Skip to content
Home » Forum

Forum

Notifications
Clear all

Lufa review for நீயென் காதலாயிரு

1 Posts
1 Users
0 Reactions
19 Views
Site-Admin
(@veenaraj)
Honorable Member
Joined: 9 months ago
Posts: 200
Topic starter  

Lufa sister review 

நீயென் காதலாயிரு

 

தலைப்பிற்கேற்ற போல ஒரு அழகிய காதல் கதை.

 

நாயகி பிரியதர்ஷினிக்கும் அவள் மாமன் மகன் சந்தோஷிற்கும் திருமணம் முடிக்க நினைக்கும் இருவீட்டு பெரியவர்கள். சந்தோஷ் தங்கை திருமணத்திற்காக வரும் சந்தோஷின் நண்பன் நாயகன் இந்திரஜித்.

வரும் போதே நாயகியை பற்றி நண்பன் மூலமாக தெரிந்து கொண்டு, அவளை மனதில் வைத்தே நண்பனின் தங்கை திருமணத்திற்கு வருகிறான்.

திருமணத்தில் ஒருத்தரின் சூழ்ச்சியால் நாயகியின் மீது திருட்டுபழி விழ சந்தோஷின் குடும்பம் அவளை ஒதுக்கிவிட, மனமுடைந்து சென்னைக்கு வேலைக்கு வருகிறாள்.

 

சந்தோஷூம் இந்தரும் அவளைத்தேட அவள் சென்னை சென்றதை தெரிந்து அவளை சென்னையில் தேட, அவளோ இந்தர் வசிக்கும் ஏரியாக்கு அருகிலேயே இருக்க அவன் கண்ணில் படுகிறாள்.

பின் அவளிடம் காதலை கூறினானா? அவள் மீது இருந்த திருட்டு பலியை போக்கினானா? யார் அவள் மீது பழி சுமத்தியது எல்லாம் கதையில்.

எழுத்துநடை அழகாக இருந்தது. வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐


   
ReplyQuote
Topic Tags