Writer Monisha sagi review for நன்விழி story
Facebook page👉ரைட்டர் மோனிஷா நன்விழி கதைக்கு அளித்த விமர்சனம்.
#Uniquereadingchallenge
#Novelreview01
22/04/2024 -09.04 Am
நன்வழி - பிரவீணா தங்கராஜ்
நேற்று இரவு ஒன்பது மணி போலதான் படிப்பதற்கு எடுத்தேன். குறுநாவல். ஐந்து அத்தியாயம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள்தான் எடுக்கும் படிப்பதற்கு.
கதைக்கரு ஒரு நாசக்கார கூட்டம் நந்தவனம் என்ற குடியிருப்பு பகுதி மக்களை கடத்தி வைத்து மிரட்டுவது.
கடத்தப்பட்டவர்களில் நன்விழியும் நிதீஷும் இருக்கிறார்கள். இருவருமே நல்ல ஆண் பெண் நட்பிற்கு அடையாளம்.
மேலும் கதையை பற்றி சொல்லிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும். அதனால் கதையை நீங்கள் படித்தே தெரிந்து கொள்ளுங்கள்.
குடும்ப நாவல்களில் அரிதாகவே காணப்படுகிற வித்தியாசமான களம் என்பதே இந்த கதையின் மிக பெரிய சிறப்புதான்.
அதுவும் பிரவீணா அதை மிகசிறப்பாக கையாண்டுள்ளார் என்றே சொல்லலாம். ஒரு அழகான ஆண் பெண் நட்பை கதையின் முக்கிய பாத்திரமாக காட்டியிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதேநேரம் சமூகம் அவர்கள் உறவை எப்படி பார்க்கிறது என்று சொன்ன விதமெல்லாம் ரொம்ப எதார்த்தமாக இருந்தது.
இறுதி அத்தியாயத்தில் மெது மெதுவாக கண்கள் கலங்கிவிட்டது. சமீப காலத்தில் அது போன்ற கண் கலங்கி படித்த கதை எதுவும் இல்லை.
உண்மையில் அதுதான் இந்த கதையின் வெற்றி.
கதையில் சில இடங்களில் லாஜிக் கொஞ்சம் இடிச்ச மாதிரி இருந்தாலும் இது போன்ற வித்தியாசமான முயற்சியில் அதை ஒரு குறையாக பார்க்க முடியாது.
வாழ்த்துகள் பிரவீணா. உங்கள் புது முயற்சிகள் தொடரட்டும்.
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi7 months ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan7 months ago
-
பூ பூக்கும் ஓசை-கௌசல்யா முத்துவேல்7 months ago
-
பூ பூக்கும் ஓசை - ஜெயலட்சுமி கார்த்திக் ரிவ்யூ7 months ago
-
பூ பூக்கும் ஓசை -Selvarani review7 months ago
- 129 Forums
- 1,903 Topics
- 2,163 Posts
- 2 Online
- 868 Members