைத்திருப்பார்.. இன்று ட்ரெயின் ல போலாமா விமானத்தில போலாமா கப்பல்ல போலாமா ....எதில கூட்டி போலாம்னு அந்த அளவுக்கு வசதி இருந்தும் கூட வர நீங்க இல்லையே ப்பா😥😥😥.....
ஜனவரி பதினேழாம் தேதி நீங்க சொன்ன அந்த கடைசிவார்த்த" ஏய் குணம் இந்த பயலுக்கு எத்தனை தடவ போர்வையை மூடிவிடுறேன் விலக்கி விலக்கி விடுறான் பாரு மூடிவிடு"" இன்னைக்கும் என் காதல் கேட்டுகிட்டே இருக்குப்பா....
தாய் தந்தையர் இருக்கும்போதே பாசமா பாத்துக்கோங்க.....
என் அப்பா என் உயிர்.....♥️♥️♥️
- 130 Forums
- 1,896 Topics
- 2,156 Posts
- 1 Online
- 867 Members