Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

Bawani Balasubramaniam review for நீயின்றி வாழ்வேது

1 Posts
1 Users
0 Reactions
22 Views
Site-Admin
(@veenaraj)
Honorable Member
Joined: 9 months ago
Posts: 200
Topic starter  

#பவாவிமர்சனம்

#நீயின்றி #வாழ்வேது 

 

கண்டநாள் முதலாய் காதல் துதிபாட

கண்டு கொண்ட பின்னால் விதி விளையாட

 

கேள்வனின் நிதானம் கேள்வியாகாமல் விடையாகி மகிழ

என்ன தவம் தான் செய்தனை இவனை ..

 

சுயநலமில்லா குமரன் சுகம்விரும்பியே சுமந்த இல்லால்

எத்துணை நேசங்கள் இங்கே மகிழ்ந்தாட..

 

நீயின்றி வாழ்வேது என்னில் என துள்ள

நீயீன்றியே நானேதடா என்றானதோ துணை நிலா..!!

 

சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் திருத்தலாம்!!, பெரியவர்களே பிழையறிந்தால் சிறுவர்களின் நிலை விதி வழியே தானோ. கதையின் சாரம்.😙👌👏

 

நாயகன் விஷாகன்- அருமையான நாயகன் என்ற ஒற்றை சொலைலில் அடக்கவே முடியாது மிக மிக அருமையாவன்.

தன் தந்தையின் ஒரு பிழையால் இவன் வாழ்வே சூழன்றாடி போவது பாவமே. சிறு வயதிலே குடும்ப பாரம் இவன் தோளிலே.

நன்மை தீமை அறிந்து இவன் செயல்படும் பல இடமெல்லாம் அருமையே.❤❤❤❤

 

காதல் இவனுக்குள் வரும் போது. காதலை ரசித்தாலும் அந்த பொருப்பு எனும் மாயை இவனை வதைப்பது சங்கடமே. புரிதலான மனைவியின் காதலும் அழாகே. மனைவியுடனான இவனின் காதல் மிகவும் அருமை. ❤❤❤❤

 

சுகிர்தன்- சுயநலமாய் வந்து சென்றாலும் , வாழ்க்கையில் அடிப்பட்டு பின் தன் பிழையறிந்து எழுவது சிறப்பு.👌❤

 

விவேக் - தோழனை தாண்டிய மச்சான் இவன் .அருமையான புரிதலான அன்பு தெய்வ மச்சான் என்றால் மிகையில்லை .💖💖

 

நாயகி விருஷாலி- கிராமத்து பைங்கிளி. கட்டுப்பாடு நிறைந்த பெண்ணவள். திடீர் திருமணம் ,புரிதலான கணவன் அன்பு கூடான புகுந்த வீடு என வாழ்ந்திட. சுற்றியுள்ள உறவுகள் இவளை மாற்றி ,பின்னர் வருந்தி தன்னவனோடு சரண்புகுவது அதுவும் மிகுதியான காதல் நிலையே.❤❤❤❤

 

உதயகுமார்- இவரால் தன் குடும்பமே படும் பாடு விதியே. அதிலும் மூத்த மகன் இவரின் பால் திண்டாடுவது. இவருக்கு இவனே தகப்பன் என உணர தோன்றியது. ❤👌

 

சுகன்யா- சாதாரன இல்லத்தரசி. மகன்களின் மேல் இருக்கும் பாசம் அலாதியான ஒன்று. கணவனின் தவறை நினைத்து வெதும்பி,பின்னர் தன்னை செதிக்கிகொள்வது சராசரி பெண்ணாக புரிந்து வாழ்வது அருமை.❤❤

 

இப்படி இன்னும் பல பாத்திர படைகளோடு குடும்ப பாங்கான அருமையான கதை. 👏👌❤

 

ஆசிரிய தோழியே.

தந்தை தவறை மகனின் நிலையிலிருந்து பார்த்து அதை உணர்வுகளோடு சொல்லி சென்றது அருமைமா. அதுவும் குடும்பத்து மூத்த மகனின் ஒவ்வொரு அணுகுமுறையும் அருமையாக சொல்லி சென்றது அருமை.👏👌👏💖💖💖

 

விஷாகனின் காதல் ,பாசம்,புரிதல் என எல்லாமே அழகு.

இவனின் பெயருக்கு ஏற்றார் போல தகப்பன் சுவாமியே தான்.

ஆறு மணியுடனான இவனின் வருகை கந்தசஷ்டி கவச பாடல் தாயின் நிலைப்பாடு என எல்லா நிலைகளும் அருமையாக இருந்தது .👏❤❤❤❤❤

 

குடும்பம் ,உறவுகளின் ஏற்ற இறக்க வருகை,சலிப்பு, பொறாமை,பகைமை,மற்றும் பாசம் , இணைபிறியாத புரிதலான உறவுகள், காதல் யாரையும் விட்டுக் கொடுக்காது என கலவை உணர்வுகளை தந்து நேரிடையாக பார்த்த உணர்வையும் தந்திர்கள்மா வாழ்த்துக்கள் .👏👌👏👏🌹🌹

 

அருமையான எழுத்தாக்கம் வாழ்த்துக்கள் மா. 


   
ReplyQuote
Topic Tags