Sindhu Bairavi review for பிரம்மனின் கிறுக்கல்கள்
ராணி முத்து நாளிதழில் வெளிவந்து அதனை வாங்கி படித்து தனிப்பட்ட முறையில் கருத்தளித்து விமர்சனம் வழங்கிய வாசகர் Sinshu Bairavi அந்த மகிழ்ச்சியினை இங்கு பகிர்ந்துக் கொள்கின்றேன்.
விமர்சனம் வழங்கியவர் : Sindhu Bairavi
உண்மையில் பிரம்மனின் கிறுக்கல்கள் மிகவும் அருமை வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று இருந்த யஷ், ஆத்விக் இருவருக்கும் இடையில் நடந்த திருமணம் மிகச் சிறப்பானது.
நம்ம அப்பா, அம்மா காலத்தில் எல்லாம் மறுமணம் என்பது பெண்களுக்கு நடக்காத ஒன்று. ஆனால் இப்போது மறுமணம் நடக்கிறது.
இப்படி கணவனை இழந்த பெண்களுக்கு திருமணம் குழந்தை இரண்டு ஒரே நேரத்தில் கிடைத்தது மிகவும் சந்தோஷம்.
ஆத்விக் அப்பா அன்பாளனின் முயற்சியால் தான் இவர்கள் மனம் மாறினது.
கொரனாவினால் எத்தனை மரணங்கள். கடவுளின் ஆசியாள் இவர்கள் வாழ்க்கையில் மாற்றம்.
இந்த வாழ்க்கை குழந்தை பாவனாவிற்காக என்றாலும் இவர்களுக்கும் காதல் வந்தது மகிழ்ச்சி.
இது போன்று கணவனை இழந்த பெண்களுக்கு நிஜத்தில் இரண்டாவது திருமணம் நடந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.
இவர்கள் வாழ்க்கையில் நடந்த திருமணம் பிரம்மனின் கிறுக்கல்கள் இல்லை பிரம்மனின் வரம். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக மிக அருமை.
இதேபோல் நிறைய கதைகள் எழுத எனது வாழ்த்துக்கள் வீணா 👏👏👏👏👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻😘😘😘😘😍😍😍😍
நன்றி புத்தகம் வாங்கி வாசித்து கருத்தளித்தமைக்கு சிந்து🙏🏽😊😍 என்றும்
ஆதரவும் அன்பும்.

- 130 Forums
- 2,087 Topics
- 2,355 Posts
- 0 Online
- 980 Members