பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்
#Gowsireviews
பூ பூக்கும் ஒசை
பிரவீணா தங்கராஜ்
அதிர்ச்சியுடன் ஆரம்பிக்கும் கதையில் தொடரும் பல அதிரிச்சிகளும், நெகிழ்வுகளும்!!!... ஆங்காங்கே வரும் கலகலப்புகளும், கைகலப்புகளும்!!!.. சில வாய் தகராறுகளும்!!!...
பூர்ணாவின் பொறுப்பு ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் பிடித்தது!!!.. அவளின் கோபமும், அதில் இருக்கும் நியாயமும் இன்னும் இன்னும் பிடிக்க வைத்தது!!!..
தேவ் அவனின் செயலுக்கு பின்னான காரணங்களும், வலியும் தெரியும் போது தெரிந்து கொள்ளும் நமக்கும் வலிப்பது நிஜம்!!!..
நண்பர்களின் கலாட்டாக்கள் அருமை!!.. பெற்றோரின் கோவமும், கவலையும், பரிதவிப்பும், பாசமும் சொல்லிய விதம் அனைத்தும் அசத்தல்!!!..
ஆங்காங்கே வரும் கோமாளித்தனம் சில நேர சிரிப்பு, சில நேர வெறுப்பு!!!..
தேடப்பட்டவனும், தேடி வந்தவன் இருவரை பற்றியும் உள்ள முடிச்சுகளை நகர்த்தி சென்று விவரித்த விதம் அருமை!!!..
கதை அதிவேகத்தில் சென்றது போல் தோன்றியது!!..
மொத்தத்தில் அழகான குடும்ப கதை!!.. வெற்றி பெற வாழ்த்துகள்💖
- 130 Forums
- 2,081 Topics
- 2,350 Posts
- 6 Online
- 975 Members