தீரா காதலே கதை பயணம் & நன்றிகள்
தீரா காதலே - எழுத்து பயணம்
வணக்கம் நண்பர்களே
கவிதை சிறுகதை ஹைக்கூ கிறுக்கல்கள்னு எழுதிட்டு இருந்த நான் முதல் முதலாக ஒரு நீள நாவல் எழுதி இருக்கேன். நானும் தீவிர கதை வாசகி தான்.
தளத்தில் எழுத வாய்ப்பு தந்த பிரவீணா அக்காக்கு பேரன்புடன் நன்றிகள்.
நிஜத்தில் மெர்ஸி கிறிஸ்டினா தன் குழந்தைக்காக வாழ்றாங்க. ஆதினி பிரபா - தீரா நிரந்தரமாக பிரிஞ்சி இருகாங்க. கதைக்காக ஹாப்பி எண்டிங்.
இந்த கதை எழுதிய நோக்கம் எல்லாருக்கும் விழிப்புணர்வு தரனும்னு தான். இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்தவர்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள்.
கதையின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆதரவு தந்து கருத்து பகிர்ந்த நண்பர்களுக்கு நன்றிகள். நானுமே வாசகி தான்.
எதை பற்றியும் யோசிக்காமல் உங்களுக்கு என்ன எழுத தோணுதோ எழுதுங்கனு பிரவீணா அக்கா எனர்ஜி கொடுத்தாங்க. எல்லாருக்கும் ரொம்ப நன்றி.
இந்த கதை பயணம் நிறைய அனுபவங்கள் தந்தது. கதையை முடித்ததில் என் பசங்க தான் பஸ்ட் ஹாப்பி லீவை இனி என்ஜாய் பண்ணலாம்.
கதையை படிங்க நிறைகுறைகளை விமர்சியுங்க. நன்றி. டாடா.
Leave a reply
- 144 Forums
- 2,490 Topics
- 2,975 Posts
- 4 Online
- 2,033 Members
